Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு இருக்கும் காலஎல்லை இதுவே January 26, 2023 — கலாநிதி ஜெகான் பெரேரா — பெருமளவு தாமதத்துக்கு பிறகு இறுதியில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி தேர்தல்கள் மார்ச் 9 நடத்தப்படும் என்று தீர்மானித்திருக்கிறது. இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் ஏற்கெனவே ஒரு வருடத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. ஒரு வருடத்துக்கும் அப்பால் தேர்தல்களை ஒத்திவைத்தால் அது சட்டவிரோதமான ஆட்சிமுறைச் சிக்கலுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதுடன் அதன் விளைவாக சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கும். நாடு இப்போது தேர்தல் திசை நோக்கி நகர்த்தப்படுகிறது. இது ஒன்றும் …

  2. மாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்? யதீந்திரா கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும் கேள்வி பலரிடமும் உண்டு. அவ்வாறானவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு ஒரு ஜக்கிய முன்னணி அவசியம் என்பதை உணர்ந்தவர்கள். அதற்காக பல்வேறு வழிகளிலும் உழைத்தவர்கள். இப்போதும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். அவ்வாறானவர்களுடன் பேசுகின்ற போது, அவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை கூறுகின்றனர். இதற்கு மேலும் யார் தூய்மையானவர் என்னும் விவாதம் தேவையற்றது. இதற்கு மேலும் இந்த விவாதம் நீண்டு செல்லுமாக இருந்தால், அது நிச்சயமாக விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகவுள்ள மாற்றுத் தலைமையை பலவீனப்படுத்தும். ஒரு வ…

  3. பலஸ்தீனம்: இஸ்ரேலின் நிலப்பறிப்பும் அமெரிக்கத் தீர்வுத் திட்டமும் August 8, 2020 ரூபன் சிவராஜா கொரோனா நெருக்கடி முழு உலகையும் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டிருக்கின்ற நிலையிலும் ஆக்கிரமிப்பு சக்திகள் நெகிழ்வுப் போக்கிற்குரிய அணுகுமுறை மாற்றங்களுக்குத் தயாரில்லை. பலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை (West Bank) நிலங்களைப் பலவந்தமாக தனதாக்கிக் கொள்ளும் இஸ்ரேலின் சமகால முனைப்பு அதனையே வெளிப்படுத்துகின்றது. ஐ.ந-வும், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா தவிர்த்த உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் இந்த முனைப்பினைச் சட்ட விரோதமெனக் கண்டிக்கின்றன. இருப்பினும் இஸ்ரேலின் கடும்போக்கிற்கு அமெரிக்கா வழமை போல முண்டுகொடுக்கின்றது. வழமை போல என்பதற்கு மேலாக டிரம்ப் நிர்வாகம் பிரத்…

  4. செங்கொடி - உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவள்! (முன் குறிப்பு: இது சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்க தமிழின உணர்வாளர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. மேலும் எல்லோரும் தீக்குளித்து இறக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டதல்ல.) மற்றுமொரு நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு தீக்குளிப்பு நடந்துள்ளது. தீக்குளித்தவர் தியாகி ஆகிவிட்டார். 21 வயதே ஆன அவரின் பெயர் தோழர் செங்கொடி. (தோழர் என்று தான் அவர் தன்னை குறிப்பிட்டிருக்கின்றார்). இருந்தாலும் பலருக்கு மகளாகவும், இளைஞர்களுக்கு தங்கையாகவும் ஆகிவிட்டார். இந்த தீக்குளிப்பிற்குப் பின் யார் யார் துரோகம் செய்தார்கள் என்ற விவாதம் தொடங்கிவிட்டது. இன்னொருபுறம் தீக்குளிப்பு சரியா? தவறா? என்ற …

  5. 911 இன் இரகசிய வரலாறு http://www.youtube.com/watch?v=mhtzWcaZx5A http://www.youtube.com/watch?v=s1ZHUl_PT2M

