Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் புலிப் போராளிகள் பாராளுமன்றம் விஜயம்

Featured Replies

முன்னாள் புலிப் போராளிகள் பாராளுமன்றம் விஜயம்

வடக்கு- தெற்கிற்கு இடையிலான நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகள் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றதத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

(படம் : ஜே.சுஜீவகுமார்)

ltte-03.jpg

ltte-01.jpg

ltte-02.jpg

IMG_3413.jpg

IMG_3326.jpg

IMG_3426.jpg

IMG_3402.jpg

IMG_3441.jpg

IMG_3318.jpg

IMG_3334.jpg

http://www.virakesari.lk/article/local.php?vid=4251

  • கருத்துக்கள உறவுகள்

அது வெளிநாடுகளைச் சமாளிக்க..

 

இதுவே உள்நாட்டில் இன அழிப்பின் தொடர்ச்சியாக...

 

 

943705_562813277097012_1620581831_n.jpg

 

168881_562813413763665_1298402694_n.jpg

 

942349_562813557096984_1258200675_n.jpg

 

944675_562813887096951_1763308907_n.jpg

 

577613_562814293763577_1467639673_n.jpg

 

944676_562814497096890_857749796_n.jpg

 

முகநூல்..!

 
விடுதலை வேண்டி புறப்பட்ட சுதந்திரப் பறவைகளுக்கு கூண்டுக்கிளி வாழ்க்கை..! அது வெறும் கூண்டு அல்ல.. சிங்கள.. வதைக் கூண்டு. என்று தீரும் இந்தச் சோகம். என்று காணும் கண்கள்.. இவர் முகங்களில் சிரிப்பை..! !!!! :( :(
 
தலைவர் குடும்பம் எங்கே? யுவதிகளிடம் விசாரணை செய்யும் படையினர்! புதிய போர்க்குற்ற ஆதாரம்!

40 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் எண்ணிலடங்கா தமிழர்கள் இலங்கை அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

தமிழர்களின் சுதந்திர வேட்கையை அடக்க தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் இளைஞர்கள், யுவதிகள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதுடன் தெருக்களில் பலர் சடலங்களாக மீட்கப்பட்டனர், இக்காலம் வரை தமிழர்களின் நிலை இவ்வாறே காணப்படுகின்றது.

தமிழர் பிரதேசங்கள் சிங்களக் குடியேற்றங்களாக்கப்படுவதும், தமிழர்களின் அடையாளங்களை அழித்து சிங்கள வரலாறுகளை தோற்றுவிப்பதும், அழிக்க முடியாத தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சின்னங்களில் சிங்களவர்களின் வரலாறுகளை செதுக்குவதுமாக தமிழர்களின் தாயகப் பகுதி முழுமையாக சிங்களப் பிரதேசமாக மாற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக சிங்களவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கை இனவழிப்பு அரசினால் நடத்தப்பட்ட கொக்கட்டிச்சோலை படுகொலை கூட கடந்த மூன்று வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் கொலைக்களத்துக்கு ஒப்பானது.

இந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக இலங்கை அரசு தமிழர் தாயகப் பகுதிகளில் பல கொலைக்களங்களை முன்னோடியாக செய்து முடித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக, இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் தான் தமிழர்களை படுகொலை செய்தது என்ற போர்க்குற்றம் சான்றாகாது.

தமிழர் பிரதேசங்கள் இன்று முழுச் சிங்கள பிரதேசமாக காட்சியளிப்பதற்கு காரணம் அங்கு குடியிருந்த தமிழர் கருவறை மட்டும் சிங்கள அரசு தன் படைகளைக்கொண்டு அழித்துள்ளமையே காரணமாகும்.

இன்று இலங்கை அரசு சர்வதேசத்தின் முன் தலை நிமிர முடியாமல் தத்தளித்துக்கொண்டு உள்ளது. சர்வதேசத்திடம் இருந்து தன்னைப் பாதுகாக்க சில நாடுகளின் கால்களில் வீழ்ந்து கிடக்கின்றது.

