அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
நெருக்கடியிலும் நாட்டை படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடியில், சிங்கள - பௌத்த பேரினவாதத்துக்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும், அது, தீர்வை நோக்கிய திசைவழியில் இன்றுவரை ஏன் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்டாக வேண்டும். மக்கள் உணவுக்கும் எரிபொருளுக்கும் அல்லாடுகையில், முல்லைத்தீவில் வட்டுவாகல் கடற்படைத் தளத்துக்காக மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி, சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அது, மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி உச்சம் பெற்ற பின்னர், இடம்பெறும் முதலாவது நிகழ்வு இதுவல்ல. இது, இறுதி நிகழ்வும் அல்ல! இலங்கை அரசாங்கம் எதிர்கொ…
-
- 0 replies
- 285 views
-
-
இலங்கையின் பயங்கரவாதத்துக்கு பலிக்கடா தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகம் 'FB' என்ற சஞ்சிகையில் ஆங்கிலத்தில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. இலங்கையில் தமிழர்களின் அரசியல் நிலைவரங்களை அம்பலப்படுத்தும் கட்டுரைகளை வரைந்தமைக்காக இருபது ஆண்டு காலச் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸநாயகம் 2010 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் வாஷிங்டனில் அஞ்ஞாதவாசம் புரிந்துவருகின்றார். தமிழாக்கம் :- வி.சிவராம். தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் துணைத் தூதரகங்களைத் தாக்கும் இலக்குடன் சதித்திட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று கருதப்படும் இலங்கையர் இருவர் இந்தியாவிலும் மலேசியாவிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்டமையை அடுத்து, இந்தியாவைத…
-
- 0 replies
- 489 views
-
-
கூட்டமைப்பின் தேர்தல் இலக்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவுக்கு வருகின்றன. அதன் பின்னரான 55 மணித்தியால இடைவெளி என்பது, வாக்களிப்புக்கு முந்தையை பகுப்பாய்வுக் காலம். அதன்போது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வழங்கிய வாக்குறுதிகளுக்கான அர்ப்பணிப்பு, நடைமுறை அரசியலை வெற்றிகொள்வதற்கான சமயோசிதம் மற்றும் தகுதியான வேட்பாளர்கள் உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க முடியும். ஆனால், இந்த விடயங்கள் பெரும்பாலும் கட்சிகளின் ஆ…
-
- 0 replies
- 594 views
-
-
புலம்பெயர் தமிழர்களும் இலங்கை அரசின் தந்திரம்-பா .உதயன் பல ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை முதலில் விடாமல் தொலைந்து போன தமிழ் மக்களுக்காய் இன்று வரை ஒரு நீதியை வழங்காமல் வட கிழக்கில் ஆக்கிரமித்து இருக்கும் இராணுவ முகாம்களை அகற்றாமல் தமிழர் அரசியல் தீர்வுக்கான எந்த வித கரிசனையும் இல்லாமல் புலம் பெயர் சில அமைப்புகளையும் சில தனி நபர்களையும் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறதாம் இலங்கை அரசு. தடையை நீக்குவதும் பின் தடையை போடுவதுமாக தங்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்துவதுமாக ஓர் இனவாத போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. இந்த இனவாத சிந்தனைப் போக்கினால் தான் இலங்கை இன்று இவ்வளவு…
-
- 0 replies
- 286 views
-
-
வன்முறையின் பின்னணி என்ன? நல்லாட்சி அரசாங்கம் மிக மோசமான நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் அடைந்த பின்னடைவு, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஆப்பு வைக்கும் வகையில் நிலைமைகளை மோசமடையச் செய்தது. ஊழல், மோசடிகளைக் காரணம் காட்டி, பிரதமரைப் பதவி இழக்கச் செய்யும் வகையில் நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்தகைய அரசியல் நிலைமையை சரிசெய்து, ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த சூழலிலேயே அம்பாறையிலும். அதனைத் தொடர்ந்து கண்டி பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவி…
