கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல்.....!
உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில்
அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான்
கரிய நிறமும் பெரிய உருவமும் உனது
பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....!
வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க
மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க
சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர
சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....!
இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு
மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்" டு
பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து
பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......!
அங்கும் இங்கும் ஆலாய் பறந்து
பந்து பிடிப்பவர்கள் பலர் --- ஆனால்
பத்தடி நடந்து நீ பந்தெடுத்தால் --- உன்மேல்
அத்தனை கமராவும் காட்டும் பவர்......!
உன் கைகளில் விழுந்த பந்து மீள்வதில்லை
மட்டையில் விழுந்த பந்து மண்ணில் வீழ்வதில்லை
வெண்மேகங்களுக்கு வெண்பந்துகளை தூது விட்டு
வித்தைகள் பல காட்டி மீசைக்குள் சிரித்திடுவாய் ....!
பஞ்சாப்புக்காக ஆடி பந்துகளை
பஞ்சாப் பறக்க விட்டவனே
சிங்குகளுக்கு நடுவில் நின்று
சிங்கமாய் கர்ச்சிக்கின்றாய் .....!
நிலத்தையே பார்த்து நிலைத்திருக்கும் கண்கள்
நீ ஆடினால் விண்ணில் இருந்து மீள்வதில்லை --- உனக்கு
ஓடி விழுந்து எழுந்து ரன் எடுப்பது தொல்லை
ஓடாமல் நின்று வெளுத்து வாங்க ஏது எல்லை.....!
ஆக்கம் சுவி ......! 🙏
மிக்க நன்றி கு.சா அண்ணா. உங்கள் எல்லோருடைய அன்புக்கு பதிலாக மருத்துவ அறிவுரை மட்டுமல்ல மனதுக்கும் ஆறுதல் தரும் வகையில் தொடர்ந்து எழுதுகிறேன். அண்ணை சொன்னமாதிரி இன்னொருவர் அக்கறையாக மனம் வைத்து அறிவுரை சொல்லுவதே அரைவாசி வருத்தம் போனமாதிரி இருக்கும். ❤️
வணக்கம் நில்மினி!
உங்களுக்கு யாழ்களத்தின் "ஆஸ்தான மருத்துவர்" என்ற பட்டத்தை சூட்டுகின்றேன்.இதனை இங்குள்ள 99%மானோர் வரவேற்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஊரில் சொல்வார்கள் வைத்தியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று. நோயாளிகளுக்கு பெரும்பாலும் வைத்தியர்களை கண்டாலே அல்லது அவர்களுடன் உரையாடினாலே பாதி வருத்தம் குறைந்து விடுமாம்.ஏனெனில் வைத்தியர்களின் அன்பான பண்பான உரையாடல்களிலும் வைத்தியம் உள்ளதாம்..இதற்கென மருத்துவர்களே இருக்கின்றார்கள் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
நீங்கள் மருத்துவர் இல்லை என்பதை வெளிப்படையாக கூறினாலும் உங்களின் கரிசனையான பதில்களும் கருத்துக்களும் எல்லோருக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
தொடருங்கள் வாழ்த்துக்கள்.
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.
நில்மினி... தனது கடந்த கால பதிவுகள் மூலம்,
பலருக்கும் ஆறுதலான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதால்....
குமாரசாமி அண்ணாவின் பாராட்டுக்களுக்கு... பொருத்தமானவர்.
அவருக்கு, எமது வாழ்த்துக்கள். 💐
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்
1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு
2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு
3. பாவத்திலே மாலும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு
4. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு
5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு