அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது – சூ.யோ. பற்றிமாகரன் . 1980களில் அமெரிக்க மேலாதிக்கம் திருகோணமலைத் துறைமுகத்தில் வேகம் பெறுவதை அன்றைய சிறீலங்கா சனாதிபதி ஜே. ஆர் ஐயவர்த்தன ஊக்கப்படுத்திய சூழ்நிலையில், இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கையை செய்வதன் மூலம் அதனை மட்டுப்படுத்த வேண்டிய தேவை முதன்மையானதாக இருந்தது. 1983இல் யூலை ஈழத்தமிழின அழிப்பைச் சிறீலங்கா அரசாங்க ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாதிகள் நிகழ்த்திய பொழுது அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள், ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான இச்செயற்பாட்டுக்கு இந்திய அளவிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாத…
-
- 2 replies
- 862 views
-
-
ஆதவன் பக்கம் - பருத்தித்துறை தரையிறக்கமும் ட்ரோலர் அரசியலும் நியூயோர்க்கில் இருந்து கப்பலில் சிங்கப்பூர் வந்து கொண்டுள்ளோம். வருகின்ற வழியில் 4 தினங்கள் முன்பு செங்கடலில் ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளதாகவும் (Man over board), 7 தினங்கள் முன்பு மெடிட்டரேனியன் கடலில் (ஸ்பெயினின் தெற்கு கடல் பகுதியில்) ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளதாகவும், அவர்களைத் தேடும் படலம் (Rescue operation) தொடர்வதாகவும், குறித்த பகுதிகளின் வழி பயணிக்கவேண்டாம் என்றும் இப்பகுதிகளில் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும் அவசர செய்தி அனுப்பப்பட்டது. எனது முதல் தர அதிகாரியுடன் இதுபற்றி (அதாவது ஏன் அடிக்கடி ஆட்கள் கடலில் வீழ்கிறார்கள்) கதைத்துக் கொண்டிருந்த பொழுது, அவர் தான் அறிந்த இரண்டு சம்பவங்களை கூறின…
-
- 2 replies
- 660 views
-
-
மீண்டும் மீண்டும் சூடு காணும் பூனைகள் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வப்போது பேசுகிற விடயங்கள் சிலவேளைகளில் அர்த்தமற்றதாகவும் முன்னுக்குப் பின் முரணானதாகவும் தோன்றலாம். அரசியல், சிவில் நிர்வாக அனுபவம் இன்மையின் விளைவுகளாக இவற்றைக் கொள்ளலாம். அதனால்தான், விடயங்கள் சாதகமாக நடக்கும் போது, அதற்கான பெருமையை சுவீகரித்துக்கொள்வதில் அவர் காட்டும் அவசர ஆர்வம், விடயங்கள் பிழைக்கும் போது அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் இருக்கவில்லை. மாறாக, விடயங்கள் பிழைக்கும் போது, அதற்கான பொறுப்பை மற்றவர்கள் மீதும், மக்கள் மீதும் சாட்டுகின்ற சிறுபிள்ளைத்தனமான அரசியல் அணுகுமுறை, அவரை அறியாமலேயே வௌிவந்திருந்தமையை அவரது பேச்சுகளிலு…
-
- 0 replies
- 483 views
-
-
விலகிவரும் புறச்சூழல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப்பெறும் நேரமும் காலமும் நெருங்கியுள்ளதாக கனவு காணப்படுகிறது. ஆனால் அதற்கான அகச்சூழ்நிலையும் புறச்சூழ்நிலையும் நாளுக்கு நாள் விலத்திக்கொண்டு போவதைப்போன்ற ஒரு பிரமையே இப்பொழுது முன்நிற்கின்றது. ஒற்றையாட்சியென்ற நிலையிலிருந்து அரசாங்கம் மாறக்கூடாது, என்று கூறும் கடும் போக்காளர்களின் பிடி இறுகிக்கொண்டிருக்கிறது. இன்னுமொரு புறம், வட– கிழக்கு இணைப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் கூறும் இன்னுமொரு தரப்பினர். இதற்கு நடுவில் இடைக்கால அறிக்கை அண்மையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ் இடைக்கால அறிக்கை தொடர் பில் தமிழ் மக…
-
- 0 replies
- 596 views
-
-
அமெரிக்க ஜனாதிபதியின் தென்கிழக்காசிய பயணம் அமெரிக்க - சீன உறவுகள் மேலும் வலுவடையுமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 12 நாட்கள் அரச பயணம் ஒன்றினை மேற்கொண்டு தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்குப் புறப்பட்டுள்ளார். இவரின் பயணம் ஐந்து நாடுகளுக்கு விஜயம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் ஆசியன் மாநாட்டிற்கும் சமூகமளிப்பதாகும். வியட்நாமில் ஏ.பி.ஈ.சி. மாநாடு11-, 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் வியட்நாமில் விஜயத்தை முடித்துவிட்டு பிலிப்பைன்ஸ் நோக்க…