  6. தேசியப் பொங்கல் விழா? அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம் வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தி;ற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக் குடியிருப்புகளுக்குள் சென்று அவர்களோடு அருகிருந்து உரையாடியும் உள்ளார். அவருடைய வருகையின் பின் அந்த முகாமில் உள்ள சிறுவர்கள் அவரை ‘மைத்திரி மாமா’ என்று அழைப்பதாக இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டாளர் சொன்னார். மைத்திரி விஜயம் செய்த அந்த வீட்டின் குடும்பத் தலைவி அவருடைய வருகை பற்றிக் கூறும்போது அதை ஏதோ கடவுளின் வருகை போல வர்ணித்ததாகவும் மேற்படி செயற்பாட்டாளர் சொன்னார். அவர் இந்த வழியால்தான் வந்தார். இங்கேதான்…

  7. நான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கியமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் நினைவான மணிமண்டபம் திறப்பு விழா, தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, மகிந்தவின் யாழ்ப்பாண வருகை என்பனவே அந்த நிகழ்வுகள் ஆகும். அந்நிகழ்வுகள் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சொல்லும் செய்தி என்ன? தமிழர்களது போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான நகர்வில் இவற்றின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி. தமிழீழ தேசிய தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை பாரிசவாத நோயினால் படுக்கையில…

    • 0 replies
    • 819 views
  8. மெய்யென்ன பொய்யென்ன?

    • 0 replies
    • 818 views
  9. கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்? - யதீந்திரா படம் | THE WEEK இந்த ஆண்டு, இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. அதில் முதன்மையானது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு. இந்தத் தீர்வு எவ்வாறு அமையும் என்பது தொடர்பான தகவல்கள் ஆங்காங்கே தெற்கின் அரசியல் தலைவர்களின் கருத்துக்களிலிருந்து ஊகிக்கப்படுகிறது. அவ்வாறான கருத்துக்களிலிருந்து ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்வைக்கப்படவுள்ள அல்லது கிடைக்கவுள்ள அரசியல் தீர்வு இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கீழ்தான் நிகழவுள்ளது. இதற்கான ஒரு வகை மாதிரியாகவே தாம் ஒஸ்ரியன் அரசியல் யாப்பை கருத்தில் கொள்வதாக அண்மையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். தற்போது புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்களின் கருத்தற…

  10. தமிழர் அரசியலின் ‘ஆகாத காலம்’ -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் வரலாறு தெரியாதவர்கள், தாம் நினைத்ததை எல்லாம் வரலாறாக எடுத்தியம்பி, வரலாற்றுத் திரிபுகளைச் செய்து வருகின்றார்கள். இதன்மூலம், அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் நிறைந்த தமிழர் வரலாறு, திரிபுபடுத்தப்பட்டு, மூடிமறைக்கப்பட்டு வரும் நிலை உருவாகிறது. புறநானூற்று காலத்துப் பாரம்பரியம் எனப் பரப்புரை செய்யப்படும் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையும், அதற்கு முன்னரான தமிழர் தம் அஹிம்சை வழிப் போராட்டத்தையும் உள்ளடக்கிய, இலங்கையின் சுதந்திரத்துக்கு (1948க்கு) பின்னரான வரலாறு, தமிழர் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு என எழுதப்பட்டாலும், அவற்றில் அஹிம்சை, போர், வீரம், வெற்றி, தோல்விகள் போன்றவை, வரலாறாகப் பதியப்படுவதற்கான …

  11. 2009ம் ஆண்டுமுதல் 2013ம் ஆண்டுவரை உலகத்திற்கு அதிகளவு ஆயுதங்கள் வழங்கி முன்னணியில் நிற்கும் நாடுகளின் வரிசை. அமெரிக்கா 29 % ருசியா 27 % யேர்மனி 07 % சீனா 06 % பிரான்சு 05 % ஆதாரம்; Ludwigsburger Zeitung பாத்திரமறிந்து பிச்சைபோடு என்றொரு பழமொழி தமிழில் இருப்பது இவர்களுக்குத் தெரியுமா?????

