Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே! June 29, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழி, தமிழ்ச் சமூகத்தை மட்டுமல்ல, மனித விழுமியங்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கே முடிவற்ற நிலையில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை எலும்புக் கூடுகள் மீட்கப்படும் என்று தெரியவில்லை. உண்மையில் அவை எலும்புக் கூடுகள் அல்ல. உயிருடன் கொல்லப்பட்ட மனிதர்களேயாகும்! இதுவரை மீட்கப்பட்டவற்றில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளும் உள்ளன. இது மேலும் அதிர்ச்சியையும் சமூகக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவை அரசியல் ரீத…

  2. சுமந்திரனின் நாடாளுமன்ற மீட்பு மாயையும் பலியாகும் தமிழரும் -இந்திரன் ரவீந்திரன் 2018 நவம்பர் 09 ஆம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைப் பாதுகாத்து, பதவி இறக்கப்பட்ட ரணிலின் பிரதமர் பதவியைப் பாதுகாத்து அரசியல் யாப்பையும் ஜனநாயகத்தையும் மீட்டதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் திரு.சுமந்திரனும் திரு.சம்பந்தனின் எதிர்க் கட்சித் தலைவர் பதவியைப் பறிகொடுத்ததில் போய் முடிந்தமைதான் உலகம் அறிந்த அவர்களின் சாணக்கியம். இது ரணிலைக் காப்பாற்றப் போய் ஆப்பிழுத்த குரங்கின் கதையாய் சம்பந்தரின் பதவி பறிபோனதில் முடிந்தது. இலங்கை நாடாளுமன்றம் நெருக்குதலுக்கு உள்ளாகும் காலத்தில், கைப்பிள்ளை கணக்காக சண்டைக்கு கிளம்புவதில் காட்டும் ஆர்வத்தை அதே அரசியல் யாப்பின் கீழ்…

  3. அமெரிக்க - இந்திய போட்டிக்குள் இலங்கை! - ------------- *சஜித் ஜனாதிபதியாக இருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும்... *டில்லியின் திட்டத்திற்குள் அநுர வரவில்லையானால்...? *ஸ்ராலினுக்கு நோகாமல் நடத்தப்படட பேச்சு *ஜெயலலிதாவின் இன அழிப்புத் தீர்மானத்தை திமுக எதிர்க்கவில்லை அல்லவா? -- ---- ------- இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு. ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது. அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த …

  4. சம்பவம் 1 பேராசிரியர் மோகனதாஸ் துணைவேந்தராக இருந்தகாலப்பதியில் பல்கலைக்கழக மாணவர்கள் போர்நிறுத்தக் கண்காணிப்பு அலுவலகம் நோக்கி நடாத்திய அமைதிப் பேரணி இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு மிகமோசமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு மாணவர்கள் மட்டுமன்றி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் எனப் பலரும் துப்பாக்கிப் பிடிகளாலும் பொல்லுகளாலும் தாக்கப்பட்டனர். இத் தாக்குதலின் போது தன்னை துணைவேந்தர் என சிங்களத்தில் அறிமுகம் செய்த போதும் பேராசிரியர் மோகனதாசும் அவரோடு சேர்த்து அப்போதைய கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவச்சந்திரனும் மோசமாக தாக்கப்பட்டனர். படையினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவபீட மாணவர் ஒன்றியத் தலைவர் காண்டிபன் தலையில் படுகாயம் அடைந்து நினைவிழந்த நிலையில் பேர…

    • 2 replies
    • 999 views
  5. இந்தி மொழி பற்றி அறியாத விடயங்கள்

  6. தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. ‘பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். இந்த பல்துறை சார்ந்த அனேக படைப்புக்கள் இன்னும் நூலா…

    • 0 replies
    • 684 views
  7. ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும் 77 Views அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டுகளில் பல முக்கியமான பன்னாட்டு மனித உரிமை ஒப்பந்தங்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் எந்தவித தயக்கமும் இன்றி வெளியேறினார். டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் 2015 இல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றியது மட்டுமன்றி, உலக சுகாதார தாபனத்திலிருந்தும் தனது நாட்டை வெளியே எடுத்தார். இவ்வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்று தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்ல ஒரு நிறைவேற்றுக் கட்டளையைப் பிறப…

  8. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-05#page-21 http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-06#page-20

