அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
தமிழகமும் தமிழீழமும் - கூட்டுச் சாலையில் தமிழ்த் தேசங்கள்.! இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இன எழுச்சியில் காசுமீரம், வட கிழக்கு நீங்கலாகத் தமிழ்த் தேசம்தான் எப்போதுமே முன்னணியில் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் பிரித்தானியக் காலனியாதிக்கத்தின் போதே ஒருபுறம் முற்போக்கான இந்தியத் தேசியத்தின் உறுப்பாகவும், மறுபுறம் பிற்போக்கான இந்தியத் தேசியத்தின் மறுப்பாகவும் தமிழ்த் தேசியம் முகிழ்த்தது. இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் மொழிப் போராட்டத்தின் போது தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கம் பிறந்தது. இதுவே தமிழ்த் தேசியத்தின் முதல் அரசியல் முழக்கம். இடைக்காலத்தில் திராவிடம் என்பது தமிழ்த் தேசியத்தின் உருத்திரிந்த வெளிப்பாடாகவே இருந்தது. தமிழ்த் தேசிய இனத்தின் தன்தீர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் இடையீடு; நமது உரைகல் என்ன? - யதீந்திரா by Jathindra - on December 1, 2015 படம் | SLGUARDIAN சில தினங்களுக்கு முன்னர் ஜக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அமெரிக்க உயர்மட்டத்தினர் பலர் இலங்கைக்கு விஜயம் செய்வது ஒரு சாதாரண விடயமாகிவிட்டது. இதன் உச்சமாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் விஜயம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடுமென்னும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாயிருந்தன. நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று புதிய அமைச்சரவை நியமிக்க…
-
- 0 replies
- 938 views
-
-
ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? கந்தையா அருந்தவபாலன் ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணம…
-
- 0 replies
- 306 views
-
-
Published by Daya on 2019-11-20 10:46:01 பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், புதிய கட்சியிலிருந்து ஒரு புதிய முகம் அரச தலைவர் பதவியில் அறிமுகமாகியுள்ளது. இந்தப் புதிய முக பிரவேசமானது நாட்டைப் புதியதோர் அரசியல் நெறியில் வழிநடத்திச் செல்வதற்கு வழிவகுக்குமா என்பது பலருடைய ஆர்வமிக்க கேள்வியாக உள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய அரசியல் பின்னணியைக் கொண்டவரல்ல. பாராளுமன்ற அரசியலில் அனுபவமுடையவருமல்ல. யுத்தச் செயற்பாட்டுப் பின்னணியைக் கொண்டதோர் அதிகார பலமுள்ள சிவில் அதிகாரியாகவே அவர் பிரபலம் பெற்றிருந்தார்…
-
- 0 replies
- 422 views
-
-
மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் May 25, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாணசபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள் தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாணசபை தேர்தல்கள் ஏழு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்றன. உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி காரணமாக மாகாணசபை தேர்தல்களை தற்போதைக்கு நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டாது என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அரசாங்கம் மாத்திரமல்ல, எ…
-
- 0 replies
- 180 views
-
-
பாலியல் வல்லுறவு, கொலைகள், தண்டணையிலிருந்து விலக்கீட்டுரிமை மற்றும் எமது கூட்டு மறதிநோய் March 10, 2016 படம் | WATCHDOG சர்வதேச பெண்கள் தினைத்தையும், “இருண்ட பங்குனியாக” பங்குனி மாதத்தையும் பெண்கள் உரிமைகள் குழுக்களும், செயற்பாட்டாளர்களும் நினைவுபடுத்துகையில் எம்மிலும், எமது நடவடிக்கைகளிலும் நீண்டதும், கடுமையானதும், பிரதிபலிப்பிலானதுமான பார்வையொன்றை எம்மால் எடுக்க முடியும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதுடன், இலங்கையில் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நீண்டதும், கடுமையானதுமான போராட்டத்தில் இணைவதற்கும் தீர்மானிக்கின்றோம். சிறுமி ஹரிஷ்ணவியின் பாலியல் வல்லுறவும், கொலையும் 2016 பெப்ரவரி 16 அன்…
