அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
ஜெனிவா தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியல்ல - ஆனால் சிறிலங்காவுக்கு தோல்வி! - ருத்திரகுமாரன் அறிக்கை அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை நெருங்கி வரவில்லை. இதனால் இத்தீர்மானத்தை நாம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை சிறிலங்காவுக்கான தோல்வியாக நாம் பார்க்கமுடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமதர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்திரமாரன் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் 1965ல் மாணவர் போராட்டம் வெடித்தது. 'மதுரையில் இரண்டு நாட்களில் அறுபத்து மூன்று முறை தடியடி நடத்தினேன்' என்று ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் சொன்னது போல அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் பெருமிதத்துடன் சொன்னார். அன்றைய மொழிப் போர்க் கிளர்ச்சி மூன்று விபரீதமான நகர்வுகளை இந்திய அரசிடம் உருவாக்கியது. 1. இந்திய விடுதலைக்குப் பிறகு, மாநிலங்களில் நுழைந்திராத (காஷ்மீர் தவிர) இந்திய ராணுவம், முதன் முதலாக தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டது. ராணுவத்தின் கரகரத்த பூட்ஸ் ஓசையை தங்களது சொந்த பூமியில் தமிழக மக்கள் கேட்டனர். 2. முதன்முதலாக தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் தணிக்கை செய்யப்பட்டது. அஞ்சல் நிலையம் ஒவ்வொன்றும் …
-
- 0 replies
- 800 views
-
-
http://www.youtube.com/watch?v=loPDteNKMDY
-
- 0 replies
- 738 views
-
-
மண்ணெண்ணெயும் தண்ணீரும் எப்படி ஒன்று சேரமுடியாதோ அதேபோல ஈழத்தமிழர்களின் நல்வாழ்வும் கருணாநிதியின் அரசியலும் ஒருபோதும் ஒன்று சேரமுடியாதவை. PostDateIcon புதன்கிழமை, 20 மார்ச் 2013 05:52 ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற ராஜபக்ஷவின் அதி உயர் நட்பு சக்தியான காங்கிரஸ் கட்சியுடன், ஒரு தசாப்தகாலமாக கூட்டமைப்பிலிருந்த கருணாநிதியின்,திமுக, ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக அந்தக் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதாக, ஈழ தமிழினத்துக்கு ஆற்றுண்ணா துரோகம் செய்த அக்கட்சியின் மானங்கெட்ட தலைவர் கருணாநிதி, வெட்கம் கெட்டு இன்று அவசரமாக புது அறிவித்தல் ஒன்றை விடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு தமிழ் இனத்திற்கு மகிழ்ச்சியையோ, மறந்தேனும் நற்பலனையோ ஒருபோதும் ஈட்டிவிடப்போவதில்லை. மாறாக…
-
- 0 replies
- 691 views
-
-
எம்.ஜி.ஆர். ஆட்சியில் கூட திமுகவுக்கு இவ்வளவு இழப்பு ஏற்பட்டதில்லை-ப.சிதம்பரத்திடம் சீறிய கருணாநிதி! சென்னை:காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிதன் பின்னணியில் கடந்த இரு நாட்களில் நடந்த விறுவிறு விவகாரங்கள் வெளியில் வர ஆரம்பித்துள்ளன. திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது கருணாநிதி-சோனியா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, பரஸ்பர நம்பிக்கையோடு நீடித்த கூட்டணி. முதல் 6 ஆண்டுகள் மிக மிக நெருக்கமான கூட்டணியாக இது இருந்தது. எப்போது 2ஜி விவகாரம் வெளியே வந்ததோ அப்போது தான் இந்தக் கட்சிகளிடையே முதலில் விரிசல் விழுந்தது. அடுத்து ராகுல் காந்தி எப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளரார் ஆனாரோ, அன்று முதல் இந்தக் கூட்டணியின் விரிசல் அளவு அதிகரித்துக் கொண்டே வந்தது. கருணாநிதியை ராகுல் …
-
- 1 reply
- 643 views
-
-
ஜெனிவா யோசனை: பயங்கரமானது, இல்லை போலியானது, இல்லை பிரயோசனமானது. 17 மார்ச் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - சுனந்த தேசப்பிரிய ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுளின் மனித உரிமை ஆணைக்குழுவின கூட்டத் தொடர் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பற்றி பார்க்கும் அடிக்கடி விசனம் ஏற்படுகிறது. எந்த அரசியல் நிலைப்பாடுகளில் ஒவ்வாருவரும் உள்ள போதிலும் இவற்றில் மாற்றங்களும் உள்ளன. அமைச்சர் மகிந்த சமரசிங்க போன்ற ராஜபக்ஷ நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர்கள், இது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமை சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள், இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் ஏகாதிபத்திய சூழ்ச்சி எனக் கூறுகின்றனர். அத்துடன் ராஜபக்ஷ…