-
- 0 replies
- 410 views
-
-
சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும் - யதீந்திரா படம் | Vikalpa Flickr ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள் பேரவையின் விசாரணை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், அது குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சில சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும், இவை அனைத்திற்கும் பின்னால், அரசின் திரைமறைவு கரம் இருப்பதாக குற்றஞ்சாட…
-
- 1 reply
- 522 views
-
-
சமூக ஊடகங்களும், உலக நெருக்கடிகளும் சதீஷ் கிருஷ்ணபிள்ளை இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்த சமயம், மியன்மாரில் பேஸ்புக் பற்றிய தருஸ்மான் அறிக்கை வெளியானது. மியன்மாரின் கலவரங்கள் பற்றி ஆராயச் சென்ற மார்சுகி தருஸ்மான் தலைமையிலான ஐ.நா. அதிகாரிகள், தாம் அறிந்த விடயங்களை பகிரங்கமாக அறிவித்தார்கள். இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் பேஸ்புக்கின் வகிபாகம் தீர்க்கமானது என தருஸ்மான் தெரிவித்தார். அவர் பேஸ்புக்கை பயங்கரமான மிருகம் என்று வர்ணித்ததுடன், இந்த சமூக வலைத்தளம் கசப்புணர்வையும், முரண்பாடுகளையும் வெகுவாகத் தீவிரப்படுத்தியதென சாடினார…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 7 replies
- 1k views
-
-
புலம்பெயர் அமைப்புகள் இயக்கப்படுவது யாரால்!! – கதிர் http://www.kaakam.com/?p=1136 இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகள் யாரால் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற ஐயுறவை ஏற்கனவே காகத்தில் பதிவிட்டிருக்கிறோம். இன்று தமிழீழ மண்ணில் நிகழும் பல வழமைக்கு மாறான மிகக் கேவலமான பல செயற்பாடுகளின் பின்னணியில் சில புலம்பெயர் அமைப்புகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றமையால் மீளவும் அதுபற்றி பேச வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. “தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்” மிக வலுவான அரணாக உருவாக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் இன்று “தமிழீழம் கேட்காத” அரசியல் கட்சிகளின் கொடி தூக்கிகளாக மாறியிருக்கிறார்கள் அல்லது மாற்றப்பட்டிருக்கிறார்கள். புலிகள் அமைப்பு இயங்கு நிலையில் இ…
-
- 0 replies
- 868 views
-
-
பொருளாதார உறவை பிணைக்கும் கப்பல் சேவை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது என்ற செய்தி வெளிவந்தவுடன் பலரது முகங்களிலும் ஒருவகையான மகிழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது. எப்படியாவது ஒருதடவை சென்றுவந்துவிடவேண்டும் என்பதே அவர்களது நினைப்பில் இருந்தது. இந்த கப்பல் சேவை ஆரம்பிப்பதன் ஊடாக, இருநாட்டுக்கும் இடையிலான உறவு வலுப்பெறும். அத்துடன், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான பிணைப்பு இன்னும் இறுக்கமாகும். தமிழ்நாட்டுடன் இன்னும் தொப்புள் கொடி உறவில் இருப்போருக்கு அது வரபிரசாதமாகவே அமையும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான விமானச் சேவைகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்குச் சென்று திரும்பு…
-
- 0 replies
- 493 views
-
-
