Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களத்தை மெருகூட்ட வாசகர்களின் பரிந்துரைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள வாசகர்களாகிய நாம் யாழ் களத்தை மெருகூட்ட ஏகமனதாக பின்வரும் பரிந்துரைகளைகளை நிர்வாகத்திற்கு முன்வைக்கின்றோம்.

1) "செய்திக்களம்" என்று புதிய ஒரு களம் ஆரம்பிக்கப்படல் வேண்டும். தற்போதுள்ள தகவற்களத்திலிருந்து "செய்திகள் தமிழீழம்", "செய்திகள் உலகம்" என்பவற்றிற்குப் பதிலாக இது செயற்படும்.

2) பரிந்துரைகள் செய்திக்களத்திற்கு மட்டுமே: மற்றவை தற்போதுள்ளது போலவே இயங்கலாம்.

3) செய்திக்களத்தில் ஒரு குறிப்பிட்ட அங்கத்துவ நிலை உள்ளவர் மட்டுமே செய்திகளைப்போட முடியும். உதாரணமாக இவர்களின் அங்கத்துவநிலையை S1 என்போம். அப்படி போடுபவர் அதில் எதை முக்கியம் என்றோ சர்ச்சைக்குரியது, விமர்சனத்திற்குரியது, சிந்திக்கப்பட வேண்டியது விவாதத்திற்குரியவை என்ற பகுதிகளை அடையாளப்படுத்தியோ அல்லது சாரம்சமாக என்ன என்று கூறியோ இணைக்க வேண்டும். மேலும் அவர்கள் கட்டாயம் செய்திமூலத்தை குறிப்பிடவேண்டும். இதற்காக செய்தி உள்ளீட்டுப் பக்கத்தில் "தலைப்பு" மற்றும் "செய்தி" என்பவற்றுடன் புதிதாக "செய்தி மூலம்" என்ற ஒரு கட்டாயமாக்கப்பட்ட உள்ளீட்டு பெட்டியை (required text box) இணைக்கலாம். செய்தி மூலம் இல்லை எனில் அல்லது சுய ஆக்கம் எனில் அதை இணைப்பவர் குறிப்பிடலாம். (உ+ம்: செய்தி: "கொழும்பில் குண்டுவெடிப்பு" மூலம்: "சக்தி செய்திகள்")

4) செய்திக்களம் பகுதியில் கருத்து எழுதுவதற்கு குறித்த இன்னொரு அங்கத்துவ நிலை வேண்டும். இதை S2 என்போம்.

5) செய்திக்களத்தைப் பொறுத்தவரை மூன்று அங்கதுவநிலைகள் அவசியம். மூன்றாவதை S3 என்போம். ஒருவர் களத்தில் புதிதாக இணந்தவுடன் அவருக்கு S2 அங்கத்துவ நிலை வழங்கலாம். அவர் படிப்படியாக S1 நிலைக்கு உயர்த்தப்படலாம். ஆனாலும், S1, S2 தரத்திலுள்ள யாராவது ஒழுங்கீனமான நடத்தைகளில் ஈடுபட்டால் அவர்கள் S3 நிலைக்கு இறக்கப்படுவார். S3 நிலையில் செய்திகளையும் மற்றவர் எழுதும் கருத்துக்களையும் வாசிக்க மட்டும் முடியும்.

6) போராளி வீரச்சாவு பற்றிய செய்திகளைப்போட "மாவீரர் வணக்கம்" என்ற புதியபகுதி தகவற்களம் பகுதியில் ஆரம்பிக்கப்படல் வேண்டும். அதற்குரிய reply button செயலிழக்கச் செய்யப்பட வேண்டும். இந்த வீரவணக்கங்களுக்கு யாராவது தங்களது உணர்வுகளினை பகிர்ந்து கொள்ள விரும்பினால் அவர்கள் அதை கவிதையாகவோ, ஒரு கட்டுரையாகவோ எழுதி நிர்வாகிகளுக்கு அனுப்ப வேண்டும். தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கருத்துக்கள் வரவேற்புக்குறியது.

நீங்க குறிப்பிட்ட

3) எனது கருத்துக்கு யாராவது பதில் கருத்து எழுதினால், உடனடியாக அதை இ-மெயிலில் எனக்கு தெரிவிக்கக்கூடிய தெரிவு (option) இருத்தல் வேண்டும்.

இதில் எனக்கு உடன்பாடு இல்லை. யாழ்களத்தில் ஆர்வமாய் கருத்து எழுதுபவர்கள் அதைப் பார்த்து வாசிக்கும் போதே தெரிந்து கொள்ளலாம்.

பார்ப்போம் மற்றவர்களும் தங்கள் அபிப்பிராயங்களை சொல்லட்டும்.

மோகன் பார்த்து முடிவு எடுக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

3) எனது கருத்துக்கு யாராவது பதில் கருத்து எழுதினால், உடனடியாக அதை இ-மெயிலில் எனக்கு தெரிவிக்கக்கூடிய தெரிவு (option) இருத்தல் வேண்டும்.

Enable email notification of replies? என்ற option உள்ளது. Tick பண்ணினால் உங்கள் email க்கு notification வரும். :rolleyes:

நன்றி பாலபண்டிதர் இந்த விடையத்தை ஆரம்பித்ததற்கு.

செய்திக் களம் என்று ஒரு தனிப்பிரவை உருவாக்கி பொறுப்பாக செய்திகளை இணைப்பவர்கள் மாத்திரம் அதற்குள் செய்திகள் கண்ணோட்டங்கள் ஆய்வுகளை இணைக்க அனுமதிக்க வேண்டும்.

தமிழ் ஊடகங்களின் நடத்தை பற்றி நாம் வைக்கும் குறைபாடுகளிற்கு ஒரு முன்மாதிரியாக யாழில் எப்படியான செய்திகள் அனுமதிக்கப்படுகிறது என்பதில் ஒரு பொறுப்புள்ள செய்தி ஆசிரியர்கள் போன்று நடந்து காட்டினால் இன்றய காலத்திற்கு பொருத்தமாகவும் தேவையானதாகவும் இருக்கும். ஊடக தர்ம விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும். மூலங்களிற்கு மரியாதை கொடுத்து அவற்றை குறிப்பிட வேண்டும். யாழில் அனுமதிக்கபடும் செய்திகள் உணர்சிகளிற்கு தீனியாக பொழுதுபோக்காக ஆர்பரிப்பதற்கான கண்ணோட்டத்தைக் கொண்டதாக இல்லது நிதானமான பொறுப்புள்ள கருத்தியலை உருவாக்கி போணக்கூடியவாறு இருக்க வேண்டும்.

யாழ்களத்தின் செய்திப் பிரிவில் புது விடையங்களை ஆரம்பிப்பதற்கு ஒரு அங்கத்துவ நிலை. அங்கு ஏலவே உள்ள செய்திகள் பற்றிய கருத்துக்களை வைப்பதற்கு இன்னொரு அங்கத்துவ நிலை என்று உருவாக்கப்பட வேண்டும். ஏனையவர்கள் அதற்குள் குப்பை கொட்ட முடியாது என்று நிலை கொண்டுவரப்பட வேண்டும்.

கருத்தாடலை, மாறுபட்ட கண்ணோட்டத்தை, தவறுகளை சுட்டிக்காட்ட அல்லது பயனுள்ள முக்கிய தகவல்களை கொண்ட செய்தி, கண்ணோட்டம், ஆய்வுகள் என்பன தான் இங்கு இணைக்கப்படுவதாக இருக்க வேண்டும். எல்லா இணையத் தளத்தில் வரும் செய்திகளையும் ஒரு இடத்தில வாசிப்பதற்காக வசதியாக வெட்டி ஒட்டிறம் என்பது ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயம் அல்ல.

வெட்டி ஒட்டிறவர் அதில் என்னத்தை முக்கியம் என்றோ சர்ச்சைக்குரியது, விமர்சனத்திற்குரியது, சிந்திக்கப்பட வேண்டியது விவாதத்திற்குரியவை என்ற பகுதிகளை அடையாளப்படுத்தியோ அல்லது சாரம்சமாக என்ன என்று கூறி இணைக்க வேண்டும்.