-
- 5 replies
- 720 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் இலங்கை இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக் கூறப்பட்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் , பிரச்சினைகளையும் பெரும்பான்மையினர் தொடர்ந்து திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் நாட்டுப் பிரிவினைப் போராட்டத்திற்கும் முக்கிய காரணங்களாகும். இலங்கையின் இனப் பிரச்சினைக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்செயல்களுக்கும் தீர்வு காணும் அவசியத்தையும் இலங்கையில் வாழும் சகல இன மக்களின் பாதுகாப்பு , நல்வாழ்வு ஆக…
-
- 10 replies
- 1.3k views
-
-
வடக்கின் வசந்தம் வன்னியை வளப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ஒரு புதுயுகம் படைத்துக் கொண்டிருப்பதாகத் தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அது போர் இடம்பெற்ற காலம். கிளிநொச்சி வளர்ந்து வரும் ஒரு நகரமாக உருப்பெற்றிருந்த நாள்கள். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகங்கள் அத்தனையும் அங்குதான் மையம் கொண்டிருந்தன. அப்போது அங்கே அகன்ற அழகான ஏ9 வீதி இருக்கவில்லை. ஓங்கி உயர்ந்த கட்டடங்கள் இருக்கவில்லை. பிரதான வீதியால் பறக்கும் நவீன வாகனங்களையோ பெரும் கனரக வாகனங்களையோ காணமுடியாது. எனினும் நகரம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். கிபிர் வரப் போகும் முன்னறிவிப்பு விசில் அடித்ததுமே மக்கள் ஆங்காங்கே இருக்கும் பதுங்கு குழிகளுக்குள் இறங்க…
-
- 0 replies
- 909 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை முதலும் கடைசியுமாக ஒரு பிராந்தியப் பிரச்சினைதான். இரண்டாவதாகத் தான் அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை. சுமாராக கால் நூற்றாண்டுக்கு முன்பு இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாகியபோது அது ஒரு பிராந்தியப் பிரச்சினையாகவே காணப்பட்டது. அதன் பின் நிகழ்ந்த திருப்பகரமான மாற்றங்களால் அது அதன் தர்க்க பூர்வ விளைவாக ஓர் அனைத்துலகப் பிரச்சினையாக மாறியது. அதில் முதலாவது திருப்பம், ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை. அதன் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதோடு அதன் உயர் தலைவர்கள் இருவரும் இந்தியாவில் சட்டப்படி தேடப்படும் குற்றவாளிகளாகினர். எனவே, ரஜீவ் வழக்கிலிருந்து தொடங்கி புலிகள் இயக்கத்திற்கும் புதுடில்லிக்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டு உரு…
-
- 0 replies
- 582 views
-
-
சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன? ஒன்றுமே இல்லாத இடத்தில், இது பரவாயில்லை என்கிற விதத்தில், அமெரிக்காவின் தீர்மானம் குறித்து, சில அமைப்புக்கள் ஆறுதலடைகின்றன . 'இதில் ஒன்றுமே இல்லை' என்பதை இவர்கள் எப்போதும் புரிந்து கொள்ளப்போவதுமில்லை. இலங்கை மீது தீர்மானம் கொண்டு வந்தாலே போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்பவர்கள், பூகோள அரசியலைப் புரிந்து கொள்ள விரும்பாத நாற்காலிக் கனவான்கள் என்று இலகுவில் சொல்லிவிடலாம். அமெரிக்கா சமர்ப்பித்த நகல் தீர்மானத்தில், நவநீதம் பிள்ளை அம்மையாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் 'சர்வதேச சுயாதீன விசாரணை' என்கிற சொல்லாடலை இணைத்தவுடன், அமெரிக்கா அதனை ஏற்றுக்கொண்டுவிட்டது என சில நுனிப்புல் மேய்வோர் ஆர்ப்பரிக்கத…
-
- 1 reply