சிரியாவின் இட்லிப்: வரலாற்றின் முடிவு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / நீண்ட யுத்தமொன்று, அதன் கடைசிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டு, இலட்சக் கணக்கானோர் இடம்பெயரக் காரணமான யுத்தத்தின் முடிவு நெருங்குகிறது. இந்த யுத்தத்தை யார் முன்னெடுத்தார்களோ, யார் தொடக்கினார்களோ, நடைபெற்ற அனைத்து அவலத்துக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் யாரோ, அவர்கள் இன்று அமைதி பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் பெண்கள், குழந்தைகள் பற்றியும் பேசுகிறார்கள். உலகம் மாறிவிட்டது; அமெரிக்கா தொடக்கிய போரில், அது, அவமானகரமான தோல்வியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது கெடுபிடிப்போருக்குப் பி…
-
- 0 replies
- 795 views
-
-
மஹிந்த - இந்தியா உறவு: காதலா, வியாபாரமா? எம்.எஸ்.எம். ஐயூப் / இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்துக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், தரகராகப் பாவிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியே ஆவார். எனவே, இப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, இந்திய அரசாங்கத்துக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் நட்புத் தேவையாக இருந்தால், மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்ள, சுப்ரமணியன்சுவாமியையே தரகராகப் பாவிப்பதற்கு, பிரதமர் மோடி ஆர்வமாயிருப்பார். ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்து, மஹிந்தவுடன் நெர…
-
- 4 replies
- 756 views
-
-
கோத்தாவை சிக்க வைக்கும் ஐநாவின் வலை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை விசாரணை என்றவுடன் பெரும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் சிங்களத்துக்கு, இப்போது திருடனுக்கு தேள் கொட்டியது போல முளுசும் வேலை ஒன்றினை கச்சிதமாக ஐநா செய்துள்ளது. DBS ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். இதில், கோத்தா எப்படி சிக்கி இருக்கிறார் என்று அழகாக விபரிக்கின்றார். சிங்களவர்களில் காணாமல் ஆக்கப்பட்டுள் ளோர் குறித்தும் அதில், கோத்தாவின் வகி பாகம் குறித்தும், ஐநா செய்த விசாரணை குறித்து, ஜனாதிபதி ரணிலுக்கு எழுதி உள்ளது. தமிழர் தொடர்பில் செய்வதுபோலவே, இதணையும் சிங்களம் எதிர்க்க முடியுமா? சிங்களம் என்ன செய்யும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். உள்ளூர் விசாரணை என்று, ஐநாவுக்கு அல்…
-
- 9 replies
- 962 views
-
-
யூதர்கள் ஏன் இத்தனை கொடூரமானவர்களாக இருக்கின்றார்கள்? யூதர்கள் ஏன் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள்? யூதர்களை இந்த உலகம் ஏன் வெறுக்கின்றது? யூதர்கள் ஏன் மிகக் கொடூரமாக செயற்படுகின்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்கு முயல்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 28 Sep 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. https://www.ibctamil.com/articles/80/106810
-
- 0 replies
- 689 views
-
-
ரணில் மற்றும் மைத்திரியிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்? - யதீந்திரா படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு. இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு சாணக்கியத்தை குறித்து நிற்கிறது. அதாவது, அரசியலில் ஒரு குறித்த இலக்கை முன்னிறுத்தி இயங்குவோர், அந்த இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான புறச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அவ்வாறானதொரு புறச் சூழலை உருவாக்குவதற்கான அடிப்படை என்னவென்றால், எங்களின் பயணத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை, அதேவேளை நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதுதான் அந்த அடிப்படையாகு…
-
- 0 replies
