Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும். 

மன்னார் மாவட்டம் போரால் பாதிக்கப்பட்டு´மீள்குடியேறிய பாப்பாமோட்டை , தேனுடையான் , கட்டக்காடு , முள்ளிக்கண்டல் ,  கண்டல் ஆகிய கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கான உதவியினை வேண்டுகிறோம்.

DSCF4281_zpsf6e895d1.jpg

இக்குடும்பங்களிலிருந்து 10குடும்பங்கள் கடற்தொழில் செய்ய வலைகள் கோரியுள்ளனர். ஒரு வலையின் பெறுமதி 25ஆயிரம் இலங்கை ரூபா (அண்ணளவாக 155€)

10குடும்பங்களுக்கான 10வலைகளுக்கும் தேவையான நிதியுதவி – 250000,00ரூபா (அண்ணளவாக 1543€)

13குடும்பங்கள் நீர் இறைக்கும் இயந்திரம்  கோரியுள்ளனர். ஒரு இயந்திரத்தின் விலை – 20000,00ரூபா (அண்ணளவாக 123€)

13குடும்பங்களுக்கும் தேவையான நிதி – 259038,00 (அண்ணளவாக 1599,00€)

இதர 12 குடும்பங்களும் கோழிவளர்ப்பு , சிறு வியாபரம் , கால்நடை வளர்ப்புக்கான உதவியை வேண்டியுள்ளனர்.

தலா குடும்பமொன்றுக்கு – 20000,00ரூபா (123,00€)

12 குடும்பங்களுக்கும் தேவையான நிதி – 240000,00ரூபா. (அண்ணளவாக 1476,00€)

35 குடும்பங்களுக்கும் மொத்தம் தேவைப்படும் உதவி -  749038,00ரூபா (4618,00€)

DSCF4284_zpsbc32ace1.jpg

DSCF4285_zps3128eb76.jpg

DSCF4292_zps3de355b6.jpg

 

உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு :-

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

http://nesakkaram.org/ta/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்திட்டத்திற்கான உதவியை யாழ்கள உறவுகள் இணைந்து செய்ய முடியுமென்ற ஆலோசனையையும் தந்து அதற்கான முதல் அடியாக தனது பஙகளிப்பையும் வழங்க முன்வந்த சுண்டலுக்கு மிக்க நன்றிகள்.

சுண்டல் - AUD200 அவுஸ்ரேலிய டொலர்கள்.
சபேசன் - €100யூரோ
சுமேரியர் - £300பிரித்தானியபவுண்கள்
சுமேரியரின் நண்பர்  நகுலேந்திரன் - £300பிரித்தானியபவுண்கள்.

 

இக்குடும்பங்களுக்கு தங்களது உதவிகளை வழங்க முன்வந்த சுண்டல் , சபேசன் , சுமேரியர் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

Edited by shanthy

நானும் 100 euro தருகிறேன் சாந்தி, PayPal இல் அனுப்ப விரும்புகிறேன்.

 

தனிமடலில் விபரம் தருகிறீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் 100 euro தருகிறேன் சாந்தி, PayPal இல் அனுப்ப விரும்புகிறேன்.

 

தனிமடலில் விபரம் தருகிறீர்களா?

 

வணக்கம் நவீனன்,

மிக்க நன்றிகள் உங்கள் ஆதரவிற்கு.

தனிமடல் போட்டுள்ளேன் பாருங்கள்.

 

வணக்கம் நவீனன்,

மிக்க நன்றிகள் உங்கள் ஆதரவிற்கு.

தனிமடல் போட்டுள்ளேன் பாருங்கள்.

 

சாந்தி உங்கள் வங்கிக்கு காசு போட்டுவிட்டேன் online Überweisung.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திட்ட நடைமுறைப்படுத்தல் அறிக்கை

 

தேர்வு செய்யப்பட்ட 35குடும்பங்களையும் ஒரே நிர்வாக அலகினுள் இணைத்து செயற்குழு ஒன்றை நிறுவவுள்ளோம். 35குடும்பங்களுக்கும் தனித்தனியே பொருளாதாரத்தை வழங்க எம்மால் முடியாமையால் இவர்களை 3 குழுவாகப் பிரித்து இவர்களை குழும தொழில் முயற்சியில் இணைத்து உறவுகளிடமிருந்து கிடைக்கும் உதவியை பகிர்ந்தளிக்கவுள்ளோம்.


