Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் ஒன்றியமா?? அது எங்கே இருக்கின்றது ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் ஒன்றியமா?? அது எங்கே இருக்கின்றது ?

அதன் செயற்பாடுகள் என்ன?? என்று ஒரு கட்டுரையை அதன் செயற்பாட்டின் வேகமோ விவேகமோ போதாது என்கிற ஆதங்கத்தில் ஒரு பேப்பரிலும் மற்றும் யாழிலும் ஒரு வருடத்திற்குமுன்னர் நான் எழுதியிருந்தேன் . பின்னர் அதைப்பற்றிய வாதப்பிரதி வாதங்கள்நடந்து ஒய்ந்து போனது.

ஆனால் அந்த கட்டுரை பற்றிய நோக்கத்தை நானும் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தேன் காரணம் அந்த அமைப்பினைச் சேர்ந்தவர்கள் எவரிடமும் எனக்கு எதுவித தனிப்பட்ட கோபமும் கிடையாது காரணம் எவரையுமே எனக்குத் தனிப்படத் தெரியாது அது மட்டுமல்ல அவர்களிற்கும் என்னைத் தெரியாது. இது இப்படியிருக்க இன்று யெர்மனியில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினால் ஒரு கருத்தரங்கும் பயிற்சிப் பட்டறையும் நடாத்தப்பட்டது.

அதன் தலைவராக பி.பி.சி. தமிழோசையின் முன்னாள் தமிழ் பிரிவு ஆனந்தியக்கா செயலாளர் மற்றும் ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் கோபி உட்பட வேறு சிலரும் பேச்சாளர்காக கலந்து கொண்டு நடாத்தப்பட்டது. இந்தப் பட்டறையில் கலந்து கொண்ட சர்வதேச புலம் பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பாக கலந்து கொண்ட அதன் தலைவர் திரு.முருக தாசன் அதன் ஊடகவியலாளர் என்று சொல்லும் திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் பாக்கியநாதன் மற்றும் வரதராஜா ஆகியோர் கலந்து கொண்டு சாத்திரியார்?? எங்கோ இருக்கிறார்?? தங்கள் பெயரிற்கு பின்னால் இத்தனை பட்டங்களை வைத்திருக்கிறோமே எப்படி எங்களைப்பற்றி எழுதலாமென்கிற ஆராச்சியினை பாக்கியநாதன் அவர்கள் மங்கலவிளக்கேற்றலுடன் தொடக்கி வைக்க கோசல்யா அவர்களால் பயிற்சி பட்டறை நடாத்த போன ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் கோபி அவர்களை முருகதாசனின் உதவியுடன் தட்டி நிமிர்த்தி விட்டார்கள்.

சாத்திரிக்கு யார் செய்தி கொடுத்தார் எழுத்தாளர் ஒன்றியம் எழுதிய பொழிப்புரையை ஒரு பேப்பர் ஏன் வெளியிடவில்லை என்ற கேள்விகளால் ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார். ஊடகவியலாளர்களுக்கு இந்த எழுத்தாளர் ஒன்றியத்தின் பொறுப்புமிக்கவர்கள் கொடுத்த தொல்லையை கண்டிக்கிறேன்.

விமர்சனங்கள் ஒரு அமைப்பின் மீது அல்லது செயற்பாட்டாளர்களின் மீது வைக்கப்பட்டால் அதில் உள்ள குறைகளை திருத்திக் கொள்வதைவிடுத்து விமர்சித்தவரையும் பத்திரிகையாசிரியர்களையும் தொல்லைக்கு உட்படுத்தும் இத்தகைய சிறுபிள்ளைத்தனமான எழுத்தாளர்களை என்ன சொல்வது ?

இவர்களது இடைஞ்சலால் இந்தப் பயிற்சிப் பட்டறை நடாத்த சென்றவர்களின் நோக்கம் தடைப்பட்டது மட்டுமல்லாமல் இடைஞ்சலையும் ஏற்படுத்தி ஏற்படுத்தியிருக்கின்றனர். இவர்களின் ஒன்றியம் பற்றி நான் எழுதிய கட்டுரையையும் இங்கு இணைத்திருக்கிறேன் படித்து பாருங்கள் நான் இவர்களிடம் என்ன கேட்டேன் என்பது தெளிவாகவே தெரியும் உங்கள் கடைமையை முடிந்தளவு ஒழுங்காக செய்யுங்கள் இல்லாவிட்டால் வழிவிடுங்கள் இதுதான் கேட்டது. ஆனால் தானும் படுக்கமாட்டேன் தள்ளியும் படுக்கமாட்டேன் என்று அடம் பிடித்தால் தள்ளிவைப்பதை தவிர வேறு வழியில்லை.நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .

நன்றி வணக்கம் அன்புடன் சாத்திரி

கடந்த வருடம் நான் ஒரு பேப்பரில் எழுதிய கட்டுரையை படிக்க இங்கெ அழுத்துங்கள்

செய்தியாளர் ஒன்றியத்தின் சந்திப்பில் நடைபெற்ற இதர விடயங்கள் பற்றி இனிவரும் நாட்களில் தரப்படும்....

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகவியலாளர்கள் யார் யார்?

எழுத்தாளர்கள் ஒன்றியத்தின் பொறுப்புமிக்கவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் யார்?

இந்த மாகாநாட்டின் நோக்கம் தான் என்ன?

கோவிக்க வேண்டாம் சாத்திரியாரே எல்லாம் சிதம்பரசக்கரத்தில் ஏதோ ஒன்றை பார்த்தது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா!

இந்தமுறையும் தும்புக்கட்டையாலோ, துடைப்பங் கட்டையாலையோ அடி விழாமல் இருந்தால் சரி. :)

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் ஒன்றியமா?? அது எங்கே இருக்கின்றது ?

இப்படி ஒன்று இருக்குதா சாத்திரி ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலரிற்கு பழைய கட்டுரையின் இணைப்பு வேலை செய்யவில்லையென்று தெரிவித்ததால் அந்த கட்டுரையை இங்கேஇணைத்திருக்கிறென் கோபிதா இதனை படியுங்கள் ஓரளவு புரியும்

sathiriApr 8 2006, 03:12 PM

இன்று புலம் பெயர் நாடுகளில் பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வார மாத இதழ்கள் என்று பலவும் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தபடுகின்றது அதே போல இன்றைய தொழில் நு.ட்ப புரட்சியின் ஒரு உன்னத கண்டுபிடிப்பால் இன்று இணைய பத்திரிகைகளும் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன ஒரு சில

வேண்டாத சம்பவங்களை தவிர்த்து பார்த்தால் புலத்து தமிழரின் இந்த முயற்சிகள்

பாராட்டபட வேண்டியவை.

பாராட்டுவோம். இவை இப்படியிருக்க இங்கு இந்த தமிழ் ஊடக மற்றும் எழுத்தளர்கள் ஒன்றியம்

என்று ஒண்டு உண்டு அதற்கு தலைவர்என்றும் ஒருவர் உள்ளார். இது எத்தனை

பேருக்கு தெரியும்? இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக ஒரு ஆறு மாதங்களிற்கு முன்னர் நான் கேள்விப்பட்டபோது உங்களை மாதிரித்தான் நானும் முழித்தேன்.

காரணம் இப்படியொரு அமைப்பு இயங்குவதாக வாசகர்களிற்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லாவிட்டாலும் புலம் பெயர் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்

எத்தனை பேருக்கு இந்த அமைப்பை பற்றி தெரியும்? எத்தனை பேர் இதனுடன் இணைந்து செயல்படுபவர்களாகவோ

அல்லது அங்கத்தவராகவோ இருக்கிறார் என்று முயன்றவரை முயற்சி பண்ணி விசாரித்ததில் பெரிய ஊடககங்களிற்கோ

ஏன் புலத்தில் பெயர் சொன்னால் தெரிய கூடிய எழுத்தாளர்களிற்கோ இப்படி ஒரு ஒன்றியம் ஒன்று இருப்பது தெரியாது.

காரணம் அந்த ஒன்றியத்தின் செயல் வேகமாகவோ விவேகமாகவோ செயற்பட்டு தமிழ் ஊடகவியலாளர்களையோ அல்லது

எழுத்தாளர்களையோ உள்வாங்கவில்லையென்பதே. இன்று புலத்தில் தமிழ் எழுத்தாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அடித்த தேங்காய் போல் சிதறி ஆளுக்கு ஒரு இலக்கிய வட்டம்இ இலக்கண வட்டம் என்று வட்டங்கள் அமைத்து அந்த வட்டத்திற்குள்ளேயே கட்டம் கட்டமாக பிரிந்து போய் வருடத்தில் ஒருமுறை எங்காவது ஒரு மண்டபத்திலோ அல்லது

ஒரு வீட்டிலோ கூடி சில தீர்மானங்கள் அல்லது கண்டனங்களை ஞஉறைவேற்றி விட்டு கலைந்துஇ கரைந்து காலப்போக்கில் காணாமல் போய் விடுகிறார்கள். இப்படி இவர்களது அறிவு ஆற்றல் எல்லாம் வீணே விழலுக்கிறைத்த நீராய் வீணாகாமல் அதை அணைகட்டி ஒருங்கிணைத்து ஒரே பாதையில் எமது தமிழ் தேசியத்தின் பலத்திற்காகவும் இவர்களை கொண்டே புலத்தின் எமது இளம் சந்ததியின் சக்திகளையும் அறிவாற்றலையும் எமது தாயகம் நோக்கியதாய் திருப்ப வேண்டியது இந்த புலம்பெயர் ஊடக மற்றும் எழுத்தாளர் ஒன்றியத்திற்கு முன் உள்ள பாரிய கடமையாகும். ஆனால் அந்த ஒன்றியம் என்ன செய்து கொண்டிருக்கிறதென்றால் தனது இருப்பை காட்டி கொள்ள அவ்வப்போது ஒரு அறிக்கை. அதாவது பலரையும் போய் சென்றடைய கூடிய பத்திரிகைகளில் கூட இல்லை தங்களிற்கு தெரிந்த ஒருசில இணைய தளங்களிற்கு எழுதி அனுப்பி விட்டு மறக்காமல் தலைமை தன்னுடையை பெயரை மட்டும் போட்டு விடுவார்.

