Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    23926
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19166
    Posts
  3. மல்லிகை வாசம்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    9
    Points
    1662
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/01/21 in Posts

  1. லெப். கேணல் ஈழப்பிரியன் டிசம்பர் 31, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து பிரியா என் அன்பு நண்பனே…! உனக்கு…… என் வீரவணக்கங்கள்..! ஈழப்பிரியன், ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். மெய்ப்பாதுகாவலனாக, தனிப்பட்ட உதவியாளனாக, கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக, அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக, வினியோக அணி பொறுப்பாளனாக, முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக, இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்… கிளிநொச்சி உருத்திரபுரம் தான் அவனது பெற்றோர் வீடு என நினைக்கின்றேன் அப்பா ஓர் சாதாரண அரச ஊழியர்.. அவனது தம்பி திருமணம் முடித்துவிட்டான்.. அதனால் ஈழப்பிரியனுக்கு கொஞ்சம் கோபம்.. கோபம் வந்தால் அவனது முகம்.. பழுத்த மிளகாய் போல் இருக்கும்..கோபம் வந்தால் கதை வராது மாறாக கொன்னைக்கதைதான் வரும்… கண்ணை மூடிவிடுவான்.. போ..போ.. என சொல்லிவிட்டு தலையினை ஒருபக்கம் திருப்பி விட்டு.. சென்றுவிடுவான்.. கதைக்கவே மாட்டான்.. இப்படி ஒரு சில மாதங்கள் என்னுடன் பேசாமல் இருந்தான்.. நான் வேணும் என்று அவனுக்கு ஆத்திரமூட்டுவதற்காக கிட்ட கிட்ட செல்வேன்.. அவனுக்கு இன்னும் இன்னும் கோபம் வரும்.. ஆனால் ஒரு நாள் என்னிடம் வந்து சொறி சொன்னான்.. ஏனென்றால் அவன் என்னிடம் ஆத்திரப்பட்டதற்கு எந்தக்காரணங்களும் இருக்கவில்லை. உயரம் குறைவு, உருண்டு திரண்ட உடல்.. கிட்டத்தட்ட புறூஸ்லி மாதிரி உடல்கட்டமைப்பு.. அதற்கேற்ப எப்போதும் பயிற்சியும் ஓட்டமும் தான்.. உடல்வாகுவையும் உயரத்தினையும் பார்த்து நாங்கள் எல்லோரும் பண்டிக்குட்டி என்று அழைப்போம்.. ஆனால் அவனுக்கு அப்படி கூப்பிட்டால் கோபம் வராது. எந்தப்பணி ஆனாலும் தெரியாது, அல்லது செய்ய மாட்டேன், என சொல்லமாட்டான். அதேபோல பணி செய்வதற்கு தனக்கு என்னென்ன தேவை என்றும் கேட்கமாட்டான்.. எல்லாம் தானே உருவாக்கி கொள்வான் அல்லது தேடிக்கொள்வான். ஒரு பொறுப்பாளனாக தன்னை ஈழப்பிரியன் நினைப்பதே இல்லை.. எல்லோருக்கும் கடைசிப்பிள்ளைபோலவே இருப்பான் என்ன வேலை சொன்னாலும் என்ன உதவி கேட்டாலும் செய்வான். அதனைவிட அரசியல்துறை மற்றும் இயக்க முக்கிய பொறுப்பாளர்கள் எங்கு இருக்கினம், எப்படி தொடர்பு கொள்ளலாம் என்ற விபரம் அவனின் சுண்டு விரலில் இருக்கும்.. அதனால் தமிழ்ச்செல்வன் அண்ணர் அவனை எங்கு சென்றாலும் கூட்டிக்கொண்டு போவார். குறிபிட்ட ஒருவரை தமிழ்செல்வண்ணர் கூட்டிவரச்சொன்னால்.. அடுத்த கணத்தில் எப்படியாவது ஆட்களை கொண்டுவந்து சேர்த்திடுவான். கூடவே கூட்டிவாறவர்களுக்கு