நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
நிமிடத்திற்கு நிமிடம், தமிழ் இணைய ஊடகங்களால் நிர்வாணப்படுத்தப்படும் பெண் போராளிகள்! 'சிங்கள பேரினவாத அரசு செய்த கொடூரத்திலும் பார்க்க, இவர்கள் நடாத்தும் வியாபாரம் மிக... மிக... அதிகமாக கேவலமாக உள்ளது...' என்று கலங்குகின்றார்கள் தமிழ் உணர்வாளர்கள். 'புதிய போர்க் குற்றப் படங்கள் காட்டுகின்றோம்... எங்கள் இணைய தளத்திற்கு வாருங்கள்...' என்று வலிந்திழுக்கும் வர்த்தக நோக்கத்துடன் தமிழ் இணையங்கள் சில வெளியிடும் சிங்களப் படைகளால் கோரமாகக் கொல்லப்பட்ட போராளிகளது படங்களும், அவலக் காட்சிகளும் தமிழ் நெஞ்சங்களைக் கோபமூட்டி வருகின்றன. அதுவும், பெண் போராளிகளது நிர்வாணப்படுத்தப்பட்ட காட்சிப் பதிவுகளை 'ப்ளாஷ்' தொழில் நுட்ப உதவியுடன் தொடர் மின்னல் காட்சிகளாகப் பார்வைக்கு வைக…
-
- 0 replies
- 877 views
-
-
-
- 0 replies
- 787 views
-
-
கலாசார சீர்கேடுகள் கிழக்கு மாகாணத்தில் மலிந்து கிடக்கின்றன. இந்த மாகாணத்தில் போர் இடம்பெற்ற காலத்தில் கூட இன்று உள்ளதைப் போன்று கலாசார சீர்கேடுகள் இருக்கவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கவலை தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணம் இன்றைய காலகட்டத்தில் கலாசார சீர்கேடுகள் மலிந்த மாகாணமாக மாறியிருப்பதை காண முடிகிறது. இந்தக் கலாச்சார சீர்கேடுகள் ஆங்காங்கே இடம்பெறுவதை தினந்தோறும் பத்திரிகைச் செய்திகள் மூலமாக அறிய முடிகிறது. கிழக்கு மாகாணத்தில் போ…
-
- 0 replies
- 576 views
-
-
இலங்கையில் நடைபெற்ற போராட்டம், அதனால் ஏற்பட்ட யுத்தம் பற்றி ஓரளவுக்காவது தெரிந்தவர்களுக்கு கூட செஞ்சோலை என்ற பெயர் பரிச்சயம். யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளின் குழந்தைகளுக்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு, காலப்போக்கில், தாய் தந்தையரை யுத்தத்தில் இழந்த மற்றைய குழந்தைகளையும் இணைத்துக் கொண்ட காப்பகம். 1991-ல் 24 பெண் குழந்தைகளுடன் இயங்கத் தொடங்கிய செஞ்சோலை, 2009-ல் இறுதி யுத்தத்தின்போது 245 பெண் குழந்தைகளின் காப்பகமாக இருந்தது. அதுவரை இயங்கிய செஞ்சோலையின் பாதுகாப்பில் இருந்த மிக இளமையான பெண் குழந்தையின் வயது 3 மாதங்கள். அதிகூடிய வயது, 26. 2009-ம் ஆண்டு யுத்தத்தோடு சிதறிப் போய், தற்போது வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள் செஞ்சோலைக் குழந்தைகள். இறுதி யுத்தத்தின்ப…
-
- 3 replies
- 1k views
-
-
ஈழத்தமிழருக்கு நேர்ந்த மனிதப் பேரவலங்களுக்கு ஐ.நா.வினாலோ அல்லது சர்வதேச சமூகத்தினாலோ நீதியைப் பெற்றுத்தர முடியுமா என்கிற கேள்வி இன்று நேற்றல்ல கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கேட்கப்பட்டு வருகிறது. ஐ.நா.வின் பணியாளர்கள் மற்றும் பிற நாடுகளின் ஊழியர்கள் சிறிலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள். குறித்த நாடுகளினாலோ அல்லது ஐ.நா.வினாலோ எந்தவொரு நடவடிக்கைகளையும் சிறிலங்காவிற்கு எதிராக எடுக்கப்படாமல் போய்விட்டது. ஐந்தாம் கட்ட ஈழப் போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற சர்வதேசப் போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்கள் பல உலகநாடுகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. பல உலகநாடுகள் தமது இராஜதந்திர காய்நகர்த்தல்களை சிறிலங்காவிற்கு எதிராக கடந்த இரண்…