- 248 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 01:36 GMT ] [ நித்தியபாரதி ] கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதேமாதத்தில் நடந்தேறிய சில சம்பவங்களால் ஐரோப்பிய மொழி மூலத்தைச் சேர்ந்த புதிய சொல் ஒன்று, சிங்களம் மற்றும் சில தென்னிந்திய மொழிகளுக்குக்குள் நுழைந்து கொண்டது. இன்று யாராவது சிங்கள பேச்சு வழக்கில் (எம்டன்) 'Emden' என்று சொன்னால் அந்த வார்த்தையானது குறிப்பிட்ட நபர் நரியைப் போன்று குள்ளப் புத்தி உடையவர் என்றே அர்த்தம். சிறிலங்காத் தாய்மார்கள் தமது குழப்படிக்காரப் பிள்ளைகளை மிரட்டுவதற்கு 'Emden billa' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். 1914 ஓகஸ்ட் 04ம் நாள், ஜேர்மனி மீது பிரித்தானியா போரை ஆரம்பிப்பதாக அறிவித்ததன் பின்னர், முதலாம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்- நிலாந்தன் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளில், அதிகம் பேசு பொருளாக மாறியிருப்பது இந்தமுறைதான். அது ஒன்றுக்கு மேற்படட தரப்புக்களால் முன்னெடுக்கப்படுவதும் இந்த முறைதான். அதுமட்டுமல்ல,அது அதிகம் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதும் இந்த முறைதான். இந்தக் கோரிக்கையை கோட்பாட்டு ரீதியாக முதலில் முன்வைத்தவர் மு.திருநாவுக்கரசு. இக்கோரிக்கையை அதற்குரிய கோட்பாட்டு அடர்த்தியோடு விளங்கிக் கொள்ளாமல் பிரயோகித்தவர்கள் குமார் பொன்னம்பலமும் சிவாஜிலிங்கமும் ஆவர். மு.திருநாவுக்கரச…
-
- 0 replies
- 326 views
-
-
தமிழருக்கு தேசிய மக்கள் சக்தி காட்டும் திசை தெளிவாக இருக்க வேண்டும் October 19, 2024 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 21.09.2024 அன்று நடைபெற்று முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்காவைத் தெரிவு செய்ததன் மூலம் இந்நாட்டு அரசியலில் ஒரு முறைமை மாற்ற-பண்பு மாற்ற எதிர்பார்ப்பைக் குறிப்பாக ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகமற்ற-சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி முறையாகப் பேணக் கூடிய-வாரிசு அரசியலற்ற ஓர் அரசாங்கம் அமைய வேண்டுமென்ற அவாவை தென்னிலங்கைச் சிங்களப் பெரும்பான்மைச் சமூகம் வெளிப்படுத்தியுள்ளது. அதேவேளை வடக்குகிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த ஜனாதிபதித் தேர்தல்களைவிடவும் இம…
-
- 0 replies
- 407 views
-
-
தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள்? - யதீந்திரா கடந்த 17ஆம் திகதி, இலங்கை தமிழரசு கட்சியின் 70வது ஆண்டு நிறைவு, அந்தக் கட்சியினரால் நினைவு கூரப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சிக்கு ஒரு நீண்ட வரலாற்றுண்டு. 1949இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசு கட்சி 1970கள் வரையில் தீர்மானகரமான ஒரு கட்சியாக இருந்தது உண்மைதான். இந்தக் காலத்தில் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுக்கவல்ல பிரதான கட்சியாக தமிழரசு கட்சியே இருந்தது. ஆனால் 70களுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளை தனித்து எதிர்கொள்ளக் கூடிய நிலையில் தமிழரசு கட்சி இருக்கவில்லை. இதன் காரணமாகவே கட்சியை நிறுவிய, செல்வநாகமே தமிழரசு கட்சிக்கு பதிலாக புதிய கட்சி ஒன்றை நோக்கிச் செல்ல முற…
-
- 1 reply
- 727 views
-
-
‘தியாகம்’ செய்கிறாரா சோனியா? எம். காசிநாதன் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் திடீரென்று ‘அறிக்கைப் போர்’ வெடித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளூராட்சித் தேர்தலில், தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதும், இந்தக் குழப்பம் தொடங்கியுள்ளது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2014 தவிர மூன்று சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.கவுக்கும் திடீரென்று பிரச்சினை வர, உள்ளூராட்சித் தேர்தல் இடப் பங்கீட்டுப் பிரச்சினை மட்டுமே காரணமா என்பதை நம்ப இயலவில்லை. மூன்று சட்டமன்றத் தேர்தல்களையும் முதல…
-
- 0 replies
- 853 views
-
-
