Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இனியும் சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவரா? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தொடர்ந்தும் ‘கூட்டமைப்பின் தலைவர்’ என்கிற தகுதியோடு இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கின்றது. கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் மூன்று பங்காளிக் கட்சிகளில், தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழ் ஈழ விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவை, சம்பந்தனை நிராகரித்துக் கொண்டு, சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி ஒன்றுக்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47ஆவது கூட்டத் தொடரை முன்வைத்து, கூட்டமைப்பு என்ற அடையாளத்தைத் தவிர்த்துக் கொண்டு, டெலோவும் புளொட்டும் இன்னும் சில கட…

  2. ஜெனிவாவை நோக்கி மூன்று கடிதங்கள் ? நிலாந்தன்! தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கைச்சாத்திட்ட ஒரு பொதுக் கடிதம் நேற்று ஐநாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஐநா கூட்டத் தொடரையொட்டி இப்படி ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும் என்று டெலோ இயக்கம் முன்னெடுத்த முயற்சிகளின் விளைவாக இப்படி ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் கடந்த பல மாதங்களாக டெலோ இயக்கம் ஈடுபட்டு வந்தது. அம் முயற்சிகளை முதலில் தொடங்கியது மாவை சேனாதிராசாதான். அம்முயற்சிகளில் அவர் ஒரு கட்டத்தில் மதத்தலைவர்களையும் ஒருங்கிணைத்தார்கள் . Covid-19 சூழலுக்குள் மாவை சேனாதிராசாவின் மேற்ப…

  3. ஜெனீவா அறிக்கை அரசாங்கத்துக்கே சாதகமாகும்- பிரபல ஊடகவியலாளர் தகவல் ‘தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் முன்னைநாள் ஊடகவியலாளரான அந்தப் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் கருத்து வெளியிட்டுள்ளார்- மறைந்த மங்கள சமரவீரவின் அணுகுமுறையைக் கையாண்ட பீரிஸ்’. அ.நிக்ஸன் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சராகக் கொண்டியங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிநாட்டமைச்சு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கடந்த 27ம் திகதி தான் சமர்ப்பித்த மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமு…

  4. பூகோள அரசியல்- புலிகளுக்கு வேறு வியாக்கியாணம் தலிபான்களுக்குச் சர்வதேச நீதி —ரஷியாவோடு இராணுவ ஒத்துழைப்புக்கான கலந்துரையாடலை இலங்கை மொஸ்கோவில் நடத்தியிருந்தது. இந்த உரையாடல் சீனாவுக்கான ஒத்துழைப்பாக இருக்கலாம் என்பதைவிட, அமெரிக்காவை மேலும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான கொழும்பின் உத்திகளில் ஒன்றாகவே கருதலாம்— -அ.நிக்ஸன்- ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்கலாம் என்று கருதப்படும் இந்திய இராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் சேஷர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் (Sher Mohammad Abbas Stanikzai…

  5. சூடு கண்ட பூனை என்.கே. அஷோக்பரன் பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் அவசரகால நிலை, 2021 ஓகஸ்ட் 30ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வழங்கலை உறுதிசெய்யும் காரணத்தின் நிமித்தமாக, அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவசரகால நிலை பிறப்பிப்பு என்பது, ஜனாதிபதியின் கையில் கிட்டத்தட்ட எல்லாம் வல்ல அதிகாரத்தைக் கையளிப்பது போன்றதாகும். இதன் பாதகங்கள் பற்றி, ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் நிறையவே, பொதுவௌியில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த இடத்தில், இரண்டு கேள்விக…

  6. ஜெனிவாவுக்கான அறிக்கையிலும் முரண்படும் தமிழ்த் தலைமைகள் – அகிலன் September 7, 2021 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயான பிளவு மீண்டும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஒரே குரலில் ஜெனிவாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை அனுப்பி வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. முரண்படும் தமிழ்த் தலைமைகள்; இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் நான்காகப் பிளவுபட்டு தமது அறிக்கைகளைத் தனித்தனியாக ஜெனிவாவுக்கு அனுப்பிவைக்கின்றன. இதில் ஐந்தாவதாக அனந்தி சசிதரன் தலைமையிலான கட்சி இந்த அணிகள் எதற்குள்ளும் செல்லாமல் தனித்து நிற்கின்றது. …

