சித்தி பொங்கும் சித்தம் தங்கும் சக்தி லிங்கமாய் தோன்றுகின்ற
அண்ணாமலை உன்னை துதிக்க நாளும் நலம் நலமே
அண்ணாமலையானே சிவமே அண்ணாமலையானே
அண்ணாமலையானே சிவனே அண்ணாமலையானே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் வாழ்த்தவே அருளைபொழியும் ஜோதீசா
ஆயிரம் ஆயிரம் அற்புதம் செய்யும் ஆதிலிங்கனே அருணேசா
அக்னி லிங்க கோலம் காட்டும் அண்ணாமலையே
அம்மையப்பனாக வாழும் அருணாசலனே
அஷ்ட லிங்கம் ஆதி லிங்கம் ஜோதிலிங்கமாய் தோன்றுகின்ற
அண்ணாமலை உன்னை துதிக்க நாளும் சுகம் வருமே
அண்ணாமலையானே சிவனே அண்ணாமலையானே
அன்பை ஏற்கும் உள்ளம் எல்லாம்
அண்ணாமலை உண்ணாமுலை கோயிலன்றோ
ஆவுடை மேலே ஆதரவாகும்
அழகிய லிங்கம் நீ தான் அன்றோ
அமைதி சேர்த்து துயர்கள் போக்கும் கருணை இறைவா உன்முகமே
நினைத்த கணமே நிலை கொடுக்கும் நேசம் கொண்டது உன்பதமே
தயைபுரிவாயே பெருமானே
தமிழைக் கேட்கும் மலையானே
ஆலயம் அசலம் அமரும் சிவமே
அண்ணாமலை உண்ணாமுலை கோலமன்றோ
அடியடியாக கிரிவலம் செல்ல
ஐயனுன் அருளே துணையன்றோ
அடிக்கு ஒன்றாய் அமைந்து காவல் அளிப்பதுந்தன் திருவுருவே
அலைந்த உள்ளம் அமைந்து வாழ அன்பைப் பொழிவது பெருவரமே
அனலைத் தாங்கும் பெருமானே
நினைவில் என்றும் நிலை நீயே