கட்டாக்காலி நாய்பிடிகாரர் போல பல்கலை மாணவர்களை நடுறோட்டில் வைத்து அடித்து, விரட்டிய பின்னரும் கூட ஆட்சியாளர்களின் வெறி அடங்கிய பாடாகத் தெரியவில்லை. பிரச்சினைக்கான வேர்களைப் பிடுங்குவதன் மூலம் பல்கலை மாணவருக்கு பயம் காட்டும் பாணியில் அதிகார ஏவலாளிகள் இறங்கிவிட்டார்கள். போர் முடிவுக்கு வந்து புலிகளைஒழித்து விட்டதாக அரசு அறிவித்த பின்னரும் அதற்கான தலையிடிகள் வெவ்வேறு ரூபங்களில் தொடரவே செய்தன. சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலிகள், புலம்பெயர் தமிழர் ஆர்ப்பாட்டங்கள், ஐ.நாஅறிக்கைகள், ஜெனிவாத்தீர்மானம் என்று ஓயாது அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த பேரினவாதிகளுக்கு யாழ்.பல்கலை மாணவர்களும் தீராத் தலைவலியாக மாறியிருந்தார்கள். குறிப்பாக கார்த்திகை27 இல் எப்படியேனும் பல்கலை…
-
- 1 reply
- 1.8k views
-
-
1956 அறுபதாண்டுகளின் பின்னும் தாக்கம் செலுத்தும் தனிச்சிங்கள சட்டம்! அண்மையில் கிளிநொச்சியில் உள்ள இலங்கை பொலிஸ் நிலையத்திற்கு தவறவிடப்பட்ட எனது அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்தேன். என்னிடம் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்தவர் ஒரு சிங்களப் பெண் பொலிஸார். கொச்சையான தமிழில் உரையாடியபடி எனது வாக்மூலுத்தை சிங்களத்தில் எழுதினார். அந்த சிங்கள முறைப்பாட்டின் நடுவில் எனது தமிழ் கையெழுத்தை இட்டேன். இலங்கையில் தமிழ்மொழியின் நிலமையை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன். மொழியாக்கத்தின் வெளிப்பாடாக 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே வடகிழக்கை இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறது. ஒரு இனத்தின் அடிப்படை அடையாளமும் உரிமையும் மொ…
-
- 0 replies
- 858 views
-
-
யாராவது விளக்குவீர்களா ?.............. இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுண்டிக்குளம் என்னுமிடத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் யாழ் குடாநாடு முழுமையாக இராணுவத்தினர் வசமாகியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. [மேலும்]........... யாராவது விளக்குவீர்களா ? சுண்டிக்குளம் எங்கே இருக்கிறது . அது யாழ் மாவட்டத்தில் உள்ள சுண்டிக்குளியா ? எதி பிடித்ததென்று பறை தட்டுகிறார்கள். ஒரே குழப்பமாக் இருக்கு தயவு செய்து விளக்கவும் அன்பான நண்பர்களே .
-
- 2 replies
- 1.3k views
-
-
எதிர் முனைப்பட்ட அணி திரட்டல்களும் புதிய கட்சிகளின் தோற்றத்துக்கான வாய்ப்புகளும் இலங்கையில் தெற்கிலும் வடக்கிலும் மக்களை அணி திரட்டும் இரு வெவ்வேறு அரசியல் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரு அணித்திரட்டல்களுமே முற்றிலும் முரண்பட்ட நோக்கங்களைத் கொண்டிருக்கின்ற அதேவேளை, ஒன்றை மற்றையது பரஸ்பரம் வசதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. அத்துடன் இந்த எதிர்முனைப்பட்ட இரு செயற்பாடுகளுமே இறுதியில் புதிய அரசியல் கட்சிகளை அல்லது புதிய அரசியல் அணிகளைத் தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறலாம். தென்னிலங்கையில்…
-
- 0 replies
- 307 views
-
-
நல்லிணக்கபுரம்? நிலாந்தன்:- யாழ் கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். ராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உட்சுவர்களில் அரசுத் தலைவரின் படமும் குறிப்பிட்ட படைப்பிரிவின் படமும் தொங்க விடப்பட்டுள்ளன. இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் அரசுத் தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக அகதிகளாகி யாழ்ப்பாணத்தில் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 971 குடும்பங்களை மீள் குடியமர்த்தும் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் …
-
- 0 replies
- 467 views
-