Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    88030
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  3. சண்டமாருதன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    5
    Points
    2554
    Posts
  4. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7401
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/05/18 in all areas

  1. வணக்கம் வாத்தியார்....! என் சிரிப்பு ஒடஞ்சு சிதறிக் கிடக்கு எப்போ வருவ என்கிட்ட உன் நினைப்பில் மனசு கதறி கிடக்கு என்ன கொஞ்சம் சேர்த்துக்க ---உசுரு நரம்பில---
  2. வணக்கம் வாத்தியார்.....! ஒன்னும் ஒன்னும் இரண்டாச்சு மச்சான் உன்னை பார்த்து நாளாச்சு சந்தோஷம் பல நுறாச்சு மச்சான் துக்கம் எல்லாம் துளாச்சு உனக்கு ஒண்ணுன்னா நான் இறங்கி வருவன்டா நம்ம நடப்புக்காத்தான் உயிரை தருவண்டா நீ வருவ தெரியுண்டா உன் அருமை புரியுண்டா அட ஒளிவு மறைவில்லா நம்ம நடப்புதானடா ---இறங்கி வந்து ஆடு---
  3. இத்திட்டம் ஏழு வருடங்களுக்கு முன் போடப்பட்டது.. மத்திய அரசு ஜவ்வாக இழுத்தடித்து, இப்பொழுதான் முடிவிற்கு வந்திருக்கிறது.. ஒரு முனையத்திலிருந்து மற்றொரு முனையத்திற்கு இதுவரை பேட்டறி கார்கள் தான் இயங்கி வந்தன. பயணப்பொதிகளை தூக்கிகொண்டு அலைவது மிக சிரமமாக இருக்கும். இனி வருகை தளம் வந்தவுடன் மின் தூக்கி மூலம் மேலே ஏறி ட்ராவலேட்டர் மூலம் இரு முனையத்திற்கும், மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் எளிதாக செல்லலாம். இதில் திராவிடக் கட்சிகளின் பங்கு ஏதும் இல்லை, தமிழ் சிறி..!
  4. பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட, அன்பு உறவுகளான..... ராஜவன்னியன், நுணாவிலான், புங்கையூரான், சுவைப் பிரியன், கிருபன், தமிழரசு, சுவி, இணையவன், ஈழப்பிரியன், பாஞ்ச் அண்ணா, பெருமாள், தனிக்காட்டு ராஜா, தமிழினி, சபேஷ், கலைஞன், அகஸ்தியன், உடையார், நந்தன், நிழலி, நிலாமதி அக்கா, கந்தப்பு அண்ணா, கறுப்பி, குமாரசாமி அண்ணா, வாத்தியார்... ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். பிற்குறிப்பு: எனக்கு இன்னும் 60 வயது ஆகவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்.
  5. 22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில், சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் ‘பபதா’ வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப் பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற் கரும்புலி மாவீரர்களுடன், தேசியத் தலைவர்.
  6. தேசியத் தலைவருடன்... நெடுமாறன் ஐயா.
  7. ஸ்ருதி என்றால் என்ன? சூப்பர் சிங்கரில் அடிக்கடி கேட்கும் வசனம் என்றால் "ஸ்ருதி கொஞ்சம் வெலகிடுச்சு" சுருதினா என்னங்க? அது எப்புடிங்க விலகும்? நான் ஒரு விளக்கம் தரேன். இசையில் எழு ஸ்வரங்கள் இருக்கிறது. ச ரி க ம ப த நி இன்னும் டெக்னிகலா சொன்னா ரி க ம த நி... இந்த ஐந்து ஸ்வரங்களுக்கும் இரண்டு நிலை உள்ளன. ரி1, ரி2, க1, க2, ம1, ம2, த1, த2, நி1, நி2 என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் இவற்றை செமிடோன்ஸ் (semitones) என்பர். எனவே மொத்தம் பன்னிரண்டு செமி டோன்ஸ் (ச, ரி1, ரி2, க1, க2, ம1, ம2, ப, த1, த2, நி1, நி2 or C, C# D, D#, E, F, F#, G, G#, A, A#, B) இருக்கின்றது என்பதை அறிகிறோம். இது என்ன பன்னிரண்டு கணக்கு என்பதை வேறு ஒரு பதிவில் டீடைலாக சொல்கிறேன். இப்போது ஒரு கேள்வி உங்களுக்கு... கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு புள்ளி தான் உள்ளது. அந்த புள்ளி வழியாக செல்லும் எத்தனை நேர் கோடுகளை உங்களால் வரைய முடியும்? How many lines can you draw which can pass through a single point? விடை 'முடிவிலி' (infinity) ஆகும். இப்போது இந்த படத்தை பாருங்கள். இரண்டு புள்ளிகள் உள்ளன. இப்போது நீங்கள் மறுபடியும் நேர்கோடு வரையவேண்டும். அந்த கோடு இந்த இரண்டு புள்ளிகளின் வழியாகவும் செல்லவேண்டும். இது போன்ற எத்தனை கோடுகளை உங்களால் வரைய முடியும்? How many lines can you draw which can pass through two points? விடை: ஒன்று. ஒரே ஒரு கோடு மட்டும் தான் உங்களால் வரைய முடியும்! அந்த கோடு தான் சுருதி. அந்த இரண்டு புள்ளிகள் தான் 'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்கள். 'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்களையும் ஏற்றிச் செல்லும் கோடு தான் சுருதி. ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒவ்வொரு அதிர்வெண் (frequency) உள்ளது. பொதுவாக 'ச' என்னும் ஸ்வரத்திற்கு '265.6 Hz' அதிர்வெண் இருக்கும். ஒரு பாடல் பாடப்படும்போதோ வாசிக்கப்படும்போதோ ஒரே ஸ்ருதியில் (ஒரே நேர் கோடு) இருக்க வேண்டும். சில நேரம் நாம் நம்மை அறியாமல் 'ச', 'ப' வின் அதிர்வெண்ணை மாற்றி விடுவோம். அதாவது இரண்டு புள்ளிகளின் இடம் பாரி விடும். அப்போது மாறிய இடங்களில் உள்ள புள்ளிகளை இணைக்க வேறு ஒரு கோடு தான் நாம் வரைய வேண்டும். வேறு ஒரு கோடு என்றால் வேறு ஒரு ஸ்ருதி என்று அர்த்தம். இதுவே சுருதி விலகுதல் ஆகும். உதாரணம் சொன்னால் இன்னும் நன்றாக புரியும்... இரண்டு பேர் சேர்ந்து ஒரு பாடலை பாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவரும் முதலில் சரியான ஸ்ருதியில் படுகிறார்கள். நடுவில் ஒருவர், தன்னை அறியாமல், 'ச' வின் அதிர்வெண்ணை சற்று அதிகரித்து பாடி விடுகிறார். இன்னொருவர் மாற்றாமல் அதே நிலையில் பாடுகிறார் என்றால், கேட்பவருக்கு ஒரு பாடகர் ஸ்ருதியை மாற்றி விட்டார் என்பது தெரிந்து விடும். சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் ஒருவர் சோலோவாக பாடுகிறார், ஆர்செஸ்ட்ராவுடன் என்றால், இசைக்குழுவும், பாடுபவரும் ஒரே ஸ்ருதியில் பாட வேண்டும். பொதுவாக வாசிப்பில் ஸ்ருதி அதிகம் பிறழாது, அதுவும் கீபோர்ட் போன்ற எலக்ட்ரானிக் வாதியங்களில். எனவே பாடகர், எங்கேயாவது 'ச' அல்லது 'ப'வின் அதிர்வெண்ணை மாற்றினால், அப்போது இசைக்குழுவின் ஸ்ருதிக்கும் பாடகர் ஸ்ருதிக்கும் உள்ள வேறுபாடு தெரிந்துவிடும். http://naaradha.blogspot.com/
  8. 259 X உங்கள் வயது X 39ஐ பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.
  9. 1919 ஆம் ஆண்டு ஜாலியான்வாலாபாக்கில் ஒரு மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ,துப்பாக்கி குண்டுகள் தீரும் வரைக்கும் சுடச் சொல்லி சுட்டுக் கொல்ல ஆணையிட்டான், ஜெனரல் டயர் ஆங்கிலே பரங்கித் தலையன்.350 பேருக்கும் மேல் செத்துப் போனார்கள்..! இந்த படுகொலையை.... மனசு வெடிக்க... உதடுகள் துடிக்க துடிக்க ... தன் மகனுக்கு சொல்லிப் போனாள்,தாய்! அந்த சிறுவன் அந்த மைதானம் போய் ,அந்த ரத்தம் தோயிந்த மண்ணை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டான் . இளைஞானாக வளர்ந்து,இங்கிலாந்துக்கு கப்பல் ஏறினான். ஜெனரல் டயர் முன்னால் தோன்றி கேட்டான். ஜாலியான்வாலாபக் நினைவிருக்கிறதா என்று "இந்தா,இந்திய பரிசு!" என்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்! இங்கிலாந்து நீதி மன்றத்து ,நீதிபதி கேட்டான். "உன் கடைசி ஆசை என்ன?" நான் இறந்த பிறகு என் உடலை இங்கிலாந்து மண்ணில் புதைக்க வேண்டும்! வியப்படைந்து காரணம் கேட்டான் ,நீதிபதி. "6 ஆயிரம் கிமீ பரவியுள்ள இந்தியாவை நீங்கள் 200 ஆண்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டீர்கள்! இங்கே புதைக்கப்பட்டால் ,இங்கிலாந்தின் 6 அடி மண்ணையாவது ,நான் ஆக்கிரமிப்பேன்!"என்று சொன்னான். அந்த இளைஞனின் பெயர் தான் உத்தம்சிங்!
  10. ஆர்க்கிமிடிஸ் [size=2] [/size][size=3] நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம். ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள். ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார். ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது. தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார். அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது. ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது. ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார். ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது. கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார். ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்: நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்... என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார். நம்மாலும் முடியும். மலையை அசைக்க முடியாவிட்டாலும் தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும் போராடினால் நாம் விரும்பும் வாழ்க்கையையும் ,வானத்தையும் வசப்படுத்த முடியும். (தகவலில் உதவி - ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்) நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.