  9. ஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு? நிலாந்தன் January 24, 2021 வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தரப்பில் இவ்வாறு ஒரு ஆவணம் உருவாக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை. குறிப்பாக கடந்த எட்டு ஆண்டு காலப்பகுதிக்குள் ஜெனிவாவில் தமிழ்மக்கள் எதைக் கேட்க வேண்டும் என்பது குறித்து நீண்ட ஆலோசனைகளின்பின் உருவாக்கப்பட்ட ஓர் ஆவணம் இது.இம்முயற்சிகளின் தொடக்கம் தமிழ் டயஸ்போறாதான். லண்டனை மையமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்பு ஒன்று முதன்முதலாக அப்படி ஒரு ஆவணத்தை உருவாக்கி சுமந்திரனுக்கு வழங்கியதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை பக்கமுடை…

  10. யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். யாழ்ப்பாணிகளின் "கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு" தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் காணவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள், இன்னமும் கேரளாவில் வாழ்வதாக ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதையும் யாரும் பொய்…

  11. மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்? – அகிலன் 51 Views மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடத்தப்படும்? எந்த முறையில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும்? கொழும்பு அரசியலில் இப்போது பிரதான கேள்விகளாக இருப்பவை இவைதான். ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னர் இவை குறித்த கேள்விகள் பலமாக எழுப்பப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைவிட, சிறீலங்கா அரசாங்கமும் இது தொடர்பில் சர்வதேசத்துக்கும், இந்தியாவுக்கும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டிருக…

  12. அரசியல் தலைமைகளில் நம்பிக்கையிழக்கும் மக்கள் பாதிக்­கப்­பட்ட மக்கள் வீதி­க­ளிலும், இரா­ணுவ முகாம்­களின் எதி­ரிலும் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றார்கள். இந்தப் போராட்­டங்கள் அர­சியல் ரீதி­யாக, அர­சியல் தலை­மை­க­ளினால் வழி­ந­டத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் போராட்­டங்கள் வடக்­கிலும் கிழக்­கிலும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. யுத்தம் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால் இரா­ணு­வத்­தினரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளு­டைய காணிகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அர­சியல் கைதி­களின் விடு­த­லையில் காலக்­கெ­டு விதித்து மீறி­யதைத் தவிர அந்தப் பிரச்­சி­னைக்கு முற்­று­மு­ழு­தாகத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய அக்­க­றையை அ…

  13. தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக புதிய அணி? தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக புதிய அணி உருவாகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உருவாகும் அந்த அணியில், இப்போது காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்கு ஈஸ்வரன் தலைமையிலான கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட ‘மதச்சார்பின்மை’ பேசும் கட்சிகள் எல்லாம், ஓரணியில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. விவசாயிகளுக்கான போராட்டம் என்ற அளவில் 25.4.2017 அன்று நடைபெற்ற முழு அடைப்பை நோக்கினாலும், இது ஒரு மாற்று அரசியல் அணி என்பதில் சந்தேகமில்லை. பத்து வருடங்களுக்குப் பிறகு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்ன…

  14. வடக்கு மாகாணசபை: அரசியல் தீர்வை கையாள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் - யதீந்திரா வடக்கு மாகாணசபையில் கூட்டமைப்பு பெற்றிருக்கும் அமோக வெற்றியானது, தமிழ் மக்கள் சலுகைகளை விடவும் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அரசியல் தீர்வை விரும்புகின்றனர் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. விடுதலைப்புலிகளை போரில் வெற்றிகொள்ள முடிந்த அரசாங்கத்தால், தமிழ் மக்களின் மனதை வெற்றிகொள்ள முடியவில்லை என்பதையும் மேற்படி வெற்றி நிரூபித்திருக்கிறது. யுத்தத்திற்கு பின்னர் அத்தகையதொரு வாய்ப்பை அரசாங்கம் பெற்றிருந்தும் கூட, அதனை முறையாக பயன்படுத்துவதில் அரசாங்கம் பெரிய முன்னேற்றங்கள் எதனையும் பெற்றிருக்கவில்லை. அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகள் தொடர்பில், தமிழ் மக்கள் மத்தியில் நிலவிவரும் அதிரு…

    • 2 replies
    • 821 views
  15. மாலதி மைத்ரி வல்லினம்.காம் கேள்வி-பதில் பகுதியில் நான் சிலருடைய எழுத்துக்களைப் படிப்பதில்லை என்று தெரிவித்திருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்ட பொழுது எனது நிலைப்பாட்டை சுருக்கமாகப் பதிவு செய்திருந்தேன். அதன் ஒரு பகுதி இவ்வாறு அமைந்திருந்தது. “அ. மார்க்ஸ், ஷோபாசக்தி, யோ. கர்ணன் இவர்கள் மூன்று பேரும் அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள். இலங்கையில் புலிகளால்தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றைத் திரித்துக் கொண்டிருப்பவர்கள். புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசும் காங்கிரஸ், சி.பி.எம், சுப்பிரமணியசாமி, சோ, என்.ராம் நிலைப்பாடுதான் இவர்களின…