அப்படித்தான் அண்மையில் மறைந்த மாமனிதர் யோசப் பரராயசிங்கத்தின் படுகொலைக்கும் அந்த ஒன்றியத்தின் தலைவர் ஏதோ தான் வள்ளுவரின் வம்சாவழி வந்தவர் போல இரண்டே இரண்டு வரியில் இரண்டு கண்டன அறிக்கைகளை விட்டார் அதுவும் ஒரேயொரு இணையதளத்தில் பார்க்க முடிந்தது. கீழே மறக்காமல் வழமை போல தனது பெயர் இட்டுருந்தார். காரணம் அதை போடாவிட்டால்இவரையாரென்று எவருக்கும் தெரியாது. (போட்டாலும் தெரியாது) ஏன் மற்றைய ஊடகங்களிற்கு இவர் அனுப்பவில்லையா? அல்லது அனுப்பியும் அந்த ஊடகங்கள் இவரது இரண்டு வரி கண்டனத்தை பார்த்து இதெல்லாம் ஒரு கண்டனமா? என்று பிரசுரிக்கவில்லையா தெரியவில்லை. இதற்கு முதலும் பெல்ஜியத்தில் அய்ரொப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான சில கட்டுப்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் அய்ரோப்பிய தமிழர்களால்

நடாத்த பட்ட மாபெரும் கண்டன பேரணி பற்றிய விபரங்களை மற்றைய அய்ரோப்பிய ஊடகங்கள் மூலம் அய்ரோப்பிர்களிற்கும் எடுத்து சென்று அந்த ஊர்வலத்தின் சரியான பலாபலனை அறுவடை செய்ய தவறியதற்காகவும் இந்த ஒன்றியத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பலரின் கண்டனங்கள் எழுந்ததும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று சாதாரணமாக பொழுது போக்குவதற்காகவே பலர்தங்களிற்கு என்று இணையத் தளங்களை உருவாக்குகின்ற காலமிது இந்த காலத்தில் இப்படியான ஒரு பொறுப்புவாய்ந் ஒரு அமைப்புதனக்கென்று ஒரு இணைய தகவல் தளம்ஒன்றை கூட இதுரை அமைக்கவில்லை. நமதுஇலக்கு என்று ஒரு பத்திகை மட்டும்மாதாந்ம்வெளிவருகிறத

கறுப்பி மற்றும் கோபிதா!

புலம்பெயர் எழுத்தாளர் எங்கு உள்ளது என்பதை "ஒரு பேப்பர்" பொறுப்பாசிரியர் கோபியிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.

சாத்திரி ஒரு பேப்பரில் எழுதிய விமர்சனத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் இலக்குப் பத்திரிகை ஒரு பக்கப் பத்திரிகையாக வெளவந்தது என்று தகவல் தவறு. அது ஏறக்குறைய 20 -30 பக்கங்களோடு வெளிவந்தது.

ஆனால் எழுத்தாளர்களால் மக்களை கவர்வது போன்று எழுத முடியாததால் "இலக்கு" வரவேற்பைப் பெறவில்லை. அத்துடன் பண நெருக்கடியும் சேர்ந்து கொள்ள இலக்கு தொடர்ந்து வெளிவர முடியாது போய்விட்டது.

தொடர்ந்து வெளிவந்திருந்தால், எழுத்தாளர் ஒன்றியத்தில் உள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக இருந்திருக்கும்.

மற்றையபடி சாத்திரியின் விமர்சனத்தைப் பற்றி எழுத்தாளர் ஒன்றியம் சந்தோசப்படலாம்

"இவர்களது அறிவு ஆற்றல் எல்லாம் வீணே விழலுக்கிறைத்த நீராய் வீணாகாமல் அதை அணைகட்டி ஒருங்கிணைத்து ஒரே பாதையில் எமது தமிழ் தேசியத்தின் பலத்திற்காகவும் இவர்களை கொண்டே புலத்தின் எமது இளம் சந்ததியின் சக்திகளையும் அறிவாற்றலையும் எமது தாயகம் நோக்கியதாய் திருப்ப வேண்டியது இந்த புலம்பெயர் ஊடக மற்றும் எழுத்தாளர் ஒன்றியத்திற்கு முன் உள்ள பாரிய கடமையாகும்"

இப்படி சாத்திரி எழுதியிருக்கிறார். எழுத்தளர் ஒன்றியத்தில் உள்ளவர்கள் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள் என்றும், தமிழ் தேசியத்தின் பலத்திற்காக உழைக்கக்கூடிய தகமையை கொண்டுள்ளவர்கள் என்றும் சாத்திரி எழுதியதற்காக உண்மையில் எழுத்தாளர் ஒன்றியம் சாத்திரிக்கு பாராட்டு விழா வைக்க வேண்டும்

ஆனால் ஒன்றரை வருடமாக கோபத்தோடு இருப்பதன் காரணம் புரியவில்லை.

Edited by சபேசன்

ஆஹா!இந்தமுறையும் தும்புக்கட்டையாலோ, துடைப்பங் கட்டையாலையோ அடி விழாமல் இருந்தால் சரி. <_<
ஆருக்கு?! <_<
கறுப்பி மற்றும் கோபிதா!புலம்பெயர் எழுத்தாளர் எங்கு உள்ளது என்பதை "ஒரு பேப்பர்" பொறுப்பாசிரியர் கோபியிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.
சபேசனுக்கு இருட்டடிப்பு வேலையும் தெரியுமா? பலே! பலே!!நீங்களும் யேர்மனி ஓபகெளசனிலதானே இருக்கிறீங்கள்? அல்லது லண்டனுக்குள்ள யேர்மன் பாஸ்போட்டோட போயாச்சா?! :lol: :P

சோழியன்!

நேற்றைக்குப் பின்பு கோபிக்குத்தான் என்னை விட அதிகமாக எழுத்தாளர் ஒன்றியத்தைப் பற்றி தெரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திகிலடையும் செய்திகள் புலத்திலேயும் கிடைக்க வழிசெய்யும் புலம் பெயர் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அமைப்பு பற்றிய விறுவிறுப்பான தொடரின் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.

புலம்பெயர்ந்த வாழ்வியலின் மூன்றாவது தசாப்தத்திலும் குடும்ப உறவுக் குழுக்களாகவும், ஊர்ச்சங்கமாகவும், பழையமாணவர் சங்கமாகவும் மட்டுமே தம்மை இனம்காட்டும் சமூகச் சூழலில் இப்படியான குறிக்கோளுடனான அமைப்புகள் சாத்தியமானதா?

அப்படியொன்று உருவானாலும் அதன் நிர்வாகம் மேற்கூறப்பட்ட குழு வட்டத்தினுள்ளேயே முடங்கும்.

அடுத்த தலைமுறையினரால்தான் விழிப்பாக ஏதும் செய்ய முடியும்.

சங்கம் தொடர்பாக வந்த படலைக்குப் படலைதான் ஞாபகத்தில் வருகிறது.

<_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கு பத்திரிகை ஆரம்பத்தில் பல பக்கங்களுடன் வெளிவந்ததாக அறிந்தேன் சுட்டிக்காட்டிய சபேசனிற்கு நன்றிகள்.ஆனால் பெல்யிய பேரணியில் எனக்கு ஒரு இலக்கு பத்திரிகை பார்க்க கிடைத்தது அது ஒரு பக்கமாகதான் இருந்தது அதைவைத்துதான் நான் அந்த கட்டுரையிலும் எழுதியிருந்தேன் மற்றபடி அந்த கட்டுரையில் நான் இவர்களின் அறிவும் ஆற்றலும் வீணாகிறதே என்று ஆதங்கபட்டுதான் இருக்கிறேனே தவிர இவர்களை மட்டம் தட்டுவதற்காக எழுதவில்லை இதனை முன்னரும் விபரமாக எழுதிவிட்டேன் ஆனால் விழங்கிகொள்ளமாட்டோம் என்று அடம் பிடித்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது அது மட்டுமல்ல தாங்கள் படித்த பட்டதாரிகள் மற்றும் பல பட்டங்களை சுமந்து நிப்பவர்கள் எனவே தங்களை பற்றி யாரும் எங்கும் விமர்சனம் வைக்க கூடாது என்கிற மமதையில் இவர்கள் தொடர்ந்தும் தங்கள் கருத்தை வைத்தால் நானும் எழுதிகொண்டேதான் இருப்பேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நீங்களும் அழகாய் கதையெல்லாம் எழுதுறீங்க . நீங்களும் ஒரு எழுத்தாளரா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நீங்களும் அழகாய் கதையெல்லாம் எழுதுறீங்க . நீங்களும் ஒரு எழுத்தாளரா ?