சர்வதேசம், இலங்கை தன்னைப் பாதுகாத்துக் கொள்ளட்டுமே என்று வழங்கப்பட்ட கால அவகாசத்தைக்கூட இந்த இனவாத இலங்கை ஆட்சியாளர்கள் அக்கால அவகாசத்தை தமிழர்களின் இருப்பிடங்களை அழிக்கவும், தமிழர்களை இல்லாதொழிக்கவும், ஒட்டுமொத்தத்தில் இலங்கையை ஒரு தனிச்சிங்கள நாடாக மாற்றவுமே பயன்படுத்திக் கொண்டது.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசால் தமிழர் தாயகப்பகுதியில் நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தின் போது அதன் அரச படைகளால் மேற் கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களின் புதிய புதிய ஆதாரங்கள் தற்போதும் வெளிவரத் தொடங்கியுள்ளது.

வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு இன்னும் வலுச்சேர்க்கு முகமாக இந்த புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் அமையுமென நம்பப்படுகின்றது.

இலங்கை அரக்கர் படைகளால் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் மகன் 12 வயது பாலகன் பாலச்சந்திரனை படுகொலை செய்தமையை வெளிக்காட்டும் புகைப்படங்களை இலங்கை அரசு மறுத்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பாக இறுதிப்போர் நடைபெற்ற வேளையில் கடமையில் இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமது படையினர் தலைவர் பிரபாகரனின் குடும்பம் பற்றிய விபரங்கள் அறிந்திருக்கவில்லையென்றும் அதனால் இப்பாலகனை தமது படையினர் கொலை செய்யவில்லையென்றும் தற்போது பாலச்சந்திரன் தொடர்பான புதிய புகைப்படங்கள் வெளியானதும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இறுதிப் போரின் போது படையினரால் விடுதலைப்புலி போராளிகள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்த பெண்பிள்ளைகளிடம் தமிழீழ தேசியத்தலைவர் குடும்பம் தொடர்பான புகைப்படங்களை அவர்கள் முன் காட்டி விசாரணை செய்வதும், பின் அப் பெண்பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற விபரம் தெரியாமல் போயுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கை கொலை வெறி அரக்கர் படைகளிடம் சிக்கிக் கொண்ட இவ்விளம் பெண்கள் படையினரால் தனித்தும் கூட்டாகவும் விசாரணை செய்வதும், பின் அவர்களுக்கு ஏதோ குளிர்பானம் அருந்தக் கொடுப்பதும் இப்புகைப்படங்களில் காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையின் கொலைவெறி பிடிதத்த மகிந்தவை தலைமையாகக் கொண்ட ஆட்சியாளரின் கட்டளையின் கீழ் படுகொலை செய்யப்பட்ட தலைவரின் மகன் பாலச்சந்திரனுக்கும் இந்த கொடிய கொலைகாரப் பாவிப்படைகள் முதலில் அந்தப் பாலகனுக்கு உணவையும், நீரையும் கொடுத்து அந்த உணவு உட்செல்லும் முன்பே கொடூரமாகப் படுகொலை புரிந்தது இங்கு கவனிக்கத்தக்கது.

எனவே இந்த பெண் பிள்ளைகளின் நிலையும் எண்ணும் போது நெஞ்சம் பதறுகின்றது. இன்று உலகம் தமிழரின் உரிமையையும், அவர்கள் சிங்கள அரசால் அடக்கப்பட்டு வருவதையும் உணரத் தொடங்கியுள்ளது.

உலகில் எங்கும் இதுவரை நடைபெறாத ஓர் போர்க்குற்றத்தை இந்த சிங்கள ஆட்சியாளர்களும் அதன் அரச படைகளும் தமிழர் தாயகத்தில் செய்து முடித்துள்ளது.

தமது வீரத்தைக் காட்டவோ “நாம் தமிழனை எவ்வாறு அழித்தோம் என்று பார்” என்ற விறுமாப்போடு,ஒரு மனிதநேயமற்ற திமிரோடும், தமது இனத்துக்கும், தமது குடும்பத்திற்கும் காட்டி மகிழ்வதற்காக ஒருவித விளையாட்டுத்தனமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இன்று அவர்களுக்கே உலை வைத்துள்ளது என்பது தான் உண்மை.

இன்று சர்வதேசத்தின் முன் சிங்கள பயங்கரவாத மகிந்த அரசை போர்க்குற்றவாளியாக நிறுத்தியுள்ளது இந்த போர்க்குற்ற சாட்சியங்கள்.

