Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சண்டே லீடர்" அச்சகம் அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினால் தீவைப்பு

Featured Replies

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரித்துச் சாம்பராக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

'Sunday Leader' printing house set on fire

(LeN-2007 Nov. 21, 4.20am) unidentified gang set fire to one of the major newspaper printing houses early this morning (21st Nov 2007). Printing press of the Leader Publications, which publish weekly The Sunday Leader, mid weekly Morning Leader and Sinhala Weekly Irudina was completely destroyed by the fire.

The printing house was situated at 24, Katukurunduwatta Road, Rathmalana. The damage estimated at millions of rupees.

Today issue of Morning Leader print run was on, when the gang of 15 forced themselves into the printing house. The gang first forced management and workers to hand over their mobile phones and to kneel down before setting fire to the machines, according to journalists who visited the scene.

Recently the Morning Leader editor has been very critical of Asia Tribune website, which according to the editor working in hand in hand with the break away LTTE militant group now headed by Pilleyan. She filed a civil defamation case against the web site weeks ago and in retaliation website unleashed a series of articles attacking the editor.

The Sunday leader printing press was set on fire earlier occasion on 17th October 2005 in the run up to presidential election. The newspaper and its editor Mr. Lasantha Wikramatunga as well as Morning Leader Editor Sonali Samarasinghe have been harassed and threatened continuously during the last two years. All Leader publications are very critical towards the government and exponents of opposition political views.

http://www.lankaenews.com/English/news.php...e0b28b37f789bf7

  • தொடங்கியவர்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

சிறிலங்காவின் முன்னணி ஊடக நிறுவனமான லீடர் குழுமத்தின் ("சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" வார ஏடுகள்) அச்சகத்தை தீக்கிரையாக்கியமைக்கு 5 ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து வாசிக்க

பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு சிவில் அமைப்புக்கள் கிளர்ந்தெழ வேண்டும் 5 ஊடக அமைப்புக்கள் அறைகூவல்

சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சகம் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது. ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாங்கம் தொடர்ந்தும் அதனை தட்டிக்கழித்து வருகின்றது என்று ஐந்து ஊடக அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து வாசிக்க

அரசின் அனுமதியுடனேயே பத்திரிகை நிறுவனம் தீக்கிரை ரணில் குற்றச்சாட்டு

அரசாங்கத்தினதும், பாதுகாப்பு அமைச்சினதும் அனுமதியுடனேயே அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் புகுந்து சண்டே லீடர் நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் இச்சம்பவத்தை ஐ.தே.க. கடுமையாக கண்டிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-11-22

ஊடக சுதந்திரத்துக்குச் சாவுமணி

தென்பகுதி மக்களை குறிப்பாக சிங்கள மக்களை அரசியல் அந்தகாரத்துக்குள் வைத்துக்கொண்டு, யதார்த்தத் தையும் நிதர்சனத்தையும் அவர்களுக்கு மறைத்துக்கொண்டு, தமது திருகுதாள அரசியலைக் கனகச்சிதமாக முன்னெடுக் கும் சிங்கள அரசியல் கட்சிகளின் மனவமைப்பில் மாற்றம் ஏதும் ஏற்படவே போவதில்லை என்பது தெளிவாகி வருகின்றது.

"த லீடர் பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தின் அச்சு இயந்தி ரங்கள் எரிக்கப்பட்ட அராஜகம் இந்தச் செய்தியையே ஆணித் தரமாக உரைத்து நிற்கின்றது.

இலங்கையின் அரசியல் நிலைவரங்களைப் பற்றிய உண்மைகளைத் தென்னிலங்கையில் எடுத்துரைக்க முனை யும் ஊடகவியலாளர்கள் "தேசத் துரோகிகள்' எனப் பச்சை குத்தப்படுகின்றார்கள். அல்லது அந்த ஊடக நிறுவனங் களுக்கு ஊறு விளைவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் இரண்டாவது தடவையாகக் கொழும் பில் "லீடர் பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தின் பத்திரிகைகளை அச்சிடும் அச்சகப்பிரிவு அராஜக அட்டகாசத்தில் நாசமாக்கப் பட்டிருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்திலும் தேர்தலுக்கு முதல் மாதத்தில் இந்த நிறுவனத்தின் அச்சகப் பிரிவுக்குத் தீயிடப்பட்டது.

ஆனால் இம்முறை சேதம் அதிகம் எனக் கூறப்படுகின் றது.

இரத்மலானை விமான நிலையத்தை ஒட்டிய உயர் பாது காப்பு வலயத்துக்குள் இந்த அச்சு இயந்திரசாலை அமைந்தி ருக்கின்றது.