-
- 0 replies
- 859 views
-
-
சவூதி அரேபியாவின் யுத்தமும் பிரித்தானியாவின் பொருளாதாரமும் - ஜனகன் முத்துக்குமார் சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மானின் பிரித்தானியாவுக்கான அண்மையில் விஜயம், பல்வேறு வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இராஜதந்திர, வர்த்தக உறவுகளைத் தவிர, இங்கிலாந்திடம் இருந்து 48 டைஃபூன் போர் விமானங்கள் வாங்குவதற்கு, ஆரம்ப ஒப்பந்தமொன்றில் சல்மான் கையெழுத்திட்டிருந்தார். குறித்த ஒப்பந்தமானது, மேற்கத்தேய ஆதரவுடைய ஆயுத உற்பத்தியாளர்கள், பாரசீக வளைகுடாவின் அரேபியப் பிராந்திய ஆயுதச் சந்தைகளைக் கைப்பற்றப் போராடும் நிலைமையைக் காட்டுவதுடன், இது மேலதிகமாக ஏற்கனவே சிக்கல் நிலையில் உள்ள அரேபிய, வடஆபிரிக்க போரியல் நிகழ்வுகளுக…
-
- 0 replies
- 465 views
-
-
முஸ்லிம்களும் அரசியல் சூதாட்டமும்! சஹாப்தீன் முஸ்லிம் கட்சிகள் மற்றுமொரு அரசியல் சூதாட்டத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது, உள்ளூராட்சி சபைகளின் தேர்தலையடுத்து தற்போது மாகாண சபைத் தேர்தலுக்குரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளன. முஸ்லிம் கட்சிகள் காலத்திற்கு காலம் வரும் தேர்தலை எதிர்கொள்வதற்கானதொரு கருவியாக மட்டுமே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் தேர்தல்…
-
- 0 replies
- 444 views
-
-
டெனிம் ஜீன்ஸ்: சொல்ல வேண்டிய கதைகள் உலக அரசியல் கட்டுரைக்கும் டெனிம் ஜீன்ஸ்க்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கக் கூடும். இக்கட்டுரை, நாம் அறியவேண்டிய நுண்ணரசியலின் சில பக்கங்களையும் எமது சமூகப் பொறுப்பு சார்ந்த கேள்விகளையும் எழுப்ப முனைகிறது. இன்று ஆண்கள், பெண்கள் என அனைவரினதும் ஆடையாக இருப்பது டெனிம் ஜீன்ஸ். அவ்வகையில், மேற்குலக ஆடையின் குறியீடாக, அதைக் கொள்ளவும் இயலும். டெனிம் எனப்படும் நீலநிற காற்சட்டையின் கதை, கொஞ்சம் சுவையானது. 1700ஆம் ஆண்டுகளில், தடித்த கம்பளியால் குளிரைத் தாங்குவதற்காகச் செய்யப்பட்ட காற்சட்டைகளானவை, பிற்காலத்தில் கம்பளியும் பருத்தியும் கலந்து செய்யப்பட்டன. …
-
- 3 replies
- 537 views
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு அலை! Veeragathy Thanabalasingham on April 12, 2023 Photo, SELVARAJA RAJASEGAR – கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நாஜி சிந்தனைகளையும் தீவிர வலதுசாரி இயக்கங்களையும் ஆதரித்தவரும் பிறகு ஹிட்லரின் ஆட்சி புரட்டஸ்தாந்து திருச்சபையில் செய்த தலையீடுகளை வெளிப்படையாகக் கடுமையாக எதிர்த்தமைக்காக சிறையிலும் சித்திரவதை முகாமிலும் அடைக்கப்பட்டவருமான ஜேர்மனிய போதகர் மார்ட்டின் நிமொல்லர் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு கூறிய வார்த்தைகள் இவை. பயங்கரவாதத் தடைச்சட்டம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக குறிப்பாக நான்கு தசாப்தங்களுக்கு அதிகமான காலமாக தமிழர்களுக்கு எதிராக கொடூரமான மு…
-
- 0 replies
- 322 views
-
-
நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் ஜனநாயகத்துக்கு தேர்தல்கள் தேவை October 18, 2023 — கலாநிதி ஜெகான் பெரேரா — நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக வெளியான செய்தி திடீரென்று தேர்தல் செயன்முறையில் அக்கறையை தோற்றுவித்திருக்கிறது. அடு்த்த வருடம் நடத்தப்படவேண்டிய ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிகமான வாக்குகளைப் பெறப்போவதில்லை என்ற ஒரு அச்சவுணர்வும் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் எமது அயல்நாடான மாலைதீவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது சதவீத வ…
-
- 0 replies
- 195 views
-
-
