அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
இருள் சுமந்த நிலம் - மு.புஷ்பராஜன் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, இவ்வாண்டு 'முள்ளிவாய்கால் வெற்றி' உரையில், 'இந்த நாள், தாய் நாட்டை மீட்டெடுத்த நாள். தாய் நாட்டை மீட்பதற்கான இந்தப் போரில் இலட்சக்கணக்கானோர் பலியானார்கள். உடல் உறுப்புக்களை இழந்தார்கள். இரத்தத்தை, வியர்வையைப் பூமிக்கு அர்ப்பணித்தார்கள். இவ்வாறான தனித்துவம்மிக்க சிறிலங்கா படையினரை சிலர் அனைத்துலக மேடைக்குக் கொண்டுசெல்ல முயற்சித்தனர். புலிகளுடன் மோதவேண்டாம், அவர்கள் கேட்பதைக் கொடுக்குமாறு அனைத்துலகம் எம்மிடம் அடிக்கொரு தரம் ஆலோசனை கூறியது. புரிந்துணர்வு உடன்பாட்டின் மூலம் நாட்டைப் பிரித்துக் கொடுக்கவும் முயற்சித்தனர். ஒன்றிணைக்கப்பட்ட நாட்டின் ஓர் அங்குலத்தையயேனும் பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்' …
-
- 0 replies
- 475 views
-
-
இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறுமா? - யதீந்திரா சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சில நிகழ்வுகள் இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்படுமா என்னும் கேள்வியை எழுப்புகின்றது. இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளுவதற்கென சிறப்புத் தூதுவர் ஒருவரை இந்தியா நியமிக்கக் கூடிய சாத்தியங்கள் பற்றியும் செய்திகள் வெளிவருகின்றன. இதற்கென ஓய்வு பெற்ற மூத்த ராஜதந்திரியும், தற்போதைய இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவருமான பூரி நியமிக்கப்படலாம் என்றவாறான தகவல்களும் வெளிவருகின்றன. பூரி 1987 ஆம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் கொழும்பு தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்ற…
-
- 0 replies
- 473 views
-
-
அனைத்துலக அளவில் மனித உரிமை பாதுகாப்புக்கு தலைமைதாங்க இந்தியாவால் முடியுமா? [ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 07:59 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவானது கடந்த இரு ஆண்டுகளாக பாதுகாப்புச் சபையில் நடந்து கொள்ளும் விதமானது இதன் வெளியுறவுக் கொள்கை வட்டாரம் தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அனைத்துலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கடும்போக்கான விவகாரங்களிலிருந்து இந்தியா விலகி நடந்துள்ளது. இவ்வாறு The Morung Express எனும் ஊடகத்தில் Meenakshi Ganguly எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்தியாவானது அதிகாரம் மிக்க நாடாக உள்ளதால் இது உலக விவகாரங்களில் தனது பங்களிப்பை வழங்குவதும் அதிகரித்துள்ளதாக பெரும்பா…
-
- 0 replies
- 440 views
-
-
புலம்பெயர் தேசியவாத அரசியலின் மறுபக்கம் : ஸ்கந்தா எழுதும் புதிய தொடர் நாற்பது வருட அரசியலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் போராட்டத்தை செழுமைப்படுத்தும் நோக்கத்தில், அதனை முன்னோக்கி நகர்த்தும் வகையில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும். இலங்கை பேரினவாத பாசிச அரசின் அடிமைகள் மக்களதும் போராளிகளதும் தியாகங்களையும் வீரத்தையும் சேறடிக்கும் ஒரு காலப்பகுதியில் வாழ்கிறோம். இதனிடையே நம்மை நாமே மறுவிசாரணை செய்துகொள்வதும் கற்றுக்கொள்வதும் எதிர்கால சந்ததிக்கு உண்மைகளை விட்டுச் செல்வதும் அவசியமான பணி. மக்கள் மத்தியில் அவர்களின் பலம் மீதான நம்பிக்கயீனத்தை ஏற்படுத்தி அதனை ஆயுதமாகப் பயன்படுத்தி அன்னிய தேச உளவாளிகளிடம் சரணடையக் கோரும் பிழைப்புவாதிகளின் கூட்டம் உருவா…