- 810 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் கால காலமாக இலங்கை ஜனநாயக நாடு இங்கு வாழும் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் எனக் கூறி வந்தாலும், உண்மையாக நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று தான் அண்மைக் காலங்களாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜனநாயக நாடு எனில் அந்நாட்டில் வாழும் மக்கள் அங்கு சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும், சுதந்திரமான முறையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுந்தந்திரம் வழங்கப்படும். ஆனால் சிறிலங்காவில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஜனநாயக சுதந்திரத்தை வழங்க இந்த அரசு தயாராக இல்லை. காணமால் போனவர்களை கண்டுபிடித்து தருமாரு கோரி கொழும்பில் கனவயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தத் தி…
-
- 0 replies
- 618 views
-
-
என்ன செய்யப்போகிறது இந்தியா? பா. செயப்பிரகாசம் ஞாயிறு, 10 மார்ச் 2013 14:56 தயிரையும் தின்னுட்டு இழுகிட்டும் போகுமோ? 2009, மே 18-வரை இலங்கை நடத்திய சாட்சியமற்ற படுகொலைகள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை“ என்ற கதையாக ஒவ்வொன்றாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன. “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்“ எனும் தந்திரவலை விரித்து இராசபக்ஷேக்கள் கட்டு மீறி நடத்திய கொலை வியாபாரம், 2009 மே முடிய அமோக விற்பனையானது. இப்போது விற்பனை அவர்களின் கை மீறிப்போய், மனித உரிமைமீறல், போர்க்குற்றம் என்ற புள்ளிகளையும் தாண்டி இனப்படுகொலை…
-
- 1 reply
- 524 views
-
-
நண்பர்களுக்கு... பின்வரும் கட்டுரைகள் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நா.சண்முகதாசன் மற்றும் மாவோவின் கலாசாரப்புரட்சி ஜே வி பியிலிருந்து பிரிந்து சோசலிச முன்ணி மற்றும் ஆயூதப் போராட்டங்கள் தொடர்பான குறிப்புகளைக் கொண்டவை.... இது தொடர்பான உங்கள ;விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்..... சற்றுப் பெரிய கட்டுரைகளே.... ஆகவே நேரமிருக்கும் பொழுது வாசித்து கருத்துக் கூறவூம்... நன்றிகள் நட்புடன் மீராபாரதி மேலும் வாசிக்க... என்.சண்முகதாசன் – தத்துவமும் கோட்பாடும் நடைமுறையும்…? – பகுதி 2 இன்றைய சூழலில் சண்முகதாசனின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் என்ன கற்கின்றோம் என்பதே முக்கியமானது…. இவரது கருத்துக்களும் செயற்பாடுகளும் அதாவது தத்துவமும் நடைமுறையும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ப…
-
- 1 reply
- 528 views
-
-
2001 பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு ரகசியமாக, திடீரென தூக்கிலிடப்பட்டதன் அரசியல் விளைவுகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? மத்திய சிறை எண் 3-இன் கண்காணிப்பாளரால், அதிகார வர்க்கத்தின் இரக்கமற்ற மொழியில், ஒவ்வொரு பெயரிலும் புண்படுத்தும் பிழைகளுடன் எழுதப்பட்ட அந்தக் கடிதம் ”திருமதி. தபசும் க/பெ சிறீ அப்ஜல் குரு” வுக்கு எழுதப்பட்டுள்ளது. “சிறீ முகமது அப்ஜல் குரு த/பெ ஹபிபுல்லாவின் கருணை மனு கனம் பொருந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. எனவே முகமது அப்ஜல் குரு த/பெ ஹபிபுல்லாவின் தூக்கு தண்டனை 09/02/2013-ல் நிறைவேற்றப்படவுள்ளது. இது உங்கள் தகவலுக்கும், தேவையான மேல் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.” இக்கடிதம் தபசுமிற்கு தாமத…
-
- 1 reply
- 638 views
-
-
அரசே எங்கள் மகள் காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறு அரசே.... பதில் கூறு.., வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்திச் செல்வதும் அரசாலே.., குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் தா... தடுத்து வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடு, எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தா.., அனுமதி தா..., எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தந்துவிடு... இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு...,எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில் தானா!!! இனியாவது எங்களை நிம்மதியாக வாழவிடு .. இந்தப் புலம்பல்கள் எல்லாம் எதற்காகவென்று நினைக்கின்றீர்களா.... வோறொன்றும் இல்லை. காணாமல் போன உறவுகளின் உள்ளக் குமுறல்களே இவை. …
