இலங்கையில் தனிநாடு உருவானால் தமிழ்நாட்டுக்கும் தனிநாட்டுச் சிந்தனைன வந்துவிடும் என்றே ஈழத்தமிழர்கள் அழிவுக்கு இந்தியா மத்திய அதிகாரவர்க்கம் துணைபோனது. அவ்வாறு துணைபோனதன் எதிர்விளைவுதான் இன்று தமழித்தேசீயவாதம் தமிழ்நாட்டில் சற்று மேலோங்கியிருக்கின்றது.
தமிழகமோ அல்லது பிற மாநிலங்களோ பிரிவது என்பது மத்திய அரசு மாநிலவாரியாக செய்யும் அடக்குமுறை பாரபட்சம் மொழித்திணிப்பு வளங்களை சுரண்டுதல் போன்ற பல விசயங்களோடு சம்மந்தப்பட்டது.
பிரிவினை என்பதற்கு ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியும் புரட்சியும் அடிப்படையாகும் ஆனால் இந்த அடிப்படையை சாதியம் வகுப்புவாதம் தீண்டாமை போன்ற பல அலகுகளால் தகர்த்தே இந்தியா என்ற தேசம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதியம் வகுப்புவாதம் தீண்டாமை ஒழிந்து தமிழன் மலையாளி கன்னடன் தெலுங்கன் என்ற நிலை வரும்போது இந்தியா என்ற கட்டமைப்பும் உடையும்.
ஆனால் பிரிவினையை தீர்மானிப்பதில் பிரிந்து போக விரும்புபவர்களை விட அதிக வலிமை பிரிவதால் யாருக்கு என்ன லாப நட்டம் என்பதிலேயே அதிகம் உண்டு. இந்தியா உடைவதால் அமரிக்கா சீனா ரசியா ஐரோப்பாவுக்கு என்ன லாபம். உடையாமல் இருப்பதால் என்ன லாபம். இவையே பிரதானமானது. தற்போது பிரியாமல் இருப்பதே ஏகாதிபத்தியத்துக்கு அதிக லாபம். இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. அடுத்து வரும் காலங்களிலும் இந்தியாவின் உணவு உற்பத்தி வீழ்ச்சியும் ஏகாதிபத்திய நாடுகளின் உணவு உற்பத்தி வளரச்சியும் இந்தியா உடையாமல் இருப்பதுக்கு ஏதுவாக உள்ளது.
உலகமயமாக்கல் இந்தியமயமாக்கல் இவைகளை கடந்து இனத்தேசீயமானது சாதி மத வகுப்புவாங்களை கழைந்து மேலோங்கவேண்டும். அவ்வாறு மேலோங்கும்போதும் கூட தற்சார்பு பொருளாதாரமும் வளரவேண்டும். தற்சார்புப் பொருளாதரத்துக்கு ஏகாதிபத்தியநாடுகள் ஈடமளிக்காது. அவ்வாறு இடமளிக்காத போது பிரிந்தும் அடிமைவாழ்வுபோலாகிவிடும். உதராணமாக ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றும் இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகவே இருக்கின்றது. அணுகுண்டு வைத்திருந்தால்போல் இந்தியா விடுதலைபெற்று சர்வ சுதந்திரம் பெற்ற நாடு என்று பொருள் இல்லை. இந்தியாவின் தேயிலை சக்கரை அரிசி விலையை தீர்மானிப்பது மேற்குநாடுகளே அன்றி இந்தியா அல்ல. உலகமயமாக்கல் என்பதன் பின்பு பிரிவினை என்பது மிகச் சிக்கலான விசயம். யூரியுப் எல்லாம் ஆழப்போறான் தமிழன் பாடல்தான் நுறு விதமாக வெளியிடுகின்றார்கள். கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனால் நடமுறைச் சாத்தியம் என்பது ஏகப்பட்ட விசயங்கள் அதிகாரங்கள் பணம் ஏகாதிபத்தியம் சம்மந்தப்பட்டது.