  7. அவசரகால நிலைமை பிரகடனத்தின் இலக்கு பொருளாதாரமா, வாழ்வாதாரமா? லக்ஸ்மன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில் பிரகடனப்படுத்து வதற்கானதாகவே அவசரகால நிலைமைப்பிரகடனத்தைக் கொள்ளலாம். ஆனால், நமது நாட்டில் அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவதற்காக இது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை , கடந்த சில மாதங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சீனி, பால்மா, அரிசி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே தட்டுப்பாடு…

  8. ஆப்கானிஸ்தான்: ஒரு முடிவும் ஒரு தொடக்கமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ புதிய போர் ஒழுங்கின் முதலாம் அத்தியாயம் - 1 சில வாரங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் அரங்கேறியவை பலர் எதிர்பாராதது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானில் தொடங்கியது, ஒரு முழுச் சுழற்சியை நிறைவுசெய்து, தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆப்கானை நிறுத்தியுள்ளது. இந்த 20 ஆண்டுகளில் உலகம் மாறிவிட்டது. அரசியல்ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்த மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்தப் பின்புலத்தில், இப்போதைய நிலைவரத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? நீண்ட நெடிய போரில் இருந்தான அமெரிக்காவின் வெளியேற்றம் சொல்லுகின்ற செய்தி என்ன? இலங்கையில் குறிப்பாகத் தமிழர்களினதும் தாராண்மைவாதிகளினது…

  9. ராஜபக்‌ஷர்களின் சீரற்ற நிர்வாகமும் மக்கள் மீதான சுமையும் புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை அண்மிக்கின்றது. ஒவ்வொரு நாளும் 150க்கு மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவலின் முதல் அலையை, குறிப்பிட்டளவு வெற்றிகரமாகக் கையாண்ட அரசாங்கம், இரண்டாம் மூன்றாம் அலையின்போது, எதுவும் செய்யமுடியாதளவு தடுமாறுகின்றது. கொரோனா முதல் அலையில், நாட்டை முழுமையாக முடக்கி, பரவலின் தாக்கத்தை கட்டுப்படுத்திய அரசாங்கத்தால், இரண்டாம் மூன்றாம் அலைகளின் போது, நாட்டை ஏன் முழுமையாக முடக்க முடியவில்லை என்கிற கேள்வியை, வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் எழுப்பினர். கொரோனா இரண்டாம் அலையின் பரவலின் போதே, மூன்றாம் அலை இ…

  10. வக்சினே சரணம் ? நிலாந்தன்! September 5, 2021 “அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண. எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு எங்களால் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருக்காததால் மருத்துவநிபுணர்கள் தலைமை வகிக்க முடியாமல்போய்விட்டது” எனவும் எரான் தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் வைரசுக்கு எதிரான போராட்டமும் உட்பட நாட்டின் எல்லாத் துறைகளையும் ராணுவமய…

  11. ஆதிக்க சக்திகளினது நலனும் ஆப்கானிஸ்தான் விடுதலையும்-பா.உதயன் தலிபான்கள் ஆப்கானிஸ்தானையும் அந்த மக்களையும் விடுதலை செய்தார்கள் என்றால் ஏன் அந்த மக்கள் அவர்களை வரவேற்று வீதியில் இறங்கி கொண்டாடுவதற்கு பதிலாக அந்த மக்கள் தங்கள் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பல பெண் ஊடகவியலா ளர்கள், கலைஞர்கள், புத்தியீவிகள் பலர் அழுதபடியே தங்கள் இருத்தல் பற்றியும் அடிப்படை மதவாதிகளால் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கும் சரியா சட்டங்கள் பற்றியும் பயத்துடன் பேசுவதை ஊடகங்கள் ஊடக அறிகிறோம். அந்த மக்கள் வெறுக்கும் இந்த பஸ்தூன் தலிபான்களோடு எப்படி சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் சுய நலனோடு பல நாடுகள். இந்திய முன்னை நாள் நிதி அமைச்சரும் மூத்த அரசியல் வாதியுமாக இருந்து பல பயங்கரவாத…

  12. இந்த அன்ரி தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழும் எம்மவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் நடக்கும் சித்திரவதைகள் பற்றி நல்லா எடுத்தியம்பிறா!

