நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
கல்வியில் வீழ்ச்சியுறும் வடக்கு, கிழக்கு: பரிகாரம் என்ன? வ. திவாகரன் ஒரு சமூகத்தின் இருப்பு, அபிவிருத்தி ஆகிய இரண்டுக்கும் மிகவும் முக்கியமானது கல்வி ஆகும். இழந்தவற்றை வென்றெடுப்பதற்கும், போட்டி இட்டு முன்னேறுவதற்குமான ஊடகம் கல்வியே! இலங்கையில் அமல்படுத்தப்பட்டு வரும் இலவசக்கல்வியால் அனைத்துத் தரப்பினரும் கற்க கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இவ்வாறான இலவசக் கல்விமுறைமையின் கீழ், மாணவர்களுக்கு தேசிய ரீதியில் பொதுப்பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, உயர் தரப் பரீட்சை போன்றவை முக்கியமான பரீட்சைகளாகும். இவற்றுள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொடுப்பனவு மற்றும் தேசிய பாடசாலைகளில் கற்…
-
- 10 replies
- 1.5k views
-
-
பின் நிலைமாறுகால நீதியும் தமிழினப் படுகொலையும் - அருட்தந்தை எழில் றஜன் யே.ச. 31 டிசம்பர் 2013 ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரை:- திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில் பேருவகை அடைகின்றேன். மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபகார்த்தக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பன் எவ்வாறு தனது இயலாமையை இராமாயணத்தின் ஆரம்பத்திலேயே எடுத்தியம்புகிறானோ அவ்வாறு நானும் இப்பேருரையை ஆற்ற அரசியலில் பழுத்த பேராசான்கள் முன் நிற்கின்றேன். அரசிய…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்? ஆர்.ராமகுமார் தமிழில்: வ.ரங்காசாரி கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது இலங்கைப் பொருளாதாரம். இப்போதைய நெருக்கடிக்குக் காரணங்கள் என்ன, இத்தகு நிலையை நோக்கி அதைத் தள்ளியவர்கள் யார்? இதையெல்லாம் அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். இந்த நெருக்கடிக்கான மூல காரணத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இலங்கை காலனியாக இருந்த காலகட்டத்திலிருந்தும், உள்நாட்டுப் போருக்குப் பிறகும்கூட நாட்டின் வளர்ச்சி முயற்சிகளில் நடந்த தவறுகள் வரையிலும் எழுதலாம் என்றாலும், நம்முடைய தேவைகளுக்காக, கடந்த பத்தாண்டுகளில் இலங்கை அரசு எடுத்த முடிவுகள் - நடந்த சம்பவங்கள் பற்றி மட்டும் அதிகக் கவனம் செலுத்துவோம். 21ஆம் நூற்ற…
-
- 0 replies
- 339 views
-
-
இந்தியாவின் மாய வலை! பொறிக்குள் சிக்கிய இலங்கை.... Courtesy: ஜெரா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சொல்வதைப் போல இந்தப் பொருளாதாரச் சரிவானது இலங்கையில் நிலவிய போரின் விளைவுதான். அதாவது இலங்கையும் இந்தியாவும் இணைந்து தமிழர்களது மரபார்ந்த தாயகப் பிரதேசங்களை அழிக்க மேற்கொண்ட போரின் விளைவுதான் இது. மகாவம்ச மனநிலையின் கூட்டு வெளிப்பாட்டு இலங்கை அரசிற்கு இயக்கமான இலங்கை அரசிற்கு வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை முற்றாக அழித்து அதனை சிங்கள தேசமாக மாற்றிக்கொள்ள் வேண்டிய தேவை இருந்தது. இராமனின் தேசமென ஐதீகமயப்படுத்தி வைத்திருக்கும் இலங்கை தேசத்தை, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் தனது 26 ஆவது மாநிலமாக மாற்றிக்கொள்ள வேண்டிய த…
-
- 0 replies
- 228 views
-
-