-
- 0 replies
- 491 views
-
-
ஜெனீவாவில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு பெரிதும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது. இந்தக் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் அழுத்தமாக இருந்து வருகிறது. ஆனால், இலங்கை அரசாங்கமோ “இந்த அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பிக்க முடியாது, இது ஒன்றும் ஐ.நாவுக்கான அறிக்கை அல்ல. அது உள்நாட்டு விவகாரம்“ என்று தான் கூறி வந்தது. இந்த நிலைப்பாடு கடந்தவார நடுப்பகுதி வரைக்கும்தான் அரசிடம் இருந்தது. கடந்த வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டுக்கு வழக்கமாக முடிவுகளை அறிவிக்கும் ஊடகத்துறை …
-
- 1 reply
- 643 views
-
-
இலங்கையின் அழைப்பை ஏற்று, ஜனவரி 20-24, 2012ல், அங்கு மும்மொழித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வைபவத்தில், நானும் என் குழுவினரும் கலந்து கொண்டோம். இலங்கையில் இதுவரை நடந்த, நடந்து வரும் அனைத்து சம்பவங்களையும், போர்க் காலசம்பவங்களையும் பற்றி, நான் கனத்த இதயத்தோடு அறிவேன். போருக்கு பின்னால், அங்கு வாழும் இலங்கை தமிழ் மக்களைச் சென்று பார்த்து, கலந்துரையாடி, அங்குள்ள நிலைமை என்ன என்று அறிந்து வர வேண்டுமென, வெகுநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே, எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, இலங்கைக்கு சென்று வந்தேன். இலங்கை தமிழர் பிரச்னையில், நான் இரண்டு விதமாக பங்கெடுக்க முடியும். ஒன்று, இந்தியாவில் இருந்து கொண்டே அறிக்கை விடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, பகைமையை…
-
- 11 replies
- 1.5k views
-
-
அப்துல் கலாம் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை பாராட்டியே ஆக வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மற்றும் கூடன்குள மக்கள் கூறுகின்றனர். முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை சோனியா அரசு மிக தந்திரமாக தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. இதே சோனியா காந்தி அரசு அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது சோனியா காங்கிரஸ் கும்பல், இந்திரா காந்தியின் வீட்டில் சமையல் பணி புரிந்த பிரதீபா பாட்டில் என்ற அம்மையாரை ஜனாதிபதி பதவியில் ஏற்றி அழகு பார்த்தது. சமையல் பணி புரிந்தவர் என்ற குறையாகப் பார்ப்பதன்று விசயம். இந்திய மக்களிடம் மிகப் பெரும் அறிவாளி என்றும் விஞ்ஞானி என்றும் அறியப்பட்ட அப்துல…
-
- 4 replies
- 1k views
-
-
வங்கக்கடலில் இந்தியா - சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சதியினால் 16.01.1993 அன்றுவீரவரலாறான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் பத்தொன்பதாவது ஆண்டு நினைவெழுச்சிநாள்நேற்று (22.01.2012) சுவிஸ்Rickenbachஇல் இடம்பெற்றது. வீரகாவியமான மாவீரர்களான கேணல்கிட்டு லெப்ரினன் கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன் அல்லது மலரவன்,கடற்புலி கப்டன் ஜீவா, கடற்புலி கப்டன் குணசீலன் அல்லது குணராஜ், கடற்புலி கப்டன் நாயகன்,கடற்புலி கப்டன் றொசான், கடற்புலி லெப்ரினன் அமுதன், கடற்புலி லெப்ரினன் நல்லவன், கடற்புலிலெப்ரினன் தூயவன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாளில் மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சிவந்தன் அவர்கள் பொதுச்சுடரினைஏற்றியதைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.தாயக விடுதலைப் போ…