“மகாவம்சம்” மூல நூல் இலங்கையின் பண்டைய இதிகாசம் தொடக்கம் கி.பி 301 வரையான மாகாசேனன் மன்னரின் காலப்பகுதிவரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அது; முதல் 36 அத்தியாங்களைக் கொண்டது. 37வது அத்தியாயத்தை அவர் எழுதிக்கொண்டிருக்கும் மகாநாம தேரர் போது மரணமாகிவிட்டார். அது 50 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் “அத்தியாயம் நிறைவுற்றது” என்று குறிப்பிட்ட அவர் 37வது அத்தியாயத்தில் அப்படி குறிப்பிடாததால் அவர் அந்த அத்தியாயத்தை முடிக்கவில்லை என்றும் தொடரவிருந்தார் என்றும் பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன. 2வது தொகுதி 2வது தொகுதி கி.பி 301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியைப் பதிவு செய்க…
-
- 0 replies
- 2.1k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்! நிலாந்தன். அண்மையில் ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த சில தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் இணைந்து புதுடில்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள்.அச்சந்திப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள். அச்சந்திப்புகளில் தாயகத்திலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு ஆதீனத் தலைவரும் பங்கு பற்றினார்கள்.காவியுடை அணிந்த ஒரு ஆதீன முதல்வரைக் குழுவுக்குள் உள்ளடக்கியதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை மேலும் நெருங்கலாம்,அதன் மூலம் இந்தியாவின் ஆளுங்கட்சியாகிய பாரதிய ஜனதா கட்சியின் முடிவுகளில் தாக்…
-
- 0 replies
- 336 views
-
-
மகிந்த வடிக்கும் நீலிக் கண்ணீர்!! பதிவேற்றிய காலம்: Apr 11, 2019 கூட்டமைப்பு அரசைப் பாதுகாப்பதாகவும் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதையுமே செய்வதில்லையெனவும் முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்ச. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு அவர் இதுவரை என்ன செய்திருக்கிறார்? என்பதை அவர் ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. தமிழர்களுக்கு எதையும் வழங்கி விடக்கூடாது என்பதில் மகிந்த தீவிரமாக உள்ளார். புதிய அரசமைப்பின் உருவாக்கம் அடிப்பட்டுப் போனதற்கும் இவரே முதன்மைக் காரணம். இத்தகைய ஒருவர் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டுவதைப் …
-
- 0 replies
- 1.2k views
-
-
பாகம் - 01 சம்பந்தரின் சாவின் செய்திக் கனதியைக் கூட சர்வதேச மட்டத்தில் தவிடு பொடியாக்கி தலைப்புச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் அர்ச்சுனா என்ற வைத்திய அத்தியட்சகரும் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள். கடந்த மாதம் மத்திய சுகாதார அமைச்சின் நியமனத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்படுகின்றார். அதுவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையை கவனிப்பதற்காக பதில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் மாகாண சபை நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆதார வைத்தியசாலைக்குரிய பொறுப்பு அந்த வகையில் நாடு முழுவதும் காணப்பட்ட ஆதார வைத்தியசாலைக்குரிய பொறுப்பு வைத்திய அதிகார…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
நல்லிணக்கத்துக்கான வழி அரசியல் கைதிகளின் விடுதலை மறந்து போன விவகாரமாக மாறிவிட்டது போலத் தோன்றுகின்றது. அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்ப தாகப் பல தடவைகளில் வாக்குறுதி அளித்திருக்கின்ற போதிலும், அதனை முடிவுக்குக் கொண்டு வருவதில் அக்கறையற்ற ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பதே அரசாங்கத்தினதும், பேரின அரசியல் வாதிகளினதும் நிலைப்பாடாகும். ஆனால் உண்மையில் அவர்கள் பயங்கரவாதிகளல்ல. அவர்கள் அரசியல் கைதிகள். இதனையே அந்தக் கைதிகளும், தமிழ்த் தரப்பினரும் அரசாங்கத்திடம்…
-
- 0 replies
- 878 views
-
-
மீனவர் பிரச்சினை திட்டமிட்டு மேற்கொள்ளும் ஒரு சதி! - மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்ஸன்!
