Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தியின் ஜெனீவாப் பயணம் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Featured Replies

அனந்தியின் ஜெனீவாப் பயணம் மறைக்கப்பட்ட உண்மைகள்! பிப் 28, 2014 கடந்த மாதம் 27ம் திகதி வடக்கு மாகாண சபையின் அமர்வு இடம்பெற்றபோது ஜெனீவாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், வடமாகாண சபை உறுப்பினர்களும் செல்லவேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிந்திருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடருக்குச் செல்வதைத் தான் தவிர்த்துக் கொள்வதாக இரு தினங்களின் பின்னர் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தப் பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவு வழங்கிய வட மாகாணசபை, ஜெனீவாவுக்குச் செல்வதற்குப் பொருத்தமானவர் அனந்தியே என்றும் தீர்மானித்திருந்தது. இந்நிலையில், திடீரென ஜெனீவாவிற்குப் புறப்பட்டுச்சென்ற அனந்தி அவர்கள் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. வடமாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு அமைய அதன் பிரதிநிதியாக வடமாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைமப்பின் ஏற்பாட்டில் ஜெனீவாவுக்கான இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்த அனந்தி, ஜெனீவாவில் நடந்த சந்திப்பின்போது, இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையன்று நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக ஜெனீவா சென்று திரும்பியதன் பின்னர் யாழ் குடாவிலிருந்து ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார். ‘சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், ஜெனீவாவில் உள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து, போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர்களின் நிலைமைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்ளூர் விசாரணைகள் என்ற கண்துடைப்பு நடவடிக்கை தொடர்பாக விபரமாக எடுத்துக் கூறியிருப்பதாக’ அவர் தெரிவித்திருந்தார். அனந்தியின் ஜெனீவாப் பயணம் குறித்து சிங்களப் பேரினவாத அமைப்புக்கள் கடும் எச்சரிக்கையை விடுத்திருந்தன. அவரது பயணத்தைத் தடுத்து நிறுத்த பல்வேறு கைங்கரியங்களையும் மேற்கொண்டன. பயங்கரவாதத்திற்கு துணைபோனவராக அவரைக் குற்றஞ்சாட்டி, சுவிச்சர்லாந்து அரசு அவருக்கு விசா வழங்கக்கூடாது என்பது வரைக்கும் சிங்களப் பேரினவாத அமைப்புக்கள் கோரிக்கைவிடுத்துப் பிரச்சாரம் செய்திருந்தன. ஆனாலும் அவரது பயணம் இடம்பெற்றது. இலங்கையில் இருந்து அவர் இரகசியமாக இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கமுடியாது. இவரது பயணத்தின் பின்னர் சிங்களப் பேரினவாத அமைப்புக்கள் எவையுமே கண்டனங்களையோ எதிரான பிரச்சாரங்களையோ முன்னெடுக்கவில்லை என்பதில் இருந்து இந்தப் பயணம் குறித்த பல கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. இது குறித்து ஆராய முற்பட்டபோதே சில அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தன. அனந்தி, ஜெனீவாவில் உள்ள பிரமுகர்களைச் சந்தித்தபோது அவரது மொழி பெயர்ப்பாளராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே இருந்திருக்கின்றார். மனித உரிமை அமைப்புக்களின் பிரமுகர்கள், மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் சிலர் இவர்கள் சந்தித்திருந்தனர். இவர்களைச் சந்தித்த அந்தப் பிரமுகர்கள் பின்னர் தெரிவித்த கருத்துத்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்திருக்கும் அந்தப் பெண் (That lady) எதனையுமே வாய் திறந்து கதைக்கவில்லை என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இறுதிப்போரின் ஒரு கண்கண்ட சாட்சியாக மட்டுமல்லாமல், இராணுவத்தினரிடம் சரணடைவதற்காகத் தனது கணவனை நேரடியாகக் கையளித்தவர்களில் ஒருவர், பல தகவல்களைக் கூறுவார் என எதிர்பார்த்த அவர்கள், அனந்தி எதனையுமே கூறாமையால் ஆச்சரியமடைந்திருக்கின்றனர். இவர்கள் சந்தித்த பிரமுகர்களே, ‘என்ன இவர்கள் இவ்வாறு கதைக்கின்றார்கள்?’ என்று ஆச்சரியப்பட்டு, பின்னர் தங்களைச் சந்தித்த தமிழ்ப் பிரமுகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இலங்கையில் இருந்து எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஜெனீவா வந்த அனந்தி, எதற்காக மௌனமாக இருந்தார். சிறீலங்காவில் எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கருத்துக்களை வெளியிட்டுவரும் அவர், ஜெனீவா வந்து மௌனமாக இருந்திருக்கமாட்டார். இதனை ஆராய்ந்தபோதுதான் அவர் மௌனமாக்கப்பட்ட நிலைமையை அறியமுடிந்தது. அனந்தியின் கணவரான எழிலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவராவார். விடுதலைப் புலிகளை மேற்குலக நாடுகள் பயங்கரவாதிகளாகப் பார்க்கும் நிலையில் அனந்தியையும் அவ்வாறே நோக்குவார்கள் எனவும், சந்திப்புக்களில் அனந்தியை வாய் திறக்க வேண்டாம். அவர் சார்பாக தானே கதைப்பதாகவும் கூறிய சுமந்திரன், இந்தச் சந்திப்புக்களின்போது அவரே அனந்தியின் சார்பாக உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்புக்களின்போது ‘சிறீலங்கா மீது சர்வதேச விசாரணைகள் தேவையில்லை என்றும் உள்நாட்டில் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைத்துள்ள உள்ளக விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுத்தால் போதும்’ என்று அவர் கூறியுள்ளதாக அறியமுடிந்தது. அதாவது சிறீலங்கா அரசு எவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றதோ அதற்கு ஆதரவான பிரச்சாரங்களையே சுமந்திரனும் மேற்கொண்டிருக்கின்றார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறீலங்கா மீது கொண்டுவரப்படும் தீர்மானங்களின் மூலம் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை. எனினும், சிறீலங்காவின் தமிழின அழிப்பை சர்வதேச ரீதியாக எடுத்துச் செல்வதற்கும், சிறீலங்காவின் முகத்திரையைக் கிழிப்பதற்கும் இங்கு கொண்டுவரப்படும் தீர்மானங்கள் உதவும் என்பதால், தமிழர்கள் இதற்கு பெரும் ஆதரவு கொடுத்துவருகின்றார்கள். சர்வதேச விசாரணைக்குச் சிறீலங்காவைத் தள்ளிவிடுவதன் ஊடாகவே சிங்கள தேசம் புரிந்த இனப்படுகொலை அம்பலத்திற்கு வருவதுடன், தமிழர்களின் நியாயத்தையும் வெளிக்கொண்டுவரமுடியும். இதற்கான கடும் முயற்சிகளைத் தமிழ் மக்கள் மேற்கொண்டிருக்கையில், அதனை முறியடிக்கும் வகையில் சிறீலங்கா தனது நேசநாடுகள் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இந்தநிலையில்தான், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அம்பலப்படுத்தவேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சுமந்திரன் சிறீலங்காவிற்கு ஆதரவாக ஜெனீவாவில் கதைத்துவிட்டுச் சென்றிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரமுகர்களுடனான முக்கிய சந்திப்புக்கள் அனைத்திலும் எப்போதும் இரா.சம்பந்தனும், சுமந்திரனுமே கலந்துகொண்டு வருவதை அவதானிக்க முடியும். இந்த சுமந்திரன் 2009ற்கும் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்நுழைக்கப்பட்டவர். நியமன நாடாளுமன்ற உறுப்பினராக உள்நுழைந்த இவரது நடவடிக்கைகளுக்கும், கருத்துக்களுக்கும் எதிராகத் தமிழர் தாயகத்தில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் கடந்தகாலங்களில் எழுந்திருந்தன. இவரது உருவப்பொம்மையைக்கூட தூக்கிலிட்டுத் தமது எதிர்ப்பையும் தாயக மக்கள் பதிவாக்கியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. பின்கதவு வழியாக உள்நுழைந்த இவரது செயற்பாடுகள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக இருப்பதை அவ்வப்போது ஊடகங்களும் சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றன. இந்நிலையில், ஜெனீவாவில் இவர் செயற்பட்டவிதம் பலத்த சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றது. 2005ம் ஆண்டு டிசெம்பர் 25ம் திகதி தேவாலயத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஒட்டுக்குழுவின் சாதாரண ஓர் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கொள்ளமுடியாது. இதற்குப் பின்னால் உள்ள சூட்சுமக் கயிறு குறித்து ஆழமாக ஆய்வு செய்யப்போனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செயற்பட்டுக்கொண்டிருக்கும் பின்னணியைப் புரிந்துகொள்ளமுடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சர்வதேசத் தலைவர்களுடன் ஆளுமையைப் பேணக்கூடியவராக இருந்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அகற்றப்பட்டதும், அந்த வெற்றிடத்திற்குள் மொழி ஆளுமை என்ற பெயருடன் சுமந்திரன் நுழைக்கப்பட்டதற்கான விடை கிடைக்கமுடியும். ஆசிரியர் தலையங்கம் நன்றி: ஈழமுரசு http://www.sankathi24.com/news/38942/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்
ஈழமுரசு காரர்களே என்னையா சொல்ல வாறியள்?
 