சத்தியமா நான் எழுத்தளர் இல்லை கறுப்பி ஏனென்றால் என்னுடைய பெயருக்கு பின்னாலை கலை மாமணி கலையாத மணி என்றுஎந்த பட்ட பெரும் இல்லையே பிறகு எப்பிடி நான் எழுத்தாளர் ஆகலாம்

பின்னால ஒரு பிரபல்யமான அமைப்பின் ஆதரவு இருந்தாலும் ஆகலாம். <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கள் படித்த பட்டதாரிகள் மற்றும் பல பட்டங்களை சுமந்து நிப்பவர்கள் எனவே தங்களை பற்றி யாரும் எங்கும் விமர்சனம் வைக்க கூடாது என்கிற மமதையில் இவர்கள் தொடர்ந்தும் தங்கள் கருத்தை வைத்தால்

இப்பிடி அவை எப்பையாவது சொன்னவையோ? சொன்னதுக்கு என்ன ஆதாரம் எண்டத சாத்திரி அண்ணா சொல்லோணும். அவை அப்பிடி நினைக்கினம் எண்டு நீங்களா ஒரு கற்பனையப் பண்ணிக்கொண்டு அவை மேல விமர்சனம் எண்டுற பேரில உங்கட ஆமைகளை இறக்கிவிடுறத என்னெண்டு சொல்லுறதெண்டு தெரியேல. விமர்சனமெண்டும் சமூகத்தில இருக்கிற குப்பையளக் காட்டுறனெண்டும் நீங்கள் எழுதுற எழுத்துகள் இறைச்சிக்கடைய (கசாப்புக்கடை?) விட மோசமாத்தான் இருக்கு. தன்ர புண்ணை நோண்டி மணந்து பாக்கிற மாதிரித்தான் இருக்கு உங்கட எழுத்துகள் எண்டால் உங்களுக்கு கோவம் வராதெண்டு நினைக்கிறன். நீங்க ஒருபேப்பரில எழுதினதா சொல்லுற அந்தக் கட்டுரை உங்களுக்கு *சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்" எண்ட ஒண்டு தெரியாமல் இருந்தது.. இப்பதான் தெரியவந்தது எண்ட மாதிரித்தான் எழுதியிருந்தீங்க. அப்பிடி தெரியவந்ததெண்டால் நீங்க நேர்மையான ஒருவரா இருக்கிறீங்க எண்டா என்ன செய்திருப்பீங்க? அந்த அமைப்போட தொடர்புகொண்டு அமைப்பு பற்றின விபரங்கள கேட்டறிஞ்சு கொண்டு.. அந்த அமைப்புக்கு அந்த அமைப்பின்ர செயற்பாடு பற்றி கருத்த நேர சொல்லியிருக்கோணும். அதவிட்டுப்போட்டு பிரான்சின்ர எங்கயோ ஒரு மூலையில இருக்கிற நீங்க உங்களுக்கு முழுசா தெரியாத ஒரு அமைப்ப பற்றி வெளில நாலுபேரிட்ட கேள்விப்பட்டத வைச்சுக்கொண்டு ஒரு கட்டுரையெண்டுற பேரில எதையோ எழுதினீங்க எண்டா அத என்னெண்டு சொல்லுறது? :huh:

ஒருபேப்பர பற்றி சொல்லத்தேவையில்ல. media ethics தெரியாத ஒரு ஊடகம் அது. அத ஊடகம் எண்டு சொல்லுறதே கூடிப்போச்சு. ஆக்கம் எழுதுறவையோட அவைக்கு ஒழுங்கா கதைக்கவே தெரியுறேல. இன்ரர்நெட்டில வாறதுகள எழுதுறவையின்ர அனுமதி வாங்காமலே எடுத்து போடுறவை. இதில என்ன கொடுமையெண்டா ஒருபேப்பர் ஓசிப்பேப்பர் எண்டு சொல்லுகினம். ஆனா விளம்பரங்களில வாற காசில அவை நிறைய உழைக்கினம்... ஆக்கம் எழுதுறவைக்கு அதுக்கான காசு குடுக்கிறேல. அதான் கூடுதலா இன்ரர்நெட்டில எழுதுறத எடுத்து போடுகினம். மற்றவையின்ர உழைப்பில தாங்கள் காசு சம்பாதிக்கினம். சுரண்டுகினம் எண்டு சொன்னா தப்பில்லையெண்டு நினைக்கிறன். உண்மேல இவ்வளவு நாளும் இவை செய்ததுக்கு எதிரா அதான் காப்புரிமைப் பிரச்சனைக்காக யாராவது வழக்கு போட்டால் நிறைய காசு நஸ்ட ஈடா கேட்டு வாங்கி பணக்காரராகலாம்.... B) anybody need ஆலோசகனைs for that? i can help you!!! contact me personally!!! but 50 % எனக்கு தரோணும்.

இந்தப் பேப்பரில அந்த அமைப்ப பற்றி ஒரு விமர்சனம் வருதெண்டால் அதுக்கு அந்த அமைப்பு குடுக்கிற பதிலையுமெல்லோ போடணும்? அப்பிடி ஏதும் அந்த அமைப்பு ஏதாவது பதில் குடுத்தவையோ? அத ஒரு பேப்பர் போட்டவையோ? போட்டவையெண்டா அந்தக் கட்டுரை எங்க? போடேலையெண்டா ஏன் போடேல? <_<

ஒரு பேப்பரின்ட பொறுப்பாசிரியர் கோபியும் நீங்க சொன்ன பயிற்சி பட்டறைக்கு போனவரெண்டா... இனியாவது media ethics எண்டா என்னெண்டு புரிஞ்சுகொண்டு நடப்பார் எண்டு நம்புவம். ஊடகங்கள் எப்பிடி நாகரிகமா நடந்து கொள்ளோணும் நேர்மையா நடந்து கொள்ளோணும் எண்டு கோபி அண்ணாவ படிக்க சொல்லுங்கோ. முடிஞ்சா நீங்க எப்பிடி சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்த பற்றி ஒரு பேப்பரில விமர்சனம் எழுதினிங்களோ அத மாதிரி ஒரு பேப்பரின்ர இந்த குறையள பற்றியும் எழுதினா புண்ணியமா இருக்கும்.. <_<

இந்தப் பட்டறையில் கலந்து கொண்ட சர்வதேச புலம் பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பாக கலந்து கொண்ட அதன் தலைவர் திரு.முருக தாசன் அதன் ஊடகவியலாளர் என்று சொல்லும் திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் பாக்கியநாதன் மற்றும் வரதராஜா ஆகியோர் கலந்து கொண்டு சாத்திரியார்?? எங்கோ இருக்கிறார்?? தங்கள் பெயரிற்கு பின்னால் இத்தனை பட்டங்களை வைத்திருக்கிறோமே எப்படி எங்களைப்பற்றி எழுதலாமென்கிற ஆராச்சியினை பாக்கியநாதன் அவர்கள் மங்கலவிளக்கேற்றலுடன் தொடக்கி வைக்க கோசல்யா அவர்களால் பயிற்சி பட்டறை நடாத்த போன ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் கோபி அவர்களை முருகதாசனின் உதவியுடன் தட்டி நிமிர்த்தி விட்டார்கள்.

நீங்க மேல எழுதியிருக்கிற மாதிரி தான் அவை சொன்னவையோ? தங்களுக்கு பின்னால பட்டமிருக்கு நீங்க எப்பிடி தங்கள பற்றி எழுதலாமெண்டு அவை சொன்னவையோ? அங்க கதைக்கப்பட்டத நீங்க நேரில பார்க்கேல அல்லாட்டி கேக்கேல எண்டுறது நீங்க எழுதினதில இருந்து தெரியுது. கோபி அண்ணாவோ வேற யாரோ அங்க நடந்தத சொன்னத வச்சு மட்டுந்தான் நீங்க எழுதுறீங்க. அப்பிடி பாக்கேக்க நிறைய விசயங்கள் திரிபட்டு வருதெண்டுறது மட்டும் உண்மை. உங்களுக்கு அங்க நடந்தத சொன்னவர் தன்ர பக்க சார்பில நிண்டுதான் சொல்லியிருப்பார். நிறைய விசயங்கள உங்களுக்கு பூசி மெழுகித்தான் சொல்லியிருப்பார். அதை பிறகு நீங்களும் பூசி மெழுகித்தான் சொல்லியிருப்பிங்க. கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும் நடந்ததெண்டு சொல்லுறீங்க... அங்க அப்பிடியெண்ட ஒவ்வொரு ஆக்களுக்கும் கதைக்கிறதுக்கு சந்தர்ப்பம் குடுத்திருப்பினம். அப்ப சர்வதேச எழுத்தாளர் ஒன்றிய ஆக்கள் ஒருபேப்பர பற்றியும் சாத்திரி அண்ணா பற்றியும் கதைச்சவையெண்டா... ஒரு பேப்பரின்ர பொறுப்பாசிரியர் கோபி அண்ணா என்ன அங்க கதைச்சவையின்ர வாய பார்த்து கொண்டா நிண்டவர்? தன்ர பக்க விளக்கத்த அங்க நேரயே சொல்லியிருக்கலாமே? அப்பிடி ஏதும் சொன்னவரா? அவர் என்ன சொன்னாரெண்டதையும் இங்க எழுதியிருக்கலாமே? அப்பிடி ஒண்டும் சொல்லாட்டி... அங்க ஒண்டும் நேர கதைக்க வக்கில்லாம அங்க நடந்தத காவிக்கொண்டு வந்து ஊரெல்லாம் *அவை என்னையும் சாத்திரியண்ணாவையும் பேசிப்போட்டினம்* எண்டு ஒப்பாரி வைக்கிறதில என்ன நேர்மை இருக்க முடியும்? :lol:

விமர்சனங்கள் ஒரு அமைப்பின் மீது அல்லது செயற்பாட்டாளர்களின் மீது வைக்கப்பட்டால் அதில் உள்ள குறைகளை திருத்திக் கொள்வதைவிடுத்து விமர்சித்தவரையும் பத்திரிகையாசிரியர்களையும் தொல்லைக்கு உட்படுத்தும் இத்தகைய சிறுபிள்ளைத்தனமான எழுத்தாளர்களை என்ன சொல்வது ?

