Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித்துவமான தமிழினம், தனிநாடு சாத்தியம் தானா?

Featured Replies

அமெரிக்காவில் civil war நடந்த பொழுது பொருளாதாரத் தட்டுப்பாட்டினால் வளங்களின் உச்சப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு தேவாலயங்களின் மணிகள் உருக்கி பீரங்கிகள் செய்யப்பட்டது. இதை ஊர் ஊராக மக்களே மனமுவர்ந்து கொடுத்தார்கள்.

மாபெரும் வடக்கு யுத்தத்தில் (the great northern war) சுவீடன் ரஸ்யா மீது படையெடுத்த பொழுது கடவுள் நம்பிக்கை கொண்ட பீற்றர் (Peter the Great) தேவாலயங்களின் மணிகளை உருக்கி பீரங்கிகள் செய்ய உத்தரவிட்டார்.

புகழ்பெற்ற 1789 பிரெஞ்சுப் புரட்ச்சியின் பின்னர் தேவாலயங்களும் அவை சம்பந்தப்பட்ட பொருளாதார அதிகார குவியமும் மறுசீரமைக்கப்பட்டது நியாயத்தின் கோவில்கள் Temple of reasons reforms என்ற நோக்கில். அதன் அடிப்படையில் தேவாலையங்களில் உள்ள மணிகளும் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஆடம்பரங்களும் உருக்கப்பட்டது.

வரலாற்றில் இவ்வாறு இத்தாலி ஒஸ்ரியா போன்ற நாடுகள் உட்பட பல ஜரோப்பிய நாடுகளில் போர்காலத்தின் உச்சத்தில் அவர்கள் இதே அணுகு முறையை பயன்படுத்தியதை காணலாம். அதாவது போர்க்காலத்தில் சமுதாயத்தின் தேவை கருதி மத விடையங்களில் செலவிட்ட பொருளாதாரம் குறைக்கப்பட்டது மாத்திரமல்ல அவர்களது நம்பிக்கையின் சின்னங்களை உருக்கி போர்க்கால தேவைகளை நிறைவு செய்து தமது நாட்டைக் காப்பாற்ற பின்னிக்கவில்லை.

ஆனால் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் இனம் மிக மோசமான இராணுவத் தளபாட தொழிநுட்ப வளத் தட்டுப்பாடுகளுடன் 30 வருடமாக போராடுபவர்களாக சிறுபான்மையினமாக எண்ணிக்கையில் 3 இற்கும் அதிகமான மடங்கான பெரும்பான்மை இனத்தின் ஆக்கிரமிப்பை அடக்கு முறையை எதிர்த்து போராடுவதாக கூறிக் கொண்டு புலம்பெயர்ந்த நாடுகளில் கோவில்கள் ஆலயங்களில் செலவிடும் பணம் எவ்வளவு ஒரு வருடத்திற்கு?

இங்கு இருக்கும் கோயில் நிர்வாகம் ஏறத்தாள 300,000 அவுஸ்திரேலிய டொலரினை போட்டி கோயிலுக்கு எதிரான வழக்குக்கு செலவழித்தது அதேபோல மற்றய கோயிலும் இதே அளவு தொகையினை செலவளித்திருக்கும் நம்ம சனத்தை திருத்துவது கடினம் குறுக்ஸ் அதுவும் கோயில் விவகாரத்தில்

**********

Edited by harikalan

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் அறிவிப்பது யாதெனில்.. கோவில் உண்டியல்களை உடைத்து பலஸ்ரிக் ஏவுகணை வாங்கி சா.. உற்பத்தி செய்து..கொழும்பைத் தாக்குவோம்...

வன்னியில் உள்ள கோவில் விக்கிரகங்களை உருக்கி குறுந்தூர ஏவுகணைகள் செய்து.. அல்லது ஆட்லறி செல் செய்து இராணுவத்தை விரட்டுவோம்....

இப்படி வெற்றுக் கூச்சல் போட்டு கத்தியே.. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு நிகழ்ந்தது போல..புகலிடத்தில் உள்ள கோவில்களை மூடிவிட்டு அங்குள்ள சொத்துக்களை அந்தந்த நாடுகள் உறைய வைக்க வழி செய்வோம்.. இதனால் கோவில்கள் வழி சமூகத்துக்குச் சென்றடையும் சின்ன அன்பளிப்பும் இல்லாமல் செய்வோம்.

