Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88026
    Posts
  2. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7401
    Posts
  3. pri

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    5
    Points
    42
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20029
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/05/19 in Posts

  1. ஒளிப்படங்களை யாழில் நேரடியாக தரவேற்றம் செய்ய இயலாது.. பல நிமிடங்கள் ஓடும் ஒளிப்படங்களென்றால் யூடுயூப் (Youtube) தான் சிறந்தது. அதற்கு யூடுயூப் அல்லது ஜி மெயிலில் (Gmail) சொந்தமாக க|ணக்கு வைத்திருக்க வேண்டும்.(இலவசம் தான்) காணொளிகளை தரவேற்றம் செய்துவிட்டு சில நிமிடங்களில் அதன் இணைய இணைப்பு கிட்டும். அந்த லிங்க் முகவரியை யாழில் இணைத்தால் ஒளிப்படம் தெரியும். நான் காணொளிகளுக்கு யூடுயூபும் (Youtube), சிறுசிறு ஒலி வடிவங்களுக்கு சவுண்ட் கிளவுட் (Sound Cloud) இணையத்தையும் பாவிக்கின்றேன். காணொளி, மற்றும் ஒளி வடிவங்களை உருவாக்க, திருந்த, உல்டா செய்ய கோரல் 'வீடியோ ஸ்டுடியோ' (Corel Video Studio Ultimate)அல்லது சோனியின் 'வேகாஸ் புரோ' (Sony Vegas Pro) ஆகிய மென்பொருட்களை பயன்படுத்துவேன். https://www.videostudiopro.com/en/products/videostudio/ultimate/ https://www.vegascreativesoftware.com/us/vegas-pro/ மேலே இணைத்துள்ள மென்பொருட்களை விலைக்கு வாங்க வேண்டும், கொஞ்சம் மினக்கெட்டால் இவற்றில் பயிற்சி எடுத்து வல்லுநர் ஆகலாம். எளிது தான், கொஞ்சம் கிரியேட்டிவாக யோசிக்க வேண்டும். ** ஆடியோ ஒலிகளை(Audio clips) இணைக்க வெட்ட திருத்தம் செய்ய கீழேயுள்ள இலவச மென்பொருளை பயன்படுத்தலாம். https://www.wavosaur.com/ ** என்னுடைய தொகுப்புகளை இங்கே காணலாம்..! https://www.youtube.com/user/GRajavannian https://soundcloud.com/rasavannian நீங்கள் கேட்டது காணொளியை இணைப்பது மட்டுமே நோக்கமென்றால் வழி இதோ..! யூடுயூப் இணையதளத்தில் குறிப்பிட்ட காணொளிக்கு கீழே ஷேர் (SHARE) என ஒரு பொத்தான் இருக்கும். அதைனை சுட்டினால் ஒரு சிறிய பெட்டிக்குள் அந்த காணொளியின் இணைப்பு (Link code) கிட்டும். அதனை காப்பி(Copy) செய்து யாழின் பெட்டியில் நேரடியாக பேஸ்ட்(Paste) செய்தால் காணொளி இணைந்துவிடும்.. நன்றி! (நான்தான் தேவை இல்லாமல் உளறிவிட்டேனா..?)
  2. இதில் வல்லவர் ராசவன்னியன் தான் திண்ணயில் கூட படம் போடுவார் .
