Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றுவோர் கவனத்திற்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றுவோர் முடியுமானவரை தமது பதாகைகளை தலைக்கு மேலாக

உயர்த்தி பிடித்துக்கொள்வது நன்று. இது பார்வையாளர்கள் பதாகைகளிலடங்கும் சுலோகங்களை

வாசித்தறிவதை இலகுவாக்குவதோடு, தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கை மற்றும் இணையத்தள

புகைப்படங்களிலும் தெளிவாகத்தெரியும்.

இவ்வாறு செய்வது எமது செய்தி அனைத்துலகசமூகத்துக்கு எட்டுவதை மேலும் விரைவாக்கும்.

அதற்கடுத்தாக, கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றும் இளையோர்கள் சிரித்துப்பேசிச்செல்வதை

தவிர்க்கவும். இவ்வாறு செல்வது எமது நாட்டில் நடக்கும் உண்மையான அவலத்தினை அந்நிகழ்வு

பிரதிபலிக்காது. மாறாக அது சாதாரண கவனயீர்ப்பு நிகழ்வாக அமைந்துவிடும்.

அன்மைகாலமாக நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை உற்றுநோக்கினால் இவ்விரு குறைபாடுகளும்

பல இடங்களில் தென்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

---------------------

Edited by தூயவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

---------------------

தூயவன் ?????

ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. நான் வேறு இதே மாதிரியான விடயங்கள் எழுதியிருந்தேன். சிங்கள ஆட்கள், நடந்து கொண்ட விதம் பற்றி. அடுத்த முறை அப்படி நடக்காது என்பதால் அதை அழித்து விட்டேன். அவ்வளவு தான்.

இளையவர்கள் மட்டுமல்ல, தமிழீழத்தைப் பற்றி அறிந்த பெரியவர்களும் சிலர் சிரித்துக் கதைத்துக் கொண்டு தான் சென்றார்கள். இளையவர்களை மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல. ஓங்கிக் குரல் கொடுத்த பலர் இளைய தலைமுறையினரே என்பதையும் நினைவுபடுத்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்வலங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வுகளிலும் பார்வையாளர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கும் கடமைகளுக்கு சிலர் தெரிந்தோ தெரியாமலோ மிகச் சிறிய வயதுள்ள குழந்தைகளிடம் இப்படியான பொறுப்புகளை வழங்குவதும் தவிர்க்கப்படுதல் வேண்டும். மற்றும்படி ஆர்கேஆர் கூறிய கருத்துகளும் கவனமெடுத்துச் செய்வது நன்று.

வணக்கம்,

நான் நேரில் அவதானித்தவை மற்றும் ஊடகங்களில் குறிப்பாக தமிழ்விசன் தொலைக்காட்சியில் மற்றவர்கள் சொல்லக்கேட்டவை:

1. சில புல்லுருவிகள் மக்களோடு மக்களாக இணைந்து வேறுமாதிரியான பொய்ப்பிரச்சாரங்கள் செய்யும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கின்றார்கள். என்றமையால் அருகில் உள்ளவர்கள் விநியோகிக்கும் துண்டுப்பிரசுரங்கள் பற்றி கலந்துகொள்பவர்கள் சிறிது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். துண்டுப்பிரசுரங்களை வாங்கி வாசித்து தவறுதலாக அதில் ஏதும் குறிபிடப்பட்டு இருந்தால் அதை ஏனையவர்களுக்கு சுட்டிக்காட்டுவது மிகவும் நன்று.

2. இளம் வயதினர் கோசம் போடுகின்றார்கள். வயதானவர்கள், இளைஞர்கள் பேசாமல் சுலோகத்தை மாத்திரம் தாங்கியபடி முளுசிக்கொண்டு நிக்கின்றார்கள். கோசம் போடுவதற்கு வெட்கப்படவோ, பயப்படவோ தேவை இல்லை. எங்கள் குரல்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும்.

3. மிக இளம் வயதினர் உணர்ச்சி அதிகரித்து சில தவறான செயற்பாடுகளில் - உதாரணமாக வேற்றினத்தவர்களுடன் வாய்த்தகராற்றில் இறங்குதல், தவறான இடங்களிற்கு முன்னால் நின்று (அமைதி பேணப்படவேண்டிய இடங்கள்) கோசம்போடுதல் போன்ற செயல்களை செய்யப்பார்க்கின்றார்கள். எனவே, பெரியவர்கள்தான் இவர்களை கண்காணித்து கட்டுப்படுத்தவேண்டும்.

