அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
மத்திய கிழக்கு | தோற்றுப்போனது யார்? சிவதாசன் ஈரானின் ஏவுகணைகளோடு மத்திய கிழக்கில் குண்டுச் சத்தம் நின்று விட்டது போல் ஒரு நிசப்தம்; அதைவிட வெள்ளை மாளிகையில் துரும்பரின் வீட்டிலும் நிசப்தம். யார் வென்றார்கள் எனச் சொல்ல முடியாவிட்டாலும் யார் வாலைச் சுருட்டியிருக்கிறார்கள் – கொஞ்ச நாளைக்காயினும் – என்று தெரிகிறது. இன்று காலை வெள்ளை மாளிகையில் ஊடக சந்திப்பு நடந்தது. வானொலியில் துரும்பர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது. ஜனாதிபதியைத் திடீரென்று மாற்றிவிட்டீர்களா என்ற சந்தேகம். அத்தனை பவ்வியம். அந்தாள் ஜனாதிபதியாக வந்ததிலிருந்து இன்று தான் எழுதிக் கொடுத்ததை, அதே தொனியில், இடைக்கிடையே தனது வழக்கமான சேட்டைகளை விடாமல், அப்படி…
-
- 0 replies
- 819 views
-
-
விபரீதமாகும் விவகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலுள்ள அவநம்பிக்கைகள் அபிப்பிராய பேதங்கள் என்ற எதிர் மனப் போக்குகள் ஆயுத பண்பு கொண்ட குழுக்களுக்கு இடையே அடிக்கடி முனைப்பு பெற்றுக் கொண்டாலும் மாற்று தகைமைகளுக்கான சிந்தனைகளையோ எண்ணங்களையோ தோற்றுவிக்காத போக்கே இருந்து வந்துள்ளது. இந்த போக்குக்கு ஒரு மாற்று நிலை உருவாக வேண்டிய தேவை. இரண்டு இடை நிலைப் புள்ளிகளிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பது ஒரு நிதர்சனமான உண்மை. அந்த புள்ளிகள் பற்றி அதிகம் ஆராய வேண்டிய அவசியமில்லை. ஒன்று வடமாகாண சபைத் தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட ஆளுமை. இன்னொன்று தமிழ் தேசியம் தடுமாறிப் போகிறது என்…
-
- 0 replies
- 819 views
-
-
இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் போக்கு தெளிவற்றதாகவே இருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் உறுதியானதும் அலட்சியப் போக்குடையதுமான செயற்பாடுகள் உலக நாடுகளுக்கு தற்போதைய நிலையில் பெரும் சவாலாகியிருப்பதை மறுத்துவிடவும் முடியாது. ஏனெனில், இலங்கை உலக நாடுகளது குறிப்பாக மேலைத்தேய நாடுகளினது அறிவுரைகள், ஆலோசனைகள் மட்டுமன்றி வேண்டுகோள்களைக்கூட காதில் வாங்கிக்கொள்ள தயாரில்லாதது போல செயற்பட்டு வருகிறது. இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலை கண்டு மேற்குலக நாடுகள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளார்த்த ரீதியில் விசனம் கொண்டிருக்கின்றன என்பதையும் இதில் மறுத்துவிட முடியாது. அது மட்டுமல்லாது இலங்கை விவகாரத்தில் மேற்குலக நாடுகளின் தற்போதைய நிலை தடுமாற்றத்திற்கும் இதுவொரு முக்கிய காரணமாக அம…
-
- 0 replies
- 819 views
-
-
இந்தியாவை சீண்டும் மஹிந்த அணி முதல் தடவை நிதி மோசடிக் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ, இந்தியாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால், இரண்டாவது தடவையாக சிறைக்குச் சென்றிருக்கிறார். மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில், இடம்பெற்ற நிதி மோசடிகள், முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாமல் ராஜபக் ஷ முதல் முறையாக கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார். நாமல் மீது வீண்பழி சுமத்தப்பட்டதாகக் கூறி, அந்தக் கைது நடவடிக்கையை அர சியல் பழிவாங்க…
-
- 0 replies
- 819 views
-
-
மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும். மீள்குடியேற்ற நடவபடிக்கைகள் பயனுள்ளதாக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இனவிகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும். இனப்பிரச்சினைக்கு சர்வதேச பிரசன்னத்துடன் கூடிய, ஆக்கபூர்வமான குறுகிய காலப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு முக்கியமாக வலியுறுத்தியிருக்கின்றது. கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு என்பதற்காகவோ என்னவோ தெரியவில்லை, முக்கியமான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்தத் தீர்மானங்கள் முதலில் பேராளர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட…
-
- 0 replies
- 818 views
-
-
வடக்கு மாகாணசபை: அரசியல் தீர்வை கையாள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் - யதீந்திரா வடக்கு மாகாணசபையில் கூட்டமைப்பு பெற்றிருக்கும் அமோக வெற்றியானது, தமிழ் மக்கள் சலுகைகளை விடவும் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அரசியல் தீர்வை விரும்புகின்றனர் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. விடுதலைப்புலிகளை போரில் வெற்றிகொள்ள முடிந்த அரசாங்கத்தால், தமிழ் மக்களின் மனதை வெற்றிகொள்ள முடியவில்லை என்பதையும் மேற்படி வெற்றி நிரூபித்திருக்கிறது. யுத்தத்திற்கு பின்னர் அத்தகையதொரு வாய்ப்பை அரசாங்கம் பெற்றிருந்தும் கூட, அதனை முறையாக பயன்படுத்துவதில் அரசாங்கம் பெரிய முன்னேற்றங்கள் எதனையும் பெற்றிருக்கவில்லை. அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகள் தொடர்பில், தமிழ் மக்கள் மத்தியில் நிலவிவரும் அதிரு…
-
- 2 replies
- 818 views
-
-
புதிய பரிமாணம் ! காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் புதிய பரிமாணத்துக்குள் பிரவேசித்திருக் கின்றது. முடிவின்றி தொடர்கின்ற இந் தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதற்கான போராட்டங்கள் வருடக் கணக்காகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நிலைமாறுகால நீதியின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்காக உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை செயல் வல்லமை அற்ற நிலையில் தேங்கி நிற்கின்றது. இத்தகைய பின்னணியில்தான் காணா மல் ஆக்கப்பட்டோர் விவகாரம் புதிய பரி மாணத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது. காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என…
-
- 0 replies
- 818 views
-
-
கைவிட்டுப்போன கிழக்கு முனையம் -சுபத்ரா “கிழக்குமுனையம் இந்தியாவுக்கே வழங்கப்படும் என்று பகிரங்கமாக வாக்குறுதி அளித்த ராஜபக்ஷவினரின் அரசாங்கம் தொடர்ச்சியாக இழுத்தடித்து கடைசியில் காலை வாரியிருக்கின்றது. இதனால் இலங்கையிடம் மீண்டும் ஒரு தடவை ஏமாந்துள்ள பிராந்திய வல்லரசாககாட்டிக்கொள்ளும் இந்தியாவுக்கு இம்முறை ‘மரணஅடி’ விழுந்திருக்கின்றது”. கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியிருக்கிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு வியூகங்களும், மோடியின் ‘வக்சின்’ இராஜதந்திரமும், இலங்கை அரசாங்கத்தினால், தோற்கடிக்கப்படும் நிலைக்கு வந்திருக…
-
- 1 reply
- 818 views
- 1 follower
-
-
சாவேஸ் என்ற சகாப்தமும் சோசலிசப் புரட்சியும் : சபா நாவலன் நாம் வாழும் நூற்றாண்டில் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரக்கரங்களிலிருந்து ஒரு அங்குலம் கூட நகரமுடியாது என்று அச்சம் உலகதின் ஒவ்வொரு மனிதனிடமும் குடிபுகுந்திருந்த வேளையில் அமரிகாவின் கொல்லைபுறத்தில் நெஞ்சை நிமிர்த்தி தனது நாட்டின் மக்களுக்காக வாழ்ந்த தனிமனிதன் ஹூகோ சாவேஸ். வெற்றிகரமான தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை செயற்படுத்திக்காட்டியவர். ஏகாதிபத்திய நலனுக்கு உலகில் திரும்பிய திசைகளிலெல்லாம் மனிதர்கள் கோழைத்தனமாக மண்டியிட்ட போது, தனி மனிதனாக உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தவர். ஹூகோ சாவேஸ் என்ற சகாப்தம் 05.03.2013 அன்று தன்னை இடைநிறுத்திக்கொண்டது. இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரனின் இறுதி மூச்சு அதிகால…