  3. என்னுடைய பால்யப் பருவங்களை இப்படியெல்லாம் போட்டு பகிரங்கப் படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.....! 👍
  4. திரு அண்ணா "மலை" உச்சியில் இருந்து..💐
  5. அப்படி அல்லவே திரு.பெருமள்..! யாழ்க் கள மென்பொருள் (Invision Board Community Software) உள்ளார்ந்த பல அம்சங்களை உள்ளடக்கியது. அதில் நீங்கள் இதற்கென HTML Tag தனியாக கொடுக்கத் தேவை இல்லை. நீங்கள் நேரடியாக எந்து வெளி இணைப்புகளை கொடுக்க இயலும். அதாவது எம்பெடிங்(Embedding) செய்வது போன்று. சுருக்கமாக சொல்லப்போனல், எப்படி பிற இடங்களில் பார்க்கிறீர்களோ, அவற்றை அப்படியே இங்கே பிரதிபலிக்கும் வல்லமை ( What You See Is What You Get ) இந்த யாழ் மென்பொருளுக்கு உண்டு..! அப்படி அல்லவே திரு.பெருமள்..! யாழ்க் கள மென்பொருள் (Invision Board Community Software) உள்ளார்ந்த பல அம்சங்களை உள்ளடக்கியது. அதில் நீங்கள் இதற்கென HTML Tag தனியாக கொடுக்கத் தேவை இல்லை. நீங்கள் நேரடியாக எந்து வெளி இணைப்புகளை கொடுக்க இயலும். அதாவது எம்பெடிங்(Embedding) செய்வது போன்று. சுருக்கமாக சொல்லப்போனல், எப்படி பிற இடங்களில் பார்க்கிறீர்களோ, அவற்றை அப்படியே இங்கே பிரதிபலிக்கும் வல்லமை ( What You See Is What You Get ) இந்த யாழ் மென்பொருளுக்கு உண்டு..!
  6. எனக்குப் பிடித்த சோகப் பாடல்களில் இதுவும் ஒன்று. இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனது மனதில் வருவது நாதன். 1989 என்று நினைக்கிறேன். இந்திய ராணுவம் எமது தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலம். நான் மட்டக்களப்பில் தங்கியிருந்த மாணவர் விடுதியில், சமையல் வேலைக்கு இருந்த அம்மா விற்கு கூட ஒத்தாசை புரிவதற்கென்று நாதன் எனும் இளைஞர் ஒருவரும் தங்கியிருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எப்போதும் அவர் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்திருக்கும். சிறியதாக நாங்கள் விடும் பகிடிக்கும் சேட்டைகளுக்கும் விழுந்து விழுந்து சிரிப்பார். இதனாலேயே, அனைவருக்கும் அவர் நாதன் அண்ணாவாகிப் போனார். மட்டக்களப்புச் சந்தைக்குப் போய் விடுதிக்கும் மரக்கறி, மீன் இறைச்சி வாங்குவதிலிருந்து, விடுதி முகாமையாளருக்கு வீரகேசரி வாங்குவதுவரை நாதனே எல்லாம். இப்படி அடிக்கடி கடைகளுக்குப் போய்வந்துகொண்டிருந்த நாதனுக்கும் காதல் மலர்ந்தது. எமது விடுதிக்கு அருகில் இருந்த "தயா" கடை எனும் ஒரு சிறிய பலசரக்குக் கடைக்கு அடிக்கடி போக ஆரம்பித்திருந்தார். இவரை அடிக்கடி அந்தக் கடைப் பக்கம் கண்ட விடுதி மாணவர்கள் இதுபற்றிக் கேட்டபோது சிரித்தே சமாளித்து விடுவார். எமது விடுதியின் ஒரு ஓரத்தில் நாதனின் அறை இருந்தது. பத்திரிக்கை படிக்க, கதைப்புத்தகம் வாசிக்க, பாட்டுக் கேட்கவென்று எப்போதாவது அவரது அறைக்குப் போய்வருவேன். பழைய, பொத்தல் விழுந்த மரக் கட்டில். ஓட்டைப் பாய், பழைய அழுக்கேறிய தலையணை, கயிற்றுக் கொடியில் தொங்கும் நாதன் அண்ணாவின் இரு பழைய சேர்ட்டுக்களும், காற்சட்டைகளும். ஓரத்தில் இருந்த காகிதத்திலான சூட்கேஸ்..