ஜெனீவாவுக்குள் உங்களுக்கு ஆள் இருக்கிற மாதிரியும், அவர்கள் உங்களை கூப்பிட்டு இந்த தகவல்களை  காதோடு சொன்ன மாதிரியும் சொல்கிறீர்கள்.
 
இது மிகவும் இரகசியமான தன்மை கொண்ட, இலங்கையில் சாட்சிகள் உயிர் ஆபத்து குறித்து ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்தர்வர்களின் சர்வதேச தரத்திலான சந்திப்பு.
 
இலங்கைப் புலனாய்வுத் தரப்பினரும் அங்கே தகவலுக்கு அலையும் நிலையில், உங்களுக்கு சாதாரணமாக தகவல் கிடைத்த மாதிரி கிளப்பி விடுகிறீர்கள்.
 
அவருக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே ஒரு மொழி பெயர்ப்பாளர் தேவைப் பட்டிருப்பார். அது சுமந்திரன் தான் என்று எவ்வாறு உறுதியாக சொல்கிறீர்கள்?
 
எழிலினை விடுதலை செய்கிறோம், நீ இப்படி சொல்லு என்று சொன்னால் மாத்திரமே அரசு இந்த பெண்ணை தமது பக்கம் திருப்ப முடியும். அப்படி என்றாலும், கணவர் உயுருடன் இருப்பதை உறுதி செய்யாமல் அவரும் அங்கால பாய மாட்டார்.
 
நம்புவது கடினமாய் உள்ளது.
 

ஊடகம் இல்லை. இது பூடகம்.

அனந்தியின் ஜெனிவாப்பயணம் மறைக்கபட்ட உண்மைகள் என்ற திகில் மர்ம நாவலை எழுதிய எழுத்தாளருக்கு பாராட்டுகள். இறுதியில் யாவும் கற்பனை என்று எழுத மறந்தாலும் நாம்  புரிந்து கொண்டோம்.

சங்கதி அனந்தி யாழ்ப்பாணம் போய் வெளிவிட்ட அறிக்கையை படிக்கவில்லை. 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.