  16. கிழக்கு மாகாணத் தேர்தலை நோக்கிய சம்பந்தனின் நகர்வு இணைந்த வடக்கு, கிழக்கில் படித்த, பக்குவமான முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக, இரா.சம்பந்தன் மீண்டும் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மன்னாரில் இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவது தொடர்பில் மூத்த அரசியல் தலைவராக சம்பந்தன், கடந்த காலங்களிலும் அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். குறிப்பாக, கடந்த (2012) கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர், எந்த…

  17. ரொபேட் முகாபேயின் எழுச்சியும் வீழ்ச்சியும் சிம்பாப்வேக்கு விடிவு பிறக்குமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) வரும், ஆனால் வராது என்ற ஒரு சினிமா நகைச்­சுவைப் பாணியில் சிம்­பாப்வே அதிபர் முகாபே பத­வியை விட்டு வில­கு­வாரா? இல்­லையா? அல்­லது தூக்­கி­யெ­றி­யப்­ப­டு­வாரா போன்ற பல கேள்­வி­களின் மத்­தியில் அவர் கடந்த 21.11.2017 அன்று செவ்­வாய்க்­கி­ழமை பத­வியை இரா­ஜி­னாமா செய்­த­தாக பாரா­ளு­மன்­றத்தின் சபா­நா­யகர், பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­க­ளுக்கு அவரின் கடி­தத்தை வாசித்­துக்­காட்­டினார். பாரா­ளு­மன்­றத்­திற்­குள்­ளேயே அவரின் கட்­சி­யினர், எதிர்க்­கட்­சி­யினர் என சக­லரும் மேசை­களில் தட்…

  18. பகுத்­த­றிவும் பட்­ட­றிவும் இன்றேல் கெட்­ட­றி­வுதான் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தாமரை மொட்டு சின்­னத்தின் செயற்­பாட்­டா­லேயே தமி­ழீழம் கிடைக்­கலாம் எனவும் மஹிந்த ராஜபக் ஷ அப்­பாவி சிங்­கள மக்­களை ஏமாற்றத் தவ­றான பிர­சா­ரங்­களைச் செய்­வ­தா­கவும் சம்­பந்தன் பாரா­ளு­மன்­றத்தில் கூறி­யுள்ளார். உள்­ளூ­ராட்சித் தேர்தல் மூலம் யாப்பு இயற்­றப்­பட்டு தமி­ழீழம் வழங்­கப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் அதற்கு இத் தேர்தல் மக்கள் அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பாக நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் மஹிந்த கூறி­யது தவறு. தனது கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் எங்­குமே பிரி­வி­னைக்­கு­ரிய வார்த்தை இல்லை என்­பதை சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டினார். இவர் உயர் நீதி­மன்­…

  19. ராஜதந்திரப் போர் எனப்படுவது - பின்நோக்கிப் பாய்வதல்ல... நிலாந்தன்:- 31 ஆகஸ்ட் 2014 இந்திய பிரதமரை கூட்டமைப்பினர் சந்தித்திருக்கிறார்கள். வழமை போல இந்தியா 13 ஆவது திருத்தத்தையே தீர்வாக முன்வைத்திருக்கிறது. மோடி வந்தால் மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருந்த தமிழர்களில் ஒரு பகுதியினர், மோடியும் எங்களை கைவிட்டு விட்டார் என்று வழமைபோல சலிக்கத் தொடங்கி விட்டார்கள். அதே சமயம் மோடி வந்தால் என்ன? யார் வந்தால் என்ன? இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மாறவே மாறாது என்று தாங்கள் தீர்க்க தரிசனம் உரைத்ததை இன்னொரு தரப்பினர் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் மாவை சேனாதிராஜா கூறுகிறார். மோடியோடு தாங்கள் கதைத்தவை எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது என்ற தொனிப்பட. அதாவது கூட்ட…

  20. இந்தியா சொன்னது என்ன? - யதீந்திரா நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டடைப்பின் புதுடில்லி விஜயம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது. இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல் மற்றும் இந்திய வெளிவிவகார செயலர் சுஜாதா சிங் ஆகியோரை சந்தித்தித்து பேசியிருக்கின்றனர். இதில் பிரதமர் மோடியுடனான சந்திப்பே முக்கியமானது. கூட்டமைப்பின் புதுடில்லி விஜயம் தொடர்பில் தெற்கில் உள்ள அரசியல் விமர்சகர்கள் பல்வேறுபட்ட பார்வைகளை பதிவு செய்திருக்கின்றனர். ஒரு சிலரோ கூட்டமைப்பின் புதுடில்லி விஜயத்தால் அரசு எரிச்சலடைந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். …