4. வீதி, முக்கியமாக வாகன ஓட்டுதல் விதிமுறைகள் எப்போதும் பின்பற்றப்படவேண்டும். நேற்று காவல்துறையினர் ஓடும் வாகனத்துக்கு வெளியால் எழுந்து நின்று வாகன யன்னலினூடாக உடம்பை நீட்டி கொடிபிடித்து கோசம்போட்ட வாகனச்சாரதி ஒருவருக்கு தண்டம்/தண்டனை கொடுத்ததோடு, மேற்குறிப்பிட்ட செய்கையில் ஈடுபட்ட சிறுவனையும் எச்சரிக்கை செய்து இருந்தார்கள். பல நூற்றுக்கணக்கான எம்மவர்கள் முன்னிலையில் இப்படியான சம்பவம் நடைபெற்றபோது பார்ப்பதற்கு மிகவும் துயரமாகவும், அவமானமாகவும் இருந்தது.

5. போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களிற்கு மிகவும் கண்ணியத்துடன் ஒழுங்குமுறைகளை கவனிப்பதில் ஈடுபட்ட காவல்துறையினர் கண்ணீர்புகைக்குண்டு, பொல்லடிகள் மூலம் தாக்குதல் செய்யப்போகின்றார்கள் என்று சிலர் பீதியைக் கிளப்பி இருக்கின்றார்கள். பீதியைக்கிளப்பி கவனயீர்ப்பை திசைதிருப்புபவர்கள்பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நன்றி!

கவனயீர்ப்பு கோஷங்களில் இவையும் முக்கியமானவை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!

சிறிலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து!

மற்றும் எரிச்சலுட்டும் இசைகளை எழுப்பவேண்டாம்,

  • கருத்துக்கள உறவுகள்

கவனயீர்ப்பு கோஷங்களில் இவையும் முக்கியமானவை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!

சிறிலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து!

மற்றும் எரிச்சலுட்டும் இசைகளை எழுப்பவேண்டாம்,

முக்கியானமானது ஆகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதினம் இணையத்தில் வழுதி எழுதிய ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டது போல, மேற்குலகத்திற்கு கவன ஈர்ப்பு முக்கியம், ஆனல் அசௌகரியமாக இருக்கக்கூடாது. முற்றுமுழுதான எதிர்ப்பு தெரிவிக்கப்படவேண்டிய இடம் எல்ல இந்திய, இலங்கை தூதாராலயங்கள். பணியாற்ற விடாது தடை ஏற்படுத்தி டில்லியை, சோனிய காந்தியின் மனச்சாட்சியை உறுத்தவேண்டும.;

என்.வை.பென்மன்

  • கருத்துக்கள உறவுகள்

புதினம் இணையத்தில் வழுதி எழுதிய ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டது போல, மேற்குலகத்திற்கு கவன ஈர்ப்பு முக்கியம், ஆனல் அசௌகரியமாக இருக்கக்கூடாது. முற்றுமுழுதான எதிர்ப்பு தெரிவிக்கப்படவேண்டிய இடம் எல்ல இந்திய, இலங்கை தூதாராலயங்கள். பணியாற்ற விடாது தடை ஏற்படுத்தி டில்லியை, சோனிய காந்தியின் மனச்சாட்சியை உறுத்தவேண்டும.;

என்.வை.பென்மன்

சோனிய காந்தியின் மனச்சாட்சியை உறுத்தவேண்டும.;

அப்படியொன்று இருக்கா அவரிடம்???

நீங்கள் இன்னும் எதிர்பார்க்கின்றீர்களா??

எதிர்பார்த்து

எதிர்பார்த்தே அழிந்து கொண்டிருக்கிறோமே...

எதிர்பார்த்து

எதிர்பார்த்தே அழிந்து இனமாகுவோமா.....???

இல்லை.............

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நானும் ஒன்றைக்கண்ணுற்றேன்

ஆனால் அது அவரது தப்பல்ல

மிகுந்த ஆவேசத்திலும் ஆத்திரத்திலும் உணர்ச்சி வசப்பட்டநிலையிலும் அவர் கத்தியபடி நின்றார்

ஆனால் அவர்பிரெஞ்சுக்காரர்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தணிக்குண்டுகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படாமல் இருக்கின்றது.

மிக முக்கியமாக, என்னுமொரு விடயம்... குறித்த நாடுகளில் எவை மிகத் தவறான விடயமாக கருதப்படுகின்றதோ, அதற்குச் சிறிலங்கா அரசின் தொடர்பை வெளிப்படுத்த வேண்டும்.

இனத்துவம், மதவாதம் என்பன சில நாடுகளில்மிகத் தவறானவையாக நோக்கப்படுபவை. அதனால், அதை முன்வைக்கலாம். பேரினவாத சிங்கள இனம், தமிழ் மக்களைக் கொல்கின்றது என்று காட்டலாம்.

கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் முடிந்தால் ஒளிப்பதிவுகள், படங்கள் சிலவற்றை இருவெட்டில் பதிந்து ஊடகவியலளர்களுக்கு கொடுக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே வரவேற்கத்தக்க நல்ல ஆலோசனைகள்!

