அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
அண்மையில் இந்தக் காணொளி கண்ணில் பட்டது. 2015 இல் ஐக்கியநாடுகள் சபையினால் இலங்கைதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று இந்திய ஆங்கிலமொழித் தொலைக்காட்சியொன்றில் நடந்தது. இதில் இந்தியாவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி பார்த்தசாரதி, தில்லி பேராசிரொயர் சகாதேவன், பத்திரிக்கையாளர் சாஸ்த்திரி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அடங்கலாக அனைவரும் போர்க்குற்அங்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தில் வாதிட, பார்த்தசாரதி மட்டும் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் வகையில் தாம் எதையும் செய்யக்கூடாதென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறான். இவன்போன்ற தமிழர்மேல் காழ்ப்புணர்வுகொண்ட பிராமணியர்களால் நாம் இவ்வளவுகால…
-
- 0 replies
- 795 views
-
-
அரசியல் தீர்வுக்கு இந்திய முன்மாதிரி By DIGITAL DESK 5 08 DEC, 2022 | 09:47 PM கலாநிதி ஜெகான் பெரேரா இனத்துவ சமூகங்களுக்கிடையிலான சர்ச்சைக்குரிய அதிகாரப்பரவலாக்கல் பிரச்சினைக்கான தீர்வின் ஒரு பகுதியாக மாவட்டசபைகளை பரிசீலிக்கலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தமிழ் சமூகத்தின் மத்தியில் கணிசமான கோபத்தை ஏறனபடுத்தியிருக்கிறது. தேசிய நல்லிணக்கச் செயன்முறையை துரிதப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி பேசுகின்ற நிலையில் இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. செலவினங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக மாகாணசபைகளின் கீழ் மாவட்டசபைகளை அமைப்பது குறித்து முனானாள் ஜனாதிபதி மைத்திரிப…
-
- 0 replies
- 795 views
-
-
‘சிஸ்டம் சேன்ஞ்’காரர்களும் தமிழ் மக்களும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கோட்டாபய ராஜபக்ஷவின் பிறழ்வாட்சியின் கீழ், நாடு அதளபாதாளத்தில் விழுந்து ஸ்தம்பித்து நின்ற போது, கோட்டாபயவை விரட்டியடிக்க, பொதுமக்கள் தாமாக வீதிக்கு இறங்கிப் போராடினர். இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சியாகும். இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை, அல்லது தலைவர்கள் என்று யாருமிலர். நாடெங்கிலும், ஆங்காங்கே மக்கள் தாமாகக் கூடி, தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மக்கள் போராட்டங்களையும் ‘அறகலய’ என்ற சொல்லையும் தாம் மட்டுமே குத்தகைக்கு எடுத்துள்ளதாக, தமக்குள் மிக ஆழமாக நம்பிக்கொண்டிருக்கும் இலங்கையின் இடதுசாரிக் கூட்டம், இந்த மக்கள் எழுச்சியை தம்முடையதா…
-
- 0 replies
- 795 views
-
-
சிறிலங்காவின் இன்றைய ஆட்சியை எல்லோரும் நல்லாட்சி என்றே அழைக்கிறார்கள். ஐநா மனித உரிமை ஆணையாளர் உற்பட அனைத்துலக இராஜ தந்திரிகளும் அவ்வாறே அழைக்கிறார்கள். ஆளுபவர்களும் அப்படியே தம்மை சொல்லிகொள்ளுகின்றனர். தமிழர்களும் அப்படியே அழைக்க பழகிவிட்டனர். நல்லாட்சி என்று அழைப்பதில் ஆளும் தரப்பிற்கும், அனைத்துலக தரப்பிற்கும் நன்மை இருக்கிறது, அதற்கான தேவையும் இருக்கிறது. ஆனால் தமிழர்களுக்கு என்ன இருக்கிறது? நல்லாட்சி என்பது வெறுமனே வரைவிலக்கணத்திற்கு ஊடாக அடையாளப்படுத்தப்படுகிற ஒன்றல்ல. மாறாக அது ஆட்சியின் நடைமுறைக்கூடாக, அதன் தன்மை, பண்புகளை மதிப்பீடு செய்வதன் ஊடாக அடையாளப்படுத்தப்படுகிற ஒன்று ஆனால் சிறிலங்காவை நல்லாட்சி என்று அழைப்பது மேற்சொன்ன மதிப்பீடுகளுக்கு ஊடாக வெளித…
-
- 0 replies
- 795 views
-
-
மகிந்த - அலோக் ஜோசி சந்திப்பின் பின்னணியில் மீண்டும் 'றோ' பற்றிய சர்ச்சைகள் யதீந்திரா இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பின் (Research and Analysis Wing (RAW or R&AW)) இயக்குனர் அலோக் ஜோசி (Alok Joshi) சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்திருந்தார். இதனை இந்து பத்திரிகை உறுதிப்படுத்தியிருந்தது. மகிந்த ராஜபக்ச, ஆலய வழிப்பாட்டுக்காக இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு, இந்தியாவிற்கு சென்றிருந்த வேளையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடந்த வருடமும் மகிந்த ராஜபக்ச இதுபோன்றதொரு ஆலயதரிசன விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட பலரையும் அவரால் சந்திக்க முடிந்திருந்தது. ஆனால் …
-
- 2 replies
- 795 views
-
-
