Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் ஒருவர்

Featured Replies

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS5Ku3hGcDWsGkRh9OxvRDAqXIs9brepnYqZLwsPg8ou21bxoJRww

பலஸ்தீனப்பகுதியில், தற்போதைய ஐ.நா.செயலாளர் பான் கி மூன் அவர்கள் சென்ற காரை மறித்து, அவர்மீது செருப்புகள் வீசப்பட்டதாக அண்மையில்

ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பலஸ்தீனமக்கள் மேற்குநாடுகளாலும் ஐ.நா.சபையாலும் வெகுவாக வஞ்சிக்கப்பட்டவர்கள்.எனவே அவர்கள் விரக்தியும்

வேதனையும் மிகுந்தவர்களாகச் செயற்படுதல் புரிந்துகொள்ளக்கூடியதே.இதுபோன்றே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை தொடங்கி இன்றுவரை

ஐ.நா.செயலாளரும், அவரின் பணியாளர்களும் ஈழத்தமிழர்கள்பால் காட்டும் பாராமுகமும்,புறக்கணிப்பும் மிகுந்த வருத்தம் தருவதாகும்.அண்மையில்,

போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திரசில்வா ஐ.நா. ஆலோசனைக்குழுவிற்கு, செயலாளரால் நியமிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சி தருவதாக

இருக்கிறது. இவற்றையெல்லாம் நோக்கும்போது ஐ.நா.சபையை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்தது என்ன? அது இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது?

என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் ஐ.நா.சபையின் இரண்டாவது பொதுச்செயலாளராகப் பணிபுரிந்து உயிர்த்தியாகம் செய்த

டாக் கமர்சோல்ட் [ Dag Hammarskjold :1905 -- 1961] அவர்களின் நினைவு தவிர்க்கமுடியாமல் வருகிறது.

டாக் கமர்சோல்ட் அவர்கள் முன்பு சுவீடன் நாட்டின் பிரதமராக இருந்தவரின் மகன். இவர் 1953 -- 1961 காலப்பகுதியில் பொதுச்செயலாளர் பதவியை

வகித்தவர்.அறிவுத்திறமையும் ஆன்மீகஈடுபாடும் இணைந்த ஆளுமைகொண்டவர். எல்லா மனிதர்களும் இறைவனின் குழந்தைகள். அதனால் மனித-

குலசேவையே மிகச்சிறந்தபணி எனக்கருதியவர். கொள்கை உறுதியோடு தன்னலமற்றசேவை புரிந்தவர்.1955இல் சீனா சென்று 15 அமெரிக்கப்போர்க்-

கைதிகளை விடுவித்தவர். 1956இல் சுயஸ்கால்வாய் பிரச்சினையை ஐ.நா. அவசரகாலப்படையை [ UN Emergency Force] உருவாக்கித் தீர்த்தவர். இப்போதும்

இருந்துவரும் ஐ.நா. அமைதிப்படை என்ற வழிமுறை இவர் தொடக்கியதே ஆகும். ஆபிரிக்காவில் உள்ள கொங்கோ நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப்போரை

நிறுத்தச் சென்றபோதே இவர் கொல்லப்பட்டார். கொங்கோ நாட்டின் இயற்கைவளங்களைச் சூறையாட விரும்பிய மேற்குநாடுகளுக்கு இவரின் செயற்பாடுகள்

தடங்கலாக இருந்தமையாலேயே இவர் கொல்லப்பட்டார் என்று கருதப்படுகிறது. இப்படியும் ஒருவர் வல்லரசுநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது

செயற்பட்டுள்ளார். செயலாளர் பதவிக்கே பெருமைசேர்த்த பெருமகன் அவர்.

" சாவைத்தேடாதே. சாவே உன்னைத் தேடிவரும். எனவே அந்தச் சாவே உன் வாழ்வின் நிறைவு ஆவதற்கான வழியைத் தேடு " என்ற அவரின்

கூற்றுப்படியேஅவரின் மரணமும் அமைந்துள்ளது. " Who killed Hammarskjold ?: The UN, the Cold War and White Supremacy in Africa " by Susan Williams என்ற

புதிய நூலின் தலைப்பே அவரின் சாவோடு சம்பந்தப்பட்ட அம்சங்களைத் தொட்டுக் காட்டுகிறது.

The UN secretary general wonders whether the UN is serving international law or the great powers //15 Sept.1961 //

http://www.guardian....rican-criticism

Dag Hammarskjöld: evidence suggests UN chief's plane was shot down // 17 August 2011//

http://www.guardian....y-general-crash

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.