மோகன் அண்னா இந்த பதிவை அனைவரும் பார்க்கும் வண்ணம், முகப்பில் பெரிதாக இணைப்பை கொடுங்கள், என்னை பொருத்தமட்டில் கவனயிர்ப்பு நிகழ்வுகளில் சில குறைபாடுகள் காணப்பட்டன, அவற்றையும் சரிசெய்தால் மேலும் சிறப்பாக இருக்கும், இது எங்கள் கவலையையும் எதிர்ப்பையும் காட்டும் நிகழ்வு என்பதை சில இசைகளும் நடனங்களும் மாற்றிவிடுகின்றன

  • 1 month later...

சர்வதேச ஆதரவுடன் பிரிந்து செல்வதற்கான மக்கள் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டங்களில் வலியுறுத்தவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஆதரவுடன் பிரிந்து செல்வதற்கான மக்கள் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டங்களில் வலியுறுத்தவேண்டும்

அதில் சில விடயங்கள் தெளிவாக்க வேண்டும். தமிழ்மக்கள் பிரிந்து செல்வற்கான உரிமையைத் தமிழ்மக்களிடம் தான் கேட்க வேண்டும். சிங்கள நயவஞ்சக அரசு, அனைத்து மக்களிடமும் கேட்டு நம்முடைய நோக்கத்தைச் சிதைத்து விடும்.

புலம்பெயர் தமிழ்மக்களும் அதில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பொதுவான வாக்கெடுப்பு என்று வரையறுத்துஇ தெளிவற்ற செயலுக்கு இடங்கொடுத்தலாகாது.

  • 2 weeks later...

முன்னர் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்ச்சிகள் ஊடகங்களில் வரும்போது அனெகமாக Genocide என்ற பதத்தை தலைப்பிட்டார்கள், தற்போதய போராட்டங்களுக்கு LTTE Supporters Protest என்ற பதம் வருகின்றது, இதில் எது எங்களுக்கு அதிக பயனளிக்கும் என்பதை தமிழ் ஆய்வாளர்கள் சொன்னால் நன்றாக இருக்கும், எனக்கு சின்ன யோசனை அதாவது நாங்கள் அணிந்திருக்கும் உடைகளில் தேசிய கொடியையும் தலைவரையும் பொறித்துக்கொண்டு கையில் வன்னி அவலங்களின் பதாகைளை வைத்திருந்தால் நன்றாக இருக்குமா?

மற்றும் எரிச்சலுட்டும் இசைகளை எழுப்பவேண்டாம்,

கவனத்தில் கொள்ள வேண்டியது.

சிங்களவனை முட்டாள்,முட்டாள் என்று சொல்லி நாங்கள்தான் கடந்த காலத்தில் முட்டாள்களனோம், நாங்கள் விட்ட தவறுகள்தான் இன்று இந்த பேரழிவுகளுக்கு காரணம், சிங்களவன் செய்த இராஜதந்திர நகர்வுகளால் தான் இன்று உலகமே அவனுடன் துணை நிற்கின்றது, புலிகளை ஒவ்வொரு நாடுகளும் தடை செய்து கொண்டு வரும்போது ஆக்க பூர்வமான போராட்டங்களை முன்னெடுக்காமல் அவர்கள் தடைசெய்தால் என்ன எங்களுக்கு வரவேண்டிய நிதி வந்து சேரும் என்று பகிரங்கமாகவே மேடைகளில் எங்கள் தலைவர்கள் சொன்னார்கள், தடையால் நிதிப்பிரச்சனை மட்டும் தான் வரும் என்பதுபோல் சொன்னார்கள், இன்று உலக முழுவதும் தடையை நீக்கு என்று கத்திக்கொண்டிருக்கின்றோம், இனியாவது புத்திசாலித்தனமாக நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்,

அன்மைய நாட்களில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டங்கள் எல்லாம் மக்களின் அவலங்களை முதன்மை படுத்தாமல் மீண்டும் திசைமாறிக்கொண்டு போகிறது, இதை கவனயீர்ப்பு ஏற்பாட்டார்கள் கவனிக்க வேண்டும், கீழ் உள்ள இணைப்பில் உள்ள கவனயீர்பை பாருங்கள் , யார் முகத்திலாவது சிரிப்பு தெரிகின்றதான்று, வன்னியில் நடக்கும் அவலங்கள் அவர்களின் முகத்தில் பார்க்கலாம்,

சிங்களவனின் புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு உதாரணம் பாருங்கள் ஒளிப்பதிவை ,

இந்த செய்தியை பொய் என்று சொல்வதற்கு உருப்படியான நடவடிக்கை எடுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.