அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
தமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை நளினி ரட்ணறாஜா December 28, 2015 படம் | Conciliation Resources நாட்டின் மொத்த சனத்தொகையில் 52% பெண்களையும் மொத்த வாக்காளார்களில் 58% பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல் இருக்கிறார்களா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்பது எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது. தொடர்ந்து ஆறு தசாப்தங்களாக பெண்கள் வகிக்க வேண்டிய அரசியல் பாத்திரம் ஆண்களால் மறுக்கப்பட்டேதான் வந்திருக்கிறது. அத்துடன், சிறுபான்மை மக்களுக்கு சிறு நன்மையேனும் ஆண் அரசியல் தலைமையால் கிடைக…
-
- 0 replies
- 1.2k views
-
-
மீண்டும் ரஷ்யா vs. மேற்கு ஆனால் இந்த முறை வேறு ஒரு தளத்தில். ரஷ்ய நாட்டு உளவுப் படை மிகத் தேர்ந்த உளவியல் நுட்பங்களை கொண்டு ரஷ்யாவில் பணிபுரியும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் நடவடிக்கைகளை முடக்கத் துவங்கியுள்ளது. தொடர்ச்சியான மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படும் இவர்கள், தங்கள் பணிகளை திறம்பட செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எப்படியெல்லாம் இது செய்யப்படுகிறது? உதாரணத்திற்கு இந்த அதிகாரிகளின் மனைவிகளுக்கு தொடர்ச்சியாக கலவி பொம்மைகளை அனுப்புவது. யார் எங்கிருந்து அனுப்புகிறார் என்ற விவரம் தெரியாமல், இதை எப்படி தவிர்ப்பதென்றும் புரியாமல் இந்த அதிகாரிகள் திண்டாடுகின்றனர். இத்தகைய உளவியல் சிக்கல்களால் பலர் தற்கொலை செய்து கொள்வதுமுண்டு. மேற்கொண்டு அறிய இந்தக் கட…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி தேர்தலும்... பக்குவமற்ற, தமிழ்க் கட்சிகளும் – நிலாந்தன். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை, என்பதைத்தான் நடந்து முடிந்த ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நிரூபித்திருக்கிறது. ஒரு தேசமாக சிந்தித்திருந்திருந்தால் முதலில் கட்சிகள் தங்களுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்புக்கு போயிருந்திருக்க வேண்டும். ஒரு பொது முடிவை எடுத்து வேட்பாளர்களை அணுகி இருந்திருக்க வேண்டும். அரங்கில் காணப்பட்ட மூன்று வேட்பாளர்களுமே தமிழ் மக்களுக்கு அவர்கள் கேட்பதை தரப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்த் தரப்பு தனது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி கூட்டாக முன் வைத்திருந்திருக்க வேண்டும். அதன் மூலம் மூன்று வேட்பாளர்களையும் அம்பலப்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. த…
-
- 18 replies
- 1.2k views
-
-
எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல; ஆனால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் கணிசமான பேர் திமுக காரர்கள்தான். விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, நன்கொடை தருவது என்பதை திமுகவின் தமிழ் உணர்வு கொண்ட தொண்டர்களிடம்தான் இன்றும் காண முடிகிறது. தலைமையை மீறிய இந்த அரசியல் உணர்வு மரியாதைக்குரியதாக இருக்கிறது. ஈழப் பிரச்சினையின் காரணமாகவே பல தொண்டர்கள் திமுகவிலிருந்து வெளியேறியும் இருக்கிறார்கள். (வைகோ மற்றும் அவரை ஆதரித்தவர்கள்) இதற்கு நேர் எதிராக, அதிமுகவின் தலைவர் எம்.ஜி.ஆர் தீவிரமான விடுதலைப் புலிகளின் ஆதர…
-