உடுப்பு பாக் உடன் வரட்டாம் என்று பேதியும் குடுப்பான். தமிழ்ச்செல்வண்ணரால் குந்தி இருந்து டொய்லட் போகமுடியாது.. (விழுப்புண் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் பின்னர்) ஆகவே கொமட் தேவை. ஆனால் வெளியே செல்லும் போது கொமட் இருக்காது அதனால் எப்போதும் ஓர் உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட முக்காலி ஒன்று வாகனத்தில் இருக்கும்.. அதுபோல டயபற்றிக்ஸ் மருந்தும் கட்டாயம் தேவை. ஈழப்பிரியன் தனக்கு உடுப்பு, பிறஸ் எடுக்காமல் மறந்து போனாலும் மேற்கூறிய கொமட் மற்றும் டயபற்றிஸ் மருந்துகளை எப்போதும் மறக்கவே மாட்டான்.. இவ்வாறு பொறுப்பாளர்களின் முக்கியத்துவத்தை மட்டும் அன்றி தன் சக போராளிகளின் தேவைகளைக்கூட பூர்த்தி செய்த பின்னர்தான் தன்னைப்பற்றி சிந்திப்பான் இந்த போராளி. எல்லோரையும் சாப்பிட்டுவிட்டீர்களா? குளித்துவிட்டீர்களா.. என கேட்டுக்கொண்டே இருப்பான் அதன் பின்னர்தான் தான் சாப்பிடுவான். உண்மையில் ஈழப்பிரியன் என்ற போராளி.. இயக்கத்திற்கு ஒரு கொடை.. ஏனென்றால் அவனிற்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுப்பதில்லை.. தன் பாட்டில் யோசித்து செய்து கொண்டே இருப்பான்.. நிர்வாகத்தில் மட்டுமல்ல சண்டை, பயிற்சி, சூட்டுப்பயிற்சி, ஒழுக்கம், சுகாதாரம், எல்லாவற்றிலும் திறமையானவன்.. இத்தனைக்கும் மத்தியில் அவன் பெரிதாக படிக்கவில்லை.. ஆனால் உண்மையில் சக போராளிகளுக்கு அவன் ஓர் சமூக பல்கலைக்கழகம் என்றே கூறலாம். சிலவேளை அவனின் கதைகள் மிகப்பெரிய பொறுப்பாளர்கள், அல்லது பெற்றோர்கள் போலவும் இருக்கும். இயக்கத்தை விட்டு விலத்தப்போறேன் என்று கூறும் போராளிகள், பொறுப்பாளரின் நடவடிக்கைகளால் மனம் உடைந்து போன போராளிகள் ஆகியோர்களிடம் இவன் பேசும்போது பார்த்தால்.. உண்மையில் ஓர் முதிர்ச்சியடைந்தவர்கள் பேசுமால் போல் விளக்கங்கள் கொடுப்பான். இந்த சின்ன வயதில் இவற்றையெல்லாம் .. இந்த உளவியல் பயிற்சிகளை எங்கு கற்றான் என்று எனக்குள் கேட்டுக்கொள்வேன்.. ஏனென்றால் அவன் புத்தகங்கள் வாசிப்பதனை நான் பார்த்ததே இல்லையே. அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவடையும் போது அவன் பூனகரி பகுதியில் முன்னணி காப்பரண் கண்காணிப்பு பொறுப்பாளராக இருந்தான்… அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவு அவனை பெரிதும் பாதித்திருந்தது.. என்றாலும் அவனின் பொறுப்புணர்ச்சி, கடமை, உறுதி, போராளிகளை வழி நடத்தும் பக்குவம், தற்துணிவு, ஆகியவற்றை கவனத்தில் கொண்டு.. எங்கள் ஈழப்பிரியனை முழுமையாக ஓர் தளபதியாக்கினார் தேசியத்தலைவர்.. அப்போது நான் அங்கு இல்லை.. என்றாலும் எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.. அவன் தளபதியான செய்தி.. ஏனென்றால் அவன் சாதிக்கப்பிறந்தவன். முன்பு என்றால் அவன் எங்களை பகிடி பண்ணுவான்.. என்ன அண்ணர் நீங்கள் எல்லாம் படிச்சனிங்கள்.. உங்களுக்கு நிறையப்பணிகள் கதைக்கவே மாட்டீங்கள் போல .. (பகிடிக்குத்தான்)… ஆனால் அவன் தளபதி