அங்கால பூசாரி போல புலி வருகுது என்றாங்க.. ஆனால் மறு வழத்தால..மொட்டைகள்..களத்தில இறங்கி.. பிரித் ஓதி நூல்கட்டி.. ராங்கிகளால் சுட்டுக் காட்டிறாங்க... அப்படித்தான் இருக்குது இதுவும்.

ஒரு பிஸ்ரலோட தொடங்கின போராட்டத்தை.. தலைவர் இன்று.. உலகின் ஒட்டு மொத்த வல்லாதிக்க சக்திகளின் இராணுவத் தொழில்நுட்பத்தையும் தந்திரங்களையும்.. ராஜதந்திரத்தையும் எதிர்கொள்ளும் வகைக்குள் தன்னைக் கொண்டு வந்தது.. வன்னில உள்ள கோயில்களை.. தேவாலயங்களை உடைச்சல்ல...! மாறாக மதிச்சு...!

எமது விடுதலைப் போராட்டம் பகுதியளவான சுய தொழில்நுட்ப வளத்துடன் பெறப்படும் அல்லது கைப்பெற்றப்பெறும் தொழில்நுட்ப வசதிகளுடன் தான் வளர்ந்தது அதுதான் வரலாறு. அதுதான் சாத்தியமும் கூட. எமக்கு என்று ரஷ்சியா போல.. ஒரு பெரிய தேசத்தைக் கட்டி வைச்சிட்டு.. பெரிய இராணுவ தொழிற்சாலைகளை வைச்சுக் கொண்டு.. ஆராய்ச்சிக்கு பல பல்கலைக்கழகங்களை நிறுவி இயக்கிக் கொண்டு.. நாங்க போராடத் தொடங்கல்ல. எமது போராட்டம் கரந்தடிப் போராட்டமாகவே இருந்து.. கடந்த தசாப்தத்தில் தான் மரபுவழியையும் தேர்ந்தெடுத்துப் போராட ஆரம்பித்திருக்கிறது.

குறைந்த தொழில்நுட்ப வளத்தோடு அமெரிக்கவல்லாதிக்கத்தையே கடந்த தசாப்தத்தில்... சோமாலியாவை விட்டு ஓட வைத்த நிகழ்வுகளையும்.. நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.

இன்று... ஈராக்கிலும்.. ஆப்கனிலும்.. அமெரிக்க - பிரித்தானிய நேட்டோ அதியுயர் தொழில்நுட்பங்கள் கூனிக் குறுகி நிற்கவும்.. எமது தலைவர் முன்னொரு தடவை தேர்ந்தெடுத்த உயிராயுத மதிநுட்பம் தான் காரணமாகியுள்ளது.

நாம் கோவில் மணிகளை சிலைகளை உருக்கி அமெரிக்க விமானப்படைக்கும்.. இஸ்ரேலிய விமானப்படைக்கும் நிகராக போட்டி போட விமானம் செய்ய முடியும் என்றால்.. அல்லது அவ்விமானங்களை சுட்டு விழுத்த முடியும் என்றால்.. அதற்கான வழிமுறைகள்.. தொழில்நுட்ப வளங்களை.. வழிமுறைகளை..வடிவமைப்புக்களை நாம் பெற முடியும் என்றால் அதற்கான சாத்தியங்களுடு இப்படியான கருத்துக்களை எழுதுங்கள்.

ஏதோ.. வித்தியாசமாச் சொல்லுறம் என்று.. மத எதிர்ப்பு என்ற கேவலமான குறுகிய வட்டத்துக்க நின்று.. சாத்தியமற்ற புலம்பல்கள் செய்வது.. ஏட்டுச் சுரக்காயாவதற்கும் உதவாது. :lol::lol:

Edited by nedukkalapoovan

சுய தணிக்கை....

Edited by தயா

  • தொடங்கியவர்

ஏன் கரிகாலன் சம்பந்தமில்லாத தலைப்பு என்றியள்?

சிறீலங்காவின் பொருளாதாரம் 25USD billion இற்கு மேற்பட்டது. அதற்கு பங்களிப்பதாக வர்த்த நிறுவனங்களின் வரி நுகர்வோர் வரி வருமான வரி ஏற்றுமதி கடன் உதவிகள் நிதிஉதவிகள் என்று நீழுகிறது.

தமிழர்களின் போராட்டத்திற்கு பலமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இருப்பதாக பீத்திக் கொள்ளிறம். புலம்பெயர்ந்தவர்களை எடுத்தால் தமது சொந்த குடும்பத் தேவைகளிற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் இது எதிர்பார்க்கக் கூடியது. அடுத்து எமது பொருளாதார நடவடிக்கைகளால் உருவாகும் வரிகள் என்பது அந்தந்த நாட்டிற்குத்தான் சட்டரீதியிலும் நியாயமாகவும் பங்களிக்கிறது. இதில் தவறு ஏதும் இல்லை.