- 6 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த ஒசாமா? பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை. பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார். 1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார். 1984 -தனது உல்லாச விடுதியை அமைத்து, (பாகிஸ்தான் எல்லை) அங்கிருந்து தன் கண்காணிப்புகளை ஆரம்பித்தார். ஆப்கானில் தனது முகாம்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் கிழக்கு மாகாணம் சற்று வித்தியாசமானது. இங்கு மூவின மக்களும் கிட்டத்தட்ட சம அளவில் வாழ்கின்றனர்.(சிங்களவர்கள் சற்று குறைவு) 2012 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்பிரகாரம் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும் அடுத்த குடிசன மதிப்பீட்டின்போது அந்த நிலை நிச்சயமாக மாற்றமடையும். 2012 ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழர்கள் 39.29% ஆகவும்,முஸ்லிம்கள் 37.69% ஆகவும்,சிங்களவர்கள் 23.15% ஆகவும் உள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஒரு இனத்தால் அல்லது ஒரு கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பது வெளிப்படையானது. கடந்த கால ஆட்சியமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள்,துரோகங்கள்,விட்டுக்கொடுப்புக்கள் என்று தொடர்ந்து, தற்பொழுது ஏ…
-
- 11 replies
- 1.2k views
-
-
தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா? புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஒக்டோபர் 01 தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஹர்த்தாலையும் நடத்தி முடித்திருக்கின்றன. தமிழ்த் தேசிய கட்சிகள், வாக்கு அரசியல் ரீதியாகத் தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டாலும், நினைவேந்தல் தடை போன்றதொரு முக்கியமான பிரச்சினையில், ஒன்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆனால், ஓரணியில் திரள்வதும் அதன் ஊடாகச் சர்வதேசத்துக்குச் செய்தி சொல்வதும் மாத்திரம், அரசியல் வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடுமா என்கிற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் எழுச்…
-
- 2 replies
- 1.2k views
-
-
பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறை – பி.மாணிக்கவாசகம் உள்ளுராட்சித் தேர்தலுக்கான திகதி நெருங்கி வருகின்ற சூழலில் தேர்தல் வன்முறைகள், தேர்தல் நடைமுறை சட்டமீறல்கள் பற்றிய செய்திகளும் தகவல்களும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. எந்தவொரு தேர்தலாக இருந்தாலும், தேர்தல் கால வன்முறைகள், தேர்தல் சட்டமீறல்கள் போன்றவற்றிற்குக் குறைவிருப்பதில்லை. குறிப்பாக விகிதாசாரத் தேர்தலில், விருப்பு வாக்கு முறைமை தேர்தல் வன்முறைகளுக்கு அதிக வாய்ப்பளித்திருந்தமை வரலாற்று அனுபவமாகப் பதிவாகியிருக்கின்றது. ஆனால், தொகுதி முறை, விகிதாசார முறை என்ற இரண்டும் கலந்த ஒரு தேர்தலாக அமைந்துள்ள 2018 ஆம் ஆண்டின் உள்ளுராட்சித் தேர்தலில் விருப்பு வாக்குக்கான வன…
-
- 1 reply
- 1.2k views
-
-
‘பாவம் தமிழ் மக்கள்’ - இலட்சுமணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், கடந்த வாரம் “தமிழ்க் கட்சிகள் அனைத்தும், ஓரணியில் திரளவேண்டும்; இங்கிருந்து வெளியேறிச் சென்றவர்கள், மீண்டும் ஒன்றிணைய வேண்டும். கூட்டமைப்பு எவரையும் வெளியேற்றவில்லை” எனப் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். இந்த அறிவிப்பானது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடியது தான். ஆயினும், இவ்வறிவிப்பின் உண்மைத் தன்மை குறித்து, சந்தேகம் எழுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இந்த அழைப்பு, இதயசுத்தியுடனானதா என்பது தொடர்பாகத் தமிழ் மக்கள், தமக்குள் தாமே கேள்வி எழுப்பி வருகின்றார்கள். ஏனெனில், இந்த