Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46808
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19166
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7055
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/20/20 in Posts

  1. யாழ்ப்பாணத்திலை வெள்ளம் வடிந்தோடேல்லை எண்டு புறுபுறுத்தவையள்... குப்பைகளை எங்கை போட்டனியள்?... இஞ்சை பாருங்கோ..😂 கொய்யாலே! 🤣
  2. நீரும் நிலமும் வானும் கலந்துறவாடும் காலத்தில் கதிரவனோ மேற்கில்......! 😁
  3. தெய்வம் பிறந்தார் நம் நமக்கொரு பாலகன் . அன்பின் உருவிலே
  4. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 மதீனத்து மண்ணில்
  5. நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்.... நிழலைப்போல தொடரும் என்னை மறந்து போகிறாய்....
  6. சகோதரம்! வாழைக்குலை முக்கியம்.
  7. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 31, வைகாசி 2004 கோகிலனை மூத்த பத்திரிக்கையாளர் திரு ஐய்யாத்துரை நடேசன் மட்டக்களப்பில் கருணா குழு ஆயுததாரிகளால் படுகொலை திங்கள் காலை தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் காலை 8 மணியளவில் கருணா துணை ராணுவக் குழுவினரால மட்டக்களப்பின் மூத்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான திரு ஐய்யாத்துரை நடேசன் சுட்டுக் கொல்லப்பட்டார். மட்டக்களப்பு பொலீஸாரின் தகவல்ப்படி மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுததாரிகள், அவரை வழிமறித்து தலையில் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டு போதனாவைத்தியசாலைக்குக் கையளிக்கப்பட்ட திரு நடேசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உடபடுத்தப்பட்டது. வீரகேசரி, ஐ பி சி தமிழ் உள்ளிட்ட பல செய்திநிறுவனங்களுக்கு செய்தியாளராகச் செயற்பட்டு வந்த நடேசன் அவர்கள் இலங்கை ராணுவத்தினதும், கருணா துணை ராணுவக்குழுவினதும் மனிதவுரிமை மீறல்கள் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்ததுடன் ஞாயிறு வீரகேசரி பத்திரிக்கையில் தனது அரசியல்க் கட்டுரைகளில் இவைபற்றி தொடர்ச்சியாக எழுதியும் வந்தார். யாழ்ப்பாண நகரிலிருந்து 25 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள நெல்லியடியினைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு நடேசன் "இனவிடுதலைப் போராட்டச் சரித்திரம்" எனும் புத்தகத்திற்காக வடக்குக் கிழக்கு சாகித்திய விருதினையும், 2000 ஆண்டின் சிறந்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் எனும் விருதினையும் பெற்றிருந்தார்.
  8. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 25, வைகாசி 2004 கோகிலனை கிழக்கு மாகாண பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை தொடர்பாக பக்கச்சார்பற்ற விச்சரணை வேண்டும் - புலிகள் கருணா துணை ராணுவக் குழுவினர் என்று சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகளால் படுகொலைசெய்யப்பட்ட கிழக்கு மாகாண பல்கலைக்கழக் விரிவுரையாளர் குமாரவேல் தம்பையாவின் கொலை தொடர்பாக பக்கச்சார்பற்ற முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று மட்டு - அம்பாறை அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் யுத்த நிறுத்தக் கண்கானிப்புக்குழுவினரிடம் கோரிக்கை முன்வைத்தார். விரிவுரையாளரின் கொலை தொடர்பாகத் தமது கண்டணத்தைப் பதிவுசெய்திருக்கும் புலிகள், அவரது குடும்பத்திற்குத் தமது இரங்கல்களையும் தெரிவித்திருப்பதோடு, அவரின் இழப்பு கிழக்கு மக்களின் கல்வி, பொருளாதார, சமூக அபிவிருத்தி ஆகியவற்றிற்கு பாரிய இழப்பாகும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். புலிகளின் முழுமையான அறிக்கை வருமாறு, "கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொருளியல்ப் பீட தலைமை விரிவுரையாளரை