என்ன தொல்லைக்கு உட்படுத்தினவை? அடிச்சவையா உதைச்சவையா? கூடாத வார்த்தையளால திட்டினவையா? கோபி அண்ணாட தனிப்பட்ட வாழ்க்கய பற்றி கிளறினவையா (கூடுதலா நீங்க செய்யிற மாதிரி?). ஒரு ஊடகத்த ஒராள் நடாத்துறாரெண்டா அது சம்மந்தமா கேக்கப்படுற கேள்வியளுக்கு பொறுப்போட பதில் சொல்லுறது அவற்ற கடமைதானே? தங்கட ஊடகத்தில கண்ட கண்ட குப்பையள ஒராள் போடுவார் அத மற்றாக்கள் கேள்வி கேக்கக்கூடாதெண்டா என்னது? பாராட்டி வந்தா மட்டும் ஏற்றுக்கொள்ளுவீங்க? விளக்கம் கேட்டா இல்லாட்டி குறை சொன்னா அத தொல்லைப்படுத்துறதெண்டு சொல்லுவீங்களோ? :o

சாத்திரியண்ணாக்கு... நீங்க ஒண்ட பற்றி எழுதிறீங்க எண்டா நாலுபேர் சொல்லுற கதைய வச்சு உங்கட கற்பனையள சேர்த்து எழுதாதேங்கோ. ஒரு அமைப்ப பற்றி அல்லாட்டி ஒரு நபரின்ர செயல பற்றி அல்லாட்டி ஒரு ஊடகத்த பற்றி அல்லாட்டி ஒரு நிகழ்ச்சிய பற்றி விமர்சிக்கிறிங்க எண்டா அத நேரில போய் அறிஞ்சு ஆராஞ்சு எழுதுங்கோ. நாலு பேர் சொல்லுறத வச்சு பூசி மெழுகி அலங்காரம் செய்து எழுதுறதுக்கு இதொண்டும் புனைகதையில்ல. :)

நீங்க எழுதுறதுகள எதோட ஒப்பிடலாமெண்டா.... அங்க ஈழத்தில போராட்ட களத்தில இல்லாம அதின்ர அனுபவங்களும் இல்லாம இங்க புலத்தில இருந்துகொண்டு இங்கிலிஸ் பேப்பரில இக்கபால் அத்தாஸ் அண்ணா எழுதுறதையும் வேற சில ஆய்வாளர் மார் எழுதுறதுகளையும் வாசிச்சு அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் கொப்பி பண்ணி பிறகு அதில சொந்த கற்பனைய கலந்து சிலர் எழுதுற இராணுவ ஆய்வு மாதிரி. அவையும் இப்ப ஒரு (சில) ரேடியோக்கள் வழிய இராணுவ ஆய்வாளர் அரசியல் ஆய்வாளர் பிரபல ஆய்வாளர் புரட்சியாளர் சமூக சிந்தனையாளர் மண்ணாங்கட்டி மரவெள்ளிக்கிழங்கு எண்டுற சில அடைமொழியளோட பரபரப்பா ஆய்வு செய்யினம். மக்கள கவருற மாதிரி சொல்லுறம் எண்டு மக்கள சும்மா ஏமாத்திக்கொண்டு திரியினம். வெப்சைட்டுகள் வழியவும் சிலபேர் இப்பிடி திரியினம். முடிஞ்சா இவையின்ர இந்த கொடுமையள பற்றியும் கொஞ்சம் எழுதினிங்களெண்டால் சந்தோசமா இருக்கும். :P

ஒராளின்ர காலில புண் இருந்தா அத போய் நோண்டுறதுக்கு பேர் அக்கறையில்ல... உளவியல் ரீதியா அதுக்கு பேர் sadism எண்டு சொல்லுறது. உண்மையா அக்கறை இருக்கிறவை... அந்த புண் ஏன் வந்தது? அந்தப் புண்ணுக்கு என்ன மருந்து போட்டா மாறும்? அந்தப் புண்ண கிருமியளிட்ட இருந்து எப்பிடிக் காப்பாத்தலாம்? இனி புண் வராமல் இருக்க என்ன செய்யோணும்? இந்தப் புண் முழுக் காலையும் பாதிக்காம இருக்க என்ன செய்யலாம்? எண்டுறத ஆராஞ்சு அறிக்கை குடுத்தா அதுக்கு பேர் அக்கறை. அதவிட்டுப்போட்டு உன்ர காலில புண் இருக்கு... உன்னால ஒழுங்கா நடக்கத் தெரியல... நீ திமிரில நடந்ததால தான் விழுந்தனி... இனி உன்ர கால வெட்டவேண்டி வரும்... எண்டு சொல்லிக்கொண்டு புண்ணை நோண்டி நோண்டி மணந்து பாக்கிறவையையும்... அவனுக்கு புண் வந்திட்டு எண்டு போஸ்ரர் அடிச்சு கொண்டாடுறவையையும் sadist என்று தான் சொல்லலாம். B)

இவ்வளவும் நான் சொன்னதுக்காண்டி *சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் (?)* தங்கட வேலையள முழுக்க முழுக்க ஒழுங்கா செய்யினமெண்டு அர்த்தமில்ல. அவையள் தங்கட நிர்வாகத்தில செயற்பாடுகளில பிழையள விட்டிருந்தா தங்கள தாங்களே சுய விமர்சனம் செய்து தங்கள திருத்திகொள்ளுவினம் எண்டு எதிர்பார்ப்பம்... :(

இதுக்குமேல நான் என்னத்த சொல்லுறது...????? ???? ??? ?? ?

pin குறிப்பு: அக்கறை உள்ள சிலபேர் சொன்தால நான் முந்தி பட்டிமன்றத்தில எழுதின மாதிரி ஒழுங்கா எழுதியிருக்கன். புள்ளியள் கோடுகள் நிறைய போடாமல். நல்லா இருக்கா?

Edited by poonai_kuddy

கனகாலத்துக்கு பிறகு பூனைக்குட்டி எழுதியிருக்காரு... முழுமையா ஒரு கருத்தை முன்வைத்திருக்காரு.. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிணறு வெட்ட பூதம் வெளிக்கிட்ட மாதிரி ஒன்றைக்கேட்க பல விடயங்கள் வருகின்றன. சாத்திரியாரின் இணைப்புக்கு நன்றி.பூனைக்குட்டியார் நல்லாத்தான் விறாண்டி விட்டீர்கள். பல நாள் காத்திருப்பு போல!அது சரி. லண்டனில போன சனிக்கிழமை ஓரு மாபெரும் கூட்டம் நடைபெற்றதெல்லோ..சிறீ லங்காவில நடக்கிற அரசின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக..உதை உந்த ஊடகவியலாளர் சங்கத்திற்கு யாரும் சொல்லியிருந்தால் பத்து பதினையாயிரம் பேர் கூடுகிற இடத்தில.. இவர்கள் அரச பயங்கரவாதத்தால் சாகடிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பாகவும், தற்சமயம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை பற்றியும் ஆங்கிலத்தில் ஒருவர் இவர்கள் சார்பாகவும் உரையாற்றியிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். பிரித்தானிய அரசுக்கு எல்லாம் தெரியும் நாம் ஒன்றும் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை என்று விட்டு விடமுடியாது. தூங்குவது போல நடிக்கும் அரசை நாமும் எழுப்புவது போல நடிக்காது. உண்மையாகவே எழுப்ப வேண்டும்.ஒன்றுபட்டால் அது முடியும்.சபேசன் நீங்களும் எழுத்தாளர் ஒன்றியத்தின் உறுப்பினரா?

கேள்விச் செவியன் ஊரைக் கெடுக்கிறான்?

ஊடகங்கள் மக்களிற்கு உண்மையான செய்திகளையும்இ தேசிய நோக்கோடு

மக்களைக் குழப்பாமலும் தங்கள் கடமையை செய்ய வேண்டும்.இதில் இருந்து தவறும்

ஊடகவியலாளர்கள் தங்களையும் தங்கள் உண்மை முகங்களையும் காட்டாது. கேள்விப்படும்

செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயாது தாமும் நாழும் ஏதோசெய்திகளை எழுதி உலகசாதனை

நிலைநாட்ட தொடர் எழுதுவது போல் எழுதும் இவர்கள் என் பார்வையில் உண்மைச்

செய்தியாளராகவோஇஉண்மைக் கருத்துக்கள் கூறுபவராகவோ ஏற்றுக் கொள்ளமுடியாது.