-
- 0 replies
- 468 views
-
-
நேர்முகத் தெரிவு முறைகேடுகளால் திணறும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எம். காசிநாதன் இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கின்ற நேரத்தில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு முறைகேடு நடைபெற்று இருப்பது, இளைஞர் சமுதாயத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காகப் பதிவு செய்து விட்டு, நீண்ட வரிசையில் இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஒரு சாதாரண வேலைக்கு, ‘ஆள் தேவை’ என்று விளம்பரம் வந்தால், நேர்முகப் பரீட்சைக்கு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் படையெடுக்கிறார்கள். இந்நிலையில், எழுத்து தேர்வுகளில் பேரங்களின் அடிப்படையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வெ…
-
- 0 replies
- 434 views
-
-
"தமிழர்கள் செத்தால் வருத்தல் இல்லையா?" சமஸ் படங்கள் : கே.ராஜசேகரன் தமிழக அரசியலில் இனரீதியிலான தாக்குதல் கலாசாரத்தைத் தொடக்கிவைத்திருக்கிறார் சீமான். விளையாட்டுப் பயிற்சி, சுற்றுலா என்று தமிழகம் வந்த சிங்களர்கள் மீது அவருடைய 'நாம் தமிழர்’ இயக்கத்தினர் முன்னின்று நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசு தன்னுடைய பிரஜைகளை தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தும் அளவுக்குச் சென்றது. தேசிய ஊடகங்கள் தமிழ் அமைப்புகளை வெறி பிடித்தவையாகச் சித்திரிக்கின்றன. ஆனால், சீமானோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேசுகிறார். ''தமிழ்நாட்டின் ராஜ் தாக்கரே ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?'' ''ராஜ் தாக்கரேவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் இந்த மண்ணின் மீத…
-
- 5 replies
- 1.8k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு அண்மையில் லண்டனில் நடைபெற்றபோது, இதுவே நடப்பு அரசாங்கத்தின் இறுதி அமர்வு என அதன் முதல்வர் உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இந்நிலையில்,கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாடு கடந்த அரசாங்கம் அதன் இலக்கினை நோக்கி நகர்ந்திருக்கிறதா எனபதனை காய்த்தல் உவத்திலின்று ஆராய வேண்டியுள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தின் உருவாக்கம், அதன் பின்னாலிருந்தவர்கள், குறிப்பாக சிறிலங்கா பாதுகாப்பு படைகளுடன் இயங்கும் கே.பி. உடன் தொடர்புடையவர்களுக்கும் இக்கட்டமைப்புக்கும் உள்ள நெருக்கம் என்பவை தொடர்நது ஜயத்துக்குரியவையாக இருந்து வருகிற போதிலும், தமிழ் வெகுமக்கள் மத்தியில் இக்கட்டமைப்பு பற்றிய எதிர்பார்ப்பு இன்னமும் இருந்து வருகிறது. நாடு கடந்த அரசாங்கம் தமிழீழ …
-
- 0 replies
- 604 views
-
-
கருணாவை பாராட்ட வேண்டும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜூன் 24 தேசப்பற்று என்பது ஒரு வகையில் ஆச்சரியமானது. சிலவேளைகளில், அது மனிதனை இயங்கச் செய்கிறது. சிலவேளைகளில், அது அவ்வாறு செய்வதில்லை. சிலவேளைகளில், கிள்ளுவதுகூட ஒருவரை ஆவேசம் கொள்ளச் செய்யும். சிலவேளைகளில், அணுகுண்டு வெடித்தாலும் ஒருவரைத் தட்டி எழுப்பாது. கடந்த காலங்களில், தமிழ் அரசியல் கட்சிகள் சமஷ்டி முறை ஆட்சி வேண்டும் என்று கூறிய போதெல்லாம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலர், நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள் எனக் கூறி, துள்ளிக் குதித்தனர். ஆனால், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தாம் ஆைனயிறவு இராணுவ முகாமில் 2,000 படையினரையும் கிளிநொச்சியில் 3,000 படையினரையும் கொன…
-
- 0 replies
- 770 views
-
-
கருத்துக்களத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா வழங்கிய நேர்காணல்
-
- 0 replies
- 460 views
-
-