தமிழினத்திற்கெதிரான சக்திகள் படுகொலை செய்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியத்திற்கெதிரான இந்த நாசகார சக்திகள் தமிழர்களின் கல்வி, சமூக பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை அழிக்கும் முகமாகவும், தேசிய விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்திலுமே திரு தம்பையா அவர்களைப் படுகொலை செய்திருக்கின்றார்கள்" என்று அவ்வறிக்கை கூறியது. மேலும், "அன்னாரின் படுகொலை தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரைக் கோரியுள்ளோம். தம்பையா அவர்கள் தனது வாழ்க்கையினை மட்டக்களப்பு மாவட்டத்தின் மேம்பாட்டிற்கு அர்ப்பணித்து வந்ததோடு, தமிழ்த்தேசியத்திற்கும் தனது உறுதியான ஆதரவினைத் தெரிவித்து வந்தார். மட்டக்களப்புத் தமிழ்மக்களின் மனங்களில் அவருக்கென்று எப்போதுமே ஒரு நிலையான இடம் இருந்துவந்தது. அதனைப் பொறுக்கமுடியாத தேசியத்திற்கு எதிரான சக்திகளே அவரை இன்று கொன்றிருக்கின்றன". அதேவேளை திரு தம்பையாவின் படுகொலை வடக்குக் கிழக்கில் தமிழர்கள் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கின்றன. வவுனியா ஆசிகுளத்தில் பிறந்த தம்பையா, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் தனது பொருளியல் பட்டப்படிப்பில் அதியுயர் சித்தியினைப் பெற்றிருந்ததோடு, கடந்த 14 வருடங்களாக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். கொல்லப்படும் வரை அவர் பொருளியல் பீடத்தின் பீடாதிபதியாக மட்டுமல்லாமல், கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். பல்கலைக் கழகத்தினதும், மாணவர் கல்வியினதும் நலனில் மிகுந்த அக்கறை செலுத்திவந்த தம்பையா மீது சக விரிவுரையாளர்களும் மாணவர்களும் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். திரு தம்பையா அவர்கள் தமிழ் கலாசார அமைப்பின் ஸ்த்தாபகர்களில் ஒருவராக விளங்கியதுடன், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திக் கவுன்சிலின் தலைவராகவும், மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். அன்னாரின் மறைவினையடுத்து கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
  9. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 22, வைகாசி 2004 இலங்கை ராணுவத்தின் ஆதரவுடனேயே எமது போராளி கோகிலனைக் கருணா குழு கொன்றது - புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி கோகிலன் என்றழைக்கப்படும் மார்க்கண்டு புனிதலிங்கம் மீதான படுகொலையினை இலங்கை ராணுவத்தின் ஆதரவுடன் கருணா குழுவே நடத்தியதென்று புலிகள் தெரிவித்தனர். நாம் இப்படுகொலைபற்றி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் முறையிட்டிருக்கிறோம் என்று கெளசல்யன் தெரிவித்தார். படுகொலை இடம்பெற்ற ஆளங்குளம் பகுதி, மாங்கேணி ராணுவ முகாமிலிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவிலேயே இருப்பதுடன், புலிகளின் தளபதி நாகேஷ் மீது கருணா குழு திட்டமிட்ட இத்தாக்குதலில், பெண்டுகல்ச்சேனையிலிருந்து வாகரை நோக்கிப் பயணித்த கோகிலன் கொல்லப்பட்டார் என்றும், புலிகள் தெரிவித்தனர். கண்ணிவெடியினை வெடிக்கவைத்தபின்பு, இலகுரக இயந்திரத்துப்பாக்கி கொண்டு கருணா துணை ராணுவக் குழு கோகிலன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. கருணா துணை ராணுவக் குழுவினரால் கொல்லப்பட்ட கோகிலனின் உடல் அவரது ஊரான கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கடந்த சனியன்று தாண்டியடி மாவீரர் நினைவிடத்தில் விதைக்கப்பட்டது. இந்த இறுதிமரியாதை நிகழ்வில் கெளசல்யன் மற்றும் பல தளபதிகள் கலந்துகொண்டனர். இத்தாக்குதலுடன், இதுவரையில் புலிகள் மீது மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா துணை ராணுவக்குழுவும், இலங்கை ராணுவமும் இணைந்து நான்கு படுகொலைகளை அரங்கேற்றியிருக்கின்றன.