14.07.07 இல் யேர்மனி டோற்முட்ன் நகரில் இலன்டனை தளமாக கொண்டு

இயங்கும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம். யேர்மனியை தளமாக கொண்டிருக்கும்

சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஓன்றியத்தின் அனுசரனையுடன் அதன் ஆலோசகரும்

ஊடகவியலாளருமான திரு .வரதராசா அர்கள் தலைமையில் செய்தியாளர் கருத்தரங்கும்

இசெய்தியாளர் ஒன்றியத்தின் தலைவி திருமதி.சூரியப்பிரகாசம் ஆனந்தி அவர்கள்

தலைமையில் பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது. இங்கு குறிப்பிடத்தக்க சிலரே

அழைக்கப்பட்டிருந்தனர். அங்கு நிகழ்வுகள்யாவும் நிறைவாக நடைபெற்றதை நாம் நேரில் சென்று

பார்க்க முடிந்தது. ஆனால் யாழ் இணையத்தில் சாத்திரி என்னும் பெயரில் தன்னை யார்

என்று கூட இனம்காட்ட முடியாத ஒழிவு நபர்களின் செய்திகளை பிரசுரிக்க

அனுமதியளிக்கும் இணையங்களே சிந்தியுங்கள் எமது தேசியத்தின் பெயரில் ஒன்றினையும் பொது

அமைப்புக்களுக்குள் களங்கம் ஏற்படுத்தவேன்டாம். அதில் தவறுவிடுபவர்களை உரிமையுடன்

நேரடியாக தட்டிக்கேளுங்கள் ஒட்டியிருந்து தாக்குவதை இனியாவது நிறுத்துங்கள் ஒற்றுமை ஓங்க

உழையுங்கள் இதுவே எனது ஆதங்கம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

மற்றவர்கள் ஒப்பிட்டு உண்மையறிய யாழ் இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட தவறான

சாத்திரியின் செய்தியை இங்கு மறுபிரசுரம் செய்கிறேன். கருத்தரங்ககை

நடத்தியவர்களையே குழப்பியவர்கள் என்று குறிப்பிட்டது தன்கையால் தன்கண்னைக்குத்தியது

போலாகும். கருத்தரங்கோஇபயிற்சிகளோ தரமான முறையில் தடையின்றி நடந்ததென்பது தான்

உண்மை. வேண்டாத சில குழப்பவாதிகளின் கருத்துக்களுக்கு இடம் இல்லை என்பதை இரண்டு

அமைப்புகளிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

(நமது இலக்கு ஆசிரியர்)

http://www.iutw-tamil.net.ms/ இணையத்தில் இருந்து

Edited by சபேசன்

விமர்சனங்கள் குறித்த விசமத்தனமான கேள்விகள்!

- வி.சபேசன் (18.05.06)

அண்மையில் "சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம்" என்கின்ற ஒரு அமைப்புக் குறித்து ஒரு சர்ச்சை உருவானது. இந்த அமைப்பை விமர்சித்து ஒரு பேப்பரிலும் பின்பு யாழ் களத்திலும் வந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ஒரு வாதப் பிரதிவாதம் உருவானது. இந்த விவாதத்தில் நானும் இணைந்து கொண்டேன். ஆனால் இந்த எழுத்தாளர் ஒன்றியம் குறித்தோ, அதில் உள்ளவர்கள் குறித்தோ நான் இப்பொழுது எழுத வரவில்லை. இந்த விவாதங்களின் பொழுது ஒரு விடயம் என் மனதை உறுத்தியது. எழுத்தாளர்கள் என்று சொல்பவர்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதற்கும் சகித்துக் கொள்வதற்கும் பக்குவம் இன்றி நடந்து கொண்டது வேதனையை தந்தது.

ஆனால் விமர்சனங்களை ஏற்க முடியாத இந்த இயல்பு இவர்களிடம் மட்டும்தான் இருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

படைப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் வரும்பொழுது, அதை துணிவாகவும் நியாயமாகவும் எதிர்கொள்ளாது, விமர்சனத்தில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்று ஆராய்வதில்தான் பெரும்பாலான எழுத்தாளர்களும் மற்றைய கலைஞர்களும் ஈடுபடுகிறார்கள். என்ன சொன்னார்கள் என்பதை விடுத்து, யார் சொன்னார்கள் என்றும் ஏன் சொன்னார்கள் என்றும் ஆராய்கிறார்கள். விமர்சனங்கள் பொதுவான இடத்தில் வைக்கப்படுகின்ற பொழுது இவர்கள் குறிப்பாக இரண்டு விசமத்தனமான கேள்விகளைக் கேட்பார்கள்

முதலாவது கேள்வி: உங்களுக்கும் எனக்கும் (அல்லது எங்களுக்கும்) ஏதாவது தனிப்பட்ட பிரச்சனையா?

இரண்டாவது கேள்வி: இந்த விமர்சனத்தை முதலில் என்னிடம் ஏன் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை?

விமர்சனம் செய்பவர்கள் அடிக்கடி சந்திக்கின்ற கேள்விகள் இவைகள். தமது படைப்புக்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை போன்று, இவர்களுடைய இந்த முதலாவது கேள்வி அமைகிறது. "எமது படைப்புக்களிலும் எமது செயற்பாடுகளிலும் எந்தத் தவறும் இருக்கவே இருக்காது, ஆகவே இவர்கள் தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக உள்நோக்கத்தோடுதான் விமர்சிக்கிறார்கள்" என்று இவர்கள் கருதுவது போன்று இந்தக் கேள்வி இருக்கும். இந்தக் கேள்வியின் மூலம், தமக்கு விமர்சனத்தை தாங்கும் பக்குவம் சிறிது கூட இல்லை என்பதை வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார்கள். உள்நோக்கம் இருக்கின்றதா என்று ஆராயத் தொடங்குகின்ற போழுதே, விமர்சனங்களில் உள்ள நியாயங்களை ஆராயத் தயாராக இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார்கள்.

ஒருவாறு பெரும்பாடுபட்டு இவர்களுக்கு விமர்சனத்தில் உள்ள நியாயத்தன்மையை விளங்கப்படுத்தினால், உடனடியாக இவர்களிடம் இருந்த வருகின்ற அடுத்த வார்த்தை இதுதான். " நீங்கள் சொல்வது எல்லாம் சரி, ஆனால் இதை நீங்கள் ஏன் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை?" இவர்களிடம் தவறுகளை தனிப்பட்டரீதியாக சுட்டிக்காட்டினால், உடனடியாக அவைகளை திருத்திவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்களா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். எதற்காக பொதுவான படைப்புக்களை, செயற்பாடுகளை சம்பந்தப்பட்டவரிடம் தனிமையில் விமர்சிக்க வேண்டும்.? ஒரு எழுத்தாளர் தன்னுடை கவிதையையோ, கட்டுரையையோ என்னிடம் மட்டும் தந்தால், நானும் விமர்சனத்தை அவரிடம் மட்டும் சொல்வேன். ஆனால் அவர் தனது படைப்பை எல்லோரையும் சென்றடையும் வண்ணம் வெளியிடும் பொழுது, என்னுடைய விமர்சனமும் அதே போன்று எல்லோரையும் சென்றடையும் வண்ணம்தான் இருக்கும். இதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? தனது படைப்பை பொதுவான இடத்தில் வழங்கிவிட்டு, விமர்சனத்தை என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லுங்கள் என்று சொல்வதுதான் பெரும் தவறு. அதே போன்று பொதுவான முறையில் செயற்படும் அமைப்புக்கள் பற்றிய விமர்சனங்களும் பொதுவான இடத்தில்தான் வைக்கப்படும்.

ஆனால் இவைகளை பெரும்பாலானவர்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற எழுத்தாளர் ஒன்றியம் குறித்து "சாத்திரி" என்கின்ற புனை பெயரில் ஒருவர் விமர்சனம் எழுதிய பொழுது, சாத்திரி என்ன எழுதியிருக்கிறார் என்பதை விட, சாத்திரி என்பவர் யார் என்று அராய்வதில்தான் அவர்களின் சிந்தனை இருந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் சாத்திரியின் விமர்சனத்தை பிரதி எடுத்து தனக்கு தெரிந்தவர்களிடம் வழங்கிய பொழுது, அவரிடமும் "ஏன் இதைச் செய்கிறீர்கள், உங்களுக்கும் எங்களுக்கு என்ன பிரச்சனை" என்றுதான் கேட்டார்கள். நான் யாழ்களத்தில் இவர்கள் குறித்து விமர்சனத்தை முன்வைத்த பொழுதும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். விமர்சனங்களை நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ தம்மிடம் சொல்லுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

எழுத்தாளர் ஒன்றியத்தின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தாலும், இப்படித்தான் நடந்திருப்பார்கள். இதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. காரணம், பெரும்பாலானவர்களின் விமர்சனங்கள் பற்றிய பார்வை இப்படித்தான் இருக்கிறது. ஆகவே என்னுடை இந்தக் கருத்துக்கள் எழுத்தாளர் ஒன்றியத்தை மட்டும் நோக்கியதாக யாரும் கருத வேண்டாம். அதே வேளை அவர்களுக்கானது இல்லை என்றும் கருத வேண்டாம். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளுகின்ற பக்குவமற்ற அனைவருக்கும் இந்தக் கருத்துக்கள் பொருந்தும்.