இவைகள் எல்லாம் செய்திப்பிரவு என்றதற்குள் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டியவை. ஏனைபகுதிகளில் எல்லோரும் வழமைபோல் கும்பல்ல கோவிந்தாவாக குப்பை கொட்டலாம்.

இதன் பிரச்சனைகள்:

1) விவாதத்திற்குரிய செய்திகளை மட்டும் யாராவது ஒரு நிர்வாகி யாழ்களத்தில் போட வேண்டும்.

24 மணிநேரமும் நிருவாகம் தனது பார்வையை யாழ் களத்தின் மீது வைப்பதற்கு வசதி இருப்பதாக நாம் கருதவில்லை. இவ்வாறு செய்யப்பட்டால் புதுச் செய்திகள் இணைக்கப்படுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கலாம். யாழ் கள நிருவாகிகள் ஆக மொத்தத்தில் சுமார் ஐந்து பேரே உள்ளார்கள். இதிலும் எல்லோரும் அக்டீவ் ஆக உள்ளார்களா என்பது தெரியாது. ஆனால் யாழ் களத்தில் அக்டீவான ஒட்டும்படை சுமார் பத்து தொடக்கம் பதினைந்து பேர் உள்ளார்கள்.

2) முகப்பில் ( http://www.yarl.com/ ) எப்போதும் பிந்திய செய்திகளே நிற்க வேண்டும் - இப்போது எந்த செய்திக்கு அங்கத்தவர்கள் கடைசியாக கருத்து எழுதினார்களே அது முன்னுக்கு வந்து விடுகிறது. புதிய விருந்தாளிகளுக்கு இது குழப்பத்தை கொடுக்கும். முன்னர் பலதடவை நான் யாழ் களவாசலுக்கு வந்ததுண்டு. இவர்கள் update பண்ணுவதில்லை என்று நினைத்து சென்றுவிடுவேன்.

இதற்கு மாற்றீடாக நிருவாகத்திடம் பத்திற்குப் பதிலாக பதினைந்து தமிழீழம் செய்தித்தலைப்புக்களை முன்பக்கத்தில் போடுமாறு கேட்கலாம்.

4) போராளி வீரச்சாவு பற்றிய செய்திகள் "அறிவித்தல்" பகுதியினுள் வரவேண்டும். அதற்குரிய reply button செயலிழக்கச் செய்யப்பட வேண்டும். அந்தச் செய்தியை செய்திகளுடன் போடுவதால், சில அறிவிலிகள், "அவர்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள்" என்று எழுதிச் செல்கிறார்கள். ஒரு மாவீரனை எப்படி மரியாதை செய்வது என்பது அரச விடயம் (state affair). இலத்திரனியல் ஊடகத்தில் அதை எப்படிச் செய்வது என்று புலிகள் சட்டக்கோவை வெளியிடும் வரை பொறுத்திருப்போம்.

வீரவணக்கங்கள் கூறுவதில் எதுவிதமான அறிவிலித்தனமும் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. நாம் எமது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றோம். இங்கு பிரச்சனையென்னவென்றால் இச்செய்தி எங்கு ஒட்டப்பட வேண்டும் என்பதில் குழப்பமாக இருக்கின்றார்கள். துயர்பகிரும் பகுதியிலும் ஒட்டுகின்றார்கள். தமிழீழச் செய்திகளுடனும் ஒட்டுகின்றார்கள். ஆனால் மாவீரர் அறிவிப்பு என யாழ் களத்தில் ஒரு தனிப்பகுதி உருவாக்கப்படுவது சிறந்தது என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவணக்கங்கள் கூறுவதில் எதுவிதமான அறிவிலித்தனமும் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. நாம் எமது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றோம். இங்கு பிரச்சனையென்னவென்றால் இச்செய்தி எங்கு ஒட்டப்பட வேண்டும் என்பதில் குழப்பமாக இருக்கின்றார்கள். துயர்பகிரும் பகுதியிலும் ஒட்டுகின்றார்கள். தமிழீழச் செய்திகளுடனும் ஒட்டுகின்றார்கள். ஆனால் மாவீரர் அறிவிப்பு என யாழ் களத்தில் ஒரு தனிப்பகுதி உருவாக்கப்படுவது சிறந்தது என நினைக்கின்றேன்.