இவை 2 இற்கும் அடுத்ததாக 3 ஆம் நிலையில் இன்று எமது புலம்பெயர்ந்த சமூகங்களின் பொருளாதார பலம் எங்கு எப்படிப் பிரதிபலிக்கிறது? எண்ணிக்கையிலும் ஆடம்பரத்திலும் அதிகரித்துவரும் கோவில்களில் தான் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு தேசத்தின் பொருளாதார பலத்தின் பிரதிபலிப்புக்களை பொது-சமூக கலாச்சார விடையங்களில் காண்பது ஒன்றும் புதிது அல்ல. ஆனால் அது போர்க்காலத்தில் இவ்வாறு விரிவடைவது இல்லை மாறாக அவற்றில் இருந்து வளங்கள் தேவை கருதி திசை திருப்பியதை ஏனைய தேசங்களின் வரலாறுகள் சொல்லுகின்றன.

புலம் பெயர்ந்த எமது நிலை என்பது எமது சொந்த வாழ்விற்கும் 2 தேசியங்களிற்கும் பொருளாதாரரீதியில் பங்களிக்க வேண்டிய தேவையாக இருக்கிறது. ஆனால் நாம் இன்று யதார்த்தத்தில் செய்வது சொந்த வாழ்விற்கும் 1 தேசியத்திற்கும் மதத்திற்கும் தான் முன்னுரிமைகளை ஒதுக்கிறதும். தமிழ்த் தேசியம் பெயரளவில் 4 ஆவது இடத்தில் தான் இருக்கிறது.

எந்த தேசமும் சில்லறைக் காசோடு போராட்டம் நடத்தி வென்றதில்லை. ஒவ்வொரு தேசியமும் சுதந்திரமாக தங்களைத் தாங்களே ஆழுவதற்கான கட்டமைப்புகளை கட்டி பலப்படுத்துவதற்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அவர்களால் தான் சுதந்திரத்தை அடைய முடியும் அதை தக்க வைக்க முடியும். எந்தளவிற்கு நாம் சுதந்திரம் நோக்கி நகருகிறோமோ அந்தளவிற்கு எமது தேசியத்தின் சுயாதீன பொருளாதார தேவைகள் பல மடங்காக அதிகரிக்கும். சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா அண்மையில் சொன்ன its better to have a bankrupt country than half a country புலம்பெயர்ந்த எமது பொருளாதாரப் பலத்தைப் பிரயோகிக்க கொடுத்துள்ள முன்னுரிமைகளின் முன் வைத்துப் பாருங்கள் தலைப்புச் சொல்லாடலின் யதார்த்தம் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்கள் நிறைய சமூகத் தொண்டுகள் செய்கின்றன. பலருடைய வீட்டில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் அடுப்பெரிவதில்லை. பக்தியோடு வழிபட்டு தங்கள் வயிற்றுப்பாட்டையும் கோயிலில் முடிக்கும் நிறையப் பேர் உள்ளனர். கோயில்களை இடித்தால் இவர்கள் கதி என்னாவது?

ஆயுதம் வேண்டி போராடவேண்டிய தேவையில் தாயகத்தில் நிலைமை இல்லை.. தேவையான ஆயுதங்களை சிங்கள இராணுவம் வாங்கி வைத்திருக்கின்றது.. தேவையென்றால் சும்மா "பிராக்கு"க் காட்டிவிட்டு அள்ளிக் கொண்டு வந்து விடலாம்.. போர் விமானங்களைப் பறக்கவிட்டு சிங்களவனைக் கொண்டே விமான எதிர்ப்பு ஆயுதங்கள் வாங்கியாகிவிட்டது.. போய் எடுத்து வருவதுதான் பாக்கி (நெடுந்தீவில் எடுத்தமாதிரி செய்வது பெரிய வேலையா?)

நடைமுறை அரசையும் கொண்டு நடாத்த மற்றைய நாடுகள்போல் வரிகள் அறவிடுவதனால் எவருடைய உதவிகளும் தேவையில்லை.. எனவே புலத்தில் இருப்பவர்கள் காசைக் கோயிலிலும் செலவழிக்கலாம். இரவு விடுதிகளிலும் செலவழிக்கலாம்; விரும்பினால் கள்ளுக்கொட்டிலிலுல் செலவழிக்கலாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.