மனித இனம் இயற்கையோடு ஒட்டிவாழ்வதை விட்டு வேறுபட்டு வாழ்வதற்கு முயன்றதால்தான் இன்று கொரோனாவந்து அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளது.
சமமாக அல்ல, உயர்வாகவே பெண்களைப் பெரும் சக்தியாகப் பார்த்து வளர்த்துவந்த இனம்தான் தமிழினம். சக்தியைப் பெண்ணாகவும், இயற்கையை அன்னையாகவும், பூமியைத் தாயென்றும் போற்றிவந்ததுதான் வரலாறு. சக்தியைப் பாதுகாத்து அதனை ஒரு கட்டுக்குள் வைத்திராதுவிட்டால் அது அனைத்தையுமே அழித்துவிடும் என்பதை இன்றைய விஞ்ஞான அறிவுலகிலும் காணலாம். இந்தக்கட்டுப்பாட்டை அடக்குமுறையாகப் பார்ப்பவர்களுக்கு அது அடக்குமுறைபோலவே தெரியும். உலக உயிரினங்களின் அனைத்துக் குணங்களையும் ஒருசேரக்கொண்ட உயிரினம் மனித இனம். அதில் நல்ல குணங்களுடையோரும் உண்டு, கெட்ட குணங்களுடையோரும் உண்டு. நல்ல குணங்களுடையோர், அன்றும் இன்றும் என்றும் பெண்களை உயர்வாகவே பார்த்து மதிப்பளித்து வருகிறார்கள். அப்படி நல்ல குணம்கொண்ட மனிதர்களை வரலாற்றைப் படித்ததினால் மட்டும் அல்ல, எங்கள் வாழ்நாளிலேயே கண்டோம், பிரபாகரனிலும் அவன் படைகளிலும்.