நாம் எமது உணர்வுகளை எப்போதும் உள்ளது போலவே வெளிப்படுத்த முடியாது. ஒரு civilized society யிற்கு அது அழகல்ல. மாவீரர்களை ஏன் மற்றவர்களோடு புதைப்பதில்லை? அவர்கள் ஒருபடி மேலானவர்கள் என்பதால் தானே? துயர்பகிர்வு/நினைவு கூறல் பகுதியில் "தேன்கூடு வலைத்திரட்டிகளின் நிறுவனர் சாகரன்" இன் அறிவித்தலும் உள்ளது. மாவீரர்களினதும் உள்ளது.

மற்றது இது ஒரு திறந்த விவாதக்களம், யாரும் வந்து பார்கலாம். அப்படி வெளியாட்கள் வரும் போது மாவீரர்களுக்கு நாங்கள் தரும் மரியாதையை நினைத்து பயபக்தி வரவேண்டும்.

மாவீரர்களுக்கான அறிவ்வித்தலில் யாராவது தமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்பினால், அவர்கள் அதை ஒரு கவிதையாகவோ அல்லது ஒரு பந்தியாகவோ எழுதி நிர்வாகிக்ளுக்கு அனுப்பலாம். அதன் தரத்தைப் பொறுத்து நிர்வாகிகள் அதை பிரசுரிக்கலாம்.

Enable email notification of replies? என்ற option உள்ளது. Tick பண்ணினால் உங்கள் email க்கு notification வரும். :rolleyes:

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி கிருபன். இப்போது தான் பார்த்தேன்.

ஆராவது உந்த புலம் எண்ட பகுதியை புலம்பெயர்ந்த இடம் எண்டு மாத்தி விடுங்கப்பா புண்ணியமாய் போகும்....! புலம் எண்டால் எனக்கு தமிழீழம், லக்கிலுக்குக்கு இந்தியா( தமிழகம்) எண்டு வருகுது....

Edited by Thala

ஆராவது உந்த புலம் எண்ட பகுதியை புலம்பெயர்ந்த இடம் எண்டு மாத்தி விடுங்கப்பா புண்ணியமாய் போகும்....! புலம் எண்டால் எனக்கு தமிழீழம், லக்கிலுக்குக்கு இந்தியா( தமிழகம்) எண்டு வருகுது....

புலம் என்று யாழ்களத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, ஈழம் அல்லாத ஏனைய நாடுகள் எனக் கொள்ளலாம். இதன்படி லண்டன் மற்றும் தமிழகம் என்பன யாழின் சட்டத்தில் புலம் என்ற வரையறையினுள் வருகின்றன.

http://ta.wikipedia.org/wiki/ஈழப்_...கியம்

3) விவாதத்திற்குரிய செய்திகளை ஒரு குறிப்பிட்ட அங்கத்துவ நிலை உள்ளவர் மட்டுமே யாழ்களத்தில் போட முடியும். ஊடக தர்ம விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும். மூலங்களிற்கு மரியாதை கொடுத்து அவற்றை குறிப்பிட வேண்டும்.
செய்தி உள்ளீட்டுப் பக்கத்தில் "தலைப்பு" மற்றும் "செய்தி" என்பவற்றுடன் புதிதாக "செய்தி மூலம்" என்ற ஒரு கட்டாயமாக்கப்பட்ட உள்ளீட்டு பெட்டியை (required text box) இணைக்கலாம். செய்தி மூலம் இல்லை எனில் அல்லது சுய ஆக்கம் எனில் அதை இணைப்பவர் குறிப்பிடலாம். (உ+ம்: செய்தி: "கொழும்பில் குண்டுவெடிப்பு" மூலம்: "சக்தி செய்திகள்")

