Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரதி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    14998
    Posts
  2. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    53011
    Posts
  3. சண்டமாருதன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    6
    Points
    2554
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/23/17 in all areas

  1. உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப் படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்! அழகுக்காக..., எமக்குள் நிகழ்ந்த மரணங்களும், ஏராளம்! எந்தத் திமிரும் இன்றி.., எளிமையாக நிற்கிறாயே! ஏன்..? உன்னிடம்,,, முகம் பார்க்கும்,, கண்ணாடி இல்லை என்பதாலா? உன் காலடியில், தவழ்கின்ற நீரே..., கண்ணாடி தானே!, புரிந்து கொள்கிறேன்! நீ பறவையினம்! நான்....,, மனிதகுலம்!
  2. வணக்கம் வாத்தியார்....! ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளி வரை வருமா வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ....! --- தத்துவம்---
  3. உலகின் மிக பெரிய மின்தடை நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும், மின் தொகுப்புகளில், நேற்று ஒரே நேரத்தில் கோளாறு ஏற்பட்டதால், டில்லி, மேற்கு வங்கம் உட்பட, 22 மாநிலங்கள் இருளில் மூழ்கின. நாட்டில் உள்ள, 60 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அந்தந்த பிராந்தியங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் தொகுப்புகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும், குறிப்பிட்ட அளவுகளில் பிரித்து வினியோகிக்கப்படுகிறது. மின்சாரத்தை பிரித்து அனுப்பும் பணியை செய்வதற்காக, நாட்டில், வடக்கு, கிழக்கு, வட கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய மின் தொகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தெற்கு மின் தொகுப்பைத் தவிர, மற்ற மின் தொகுப்புகள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், வட மாநிலங்களுக்கு மின்சாரம் அளிக்கும், வடக்கு மின் தொகுப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், டில்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் இருளில் மூழ்கின. மின்தடையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விவரம்: வடக்கு மண்டலம்: பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் சண்டிகர். கிழக்கு மண்டலம்: மேற்கு வங்கம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் சிக்கிம். வடகிழக்கு மண்டலம்: அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா. .மெட்ரோ ரயில் சேவை முடங்கியது டெல்லி, கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை 2 மணி நேரம் முடங்கியது. . ரயில்கள் ஆங்காங்கே பாதியில் நின்றன. சுரங்கப்பாதைகளில் ரயில் நின்றதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். எமர்ஜென்சி மின்சார சப்ளையை பயன்படுத்தி. பாதி வழியில் நின்ற ரயில்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 2 மணி நேரத்துக்கு பிறகே மெட்ரோ ரயில் மின் சப்ளை சீரானது. நடுவழியில் நின்ற 300 ரயில்கள் ஒரே நேரத்தில் 3 மின்தொகுப்புகள் முடங்கியதால் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மின்சாரம் அடியோடு தடைபட்டது. இந்த மின்சார தடை காரணமாக வடக்கு ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே மற்றும் தென் கிழக்கு ரயில்வே கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதால் ரயில்கள் நடுவழியில் நின்றுவிட்டன. ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட ரயில்கள் நடுவழியில் நின்றன நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்தவர்கள் உணவு, குடிநீரின்றி அவதிப்பட்டனர். சுரங்கங்களில் தொழிலாளர்கள் தவிப்பு திடீர் மின்தடை காரணமாக மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறுகையில், ''பர்த்வான் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுரங்கத்தில் இருக்கும் அவர்கள் அங்கிருந்து மேலே வருவதற்கு லிப்ட்கள் பயன்படுகின்றன. மின்சாரம் இல்லாததால் லிப்ட்கள் இயங்கவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான சுரங்க தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். மின்சப்ளையை சீராக்கி அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்து நெரிசல் திடீர் மின் தடை காரணமாக டெல்லியில் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கவில்லை. இதனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் சிரமப்பட்டனர். 