அத்தகைய பகுதிக்குள்தான் சுமார் பதினைந்து பேர் முகமூடி அணிந்தபடி, ரி 56 ரக ஆயுதங்களுடன் இரு வாகனங் களில் வந்து, அச்சு இயந்திரங்களை எல்லாம் எரித்து அராஜ கம் புரிந்துவிட்டு, ஆசுவாசமாகத் தப்பிச் சென்றிருக்கின்றார் கள்.

""இந்த அரசின் கீழ் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராகப் புரியப்பட்ட மோசமான வன்முறை நட வடிக்கைகள் குறித்து அர்த்தமுள்ள விசாரணைகள் நடை பெறுவதை, குற்றம் புரிந்த படையினருக்கு குற்ற விலக் களிப்பு வழங்கும் வகையில் நாட்டில் விளங்கும் விசேட சிறப்புரிமைக் கலாசாரம் தடுத்து, இடையூறு செய்து வரு கின்றது.'' என்று சுதந்திர ஊடக இயக்கம் உண்மையை விளம்பியிருக்கின்றது.

ஊடக நிறுவனங்களுக்குள் புகுந்து தாக்குதல்கள் நடத் தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப் படுகின்றார்கள்; கடத்தப்பட்டுக் காணாமற்போகின்றார்கள். ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படு கின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் விலக் கப்பட்டு அவர்கள் கையறு நிலையில் அந்தரிக்க விடப்படு கின்றனர். ஊடக நிறுவனங்களுக்கு எதிராகப் பழிவாங்கும் அரச நிர்வாக நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப் படுகின்றன.

ஆனால் இந்தக் குற்றங்களுக்காக அட்டூழியங்களுக் காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை. யாரும் கைது செய் யப்படுவதில்லை. இத்தகைய கொடூரங்களில் சம்பந்தப் பட்ட எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படுவதில்லை.

அநாமதேயங்கள் புரியும் செயலாகக் காட்டிக்கொண்டு ஊடக சுதந்திரத்தையே குழிதோண்டிப் புதைக்கும் மிகவும் ஆபத்தான மோசமான கலாசாரம் ஒன்று இலங்கையைப் பற்றிப் பீடித்து நிற்கின்றது.

அண்மைக்காலத்தில் பன்னிரண்டு ஊடகப் பணியாளர் கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள

Edited by கறுப்பி

ஊடக சுதந்திரம் என்ற ஒன்று சிரீலங்காவில இருந்தால்தானே அதற்கு சாவுபணி அடிக்க

இவ்வளவு காலமும் ஊடக சுதந்திரம் கொடிகட்டிப் பறந்தது

போல இருக்கு.

தலைவலியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். :lol:

  • தொடங்கியவர்

"சண்டே லீடர்" குழும அச்சகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

பயங்கரவாத இயக்கத்தைப் போல செயற்படும் ஆட்சியின் வேலை இது! "த சண்டே லீடர்' ஆசிரியர் லஸந்த சீற்றம்[/b

"பயங்கரவாத இயக்கம் போல முன்னெடுக்கப்படும் ஓர் ஆட்சியினால் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் மேற் கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்கு தல் இது!''

இப்படித் தமது பத்திரிகை நிறுவன அச்சகசாலை மீதான தீவைப்புத் தாக்குதலைக் கண்டித்திருக்கின்றார் "த சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தை இப்பத்திரிகை கடுமையாகச் சாடி வந்தது என்பது தெரிந்ததே. தமது பத்திரிகையின் அச்சகசாலை மீதான இந்தக் கொடூரத்துக்கு அரசின் மீதே லஸந்த குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

"ஆள்களைக் களவாகப் பிறநாடுகளுக் குக் கடத்தும் ஓர் அரசிடமிருந்து இதற்கு மேல் நீங்கள் எதை எதிர்பார்க்க முடியும்? ஆனாலும் நாம் நின்று எமது கடமையைத் தாக் குப் பிடித்துச் செய்வோம்'' என்றார் அவர். கருணா பிரிட்டனுக்கு களவாக அனுப்பப் பட்டதையே அவர் இப்படிக் கூறினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அரச தரப்பின் நிலைப்பாடு

இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இது பற்றி முழுமையாக விசாரிக்கும்படி ஜனாதிபதி எனக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் பல்வேறு குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. அவர்களில் யாரா வது இதைச் செய்திருக்கலாம். இதற்குப் பின்னால் பல்வேறு சதிகள் இருக்கலாம். தற்போதைய நிலையில் அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த சிலர் விரும்புகிறார்கள் இவ்வாறு தெரிவித்தார் அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சர் லசஷ் மன் யாப்பா அபேவர்த்தன.

நன்றி உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.