2019 தேர்தல் பிரசார வியூகத்தை மாற்றுவாரா பிரதமர் நரேந்திர மோடி? எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 17 திங்கட்கிழமை, பி.ப. 09:33 ஐந்து மாநில தேர்தல்கள், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க.) அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஐந்திலும் ஆட்சி அமைக்க முடியாமல், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில், பா.ஜ.க தவித்தாலும், “வட இந்தியாவின் இதயம்” என்று சொல்லப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாமல் போனமை மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கிறது. தேர்தல் முடிவுகள், சற்று பா.ஜ.கவுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில், ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மிக அருகில்…
-
- 0 replies
- 359 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 1 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 ஏப்ரல் 2024 கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும் தி.மு.கவும் தாரை வார்த்திருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், தி.மு.கவும் காங்கிரசும் இதனை மறுக்கின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? இந்தியா - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது கருணாநிதி என்ன செய்தார்? இனி மீட்க முடியுமா? கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இருநாடுகளிடையே என்ன நடக்கிறது? கச்சத்தீவை மீட்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்து இலங்கை அமைச்சர் அளித்த பதில் என…
-
- 3 replies
- 855 views
- 1 follower
-
-
ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு – சவுதி பட்டத்து இளவரசர் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜமால் கஷோக்கி கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்றபொழுது கொல்லப்பட்டார். இதற்கு சவுதி அரேபிய இளவரசர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சவுதி அரேபியா மறுத்து வந்தது. கஷோக்கி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றஞ்சாட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் க…
-
- 3 replies
- 574 views
-
-
நுவரெலியா மாவட்டத்தில் முதன்மை மொழி தமிழ் இலங்கையின் அரசியலமைப்பின்படி தமிழ்மொழி பெற்றுள்ள அந்தஸ்துகள் எவை என்பதும், நமது தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தும் சட்டபூர்வ உரிமை எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தும் விதிமுறைகளடங்கிய பெறுமதி வாய்ந்த சட்டநூலாகும். அதிலுள்ள விதிகளை அப்படியே கடைப்பிடித்து செயற்படுத்த வேண்டுமேயன்றி அதனை மீறிச் செயற்படுவதோ, புறக்கணிப்பதோ சட்டப்படி குற்றமாகக் கருதப்பட வேண்டும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழியுரிமை தமிழைப் பொறுத்தவரை தொடர்ந்தும் மீறப்பட்டே வருகின்றது. தட்டிக் கேட்போர் எவருமற்ற நிலையே காணப்படுகி…
-
- 0 replies
- 501 views
-
-
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற கையோடு இலங் கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதியைச் சந்தித் துக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும் என்றும் பிரதமர் மோடி எடுத்துரைத்திருந்தார். இதன்போது அமைதிகாத்த ஜனாதிபதி கோட்டாபய; இந்துப் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில், 13ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது என்றும் குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரத்தை வழங…
-
- 13 replies
- 1.7k views
-
-