நீண்ட காலமாக எழுத்துத்துறையில் இருந்தும், பெரும்பாலனவர்கள் இன்னமும் விமர்சனங்களைத் தாங்குகின்ற பக்குவத்தை பெறவில்லை என்பது பெரும் சோகமே. எழுத்துத்துறை, கலைத்துறை, சமூகசேவை போன்ற பொதுப்பணிகளில் ஈடுபடுகின்ற யாராக இருந்தாலும், விமர்சனங்களை தாங்கிக் கொள்ளக்கூடிய பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். விமர்சனங்களில் உள்நோக்கம் தேடுவதையும், விமர்சனங்கள் தம்மிடம் மட்டும் சொல்லப்பட வேண்டும் என்று நினைப்பதையும் விட்டுவிட வேண்டும்.

பொதுப்பணிகளில் ஈடுபடுகின்ற பொழுது விமர்சனங்களைத் தாங்குகின்ற பக்குவமானது ஒரு அடிப்படையான கட்டாயமான விடயம் என்பதை ஏற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும் தயாராக இல்லாதவர்கள், பேசாது வேறு வேலைகளைப் பார்ப்பது நலம்.

Edited by சபேசன்

குறிப்பு :எழுத்தாளர்கள் விமர்சனத்தை ஏற்கின்ற பக்குவம் இன்றி நடந்து கொண்ட முறையைப் பார்த்து மனம் நொந்து கடந்த ஆண்டு இதை எழுதினேன். இன்றைக்கும் பொருந்துகிறது.

சபேசனின் மேற்கூறிய விமர்சனம் சம்பந்தமான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுகிறேன்.

ஆனால், எழுத்தாளர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் எவ்வளவு தூரம் பக்குவம் வரவேண்டுமோ, அதேபோல விமர்சகர்களுக்கும் தான் எதை விமர்சிக்கிறோம்.. அதை எவ்வாறு விமர்சிக்கவேண்டும் என்ற விடயத்திலும் பொறுப்புணணர்வு வரவேண்டும்.

சிலர் அமைப்புகளை விமர்சிப்பதாக ஆரம்பித்து, ஒரு குறிப்பிட்ட நபரைக் குற்றவாளியாகக் காட்டுவதையே விமர்சனமாக முன்வைப்பார்கள். இப்படியான விடயங்களைத்தான் என்னால் விமர்சனம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படியானவை விமர்சனங்களல்ல. வசைமாரிகள்.

ஓரு காலத்தில் பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு, சினிமா இசைத்துறைக்கு புதிய வரவான இளையராஜாவின் இசையை 'இசையே இல்லை' என விமாசித்தார். ஆனால் அதே இளையராஜா இன்று 'இசைஞானி' என்ற பட்டத்துடன் நிமிர்ந்துநிற்கிறார்.

எனவே, விமர்சனங்கள் ஒரு எழுத்தாளனதோ அல்லது கலைஞனதோ அளவுகோல் அல்ல. அவை குறிப்பிட்டவர்களை தட்டிக்கொடுத்து உற்சாகமூட்டும் காரணிகள். தவறுகளைச் சுட்டிக்காட்டி, ஏறும் திசைக்கு ஒளிகாட்டும் விமர்சனங்கள்தான் ஆரோக்கியமானவையாக அமையுமே தவிரர, ஏனையவை வெறுமம் வசைகள்தான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் பூனைக்குட்டி என்கிற பெயரில் வரும் சக உறவின் கருத்தில் அவரின் சில சந்தேகங்களை தீர்த்து வைக்க விரும்புகிறேன்

தாங்கள் படித்த பட்டதாரிகள் மற்றும் பல பட்டங்களை சுமந்து நிப்பவர்கள் எனவே தங்களை பற்றி யாரும் எங்கும் விமர்சனம் வைக்க கூடாது என்கிற மமதையில் இவர்கள் தொடர்ந்தும் தங்கள் கருத்தை வைத்தால்

இப்பிடி அவை எப்பையாவது சொன்னவையோ? சொன்னதுக்கு என்ன ஆதாரம் எண்டத சாத்திரி அண்ணா சொல்லோணும். அவை அப்பிடி நினைக்கினம் எண்டு நீங்களா ஒரு கற்பனையப் பண்ணிக்கொண்டு அவை மேல விமர்சனம் எண்டுற பேரில உங்கட ஆமைகளை இறக்கிவிடுறத என்னெண்டு சொல்லுறதெண்டு தெரியேல. விமர்சனமெண்டும் சமூகத்தில இருக்கிற குப்பையளக் காட்டுறனெண்டும் நீங்கள் எழுதுற எழுத்துகள் இறைச்சிக்கடைய (கசாப்புக்கடை?) விட மோசமாத்தான் இருக்கு.

மேலே நான் குறிப்பிட்ட நபர்களையும் அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் எனக்கு இப்பொழுதல்ல பல காலங்களாகவே தெரியும் அது மட்டுமல்ல அதில் ஒரு நபர் தான் ஒரு பட்டதாரி தான் எழுதுவதுதான் சரி மற்றவர்கள் அதற்கு விமர்சனம் வைக்கும் அளவிற்கு கல்வியறிவோ தகுதியோ இல்லையென்று எப்பொழுதுமே அடம் பிடிப்பவர் அது மட்டுமல்ல முன்னர் யெர்மனியில் நடக்கின்ற கலந்துரையாடல்கள் மற்றும் நிகழ்வுகளிலும் திறைமையான ஒரு படைப்பாளியையோ அல்லது தமிழ்பால் பற்றுகொண்டு சேவை செய்பவர்களை விட ஒரு (பட்டதாரிதான் அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி)தலைமை தாங்குபவராகவோ அல்லது பிரதம விருந்தினராகவோ இருக்கவேண்டும் என்று விரும்புபவர் மட்டுமல்ல தன்னை விட வேறு யாரையாவது படிப்பில் குறைந்த ஒருவர் ஏதாவது கூட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டால் உடனே தான் இருக்க தகமை இல்லாதவனெல்லாம் தலைமை தாங்குகிறான் என்று தனக்கு தெரிந்தர் எல்லோருக்குமே போன் அடித்து புலம்புவார்.

இது யெர்மனியில் இருக்கின்ற எல்லோருக்குமே ஏன் உங்கள் கருத்தை பாராட்டிய சோழியனுக்கும் நன்றாகவே தெரியும். மற்றும்படி என்ரை விமர்சனங்கள் இறைச்சி கடையை விட மோசம் எண்டு சொன்னீங்கள். ஆனாலும் நீங்களோ நானோ மோசமாக இருக்கிறது என்பற்காக இறைச்சிக்கடை பக்கம் போகாமலோ அல்லது இறைச்சி சாப்பிடாமலா இருக்கிறோம் ஏனெனில் அதுவும் எங்களிற்கு தேவையாகத்தான் இருக்கிறது. குப்பையாக இரக்கிறதென்றும் எழுதியிருந்தீர்கள் உண்மைதான் அந்த குப்பபைகளை கூட்டி கொழுத்திவிடஎன்னாலா சிறு முயற்சி என்றும் சொல்லலாம்.

ஒருபேப்பர பற்றி சொல்லத்தேவையில்ல. media ethics தெரியாத ஒரு ஊடகம் அது. அத ஊடகம் எண்டு சொல்லுறதே கூடிப்போச்சு

அடுத்ததாக ஒரு பேப்பர் ஒரு ஊடகம் என்று எந்த காலத்திலையும் ஒரு பேப்பர் காரர் சொன்னதில்லை நானும் சொன்னதில்லை அது தொடங்கின ஆரம்பகாலம் தொட்டே அவையும் நானும் இடைக்கிடை எழுதி கொண்டு தான் இருக்கிறம் இது தமிழை வளக்கிறதோ ஊடகத்துறையிலை புரட்சி செய்யிறதோ ஒரு பேப்பரின்ரை நோக்கம் இல்லை ஏதோ பொழுது போகாத என்னை மாதிரி ............ சிலர் பேப்பர் அடிக்கினம் அது உங்களிற்கு மாவரிக்க பொரிச்ச மீன் எண்ணெய் ஒத்த பிள்ளையள் கப்பல்செய்து விழையாட குளிர் காலத்திலை காருக்கை காலுக்கை போட்டது போக நீங்கள் விரும்பினால் படிக்கலாம் விரும்பாட்டி கிழிக்கலாம். எனவே திரும்ப திரும்ப ஒரு பேப்பரை அது ஊடகம் இல்லையெண்டு நிங்கள் சொல்லி கஸ்ரபட வேண்டாம் ஏனென்றால் நாங்களே அது ஊடகம் எண்டு சொல்லேல்லை.

அடுத்ததாய் அதுக்கு எழுதிறவைக்கு காசு தரப்படும் என்று எந்த காலத்திலும் அறிவிக்கபடவுமில்லை மற்றபடி இணையத்தில் வாற ஆக்கங்களை எடுத்து போட்டாலும் அந்த ஆக்கம் எங்கே எடுக்கப்பட்டது யாரால் எழுதப்பட்டது என்கிற விபரங்கள் கட்டாயம் இணைக்கப் பட்டிருக்கும். அப்படித்தான் யாராவது காப்பு உரிமை சங்கிலி உரிமை எண்டு வழக்கு போட்டாலும் வழக்கு போடுறதக்கு நீங்கள் ஆலோசனை குடுத்தாலும் அது உங்களிற்கு கோடி புண்ணியமா போகும். ஏனெண்டால் உந்த ஒரு பேப்பரிலை எழுதிற தொல்லையை விட்டிட்டு நானும் வேறை ஏதாவது செய்யலாம்.