  21. இராஜதந்திர அரசியலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் - யதீந்திரா படம் | Reliefweb பொதுவாக இராஜதந்திரம் என்பதன் பொருள் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. தேசங்களுக்கு இடையிலான பேச்சுகளை நடத்துவதற்கான ஒரு (பயற்சியுடன் கூடிய) கலையே இராஜதந்திரம் எனப்படும். இதனை மிகவும் எளிமைப்படுத்தி கூறுவதானால், ஒரு அரசு தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலனை முன்னிறுத்தி, அந்நிய அரசுகளுடன் மேற்கொள்ளும் உறவை இராஜதந்திரம் என்று வரையறுக்கலாம். இதனை இன்னும் சுருக்குவதானால் அரசுகளுக்கு இடையிலான நலன்களை கையாளும் கலையே இராஜதந்திரம் எனப்படும். எனவே, பொதுவான நோக்கில் இராஜதந்திரம் என்பது அரசுகளுக்கான ஒன்றேயன்றி அரசியல் கட்சிகளுக்கு உரிவையல்ல. ஆனாலும், அரசுகளுக்கும், அரசுகளுக்கும் இடையிலான உறவ…

  22. அரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம் வெசாக் பண்டிகை நாட்டின் பல பகுதிகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. இது பௌத்த மதத்தின் முக்கியமான பண்டிகையாகும். உலக நாடுகளில் பௌத்தர்கள் வாழும் இடங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்;படுகின்றது. இலங்கையில் அதிக முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின் இது. அரசாங்க பண்டிகையாக மிகப் பரந்த அளவில் கொண்டாடப்படுகின்றது. ஆனால், அந்தக் கொண்டாட்டம் பௌத்த மதக் கலாசாரத்தைப் பின்பற்றி அதனை, பேணி பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள போதிலும், அது எல்லையைக் கடந்து அதனை சிறப்படையச் செய்கின்ற ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கின்றது. நாட்டின் பிரதான மதத்தவர்கள…

  23. ஆயுதப் போராட்டத்திற்கான அறம்:குட்டி ரேவதி ஆயுதப் போராட்டம் என்பது ஒரு வன்முறை என்று கூறுதலே ஒரு சமூக இயக்கத் தந்திரமாகவும் அதை ஒரு நாடு இராணுவத்தின் பெயரால் செயல்படுத்தும் போது அதுவே ஒரு ராஜதந்திரமாகவும் அர்த்தம் பெறுகிறது. ஆயுதம் என்றால் என்னவோ உலோகங்களாலும் இன்ன பிற ஆக்கங்களாலும் ஆக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. இது ஓர் ஒற்றைப் பரிமாணச் சிந்தனையே. ஒடுக்குமுறையைச் செயல்படுத்துபவர்கள் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் ஆயுதமாகப் பயன்படுத்துகையில் நாம் ஆயுதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துவது அறம் பிழைத்ததாகாது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுத இயக்கமும் ஆயுதப் போராட்ட வடிவங்களும் முன்னிலை வகுத்ததாலேயே அதை ஒரு வன்முறை இயக்கம் என்று கூறுதலும் அதன் அடிப்படைக் கோரிக்கைகளை ஒட்…

  24. இன்று இலங்கை மிகவும் குறிப்பான வரலாற்றுப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. தெற்காசியாவில் போராட்டங்களுக்கான காலமாகக் கருதப்படும் நமது அரசியல் சமகாலம் இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களின் போராட்டத்திற்கான அவசியத்தைத் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளது. அறுபது ஆண்டுகால திட்டமிட்ட தமிழ்த் தேசிய இனங்களின் மீதான அடக்குமுறை என்பது இன்று மேலும் ஒரு புதிய வடிவை எடுத்துள்ளது. இன்று சிங்கள பௌத்த மேலாதிக்க வாதச் சிந்தனைக்கு எதிரானதும், குறுந்தேசியவாத கோட்ப்பாடிற்கு எதிரானதுமான தத்துவார்த்தத் தளத்திலான போராட்டங்கள் அவசியமாகிறது.சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் பண்பியல்புகள் குறித்த புரிதல்களின் ஊடாகவே அதனை எதிர்கொள்வது குறித்த முடிபுகளுக்கு முன்வர முடியும். சிங்கள பௌத்தம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.