Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    929
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46979
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    23958
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19701
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/27/20 in all areas

  1. போட்டியென்றால் இது போட்டி .....நையாண்டி மேளம் கேள்விப்பட்டிருப்பீர்கள் பார்த்திருக்கிறீர்களா பாருங்கள்..........! 👍
  2. சண்ட மாருதன் நீங்கள் கூறிய தேசங்கள் கடந்து தமிழர்களை ஒன்றிணைத்தல் என்ற கருத்து மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் அதை செய்ய நாம் எம்மை தயார்ப்படுத்த வேண்டும். அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும். எமக்குள் இருக்கும் குறுகிய மனப்பாங்குகளை களையவேண்டும். ஒரு ஊருக்குள்ளையே சாதி வேறுபாடுகளால் மற்றவரை மதிக்காத ஒரு சமுதாயம் உலகளாவிய இனமாக பரிணமிப்பது சாத்தியமே இல்லை. மொழி என்ற தொடர்பாடல் ஒன்றாக இருந்தால் போதாது மனத்தளவில் பரந்த மனப்பாங்கு உள்ளவர்களாக மாற வேண்டும். உணர்சசி வசப்பட்ட பேச்சுககள் பாடல்கள் குறுகிய காலத்திற்கு இணைக்குமே தவிர concert முடிந்தபின்னர் கலைந்து போகும் பாரவையாளர் போல் போய்விடும்.
  3. ரகு, நாம் எல்லோரும் செய்யும் அரசியல் தமிழ் தேசிய அதாவது "அடையாள அரசியல்" identity politics. இந்த "அடையாளத்தின்" அடிப்படையை பற்றி நாம் அனைவரும் இல்லாவிடிலும், அறுதி பெரும்பான்மையனோராவது ஒரு ஒருமை பட்ட நிலைப்பாட்டுக்கு வராது, நாம் எடுக்கும் எந்த முயற்சியும் ஒரு கட்டத்துக்கு மேல் பலந்தராது. எப்படி பெரிய மாடியை கட்டினாலும் அத்திவாரம் சரியில்லாவிடடால் கவிழ்ந்து கொட்டிவிடும். எமது ஒற்றுமையினம், சகோதர சண்டைகள், பிரதேசவாதம் இவை எல்லாமுமே தமிழ் தேசியம் பற்றிய, தமிழர் அடையாளம் பற்றிய சரியான புரிதல் இல்லாமையாலேயே விளைகின்றன. 50,000 பேர் அதி உச்ச தியாகம் புரிந்த, திலீபன் போன்றவர்களை கொண்டிருந்த ஒரு போராட்டம் ஏன்கடைசியில் ஆட்களை வலு கட்டாயமாக பிடிக்கும் நிலைக்குப் போனது? தியாகம், நேர்மை, அற்புதமான தலைமை சகலதும் இருந்தும் நோக்கை அடைய முடியாமல் போனமைக்கு ஒரு சிலரை தவிர ஏனையோருக்கு சித்தாந்த தெளிவின்மையும் ஒரு பெரிய காரணி. ரஸ்யா, சைனா, வியடனாம் எங்கினும், சித்தாந்த வாதங்களுக்கு நேரம் ஒதுக்கிய, அதே சமயம் தனியே சித்தாந்தம் மட்டும் பேசாமல் செயலிலும் காட்டிய போராட்டங்களே வென்றுள்ளன.