-
- 1 reply
- 818 views
-
-
மொட்டுவை பிளவுபடுத்திய ரணில்; குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்!: அகிலன் July 28, 2024 ஜனாதிபதித் தோ்தலுக்கான அறிவித்தலை தோ்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட உடனடியாகவே முதல் ஆளாக ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றாா். கட்சி சாா்பின்றி சுயாதீன வேட்பாளராகவே அவா் போட்டியிடுகின்றாா். இதன் மூலமாக ரணில் வெளிப்படுத்திய செய்திகள் முக்கியமானவை! பொது ஜன பெரமுனவின் சாா்பில் களமிறங்கினால் மட்டுமே அவருக்கு ஆதரவளிக்க முடியும் என ராஜபக்ஷக்கள் அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், அதனையிட்டு தான் கவலைப்படப்போவதில்லை என்பதை இதன் மூலம் ரணில் தெளிவாக உணா்த்தியிருக்கின்றாா். ரணிலின் இந்த நகா்வு மொட்டு அணிக்குத்தான் அதிகளவுக்கு அதிா்ச்சியைக் …
-
- 4 replies
- 818 views
-
-
கடிநாய்கள் மலிந்த ஊரில் காலை தூக்கியிருந்தால் வீரமோ? -விரான்ஸ்கி முப்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர் முடிவடைந்த ஸ்ரீலங்காவில், தற்போது ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ஸ்ரீலங்காவில் பேசாத அரசியல்வாதிகளின் வாய்களே இல்லை. மேடைக்கு மேடை, சோடைபோகாத தங்களின் தங்கக்குரல் பேச்சுகளில், அரசியல்வாதிகள் எப்போதும் வாய்கூசாமல் பயன்படுத்தி வருகின்ற சொல் ‘ஜனநாயகம்’. போன ஆட்சிக்காலத்தில், இந்தச் சொல்லுக்குத் தங்கத்தால் பூண் பூட்டிவிட்டதைப்போல, கொஞ்சம் அதிகமாகவே மவுசு இருந்தது. ‘நல்லாட்சி’ என்ற பொற்கிண்ணத்தில், மிதக்கின்ற விலை உயர்ந்த நாணயம் போன்ற இந்த ஜனநாயகத்தைத் தாங்கள் பெற்றெடுத்திருப்பதாக மைத்திரியும் ரணிலும் எல்லோரையும் …
-
- 1 reply
- 818 views
-
-
தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 750 லட்சம் தமிழர்கள் இருக்கிறோம். இதுமட்டுமின்றி, இலங்கையில் நாம் பூர்வ குடியினர். 35 லட்சத்துக்கு மேல் இருக்கும் அங்குள்ள தமிழரின் எண்ணிக்கை. இதுபோதாதென்று இந்தியாவெங்கும், உலகமெங்கும் சிதறிக் கிடக்கிறோம். ஆகப் பெரிய எண்ணிக்கை இது. அப்படியிருந்தும், ருவாண்டா என்கிற குட்டி நாட்டில் நடந்த இனப்படுகொலைக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்காக இன்னும் கிடைத்த பாடில்லை. இதற்குக் காரணம் 3 பேர். இந்த மூவரில் முதலிடத்தில் இருப்பது யார் என்பதைப் பிறகு சொல்கிறேன். இரண்டாமிடத்தில் இருப்பது - இந்தியா. மூன்றாமிடத்தில் இருப்பது, சர்வதேசம் மற்றும் சர்வதேச அமைப்புகள். நடப்பது இனப்படுகொலை என்பதைச் சில நாடுகள் காலதாமதமாகத் தான் தெரிந்துகொண்டன…
-
- 0 replies
- 818 views
-
-
யூலை வன்முறைகளை நினைவுகூர்வதன் அரசியல் பெறுமதி என்ன? Jul 30, 2019 யதீந்திரா 1983ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சிங்கள வன்முறைகள் ஆண்டு தோறும் நினைவு கூறப்படுகின்றன. அரசியல் கட்சிகள் ஒரு புறமும், சிவில் சமூக குழுக்கள் ஒரு புறமுமாகவும் இவ்வாறான நினiவு கூரல்களை செய்து வருகின்றனர். இவ்வாறான நினைவு கூரல்கள் வெறுமனே ஒரு தமிழ் அரசியல் சம்பிரதாயமாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன. உண்மையில் இவ்வாறான நினைவு கூரல்களின் அரசியல் பெறுமதி என்ன? அரசியல் பெறுமதி ஒன்றை இலக்காகக் கொண்டு இவ்வாறான நினைவு கூரல்கள் இடம்பெறுகின்றனவா? இவ்வாறான நினiவு கூரல்களின் எடுக்கப்படும் உறுதி மொழிகள் என்ன? அவ்வாறு ஏதேனும் உறுதிமொழிகள் இதற்கு முன்னா…
-
- 0 replies
- 817 views
-
-
