Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜோ பைடன் - சிங்களப் பத்திரிகைகளின் கற்பனை- அற்பசொற்ப ஆதரவையும் இழக்கப்போகும் ஈழத்தமிழர்கள் —இந்திய- இலங்கை அரசுகளைக் கடந்து ஈழத்தமிழர் விவகாரத்தில் தலையிட்டு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதொரு அவசியம் அமெரிக்காவுக்கு இல்லவேயில்லை. அமெரிக்கா தலையிடக் கூடிய முறையில், பூகோள அரசியல் நிலமைகளை அவதானித்துக் காய்களை நகர்த்தும் அரசியல் ஈடுபாடுகள் எதிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனம் செலுத்திய வரலாறுகளும் இல்லை—- -அ.நிக்ஸன்- அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கர்களையும் ஆசிய நாட்டவர்களையும் முக்கியமான பதவிகளுக்கு நியமிப்பதாகச் சிங்கள – ஆங்கில பத்திரிகைகள், மிகைப்படுத்திச் செய்திகளையும் செய்திக் கட…

  2. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22ஆவது அமர்வு ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இலங்கை விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்குவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. வரும் திங்கட்கிழமை - 25ஆம் திகதி - தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம், 22ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறப் போகிறது. இந்தக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் என்பது ஓர் ஆண்டுக்கு முன்னரே தெரிந்த விடயம் தான். அதாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு மறைமுகமாக ஓர் ஆண்டு கால அவகாசம் கொடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தீ…

  3. தமிழரசு கட்சி, தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது? யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தசாப்தகால வயதுண்டு. ஆனாலும் ஆண்டுகள் கழிந்தனவேயன்றி முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. இது தொடர்பில் நான் முன்னரும் பல தடவைகள் விவாதித்திருக்கிறேன். அந்த வகையில் என்னைப் போன்றவர்களின் வாதங்களுக்கும் அரை தசாப்தகால வயதாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதற்காக நாம் செலவிடப் போகின்றோம்? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஓரளவு சுமூகமான சூழலில், தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த வேண்டிய தேவை முன்னரைவிடவும் அதிக கனதியுடைய தேவையாக மாறியிருக்கிறது. இவ…

  4. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இலங்கை அரசபடைகள் மீதான போர்க்குற்ற, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் ஒளிப்படச் சர்ச்சை ஓய்வதற்குள், புலிகளின் தகவல்களை அறிவதற்கு பாலியல் வல்லுறவை அரசபடைகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டும் அறிக்கை ஒன்றை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. 141 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட 75 பேரின் சாட்சியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் இலங்கை இராணுவம் நிராகரித்துள்ள போதிலும், அது பெரிதாக எடுப்படவில்லை. …

    • 2 replies
    • 902 views
  5. [size=4]இலங்கைப் படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை முழுமையாக காதில் போட்டுக்கொள்ளும் நிலையில் புதுடெல்லி இல்லை என்பது இப்போது உறுதியாகியுள்ளது. இலங்கை – இந்தியக் கடற்படைகள் ஆண்டுதோறும் நடத்தும் கடற்போர்ப் பயிற்சிக்கு அண்மையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு காட்டிய பச்சைக்கொடி இதற்கான முதலாவது சமிக்ஞையாகும். அதையடுத்து, பாதுகாப்புச்செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை புதுடெல்லிக்கு வருமாறு அழைத்தது இந்தியா. அவருடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பாக இந்தியா நடத்திய பேச்சுக்கள் இரண்டாவது சமிக்ஞை. இப்போது, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் அடுத்தமாதம் கொழும்பு வந்து பாதுகாப்…

  6. அரசே எங்கள் மகள் காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறு அரசே.... பதில் கூறு.., வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்திச் செல்வதும் அரசாலே.., குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் தா... தடுத்து வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடு, எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தா.., அனுமதி தா..., எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தந்துவிடு... இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு...,எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில் தானா!!! இனியாவது எங்களை நிம்மதியாக வாழவிடு .. இந்தப் புலம்பல்கள் எல்லாம் எதற்காகவென்று நினைக்கின்றீர்களா.... வோறொன்றும் இல்லை. காணாமல் போன உறவுகளின் உள்ளக் குமுறல்களே இவை. …