  10. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 6, வைகாசி 2004 தன்னாமுனையில் இரு அரசியல்த்துறைப் போராளிகளைச் சுட்டுக் கொன்ற கருணா துணை ராணுவக் குழு பகலவன் எனப்படும் சிவநாதன் முரளி மற்றும் வரதன் ஆகிய ஆயுதம் தரிக்காத புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகளை தன்னாமுனைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வரும்போது மறைந்திருந்து கருணா துணை ராணுவக்குழு சுட்டுக் கொன்றது. மட்டக்களப்பு நகரிலிருந்து 9 கிலோமீட்டர்கள் வடக்கே திருகோணமலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இந்த போராளிகளை வியாழன் பிற்பகல் 2 மணிக்குக் கருணா குழு சுட்டுக்கொன்றுள்ளது. இலங்கை ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் இப்பகுதியில், இலங்கை ராணுவம் ரோந்து சென்றுகொண்டிருந்தபொழுதே இப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்ட போராளிகளின் வித்துடல்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. தன்னாமுனை வாசிகளின் தகவல்ப்படி ஜி டி 470 எனும் இலக்கத் தகட்டினையுடைய மோட்டார் சைக்கிளில் இப்போராளிகள் வாழைச்சேனை மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது கருணா குழுவினரால் சாரமாரியாகச் சுடப்பட்டு, அவ்விடத்திலேயே கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இலங்கை ராணுவத்தின் பின்புலத்துடனேயே இக்கொலைகளைக் கருணா குழு நடத்தியதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் புலிகள் இக்கொலைகள் தொடர்பாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் முறையிட்டிருக்கிறார்கள். சித்திரை மாதம் 24 ஆம் திகதி ஆயித்தியமலைப் பகுதியில் உடல் ஊனமுற்ற போராளிகள் எழுவரைச் சுட்டுக்கொன்ற கருணா குழு, மே மாதம் 2 ஆம் திகதி இன்னொரு அரசியல்த்துறைப் போராளியையும் பெண்டுகல்ச்சேனையில் சுட்டுக் கொன்றதன் பின்னர் இந்தப் படுகொலையினை அரங்கேற்றியிருக்கிறது.
  11. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 26, சித்திரை 2004 அங்கவீனமுற்ற போராளிகளைத் தலையில் சுட்டுக்கொன்ற கருணா துணை ராணுவக் குழு - புலிகள் தெரிவிப்பு "அங்கவீனமுற்றிருந்த எமது போராளிகளின் படுகொலையில் துணை ராணுவக் குழுவே ஈடுபட்டிருந்தது என்பதை நாம் திடமாக நம்புகிறோம். இலங்கை ராணுவத்துடன் இப்படுகொலைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் கோரியிருக்கிறோம். இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகளுக்கு இதுவே இறுதியானதாக இருக்கவேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் வான் ரக வாகனமொன்றில் வவுனதீவு முகாம் நோக்கிச் சென்றதை ராணுவம் அறியவில்லை என்று கூறுவது கேலிக்கிடமானது. எமது முகாமிற்கும், வவுனதீவு ராணுவ முகாமிற்கும் இடையில் காடுகளோ அல்லது ஆட்களையும், வாகனங்களையும் மறைத்துவைக்கக்கூடிய பற்றைகளோ இல்லாதபோது, தமக்குத் தெரியாமல் இத்தாக்குதல் நடந்தது என்று இராணுவம் சொல்வதை ஏற்கமுடியாது" என்று புலிகளின் மட்டு - அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் புலிகளின் ஊனமுற்ற போராளிகள் மீதான கருணா குழுவின் மிலேச்சத்தனமான் தாக்குதல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது கூறினார். "இது ஒரு மிகவும் கோழைத்தனமான மிலேச்சத்தனமான படுகொலை. இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து தமிழ்மக்களுக்கெதிரான கருணா துணை ராணுவக் குழுவின் ஆள ஊடுருவும் அணியின் நடவடிக்கையே இது" என்று புலிகளின் தளபதியொருவர் கூறினார். அத்துடன் புலிகளின் பெய்ரூட் முகாம் பகுதியில் கருணா துணை ராணுவக் குழுவுக்கும் புலிகளுக்குமிடையிலான மோதலில் புலிகள் பாதிக்கப்பட்டதாக வார விடுமுறைப் பத்திரிக்கை ஒன்றில் வந்த செய்தியை முற்றாக மறுத்த அவர், "இலங்கை ராணுவத்தினுள் இருக்கும் கருணாவை ஆதரிக்கும் சக்திகளின் புனைகதைகளே இவை" என்றும் கூறினார். "எமது முகாம் பற்றிய அறிவைக் கொண்ட முக்கிய தளபதிகளும், போராளிகளும் இப்போது கருணாவை விட்டு எம்முடன் இணைந்துவிட்ட நிலையில், தன்னிடமிருக்கும் ஒரு சில விசுவாசிகளைக் கொண்டு கருணா எமது முகாமைத் தாக்கினார் என்று கூறுவது நகைப்பிற்கிடமானது. ஆனால், இவ்வாறான செய்திகளை மெதுவாகக் கசியவிடுவதன் மூலம், இலங்கை ராணுவம் தமிழ்ர் பகுதிகளில் ஆள ஊடுருவும் அணிகள் மூலம் நாசகார வேலைகளில் ஈடுபடுவதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திவருகிறதென்பதே உண்மை" என்றும் அவர் மேலும் கூறினார். சுமார் இரவு 11:30 மணிக்கு வவுனதீவு ராணுவ மூகாமிலிருந்து வான் ரக வாகனத்தில் வந்த துணை ராணுவக்குழு வவுனதீவு - ஆயித்தியமலை வீதியில் அமைந்திருந்த எமது பாதுகாப்பு நிலை மீது தாக்குதல் நடத்தி எமது போராளிகள் மூவரைக் கொன்றனர். பின்னர் அங்கிருந்து 5 கிலோமீட்டர்கள் தொலைவில் முல்லமுனை பகுதியில் அமைந்திருந்த எமது நிதித்துறைக்குச் சொந்தமான சேமிப்புக் கிட்டங்கியில் இருந்த நான்கு ஊனமுற்ற போராளிகளையும் ஒரு அப்பாவிக் குடிமகணையும் சுட்டுக் கொன்றனர். கருணா துணை ராணுவக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊனமுற்ற போராளிகளில் ஒருவருக்கு கழுத்திற்குக் கீழே எதுவும் இயங்கவில்லை, இரண்டாமவருக்கு இரு கண்களும் போரில் சிதந்துவிட்டன, மூன்றாமவர் இரு கால்களையும் மிதிவெடியில் இழந்தவர், நான்காமவர் போரில் செல்வீச்சில் ஒரு காலை முழுமையாக இழந்தவர். உயிர்தப்பிய ஒருவரின் சாட்சியத்தின்படி, வாகனத்திலிருந்து இறங்கும்போதே கருணா துணை ராணுவக்குழு சரமாரியாகச் சுட்டுக்கொண்டே இறங்கியது. நான்கு ஊனமுற்ற போராளைகளை தலையில் சுட்டே கருணா துணை ராணுவக் குழு கொன்றதை பற்றைக்குள் மறைந்திருந்து உயிர்தப்பிய வயோதிபரான அந்த காவலாளி தெரிவித்தார். அந்தச் சேமிப்புக் கிட்டங்கியில் இருந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களுக்குத் தீவைத்த கருணா குழு வவுனதீவு முகாம் நோக்கி வேகமாகச் சென்றிருக்கிறது. கருணா துணை ராணுவக்குழுவின் அட்டூழியத்தைப் பார்வையிட்ட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தகவல்களைச் சேகரித்துச் சென்றனர்.