ஆனதும்… நாங்கள் கடிக்க வெளிக்கிட்டுவிட்டம்.. என்ன தளபதி இனி நீங்கள் இனிமேல் கதைக்கமாட்டீங்கள் என்று.. இனி எப்படி கூப்பிடலாம் தளபதி என்றா என கடிப்போம்.. ஆனால் அவன் மண்ணாங்கட்டி… என்று அங்கால தூசணத்தால்.. ஒன்று விடுவான். பெண்போராளிகளுக்கு ஏதாவது செய்தி கொண்டு போய் சொல்வதே அவனுக்கு மிகப்பெரிய கஸ்டமான பணியாக இருந்திருக்கும்.. அவ்வளவு வெட்கம்.. பெண் போராளிகள் முகாம் வந்தால் அல்லது ஏதாவது கேட்க வந்தால் ஈழப்பிரியன் எஸ்கேப். இறுதிக்கட்ட போரில் ஈழப்பிரியன் தனது கொம்பனியுடன் நாச்சிக்குடா பக்கமும் , பூனகரி கடற்கரையோரமும் லைன் போட்டு நிலை கொண்டிருந்தான்.. அப்போது எம்முடன் பேசினான். யாழ்ப்பாணத்தால இறங்க விடமாட்டேன்.. கடலால இறங்க விடமாட்டேன் என்றான்… உண்மைதான்.. அவன் இறங்கவிடவில்லை.. ஆனால் மன்னாரில் இருந்து வந்த படையணிகளில் ஒன்று ஆனைவிழுந்தான் பகுதிக்கால் முன்னேறி வந்துவிட்டதால் பூனகரி, நாச்சிக்குடா பகுதிகள் துண்டிக்கப்பட்டது. இதன் பின்னர் கிளி நொச்சி, கரடிப்போக்கு பகுதிக்கு வந்து அங்கே லைன் போட்டு கிளி நகரை பாதுகாக்கும் வியூகத்தில் வடபகுதி காவலரண்களுக்கு பொறுப்பாக நின்றான். அப்போதும் பேசினான். அவன் சொன்ன வார்த்தைகள் இதுதான்.. இந்த முன்னணிக் காவலரண்களை இராணுவம் உடைக்க விடமாட்டேன் அப்படி சில வேளை நடந்து இராணுவம் உள் நுழைந்தால் அது என் வெற்றுடல் மீதுதான் நடக்கும் என்றான். ஈழப்பிரியனின் உயிர் இருக்கும் வரை இந்த லைனை உடைக்க விடமாட்டேன் என்றான். ஆனால் எனக்கு அவன் சொல்வதனை கேட்டு உண்மையில் பயம்தான் வந்தது.. ஏனென்றால் அவன் எப்போதும் சொல்வதனை நிறைவேற்றுவான்.. சண்டையின் போக்கை பார்த்தால் கிளி நொச்சி வீழ்ப்போவதற்கு சில நாட்களே இருக்கலாம்.. ஆனால் கிளி நொச்சி முக்கியமல்ல எங்களுக்கு ஈழப்பிரியனே வேண்டும்.. ஏனென்றால் அவன் இயக்கத்திற்கு.. எம் தலைவரிற்கு.. எம் போராளிகளுக்கு தேவை.. அதனால் தான் எங்களுக்கு பயம்.. கடவுளே அவன் சொன்னது போல .. நடந்துவிட்டதே.. எங்கள் அன்பின் பண்டிக்குட்டியை நாங்கள் பார்க்க மாட்டோம்….. டேய் பண்டிக்குட்டி நீயும் உன்னைப்போன்ற எம் வீரர்களும் வலிமையுடையவர்கள்.. எங்களை விட வலிமை உடையவர்கள்.. உங்கள் மூச்சு உங்கள் இலட்சியம் அடையும் வரை .. எங்களை சுற்றிக்கொண்டே இருக்கும்.. மீண்டும் பிறந்து வாருங்கள்.. எங்களையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள்.. நாம் சென்ற பாதை, செல்கின்ற பாதை , செல்லப்போகின்ற பாதை.. எல்லாமே ஒன்றுதான் மாற்றமாட்டோம்.. நண்பனே….! நினைவுப்பகிர்வு:- பாசறை நண்பர்கள் உமை… ‘வேலன்’. https://thesakkatru.com/commander-lieutenant-colonel-eezhappiriyan/
  2. இந்த வீடியோ இல் காட்டப்படும் கோழி இறைச்சி மற்றும் உற்பத்தி, இயந்திர மயமாகி இருந்தாலும், மிகவும் சுத்தமானதும், கட்டுப்பாடு உடையதும், எல்லாவற்றிட்ற்கும் மேலாக இயந்திர மயமானாலும் உயிரின வளர்ப்பின் நலன்களை இயலுமான வரை கவனத்தில் கொண்டும் இருக்கிறது.