இந்த சாட்சியங்கள் வெற்றி பெற வேண்டும்,தமிழர்களுக்கான சுதந்திரம் விரைவு பெற வேண்டும்.

இந்த சிங்கள பயங்கரவாத அரக்கர் ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளியாக பிரகடனப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை வழங்க இந்த சர்வதேசம் முன்வர வேண்டும்.

தர்மம் என்றும் சாவதில்லை, ஒருவனுடைய உடலை மட்டும் தான் அழிக்க முடியுமே தவிர அவனது உணர்வுகளையும், இலட்சியத்தையும் சுதந்திர வேட்கையையும் எவனாலும் அழிக்க முடியாது இது உலகத்தின் நியதி.

 

- நன்றி முகநூல்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பாரளுமன்ற விஜயம் என்பதின் அர்த்தம் யாருக்காவது தெரியுமா?
 
அல்லது இது கண்காட்சியா?

 

வெளிநாட்டுக்கு காட்ட தான் இந்த ஏற்பாடு.

 

நன்றி நெடுக்ஸ் அண்ணா, முக்கியமாக இந்த திரியில் இணைக்கப்பட வேண்டிய விடையத்தை இணைத்துள்ளீர்கள். இல்லாவிட்டால் புனர்வாழ்வு பெற்ற புலிகள் நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்ல வெளிக்கிட்டிடுவார்கள். முன்னாள் புலிகள் உண்மையில் நன்றாக இல்லை, சூழ்நிலை கைதிகளாக சித்திரவதைகளை அனுபவித்தபடி உள்ளார்கள். எதையும் வெளியில் சொல்ல முடியாத நிலை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு காட்ட தான் இந்த ஏற்பாடு.

 

நன்றி நெடுக்ஸ் அண்ணா, முக்கியமாக இந்த திரியில் இணைக்கப்பட வேண்டிய விடையத்தை இணைத்துள்ளீர்கள். இல்லாவிட்டால் புனர்வாழ்வு பெற்ற புலிகள் நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்ல வெளிக்கிட்டிடுவார்கள். முன்னாள் புலிகள் உண்மையில் நன்றாக இல்லை, சூழ்நிலை கைதிகளாக சித்திரவதைகளை அனுபவித்தபடி உள்ளார்கள். எதையும் வெளியில் சொல்ல முடியாத நிலை.

 

இவற்றை இணைக்கத் தூண்டியது இரண்டு விடயங்கள்..

 

1. சிங்களவனின் தமிழின அழிப்பின் நரிக்குணங்கள்.

 

2. எம்மவரின் சிங்களவன் புகழ்பாடு சிந்தையில் குடியேறிவிட்ட நிரந்தர.. அடிமைத்தனம்..!

 

இங்கே இன்னொரு தலைப்பில் எம்மினத்திடையே சமூக விரோதச் செயல்களைத் தூண்டிக் கொண்டிருக்கும் சிங்கள சிறீலங்காவின் பேரினவாத இனவழிப்புப் படைகளை இலங்கைப் படையினர் என்றும்.. அதன் காட்டுமிராண்டி பொலிஸிற்கு.. காவல்துறை என்றும்.. கெளரவம் அளிக்க கேட்டுக் கொள்ளும் செய்திகள் ஊடுருவும் நிலையைக் காணும் போது.. என்ன மனிதப் பிறவிகள் இவர்கள் என்ற எண்ணமே மூளையில் உதிக்கிறது..!

 

அதோடு ஒப்பீடு வேற.. புலிகளின் காலத்தில் ஊரில் வாழ்ந்திராதவர்கள் கூட.. புலிகளின் காலத்திலும் சமூக விரோத கொலைகள் கொள்ளைகள் படுபயங்கரமாக நடந்தது என்ற கணக்கில்... எழுத இடமளிக்கும் நிலை.. இன்று எம்மிடையே..!

 

இந்த சுத்துமாத்து பித்தலாட்டங்கள் எல்லாம்.. மேற்படி துன்புறுத்தல்களையே தினமும் வாழ்வாகக் கொண்டு வாழும் மனிதர்களுக்கு என்ன விடிவைப் பெற்றுத்தரப் போகின்றன.. என்ற கேள்வியை அவர்களுக்கு மனச்சாட்சி என்ற ஒன்றிருந்தால் அது கேட்டுக் கொள்ளட்டும்..!