  13. இலங்கை அரசின் இனப்படுகொலை மறுப்பு (வாதத்தி)ன் அரசியல் Photo: Dinuka Liyanawatta Photo, The New York Times இனப்படுகொலை புலமைத்தளத்தில் இனப்படுகொலையின் இறுதிகட்டமாக ‘இனப்படுகொலை மறுப்பு’ அமைகின்றது எனக் குறிப்பிடப்படுகின்றது (Genocide denial is the final stage of genocide). ஸ்ரான்லி கோஹைன் தன்னுடைய நூலில், ‘அரசுகளுடைய மறுப்பு : அட்டூழியங்களையும், துன்பப்படுத்தல்களையும் தெரிந்து கொள்ளல் – States of Denial: Knowing about atrocities and suffering (2001), மறுப்பு என்றால் என்னவென்பதை, ‘மறுப்பு என்பது இலகுவில் நழுவித் தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு சொற்பதம், அது பலவற்றைக் குறித்து நிற்கும் மறுப்புக்குரிய முறையான பாவனை அல்லது நடைமுறை என்பது, எப்போது நபர்கள் பார்வையாளர்…

  14. இழப்பிலிருந்து மீள்தல் என்.கே.அஷோக்பரன் கொவிட்-19 பெருந்தொற்றினாலான இறப்புக்கள் தினசரி 200 என்பதைத்தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் தினசரி 4000-ற்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டு வருகிறார்கள். இது நடத்தப்படும் பரிசோதனைகளின் அளவிலான தரவு மட்டுமே. தொற்று இலங்கையில் பரவத்தொடங்கியது முதல் இதுவரை ஏறத்தாழ நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றாளர்களாக அடையாங்காணப்பட்டுள்ளதுடன், இந்த பெருந்தொற்று இலங்கையில் மட்டும் இதுவரை எட்டாயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களை பலியெடுத்துள்ளது. “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” என்ற வள்ளுவன் வாக்கினை அன்றாட வாழ்வில் தினம் தினம் கண்ணூடாகக் காணும் நிலையை…

  15. சீனாவின் செல்நெறியில் திபெத்தை விளங்கிக் கொள்ளல் -நரசிம்மன் புனைகதைகளின் மூலம் ஏமாற்றி, காரியங்களைச் சாதிக்கும் முயற்சிகளில் ‘அழுங்குப்பிடி’யாகத் தொடர்வதையே, திபெத்தில் சீனாவின் செல்நெறியாகக் காணப்படுகின்றது. ஆனால், அந்தப்போக்கை எவரும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதிலும் கவனமாகக் காரியமாற்றுகின்றது. திபெத் ஒருபோதும் சீனப்பேரரசின் கீழ் இருந்ததில்லை என்பது, சீனாவுக்குத் தேவையான மறைக்கப்பட வேண்டிய உண்மை என்பதால், எவரையும் நம்பவைக்கும் விதத்திலும் மிக நேர்த்தியாகவும் ஆனால் தந்திரமாகவும் திபெத் குறித்து பல புனைகதைகள் கட்டியெழுப்பப்பட்டு இருக்கின்றன. வரலாற்றுக் காலம் முதற்கொண்டு, ஆதாரபூர்வமான பல உண்மைகள், தான்தோன்றித்தனமான முறையில், மறைத்தழிக்கும் வகையிலேயே இ…

  16. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரல் லக்ஸ்மன் யுத்தம் மிகக் கடுமையாக அடக்கப்பட்டதனால் மௌனமாகி 12 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் இன்னமும் நம்முடைய தமிழ் மக்கள் ஐக்கிய நாடுகள் தமக்குரிய நீதியை வழங்குவார்கள் என்ற ஏக்கமான எதிர்பார்ப்புடனேயே இருந்து வருகின்றனர். ஓவ்வொரு வருடத்தினது பெப்ரவரி மாதத்திலும், செப்ரம்பர் மாதத்திலும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தே இருப்பதும் ஆவல் உச்சம் பெற்றிருப்பதும் வழக்கம். அதே போன்றே மாற்றங்களும் ஏமாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதும் வழக்கமாகிவிட்டது. 2020இல் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராகக் கொண்ட புதிய அரசாங்கம் உருவாகி கடந்த பெப்பரவரி மாதம் வரையில் இலங்கையில் வெளிநாட்டமைச்சராக தினேஸ் குணவர்தன இருந்தார். செப்டெம்பர் மாதத்தில் பேராசி…