-
- 0 replies
- 612 views
-
-
அமெரிக்காவுக்கு தாக்குதல் நடத்த தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட பெண் தற்கொலைப் போராளி என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்ட துஸியந்தினி கனகசபாபதிப்பிள்ளை உண்மையில் ஒரு ஊடகவியலாளர் ஆவார். இவர் பி.பி.சியின் ஊழியர். பி.பி.சியின் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான செய்தியாளராக இருந்த பிரான்சிஸ் ஹரிசனின் உதவியாளர். அமெரிக்க தூதரகம் தொடர் புலனாய்வு விசாரணைகளின் பின் இத்தகவல்களை கண்டு பிடித்துக் கொண்டது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த துஷியந்தினி கனகாபாபதிப்பிள்ளை புலிகளால் அனுப்பப்பட்டு இருக்கின்றார் என்று தூதரகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்த அன்ரன் மோசஸ் என்பவரை நேரில் சென்று தூதரக அதிகாரிகள் விசாரித்து இருக்கின்றனர். …
-
- 0 replies
- 894 views
-
-
விடுதலைப்புலிகள் முற்றிலும் அழித் தொழிக்கப்பட்டார்கள்... சுதந்திரத் தமிழீழப் போராட்டம் முடிந்தேபோனது என்று சிங்களவர்கள் கொக்கரித்தாலும்... புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ.நா. வில் போர்க்குற்ற முறையீடு, ராஜபக்சவுக்கு கறுப்புக்கொடி என்று அதிரடி கிளப்பியவர்கள், அடுத்து பல்வேறு நாடுகளில் தபால் தலைகளை வெளியிட்டு தங்கள் போர்க் குணத்தைக் காட்டி இருக்கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் சுதந்திரத் தமிழீழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள். சுவிட்சர்லாந்தில், “ஐ ஹேவ் ட்ரீம்” என்ற பெயரில் போரில் அடிப்பட்ட ஓர் ஈழச் சிறுவனின் வலியை தபால் தலையாகப் பதிவு செய்தார்கள். …
-
- 0 replies
- 619 views
-
-
இப்போது அரசதரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகின்றனர் என்பதே. பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வப்போது கூறிவந்த இந்த விடயத்தை இப்போது எல்லா அமைச்சர்களும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். முன்னர் ஜே.வி.பி பலவீனப்படுவதை விரும்பிய அரசாங்கம் இப்போது அதனை விரும்பவில்லை. முன்னதாக ஜே.வி.பி.யை உடைப்பதற்காக விமல் வீரவன்ஷவையும், நந்தன குணதிலகவையும் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பிளவு அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்றாக அமையவில்லை. ஜே.வி.பி.யில் இரண்டு வகையான தரப்பினர் இரு…
-
- 0 replies
- 444 views
-
-
தமிழ்த் தேசியம் - சிந்தனையும் தேடலும் இலங்கை அரசின் இருப்பு என்பது சிங்கள - பௌத்தத்தை பாதுகாப்பது, வளர்த்தெடுப்பது எனும் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. இதுவரை ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் இந்த இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதில் தீவிரத் தன்மையும் அக்கறையையும் வெளிப்படுத்தி வந்துள்ளன. சுதந்திரத்திற்கு பின்னர் வந்த எல்லா அரசாங்கங்களும் அரசாங்கம் கைமாறுகின்றபோதெல்லாம் தமது இருப்புக்கு அடிப்படையாக இருக்கும் சிங்கள - பௌத்த சித்தாந்தத்தை தீவிரமாக பற்றிப் பிடித்து வந்துள்ளன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிங்கள- பௌத்த பேரினவாதம் மேலாதிக்கம் செலுத்தும் அம்சமாக எழுச்சி யடைந்துள்ளது. தமிழ்பேசும் மக்களது வாழ்வாதார உரிமைகள் சமூக பாதுகாப்பு மற்றும் சுத…