-
- 0 replies
- 291 views
-
-
அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 15 மாதிவெலயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து, கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில இறுவட்டுகள் தான், இன்று நாட்டின் பிரதான பிரச்சினை என்று கூறுமளவுக்கு, அவை ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பெண்கள் ஆகியோருடன், ராமநாயக்க தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் நடத்தியதாகக் கூறப்படும் உரையாடல்களே, இந்த இறுவட்டுகளில் உள்ளன எனக் கூறப்படுகிறது. இந்த உரையாடல்கள் மூலம் அவர், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
அநியாயமோ, அறியாமையோ? ஆனால், அடக்கப்பட வேண்டியது காரை துர்க்கா கொரோனா! கொரோனா!! இந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை. அடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ். இவ்வாறாக, முழு உலகத்தையுமே கொரோனா வைரஸ் உரு(புர)ட்டிப் போட்டு விட்டிருக்கின்றது. அறிவியல் ரீதியாகப் பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்கார நாடுகள், இன்று கண்டுபிடிக்க முடியாத, கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மல்லுக்கட்டி வருகின்றன. புதிய சட்டங்கள், புதி…
-
- 0 replies
- 930 views
-
-
நாவற்குழி மாதகல் முகநூல் + தமிழ்நெட்
-
- 4 replies
- 741 views
-
-
[size=4] -கே.சஞ்சயன் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையில் முதன் முதலாக 109 தமிழ்ப் பெண்கள் கடந்தவாரம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள பாரதிபுரத்தில் நிலைகொண்டுள்ள 6ஆவது பெண்கள் படைப்பிரிவில், இவர்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்வதற்கான நிகழ்வு பெருமெடுப்பிலான பிரசாரங்களுடன் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றது. வன்னியில் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பின் மூலம் 18 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்ட 350 பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, அதில் 240 பேர் மருத்துவ சோதனைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டனர். மருத்துவ சோதனைகளிலும் தேறிய 109 பெண்களே கடந்தவாரம் தொண்டர் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை இலங்கை இராணுவத்தின் பெண்கள் படைப்பரிவில் தமிழ்ப் பெண்கள் எ…
-
- 7 replies
- 1.1k views
-
-
எழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது! - எழுத்தாளர் குணா கவியழகன் நேர்காணல் எழுத்தாளர் குணா கவியழகன் நேர்காணல் 'எழுக தமிழ்' நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது. இந்தப் புள்ளி தான் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ள பேரப்புள்ளி. எழுக தமிழால் பெற்ற பேரப்புள்ளி. இதனைக் கூட்டமைப்பு சரியான முறையில் தமிழ் மக்களின் நலன் கருதிப் பிரயோகிக்க வேண்டும். இது தரக்கூடிய விளைவில் இருந்துதான் 'எழுக தமிழ்' செயலை விளக்க வேண்டும் என எழுத்தாளர் குணா கவியழகன் தெரிவித்துள்ளார். 'எழுக தமிழ்' நிகழ்வு தொடர்பிலும் தற்கால அரசியல் போக்குகள் குறித்தும் பொங்குதமிழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இணக்க அரசியல் என்பது இருதரப்பிற்கும் உள்ள …
-
- 0 replies
- 466 views
-
-
தமிழர்கள் மீது உளவியல் யுத்தம்: தப்புவது எப்படி?
-
- 1 reply
- 567 views
-
-
சர்ச்சையைக் கிளறிய சீனத்தூதுவர் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் முக்கியமானதொரு கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில், இருதரப்பு இராஜதந்திர உறவுகளில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்பட்டிருக்கின்றது. சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் கடந்த முதலாம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர்கள் குழுவொன்றுடன் நடத்திய சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்களே இந்த நிலைமைக்கு முக்கியமான காரணமாகும். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீனத் தூதுவர் அளித்திருந்த பதில்கள், சீனாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு அப்பால் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் தொனியையும், கேள்வி எழ…
-
- 0 replies
- 469 views
-
-
கொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம் 31 Views கோவிட்-19 கொள்ளை நோய் தீவிரமடைந்துள்ளது. அதன் தொற்றுப் பரவலைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்த முடியாமல் இலங்கை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இராணுவத்தை முதன்மை நிலையில் பயன்படுத்தி கடந்த மார்ச் மாதம் ஏற்பட்டிருந்த நோய்த்தொற்றின் முதலாவது அலையை அரசு வெற்றிகரமாகக் கையாண்டிருந்தது. அது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியானது என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டி இருந்தது. இதனால் சினிமா கதாநாயகனைப் போன்று, ஜனாதிபதி கோத்தாபாய அரசு இறுமாப்புடன் கொலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. குறிப்பாக ஒக்டோபர் மாதத்தில் கொரோனா …
-
- 0 replies
- 377 views
-
-
இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் 1965ல் மாணவர் போராட்டம் வெடித்தது. 'மதுரையில் இரண்டு நாட்களில் அறுபத்து மூன்று முறை தடியடி நடத்தினேன்' என்று ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் சொன்னது போல அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் பெருமிதத்துடன் சொன்னார். அன்றைய மொழிப் போர்க் கிளர்ச்சி மூன்று விபரீதமான நகர்வுகளை இந்திய அரசிடம் உருவாக்கியது. 1. இந்திய விடுதலைக்குப் பிறகு, மாநிலங்களில் நுழைந்திராத (காஷ்மீர் தவிர) இந்திய ராணுவம், முதன் முதலாக தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டது. ராணுவத்தின் கரகரத்த பூட்ஸ் ஓசையை தங்களது சொந்த பூமியில் தமிழக மக்கள் கேட்டனர். 2. முதன்முதலாக தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் தணிக்கை செய்யப்பட்டது. அஞ்சல் நிலையம் ஒவ்வொன்றும் …
-
- 0 replies
- 803 views
-