    • 2 replies
    • 818 views
  12. தேரும் தேசியமும் - நிலாந்தன் தென்மராட்சியில் வரணியில் ஒரு கோயிலில் கனரக வாகனத்தின் உதவியோடு தேர் இழுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் போதியளவு ஆட்கள் இல்லாத காரணத்தால், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டியிருந்ததாகவும், அவ்வாறு வேறு சமூகங்களுக்கு, அதாவது சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விரும்பாத ரீதியில் நிர்வாகம் தேரை இழுப்பதற்கு கனரக வாகனத்தைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் இணையப் பரப்பில் குறிப்பாக முகநூலில் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அண்மையில் சிவசேனா என்ற ஓர் அமைப்பு பசு வதை தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பிய அதே தென்மராட்ச…

  13. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை ‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிய நிலை’, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப்போல’ என்று சொல்வார்களே, அப்படியானதொரு நிலைக்கு வந்திருக்கிறது தமிழ் மக்களுடைய அரசியல். அதிலும் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கப்போகிறது என அறிவிக்கப்பட்டதோடு, அது ‘நாறி’யே போய்விட்டது எனலாம். நிலைமைகளை அவதானிப்போர் இதை எளிதாகவே புரிந்து கொள்வர். அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால், இது சூனிய நிலைதானே. நிச்சயமாக! எந்த நம்பிக்கை வெளிச்சமுமில்லாமல் இருளாகவே நீளும் நிலை என்பது சூனியமே. இந்த நிலைக்குத் தனியே அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மட்டும் கா…

  14. இன உருவாக்கமும் தமிழர் சின்னமும் Editorial / 2018 டிசெம்பர் 25 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:11 - ஜெரா உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களையும் குறியீடுகளையும் வைத்திருக்கிறது. அவ்வாறானதொரு சின்னம் அல்லது குறியீடு தெரிவுசெய்யப்படும்போது, அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும் உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள், குறித்த இனத்தின் வரலாற்று, பண்பாட்டு, ஐதீக நடைமுறைகள் இரண்டறக் கலந்தனவாக இருக்கின்றன. இந்தியர்களுக்கு அசோகச் சக்கரமொன்றும், அமெரிக்கர்களுக்கு ஒரு கழுகும், சீனர்களுக்கு அனல்கக்கும் பறவையும், சிங்களவர்களுக்குச் சிங்கமும், இந்தப் பின்னணியிலேயே நிலைபெற்றுவிட்டன. இந்த…

  15. மாறாத ஆட்சியாளர்களும் சிந்திக்க வேண்டிய தமிழர்களும்

    • 0 replies
    • 818 views
  16. 'சட்டப் புலமைக்காக - முன்னாள் நீதியரசர் என்பதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை' -அ.நிக்ஸன்- 21 அக்டோபர் 2013 "கோமாளிகள் போன்றும் சந்தர்ப்ப வாதிகளாகவும் உருமாறி நிற்பது 60 ஆண்டுகால போராட்டத்தை கேவலப்படுத்தும் செயல்." சம்பந்தனுடைய பாராளுமன்ற உரைகளும் விக்னேஸவரன் அறிய வேண்டிய தகவல்களும் Notes—13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத் தடியாலும் தமிழர்கள் தொட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று கூறி விட்டு அந்த சட்டத்தின் கீழான மாகாணசபை முறையை தூக்கிப் பிடித்து அதே மக்கள் முன்னிலையில் நீங்கள் கோமாளிகள் போன்றும் சந்தர்ப்ப வாதிகளாகவும் உருமாறி நிற்பது 60 ஆண்டுகால போராட்டத்தை கேவலப்படுத்தும் செயல். சர்வதேச அரசியலில் என்ன நடக்கின்றது. இலங்கை இனப்…