6) முகப்பில் ( http://www.yarl.com/ ) எப்போதும் பிந்திய செய்திகளே நிற்க வேண்டும் - இப்போது எந்த செய்திக்கு அங்கத்தவர்கள் கடைசியாக கருத்து எழுதினார்களே அது முன்னுக்கு வந்து விடுகிறது. புதிய விருந்தாளிகளுக்கு இது குழப்பத்தை கொடுக்கும். யாழ் களவாசலுக்கு வரும் புதியவர்கள் இவர்கள் update பண்ணுவதில்லை என்று நினைத்து சென்றுவிட வாய்ப்புண்டு்.

அல்லது

முகப்பில் இன்னும் அதிகமான செய்திகளை போடவேண்டும்.

இந்த இரண்டில் எது சிறந்தது? கருத்து தெரிவியுங்கள்.

முன்மொழிவு 1 இன் படி பிந்திய செய்திகளின் படி ஒழுங்கமைத்தால் பதிலளிக்கப்பட்ட (கருத்தெழுதப்பட்ட) இரண்டாம் பக்கத்திற்கு சென்ற செய்தி ஏனையவர்கள் பார்வையிடும் வாய்ப்பு குறையும்.

தேவையற்ற செய்திகள் தவிர்க்கப்படும் போது இந்தப் பிரச்சனை தானாகவே தீர்ந்து விட வாய்ப்புள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆராவது உந்த புலம் எண்ட பகுதியை புலம்பெயர்ந்த இடம் எண்டு மாத்தி விடுங்கப்பா புண்ணியமாய் போகும்....! புலம் எண்டால் எனக்கு தமிழீழம், லக்கிலுக்குக்கு இந்தியா( தமிழகம்) எண்டு வருகுது....

தல,

உங்கள் கருத்துக்கு நன்றி. நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவ்ருகிறேன். நீங்களும் அறிவியுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் என்று யாழ்களத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, ஈழம் அல்லாத ஏனைய நாடுகள் எனக் கொள்ளலாம். இதன்படி லண்டன் மற்றும் தமிழகம் என்பன யாழின் சட்டத்தில் புலம் என்ற வரையறையினுள் வருகின்றன.

http://ta.wikipedia.org/wiki/ஈழப்_...கியம்

சாணக்யன்,

நீங்கள் தந்த இணைப்பில், குறிப்பாக "புலம்" என்றால் என்ன என்பதன் விளக்கம் இல்லை.

ஆனால், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தவர்களை எவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறுகிறோமோ அதே போல, ஒரு புலத்தில் இருந்து இன்னொரு புலத்திற்கு பெயர்ந்தவ்வர்களை புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறலாம்.

இன்னொரு உதாரணம். "காந்தப்புலம்" என்பதை எடுங்கள். இது, காந்தத்தின் சக்தி பரவி இருக்கும் இடம் என வருகிறது. எனவே புலம் என்பது தயகத்தையே குறிக்கும்.

யாராவது ஒரு LIFCO Tamil dictionary, அல்லது கழகத் தமிழ் அகராதி வைத்திருந்தால் பார்த்துச்சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் என் தமிழ் வணக்கம்,

மாவீர வணக்கத்திற்கு என்று ஒரு சிறப்புப் பகுதி இருப்பதே சிறந்தது அதில் மற்றையோரின் அறிவித்தல்கள் ஒட்டுதல் தவிர்க்கப் பட வேண்டும்.

நான் யாழ்.கொம் இல் புதிதாக இணைந்தவர் தான் ஆனால் பதில் போடும் செய்திகள் முன்னுக்கு நிற்பதால் தளத்தை யாரும் அன்றைய தினம் நிர்வகிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. பதிலில் இருக்கும் தேதியைக் கொண்டு அதைக் கணித்துக் கொள்ளலாம்.