1)    கடற்தொழில் செய்வோர் 10பேரும் ஒரு குழுவாக பிரித்து 5பேர் கொண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்படும். 4வலைகள் இவர்களுக்கு வழங்கப்படும். (4வலைகளுக்கும் ஒருலட்சரூபா)

2)    விவசாயம் செய்ய உதவிகோரிய 13குடும்பங்களையும் ஒரு குழுவாக பிரித்து 5பேர் கொண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்படும். இவர்களுக்கு 4 தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வழங்கப்படும். (4தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களுக்கும் 80ஆயிரம் ரூபா)

வழங்கப்படும் தண்ணீர் இயந்திரம் இவர்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் பொறுப்பாளரிடம் இருக்கும். சுழற்சி முறையில் பயன்படுத்த கொடுக்கப்படும். பயன்பாடு முடிந்ததும் பொறுப்பாளரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். இயந்திரங்கள் பழுதடைந்தால் அவற்றைத் திருத்துவது குழும முயற்சியில் பங்கேற்கும் அனைவரின் பங்களிப்போடே செய்யப்படல் வெண்டும்.

3)    12குடும்பங்களையும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுத்தவுள்ளோம். 12குடும்பங்களையும் ஒரு குழுவாக பிரித்து 5பேர் கொண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்படும். இவர்களுக்கு ஆடுவளர்ப்பும் கோழிவளர்ப்பும் செய்ய ஒழுங்கு செய்து கொடுப்போம். (ஒருலட்சரூபா இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும்)



இக்குழும முயற்சியின் முன்னேற்றம் பற்றிய அறிக்கையும் செயற்பாடும் மாதாந்தம் செயற்குழு தலைவரால் அறியத்தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு நேற்று இவ்விடயம் பற்றி மன்னார்மாவட்ட நேசக்கரம் தொடர்பாளர் ,  நேசக்கரம் இலங்கை இணைப்பாளரையும் இணைத்து கலந்துரையாடியிருந்தேன்.

கலந்துரையாடலின் முடிவில் முதலில் கடற்தொழிலுக்குரிய வலைகளும் , விவசாயிகளுக்குரிய தண்ணீர் இறைக்கும் இயந்திரமும் முதலில் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

இத்திட்டத்தில் பங்கேற்று திட்டம் நின்று போகாமலிருக்க நேசக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றிகள்.
 

பாராட்டுக்கள் சாந்தி எதுவந்தாலும் தொடருங்கோ .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உங்கள் வங்கிக்கு காசு போட்டுவிட்டேன் online Überweisung.

 

நவீனன்,

நீங்கள் அனுப்பிய 100€ இன்று கிடைத்தது. மிக்க நன்றிகள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்கள் உதவி 100€ இன்று கிடைத்தது நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சாந்தி எதுவந்தாலும் தொடருங்கோ .

கருத்துக்கு நன்றிகள் கோமகன்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா,

$165 + $10(பணமாற்ற செலவிற்காக) எனது நண்பரின் ஊடாக அனுப்பியுள்ளேன்.

நன்றி.

 

நீங்கள் அனுப்பிய  130,94€உதவி கிடைத்தது மிக்க நன்றிகள்.

அக்கா, ஒரு நீர் இறைக்கும் இயந்திரம் வாங்க உதவ ஆவல்.

கனடிய டொலரில் $165. 

எனது நண்பர் சசிகுமாருக்கு நேசக்கரத்தின் சேவைகளை பற்றி கூறினேன். அவர் ஒவ்வொரு மாதமும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

 

மிக்க நன்றிகள்.

 

இது நல்லபணி தொடர வாழ்த்துக்கள். ஆனால் சுருட்டல்கள் இடம்பெறாமல் இருந்தால் சரி. முன்னர் ஒருதடவை இப்படி பணம் சேர்த்து அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவாக சேர்த்த பணத்தில் அரைவாசி செலவாக காட்டப்பட்ட வரலாறும் உண்டு.

Edited by ilankathir

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லபணி தொடர வாழ்த்துக்கள். ஆனால் சுருட்டல்கள் இடம்பெறாமல் இருந்தால் சரி. முன்னர் ஒருதடவை இப்படி பணம் சேர்த்து அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவாக சேர்த்த பணத்தில் அரைவாசி செலவாக காட்டப்பட்ட வரலாறும் உண்டு.

 

மன்னிக்கவும் இளங்கதிர். உங்கள் மேலான ஆலோசனைகளுக்கு நன்றிகள். ஆனால் உங்கள் எழுத்து ஒருவகை தெளிவின்மையை காட்டுகிறது.

 

நேசக்கரம் சேர்க்கிற பணத்துக்கும் அதன் பயனைப்பெறுகிற பயனாளிக்கும் உதவும் நபருக்குமிடையிலான தொடர்பையும் உறுதிப்படுத்தலையும் செய்து கொடுத்தே உதவிகளை கொண்டு செல்கிறது.