  17. காந்திய தேசத்திலிருந்து கிடைத்த உயிர்ப்பலிச் செய்தி மனிதாபிமானமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தீவிரவாதம், மிதவாதம் என்பதற்கு அப்பால் காந்தீயவாதம் என்ற அஹிம்சாவழிக்கொள்கை சக்தியுடையதாகவும் உயிர்ச்சேதமற்றதாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் உள்ளது. ‘கோபம் வேண்டாம் - மன்னித்துவிடு’, ‘அஹிம்சையின் உன்னதம் அதனை அடையும்போது தெரியும்’ என்றெல்லாம் போதிக்கிறது காந்தீயவாதம். துப்பாக்கி முனையில் நிற்கும்போதும் மௌனம் ஆயிரம் மடங்கு பலத்தினைக் கொண்டிருக்கும் எனப் போதிக்கப்பட்டு காந்தீயவாதம் முளைவிட்டு உயிர்பெற்ற இந்திய தேசத்திலிருந்தா இச்செய்தி வந்திருக்கிறது என்பதை எண்ணுகையில் உள்ளம் பதைபதைக்கத்தான் செய்கிறது. ஆம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்த…

  18. ஏற்கனவே தன் மேலாடைகள் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு இடுப்பில் ஒரு சிறுதுணியை மட்டும் கட்டிக் கொண்டு நிற்கையில், அருகில் நிற்கும் ஒருவனிடம் அதையும் கழற்றிக் கொடுத்துவிட்டு அப்படிக் கொடுப்பதால் நட்டம் எதுவும் வந்து விடப் போவதில்லை எனக் கூறினால் எப்படி இருக்கும். அடுத்த கட்டமாக மானத்தை மறைக்கும் கடைசி உள்ளாடையையும் கழற்றிக் கொடுத்துவிட்டு நிர்வாணம் பற்றிக் கவலைப்படாமல் அதற்காகப் பெருமைப்படும் நிலையும்கூட ஏற்படலாம். தற்சமயம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலை இப்படித்தான் தோன்றுகின்றது. ஆனால் இங்கு ஒரு படிமேலே போய் தனது இடுப்புத் துணியை மட்டுமன்றித் தனது சகோதரனின் இடுப்புத் துணியையும் கழற்றிக் கொடுக்கும் கைங்கரியத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. …

  19. இலக்காகும் கிழக்கு இலங்­கையின் சம­கால நாட்கள் பல்­வேறு பேசு­பொ­ருள்­க­ளுடன் நகர்ந்து செல்­கின்­றன.தென்­னி­லங்­கையில் பல்­க­லைக்­க­ழக மற்றும் உயர் கல்வி நிறு­வன மாண­வர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஆர்ப்­பாட்­டங்கள், ஆசி­ரிய, அரச வைத்­திய அதிகாரிகள் சங்கம் உட்­பட தொழிற்­சங்­கங்கள் முன்­னெ­டுக்­கின்ற மற்றும் முன்­னெ­டுக்­கத்­திட்­ட­மிட்­டுள்ள பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பு­க்கள்,கிழக்கில் இடம்­பெறும் வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் போராட்­டங்கள்,வடக்கில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நில­மீட்புப் போராட்­டங்கள், காணாமல் போன அல்­லது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டித்­துத்­தா­ருங்கள் எனக் கண்­ணீர்­விட்­ட­ழுது நடந்­தே­று­கின்ற போராட்­டங்கள் என்­பன பாதிக்­கப்­பட…

  20. மாறுப்படும் அரசியல் போக்கு இவ் ­வ­ரு­டத்­துக்குள் மாகா­ண­ சபைத் தேர்­தலை நடத்தி முடிப்பேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வாக்­கு­றுதி நல்­கி­யி­ருப்­ப­தாக ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கின்­றன. குறிப்­பிட்டு கூறப்­போனால் இவ் ­வ­ருட இடைக்கால பகு­தி­யி­லி­ருந்து 2020 ஆம் ஆண்டு நடுக்­கால பகு­தி­ வரை தேர்தல் நடத்­து­வ­தற்­கு­ரிய பரு­வ­ கா­ல­மாக எண்­ணப்­ப­டு­வ­த­னாலோ என்­னவோ அனைத்து கட்­சி­களும் தேர்தல் களத்­துக்கு செல்­வ­தற்­கு­ரிய வியூ­கங்­களை வகுத்து வரு­வ­தையும் திட்­டங்­களை தீட்டி கொள்­வ­திலும் வேக­மான கவ­னங்­களை செலுத்தி வரு­வதை காணு­கிறோம். ஏலவே சில மாகா­ண ­ச­பை­க­ளுக்­கு­ரிய ஆயுட்­காலம் முடி­வ­டைந்த நிலையில் வடமாகா­ண­ …