பதில் போடுபவர்கள் அனைவரும் முக்கியமாக அவதானிக்க வேண்டியது எழுத்துப் பிழைகள். அவசரத்தில் தட்டச்சும் போது சில எழுத்துக்கள் பிசகும் ஆகவே பதிவை அனுப்ப முன்னர் ஒரு தடவை வாசித்து பாருங்கள்.

எமது மொழிக்கான போராட்டம் ஆகவே அதில் எழுத்துப்பிழைகள் தவிர்ப்பது சிறந்தது. தனிமனிதத் தாக்குதல்களும், அரட்டைகளும் முக்கியமான இழைகளில் தவிர்க்கப்படுதல் இன்னும் சிறப்பு. பிரதான செய்திகள் கூட அரட்டைகளால் திசை திரும்பப் படுகின்றது.

கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி..

யாராவது ஒரு LIFCO Tamil dictionary, அல்லது கழகத் தமிழ் அகராதி வைத்திருந்தால் பார்த்துச்சொல்லுங்களேன்.

புலத்திற்கு வந்ததடா சோதனை!!!!!!

அகத்திலிருந்து புலம் நோக்கிப் பெயர்ந்தவர்களே புலம் பெயர்ந்தவர்கள்.

அது தெரியாமலா இங்கே தமிழீழம், புலம் என இரு பிரிவுகள் இடப்பட்டுள்ளன.

பண்டிதர் உங்களுக்கே இந்தத் தடுமாற்றம் என்றால்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகத்திலிருந்து புலம் நோக்கிப் பெயர்ந்தவர்களே புலம் பெயர்ந்தவர்கள்.

அகத்திற்கு எதிர்ச்சொல் "புறம்". புலம் அல்ல.

அது தெரியாமலா இங்கே தமிழீழம், புலம் என இரு பிரிவுகள் இடப்பட்டுள்ளன.

அதை மாற்ற வேண்டுமென்பதே தல யின் கோரிக்கை.

Edited by balapandithar

அதை மாற்ற வேண்டுமென்பதே தல யின் கோரிக்கை.

"யாழ்" என்பதை "குழல்" என்று மாற்ற ஏன் "தல" இன்னமும் கோரவில்லை?

( நீர் முறைப்பது தெரிகிறது. நான் இத்துடன் இந்த வம்பிலிருந்து விலகுகிறேன். யாராவது மணிகட்டின வித்தகர்கள் வந்து தான் இந்த இக்கட்டில் உள்ள புலத்தை காத்தருள வேண்டும்.) :icon_idea:

புலம் என்று யாழ்களத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, ஈழம் அல்லாத ஏனைய நாடுகள் எனக் கொள்ளலாம். இதன்படி லண்டன் மற்றும் தமிழகம் என்பன யாழின் சட்டத்தில் புலம் என்ற வரையறையினுள் வருகின்றன.

http://ta.wikipedia.org/wiki/ஈழப்_...கியம்

"புலம்" என்பது வயல், இடம், திக்கு, அறிவு, துப்பு, நூல் , வேதம், உணர்வு எண்று சில அர்த்தங்களையும் கொடுக்கிறது....

சொந்த ஊர்களில்(புலம்) இருந்து (இடம்)பெயர்ந்தவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் என்கின்றோம்...!

Edited by Thala

புலம் (p. 722) [ pulam ] , s. rice-field, வயல்; 2. knowledge, information; 3. sharpness of mind, நுண்மை; 4. any of the five senses, புலன்; 5. region, tract of country, quarter, திக்கு; 6. place, location, இடம்

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict....table=fabricius

சாணக்யன்,

நீங்கள் தந்த இணைப்பில், குறிப்பாக "புலம்" என்றால் என்ன என்பதன் விளக்கம் இல்லை.

ஆனால், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தவர்களை எவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறுகிறோமோ அதே போல, ஒரு புலத்தில் இருந்து இன்னொரு புலத்திற்கு பெயர்ந்தவ்வர்களை புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறலாம்.

இன்னொரு உதாரணம். "காந்தப்புலம்" என்பதை எடுங்கள். இது, காந்தத்தின் சக்தி பரவி இருக்கும் இடம் என வருகிறது. எனவே புலம் என்பது தயகத்தையே குறிக்கும்.