    • 0 replies
    • 902 views
  7. காஸா: எரிந்து கொண்டிருக்கும் நேரம் சேரன் கன்னும் பத்து நிமிடங்களில் உங்கள் வீட்டை விட்டு நீங்கள் வெளியேறிவிட வேண்டும். சரியாகப் பதினோராவது நிமிடம் உங்களுடைய வீடு ஏவுகணையால் தகர்க்கப்படும்.” இஸ்ரேல் படையினரிடமிருந்து தொலைபேசியில் இந்த எச்சரிக்கை வந்ததும் மைஸா சலீம் தர்ஸாவின் மாமா, மாமி, உறவினர்கள், குழந்தைகள் என இருபது பேர் அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்கள். மைஸாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் ஹமாஸ் அமைப்புடனோ அல்லது காஸாவில் இயங்கும் மற்றொரு அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கும் எத்தகைய உறவும் இல்லை. காஸாவில் இருப்பவை வீடுகள் அல்ல. பெரிய கட்டிடத் தொகுதிகளில் தொடர் குடியிருப்புகள். மாடியிலிருந்து இறங்கித் தெருவுக்கு வருவதற்கே ஆறு அல்லது ஏழு …

  8. ஈழச் சிக்கலும் நாமும் இராசேந்திர சோழன் ஈழச் சிக்கல் நாளுக்கு நாள் கடும் நெருக்கடிக்குள்ளாகி வருவதாகவே தோன்றுகிறது. என்னதான் சிங்கள இனவெறி அரசும், ராணுவமும் போராளிகளின் இறப்பு பற்றி பொய்ச் செய்திகள் பரப்புவதாகக் கொண்டாலும், ஒரு இனம் தன் விடுதலைப் போராட்டத்தில் தனக்கு ஆதரவாக எந்த பின்புலனும் இன்றி, சுற்றிலும் எதிர் நடவடிக்கைகள் சூழ எத்தனை காலம்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் துணையாகவும் நிற்க வேண்டியது தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலையாய கடமையாகும். இந்தத் தருணத்தில் நமது சிந்தனைக்காகவும் பொது மக்களுக்குத் தெளிவூட்டும் முகமாகவும் சில கருத்துகள்: ஈழ மக்கள் கடந்த முப்பது …

  9. 2019: காலம் கலைத்த கனவு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 டிசெம்பர் 26 காலம் கனவுகளையும் கற்பனைகளையும் சாத்தியங்களையும் எதிர்பார்ப்புகளையும் தன்னுள் உட்பொதிந்து வைத்திருக்கிறது. காலத்தின் விந்தையும் அதுவே. கடந்தகாலத்தின் மீதான ஏமாற்றங்களும் நிகழ்காலத்தின் மீதான நிச்சயமின்மைகளும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடுகிறது. இது புதிதன்று. ஆனால் மனித மனம் நம்பிக்கையென்னும் பிடியை இறுகப் பற்றியபடி நூலில் நடக்கும் ஆபத்தான விளையாட்டில் இறங்கி விடுகிறது. இதன் பலன்கள் நாமறிந்ததே. இதையே கடந்து போகும் இவ்வாண்டும் சொல்லிச் செல்கிறது. கடந்து போகும் இவ்வாண்டு, வாலறுந்த பட்டம் போல் அனைத்துத் திசைகளிலும் அலைக்கழிந்து அலைக்கழித்து தனது முடிவை எட்டுகிறது. கன…

  10. கடந்த ஜுன் மாதம் 17ந்திகதி அமெரிக்காவை ஒரு கலக்குகலக்கிய சம்பவம் தென் கரோலைனா மாநிலத்தில் சார்ள்ஸ்டன் என்னும் ஊரில் நிகழ்ந்தது. ஒருகிறிஸ்தவ ஆலயத்தில் விவிலிய நூல் வகுப்பில் கலந்து கொண்டிருந்த ஒன்பது கறுப்பினத்தவர்களை 21 வயதான வெள்ளை இளைஞன் துப்பாக்கியால் கொன்று குவித்தான். பகிடி என்னவென்றால் அவன் தானும் இந்தவிவிலிய நூல் வகுப்பில் ஒருமணி நேரமாகக் கலந்து கொண்டிருந்தவன். திடீரென்று எழுந்துநீஙங்கள் கறுப்பினத்தவர்கள் எங்கள் நாட்டையே ஆக்கிரமிக்கப் பார்க்கிறீர்கள், எஎங்கள் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறீகள் எனவே உயிர்வாழத் தகுதி அற்றவர்கள் என பெரிய உரையர்ற்றி விட்டுத்தான் தூப்பாக்கியைத் தூக்கி இருக்கின்றான். அங்குவகுப் பெடுத்துக் கொண்டிருந்த பாதிரியும் எட்டுப் பேரு…

    • 0 replies
    • 902 views
  11. ஈழம் முகப்புத்தகம் ஆறம்பிக்கலாமா? நாமும் இணையத்தின் ஊடாக ஈழம் முகப்புத்தகம் என்ற ஒரு இணையதளத்தை உருவாக்க ஏன் முயற்சிக்கக்கூடாது?? யாழ்கள உறவுகளே உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர் அகோதையை எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு அழைக்கின்றேன்.