அறிவிப்பைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ, செயலா…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 15 மாதிவெலயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து, கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில இறுவட்டுகள் தான், இன்று நாட்டின் பிரதான பிரச்சினை என்று கூறுமளவுக்கு, அவை ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பெண்கள் ஆகியோருடன், ராமநாயக்க தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் நடத்தியதாகக் கூறப்படும் உரையாடல்களே, இந்த இறுவட்டுகளில் உள்ளன எனக் கூறப்படுகிறது. இந்த உரையாடல்கள் மூலம் அவர், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
2350 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் மாசிடோனியா மாநிலத்தில் பிறந்தவர் மாவீரர் மகா அலெக்ஸாண்டர். இவர் வாழ்ந்த காலம் [கி.மு:356-323] ஆகும். முதலாகத் தொடங்குகிறது. கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டர் தனது மத்திம வாழ்வின் துவக்கத்தில் 32 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். பதினெட்டு வயது முதல் அவரது அபாரப் போர்த்திறமை வெளிப்பட்டு, அந்தக் குறுகிய காலத்திலே சீரான கிரேக்கப் படையைத் தயாரித்து வட ஆபிரிக்கா, மத்தியாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வட இந்தியா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிக் கடல் வழியாக முதன் முதலில் மீண்டு மத்தியாசியாவை அடைந்தவர். பெரும் படை வீரரை மட்டும் கொண்டு செல்லாது, அலெக்ஸாண்டர் தன்னுடன் விஞ்ஞானிகள், தளவரையாளிகள் [surveyors] ஆகியோரையும் அழைத்துச் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
காஷ்மீர்: இறையாண்மையும், நிலப்பரப்பும் செப்டம்பர் 2019 - ராஜன் குறை · கட்டுரை As if the actual state were not the people. The state is an abstraction. The people alone is what is concrete. -Karl Marx இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு குடியரசுகளாக பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியில் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, சில மன்னராட்சி பிரதேசங்கள் இரண்டில் எதனுடன் இணைவது என்ற கேள்வியை எதிர்கொண்டன. அதில் காஷ்மீரும் ஒன்று. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அழுத்தத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. ஆனால் இது மன்னரின் இசைவாக இருந்ததே தவிர மக்களின் குரலாக இல்லை. சில தனித்த உரிமைகளை அந்த மாநிலத்திற்குக் கொடுப்பதன் மூலம் மக்களைத் திருப்திபடுத்தவே இந…
-
- 1 reply
- 1.2k views
-
-
சீச்சீ இவையும் சிலவோ? - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உலகை உய்விக்கும் மார்கழி மாதக் காலைப் பொழுது. சிவனைத் தொழவென இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து, தம் தோழியர்களைத் துயில் எழுப்பி வீதியுலா வருகின்றனர். தன் பாசம் முழுவதும் சிவனுக்கே என்று முதல்நாள் உரைத்த ஒரு பெண், இன்று துயிலெழாமல் பஞ்சணையில் பாசம் வைத்துப் படுத்துக் கிடக்கிறாள். வந்த தோழியர்க்கோ கோபம். நேற்றொரு வார்த்தை இன்றொரு வார்த்தை பேசுவது நியாயமா? தோழியர் குற்றம் உரைக்க, அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளே உறங்கிக் கிடந்த தோழி, தன்மேல் குற்றம் சொன்னவர்களைப் பார்த்து, 'இதென்ன, நீங்கள் சின்னவிஷயத்தைப் பெரிதுபடுத்திப் பேசுகிறீர்கள். நீங்கள் குற்றம் சொல்லவேண்டிய நேரமா இது?" …
-
- 0 replies
- 1.2k views
-
-
நன்றி தமிழ்நெட்.