கிழக்கில் ஒரு கிராமத்தில் 15 மாவீரர் ,முன்னால் போராளிகள் குடும்பங்களுக்கு 

 
தலா ஒரு லட்சம் வீதம் தொழில் உருவாக்கி கொடுத்தோம் .இதைப் பார்வை யிட 
சென்ற நண்பரிடம் முன்னால் பெண் போராளி கேட்டார் ,கனடாவில் 3லட்சம் 
தமிழர்கள் வசிக்கின்றீர்கள் ,நீங்கள் எல்லோரும் ஒருமித்து உதவி செய்தால் முன்னாள் 
போராளிகள் ,மாவீரர் குடும்பங்கள் ,பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோருடைய தேவைகளை 
தீர்க்கலாம் தானே ?இதற்க்கு அவரால் பதில் சொல்லமுடியவில்லை .
 
 
இது யார் குற்றம் ,சிங்கள அரசா ?புலம்பெயர் அமைப்புகளா ?புலம்பெயர் தமிழர்களா ?

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களுக்கு மன்னிப்புக் கொடுக்க ஜனாதிபதி மறுப்பது ஏன்; கேள்வி எழுப்புகிறார் அரியநேந்திரன் எம்.பி
ca360ecdddd27125d70714de8b413dc0.jpeg

ரிசானா நபீக்கை மன்னித்து விடுவிக்கும் படி சவூதி மன்னருக்குக் கடிதம் எழுதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச பல வருடங்களாக இலங்கைச் சிறையில் வாடும் தமிழ் இளஞர்களை மன்னித்து விடுதலை செய்ய அவரின் கருணை உள்ளம் மறுப்பது ஏன் என கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிசானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்கும் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச சவூதி மன்னருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், சவூதி சட்டத்தின் படி இறந்த குழந்தையின் பெற்றோர் மன்னித்தால் மட்டுமே ரிசானாவை விடுவிக்க முடியுமெனக் கூறி அம் மன்னிப்புக் கிடைக்காததால் ரிசானாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டார்கள்.

ஆனால் எமது நாட்டு சட்டத்தின் படி ஜனாதிபதி நினைத்தால் யாருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக் முடியும். 

ரிசானா நபீக்கை மன்னித்து விடுவிக்கும் படியும் சவூதி மன்னருக்கும் கடிதம் எழுதிய ஜனாதிபதியின் கருணை உள்ளத்தை பாராட்டு வேண்டும்,

அதேவேளை இலங்கைச் சிறைச்சாலைகளிலும் புணர்வாழ்வு முகாம்களிலும் பல வருடங்களாக வாடும் தமிழ் இளஞ்ர்களை மன்னித்து விடுவிக்க ஜனாதிபதியின் கருணை உள்ளம் மறுப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியதுடன்,

860 தமிழ் அரசியல் கைதிகளும் சிறைச்சாலைகளில் வாடும் அதேவேளை பலர் புணர்வாழ்வு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி நினைத்தால் இவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/News_More.php?id=691602029611158370

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கிழக்கில் ஒரு கிராமத்தில் 15 மாவீரர் ,முன்னால் போராளிகள் குடும்பங்களுக்கு 

 
தலா ஒரு லட்சம் வீதம் தொழில் உருவாக்கி கொடுத்தோம் .இதைப் பார்வை யிட 
சென்ற நண்பரிடம் முன்னால் பெண் போராளி கேட்டார் ,கனடாவில் 3லட்சம் 
தமிழர்கள் வசிக்கின்றீர்கள் ,நீங்கள் எல்லோரும் ஒருமித்து உதவி செய்தால் முன்னாள் 
போராளிகள் ,மாவீரர் குடும்பங்கள் ,பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோருடைய தேவைகளை 
தீர்க்கலாம் தானே ?இதற்க்கு அவரால் பதில் சொல்லமுடியவில்லை .
 
 
இது யார் குற்றம் ,சிங்கள அரசா ?புலம்பெயர் அமைப்புகளா ?புலம்பெயர் தமிழர்களா ?

 

 

 

நல்ல கேள்வி!
என்னைப்பொறுத்தவரைக்கும்  புலம்பெயர் அமைப்புகளே காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.