-
- 0 replies
- 902 views
-
-
அமெரிக்க, இந்தியப் பெருங்கவனம் இலங்கை நோக்கி எப்போது திரும்பும்? தத்தர் சர்வதேச அரசியலில் தன் சொந்தக் கால்களில் நிற்கும் அரசென்று எதுவுமில்லை. இன்றைய ஒற்றை மைய உலக அரசியலில் அமெரிக்கா அதிக வல்லமை வாய்ந்த அரசாக இருக்கின்றபோதிலும், அது தனக்காக கூட்டாளிகளைக் கொண்டிருப்பதிலும் மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்களைக் கையாள்வதிலுமே தனது முதன்மையைப் பேணுகின்றது. அமெரிக்காவுக்கு உடனடிச் சவால் மத்திய கிழக்கு எனப்படும் மேற்கு ஆசியப் பகுதியாகும். அதனது இரண்டாவது சவால் சீனாவாகும். மூன்றாவது நிலையிலேயே ரஷ்யா காணப்படுகின்றது. ரஷ்யாவின் ராணுவ பலம் அமெரிக்காவுக்கு சவால் விடக்கூடியதாக இருந்தாலும் அது அரசியல் பொருளாதார நிலையில் சர்வதேச ரீதியில் பலயீனமானதாக உள்ளது. அமெரிக்கா தன்னுடைய எதிர…
-
- 4 replies
- 949 views
-
-
அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணையும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும் வியாழக்கிழமை, 07 மார்ச் 2013 17:23 ‘எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது, முழு உலகமுமே கவலை கொள்ளலாம், கண்டனங்கள் தெரிவிக்கலாம், கண்ணீர் வடிக்கலாம். ஆயினும், எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது சுதந்திரத்தை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு, விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது என்பதை, நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழீழத்தின் தேசியத் தலைவர் தீர்க்கதரிசனமாகக் கூறிய வார்த்தைகளை இன்று நாம் கண்கூடாக நிதர்சனமாகக் காண்கின்றோம். சனல்-4 மீண்டும் ஒரு தடவை தமிழர்களின் அழிவுகளை ஜெனீவாவில் ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கின்றது. No fire Zone ஆவணப்படத்தைப் பார்த்த பல நாட…
-
- 3 replies
- 740 views
-
-
சேனல் நான்கின் அறம் - யமுனா ராஜேந்திரன் சேனல் நான்கு அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும், அமெரிக்க, பிரித்தானிய அரசுகளிடம் அதற்காக சேனல் நான்கு நிதிபெறுவதாகவும், அதிலிருந்தே இத்தகைய ஆவணப்படங்கள் எடுப்பதாகவும் 'மார்க்சீயர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்' எனத் தம்மைக் கோரிக் கொள்பவர்கள் கூச்சநாச்சமின்றி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். சானல் நான்கு ஒரு பொதுநிறுவனம். அது அரசிடமிருந்து எந்த விதமான நிதியும் பெறுவது இல்லை. 2007 ஆம் ஆண்டு அது கடுமையான நிதி நெருக்கடியில் வீழ்ந்தபோது, அன்றைய பிரித்தானிய சட்டத்தின்படி, அரசு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் லைசென்ஸ் கட்டணத்தில் இருந்து அதனது மீட்புக்காக ஒரு தொகை வழங்கியது. பிற்பாடாக, பிரித்…
-
- 1 reply
- 795 views
-
-
எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் - பௌத்த அச்சம் எம். ரிஷான் ஷெரீப் இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக்கூடிய பிரிவினைவாதச் சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறிவைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. இந்நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்தங்களுக்குள் முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள் என்னும் அச்சம் இனவாதச் சக்தி களைப் பெருமளவில் அச்சுறுத்தி யிருக்கிறது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முஸ்லிம்களை அடக்…
-
- 1 reply
- 739 views
-
-
சாவேஸ் என்ற சகாப்தமும் சோசலிசப் புரட்சியும் : சபா நாவலன் நாம் வாழும் நூற்றாண்டில் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரக்கரங்களிலிருந்து ஒரு அங்குலம் கூட நகரமுடியாது என்று அச்சம் உலகதின் ஒவ்வொரு மனிதனிடமும் குடிபுகுந்திருந்த வேளையில் அமரிகாவின் கொல்லைபுறத்தில் நெஞ்சை நிமிர்த்தி தனது நாட்டின் மக்களுக்காக வாழ்ந்த தனிமனிதன் ஹூகோ சாவேஸ். வெற்றிகரமான தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை செயற்படுத்திக்காட்டியவர். ஏகாதிபத்திய நலனுக்கு உலகில் திரும்பிய திசைகளிலெல்லாம் மனிதர்கள் கோழைத்தனமாக மண்டியிட்ட போது, தனி மனிதனாக உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தவர். ஹூகோ சாவேஸ் என்ற சகாப்தம் 05.03.2013 அன்று தன்னை இடைநிறுத்திக்கொண்டது. இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரனின் இறுதி மூச்சு அதிகால…