  12. இன்­றைய கூட்­டாட்­சி­யின் விரி­வாக்­கம்!! வழக்கு இன்­றைய பேரு­ரைக்­கான தலை­யங்­கம் சமஷ்டி பற்­றி­யது. இந்­தச் சொல் பெட­ரல் என்­கின்ற ஆங்­கி­லச் சொல்­லைக் குறிக்­கி­ற­தா­கத் தமி­ழிலே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருந்­தா­லும் அது வட­மொழி சார்ந்த ஒரு சொல்­லா­கும். பொருத்­த­மான தமிழ்ச் சொல் இல்­லை­யென்­றா­லும் கூட்­டாட்சி அல்­லது இணைப்­பாட்சி என்ற சொற்­கள் தற்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. சமஷ்­டி­யைத் தனது அடிப்­ப­டை­யா­கக் கொண்­டி­ருக்­கின்ற இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யும் சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் எமது யாப்­பிலே காணப்­ப­டும் வட சொற்­க­ளைத் தமிழ்ச் சொற்­க­ளாக மாற்­றி­ய­போத…

  13. இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும் 1941 ஆம் வருடம் ஒற்றைக் காற்றாடி பொருத்தப்பட்ட சிறிய விமானத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறார் அந்தப் புகழ்மிக்க எழுத்தாளர். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல பத்திரிகையாளரும் இந்திய சுதந்திரப் போராட்டவீரரும் கூட. வரலாற்றை நன்கறிந்தவர் என்ற வகையிலும் இலங்கையின் கள யதார்த்தத்தை புரிந்துகொண்டவர் என்ற முறையிலும் அவர் பின்வரும் கருத்தை தெரிவிக்கிறார். இந்தியாவில் (அன்றைய பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியா) முஸ்லிம்களுக்கு என்ன தீர்வு வழங்கப்படுமோ அதே தீர்வுக்கு இலங்கைத் தமிழர்களும் உரியவர்கள் என்றார். அவர் வேறுயாருமல்ல இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜியின் வலது கரம் என்று புகழப்பட்டவரும் இன்றுவரை தமிழர்களால் நேசிக்கப்படும்…

    • 1 reply
    • 901 views
  14. வடக்கு ஆளுநரின் வழி, எவ்வழி? காரை துர்க்கா / 2019 பெப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:27 Comments - 0 வவுனியா நகரில் எழுந்தருளி, கருணை மழை பொழியும் கந்தசுவாமி கோவிலின் புதிய சித்திரத் தேருக்கான வெள்ளோட்டம், அண்மையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் புடை சூழ, அமைதியாக, பக்திமயமாக வெள்ளோட்டம் நடைபெற்றது. “எங்கட நிலமெல்லாம் எங்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன; எங்கட இடமெல்லாம் சிங்கள மயமாகின்றன; சொந்த நாட்டிலேயே பல்லாண்டு காலம், நடைப்பிணங்களாக வாழும் நாதியற்ற எங்களுடன், நாட்டாண்மை காட்டுகின்றார்களே; கந்தனே! இதை யாரிட்ட சொல்லி அழ; தமிழ்க் கடவுளே! கண் திறக்க மாட்டாயா; எம்மைக் காக்க உனையன்றி யாருமில்லை” இந்த வேண்டுதல், இங்கு வந்திருந்த பெரியவர் ஒருவரின்…

  15. Published by Jayanthy on 2019-10-20 17:11:05 வீ.தனபாலசிங்கம் போர் வெற்றியை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது ; போர் அரசுக்கு சொந்தமானதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல ; போர் வெற்றியை தேர்தல் பிரசாரங்களில் எந்த கட்சியும் பயன்படுத்தமுடியாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கடந்தவாரம் செயதியாளர் மகாநாட்டில் கூறியிருந்தார். ஆனால், அவரது அறிவுறுத்தலை அரசியல் கட்சிகள் மதித்துச் செயற்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. போரின் முடிவுக்கு பின்னர் மாத்திரமல்ல, முன்னரும் கூட போர் சகல தேர்தல்களிலும் முக்கியமான பிரசாரப்பொருளாக தாராளமாக அரசியல் கட்சிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இரா…