400க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் களமிறக்கப்பட்டனர். ஆனாலும், நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. .காரணம் என்ன? ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட மாநிலங்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக அளவு மின்சாரத்தை, மின் தொகுப்புகளில் இருந்து எடுத்துக் கொண்டதே, நேற்றைய பிரச்னைக்கு காரணம் என, தெரியவந்துள்ளது. குறிப்பாக, கிழக்கு மின் தொகுப்பிலிருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், அடுத்தடுத்த மின் தொகுப்புகளில் ஏற்பட்ட கோளாறு, 22 மாநிலங்கள் இருளில் மூழ்க காரணமாக ஆகி விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. * நேற்று ஏற்பட்ட மின்சார துண்டிப்பு, உலகில் இதுவரை நடந்த மின் துண்டிப்புகளில், மிகப் பெரிய அளவிலானது என, மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். * இந்தியாவை பொறுத்தவரை, ஒரே நேரத்தில், மூன்று மின் தொகுப்புகளில், அடுத்தடுத்து கோளாறு ஏற்படுவது, இதுவே முதல் முறை. * வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மின் தொகுப்புகள், 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் திறன் கொண்டவை. * உ.பி., பீகார், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள், தங்களுக்கு அனுமதிக்கபட்ட அளவை விட, அதிகமான மின்சாரத்தை, மின் தொகுப்பில் இருந்து எடுக்கவில்லை என, மறுத்துள்ளன. *மத்திய டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் விவிஐபிகளின் வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. இதை சமாளிக்க பூட்டானில் இருந்து நீர் மின்னுற்பத்தி திட்டம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அவசரமாக பெற்றனர். ஏறக்குறைய 2 மணி நேர மின்தடைக்குப் பிறகு பிரதமர் இல்லத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது. *இந்தியா முழுவதும் மின் தடை ஏற்பட்டாலும் மும்பையில் பாதிப்பு இருக்காது. குறிப்பாக தெற்கு மும்பையில். அங்குதான் பங்குச் சந்தை, சர்வதேச விமான நிலையம், உயர் நீதிமன்றம், கவர்னர், அமைச்சர்கள் என விஐபிகளின் வீடுகள் இருக்கின்றன. மேற்கு மின் தொகுப்பில் மும்பை இணைந்துள்ளது. அதில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதிலிருந்து விலகி, வேறு மின் சப்ளை மூலம் மும்பை இயங்கத் தொடங்கும். அதற்கேற்ப அங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. டாடா பவர் நிறுவனம் இந்த வசதியை அளித்துள்ளது. இதேபோல் டெல்லியிலும் வசதி ஏற்படுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கோரியுள்ளார். இதுவரை உலகில் ஏற்பட்ட மிக பெரிய மின்தடைகள்: July 31, 2012: வடஇந்தியா முழுவதிலும் 22 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது. ஏறத்தாழ 600 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். உலகிலேயே மிக பெரிய மின் தடை என்ற பெயரும் பெற்றது. July 30, 2012: வடைண்டியாவிற்கு மின்சாரம் வழங்கும் வடக்கு பவர் செயலிழந்தது, 8 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது. 370 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். Nov. 10, 2009: Paraguay-Brazil எல்லையில் உள்ள நீர் மின் நிலையத்தை புயல் தாக்கியது. இதனால் பிரேசிலில் 60 மில்லியன் மக்களும் பராகுவேயில் 7 மில்லியன் மக்களும் மின்சாரம் இன்றி தவித்தனர். January-February 2008: சீனாவில் உள்ள Chenzhou நகரத்தில் புயல் தாக்கியதால் 4 மில்லியன் மக்கள் இரண்டு வாரம் மின்சாரம் இன்றி தவித்தனர். இதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டவர்களில் 11 தொழிலாளர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. November 2006: ஜெர்மன் பவர் கம்பெனியின் உயர் மின் கடத்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் இல் 10 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். Aug. 18, 2005: இந்தோனேசிய வில் பவர் கிரிடில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 100 மில்லியன் மக்கள் 5 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர். July 12, 2004: Greece இல் 7 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். Sept. 28, 2003: Switzerland இல் உயர் மின்கடத்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 95% இத்தாலி மின்சாரம் தடைபட்டது. 