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, சித்திரை 2004 7 தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் கொலை 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு பொன்னாங்காணிச்சேனையில் அமைந்திருந்த புலிகளின் முகாம் மீது ராணுவ முகாமிலிருந்து வந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு புலிகள் கொல்லப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரிலிருந்து வடமேற்கில் அமைந்திருக்கும் இப்பகுதியில், புலிகளின் முகாமிற்கும் ராணுவத்தின் முகாமிற்கும் இடையிலான தூரம் என்பது வெறும் 1.5 கிலோமீட்டர்கள் மட்டுமே என்பதுடன், இப்பகுதியில் ராணுவத்தினரைத்தவிர வேறு குழுக்கள் இருக்கவில்லையென்றும் கெளசல்யன் மேலும் கூறினார். வவுனதீவு ராணுவ முகாமிலிருந்து வந்த அடையாளம் காணமுடியாத ஆயுததாரிகளே இத்தாக்குதலில் ஈடுபட்டதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
  13. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, சித்திரை 2004 கருணாவையும் அவரது சகாக்களையும் இலங்கை ராணுவமே பாதுகாப்பாக கொழும்பிற்கு அழைத்துச் சென்றது - உறுதிப்படுத்தும் தமிழ் அலை கிழக்கில் கண்ணால் கண்ட சாட்சியங்களைக் கொண்டு செய்தி வெளியிட்டிருக்கும் தமிழ் அலை பத்திரிக்கை கருணாவும் அவரது சகாக்களும் புலிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பியோடி, மாவடிவேம்பு ராணுவ முகாமினுள் நுழைந்ததையும், பின்னர் ராணுவ வாகனங்கள் புடை சூழ அம்முகாமிலிருந்து பொலொன்னறுவை நோக்கிப் பயணித்ததையும் உறுதிப்படுத்தியிருக்கிறது. மாவடிவேம்பு ராணுவ முகாம் மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர்கள் வடமேற்கில் அமைந்திருக்கிறது. கருணாவின் இருப்பிடம் பற்றியோ அவரது நிலைபற்றியோ தமக்கு எதுவுமே தெரியாது என்று இலங்கை ராணுவம் அறிவித்திருக்கும் நிலையில், ராணுவமே அவரை பாதுகாத்து அழைத்துச் சென்றதை மக்களின் சாட்சியங்களுடன் தமிழ் அலை உறுதிப்படுத்தியிருக்கிறது. மக்களின் சாட்சியங்களின்படி மேலும் அப்பத்திரிக்கை விபரிக்கையில், கருணாவும் அவரது சகாக்களும் சுமார் 7 வாகனங்களில் கல்லடிச் சேனை எனும் விவசாயப் பகுதியினை வந்தடைந்ததாகவும், பின்னர் அந்த வாகனங்களில் பஜிரோ ஒன்றிற்கும் இரு பிக் அப் ரக வாகனங்களுக்கும் தீவைத்துவிட்டு மீதி வாகனங்களில் ஏறிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. கல்லடிச் சேனைக்கும், மாவடி வேம்பு ராணுவ முகாமிற்கும் இடையிலான மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்ட யுத்த சூனியப் பகுதியினை கருணா குழு சென்றடைந்தபோது, ராணுவ முகாமிலிருந்து வந்த சில அதிகாரிகளால் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டதை மக்கள் கண்ணுற்றதாகவும் கூறியிருக்கிறது. பின்னர் சிறிது நேரத்தில், ஆறு ராணுவ வாகனங்கள் புடைசூழ கருணா குழு அங்கிருந்து பொலொன்னறுவை நோக்கி சென்றதாகவும் அம்மக்களை மேற்கோள் காட்டி அப்பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது. அப்பத்திரிக்கையின்படி, கருணா குழுவினரால் பாவிக்கப்பட்ட சில வாகனங்கள் தற்போதுவரை மாவடிவேம்பு ராணுவத்தால் பாவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  14. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, சித்திரை 2004 பிரதேசவாதத்தினை புறக்கணித்ததற்காக புகழப்பட்ட அம்பாறைத் தமிழ் மக்கள் பிரதேசவாதத்தினைப் புறக்கணித்து, தமிழ்மக்களின் மறுக்கமுடியாத தலைமை தமிழீழ விடுதலைப் புலிகளே என்று உள்நாட்டிற்கு சர்வதேசத்திற்கும் இடித்துரைத்ததற்காக அம்பாறை வாழ் தமிழ் மக்களுக்கு தனது பாராட்டுதலினையும் நன்றியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை திகாமடுல்லை உறுப்பினர் கனசகசபை பத்மனாதன் தெரிவித்திருக்கிறார். தன்னைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பியமைக்காக தமிழ்மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அவர், மக்களின் முன்னேற்றத்திற்காக தான் உழைக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதேவேளை கருணாவின் இனத்துரோக நடவடிக்கைகளால் வாகரைப்பகுதியில் அல்லற்பட்டிருக்கும் மக்களை நேரிற் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயநந்தமூர்த்தி அவர்களுக்கு இருவாரங்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.