-
- 10 replies
- 943 views
-
-
இலங்கை விடயத்தில் தெற்காசியாவின் பிராந்திய சக்தி என்னும் தகுதி நிலையை இழந்து வருகிறதா இந்தியா? - யதீந்திரா 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது அல்லது அதன் பெறுமதியை வலுவிழக்கச் செய்வது தொடர்பான முஸ்தீபுகள் தீவிரமடைந்திருக்கின்ற சூழலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்திருக்கின்றது. யூலை மாதத்தின் ஆரம்பப்பகுதியில், இந்தியா செல்வதற்கான திட்டமொன்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏலவே இருந்தது. எனினும் தற்போது புதுடில்லி கூட்டமைப்பை அவசரமாக அழைத்துள்ளதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பான விடயங்கள் தொடர்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிசிடம்…
-
- 2 replies
- 977 views
-
-
சமஸ் எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு. யார் இந்த ச…
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும் - நிலாந்தன் 16 ஜூன் 2013 கடந்த வாரம் நானெழுதிய கட்டுரையில் பங்களிக்காத் தேசிய வாதிகள் என்ற ஒரு தரப்பினரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இது தொடர்பாகப் பலரும் அபிப்பிராயங்கள் தெரிவித்திருந்தார்கள். இன்று இக்கட்டுரையானது மேற்படி பங்களிக்காத் தேசியவாதிகள் பற்றிய ஒரு விரிவான பார்வையாக அமைகிறது.இந்திய சுதந்திரப் போராட்டப் பின்னணியில் பாரதியார் நடிப்புச் சுதேசிகள் என்றொரு சொற்றொடரைப் பயன்படுத்தியிருந்தார். நடிப்புச் சுதேசிகள் பற்றிய அவருடைய விளக்கம் எங்களுர் பங்களிக்காத் தேசிய வாதிகளுக்கும் ஓரளவுக்குப் பொருந்தக் கூடியதுதான். ஆனால், கடந்த சுமார் 60 ஆண்டுகால ஈழத்தமிழ் அரசியல் அனுபவம் எனப்படுவது இந்தியச் சுதந்திரப் போராட்ட…
-
- 1 reply
- 824 views
-
-
நேர்காணல்: நீதி எங்கள் பக்கம் - இரா. சம்பந்தன் நேர்கண்டவர்: இளைய அப்துல்லாஹ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சட்டத்தரணி இரா. சம்பந்தன் (80) 1977இல் இருந்து இலங்கைப் பாராளுமன்ற அரசியல் தொடர்பாக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாச, டிங்கிரி பண்டா விஜயதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க, மகிந்த ராஜபக்ச போன்ற ஜனாதிபதிகளின் அரசியலை கண்டவர் அவர். இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வரவேண்டும் என்று பாடுபட்டு வருகிறார். புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு இலங்கை அரசாங்கம் இந்தியாவின் 13 ஆவது திருத்தத்தை கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால் இந்திய அரசோடும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளோடும் இலங்கை அரசாங்கத்தோடும் அமெரிக்கா ஐரோப்பா …
-
- 2 replies