    • 0 replies
    • 901 views
  16. முக்கியக் காலமொன்றில் இனியும் ‘உக்கிய’ முடிவுதானா? -விரான்ஸ்கி அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் நாடளாவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கி இருக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருவதாக, மொத்தச் சனமும் ‘தொடைநடுங்கி’க் கொண்டிருக்கும் இந்தவேளையில், தேர்தல் வைரஸ்தான் இலங்கையை வீரியமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுதல், கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது வரையிலான பூர்வாங்க நடவடிக்கைகளில் எல்லாக் கட்சிகளும் மும்முரமாகி இருக்கின்றன. பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும், தத்தம…

  17. தமிழரசுக் கட்சியின் தீர்மானம் – செல்வரட்னம் சிறிதரன் வடமாகாண சபையின் அமைச்சரவை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுப்பதற்கான நிலைமையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துள்ள தீர்க்கமான முடிவுகளே இதற்குக் காரணம் என தமிழரசுக்கட்சியினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர். பிடிவாதப் போக்குடனும், தமிழரசுக் கட்சிக்கு அமைச்சர் பதவியை வழங்குவதில் பழிவாங்கும் நோக்கத்துடன் முதலமைச்சர் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்ட தமிரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சரவையில் தாங்கள் எவரும் பதவி ஏற்பதில்லை என ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றனர். …

  18. பொறுப்புக் கூறல் சாத்தியமா? பி.மாணிக்கவாசகம்… January 19, 2019 மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கம் எவ்வாறு பொறுப்பு கூறப் போகின்றது என்பது, பிறந்துள்ள புதிய ஆண்டில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளில், அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியத் தேவையைக் கொண்டுள்ள தமிழர் தரப்பு அரசியலிலும் கூர்மையான விடயமாகக் கருதப்படுகின்றது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் மனி;த உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் சூடு பிடித்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகும். யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகின்றது. ஆனால், யுத்தகாலத்தில்; குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இ…

  19. சிறிசேனவை நீக்குதல் பொருத்தமானதா? Gopikrishna Kanagalingam / 2018 டிசெம்பர் 13 வியாழக்கிழமை, மு.ப. 01:17Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய நடவடிக்கைகளுக்கு மத்தியில், பெருங்குற்றப் பிரேரணை அல்லது impeachment தொடர்பாக, பரவலாகக் கலந்துரையாடப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படியான உரையாடல்கள், ஆச்சரியமளிப்பனவாக இல்லை. ஜனாதிபதி சிறிசேனவுக்கு, சந்தேகத்தின் பலனை வழங்கியவர்களைக் கூட, எதிரானவர்களாக மாற்றுமளவுக்கு, ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. ஆனால், ஜனாதிபதியை அவ்வாறு பதவி நீக்குவது, பொருத்தமானதா, சரியானதா என்ற கேள்விகளும் எழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஜனாதிபதி சிறிசேன மீதான விமர்சனங்களில் அத்தனை நியாயப்பாடுகள் இருந்தால…

  20. அரசியல் என்பது கடவுள் வாதமல்ல யதீந்திரா அரசியல் என்பது அடிப்படையில் ஓர் அறிவியல் என்பதையே நம்மில் பலர் அடிக்கடி மறந்துவிடுவதுண்டு இத்தனைக்கும் அவர்கள் நமது சூழலின் முன்னேறிய பிரிவினரும் கூட. கருத்தியல் அர்த்தத்தில் அரசியல் ஒரு விஞ்ஞான வாதமாகும். அதனால்தான் அரசியல் விஞ்ஞானம் (Political Science) என்று அழைக்கிறோம். ஆனாலும் என்னதான் இதுபற்றி அறிவில் நாம் முதிர்ந்தவர்கள் என்று பேசிக் கொண்டாலும் உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு, அவ்வப்போது அரசியலை ஒரு மதவாதப் பண்புடனேயே அணுக முற்படுகிறோம், அணுகியும் வருகிறோம். அரசியல் எப்போதெல்லாம் கடவுள்வாதப் பண்பைப் பெறுகிறது? அரசியலில் பல்வேறு புரிதல்களுக்கு இடமுண்டு என்பதை மறுக்கும்போது, ஒரு அரசியல் நிலைப்பாடு முற்றிலும் எதிர்பா ரா…