இவைதான் அவரது சொத்துக்கள். அமைதியும், ஏழ்மையும் குடிகொண்டிருந்த அவரது அறைக்குப் போகும்போதே மனதில் ஒருவித சோகம் சேர்ந்துவிடும். அப்படியொருநாள் நான் அங்கே சென்றபோது, நாதன் அழுதுகொண்டிருந்தார். ஏனென்று புரியவில்லை. சிறிது நேரம் அவரருகில் இருந்துவிட்டு எழுந்துவர எத்தனிக்கும்போது, அவரது காதல் பற்றிச் சொன்னார். தயா கடை உரிமையாளரின் மகள் மீதான தனது ஒருதலைக் காதல் பற்றியும், தனது காதலை தனது ஏழ்மையைக் காரணம் காட்டி நிராகரித்தது பற்றியும் சொன்னார். அவரருகிலிருந்த ரேடியோவில் ஒரு பாட்டு....முதலாவது முறை கேட்டபோதே நெஞ்சை அள்ளிக் கொன்றுவிட்ட அந்தப்பாட்டு.... "ஆள்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்....." பாடலைக் கேட்டவுடன் நாதன் அண்ணாவுக்காக அழவேண்டும் போல இருந்தது. எதுவும் பேசத் தோன்றாமல் எழுந்துவந்துவிட்டேன். சில மாதங்களில் இந்திய ராணுவத்தின் கூலிப்படைகளான த்ரீ ஸ்டார் காரர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் நாதன் அண்ணாவை மட்டக்களப்பு சந்தையில் வைத்துப் பிடித்துச் சென்றார்கள். அதன்பின் அவரை நான் காணவில்லை. 1990 இல் ஒருநாள் எங்களைப் பார்க்க விடுதிக்கு வந்திருந்தார். நன்றாக உடுத்தி, மினுங்கும் சப்பாத்துடன் அவரைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய ராணுவ முகாமிலிருந்து அனுமதி கேட்டு வந்ததாகச் சொன்னார். "தயா கடைக்குப் போய் இன்று அவளைப் பார்த்துக் கேட்கப் போகிறேன், இன்று என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம்" என்றுவிட்டுப் போய்விட்டார். அதன்பிறகு அவரை நிரந்தரமாகவே பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சிறிது நாட்களில் அவரது காதலிக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்தது. இந்திய ராணுவம் வெளியேறத்தொடங்கியிருக்க, தமிழ்த் தேசிய ராணுவம் மீதான தாக்குதல்களைப் புலிகள் தொடங்கியிருந்தனர். அம்பாறை எல்லையிலிருந்த தமிழ்த் தேசிய ராணுவத்தின் முகாமைப் புலிகள் தாக்கிக் கைப்பற்றியதாகச் செய்திகள் படித்தேன், அப்போதுதான் நாதன் அண்ணாவும் அங்கேயிருப்பது நினைவிற்கு வந்தது. அவர் என்ன ஆனார் என்பதுபற்றி அன்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. இன்றும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாதன் அண்ணாவின் அந்தச் சிரித்த முகம் மனதில் வந்துபோகும். காதலில் தோற்றவர்களுக்கும், ஒருதலையாகவே காதலித்து வாழ்பவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம், நாதன் அண்ணா உற்பட !
  7. பிடித்தமான பாடல் ஒன்று
  8. பள்ளிக்கு போக மாட்டேன் என்று... அடம் பிடிக்கும் சிறுவன்.
  9. சிரிக்க மட்டும் வாங்க By நந்தன், August 9, 2016 in சிரிப்போம் சிறப்போம் பின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது இந்தப் படத்தை பார்க்கும் போது தான் ஏன் பின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது என்று நந்தன் எழுதியிருக்கிறார் என்பது புரிகிறது. மகள் மருமகனுக்கு காட்டி வயிறு வலியெடுக்க சிரித்தோம்.. இணைப்புக்கு நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.