-
- 0 replies
- 427 views
-
-
டெல்லி: உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். நாடு முழுவதும் பொருளாதாரரீதியில் மிகவும் கீழ் நிலையில் உள்ள 9 மாநிலங்களின் 112 மாவட்டங்களில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பு. இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் கூறுகையில், நமது நாடு மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்தாலும், குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாடு ஏற்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த நாட்டில் 6 வயதுக்கு உட்பட்ட 16 கோடி குழந…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஆற்றிங்கல் அரசியின் மகனான மார்த்தாண்டவர்மன் மருமக்கள் தாய முறைப்படி வேநாடு அரசராக 1929 ஆம் ஆண்டு முடிசூட்டப் பெற்றார். அவருக்கு முன் ஆட்சி செய்த மன்னரின் மக்களும் எட்டு வீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர் பிரபுக்களும் நாயர் படையின் பெரும்பகுதியினரும் மார்த்தாண்டரை வீழ்த்த முயன்றனர். ஆனால் மர்த்தாண்டர் முனைப்பாகச் செயல்பட்டு எதிரிகளை வீழ்த்தி நாயர்களின் மேலாண்மையைத் தகர்த்தார். கன்னியாகுமரி முதல் காயங்குளம் வரை நாட்டை விரிவாக்கம் செய்தார் 'நவீன திருவிதாங்கூரை' உருவாக்கும் இப்பணியில் அவர்க்குப் பெரிதும் துணையாக இருந்தவர்கள் தென்பாலுள்ள தமிழர்களே! நாஞ்சில் நாட்டைச் சார்ந்த ஆறுமுகம் பிள்ளை தற்காலிகத் தளவாயாகப் பணியாற்றினார். குமாரசாமிப் பிள்ளை நாஞ்சில் நாட்டார் படைகளின் தலைமை…
-
- 5 replies
- 11.3k views
-
-
சமீப காலமாக லண்டனில் புதுவகையான திருட்டு ஒன்று ஆரம்பமாகியுள்ளது. அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்குள் லண்டனில் வசிக்கும் பல தமிழர்கள் வீட்டில் நகைகள் அதுவும் குறிப்பாக தாலிக்கொடிகள் களவாடப்பட்டு வருகிறது. நடன நிகழ்ச்சி நடக்கிறது இல்லையேல் இசை நிகழ்ச்சி நடக்கிறது அல்லாது போனால் தென்னிந்திய நடிகர்கள் வருகிறார்கள் என்று TV இல் விளம்பரம் போனால் அதனை நீங்கள் பார்க்கிறீர்களோ இல்லையோ மிக உண்ணிப்பாக கள்வர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக லண்டனில் உள்ள ஒரு பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தால் போதும்... அப் பகுதியில் உள்ள தமிழர் வீடுகளை உடைத்து உளே புகுந்து நகைகளைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் தயாரக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
2011: மன்மோகன் சிங் என்ன ஒரு வீழ்ச்சி! மெத்தப் படித்தவர். 1990-களில் இந்தியா அழிவின் விளிம்பில் இருந்தபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களால் காத்தவர். இடதுசாரிகளுக்கு மட்டும் இவர், சர்வதேச நிதியத்தின் கையாள், அமெரிக்க உளவாளி, இந்தியாவை விற்கும் கயவன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. நியாயமானவர் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் முதுகெலும்பே இல்லாமல், நாளுக்கு நாள் அவமானப்பட்டுக்கொண்டு, ஏன் இன்னமும் சோனியாவைக்காக்க முற்படுகிறார்? ஊழலில் தோய்ந்த அமைச்சரவை, யாரும் இவரது அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை, பெயரளவுக்கு ஒரு பிரதமர். உலகம் மதிக்கிறது, சொந்த நாட்டில் மட்டும் மதிப்பில்லை. 2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ் விவகாரங்களுக்குப் பிறகு, இ…