 

குறிப்பான நேசக்கரத்திற்கான சகல நிர்வாக தொலைபேசி தபால் செலவுகளிலிருந்து முழுவதும் எனது தனித்த ஒருத்தியின் உழைப்பே செலவிடப்படுகிறது. இதில் உதவுகிறவர்களின் உதவி முழுவதும் உதவி கோருகிறவர்களிடமே போய் சேர்கிறது.

 

இதில் பணி செய்கிற தாயகப் பணியாளர்கள் அனைவரும் சேவையாகவே இணைந்துள்ளனர்.

 

நேசக்கரத்தின் நேர்மையை புரிந்து கொண்டவர்கள் தான் இந்தத்திட்டங்களிலும் பங்கெடுத்து உதவி வருகிறார்கள். என்பதனையும் தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டியுள்ளது.

நேசக்கரம் ஐரோப்பிய சட்ட வரைமுறைகளுக்கு அமையவே இயங்குகிறது. வருடாவருடம் கிடைத்த உதவிகளுக்கும் செய்யப்பட்ட உதவிகளுக்கும் ஒவ்:வொரு சதத்துக்கும் வரித்திணைக்களத்திற்கு கணக்கறிக்கை வங்கி வரவு செலவிலிருந்து யாவும் கொடுக்க வேண்டும். கடந்த 3ஆண்டுகளாக வருடாவரும் வரித்திணைக்கள பரிசோதனை நடாத்தப்பட்டு நீண்டகால வரிச்சலுகையும் தந்துள்ளார்கள். நேசக்கரம் வங்கிக்கு வருகிற பணத்திற்கு ஒவ்வொருவருக்கும் வரிச்சலுகை கடிதம் கொடுக்க வேண்டியதும் சட்டம். ஆக எல்லாம் சரியாகவே நடக்கிறது.

உங்கள் சந்தேகத்தை சிவப்பால் மாற்றியுள்ளேன். இங்கு நீங்கள் குறித்துள்ள விடயம் எங்களுக்கு பொருத்தமில்லை. ஆகவே இதற்கான உங்கள் பதிலை வாசகர்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

 

Posted 22 March 2013 - 05:22 AM

ilankathir, on 22 Mar 2013 - 03:14, said:snapback.png

இது நல்லபணி தொடர வாழ்த்துக்கள். ஆனால் சுருட்டல்கள் இடம்பெறாமல் இருந்தால் சரி. முன்னர் ஒருதடவை இப்படி பணம் சேர்த்து அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவாக சேர்த்த பணத்தில் அரைவாசி செலவாக காட்டப்பட்ட வரலாறும் உண்டு.

 

விமர்சிப்பதற்கும்   தகுதிவேண்டும் .

 
சாந்தி  வேறு ஒரு திரியில்  உங்களுக்கு  எதிராக 
கருத்து  எழுதினதுக்கு பழிவாங்க  எழுதப்பட்டது .
 
நேசக்கரம்  இணையம்  தாக்குதலுக்கு  உள்ளானபொழுது 
அதை  திருத்த  உதவி (நிதி ) வேணுமா  என்று  கேட்க ,
தேவை  இல்லை என்று  சொல்லி விட்டு ,விரும்பினால் 
கல்விப்பணிக்கு உதவுங்கள்  ,என்ற மனம் எல்லோருக்கும் 
வராது .
  
நான்   சாந்திக்கு  ஆதரவாக  எழுதுவதற்கு  காரணம் 
எவரும்  செய்ய  பின்னிப்பதை  துணிந்து செய்வது அதாவது 
போராளிகள் ,மாவீரர்  குடும்பங்களிட்கு உதவுதல் .
 

Edited by Gari

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் விவசாயி விக். உங்கள் நண்பரின் உதவி 130€ கழிவு போக 125,49€ கிடைத்தது.


 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா.

எமது தோட்டத்தில் தொண்டராக இருக்கும் சசி, ஒரு கோழி வளர்ப்பு திட்டத்திற்கு உதவ ஆவல்.

இந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும்?

நான் வேறும் பலரிடம் உதவி கோரி உள்ளேன்.  எம்மால் ஆன உதவிகளை செய்கின்றோம்.

நன்றி.

 

உங்கள் முயற்சிகளுக்கு நன்றிகள் விவசாயி விக்.