அடுத்ததாக நீங்கள் கேட்டிருந்தீர்கள் அவகள் எனது கட்டுரைக்கு மறுப்பறிக்கை ஒரு பேப்பரிற்கு அனுப்பவில்லையா அல்லது அனுப்பியும் போடவில்லையா என்று அனுப்பியிருந்தார்கள் ஏ4 பேப்பரில் 3 பக்கத்திற்கு மறுப்றிக்கை அதில் முக்கியமாக அவர்களது பட்டங்கள் மற்றும் கல்விதகைமை இதுவரை வெளியிட்ட புத்தகங்களின் விபரங்கள் இதுவரை தமிழிற்கு செய்த சேவைகள் என்று எழுதி இறுதியாக நான் அவர்களை எங்கோ பெயர் மகவரி தெரியாமல் பயந்து ஒழிந்திருந்து விமர்சிப்பவன் என்பதை போலவும் என்னுடைய பெயர் முகவரியை கண்டு பிடித்து தரும்படியும் அந்த மறுப்பறிக்கையில் கேட்க பட்டிருந்தது.

ஆனால் அந்த மறுப்பறிக்கை மிகவும் நீண்டு விட்டது எனவே முடிந்தளவு சுருக்கமாக எழுதி தாருங்கள் என்று அந்த அறிக்கையை தயாரித்த ஏலையா முருகதாசனிடம் கேட்கபட்டதற்கு அவர் சொன்னார் அதை சுருக்கமுடியாது முழுமையாகவே போட வேணும் என்று அடம் பிடித்தார்(இதுதான் அவர்களது பலவீனமே தாங்கள் சொல்வதைதான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று நினைப்பது) பின்னர் அந்த மறுப்பறிக்கை ஒரு பேப்பரில் வெளிவந்த கட்டுரை சம்பந்தமானது ஆயினும் அதுபற்றிய மறுப்பறிக்கை சோழியனால் நடாத்தப்படும் தமிழமுதம் இணையத்தில் முதலே வெளியாகியிருந்தது அது பற்றி பிரச்சனை இல்லையென்றாலும் சுருக்க முடியாது என்று கூறிவிட்டதால் அந்த மறுப்பறிக்கை போடவே நாலு பக்கம் தேவை பிறகு எப்பிடி ஒரு பேப்பரிலை விழம்பரம் போடுறது என்கிற காரணத்தாலும் அது ஒரு பேப்பரில் வெளியாகவில்லை.

தமிழமுதம் இணையத்தில் வெளிவந்த அவர்களது மறுப்பறிக்கையின் இணைப்பை இங்கே தருகிறேன் படித்து பார்த்து சொல்லங்கள் இது உண்மையிலேயே ஒரு மறுப்பறிக்கை தானா??என்று.

http://tamilamutham.net/amutham/index.php?...mp;limitstart=1

அடுத்ததாக அவர்கள் என்னை தேடுகிறார்கள் என்று தெரிந்ததும் நான் யாழ் இணையத்தில் அந்த கட்டுரையின் விவாத பக்கத்திலேயே எனது விபரம் தொ. பே இலக்கம் என்பனவற்றை எழுதி விரும்பவர்கள் மேலதிக விழக்கம் கேட்க நினைப்பவர்கள் தாடர்பு கொள்ளலாம் என்று போட்டிருந்தேன்: அது மட்டுமல்ல அந்த அமைப்:பினருடன் நன்கு பழக்கம் கொண்ட சோழியனிடமும் சொல்லியிருந்தேன் எனது தொ. பே . இலக்கம் கேட்டால் கொடக்கவும் என்று. ஆனாலும் யாரும் என்னிடம் இதுவரை ஒரு ஆண்டுகளாக தொடர்பு கொள்ளவில்லை. இறுதியாக சபேசன் அவர்கள் இணைத்திருந்த இலக்கு இணையத்தில் வெளியான கேள்வி செவியன் ஊரைக்கெடுக்கிறான் என்கிற கட்டுரையை படித்து விட்டு எனக்கு காது கேக்கிறதே குறைவு அப்ப எப்பிடி ஊரைக்கெடுக்க முடியும் என்று நினைத்து அதன் ஆசிரியர் திரு . கிருஸ்ணமூர்த்தி அவர்களிற்கு தொ. பேசியடித்து அண்ணா என்ரை செந்த பெயர் சிறீ ஊரிலை மானிப்பாய் இங்கை நீஸ் எண்ட இடம் என்ரை தொ. பேசி இலக்கம் 0033611149470 நான் ஒழிச்சு இருக்கேல்லை உங்கடை கட்டுரையிலை சாத்திரியெண்ட தன்னை இனம் கூட காட்ட முடியாத ஒழிவு நபர் எண்டு எழுதியிருக்கிறியள்

.அதுதான் என்ரை விபரம் தர போன் அடிச்:சனான் எண்டன் பிறகு கதைச்சு கொண்டு போக நல்ல மாதிரி கதைச்சார் கடைசியா கேட்டன் நான் எழுதிய கட்டுரையின் நோக்கம் இப்பவாவது புரிந்ததா??என்று கேட்க அவர் சொன்னார் ஓம் எனக்கு விழங்குது ஆனால் அந்த அமைப்பிலை இருக்கிற சிலருக்கு விழங்குது இல்லையென்றார்.இனிமேல் காலங்களிலை ஏதும் பிரச்சனை என்றால் போன் அடிக்கிறன் என்றார். அதை தான் பூனைக்குட்டி அண்ணாவுக்கும் மற்றவைக்கும் தான் எனக்கு பக்கம் பக்கமா எழுதி மினக்கட முடியாது இரண்டு வேலை நானும் வயித்து பிழைப்பை பாக்கவேணும் எனவே உங்:களிற்கும் ஏதும் சந்தேகமெண்டா போன் அடியுங்கோ கண்டபடி திட்டாமல் வடிவா கதையுங்கொ நானும் கதைக்கிறன்.

Edited by sathiri

ஒருபேப்பர பற்றி சொல்லத்தேவையில்ல. media ethics தெரியாத ஒரு ஊடகம் அது. - பூனைக்குட்டி

................................................................................

........

நீங்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள். இதில் பத்திரிகை தர்மம் பற்றியும் கருத்தை முன்வைத்துள்ளீர்கள். பத்திரிகை தர்மத்தை நடைமுறைப்படுத்தும் ஊடகங்களை வரிசைப்படுத்த முடியுமா? உங்களுக்கு எது பத்திரிகை தர்மத்தை பேணி இயங்கும் ஊடகமாக படுகின்றதோ அது என்னுமொருவருக்கு அவ்வாறு இருக்க முடியாது. இது தான் யதார்த்தம்.

தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் மீனவர் கடத்தல் விவகாரத்தில் நீதியுடன் செயல்பட்டனவா? மாற்று கருத்து என்ற போர்வையில் இலங்கை அரசின் கொலைகளை குறைந்த எண்ணிக்கையாக்கும் நடவடிக்கைகள் பொய்யான புரளிகளை உருவாக்கிவிடும் நடவடிக்கைகளை அன்றாடம் பார்க்கின்றோம் இவைகளில் தர்மம் உள்ளதா? முப்பது போர் கலந்து கொண்ட புலிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை முன்னிலைப்படுத்தும் பி பி சி தமிழோசை பலமுறை முப்பதாயிரம் தமிழர்கள் கலந்து கொண்ட ஊர்வலங்களை இருட்டடிப்பு செய்துள்ளது. இரண்டும் தமிழர் நிகழ்வுகள் தான். இதில் எங்கே பத்திரிகை தர்மம் உள்ளது?

உலகின் பல ஊடகங்களும் செய்திகள் வெளியிடுவதில் பரபரப்பும் வேகமும் நகரீகமும் ஊடக தர்மம் ஆகிவிடாது. மாறாக ஒடுக்கப்படும் மக்கள் மீதும் அவர்கள் பிரச்சனை குறித்தும் நீதியான பார்வை கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு பக்க சார்பற்ற ஊடகம் என்று எதுவும் கிடையாது.

ஊடகங்களுக்கென்ற சட்ட பூர்வமான தர்மத்தை பேணுவதால் மட்டும் ஒரு ஊடகம் நீதியானது என்று கருதுவது மிகவும் அபத்தமானது. மாறாக உணர்வுபூர்வமாக நீதியை பின்பற்றி நடக்க வேண்டும்.

எழுத்துக்களில்இ இலக்கிய படைப்புக்களில்மற்றும் நேர்காணல்களில் நாகரீகமும் பட்டங்களும் அந்தஸ்தும் கௌரவமும் முன்னிலைப்படும் போது எம்மவரில் பலருக்கு அது நீதியானது என்ற கருத்து ஆழமாக வேரோடிப்போயுள்ளது. அதற்குள் இயங்கு சக்தியாய் இருக்கும் ஏற்ற தாழ்வுகளும் சாதிய வர்க்க மனோபாவங்களும் காழ்புணர்ச்சிகளும் புலப்படுவதில்லை. (சமீபத்திய பி பி சி ஆனந்தியின் செவ்வியில் கூட தான் ஒரு யாழ்பாணி என்ற அழுத்தமான கருத்தை சொல்லியிருந்தார்.)