  4. சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம் என்று கூறினால் அதுவும் பொருந்தாது. தமிழர்கள் எந்த வகையில் ஒடுக்குமுறைக்கு உட்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எமது வீரியமும் வெளிப்படும். முன்பு சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தப்பி ஓடவேண்டியிருந்தது. திருப்பி அடிக்கவேண்டியிருந்தது. வேறு நாடுகளில் குடியேறுதல் என்ற புதிய ஒரு வளியும் பிறந்தது. (நாங்கள்) இப்போது "நீ தமிழன் " என்று பொதுமைப் படுத்தி கொல்வதில்லை. அவ்வாறு பொதுமைப் படுத்தி ஒடுக்கினால் அதற்கு ஏற்ப தமிழரும் அதை எதிர்கொள்ள முற்படுவர்கள் என்பதை அறிந்து பகுதி பகுதியாக பிரித்து நுட்பமாக ஒடுக்குமுறையை செய்கின்றார்கள். வாழ்வது, தப்பி பிழைப்பது என்ற நிலையில், சிங்களவனை அனுசரித்து வாழ்வது தாயக மக்கள். நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வாழ்வது நாங்கள். இந்த இரு தரப்பையும் கடந்து எமக்கென்று ஒரு நாட்டில் சுதந்திரமாக வாழ்வது என்ற மூன்றாவது நிலையில் தான் தமிழ்த்தேசீயம் வருகின்றது. இந்த மூன்றாவது தரப்பில் தற்போது ஒருவரும் இல்லை. இருக்கிற இரு தரப்பும் தான் இந்த மூன்றாவது தரப்புக்கு நகரவேண்டும். ஏன் நகரவேண்டும் ? ஆசை விருப்பங்களை கடந்து மூன்றாம் நிலைக்கு நகரவேண்டிய தேவை என்ன ? எனக்கு புலம்பெயர் நாட்டில் எல்லாம் ஒகே யா போகுது. தாயகத்தில இருக்கிற என்னுடைய உறவுகள் போராட்ட காலத்தில் கமம் செய்ய படு சிரமம் பட்டது போலன்றி இப்போது இலகுவாக கமம் செய்து வருமானம் ஈட்டக் கூடியவாறு உள்ளது. உரம் மருந்து மின்சாரம் பிரச்சனையில்லை. மூன்றாம் நிலைக்கு போகவேண்டிய தேவையின் அழுத்தம் இல்லை. தேவை தான் பிரதான உந்து சக்தி. கஸ்டம் வந்தால் கடவுளை அதிகம் நாடுவதுபோல தேவை ஏற்படில்தான் தேசீயமும். தேசீயம், இனம், சுதந்திரம் என்ற பொது உணர்வுத் தன்மைகளுக்கு உள்ளே இருப்பது " யாரும் எம்மை கொன்று விடக் கூடாது, நாம் இருந்த இடத்தை வீட்டை காணி நிலங்களை பறித்துவிடக் கூடாது. பட்டிணியால் சாகக் கூடாது".இப்படியான பிரச்சனைகள் தான் உள்ளே இருப்பது. வாழ்க்கைப் போரட்டம் தான் முதலில் பின்னரே எமது அடயாளங்கள் " இப்போது இந்த பொதுத் தன்மைகளுக்கு உள்ளே உள்ள பிரச்சனைகளுக்குள் சிங்கள ஒடுக்கு முறை றால் போட்டு சுறா பிடிக்கும் பொறிமுறையோடு வந்துவிட்டது. இந்த சிக்கலான நிலையை நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சிங்களவருடன் சேர்ந்து வாழ விரும்புவது போல தோற்றமளிக்கலாம். கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் இதுவே வாழ்வாகிவிடும் என்பதும் உண்மையே. தேவை என்ற அடிப்படையில் காணாமல்போகடிக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் அவர்களுக்கான நீதியை கேட்கும் தேவை இருக்கின்றது. சொந்த நிலங்களுக்கு திரும்வேண்டிய தேவை இருக்கின்றது. சிறையில் இருக்கும் கைதிகள் விடுபடவேண்டிய தேவை இருக்கின்றது. இப்டி ஏராளமான தேவைகள் இருக்கின்றது. ஊரில் இழவு விழுந்தால் எட்டு செலவு வரைக்கும் அருகில் உள்ளவர்கள் சாப்பாடு கொடுப்பார்கள், இழவு விழுந்த வீட்டை மீட்பது எமது குணத்தோடு சேர்ந்து இருக்கின்றது. அறம சார்ந்த அந்த பண்பு போல் தேவைகள் உள்ளவர்களோடு இந்த இரு தரப்பும் இணைந்துகொள்ளவேணும். அதுவே அறம். அறம் சார்ந்த ஒரு வாழ்வுக்கு நாம் மாறும்போது தேசீயம் புத்துயிர் பெறும். 40 ஆயிரத்துக்கும் மேலாக மடிந்த போராளிகள் முரண்பாடுகளால் நிறைந்த இந்த இனத்தில் அவற்றை எல்லாம் கடந்த அறத்தின் அடயாளம் தான். சிறந்த ஒரு அணுகுமுறையாக இது இருக்கும். இவ்வாறான முனைகளை இனம்கண்டு ஆதரவளிப்பது, தொடர்புளை பரந்து பட்டு ஏற்படுத்துவதுதான் இப்போது முட்டு சந்தில் நிற்பதுபோல் நிற்கும் நிலைக்கு புதிய வளிகள் ஏற்படுதும். சரியான தலமை இல்லை என்று புலம்புவதோ எதோ ஒரு காலத்தில் தலமை உருவாகும் என்று காத்திருப்பதோ அர்த்தமற்றது. இவ்வாறான முனைகளுக்கான ஆதரவுதான் வளிநடத்தும் தலமைகள் உருவாகும் சூழலை ஏற்படுத்தும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.