55 மில்லியன் மக்கள் 18 மணிநேரம் மின்சாரம் இன்றி தவித்தனர். Aug. 14, 2003: மத்திய அமெரிக்காவில் மின்கடதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்காவின் 8 மாநிலங்கள் மற்றும் கனடாவில் 50 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர் March 11, 1999: Brazil’s Sao Paulo மாநிலத்தில் துணை மின்நிலையத்தில் மின்னல் தாக்கியதால் 97 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர் March 1989: கனடா மற்றும் அமெரிக்காவின் சிலபகுதிகளில் சூரிய மின்காந்த புயல் தாக்கியதால் 6 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். July 13, 1977: நியூயார்க் நகரத்தில் துணை மின் நிலையத்தில் மின்னல் தாக்கியதால் மின்தடை ஏற்பட்டது 8 மில்லியன் மக்கள் 25 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர் Nov. 9, 1965: துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நியூயார்க் நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் மின்தடை ஏற்பட்டது. 25 மில்லியன் மக்கள் 14 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர். இதை தழுவி “Where Were You When the Lights Went Out?” பிரபலமான திரைப்படமும் எடுக்கப்பட்டது. நன்றி: தினகரன், தினமலர், national post, daily news analysis
  4. ஜப்பானைப் பற்றிய அரிய அற்புதத் தகவல்கள் vidhai2virutcham.com 1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும்கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள். 2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும் போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர். 3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/- இலிருந்து 8000/-வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய்மொழி மூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார். 4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்தி ற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பா ன்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும். 5. ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர். 7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு வரைபரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக் கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும் தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்த வல்ல என்கிறார்கள். 8. ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத்தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை. 9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே. 10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக் குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது. - Harish Mani on facebook
  5. கணிதத்தின் ஆச்சரியமான சில வடிவங்கள் [size=4] [size=3]>> 1 x 8 + 1 = 9[/size] [size=3]>> 12 x 8 + 2 = 98[/size] [size=3]>> 123 x 8 + 3 = 987[/size] [size=3]>> 1234 x 8 + 4 = 9876[/size] [size=3]>> 12345 x 8 + 5 = 98765[/size] [size=3]>> 123456 x 8 + 6 = 987654[/size] [size=3]>> 1234567 x 8 + 7 = 9876543[/size] [size=3]>> 12345678 x 8 + 8 = 98765432[/size] [size=3]>> 123456789 x 8 + 9 = 987654321[/size] [size=3]>>[/size] [size=3]>> 1 x 9 + 2 = 11[/size] [size=3]>> 12 x 9 + 3 = 111[/size] [size=3]>> 123 x 9 + 4 = 1111[/size] [size=3]>> 1234 x 9 + 5 = 11111[/size] [size=3]>> 12345 x 9 + 6 = 111111[/size] [size=3]>> 123456 x 9 + 7 = 1111111[/size] [size=3]>> 1234567 x 9 + 8 = 11111111[/size] [size=3]>> 12345678 x 9 + 9 = 111111111[/size] [size=3]>> 123456789 x 9 +10= 1111111111[/size] [size=3]>>[/size] [size=3]>> 9 x 9 + 7 = 88[/size] [size=3]>> 98 x 9 + 6 = 888[/size] [size=3]>> 987 x 9 + 5 = 8888[/size] [size=3]>> 9876 x 9 + 4 = 88888[/size] [size=3]>> 98765 x 9 + 3 = 888888[/size] [size=3]>> 987654 x 9 + 2 = 8888888[/size] [size=3]>> 9876543 x 9 + 1 = 88888888[/size] [size=3]>> 98765432 x 9 + 0 = 888888888[/size] [size=3]>>[/size] [size=3]>> And look at this symmetry:[/size] [size=3]>>[/size] [size=3]>> 1 x 1 = 1[/size] [size=3]>> 11 x 11 = 121[/size] [size=3]>> 111 x 111 = 12321[/size] [size=3]>> 1111 x 1111 = 1234321[/size] [size=3]>> 11111 x 11111 = 123454321[/size] [size=3]>> 111111 x 111111 = 12345654321[/size] [size=3]>> 1111111 x 1111111 = 1234567654321[/size] [size=3]>> 11111111 x 11111111 = 123456787654321[/size] [size=3]>> 111111111 x 111111111 = 12345678987654321[/size] [/size] வரவுக்கு நன்றிகள் கு.மா அண்ணா, தமிழ் சிறி,உடையார்.