-
- 2 replies
- 1.1k views
-
-
2008, 2009 ஈழமண்ணில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற உருக்கமான பதிவான உச்சிதனை முகர்ந்தால் என்ற படத்தை எவ்வாறேனும் முடக்கிவிடுவதென்ற முயற்சிகள் தமிழகத்தில் தொடர்கின்றன. இந்த முயற்சியில் படத்தை வெளியிடுவதாக ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கும் பங்கு இருக்குமோ என்ற ஐயம் இருக்கின்றது. திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதிலும், ஊடகங்களில் அதை விளம்பரப்படுத்துவதிலும் படத்தின் விநியோகத்தினரான ஜெமினி நிறுவனம் செய்த குழறுபடிகள் முதற்சுற்று வெற்றியை கடுமையாக பாதித்திருப்பதாகத் தெரிகிறது. பல தொலைக்காட்சிகள் விளம்பரத்தை ஒளிபரப்ப மறுத்துவிட்டதாகவும், பல திரையரங்குகள் படத்தை திரையிட மறுத்து விட்டதாகவும் ஜெமினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரி சைபீரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக அமளி ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்ய தூதரை தொடர்புகொண்ட வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த பிரச்னையை தீர்க்க இந்தியாவுக்கு உதவும்படி வேண்டு கோள் விடுத்திருந்தார். அவரும் உதவிசெய்வதாக உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக சைபீரிய நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. http://www.saritham.com/?p=45610
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் நலன்சார் அடிப்படையில் இலங்கை மீது தலையிடுகின்ற சர்வதேசத் தரப்புக்களை எவ்வாறாக நோக்குகின்றன என்பதைக் கடந்த பத்தியில் தெரிவித்திருந்தேன். அப் பத்தியில் சிங்களத் தேசியவாதமானது இலங்கையில் உள்ள தமிழ்த் தேசம் மற்றும் இந்தியாஇமேற்குலகு உள்ளிட்ட தரப்புக்களை எவ்வாறாக எதிரிகளாகக் கருதுகின்றது என்பதைதையும் விளக்கியிருந்தேன். தமிழ்த் தேசத்தினைப் பொருத்தளவில் அது இயல்பாகவே பக்கம் சாரக் கூடிய அதிக வாய்ப்புள்ள தரப்புக்களாக இந்தியாவும் மேற்கு நாடுகளாகவுமே உள்ளன. இந்தியாவுடன் தமிழ்த் தேசம் சார்ந்து கொள்வதற்கு, இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசத்துடன் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு கொண்டுள்ள பிணைப்பே வாய்ப்பாக அமைந்துள்ளது. அதேபோன்று மேற்க…
-
- 0 replies
- 699 views
-
-
இன்று பிற்பகல் கண்ணகி சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி முல்லை பெரியாறு காக்க பல்லாயிரம் பேர் கலந்து கொண்டடனர் . மாபெரும் பேரணியை மக்கள் போராளி வைகோ தலைமை ஏற்று வழி நடத்தினர் . இதில் தமிழர் நலனில் அக்கறை கொண்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர் . இந்த ஆர்பாட்டத்தை மே 17 இயக்க திருமுருகன் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார் . காணொளி மிகவிரைவில் இணைக்கப்படும். இப்போராட்டத்தின் போது பாரதிராஜா பேசுகையில், ‘’முல்லைபெரியார் அணை பிரச்சனை பற்றி நடிகர் சங்கம் குரல் கொடுக்காதது ஏன்? ’’ என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும், ’’தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை கைவிடவேண்டும். தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்று கோரிகை வைத்தார். ‘’தமிழர்கள் இனியும் …