  3. இந்த இயந்திரம் வினாடியில் கோழியை எப்படி உருவாக்குகிறது
  4. தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு 37 Views “இலங்கையின் தேசிய பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- “மலர்ந்துள்ள 2021ஆம் ஆண்டானது நாட்டு மக்களுக்குச் செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஆண்டாக அமைய வேண்டும். இவ்வருடமானது எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாகத் திகழவேண்டும். இந்தப் புதிய ஆண்டிலாவது எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதில் முன்வைக்கப்படும் தீர்வானது நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அமையவேண்டும். அதேவேளை, மாகாணங்களுக்கு நேர்மையான ஓர் அதிகாரப் பகிர்வையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு. எமது இந்தப் பரிந்துரைகளை புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளம்மிக்கதும், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் ஓர் இலங்கைத் தீவை உருவாக்குவதே எமது கடமையாகும். எனவே, இந்தப் புத்தாண்டு நாளில் இந்தத் தலையாய கருமத்தை நிறைவேற்ற இன, மத, கட்சி வேறுபாடின்றி உழைக்க முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றுள்ளது. https://www.ilakku.org/?p=38245
  5. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் உவமை......! 💐
  6. சின்ன சின்ன புள்ளிங்கோ எல்லாம் கேலி செய்குதுகள் 😢..😢
  7. வேண்டும் வரமருளும்... மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள்
  8. புத்தாண்டு பிறந்ததே பூமியெல்லாம் நிறைந்தது. பூவிதழ் போல் புது ஆண்டு
  9. கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் டிசம்பர் 30, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து கடற்கரும்புலி கப்டன் அறிவரசன்: “தக்க நேரத்தில்” “ஓயாத அலைகள் 03” சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப் 7 – 8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன. இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், பெரும் இக்கட்டான சூழல் ஒன்று உருவாகின்றது. இந்த நிலைக் கிளாலிக் கரையில், நின்று அவதானித்த அறிவரசன் புரிந்து கொண்டான். எந்தக் கட்டளையும் இன்றி உடனடியாகவே அவன் முடிவெடுத்தான். “அந்த இடத்திற்கு தான் விரைவாகச் செல்ல வேண்டும்” அதற்காக அவன் தனது படகை இறக்க வேண்டும். உதவிக்கோ யாரும் இல்லை. தனிமனிதனாக நின்ற அவன் உடல் நிலையோ படுமோசம். வயிற்றில் விழுப்புண்பட்டு சரியாக நிமிர்ந்து நடக்க முடியாத நிலை. வயிற்றில் விழுப்புண்பட்டதால். சோறோ, பிட்டோ கடினமான உணவை உட்கொள்ள அவனால் முடியாது. நேரத்திற்கு நேரம் அவனால் சாப்பிடவும் முடியாது. இப்படியான நிலையில் இருந்த அவன். சந்தர்ப்பதை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இந்நிலையில் கிளாலியில் வற்றிய பகுதியில் நின்ற தனது கரும்புலிப் படகை தன்னந்தனியாகத் தள்ளி