சாதாரணமான ஒரு கோழிக்கூடு செய்து ஊர்க்கோழி வளர்ப்பிற்கு 30ஆயிரம் ரூபா போதுமானது. இதுவே இறைச்சிக்கோழி இதன் காலம் 45நாள். 45நாளில் குஞ்சுகள் வளர்த்து இறைச்சிக்கு விற்பது.30ஆயிரம் ரூபாவில் இறைச்சிக்கோழியும் வளர்க்கலாம். கோழி வளர்ப்பில் அதிகம் கிராமங்களில் ஊர்க்கோழி வளர்ப்பைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். காரணம் பராமரிப்பு இலகுவானது. கோழி வளர்ப்பு முழுமையான செயற்திட்ட அறிக்கை இருக்கிறது. மின்னஞ்சலில் போட்டுவிடுகிறேன் பாருங்கோ.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

45 நாள் கோழிக்கு மாஸ், அன்டிபயோடிக் வாங்கியே விவசாயிகள் நொந்து விடுவார்கள்.  உலக  கோழி துறையால் உள்ளூர் கோழி வகைகள் வெகு வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

நாம் இயற்கை விவசாயிகள் என்றபடியால் உள்ளூர் கோழிகளையே தேர்ந்தெடுப்போம்.  

ஒண்டாரியோவில் நடமாடும் கோழிக்கூடு தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறோம்.

நான் எமது தொண்டருக்கு தெரியபடுத்துகிறேன்.

அவர் காசை அனுப்பியவுடன் அறிவிக்கிறேன். நன்றி.

 

கருத்துக்கு நன்றிகள் விவசாயி விக்.

மாஸ் மருந்துகள் எதிர்பார்க்கும் அளவுக்கு செலவில்லை. குறைந்த செலவில் அதிக இலாபத்தை கொடுக்கிறது இந்த மாஸ்கோழிகள். ஆனால் நீங்கள் குறித்தது போல ஊர்க்கோழிகளை இந்த மாஸ் வளர்ப்பு ஊக்குவிப்பால் பாதிப்படையச் செய்கிறது. இப்போது எம்மவர்கள் ஊர்க்கோழிகளுக்கும் மாஸ்போடத் தொடங்கியுள்ளார்கள். அதன் சாதக பாதங்கள் பற்றிய முழு விவரங்களும் தெரியவில்லை.

உதவி கிடைத்ததும் அறியத்தருகிறேன்.

  • 2 weeks later...

எனக்கு தெரிந்து நல்ல திட்டங்களை தேர்ந்து எடுத்து அதற்கு நிதி சேகரித்து பின் பயனாளியை உதவி சேர்ந்தவுடன் அவர்களிடம் இருந்து கடிதம்,  ஆதார படங்கள் தந்து செயற்படும் தமிழ் அமைப்பு நேசக்கரம்.

மற்றும் சாந்தி அக்காவின் நிர்வாக திறமையும்,  எம்மக்களுக்கான அவரின் அர்பணிப்பும் போற்றப்படவேண்டியது.

நேசக்கர கணக்குகளில் பணமாற்று செலவுகள் தொண்டர்களால் உள்வாங்க படுவதை கண்டு அதற்கும் சேர்த்து காசு அனுப்பினேன்.

நேசக்கரதிற்கு உதவாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்கள்.

இது ஏழைகளுக்கு வாழ்வழிக்கும் அமைப்பு.  அரசியல் அமைப்பு அல்ல.

 

உங்கள்  கருத்தில்  100%  உடன்படுகின்றேன் .காந்தியத்திற்கு 
நடந்த  அழிவுக்குப்பிறகு  எந்த  ஒரு  அமைப்புக்கும்  அழிவு 
நடக்கக் கூடாது ,என்பதில்  விழிப்பாக  இருந்தனான் . 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா,

சசியும், ஜனனியும் சேர்ந்து $200 + $10(பணமாற்று செலவு) அனுப்பி உள்ளார்கள்.

இதை உள்ளூர் கோழி வளர்ப்பு திட்டத்திற்கு பாவிக்க வேண்டுகிறார்கள்.

நன்றி.

 

உங்கள் உதவி கிடைத்தது விவசாயி விக். மேலதிக விபரங்கள் விரைவில் தருகிறேன்.

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி விக் நீங்கள் மன்னார் அபிவிருத்தித் திட்டத்திற்காக உங்களது பக்கத்து வீட்டு இளைப்பாறிய ஆசிரியை ஐவோன் அவர்களிடமிருந்து  பெற்று அனுப்பிய உதவி 130€ கழிவு 4,51€போக 125,49€ கிடைத்தது. மிக்க நன்றிகள். அடுத்த திட்டத்தில் இந்த உதவியை ஒரு குடும்பத்துக்கு வழங்குகிறேன்.

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலாண்டு கூட்டறிக்கையும் பதிவொன்றும் கேட்டுள்ளேன். விரைவில் கிடைக்கும் கிடைத்ததும் தருகிறேன் விவசாயி விக். உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள். இன்னொரு நூறுபேர் இணைந்தால் மேலும் பல குடும்பங்களை வாழ வைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.