- 997 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் போர் வலயத்தில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு இந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இங்கு வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ்க் கட்சியானது அரசாங்கத்திடமிருந்து சாத்தியப்பாடான அரசியல் அதிகாரப் பகிர்வைப் பெற்றுக் கொள்வதற்கான அழுத்தத்தை வழங்கிவருகிறது. சிறிலங்காத் தீவில் கடந்த பல பத்தாண்டுகளாக இதன் ஒன்பது மாகாணங்களுக்கு குறிப்பாக தமிழ் மக்கள் தமது தாய்நிலம் எனக்கருதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வை வழங்குவது தொடர்பில் இழுபறி நிலை காணப்படுகிறது. 1980களின் முற்பகுதியில், சிறிலங்கா அரசானது தம்மீது பாரபட்சத்துன் நடந்து கொள்வதாக உணர்ந்த தமிழ் மக்களின் இளையோர்கள் ஆயுத அமைப்ப…
-
- 1 reply
- 585 views
-
-
[தேசம் விலை பேசப்படுகிறதா? உலகம் இன்று இந்தியாவைக் கூர்ந்து கவனிப்பதற்குக் காரணம் இருக்கிறது. உலகிலேயே மக்கள்தொகை மிகுந்த ஜனநாயக நாடு இதுதான். அத்துடன் இது விரைவில் மக்கள்தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனத்தையும் மிஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மக்கள்தொகை மிகுந்த நாட்டை வணிக உலகம் சந்தையாகப் பார்க்கிறது. அமெரிக்கா முதலிய ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள், இந்தியாவைத் தங்கள் சொந்த சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது. தேசத்தைப் பற்றியோ, மக்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லாத இந்திய அரசு தங்கள் அரசியல் எதிர்காலத்தை மட்டுமே கணக்கிட்டுச் செயலாற்றுகிறது. "இது எங்குபோய் முடியுமோ?' என்று தேசப்பற்றுடைய அறிவாளிகள் திகைத்துப்போய் நிற்கின்றனர்.இந்திய…
-
- 1 reply
- 1k views
-
-
சி.பி.எம். கட்சியின் சிங்கள சேவை தமிழ்த் தேசியன் 31 மே 2013 ஈழத் தமிழர்களுக்காக மார்ச்சு - ஏப்ரல் (2013) மாதங்களில் நடந்த மாணவர் போராட்ட அலைகள், தில்லியை அதிரவைத்ததை விட அதிகமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. அக்கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருட்டிணன் தினமணி ஏட்டில் (19.4.2013) எழுதியுள்ள கட்டுரை. அக்கட்சியின் திகைப்பையும் அச்சத்தையும் வெளிப்படுத்துகிறது. “தனி ஈழம் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக இருக்க முடியும் என்பது சரியல்ல” “மாறாகத் தமிழகத்திலிருந்து உணர்ச்சியைக் கிளறி விடுவது சரியான அணுகுமுறை ஆகாது. இது கடந்த காலத்திலும் கூட எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. என்பதே அனுபவம் உணர்த்…
-
- 1 reply
- 670 views
-
-
தமிழினி அல்லது முன்னால் போராளிகள் வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக உங்கள் அபிப்பிராயம் பல தவறுகளும், மக்கள் விரோத செயல்களும் செய்தவர்கள் போட்டியிடுவதை விட இறுதிவரைக்கும் களத்தில் நின்ற போராளிகள் போட்டியிடுவது மேல் இல்லை, போட்டியிடுவது பெரும் தவறு - கொண்ட இலட்சியத்துக்கு ஊறு விளைவிப்பது ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன எனக்கொரு கவலை இல்லை இந்தக் கருத்துக்கணிப்பே தவறானது - அவர்களை அவர்கள் பாட்டுக்கு வாழ விடுங்கள் கருத்துக்கணிப்பு: http://www.ampalam.com/
-
- 2 replies
- 790 views
-
-