இந்த வகையில் பூனைக்குட்டி என்ற உறவும் விதி விலக்கில்லை. உங்கள் கருத்துக்களில் கீழ்கண்ட உவமை உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளின் அசைவின் வெளிப்பாடு என்பது உங்களுக்கும் புரியப்போவதில்லை.

.......................................................................

விமர்சனமெண்டும் சமூகத்தில இருக்கிற குப்பையளக் காட்டுறனெண்டும் நீங்கள் எழுதுற எழுத்துகள் இறைச்சிக்கடைய (கசாப்புக்கடை?)விட மோசமாத்தான் இருக்கு.

............................................................................

நீங்கள் கசாப்புக்கடையை பார்க்க விரும்பவில்லை. நன்றாக மாவில் தோய்து எண்ணையில் பொரித்த கோழிக்கால்களை ருசிக்க விரும்புகின்றீர்கள்.

விழைவுகள் வடிவானது அதன் உற்பத்தி மூலங்கள் இயல்பானது.

Edited by sukan

சாத்திரி ஒரு பேப்பரில் எழுதியதை நான் விமர்சனமாகத்தான் பார்க்கின்றேன்.

ஒரு படைப்பாளி விமர்சனம், கண்டனம், வசைமாரி, நையாண்டி என்று அனைத்தையும் சந்திக்கின்ற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்படியான பக்குவம் இல்லாதவர்கள் பொதுவில் வரக்கூடாது.

ஆனால் வந்ததும் இல்லாமல் அவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்கின்ற முறை மிகவும் மோசமானதாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க சொன்னது: மேலே நான் குறிப்பிட்ட நபர்களையும் அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் எனக்கு இப்பொழுதல்ல பல காலங்களாகவே தெரியும்.

இதுவும் நீங்க சொன்னது: இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக ஒரு ஆறு மாதங்களிற்கு முன்னர் நான் கேள்விப்பட்டபோது உங்களை மாதிரித்தான் நானும் முழித்தேன்.

கனகாலமா அந்த அமைப்ப பற்றியும்... அதின்ர செயற்பாடுகள பற்றியும்... அதில உள்ள சில பேர பற்றியும் தெரியும் எண்டுறீங்க. ஆனா முதல்ல இப்பிடி ஒரு அமைப்பு இருக்கிறதே ஆறுமாசத்துக்கு முதல்ல தான் கேள்விப்பட்டனெண்டு கட்டுரையில எழுதுறீங்க? பிறகு அந்தக் கட்டுரை எழுதவேண்டி வந்ததுக்கான நோக்கம் என்ன?

அதில் ஒரு நபர் தான் ஒரு பட்டதாரி தான் எழுதுவதுதான் சரி மற்றவர்கள் அதற்கு விமர்சனம் வைக்கும் அளவிற்கு கல்வியறிவோ தகுதியோ இல்லையென்று எப்பொழுதுமே அடம் பிடிப்பவர் அது மட்டுமல்ல முன்னர் யெர்மனியில் நடக்கின்ற கலந்துரையாடல்கள் மற்றும் நிகழ்வுகளிலும் திறைமையான ஒரு படைப்பாளியையோ அல்லது தமிழ்பால் பற்றுகொண்டு சேவை செய்பவர்களை விட ஒரு (பட்டதாரிதான் அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி)தலைமை தாங்குபவராகவோ அல்லது பிரதம விருந்தினராகவோ இருக்கவேண்டும் என்று விரும்புபவர் மட்டுமல்ல தன்னை விட வேறு யாரையாவது படிப்பில் குறைந்த ஒருவர் ஏதாவது கூட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டால் உடனே தான் இருக்க தகமை இல்லாதவனெல்லாம் தலைமை தாங்குகிறான் என்று தனக்கு தெரிந்தர் எல்லோருக்குமே போன் அடித்து புலம்புவார்.

அமைப்பு பற்றி விமர்சிக்கிறனெண்டு போட்டு இப்ப ஒரு தனிநபர பற்றி விமர்சிக்கிறிங்க. மேல நீங்க கட்டுரை எழுதினதுக்கான நோக்கம் அமைப்ப விமர்சிக்கிறதா? அமைப்பில உள்ள அந்த தனிநபர விமர்சிக்கிறதா? நீங்க குறிப்பிடுற அந்த நபர் உங்களிட்ட ரெலிபோன் அடிச்சு தன்னப்பற்றி தம்பட்டம் அடிச்சாரா? அல்லாட்டி அவர் தம்பட்டம் அடிச்சாரெண்டு வேற ஒராள் உங்களுக்கு சொன்னத வச்சு நீங்க எழுதுறீங்களா?

சோழியன் அண்ணா மேல சொன்னது:

சிலர் அமைப்புகளை விமர்சிப்பதாக ஆரம்பித்து, ஒரு குறிப்பிட்ட நபரைக் குற்றவாளியாகக் காட்டுவதையே விமர்சனமாக முன்வைப்பார்கள். இப்படியான விடயங்களைத்தான் என்னால் விமர்சனம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படியானவை விமர்சனங்களல்ல. வசைமாரிகள்.

நீங்க சொன்னது: இது யெர்மனியில் இருக்கின்ற எல்லோருக்குமே ஏன் உங்கள் கருத்தை பாராட்டிய சோழியனுக்கும் நன்றாகவே தெரியும்.

களத்தில நானும் ரண்டு வருசத்துக்கு மேல இருக்கிறன். சோழியன் அண்ணாவோட யாழில எனக்கு அறிமுகமிருக்கு. அப்பிடி இருக்கேக்க இதில *உங்கள் கருத்தை பாராட்டிய* எண்டுற ஒண்ட சேர்க்க வேண்டியதின்ர அவசியமென்ன?

யெர்மனியில இருக்கிற எல்லாருக்கும் தெரியட்டும்... சோழியன் அண்ணாக்கும் தெரியட்டும்... தெரிஞ்சவை எழுதட்டும். தெரியாத நீங்க கேள்விப்பட்டத மட்டும் வச்சு எப்பிடி ஒரு தனிநபர விமர்சிப்பிங்க?

நீங்க சொன்னது: மற்றும்படி என்ரை விமர்சனங்கள் இறைச்சி கடையை விட மோசம் எண்டு சொன்னீங்கள். ஆனாலும் நீங்களோ நானோ மோசமாக இருக்கிறது என்பற்காக இறைச்சிக்கடை பக்கம் போகாமலோ அல்லது இறைச்சி சாப்பிடாமலா இருக்கிறோம் ஏனெனில் அதுவும் எங்களிற்கு தேவையாகத்தான் இருக்கிறது.

சாத்திரி அண்ணா நீங்க என்ன சொல்லிறீங்க எண்டு தெரிஞ்சு தான் சொல்லுறீங்களா? இறைச்சிக்கடைல இரக்கமில்லாமல் ஆடு மாடு கோழியத்தான் வெட்டுறாங்க. அதே மனநிலையில மனுசரின்ர மனச விமர்சனம் எண்ட பேரில வெட்டுறீங்க எண்டதத் தான் சொன்னன். எது எங்களுக்கு தேவை?

நீங்க சொன்னது: குப்பையாக இரக்கிறதென்றும் எழுதியிருந்தீர்கள் உண்மைதான் அந்த குப்பபைகளை கூட்டி கொழுத்திவிடஎன்னாலா சிறு முயற்சி என்றும் சொல்லலாம்.

குப்பைய கொழுத்துறமெண்டுற பேரில பிளாஸ்ரிக் போன்ற பொருள்களயும் போட்டு கொழுத்தாதீங்கோ.

அடுத்ததாக ஒரு பேப்பர் ஒரு ஊடகம் என்று எந்த காலத்திலையும் ஒரு பேப்பர் காரர் சொன்னதில்லை நானும் சொன்னதில்லை

அப்ப என்னெண்டு சொல்லுறீங்க? அதக்கொஞ்சம் விளங்கப்படுத்தினால் சந்தோசமா இருக்கும்

இது தமிழை வளக்கிறதோ ஊடகத்துறையிலை புரட்சி செய்யிறதோ ஒரு பேப்பரின்ரை நோக்கம் இல்லை

அப்பிடி ஒரு நோக்கம் இருக்கோணும் எண்டுற அவசியமும் இல்ல. ஆனா ஏதாவது ஒரு நோக்கமிருக்கணுமெல்லோ? நோக்கமே இல்லாமல் அப்ப எதுக்கு நடத்துகினமாம்?

ஏதோ பொழுது போகாத என்னை மாதிரி மண்டை கழண்ட சிலர் பேப்பர் அடிக்கினம் அது உங்களிற்கு மாவரிக்க பொரிச்ச மீன் எண்ணெய் ஒத்த பிள்ளையள் கப்பல்செய்து விழையாட குளிர் காலத்திலை காருக்கை காலுக்கை போட்டது போக நீங்கள் விரும்பினால் படிக்கலாம் விரும்பாட்டி கிழிக்கலாம்.

ஆனாலும் அவசரத்தில நீங்க இப்பிடி எல்லாரயும் கேவலப்படுத்தியிருக்கக்கூடா

Edited by poonai_kuddy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.