யாராவது ஒரு LIFCO Tamil dictionary, அல்லது கழகத் தமிழ் அகராதி வைத்திருந்தால் பார்த்துச்சொல்லுங்களேன்.

அட மூன்று எழுத்தினுள் இவ்வளவு பிரச்சனையா?

என்னிடம் உள்ள கதிரவேற்பிள்ளையால் எழுதப்பட்ட தமிழ்மொழி அகராதியில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

புலம் - அறிவு, இடம், ஒலி முதலைப்புலன், திக்கு, நுண்மை, மேட்டுநிலம், வயல், புலவரிசி

எனக்கு தெரிந்த ஒரு சிறந்த தமிழ் பண்டிதர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் புலம் என்றால் என்ன என்று கேட்டுவிட்டு சொல்கிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்த ஒரு சிறந்த தமிழ் பண்டிதர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் புலம் என்றால் என்ன என்று கேட்டுவிட்டு சொல்கிறேன்!

காத்திருக்கிறோம் மாப்பிளை!

http://www.tamilnation.org/books/Dictionaries/index.htm

இந்த இணையத்தளத்தின் வலது பக்கமாக சில தமிழ்அகராதிகளுக்கான இணைப்புக்கள் உள்ளன. சில அகராதிகளுக்கு யாழ்களம் போலவே unicode முறையில் தமிழ் எழுதும் வசதி உள்ளது. தமிழ் அகராதி கைவசம் இல்லாதவர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். தேவை உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

புலம் என்பது தாயகத்தைக் குறிக்கும் என்றுதான் நானும் கருதுகிறேன்.

ஆனால் வெளிநாடுகளில் அதன் அர்த்தம் மாறி விட்டது.

புலத்தை விட்டு பெயர்வதுதான் புலம் பெயர்தல் என்று நினைக்கிறேன்.

நான் எழுதும் போது வெகு கவனமாக "புலம் பெயர்" என்றுதான் எழுதுவதுண்டு. கவனித்துப் பார்த்தால் தெரியும்.

அதே வேளை "புலம்" என்பதற்கு திக்கு என்றும் அர்த்தம் உண்டு.

அந்த அர்த்தத்தில் எடுத்தீர்கள் என்றால் "புலம்" என்பது நாங்கள் வாழும் நாடுகளைத்தான் குறிக்கும்.

பாலபண்டிதர் உங்கள் இந்த "பணி" வெற்றியடைய வாழ்த்துக்கள். இது சம்பந்தமான எனது கருத்து.

இப்போது உள்ள பகுதிகள் அப்படியே இருக்க " செய்தி ஆய்வு" என்ற ஒரு பகுதி புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்தப் பகுதி மற்றைய பகுதிகள் மாதிரி இல்லாமல் அரட்டைகள் அற்று செய்திகளின் உண்மை தன்மை பற்றி ஆராய்வதாக இருக்க வேண்டும். அதை கண்காணிக்க யாழ்களம் புதிதாக சில மட்டுநிறுத்தினர்களை (வேண்டுமானால் இந்தப் பகுதிக்கு மட்டும்) நிறுவலாம். எனென்றால் இப்போது இருக்கும் மட்டுநிறுத்தினர்கள் எல்லா பகுதிக்கும் சென்று வாசித்து தேவையற்ற கருத்துக்களை தடை செய்யும் முன்னமே அவை பெரும்பாலான active வாசகர்களை சென்றடைந்து விடுகிறது.

நான் குறிப்பிடும் " செய்தி ஆய்வு" பிரிவுக்கு கட்டாயம் active மட்டுநிறுத்தினர்கள் அவசியம் தேவை.