-
- 1 reply
- 818 views
-
-
ஜெனீவாவில் என்ன காத்திருக்கிறது? நிலாந்தன் 04 மார்ச் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஜெனிவாவிற்கு போகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் போகிறது. கொழும்பிலிருந்து ஜெனிவாவை படம் பார்ப்பதை விடவும் அரங்கில் நேரடியாக இறங்குவது ஒப்பீட்டளவில் நல்லமுடிவு. ஆகக் குறைந்த பட்சம் நிலைமைகளை ஓரளவிற்காயினும் நொதிக்கச் செய்ய இது உதவும். அப்படிப் பார்த்தால் கடந்த ஆண்டிலிருந்து இவ்விரு கட்சிகளும் ஏதோவொரு பாடத்தைக் கற்றிருக்கின்றன என்ற முடிவுக்கு வரலாமா? கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நீர்த்துப் போகுமென்று தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. ஜெனிவா மாநாடானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின் …
-
- 1 reply
- 738 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் உள்ளேயும் வெளியேயும் சூடான வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்று வருகிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அதிகாரபூர்வ கூட்டத்தொடருக்குப் புறம்பாக, பக்க நிகழ்வுகளும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா வளாகத்திலேயே நடைபெறுவதுண்டு. கடந்தமுறை இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தைத் தோற்கடிக்க பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. அதற்காகப் பல பக்க நிகழ்வுகளை இலங்கை அரசாங்கம் ஒழுங்கு செய்திருந்தது. தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா உலக வல்லரசாக இருந்த போதிலும், உலக வரைபடத்தில் எள்ளளவு சிறிய நாடான இலங்கை, அப்போது அமெரிக்காவுடன் கடுமையான இராஜதந்திர மோதலில் ஈடுபட்டது. தனக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டுவதற்காக சீனா, ரஷ்யாவின் துணையுடன் இலங்கை எல்லா முயற்…
-
- 1 reply
- 656 views
-
-
தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. ‘பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். இந்த பல்துறை சார்ந்த அனேக படைப்புக்கள் இன்னும் நூலா…
-
- 0 replies
- 680 views
-
-
ஈழத் தமிழர்கள் மீதான அடுத்த பெரும் தாக்குதல்! எந்த ஒரு பிரச்சினையையும் அதன் தொடக்கத்தில் தீர்க்காமல், அது புண்ணாகி, புரையோடி, பாதிக்கப்பட்ட உறுப்பையே எடுத்தால்தான் உயிரையே காப்பாற்ற முடியும் என்கிற அளவுக்குக் கொண்டு போய்விட்டு, அதன் பின் களிம்பு பூசுவதில் வல்லவர்கள் இந்திய அரசியலாளர்கள். அதன் பிறகு, அந்தக் களிம்பு தடவியதையே பெரிய சாதனையாகப் பேசி வாக்குக் கேட்டு வருவார்கள். உறுப்பையே எடுக்க வேண்டிய நேரத்தில் மருந்து பூசுவது உதவியில்லை, உயிர்க்கொலை என்பதைப் புரிந்து கொள்ளாத நம் மக்களும் இளித்துக் கொண்டே வாக்கை அள்ளித் தருவார்கள். எல்லாத் தேர்தல்களிலும் காலங்காலமாக நடக்கும் இந்த அரசியல் விரச நாடகத்தை இந்த முறை பன்னாட்டு அளவில் பிரம்மாண்டமாக அரங்கேற்ற இந்திய அரசு எடுத்து…
-
- 0 replies
- 839 views
-
-
பாகிஸ்தான் பிரிந்து போனதற்கு யார் காரணம்? முகநூலில் இந்துத்துவ சிந்தனை கொண்ட நண்பர்கள் எங்கள் மீது பல அவதூறுகளை சொன்னார் பாகிஸ்தான் பிரிவினைக்கு இங்குள்ள முஸ்லிம்கள் காரணம் என்கிற வாதத்தை முன் வைத்தார் அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக சரியான செய்தியை அனைவருக்கும் அறிய வைத்து வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதற்காக இந்த பதிவு. இந்து – முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்.. கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியிலும் கூட காண இயலாது. ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் த…
-
- 0 replies
- 3.7k views
-