உறுதி என்ற பதத்திற்கு இரும்பை ஒப்பிடுவார்கள். ஆனால் அதன் புரிதலில் நம்மவரில் பலருக்குச் சரியான விளக்கம் இன்றிய நிலையிருக்கும் என்றால் அதில் மிகையில்லை. ஏனெனில் எவ்வகை இரும்பானாலும் சில காலம் அது ஒரே இடத்தில் இருப்புக்கொள்ளுமாயின் அது துருப்பிடித்து மண்ணோடு மண்ணாகி விடும் என்பதே காலம் சொல்லும் கதை. அவ்வாறிருக்கையில் எவ்வாறு உறுதியை இரும்புக்கு ஒப்பிடுவது என்ற கேள்வி நம்மனத்தைக் குடையாமல் இல்லை.உண்மை என்னவெனில்; இரும்பு; ஒருபோதும் அதன் கனத்திற்காக உறுதியோடு ஒப்பிடப்படுவதில்லை. இரும்பானது, துருப்பிடித்து மக்கிப் போகும் இறுதிக்கணம் வரையிலும் அது இரும்பாகவே இருந்து அழிந்துபோகும், வேறு எந்தப்பொருளும் இறுதிவரை இரும்பைப்போல வாழ்வதில்லை என்பதாலேயே, இரும்பை ஒத்த மனவுறுதி வ…
-
- 0 replies
- 711 views
-
-
ஒருவர் எவ்வளவு படித்தவராகவும் செல்வாக்கு கொண்டவராகவும் திகழ்ந்தாலும் தனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். கண்டால் மரியாதை செலுத்தத் தவறவும் மாற்றார்கள். சில விஷயங்கள் மாற்றம் அடைவதில்லை. ஆசிரியருக்கு கனம் பண்ணுவதும் இவ்வாறே சங்க கால முதல் நம்மிடையே நீடித்து வந்துள்ளது. இதற்கு ஒரு சமீபத்திய உதாரணமும் உண்டு. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சமீபத்தில் கிழக்கு மாகாணம் சென்றிருந்தபோது தனக்கு றோயல் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியரைக் கண்டு அவரை கௌரவப்படுத்தி வந்திருக்கிறார். அந்த ஆசிரியர் பெயர் சிவலிங்கம் மாஸ்டர். அது பற்றி அவரிடம் பேசுவதற்காக பெரிய கல்லாற்றில் அமைந்துள்ள சிவலிங்கம் ஐயாவின் வீட்டிற்குச் சென்றோம்.பொக்ைக வாய், கபடமற்ற புன்…
-
- 0 replies
- 640 views
-
-
ராஜீவ் காந்தியின் ‘ஆவியை’ அடிக்கடி தட்டியெழுப்பி, தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இடைவிடாது ஊறு விளைவித்து வரும் டில்லி அதிகார வர்க்கம் தனது அடுத்த இலக்காக ‘ஈழம்’ என்ற சொற்பதம் தமிழகத்தில் கையாளப்படுவதை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ‘தமிழீழம் எனது நிறைவேறாத கனவு... அது நாளை நிறைவேறாது போனாலும் நாளை மறுதினமாவது நிறைவேறும்’ என்று கூறி இருபத்தாறு ஆண்டுகளாக புதைகுழியில் செத்துக்கிடந்த டெசோ அமைப்பைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிர்த்தெழ வைத்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி, அதே வேகத்தில் ‘அந்தர்’ பல்டி அடித்து ‘தமிழீழத்தை நிறுவுவது டெசோ அமைப்பின் நோக்கம் அல்ல’ என்று அறிவித்து ஒரு சில நாட்கள் கடப்பதற்குள் ‘ஈழம்’ என்ற சொற்பதத்திற்கு சாவுமணியடிக்கும் முயற்சியில்…
-
- 0 replies
- 613 views
-
-
யார் இந்த சோனியா காந்தி ? சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்... மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான். இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம். உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige An…
-
- 8 replies
- 1.8k views
-
-
நான்அவர்களைக் கொன்று விட்டேன்" அமெரிக்க தூதுவர் இப்போது அதிர்ச்சியளிப்பது ஏன்? "நான்அவர்களைக் கொன்று விட்டேன்" என்று சரணடைந்ததவர்கள் பற்றி கோட்டபாய ராஜபக்ச 2012 இல் தன்னிடம் சொன்னதாக அமெரிக்க சிறப்புத் தூதுவர் இப்போது சொல்கிறார். முன்னாள் ஐ.நா துணைச்செயலாளர் ஐநாவுக்கு போதிய உறுதிப்பாடு இல்லை இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு என்கிறார். இவற்றின் பின்னான அரசியல் என்ன? குணா கவியழகன்
-
- 5 replies
- 789 views
-
-
அடித்த பணத்தில் 25,000 கோடி இலங்கையில் முதல் இட, ஜெகத்ரட்சகன் முயன்றார். இவர்கள், பெரும் ஊழல்வாதிகள். துரைமுருகன் என்னும் வயதான ஊழல் வாதி, தான் உதயநிதி முதல்வராகும் போதும் அமைச்சரவையில் இருப்பாராம்.