ஓய்வூதியர்களின் தேசியம்? நிலாந்தன் 09 ஜூன் 2013 "கைநிறைய காசும் உண்டு நிறைய ஓய்வும் உண்டு ஆனால் பொழுதுதான் போகவில்லை - அரசியலில் ஈடுபடலாம் என்று யோசிக்கிறேன்" வலிகாமம் பகுதியைச் சேர்ந்த ஓர் ஓய்வு பெற்ற மருத்துவர் தனக்குத் தெரிந்த ஒருவரோடு பின்வரும் தொனிப்படக் கதைத்திருக்கிறார். ''நான் ஓய்வு பெற்றுவிட்டேன். எனது மகன் இப்பொழுது மருத்துவராகிவிட்டான். கைநிறைய உழைக்கிறான். எனக்கு இப்பொழுது நிறைய ஓய்வும் உண்டு. காசும் உண்டு. ஆனால், பொழுதுதான் போகவில்லை. அரசியலில் ஈடுபடலாம் என்று யோசிக்கிறேன். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த....... என்ற பிரமுகரோடு கதைத்து வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று யோசிக்கிறேன்' என்று. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் தமிழ் மி…
-
- 2 replies
- 740 views
-
-
யாருக்காக இந்த மர்ம மாநாடு?-புகழேந்தி தங்கராஜ்! 90 அகவையைக் கடத்தல் அரிது. இந்த வயதிலும் நிறைந்த நினைவாற்றலோடும் சிறந்த தமிழாற்றலோடும் இருப்பதென்பது அரிதினும் அரிது. இப்படியொரு சாதனையாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சென்ற இதழிலேயே சொல்லியிருக்கவேண்டும். அது முந்திச் சொல்வதாக ஆகியிருக்கலாம்... எனினும் முந்திக்கொள்தல் பிந்திச் சொல்வதைப்போல் பிழையல்ல! தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும் - என்கிற வேண்டுகோளுடன் கலைஞர் வற்றாத உடல்நலத்துடன் சதமடிக்க வாழ்த்துக்கள்! பிறந்த தினத்துக்கு 4 நாள் முன்பு சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் 'தி.மு.க. கோட்டைக்குள் குள்ளநரிகள் நுழைந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று எச்சரித்திருந்தார் கலைஞர். ஆட்டுக்குட்டிகளைக் கவர முயலும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
இனத்துரோகி என்னும் பட்டத்தை ஏற்கத் தயார் – லீனா மணிமேகலை நேர்காணல் PREV 1 of 3 NEXT மாற்று சினிமா என்பது நெருப்பு ஆறு. இங்கே யாருக்கும் அதன் அருகில் போகத் துணிச்சல் இல்லை. லீனா அந்த நெருப்பாற்றை நீந்திக் கடந்து கொடியை நாட்டியவர். சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் சில இயக்குனர்களில் ஒருவர். ராமேஸ்வரம் கடல் பரப்பில் இன்று விழும் ஒவ்வொரு பிணத்தையும் மருத்துவ அறிவைக் கொண்டல்ல; சர்வதேச அரசியல் அறிவைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை தன்னுடைய செங்கடல் படம் மூலம் உருவாக்கிக் கொண்டிருப்பவர். சமீபத்தில் "இளங் கலைஞர்களுக்கான சார்ல்ஸ் வாலஸ் விருது" பெற்று லண்டன் பல்கலைக் கழகத்தில் Visiting Scholar ஆக UK விற்குப் பறந…
-
- 17 replies
- 2.7k views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு 5 தெரிவுகள் அதிகாரம் அனைத்தும் அபகரிக்கப்பட்ட பின் தேர்தல் நடக்கும் வட மாகாண தேர்தல் நடக்கவே நடக்காது எந்த அதிகாரமும் பறிக்கப்படாமல் தேர்தல் நடக்கும் டக்ளஸ் பெருமானாரின் புண்ணியத்தில் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் வடக்கு, கிழக்கு என தமிழர் தாயகம் கூறு போடப்படுவதை நியாயப்படுத்தும் தேர்தல் இது No comments விரும்பியவர்கள் பங்கு கொண்டு வாக்களிக்கவும் கருத்துக்கணிப்பு: http://www.ampalam.com/ .