  17. மங்கள: இனவாத அரசியலின் லிபரல் முகம் புருஜோத்தமன் தங்கமயில் இலங்கையின் பௌத்த சிங்கள இனவாத அரசியல் களத்தில், ஒரு லிபரல் (தாராளவாத) முகமாக வலம் வந்த மங்கள சமரவீர மறைந்திருக்கின்றார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்தார். தெற்காசியாவில் அதிகம் நிகழ்வது போலவே, மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவால், மங்களவும் ஓர் அரசியல் வாரிசாக அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார். மங்களவின் மூன்று தசாப்தங்களைத் தாண்டிய அரசியல் வாழ்வில், மூன்று ஜனாதிபதிகளை உருவாக்குவதில் மூளையாக செயற்பட்டிருக்கின்றார். அதுபோல, மூன்று அரசாங்கங்களைத் தோற்கடிப்பதிலும் பங்களித்திருக்கின்றார். அதாவது, சுருங்கச் சொன்னால், அவர…

  18. தாலிபான் எப்படி உருவாகிறது? மின்னம்பலம்2021-08-30 ராஜன் குறை அமெரிக்கா இருபதாண்டுக் காலம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிலைநிறுத்தி “மக்களாட்சியை வளர்த்தெடுக்க” பெரும் முயற்சி செய்த பிறகு, நிரந்தரமாக அந்த நாட்டில் தங்கள் படைகள் தங்குவது வியாபாரத்துக்குக் கட்டுப்படியாகாது என்ற நிதர்சன உண்மையால் படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்தது. உடனே எந்த தாலிபானின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஆப்கானிஸ்தானை மீட்க அமெரிக்கா இருபதாண்டுகளுக்கு முன் படையெடுத்ததோ, அதே தாலிபான் “போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட” என்று உடனே மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. அமெரிக்கா நிறுவிய பொம்மை அரசின் தலைவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள். அமெரிக்கா முன்மொழிந்த மக்களா…

  19. இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் – நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் சீனாவிடம் அடைக்கலம் வைக்க முடிந்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில் பெரும் வெற்றி ஈட்டிய ராஜபசக்களின் செல்வாக்கு தற்பொழுது தேய்ந்து போய்க்கொண்டிருக்கின்றது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அந்நிய செலவாணியின் வீழ்ச்சி, என ஓட்டுமொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்துள்ளது. எரிபொருள், உரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. வெளிநாடுகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திணறுகிறது இலங்கை. இந்து சமுத்திரத்தின் ம…

    • 34 replies
    • 3.2k views
  20. போரும் வைரசும் ஒன்றல்ல! நிலாந்தன்! August 29, 2021 ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது ஒரு ராஜதந்திரி என்னிடம் சொன்னார் உங்களுடைய நாட்டில் மிக அடிமட்டம் வரையிலும் இறங்கி வேலை செய்யும் ஒரு சுகாதாரக் கட்டமைப்பு உண்டு.வீடுவீடாக வந்து நுளம்புப் பெருக்கத்திற்கான வாய்ப்புக்கள் உண்டா இல்லையா என்பதனை நுணுக்கமாக ஆராய்கிறார்கள்.இது ஒரு முன்னேற்றகரமான சுகாதாரச் செய்முறை என்று. உண்மைதான் இலங்கைத்தீவின் சுகாதார வைத்திய அதிகாரி (MOH)கட்டமைப்பு என்பது தனித்தன்மை மிக்கதாக வர்ணிக்கப்படுகிறது.மிகக் குறைந்த செலவில் மிகக் கூடுதலான வினைத்திறனோடு செயற்படும் ஒரு பொதுச் சுகாதார கட்டமைப்பாக அது போற்றப்படுகிறது.பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறையில் பரவிய…

  21. அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறதா? நிலாந்தன்! பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும் இந்தியாவின் முன்னும் ஐநாவின் முன்னும் தமிழ் மக்களின் முன்னும் பசில் நிறுத்தத்தப்பட்டிருக்கிறார். அரசாங்கம் எந்தெந்த முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அல்லது எந்தெந்த முனைகளில் இறங்கி வந்து சுதாரிக்க வேண்டி இருக்கிறதோ அந்தந்த முனைகளில் மாற்றத்தின் முகவராக பசில் இறக்கப்க்கப்பட்டிருக்கிறார். முதலாவதாக மேற்கு நாடுகள்.அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. நிதியமைச்சு வழங்கப்பட முன்பு அவர் அமெரிக்காவுக்கு போனார்.அங்கே அவருக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.