-
- 0 replies
- 1.2k views
-
-
சமூக ஊடகங்களும், உலக நெருக்கடிகளும் சதீஷ் கிருஷ்ணபிள்ளை இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்த சமயம், மியன்மாரில் பேஸ்புக் பற்றிய தருஸ்மான் அறிக்கை வெளியானது. மியன்மாரின் கலவரங்கள் பற்றி ஆராயச் சென்ற மார்சுகி தருஸ்மான் தலைமையிலான ஐ.நா. அதிகாரிகள், தாம் அறிந்த விடயங்களை பகிரங்கமாக அறிவித்தார்கள். இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் பேஸ்புக்கின் வகிபாகம் தீர்க்கமானது என தருஸ்மான் தெரிவித்தார். அவர் பேஸ்புக்கை பயங்கரமான மிருகம் என்று வர்ணித்ததுடன், இந்த சமூக வலைத்தளம் கசப்புணர்வையும், முரண்பாடுகளையும் வெகுவாகத் தீவிரப்படுத்தியதென சாடினார…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் அதன் வல்லரசுக் கனவு பெரும் பங்கு வகிக் கின்றது. இந்த வல்லரசுக் கனவிற்கு சீனா தடையாக இருப்பதை மாற்றி அமைக்க இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கையிலும் அதன் வர்த்தகத்திலும் பெரும் விட்டுக் கொடுப்புக் களைச் செய்து கொண்டிருக்கின்றது. இதனால் தான் இந்தியா ஜப்பானிய, சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களை ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவிற்கு வரவேற்று உபசரித்தது. கவர்ச்சிகரமான இந்தியா கவர்ச்சிகரமான இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை, மூன்றாவது பெரிய பொருளாதாரம், உலகிலேயே வேகமாக வளரப் போகும் பொரு ளாதாரம், உலகிலேயே அதிக அளவு மத்திய தர வர்க்கம், உலகிலேயே அதிக அளவு படைக் கலன் கொள்வனவு, 2020-ம் ஆண்டு உலகி லேயே மிக இளமையான சராசரி மக்கள் தொகைக்கட்டமைப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையை வளைக்கப்போகின்றதா அல்லது முறிக்கப்போகின்றதா இந்தியா? முத்துக்குமார் 13வது திருத்தம் பற்றிய அரசியல் தொடர்ந்து சூடான நிலையில் இருக்கின்றது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், 13வது திருத்தம் பற்றியே கவனம் குவிந்திருக்கின்றது. எல்லாத் தரப்பினையும் எல்லாவற்றையும் மறக்கச் செய்து 13வது திருத்தப் பக்கம் திருப்பியதில் மகிந்தர் வெற்றி கண்டிருக்கின்றார் என்றே கூறவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு 13வது திருத்தத்தைப் பாதுகாக்கும் காவலனாக புதுடில்லி வரை சென்று வந்திருக்கின்றது. அரசியல் தீர்வு விவகாரத்தை புதுடில்லியிடம் அது ஒப்படைத்ததினால் எடுத்ததற்கெல்லாம் புதுடில்லிக்கு ஒடவேண்டிய நிலை அதற்கு. அங்குகூட எஜமான்கள் சொன்னதா…
-
- 8 replies
- 1.2k views
-
-
[size=4]1990ஆம் ஆண்டிலிருந்து வன்னியை மையப்படுத்திய போர் அதிக தடவைகள் கனகராயன்குளத்தைக் காயப்படுத்தியது.[/size][size=2] [size=4] நமது கிராமங்கள் வேகமாக மூழ்கிக்கொண்டிருக்கின்றன. அதிகாரத்தின் அதி உச்ச பலத்திலிருந்து பிறந்திருக்கும் ஏதோ ஒன்று கிராமங்கள் பட்டப்பகலில் சூறையாடப்படுவதைக் கூட பார்த்துக் கொண்டிருக்கச் செய்திருக்கின்றது. [/size][/size] [size=2] [size=4]எம் பாட்டன், பாட்டி, தாய், தந்தை வாழ்ந்து பழகிய நிலம் நமது காலத்தைக் கடன் கொடுக்க வலிந்து தயாராகிக் கொண்டிருக்கின்றது. [/size][/size] [size=2] [size=5]பரவி வரும் ஆபத்து[/size][/size][size=2] [size=4]எமது தலைமுறைக்கும், எமது அடுத்த காலத்தவர்க்கும் அங்கு வாழ்வதற்கான ஆதாரங்கள் மறுக்கப்படும் சூழலுக்குள் அமிழ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுயத்தைத் தொலைத்தவர்கள் ஒட்டகம் புகுந்த வீடு, ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம் இப்படியான பொழுதுபோக்கான வியங்களை எழுதும்போது அதிகமான களத்துறவுகள் ஓடிவந்து படித்தீர்கள். நாணல் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில் பதில் கருத்துக்களும் மெல்ல எழுதத் தொடங்கினீர்கள். ஆனால் மத்தியஸ்தம். செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது என யதார்த்தமாக சிந்திக்க வேண்டிய அழுத்தமான கருத்துக்களை மீள் ஆய்வு செய்ய வேண்டிய விடயங்களை மெல்ல உங்கள் முன் வைக்கத் தொடங்கியதும். ஒரு சின்ன இடைவெளி. பதில் கருத்தை முன்வைக்கத் தயக்கம். யாரிந்த