கடலுக்குள் இறக்கி, கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளைத் தளபதி பகலவனிடம் விரைந்து சென்று….. “நான் இடிக்கட்டா ”…? எனக் கேட்டு அனுமதியினைப் பெற்றுக்கொண்டு எந்தத் தொலைத் தொடர்பு கருவியும் இன்றி கையிலே இலக்கைச் சுட்டிக்காட்ட மிக விரைவாகச் சென்று இடித்த அறிவரசனின் தாக்குதலின் பின் மூன்று நீருந்து விசைப்படகுகள்; நான்கு கூவக் கிறாப் என்பன அந்த இடத்தில் இருக்கவே இல்லை. நினைவுப்பகிர்வு: பிரமிளா. நன்றி – விடுதலைப் புலிகள் இதழ் (04 புரட்டாசி 2008). https://thesakkatru.com/black-tigers-captain-arivarasan/
  10. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 முத்துப்பேட்டை சேகு தாவூத் வலியுல்லாஹ் | பொல்லா நோயும் நில்லாமல் ஓடும் உங்கள் நாமம் சொன்னால் போதும்
  11. சுவையான இளநீர்ப் பாயாசம், சிம்பிள் & டேஸ்ட் ......! 👍
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, ஆடி 2006 புலிகளால் கைதுசெய்யப்பட்ட கருணா துணைப்படை உறுப்பினரை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னால் வெளிப்படுத்திய புலிகள் "என்னை கருணா குழு உறுப்பினர்களும் இராணுவத்தினரில் 50 பேரும் மகிந்தபுர இராணுவ முகாமிலிருந்து அழைத்துவந்து புலிகளின் ஈச்சிலம்பற்றுப் பகுதிக்குள் ஊடுருவுமாறு பணித்தனர். என்னிடம் ஒரு கிளேமோர் குண்டும், கைய்யெறிகுண்டொன்றும், வயர்களும், டெட்டனேட்டர்களும், சில பற்றைகளையும் அவர்கள் கொடுத்தனுப்பினார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உலவும் புலிகளின் வாகனம் ஒன்றினைக் குறிவைத்து தாக்குதல் நடத்துமாறு என்னை அவர்கள் பணித்தார்கள். நான் கிளேமொர்ர் குண்டினை மரமொன்றில் கட்டிக்கொண்டிருக்கும்போது அப்பகுதியால் வந்த புலிகள் என்னைக் கைதுசெய்தார்கள்" என்று அத்துணைப்படை உறுப்பினர் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் தெரிவித்தார். இதன்போது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனும் பிரசன்னமாகியிருந்தார். அவர் மேலும் தெரிவிக்கும்போது, " நான் கடந்த 2 ஆம் திகதி வாழைச்சேனைப் பகுதியில் வேலைக்குச் செல்லும்பொழுது கருணா குழு என்னைக் கடத்திக்கொண்டு சென்றது. பின்னர் இராணுவ பவள் கவசவாகனமொன்றில் என்னை ஏற்றி மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த கருணா குழுவினர் என்னைத் தொடர்ச்சியாகப் பயமுறுத்திக் கொண்டேயிருந்தனர். நான் அவர்களுடன் இணைந்துகொள்ளாவிடில் என்னைக் கொல்லப்போவதாக மிரட்டினர். பின்னர் என்னை திருகோணமலை பிளான்டின் பொயின்ட் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கருணா குழுவில் இணையுமாறு ரியசீலன் என்பவரும் ஈ என் டி எல் எப் குழுவின் சுனில் என்பவரும் தொடர்ச்சியாக என்னைச் சித்திரவதை செய்துவந்தனர். அதன்பிறகு என்னை கல்லாறு ராணுவ முகாமிற்கும் பின்னர் மகிந்தபுர ராணுவமுகாமுக்கும் மாற்றினர்" என்று அவர் மேலும் தெரிவித்தார். தான் கைதுசெய்யப்பட்ட நிகழ்வுபற்றி