அமைச்சு ஊடாக வெல்லப்பட உள்ள அகங்கள்? காரை துர்க்கா / 2019 டிசெம்பர் 24 தமிழர்களின் மனங்களை வெல்ல, விசேட அமைச்சு விரைவில் உருவாக்கப்படல் அவசியம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “இதற்காகத் தனியான அமைச்சொன்றை உருவாக்க வேண்டும்; தமிழ் பேசும் அரசியல்வாதிகளை அன்றி, மக்களை இணைத்துக் கொண்டு, இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்; அந்தப் பொறுப்பை என்னிடம் வழங்கினால், அதை நான் சிறப்பாக வழி நடத்தி, வடக்கையும் தெற்கையும் இணைப்பேன்” என்றும் அவர் தெரிவித்து உள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன, அவர்களின் உணர்வு என்ன, தமிழ் மக்களின் அபிமானத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது? போன்ற விடயங்…
-
- 0 replies
- 817 views
-
-
பேயும் பிசாசும் - - துரைசாமி நடராஜா ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இலங்கையின் வரலாற்றில் முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இக்கட்சிகள் மாறி மாறி ஆட்சி பீட மேறி இருக்கின்றன. இந்நிலையில் இக்கட்சிகளின் செயற்பாடுகள் மற்றும் போக்குகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. கட்சிகள் நாட்டின் அபிவிருத்திக்கு உரியவாறு வலு சேர்க்கவில்லை. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்கிற பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் இவ்விரு பெரும்பான்மைக் கட்சிகளுக்க…
-
- 0 replies
- 817 views
-
-
அடுத்தமாதமும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தில் அமெரிக்கா பிரேரணையொன்றை கொண்டுவரவிருக்கிறது. அது இலங்கைக்கு சாதகமானதாக அமையும் என்று கூறுவதற்கில்லை. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. தமக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதம் அரசாங்கத்திற்கு எங்கிருந்து கிடைத்ததோ தெரியாது. வரவிருக்கும் பிரேரணையை தோல்வியுறக் செய்யவேண்டும் என்று அரசாங்கம் கருதுவதும் அதற்காக சில நாடுகளின் உதவியை நாடுவதும் உண்மைதான். ஆனால் பிரேரணை வராமல் இருப்பதற்காக அல்லது வந்தால் அதற்கு எதிராக பல நாடுகளின் உதவியை பெறுவதற்காக உள்நாட்டில் தாமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் பிரேரணையை த…
-
- 2 replies
- 817 views
-
-
இலங்கை பல்லின நாடா? பெரின நாடா? இலங்கையைப் போன்ற பலமத, பல்லின, பல்மொழி, பல கலாசார நாட்டில் ஒரு மத, ஒரு இன, ஒரு மொழி, ஒரு கலாசாரம் எனும் ரீதியில் முக்கியத்துவம் வழங்கப்படும் யாப்பு இயற்றப்படுமாயின் அது பல்லின தேசியத்துக்கும் பல்லின ஒற்றையாட்சிக்கும் பல்லின இறைமைக்கும் பல்லின சுயநிர்ணயத்துக்கும் பொருத்தமாக அமையாது. இதுவே ஆங்கிலேயர் இலங்கைக்குக் கடைசியாக வழங்கிய சேர் ஐவர் ஜெனிங்ஸின் சோல்பரி யாப்பு முன்வைத்த வடிவமாகும். எத்தனையோ நாடுகளை ஆட்சி புரிந்து அனுபவம் பெற்ற அவர்களின் கணிப்புதான் இது அரசியல் அறிவிலும் நிர்வாகத் தந்திரத்திலும் அவர்கள் நுட்பம் மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்கள் …
-
- 0 replies
- 817 views
-
-
முள்ளிவாய்க்கால் பாடம் கற்க மறுக்கும் தமிழர் தரப்பு இலங்கையில் தமிழ் மக்கள் மிகப் பெரிய இனஅழிப்பைச் சந்தித்து எட்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. 2009 மே 18ஆம் திகதி முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட இந்த மாபெரும் படுகொலைகளை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்றிருக்கின்றது. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் காலடி வைக்கக் கூட முடியாதளவுக்கு இறுக்கமான பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன. ஆட்சி மாற்றத்துக்குப்…
-
- 1 reply
- 817 views
-
-
நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன். “சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. என்னை பற்றி எதனையும் கூறட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஆனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன,கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சமூக ஊடகங்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். சமூக ஊடகங்களையும் கைபேசிச் செயலிகள் வழியாகப் பகிரப்படும் விடயங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை…
-
- 0 replies
- 817 views
-
-
-
- 2 replies
- 817 views
-
-
தங்கவேல் அப்பாச்சி ஆசிரியர், பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2018 புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2021 (2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.) ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக அவர் வந்தார்," என்று கருணாநிதி…
-
- 6 replies
- 817 views
-
-
-
- 0 replies
- 817 views
-
-
தமிழ் நாட்டில் இருக்கும் அகதிகளின் கதை தெரியுமா? - கருணாகரன் தமிழ்நாடு திருச்சியில் வாழவந்தான் கோட்டையில் 10க்கு 10 அளவில் அமைக்கப்பட்ட குடிசையில், இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ விதிக்கப்பட்டிருக்கிறது முனியாண்டியின் குடும்பம். பெயர்தான் வாழவந்தான கோட்டையே தவிர, வாழ வந்தவர்கள் அத்தனை பேரின் வாழ்க்கை என்னவோ, பிச்சைப் பாத்திரத்தில்தான் தாளம் போட்டுக்கொண்டிருக்கிறது. மழை வந்தால், ஒழுகும் நிலையில் இருக்கிறது முனியாண்டியின் குடிசை. முனியாண்டியின் குடிசை மட்டுமல்ல, அவரைப்போலிருக்கும் வேறு சில அகதிகளின் குடிசைகளும் ஒழுகும் நிலையில்தான் உள்ளன. இறுதியாகத் திருத்தம் செய்து, நான்கு ஆண்டுகளாகி விட்டன. “நீங்கள்லாம் உங்க ஊருக்குப் ப…
-
- 0 replies
- 816 views
-
-
முஸ்லிம் தலைவர்கள் எல்லையை மீறக்கூடாது எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூன் 12 புதன்கிழமை, பி.ப. 12:47 Comments - 0 நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரின் உண்ணாவிரதத்தை அடுத்து, முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகியமை, தற்போது இலங்கை அரசியலில் முக்கிய நிகழ்வொன்றாகப் பேசப்படுகின்றது. இலங்கைப் பௌத்தர்களின் முக்கிய மூன்று பிரிவுகளான மூன்று நிக்காயாக்களின் தலைமைப் பிக்குகள், அம்முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு, பதவி விலகியோரைக் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஐ.நா செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ மூன், 2010ஆம் ஆண்டு, இலங்கையில் மனித உரிமை நிலைமை தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ‘தருஸ்மன் குழு’வை நியமித்த ப…
-
- 0 replies
- 816 views
-
-
அமெரிக்கத் தீர்மானம்: நேற்று இன்று நாளை - யமுனா ராஜேந்திரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆதரித்து 25 நாடுகளும் எதிர்த்து 13 நாடுகளும் வாக்களித்திருக்கின்றன. சென்றமுறை இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்திருந்தன என்பது இங்கு சுட்டத்தக்கது. இந்த வீழ்ச்சியை சர்வதேச நாடுகளிடம் இலங்கை செல்வாக்கிழந்துவிட்டது என தயான் ஜயதிலக குறிப்பிடுகிறார். 8 நாடுகள் நடுநிலைமை வகித்திருக்கின்றன. காலம் சென்ற சாவேசின் 'இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிச' நாடான வெனிசுலா தவிர பெரும்பாலுமான இலத்தீனமெரிக்க நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருக்கின்றன. உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல் ப…
-
- 0 replies
- 816 views
-