நாணல்? நல்லவனோ? இல்லைக் கெட்டவனோ? பசுத்தோல் போர்த்திய புலியோ? புலித்தோல் போர்த்திய குள…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழகமும் தமிழீழமும் - கூட்டுச் சாலையில் தமிழ்த் தேசங்கள்.! இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இன எழுச்சியில் காசுமீரம், வட கிழக்கு நீங்கலாகத் தமிழ்த் தேசம்தான் எப்போதுமே முன்னணியில் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் பிரித்தானியக் காலனியாதிக்கத்தின் போதே ஒருபுறம் முற்போக்கான இந்தியத் தேசியத்தின் உறுப்பாகவும், மறுபுறம் பிற்போக்கான இந்தியத் தேசியத்தின் மறுப்பாகவும் தமிழ்த் தேசியம் முகிழ்த்தது. இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் மொழிப் போராட்டத்தின் போது தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கம் பிறந்தது. இதுவே தமிழ்த் தேசியத்தின் முதல் அரசியல் முழக்கம். இடைக்காலத்தில் திராவிடம் என்பது தமிழ்த் தேசியத்தின் உருத்திரிந்த வெளிப்பாடாகவே இருந்தது. தமிழ்த் தேசிய இனத்தின் தன்தீர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இனவெறித் ’தீ’ என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 01 அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், 20 டொலர் போலிப் பணத்தாளைப் பயன்படுத்திய சந்தேகத்தில், கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற நபர், வௌ்ளையின பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்படும் போது, கைவிலங்கு பூட்டப்பட்டு, நிலத்தில் தலைகுப்புறப் படுக்கவைக்கப்பட்டு, குறித்த பொலிஸ் அதிகாரி, தனது முழங்காலால் ஃபுளொய்டின் கழுத்தை, நீண்ட நேரம் அழுத்திப் பிடித்திருந்ததன் காரணமாக, மூச்செடுக்க முடியாது ஃபுளொய்ட் உயிரிழந்தார். வௌ்ளையினப் பொலிஸ் உத்தியோகத்தர்களால், கறுப்பினத்தவர்கள் மீது, இனவன்மம் கொண்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது, அமெரிக்க வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கண்டனத்துக்கும் கவல…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் பிடியில் இருந்து விலகி சர்வதேச மயப்படும் இலங்கை விவகாரம் - செல்வரட்னம் சிறிதரன் 23 நவம்பர் 2013 மழை விட்டாலும் தூவானம் இன்னும் விடவில்லை என்று சொல்வார்கள் இலங்கையில் நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்த நிலைமையிலேயே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல், பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையில் பாரதத்தின் பிடிக்குள் அடங்கியிருந்த இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம், இந்திய அரசிடமிருந்து கைநழுவி சர்வதேசமயப்படுகின்றதா என்ற சந்தேகமும், நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாட்டையடுத்து எழுந்துள்ளது. கொழும்பு மாநாட்டுத் தலையிடி பொதுநலவாய அமைப்பி;ன் உறுப்பு நாடு என்ற வகையில் அந்தஸ்து ரீதியாக கொழும்பில் நடைபெற்ற பொது…
-
- 2 replies
- 1.2k views
-
-
இறுகும் சுறுக்கு, இறுகுமா இன்னும்? 2007ம் ஆண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, சண்டே லீடர் பத்திரிகையில், 'மிக் டீல்' என பின்னாளில் அழைக்கப்பட்ட, ஒரு மோசடி மிக்க ஆயுத கொள்வனவு குறித்த விபரங்களை வெளியிட்டார். உக்ரைன் நாட்டில், இயக்கமில்லாத நிலையில், வைக்கப் பட்டிருந்த மிக் விமானங்களை வாங்கிய வகையில், அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸேவின் தொடர்புகள் குறித்து பல விபரங்களை, வெளியிட்டிருந்த இந்த கட்டுரையினை தொடர்ந்து, சண்டே லீடர் பத்திரிகை மீது, மான நஷ்ட வழக்கு ஒன்றினை ஆரம்பித்திருந்தார் அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸே . லசந்தவின் நண்பர்களும், உறவினர்களும், இந்த கட்டுரைகளும்,வழக்கும், அவரது உயிரினை காவு கொண்டது என நம்புகின்றனர். ப…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது? இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன? இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்ல…
-
- 4 replies
- 1.2k views
-