துறவி இராச்சியமாகும் இலங்கை மஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார். மார்ச் 2013இல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றி அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசிடம் 19 ஆவது கூட்டத் தொடரில் கேட்டுக் கொண்டது. இந்தக் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஏப்ரல் 04 இல் இலங்கை நாடாளுமன்றில் விவாதம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறெனினும், கற்றுக் கொண்ட பாடங்களுக்க…
-
- 0 replies
- 795 views
-
-
முஸ்லிம் அரசியல்வாதிகள்: மக்களின் நிலைப்பாடு என்ன? மொஹமட் பாதுஷா / 2018 நவம்பர் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:49 Comments - 0 உலக அரசியல் அரங்கில், நாமறிந்த காலத்தில் கேள்விப்பட்டிராத அரசியல் திருப்பமொன்று, இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு திரைப்படத்தின் ‘கிளைமக்ஸ்’ காட்சி போல, அன்றேல் திருப்புமுனை போல, இந்த மாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த நகர்வுகள் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதும் அவை, முஸ்லிம்கள் மீது, எவ்வாறான விளைவுகளைக் கொண்டு வரப்போகின்றன என்பதும்தான் தெரியவில்லை. நல்லாட்சி அரசாங்கம், சாத்தியமான எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை, முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான…
-
- 1 reply
- 795 views
-
-
பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? December 12, 2022 — கருணாகரன் — எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக அடுத்த சில தினங்களில் அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது போலிருக்கு. தமிழ்த் தரப்பிலும் இதற்கான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் இதைப் பற்றிக் கூடிப் பேசுவது, பேச்சுகள் குறித்துப் பொதுவெளியில் உரையாடுவது, பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது என்று பச்சைக் கொடி காட்டியுள்ளன. ரெலோ இதில் இன்னும் முன்னுக்கு வந்து இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக – பேச்சுக்கு செல்லும்போது நாம் ஒரு பொறிமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று ரெலோவின் பேச்சாளரான சுரேந்திரன் கேட்டுள்ளார். “ஐ.நா.…
-
- 1 reply
- 794 views
-
-
மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்கள் - தமிழர் நிராகரித்தால் வெற்றி யாருக்குமேயில்லை 25 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிப் பதவியை ஏற்பதற்கான வாய்ப்பு? இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நியமிப்பதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கக்கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க இராஜாங்க திணைக்க…
-
- 0 replies
- 794 views
-
-
மைத்திரி; ராஜபக்ஷக்களின் முடிவு(?) மைத்திரிபால சிறிசேனவின் புதிய அவதாரம் ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்து வைத்திருக்கிறது. பெரும் ஆதரவோடும் ஆரவாரங்களோடும் ஆரம்பித்து கோலொச்சிய சாம்ராஜ்யங்களின் சோகமான முடிவுகளை உலகம் கண்டிருக்கிறது. இலங்கைக்கும் அப்படியான வரலாற்றுப் பக்கங்கள் உண்டு. அது, ஒவ்வொரு ஆரம்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு என்ற உலக நியதியின் அடிப்படைகளில் தோற்றம் பெறும் எண்ணம். ராஜபக்ஷ சாம்ராஜ்யத்திற்கும் அந்த நியதி பொருந்தும் என்று பலரும் நம்புகிறார்கள். உலக நியதி, எதிர்பார்ப்புக்களைத் தாண்டி இலங்கையின் பெரும்பான்மை அரசியல் சூழல் நம்பிக்கைக்கும், நம்பிக்கையீனத்துக்கும் மத்தியில் உழன்றுகொண்டிருக்கிறது. ஏனெனில், ராஜபக்ஷக்களின் மீது ந…
-
- 0 replies
- 794 views
-
-
-
- 6 replies
- 794 views
-
-
கஞ்சாக் கடத்தலும் வடக்கின் மனநிலையும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, மு.ப. 01:43 Comments - 0 கடந்த சில மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம்- கொழும்புக்கிடையில் அடிக்கடி பயணப்படும் நண்பரோடு, பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் போது, பேசிக் கொண்டிருந்தேன். அவரின் பயணப்பை முழுக்க, சிறிய பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது. பயணப்பையில் சில ஆடைகளைத் தவிர பெறுமதியான பொருட்கள் எதுவும் இருப்பது மாதிரித் தெரியவில்லை. அவ்வாறு இருக்க, இத்தனை பூட்டுகள் இந்த பயணப்பைக்கு ஏன் போட்டிருக்கிறார் என்று சந்தேகம்? அவரிடமே கேட்டேன். “...பாக்குக்குள் பெரிசாக ஒன்றும் இல்லை. சில உடுப்புகள்தான் இருக்கு. ஆனால், இப்ப வாகனங்களில் கஞ்சா கடத்திறாங்கள். அடிக்கடி பொ…
-
- 0 replies
- 794 views
-
-