இப்பகுதிக்கு மட்டுநிறுத்தினராக நிச்சயமாக நியமிக்கப் பட கூடாதவர் என நான் நினைப்பது

1். குறுக்காலபோவான்

2.நெடுக்காலபோவான்

3.கிருபன்

4.தல

5.வினித்

6.நாரதர்

7.தூயவன்

8.சாணக்கியன்

9.மாப்பிள்ளை

10.பாலபண்டிதர்

அன்புடன்

ஒஸ்லோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலபண்டிதர் உங்கள் இந்த "பணி" வெற்றியடைய வாழ்த்துக்கள். இது சம்பந்தமான*****

வாசகன் (ஒஸ்லோ),

உங்கள் தகவலுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. நீங்கள் தெரிவித்த கருத்தை பரிந்துரைகளில் சேர்த்துவிட்டேன்.

இந்த விவாதத்தின் நோக்கம் ஒரு மிகச் சிறந்த ஒரு பரிந்துரையை நிர்வாகத்திற்கு அனுப்புவது மட்டுமே. புலம் பெயர் ஊடகத்துறையின் செயற்பாடுகள் போதவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்ருவரும் ஒரு நிலையில் வாசகர்களாக மட்டும் நின்றுவிடாது எவ்வாறு நாங்களும் தேசியத்தைப் பலப்படுத்தலாம் என்று சேர்ந்து குழுமமாகச் சிந்திப்போமென்றதன் (brainstorming) வெளிப்பாடே இது.

இது வரை ஒரு பத்துப் பேர் வரையில் தான் கருத்துத் தெரிவித்தார்கள். யாழில் 3500 பேர் வரை அங்கத்தவர்களாக உள்ளனர். எனவே இன்னும் ஒரு கொஞ்ச நாள் பொருத்திருப்பது நல்லது.

இன்னும் இன்னும் பலர் கருத்துக் கூறவேண்டும். ஏனெனில் நாங்கள் அடிக்கடி மாற்றம் செய்யும் படி நிர்வாகத்தைக் கோர முடியாது.

மட்டுநிறுத்தினர்கள் தொடர்பாக ஆராய்வது இந்த விவாதத்தின் நோக்கமல்ல. எமது பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, ஒருவேளை நிர்வாகம் அதை ஏற்றுக்கொண்டால் வரப்போகும் எதிர்கால விடயம் அது. மேலும் மட்டுநிறுத்தினர்களை தீர்மானிக்கப்போவது நிர்வாகமே. நீங்கள் விரும்பினால் உங்கள் பரிந்துரைகளை நிர்வாகத்திற்கு அனுப்புங்கள்.

நடந்துகொண்டிருக்கும் இந்த விவாதத்தில் மென்மேலும் பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கவேண்டும் என பணிவாக வேண்டிநிற்கும்,

பாலபண்டிதர்.

இது வரை ஒரு பத்துப் பேர் வரையில் தான் கருத்துத் தெரிவித்தார்கள். யாழில் 3500 பேர் வரை அங்கத்தவர்களாக உள்ளனர். எனவே இன்னும் ஒரு கொஞ்ச நாள் பொருத்திருப்பது நல்லது. இன்னும் இன்னும் பலர் கருத்துக் கூறவேண்டும்.

ஒரு சிறு விளக்கம் தரலாமென்று நினைக்கிறேன். யாழ் களத்தில் சுமார் 3400 உறுப்பினர்கள் இருந்தாலும் இதுவரை சுமார் 1000 பேர் அளவிலேயே ஆககுறைந்தது ஒரு கருத்தையாவது யாழ் களத்தில் எழுதி உள்ளார்கள். இதிலும் அக்டீவ் ஆக இருந்து இப்போது கருத்து எழுதும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நூற்றிற்கும் குறைவாகவே இருக்கும். எனவே யாழ் கள உறுப்பினர்களின் எண்ணிக்கை 3400 உறுப்பினர்கள் என எண்ணுவது வெறும் பிரமையே!

யாழ் கள உறுப்பினரின் அக்டிவிட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களை இங்கே பெறலாம்:

http://www.yarl.com/forum3/index.php?act=members

இந்த முன்மொழிவுகளுக்கு பதில் வழங்கப்பட்டதா?

யாழில் புலம் என்றால் தமிழீழமா வெளிநாடா? முடிவை ஆதாரத்துடன் தெரிவியுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.