  21. ’’போலிகளைக் கேட்டு ஏமாறாதீர்கள்” ஊடகவியலாளர்களே அவதானம்! றம்ஸி குத்தூஸ் இன்று ஊடகத்துறை மிகவும் வளர்ச்சியடைந்துகொண்டு போவதைக் காணக்கூடியதாக உள்ளது.சமூக வலைத் தளங்களான பேஸ்புக்,வட்ஸ்அப்,டுவிட்டர் போன்ற பலதளங்களைக் காணலாம். அதேபோல், ஒரு சிலர் சமூக வலைத் தளங்களை வைத்துக் கொண்டு ‘ஊடகவியலாளர்கள்’ என்று மார்தட்டுகின்றனர். ஆனால், இவர்களில் சிலருக்கு ஊடக ஒழுக்ககோவை பற்றிய எந்தவொரு தகவலும் தெரியாது. இதேவேளை, ஊடக நிறுவனங்களோ ஊடகவியலாளர்களோ மக்களுக்குச் சரியான தகவல்களை வழங்குவது மிகவும் முக்கியமான விடயமாகும். கொழும்பு கலதாரி ஹோட்டலில் ‘REAL MEDIA LITERACY FOR A FAKE NEWS’ (போலிச…

    • 0 replies
    • 899 views
  22. நீங்கள் தொடர்ச்சியாக தெனிந்திய ஊடகங்களை வாசிப்பவராயின், திடீரென்று இவர்கள் எமக்கு ஆதரவு போல் இப்ப எழுதுறாங்கள் என்பதைக் கவனித்து இருப்பீர்கள். எனக்கு என்னவோ "ரா" எங்களை திரும்ப முட்டாள் ஆக்க முயற்சிக்கிறாங்கள் போல இருக்கு. நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீங்கள்? எம்மக்களுக்கு அநியாயம் மிக அளவில் செய்தது இந்தியாதான் என்பது என் அபிப்பிராயம். சிங்களவங்கள் கூட இந்த "naa1kaLu88u " சற்று குறைவாகத்தான் அநியாயம் செய்தாங்கள்.

  23. பொருளாதார நெருக்கடி: தமிழ்த் தரப்பு, என்ன செய்யலாம்? நிலாந்தன். நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளாகவும் யாப்பு நெருக்கடிகளாகவும் மாறியுள்ளன. தென்னிலங்கையில் ஏற்பத்துள்ள அரசியல் ஸ்திரமின்மை தொடர்பாக தமிழ்த் தரப்பு என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இது விடயத்தில் தமிழ்த் தரப்பு முடிவெடுப்பதாக இருந்தால் முதலில் தென்னி லங்கையில் இடம்பெறும் கொந்தளிப்புகள் தொடர்பாக ஒரு சரியான படத்தை பெறவேண்டும். தென்னிலங்கையில் நான்கு பரப்புக்களை நோக்கி தமிழ் தரப்பு கவனத்தை குவிக்க வேண்டி இருக்கிறது. முதலாவது நாடாளுமன்றம். இரண்டாவது காலிமுகத்திடல்.மூன்றாவது பௌத்த மகா சங்கங்கள்.நாலாவது அரசாங்கத்துக்கு உதவ முற்படும் வெளித்தரப்புக்கள். முதலில் நாடாளுமன்றம். ம…

  24. மேனன் விஜயம் - நிலாந்தன் 07 ஜூலை 2013 சிவ்சங்கர் மேனன் நாளை மறுநாள் வருகிறார். அவர் வருவது ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என்றும், அப்படி வரும்போது அவர் அரசுப் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என்றும் ஒரு செய்தி உண்டு. ராஜிய நகர்வுகளில் இதுவும் ஒரு வகைதான். அதாவது வேறு எதற்கோ வருவதுபோல் வந்து விவகாரத்தைக் கையாண்டுவிட்டுப்போவது என்பது. ஆனால், எது விவகாரமோ அதைப் பிரதான நிகழ்ச்சி நிரலாக உத்தியோகபூர்வமாக இரு நாடுகளும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். அப்படி உத்தியோக பூர்வமாக அறிவிக்குமளவிற்கு இவ்வருகை முக்கியத்துவமற்றது என்று கருதியிருக்கலாம் அல்லது அப்படி அறிவிப்பதால் ஏதாவது ஒரு தரப்புக்கு நேரிடக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க முயற்சிக்கலாம். எதுவாயி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.