  21. ' காவோலை விழ குருத்தோலை சிரிக்கிறது' என்பது தமிழ் மொழியில் உள்ள ஒரு கருத்து மிக்க பழமொழியாகும். இன்னொன்று இருக்கின்றது ' சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது' என்பது. இந்த இரு தமிழ்ப் பழமொழிகள் பற்றி தற்போது ஐயம் நிலவுகின்றது. தற்போது ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஏராளமான குருத்தோலைகள் விழுந்து விட்டன. தற்போது அந்தக் குருத்தோலைகளின் உக்கிய உரத்திலே காவோலைகளாக விழ வேண்டியவர்கள் புத்துணர்வு பெற்றுள்ளார்கள். வருகின்ற 21ம் திகதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரதம் ஒன்றை தந்தை செல்வா தூபிக்கு அருகில் ஆரம்பிக்க இருக்கின்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் பல கோரிக்கைகளை முன் வைத்து நடாத்தப்பட இருக்கின்றது. இந்தக் கோரிக்கைகள் அரச தரப்பால் நிறைவேற்றப்படுகின்ற…

  22. நினைவேந்தல் உள்ளதா உரிமை? -என்.கண்ணன் “உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது போனால், அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்றங்களை அல்லது சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தியிருக்க வேண்டும்” “திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்த பத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சரி, சட்ட விற்பன்னர்களான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, நினைவேந்தல் விவகாரத்தை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை” தியாகி திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர்நாள் நினைவேந்தலுக்காகவும் தொடர்ந்திருக்கிறது. மரணித்தவர்களை நினை…

  23. அமெரிக்கா – கனடா எல்லையை திறப்பதில் ஏன் இந்த அவசரம்? Bharati April 29, 2020 அமெரிக்கா – கனடா எல்லையை திறப்பதில் ஏன் இந்த அவசரம்?2020-04-29T08:09:55+00:00Breaking news, அரசியல் களம் ரொறொன்ரோவிலிருந்து குரு அரவிந்தன் கனடா – அமெரிக்க எல்லையைத் திறப்பதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டினாலும் கனடாவின் நலன் கருதி எல்லையைத் திறப்பது சற்றுப் பின்போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி இந்த எல்லைகள் இருநாட்டின் விருப்பத்துடன் மூடப்பட்டன. பொதுமக்களுக்காக மூடப்பட்டாலும் அத்தியாவசிய வர்த்தக, மற்றும் பொது சுகாதார தேவைகளுக்கான போக்குவரத்துக்காக எல்லைகள் பாவனையில் இருந்தன. எனவே மேலும் ஒரு மாதத்திற்கு எல்லையைத் திறப்பது ப…

    • 2 replies
    • 817 views
  24. ‘தியனன்மென்’ சதுக்கப் படுகொலை: கட்டுக்கதையின் 30 ஆண்டுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூன் 13 வியாழக்கிழமை, மு.ப. 05:18Comments - 0 சில வரலாற்று நிகழ்வுகள் பற்றி, நமக்குச் சொல்லப்பட்டுள்ளவை உண்மையா, பொய்யா என்பதைத் தேடி அறியும் வாய்ப்பு, சில சமயங்களில் ஏற்படுகிறது. அவ்வாறு அவை தேடி அறியப்படும் போது, பொய்கள் எவ்வாறு உண்மையை விட, வலிமையானவையாக, வரலாறெங்கும் நிறுவப்பட்டிருப்பதைக் காண முடியும். வரலாற்றை எழுதுவோர் யார், எமக்குச் சொல்லப்படும் செய்திகள் யாருடைய செய்திகள் போன்ற கேள்விகளை, நாம் தொடர்ந்து கேட்கவும் ஆராயவும் வேண்டும். சில பொய்கள், தொடர்ந்து சொல்லப்படுகின்றன. அதன் மூலம், அதை மீளவும் உண்மை என நிறுவும் காரியங்கள் தொடர்ந்து நடக்கின்றன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.