-
- 12 replies
- 1.3k views
-
-
யாரந்த நபர்? வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் நிலவும் புதிர் - யதீந்திரா எங்கும் வடக்கு மாகாணசபை தொடர்பான ஆரவாரங்களையே காண முடிகிறது. இன்றைய அர்த்தத்தில், இலங்கையின் அரசியல் அரங்கானது வடக்கு தொடர்பான வாதப் பிரதிவாதங்களாலேயே நிரம்பிக் கிடக்கின்றது. வடக்கு தேர்தல் தொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தெற்கில் அது தொடர்பில் பல்வேறு வகையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வகையான வாதங்களை மூன்று வகையில் காணலாம். ஒன்று, மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். இவ்வகையான அபிப்பிராயங்கள் அதிகமாக தெற்கின் கடும்போக்குவாதிகள் மத்தியிலேயே காணப்படுகிறது. இரண்டு, வடக்கு தேர்தலுக்கு முன்னர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிக…
-
- 0 replies
- 547 views
-
-
சீமான் = சூடாக ஒரு பேச்சு[Talk] சத்தியம் TV = நான்கு பாகங்கள் [1] http://www.youtube.com/watch?v=BlWqnf06Szo&feature=player_embedded&list=PL5e0cEekYKnJRya_xTmF1du1o_sIyvLYO#! [2] http://www.youtube.com/watch?v=pmxedKgifsE [3] http://www.youtube.com/watch?v=lTybCqJovdY [4] http://www.youtube.com/watch?v=8-fnr0-r768
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவுக்கு முன்னர் தலைவலியாக இருந்த லலித் அத்துலத்முதலியின் மறுபிரதிதான் கோத்தாவா? [ சனிக்கிழமை, 01 யூன் 2013, 08:57 GMT ] [ நித்தியபாரதி ] வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போது, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலரான கோத்தாபய ராஜபக்ச, வடக்கு மாகாண சபைக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்கின்ற தனது கருத்தை மிக ஆழமாக முன்வைத்திருந்தார். இவ்வாறு பத்தி எழுத்தாளர் உபுல் யோசப் பெர்ணாண்டோ அண்மையில் Ceylon Today எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டள்ளார். அதனை பதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. வடக்கு மாகாணசபைக்கான தேர்தல்களை நடாத்துதல் மற்றும் வடக்கு வாழ் தமிழ் மக்களுக்கான மீளிணக்கப்பாட்டை மேற்கொள்ளுதல் போன்றவற்ற…
-
- 0 replies
- 792 views
-
-
புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் !: A.P.G சரத்சந்திர (சிங்கள மொழியிலிருந்து..) அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமா…
-
- 0 replies
- 791 views
-
-
வெற்றி வளைவும் வெசாக் கூடும் - நிலாந்தன் 26 மே 2013 "நாடு வென்றவர்களுக்கும், தோற்றவர்களுக்கும் இடையே இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றது" கடந்த வாரம் கொழும்பில் யுத்த வெற்றி கொண்டாடப்பட்ட அதே நாளில் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டின் ஒரு பகுதியில் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது இன்னொரு பகுதியில் துக்கமாக அனுஷ்டிக்கப்பட்டது. அதாவது, நாடு வென்றவர்களுக்கும், தோற்றவர்களுக்கும் இடையே இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றது என்று பொருள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் நாடு பிளவுண்டேயிருக்கின்றது. வென்றவர்கள் கூறுகின்றார்கள் நாட்டைப் பிரிக்க முயன்ற சக்திகளைத் தோற்கடித்து நாட்டை ஒன்றிணைத்துவ…
-
- 1 reply
- 837 views
-
-
ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்! வரலாற்றின் வழிநெடுகே, எப்போதோ நடந்த ஒரு சம்பவம் எப்போதோ நடக்கப் போகும் மற்றொரு சம்பவத்தை பாதித்தோ, வடிவமைத்தோ வரலாற்றின் போக்கையே மாற்றிவிடுவதை நாம் பார்க்கிறோம். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள், இந்திய விடுதலைப் போர், ஜெர்மனியில் ஹிட்லரால் கையாளப்பட்ட யூத அழிப்பு என இவை அனைத்துமே வேறு எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்களின் எதிரிவினைகள் தான். சமகாலத்தில் சொல்லவேண்டுமானால் அமெரிக்காவில் நிகழ்ந்த ரெட்டை கோபுர இடிப்பு சம்பவத்தைச் சொல்லலாம். சி.ஐ.ஏ தன் சுயநலத்திற்காக பின்லாடனையும் அவர் பயங்கரவாதத்தையும் ஆதரித்து வளர்த்தெடுக்கும் போது, ஒருநாள் அமெரிக்காவிற்கும் அவரால் ஆபத்து வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவ…
-
- 57 replies
- 7.7k views
-
-
இந்தியாவில் மிக அதிகமாகக் கைதுசெய்யப்பட்ட போராளி நானாகத்தான் இருப்பேன். 200 தடவைக்கு மேல் சிறை சென்று இருப்பேன். வீட்டுச் சிறை வைத்தவை எல்லாம் தனிக் கணக்கு. கைதுகளின்போதான சித்ரவதையில் என் இடது காது கேட்கும் திறனை இழந்துவிட்டது. ஆக்ரா சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு வருடம் இருந்தேன். இந்தியாவிலேயே மோசமான சிறைச்சாலை, ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, சிறைத் தண்டனையும் வீட்டுக் காவல் தண்டனையும் ஒன்றுதான் என்ற உளவியல்ரீதியான புரிதலுக்கு என் மனம் பழகிவிட்டது!'' என்கிற யாசின் மாலிக், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர். காஷ்மீர் இளைஞர்களைக் கவர்ந்த போராளி. 'மதச்சார்பற்ற காஷ்மீரம்’ என்ற கோஷத்தை இன்று வரை முன்வைக்கும் ஒரே தலைவர். 1994-ல் ஆயுத…
-
- 89 replies
- 13k views
-
-
The Legal Basis for the Tamil Eelam Freedom Charter By Professor Francis A. Boyle CHARTERING FREEDOM THROUGH THE ROUGH SEAS OF GEOPOLITICS A Conference Organized by the Transnational Government of Tamil Eelam (TGTE) Lancaster, Pennsylvania May 18, 2013 There are two basic points I want to make at this Conference: First, the Tamils living on the Island of Sri Lanka have been the victims of genocide, which was the subject of my speech yesterday. Second, the Tamils living on the Island have the right to self-determination under international law and practice, including the right to establish their own independent state if they so desire. And the…
-
- 0 replies
- 741 views
-
-
ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: அகிலன் எத்திராஜன் ஓவியங்கள்: ரோஹிணி மணி கூடாரத்துக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் கால் துருத்திக்கொண்டிருப்பதை அவன் ஓரக் கண்ணால் பார்த்தான். அதில் அசைவு ஏதும் தெரியவில்லை. எனவே அவன் அதற்கு அதிகக் கவனம் கொடுக்கவில்லை. தற்காலிகத் தூக்குப் படுக்கைகளில் உயிரோடிருப்பவர்களை இழுத்துப் போட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் அவன் மும்முரமாயிருந்தான். எங்கு பார்த்தாலும் கதறலும், குழப்பமுமாய் இருந்தது. ஆனால் சாவைப் பார்த்துப் பார்த்து உணர்வு மரத்துப்போய் அவன் ஒரு ரோபோ போல இயங்கிக்கொண்டிருந்தான். அவன்கூட, அங்கே எளிதாக அப்படி விழுந்து கிடக்கக்கூடும் என்ற எண்ணம் பணியினூடே அவனுக்கு வந்து போனது. பன்முகத் தாக்குதலுக்கான ஏவுகணைப் பீரங்கிகளுக்குப…
-
- 0 replies
- 540 views
-