-
- 9 replies
- 1.4k views
-
-
அழகிய சிங்கர் யார் தெரியுமா? இந்த கேள்விக்கு "பாப் மடோனா!" என்று பதிலளித்து தசாவதாரம் படத்தில் கமல் பட்டையைக் கிளப்புவார். அதுபோல "பாப்பரசர் யார் தெரியுமா?" என்று கேட்டால் அவசரப்பட்டு பாப் இசைக்கே அரசர் என்ற நினைப்பில் பாப் மார்லி அல்லது மைக்கேல் ஜாக்சனின் பெயரை நாம் கூறிவிடக்கூடாது. 'பாப்பரசர்' என்ற பெயர் போப்பாண்டவரைக் குறிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள 110 கோடி ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவர் அவர். இத்தாலியின் தலைநகரமான ரோமில் உள்ள வாடிகன் என்ற 0.17 சதுர மைல் பரப்பளவுள்ள சின்னஞ்சிறிய நாட்டுக்கு அவர் அதிபரும் கூட. இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான இராயப்பர் என்ற பீட்டர்தான் உலகின் முதல் போப்பாகக் கருதப்படுகிறார். அன்று தொடங்கி இன்று வரை இரண்டாயிரம் ஆண்டுகால…
-
- 0 replies
- 525 views
-
-
புதைகுழி தேசம் - டி.அருள் எழிலன் [ வியாழக்கிழமை, 20 மார்ச் 2014, 08:38 GMT ] [ அ.எழிலரசன் ] நன்றி: ஆனந்த விகடன் 26 Mar, 2014 'புத்தன்பாதம், செத்த பிணங்கள் புதையும் கல்லறையோ..!’ இது ஈழத்து வில்லிசைப் பாடல் வரிகள். ஈழத் தமிழர் படுகொலைகளுக்குப் பின்னர், இலங்கையில் சிங்களர்கள் பாதம் பதித்த இடங்கள் எல்லாம் இப்போது மனிதப் புதைகுழிகளாக உருமாறிவிட்டன. திருக்கேதீஸ்வரம், இறுதிப் போர் நடந்த மூங்கிலாறு பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதே, இப்போது ஈழக் கொலைக் களத்தின் சாட்சி. இந்தியா, தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்க, தமிழகம் கூட்டணிக் கணக்குகளுக்குள் சிக்கி உழன்றுகொண்டிருக்க... ஈழ நிலவரம் கண்டுகொள்ளப்படாத…
-
- 0 replies
- 471 views
-
-
சீனாவினால்... கடும் நெருக்கடியில், இலங்கை? -யே.பெனிற்லஸ்- அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு சீனாவால் புதிய தலையிடியொன்று ஏற்பட்டிருக்கின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் உத்வேகமும், தன்னெழுச்சியான மக்கள் கூட்டத்தாலும் ராஜபக்ஷக்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு எதிராக நெருக்கடிகள் ஏற்பட்டபோது தான், தமது தவறான கொள்கைகளை உணர்ந்தனர். தாம் செல்லும் பாதையை மாற்றுவதற்கு முனைந்தனர். அதனால், ராஜபக்ஷக்கள் ‘யூ டேர்ன்’ எடுக்கும் போது நிலைமைகள் கையறு நிலைக்குச் சென்றுவிட்டன. இதனால் அவர்களால் பொதுமக்களின் எழுச்சிக்கு முன்னால் தாக்குப்பிடிக்கவில்லை. குறிப்பாக, சர்வதேச நாணயநித…
-
- 0 replies
- 456 views
-
-
திட்டமிட்டு கோவில் சூழல் கடைகளால் ஆக்கிரமிப்பு அ. அச்சுதன் இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில் உலகப்பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருக்கோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளொன்றின் உச்சியில் இருக்கின்றது திருக்கோணேஸ்வரம். மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்திருப்பதால் திருக்கோணமலை என்று இந்த நகரம் பெயர்பெற்றது. இந்த நகரத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம் கோணேஸ்வரம் ஆதலால் திருகோணமலை எனவும் இந்த நகரம் பெயர் பெறுகின்றது. இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களின் திருத்தலமாகிய திருக்கோணேஸ்வரம் புனிதஷேத்திரமாக இருந்து வந்ததைப் புராண இதிகாச வரலாறுகள் கூறுகின்றன. எனவே இந்தத் தலத்தின் இயல்பான தெய்வீக விசேடத்தினாலே இந…