அவர் விபரிக்கையில், "கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு, என்னையும் இன்னும் சில உறுப்பினர்களையும் ரியசீலன், சுனில் ஆகியோரும் குறைந்தது 50 இலங்கை ராணுவத்தினரும் புலிகளின் ஈச்சிலம்பற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். கிளேமோர் குண்டு, வயர்கள், டெட்டனேட்டட்கள், கிர்னேட்டுக்கள் ஆகியவற்றை என்னிடம் கொடுத்த அவர்கள் புலிகளின் முக்கியஸ்த்தர் ஒருவரின் வாகனத்தை இலக்குவைத்துத் தாக்கிவிட்டு மீண்டும் மகிந்தபுர ராணுவ முகாமிற்கு திரும்பிவரும்படி கூறினர். என்னை அங்கே இறக்கிவிட்ட அவர்கள், சில மீட்டர்கள் பின்வாங்கிச் சென்று யுத்தசூனியப் பிரதேசத்தில் நிலையெடுத்துப் பதுங்கியிருந்தனர். மறுநாள் காலை 9 மணிக்கு அங்கே வந்த புலிகள் நான் கிளேமோர் குண்டினை தயார்ப்படுத்த முன்னமே என்னைக் கைதுசெய்துவிட்டனர்" என்று அவர் கூறினார்.
  13. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, ஆடி 2006 புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கிளேமோருடன் காத்திருந்த கருணா துணைப்படை உறுப்பினர் கைது திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி கிளேமோர் தாக்குதல் ஒன்றிற்காக காத்திருந்த இலங்கை ராணுவத்தின் கூலியும் கருணா துணைப்படை உறுப்பினருமான புதூர் கதிரவெளியைச் சேர்ந்த ஜெயா என்பவரை புலிகள் கடந்த சனியன்று காலை கைதுசெய்தனர். அவர் கைதுசெய்யப்படும்பொழுது அவரிடமிருந்த கிளேமோர் குண்டு, ஒரு தொகுதி வயர்கள் மற்றும் வெடிக்கவைக்கும் டெட்டனேட்டர் என்பனவும் புலிகளல் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட துணைப்படை உறுப்பினரை விசாரித்தபோது தானும் இன்னும் சில உறுப்பினர்களும் கருணா துணைப்படை முக்கியஸ்த்தரான "பண்டார" எனும் சிங்களப் பெயர் கொண்டு இலங்கை இராணுவத்தால் செல்லமாக அழைக்கப்படும் ரியசீலன் என்பவரால் புலிகளின் முக்கியஸ்த்தர்களை இலக்குவைத்துக் கொல்வதற்காக ஈச்சிலம்பற்றுப் பகுதிக்குள் ஊடுருவும்படி அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறினார். மேலும் மூன்று இளைஞர்களை கடத்திச்சென்றது கருணா துணைப்படை இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கருணா துணைப்படை வெள்ளியியன்று இரவு வாழைச்சேனை பேத்தாளை பகுதியில் மூன்று இளைஞர்களைக் கடத்திச் சென்றுள்ளது. பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட தருணங்களில் பெற்றோர் இக்குழுவினரால் கொலைமிரட்டலுக்கு உள்ளானதையடுத்து, இவ்விளைஞர்களின் பெற்றோர் செய்வதறியாது அச்சத்தில் உறைந்திருப்பதாக அக்கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
  14. அமிர்த நதியினிலே...மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள் மட்டக்களப்பு | திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய கும்மி பாடல்
  15. உங்கள் மனம் அமைதி பெறும்
  16. அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்
  17. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.