-
- 5 replies
- 1.4k views
-
-
இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது. இந்து சமுத்திரத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்புமில்லை என்றிருந்த ரஷ்யா கூட இப்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தை யார் தக்கவைத்துக் கொள்வது என்கிற போட்டியில் களமிறங்கியுள்ளது. தென் சீனக் கடற்பரப்பிலேயே தனது ஆளுமையை வைத்திருந்த சீனா, தற்போது இந்தியாவிற்கு சவால்விடும் வகையில் அதனுடைய பகுதிகளை அண்மித்த நாடுகளான சிறிலங்கா, பர்மா, பங்களாதேஸ், நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளை தனக்கு சார்பாக்கி பல வேலைத் திட்டங்களை செய்து வருகிறது. இந்திய, அமெரிக்க அரசுகளுக்கு கவலையை அளித்த செய்தி கடந்த வாரம்தான் கிடைக்கப்பெற்றது. ஒரு மாத காலத்திற்கு மேலாக இ…
-
- 0 replies
- 515 views
-
-
சசிப்பெயர்ச்சிப் பலன்கள்! இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்வரை இப்படியொரு அறிவிப்பை அம்மையார் வெளியிடவில்லை. ஆகவே, நம்பிக்கையுடன் எழுதத் தொடங்கினேன். உடன்பிறவா சகோதரி சசிகலா உள்ளிட்ட பதினான்கு பேரைக் கட்சியை விட்டு நீக்கிய அறிவிப்பு வெளியானபோது அதிமுகவினர் அத்தனைபேருமே தங்கள் கைகளைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். நம்பமுடியாத அறிவிப்பு. ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும், அறிவித்தவர் அம்மா என்பதால்! ஒவ்வொரு கட்சியிலும் நம்பர் டூ என்ற அலங்காரப் பதவி ஒன்று இருக்கும். ஆனால் அதற்கான அதிகாரங்கள் அனைத்தும் இன்னொருவரிடம் இருக்கும். உதாரணம் : திமுகவில் பேராசிரியர் அன்பழகன் வகிக்கும் பதவி. கட்சிப் பதவியைப் பொறுத்தவரை அவர்தான் நம்பர் டூ. ஆனால் உண…
-
- 0 replies
- 905 views
-
-
இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி ரஷ்ய அரசு பெரும் பாலான இந்துக்களின் புனித நூல் என்று சொல்லப்படும் பகவத்கீதையை தடைசெய்துள்ளது. சைபீரிய நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது ரஷ்ய அரசு. இந்தியா, ரஷ்யா இடையே பல் வேறு ஒப்பந்தங்களைச் செய்யும் விதமான அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ள நிலையில் பகவத் கீதை தடை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.globaltam...IN/article.aspx
-
- 11 replies
- 1.9k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது அமர்வு! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது அமர்வு! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான மூன்றாவது பாராளுமன்ற அமர்வு டிச-14 புதன்கிழமை அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. நான்கு நாள் அமர்வாக இடம்பெறவுள்ள இந்தப பாராளுமன்ற கூட்டத் தொடரில் சுதந்திர தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான பல்வேறு விடயங்கள் கலந்தாய்வு செய்யபட இருப்தோடு நா.த.அரசாங்கத்தின் நேசநாட்டு பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். பல்வேறுவழிகளிலும் சிறப்பினைப் பெற்றுள்ள இந்த பாராளுமன்ற அமர்வு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையின் முழுவிபரம்…
-
- 7 replies
- 5k views
-