-
- 9 replies
- 647 views
-
-
-
- 0 replies
- 570 views
-
-
எப்போது மகிந்தாவின் முறை வரும் எமக்கான நீதியும் விரைவாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை தருகின்றது. தற்போது ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான மாநாடு சுவிஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சேர்பிய போர்க்கைதி றற்கோ மிலடிக் கைது புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. இன்றய புதிய உலகு இனவாத அரசுகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் எதிராக திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் நம்பிக்கையுடன் ச.ச.முத்து எழுதிய கட்டுரை இங்கே தரப்படுகிறது : முள்ளிவாய்க்காலின் கரையிலே நிகழ்த்தப்பட்ட மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக,இனஅழிப்புக்காக,போர்க்குற்றத்துக்காக மகிந்தா கும்பல் எப்போது கூண்டில் ஏற்றப்படப்போகிறார்கள். 2009ல் வன்னியில் சிங்களம் நிகழ்த்திய காட்டுமிராண்டித் தனங்கள…
-
- 0 replies
- 811 views
-
-
பிளவுகளை தவிர்க்கும் வகையில் செயற்படவேண்டியது அவசியம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்குமிடையிலான முரண்பாடு தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்கால அரசியலில் தனிவழிசெல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த விடயமானது தமிழ் மக்களை பொறுத்த வரையில் அவர்களது அரசியல் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்கவேண்டிய நிலைமை தற்போது உருவாகியிருக்கிறது. 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் முன்னாள் நீதியரசரான சி.வி.விக்கினேஸ்வரனை தமிழ் தேசி…
-
- 0 replies
- 266 views
-
-
இன்றைக்கும் தொடரும் கண்ணிவெடி ஆபத்து! கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரை இரைக்காக காத்துக் கிடக்கின்றன வெடிப்பொருட்கள் பெண் தலைமைத்துவக் குடும்பமாகிய எனக்கு ஒரு தொழல் வாய்ப்பும் அதற்கான சம்பபளமும் மாதாந்தம் கிடைக்கின்றது. ஆனால் இதுஒரு ஆபத்தான தொழில். நான் சுயகௌரவத்தோடு வாழவேண்டும் என்பதால்தான் இந்த கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். எனினும் தினமும் அதிகாலையில் வேலைக்குச்செல்வதும் என்னுடைய உழைப…
-
- 0 replies
- 411 views
-
-
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் பின் தங்கி இருந்தாலும், சித்தாந்தரீதியாக அந்தக் கட்சி வெற்றி பெற்று இருக்கிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. …
-
- 0 replies
- 633 views
-
-
GREETINGS TO TNA. WHAT NEXT? தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள். அடுத்து என்ன? எதிர்பார்த்ததுபோல தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. கூட்டமைப்புக்கு நல் வாழ்த்துக்கள். இனிச் செய்ய வேண்டியது என்ன என்கிற கேழ்வியை வெற்றி எம்முன்னே நகர்த்தியுள்ளது. போர்க்காலத்தில் உரிய இடங்களில் நான் கோட்பாட்டு ரீதியாக வற்புறுத்தி வந்ததுபோல நாம் மிகச் சிறிய இனம் என்பதையும் எதிரி பலமானவன் என்பதையும் நமக்கு சாதகமான பலம் பெருக்கிகளை (multipliers) இணைத்து நம் வலிமையை பெருக்குவதன் மூலம் மட்டுமே நம்மால் வெற்றிபெற முடியும் என்பதை . கூட்டமைப்பின் வெற்றித் தருணத்தில் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் மிக மிகச் சின்ன இனம். நம்மை வலுப்படுத்தக்கூடிய தேசிய சர்வதேசிய வலு பெருக…
-
- 1 reply
- 402 views
-