பதின்மூன்று- ரணிலின் விளக்கத்தை நம்பிய இராஜதந்திரிகள் -அரசியல் தீர்வாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஏற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனை தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இருந்தாலும் பதின்மூன்று பற்றிப் பேச வேண்டும் என்று கூறிக் காலத்தைக் கடத்திவிடும் உத்திகளையே ரணில் கையாளுகிறார். இந்த ஆபத்தான அரசியல் பொறியை (Political Trap) உடைத்து தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தரப்புக்கே உண்டு. சஜித்துக்கும் ஜே.வி.பிக்கும் அந்தத் தேவை இல்லை- அ.நிக்ஸன்- …
-
- 0 replies
- 794 views
-
-
அமெரிக்காவுடன் அரசாங்கம் இறங்கிப் போக்க் காரணம் என்ன? அரசாங்கம் இந்தளவுக்கு இறங்கிப் போவதற்கு, அமெரிக்காவைப் பகைத்துக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று, மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்படப் போகும் விவாதம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் தமக்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிக் கொள்கின்றது.ஆனாலும் அமெரிக்காவின் செல்வாக்கை அரசாங்கம் அறியாதிருக்க முடியாது. இன்னொரு விடயம், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க இந்தவாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்கா பயணமாகவுள்ள ஜனாதிபதி, 23ம் திகதி பொதுச்சபையில் உரையாற்றுவார். இந்தக் கூட்டத்…
-
- 6 replies
- 794 views
-
-
1, அதிகார பரவலாக்கல் விடயத்திலும்; இந்தியாவின் பிடி எதிர்காலத்தில் இருகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்று ஊகிக்க கூடியதாக இருக்கிறது. 2.அதிகார பரவலாக்கமானது ஒரு வகையில் இந்தியாவுக்கு இலங்கையை கட்டுப்படுத்தும் ஆயுதமாகவும் இருக்கிறது. 3. அதிகார பரவலாக்கல் தொடர்பாக இந்தியா இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டு இருக்கிறது. தேவையெனில் இலங்கைக்கு நெருக்குதலை கொடுக்க இந்தியாவுக்கு அதையும்பாவிக்க முடியும். முறையான அதிகார பரவலாக்கலை எந்தளவிற்கு தட்டிக்கழிக்கலாம்? அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு ஐ.நா. மனித எரிமை பேரவையில் நிரைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின்படி இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளுமா என்பது இன்னமும் தெளிவில்…
-
- 1 reply
- 794 views
-
-
‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’; நல்ல நாடகம் காரை துர்க்கா / 2019 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:05 Comments - 0 ஒவ்வொரு தேசங்களும் தங்களது மக்கள் நலன் கருதி, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உலக வழமை. நம் நாட்டிலும் காலத்துக்குக் காலம், அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களைக் கவரக் கூடிய வகையில் வண்ணமயமான வார்த்தை ஜாலங்களுடன் அவை நடைமுறைக்கு வருகின்றன. அவற்றுக்கெனப் பொதுவான நோக்கங்கள் பல இருந்தாலும், தமிழர் பிரதேசங்களில் நடைமுறைக்கு வரும்போது, சில மறைமுக நோக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தன; கொண்டிருக்கின்றன; கொண்டிருப்பன என்பதே உண்மை. அந்த வகையில், மக்களின் பிரச்சினைகளை வினைதிறனான முறையில் இனங்க…
-
- 0 replies
- 793 views
-
-
-
அடுத்த வருடம் பெப்ரவரிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan நவம்பர் மாதம் 10ஆம் திகதி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இலங்கையின் உள்விவகாரங்களில், வெளியார் தலையீடு தேவையில்லை. நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் நிலுவையில் உள்ள சில பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில், அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த, சிறுபான்மையின கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். “அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தி, 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு, நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றி…
-
- 1 reply
- 793 views
-
-
நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதாக சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்த இலங்கை அரசாங்கம் அதனை அப்பட்டமாக மீறி வருகிறது. மனித உரிமை விடயங்களுக்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் சாவு மணி அடிக்கும் 20வது திருத்த சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் இலங்கையின் எதிர்காலம் அச்சம் நிறைந்ததாக இருக்க போகிறது என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் அவர்களின் எச்சரிக்கையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45வது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகியிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடுமையான பிரயாண கட்டுப்பாடுகளை சுவிட்சர்லாந்து அரசு விடுத்திருக்கும் நிலையில் மனித உரிமை பேரவையின் தலைவர் எலிசபெத் டிசி தலைமைய…
-
- 0 replies
- 793 views
-
-
பாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பாகும் பிணக்குகள் க. அகரன் பல்வேறு இனக்குழுமங்களுக்கு இடையிலான அரசியல் என்பது, நீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டு செல்வது போன்றதாகும். இத்தகைய அரசியல் செயற்பாட்டையே இன்றைய அரசியலாளர்கள் பல்வேறு கோணங்களில் செயற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றங்களும், அதனூடாக உருவெடுத்த இனரீதியான கருத்தியலும் இன்று மேலோங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டேயாக வேண்டும். வடபுலத்து அரசியலுக்கு அப்பால், கிழக்கிலங்கையில் மையம் கொண்டுள்ள இனரீதியான அரசியல்போக்குகள், ஆரோக்கியமற்றதும் இனரீதியான விரிசலைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டனவாகவுமே காணப்படுகின்றன.…
-
- 0 replies
- 793 views
-
-
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு என்ற அறிவிப்பு- தமிழரசுக் கட்சியை பகிரங்கமாகக் கண்டிக்கத் தயங்கிய மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள் பொது மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்காமல் கட்சிகளுடன் பேசியமை சரியான அணுகுமுறையா? 1 2 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது ஆசிரியபீட அங்கீகாரம் மொழி திருத்திய பதிப்பு …
-
- 0 replies
- 793 views
-
-
துரோகம் - 20 அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமென நாம் எதிர்வு கூறியிருந்தோம். 'பிராயச் சித்தம்' என்கிற தலைப்பில் கடந்த 29ஆம் திகதியன்று எழுதிய கட்டுரையிலேயே அதை கூறியிருந்தோம். அது அப்படியே நடந்திருக்கிறது. 20ஆவது சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் நடத்தப்படவிருந்த வாக்கெடுப்பை இரண்டு முறை ஒத்தி வைத்த பின்னர், தமக்குத் தோதான ஒரு தருணத்தில் 20ஐக் களமிறக்கி, முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் வென்று கொடுத்துள்ளார். எந்தவொரு மாகாண சபையிலும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பித்து வாக்கெடுப்பொன்றை நடத்துவது தொடர்பில், இத்தனை இழுத்தடிப்புகள் இடம்பெறவில்லை. ஆனால், கிழக்கு மாகாண …
-
- 0 replies
- 793 views
-
-
நிகழ வேண்டிய வழி June 17, 2024 — கருணாகரன் — ‘இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகி விட்டது. அங்கே இப்போது மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லது அமைதியாக வாழக்கூடியதாக இருக்கும்’ என்ற எண்ணமே பொதுவாக உலகப் பரப்பில் உண்டு. யுத்தம் முடிந்தது உண்மைதான். ஆனால், யுத்தத்திற்குக் காரணமான இனமுரணும் இனப்பிரச்சினையும் முடிவுக்கு வரவில்லை. அது இன்னும் கொதிநிலையிலேயே உள்ளது. அதை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது அரசு. ஏனென்றால், இனவாதத்தில்தான் அரசுக் கட்டமைப்பே நிறுவப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளைப் பேசும் நான்கு இன மக்களைக் கொண்ட சின்னஞ்சிறிய நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்திருக்கிறது என்றால் இதை எப்படி விளங்கிக் கொள…
-
- 1 reply
- 792 views
-
-
மாலைதீவு 'அமைதி புரட்சி'யில் வென்றது இந்திய 'சாணக்கியமே' இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலைதீவில் அரங்கேறிய 'அமைதி புரட்சி'யின் காரணமாக அங்கு 'அதிரடி' ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இலங்கையை போன்றே நமது நாட்டின் கடல்வழி பாதுகாப்பிற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மாலைதீவும் முக்கியமான ஒரு நாடு. அதிலும் குறிப்பாக, கிட்டத்தட்ட நாலு லட்சம் மக்கள் தொகையே உள்ள மாலைதீவில் பரந்து விரிந்து கிடக்கும் 1190 தீவுகளில், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினர்; மட்டுமே பிரஜாவுரிமை பெறமுடியும். மேலாக உள்ள ஒரு லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள். முன்பு இலங்கையை சேர்ந்த அலுவலர்களும் பெருகிய வண்ணம் இருந்தனர். சுமார் …
-
- 0 replies
- 792 views
-
-
-
- 3 replies
- 792 views
-