‘எழுக தமிழ்’ தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வாக வேண்டும் தமிழ் மக்களின் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வலியுறுத்தியும் அவை தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு உணர்வு பூர்வமாக எழுக தமிழ் பேரணியை நடத்தியிருந்தார்கள். வடக்கு, கிழக்கை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தின் பூரண சுயாட்சியையும் சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் சமஷ்டி ஆட்சி முறையிலான தீர்வே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என்ற கருத்தையும் உரக்கவே கூறியிருந்தார்கள். …
-
- 0 replies
- 909 views
-
-
“பொனப்பாட்டிச அரசமைப்பை நோக்கி நகரும் இலங்கை அரசியல்” -கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை அரசியலில் இருபதாவது திருத்த சட்டமூலத்தின் வர்த்தகமானி அறிவிப்பின் பிரகாரம் அதிகாரத்திற்கான போட்டியும் கட்சி அரசியலின் ஆதிக்கமும் தொடர் விடயமாக நிகழ்ந்து வருவதனை பதிவு செய்துள்ளது. சுதந்திரத்திற்கு பின்பு அத்தகைய அரசியல் செல்நெறி வடக்கு கிழக்கினை மட்டுமல்ல இலங்கைத் தீவு முழுவதையும் ஒர் ஆரோக்கியமான அரசியல் சமூகமாக அடையாளப்படுத்துவதில் தவறுவதற்கு மூலாதாரமாக அமைந்துள்ளது. கட்சிகளும் ஆட்சியாளரும் காலத்திற்கு காலம் அரசியலமைப்பினை திருத்துவதும் மாற்றுவதும் மரபாகக் கொண்டுள்ள போக்கினை அவதானிக்கின்ற போது அத்தகைய முடிபுக்கே வரவேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும்.. இது ஒரு அரதிகாரப் போட்ட…
-
- 0 replies
- 870 views
-
-
-
- 6 replies
- 1k views
-
-
வரவு செலவுத் திட்டத்தில் அரசுக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறார் விக்கினேஸ்வரன் BharatiDecember 14, 2020 வரவு செலவுத் திட்டத்தில் அரசுக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறார் விக்கினேஸ்வரன்2020-12-14T17:19:05+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore “வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற அமர்வில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்காதது உங்களைப் பல கண்டனங்களுக்குள் உள்ளாக்கியுள்ளது. உங்கள் பக்கக் கருத்துக்களைக் கூற முடியுமா?” என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் பதிலளித்துள்ளார்.…
-
- 4 replies
- 875 views
-
-
அமெரிக்காவின் புதிய ஆட்சி" | கலாநிதி கீத பொன்கலன்
-
- 0 replies
- 608 views
-
-
கொழும்பு-ஜெனீவா பலப்பரீட்சை- நஜீப் பின் கபூர் தனிமனித வாழ்விலும் நாடுகளின் வரலாறுகளிலும் சில தீர்மானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைவதுண்டு. அதேபோன்று சில நாடுகள் வரலாற்றில் மறக்க முடியாத சில சம்பவங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுவதும் இயல்பானதே. அந்த வகையில் இலங்கை அரசியல் வரலாற்றில் விஜயன் வருகை முதல் இன்றுவரை சில சம்பவங்கள் நமது வரலாற்றில் பெரும் தாக்கங்களைச் செலுத்தி வந்திருக்கின்றன. அந்தவகையில் சுதந்திரத்துக்குப் பின் நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளில் 1971ல் ஒடுக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் நடத்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிவுற்றாலும் அந்த கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இந்த நட்டில் ஜேவிபி என்ற பெயரில் …
-
- 0 replies
- 429 views
-
-
-
- 7 replies
- 1.5k views
-
-
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அடுத்த வார இறுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம், 31ம் திகதி வரையில் ஒரு வாரகாலம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக ஐ,நா தகவல்கள் வெளிவந்தபோதும், தனது பயணத்தை அவர் முற்கூட்டியே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வார இறுதியில் அவர் இலங்கை வரவுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வெளியாகும் சிறீலங்கா அரச சார்பு ஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேவர்’ தெரிவித்திருக்கின்றது. எனினும், இந்த வார இறுதியில் அவர் இலங்கை செல்வது தொடர்பாக ஐ.நா தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை செல்லும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை …
-
- 1 reply
- 763 views
-
-
மசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அதிகாரத்துக்கான ஆடுகளங்கள் தொடர்ந்தும் மாறுவன. மாறுகின்ற உலக ஒழுங்கு புதிய சவால்களை உருவாக்குகின்றது; புதிய அரங்காடிகளைத் தோற்றுவிக்கிறது. புதிய அதிகாரச் சமநிலையும் புதிய கூட்டணிகளும் உருப்பெறுகின்றன. இதன் பின்னணியில், பூகோள அரசியல் அரங்கில், புதிய களங்கள் உருவாகவும் உருவாக்கவும்படுகின்றன. புவியியல்சார் ஆதிக்கத்துக்கான அவா புதிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தோற்றுவிக்கின்றது. அவ்வாறு தோற்றம்பெறுவன அதிகாரத்துக்கான புதிய ஆடுகளமாகின்றன. மசிடோனியாவின் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற வன்முறை, ஊடக…
-
- 0 replies
- 455 views
-
-
யாழ் நூலகம்: பிரபாகரனின் ஆணையில் புலிகளால் எரிக்கப்பட்டதா? - என்.சரவணன் ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்ப்பானத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகிவிட்டிருக்கிறது. தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான…
-
- 79 replies
- 6.1k views
-
-
வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்? நிலாந்தன்! August 22, 2021 பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது என்பது சோதனை மிகுந்தது. அந்தச் சோதனையில் அவர் சித்திபெறவில்ல. தொடக்கத்தில் இருந்தே அவர் சொதப்பி விட்டார். மந்திரித்த நீரை ஆறுகளில் கலப்பதிலிருந்து தொடக்கி உள்ளூர் வெதமாத்தையாவான தம்மிகாவின் கொரோனாப் பாணியை அங்கீகரித்து அருந்தியதுவரை அவர் மாந்திரீகம் மருந்து எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பிவிட்டார். இப்போது அவருடைய இடத்துக்கு ஹெகலிய ரம்புக்வெல வந்திருக்கிறார். இவர் யுத்தகாலங்களில் பாதுகாப்புத்துறை பேச்சாளராக இருந்தவர். அந…
-
- 0 replies
- 640 views
-
-
கோத்தா-கூட்டமைப்புப் பேர்ச்சுவார்த்தை. தரகர்களின் காலில் வீழ்வதை விடவும் எதிரியிடமே பேசுவது என்னமோ பெட்டர்தான். அதிலும் அரைகுறைகளிடம் அல்லாது அசல் "சிங்களத் தலைவனிடமே" பேசிவிடுவது சாலச்சிறந்தது. ஆட்சி மாற்றம், ஊழல் ஒழிப்பு என்று சிங்கள தேசத்தை அதன் அழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சி எதுவும் எடுக்காது, மொள்ளைமாரிகள், போலி ஜனநாயகவாதிகளுடன் கைகோர்க்காது நேரே "பாசிஸ்ட்டுகள்" இடமே பேசத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதுதான் "புலிவழி" "பலம்தான் உலக ஒழுங்கைத் தீர்மானிக்கிறது" என்பது நந்திக்கடலோன் வாக்கு. சிங்களதேசம் அந்நிய செலவாணிக்கு வழியின்றி பாதாளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து சிங்கள தேசத்தைக் காப்பாற்றும் வல்லம…
-
- 0 replies
- 441 views
-
-
-
- 3 replies
- 606 views
-
-
இளங்கோவன் என்ற தமிழ் நாட்டுக் காங்கிரஸ் அரசியல்வாதி, ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேரும் விடுவிக்கப்பட்டால் தாம் தீவிரவாதிகளாக மாறப்போவதாக மிரட்டிருயிருக்கிறார் என்று முகநூலில் சில செய்திகள் சொல்கின்றன.. https://www.facebook.com/Sevanthinetwork/timeline?filter=1 இப்போதாவது புரிகிறதா தீவிரவாதிகள் ஒழிந்திருக்கும் குகை எங்கே என்று. தலைமைகள் தொடக்கம் தொண்டுகள் வரைக்கும் உள்ளே தள்ளப்பட வேண்டியவர்களின் மடம் அது. பிடித்து உள்ளே தள்ளிவிட வேண்டியதுதானே. ஏன் தாமதம்? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ரஜீவ் காந்தி காலம் தொடக்கம் பதவியில் இருந்தபோதெல்லாம் கொள்ளை அள்ளிய கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் ஒருவரின் மானம் கெட்டதனமான வீராப்பு பேச்சு அது. இந்த வீரவண்டி…
-
- 7 replies
- 1.1k views
-