  6. மனிதனின் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் எத்தனை சதவிகிதத்தை பயன்படுத்துகிறான்? மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன்.ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது. அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது. அதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50- 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர்.பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம். பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது. பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன.இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிற புலன்களையும் நன்கு தூண்டிவிடுவது அவசியமாகும். பல்வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்துகொண்ட பின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன்மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும். கிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை பிம்ப நினைவு என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது தர்க்க நினைவு' ஆகும். அதனால்தான் நாம் சரிவர அறிந்திராதவற்றை விட, நன்கு அறிந்துள்ளவற்றை நினைவில் வைத்திருப்பது எளிதாக உள்ளது. பொருள் புரியும் வார்த்தைகளை நினைவில் கொள்வது, பொருளற்ற சொற்குவியலை நினைவில் வைத்திருப்பதை விட எளிதல்லவா? உணர்ச்சி நினைவும் மக்களுக்கு உண்டு. அறிவு அல்லது தர்க்க நினைவைக் காட்டிலும் உணர்ச்சி நினைவு வலுவானது. அதனால்தான் சுவையான புத்தகங்களை வாசிப்பது, திரைப்படங்களையும், நாடகங் களையும் காண்பது போன்றவை நம் நினைவை விட்டு அகலாதிருக்கின்றன. ஆகவே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் சில சுவையான அம்சங்களைக் கண்டுபிடித்தால் அவற்றை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். http://wwwnathiyalai.blogspot.com/2012/01/blog-post_3265.html
  7. இந்திய ரகசியங்கள் இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது. இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில். இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப். இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி. இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர். 1911ஆ‌ம் ஆ‌ண்‌டி‌ல் இரு‌ந்துதா‌ன் புதுடெ‌ல்‌லி இ‌ந்‌தியா‌வி‌ன் தலைநக‌ராக செய‌ல்ப‌ட்டு வரு‌கிறது. இ‌ந்‌தியா‌வி‌ல் உ‌‌ள்ள ‌மிக‌ப்பெ‌ரிய ஏ‌ரி ஒ‌ரிசா‌விலு‌ள்ள ‌சி‌லிகா ஏ‌ரிதா‌ன். இத‌ன் பர‌ப்பளவு 100 ‌கி.‌மீ‌ட்ட‌ர் ஆகு‌ம். இ‌ந்‌திய தே‌சிய‌க் கொடியை வடிவமை‌த்தவ‌ர் சுரே‌ந்‌திரநா‌த் பான‌ர்‌‌ஜி. ஆ‌ண்டு 1906. இ‌ந்‌தியா‌வி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து இ‌ல்லாத மா‌நில‌ம் மேகாலயா. இ‌ந்‌தியா பரு‌த்‌தி உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ‌சிற‌‌ந்து ‌விள‌ங்கு‌கி‌ன்றது. இ‌ந்‌திய வானசா‌ஸ்‌திர‌த்‌தி‌ன் த‌ந்தை என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஆ‌ரியப‌ட்ட‌ர். இ‌ந்‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் மா‌நில‌ம் கேரள‌ம். இ‌ங்கு வாசனை‌ப் பொரு‌ட்க‌ள் அ‌திக‌ம் ப‌யிர‌ட‌ப்படு‌ம். இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பேசு‌ம் பட‌ம் இ‌ந்‌தி‌யி‌ல் 1931ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளியானது. பட‌த்‌தி‌ன் பெய‌ர் ஆல‌ம் ஆரா. webulagam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.