துரோகத்தின் நாட்காட்டி: நாள் 16, வைகாசி 2008
கிழக்கு மாகாணசபை முதல்வராகப் பதவியேற்ற கொலைக்குழுத் தலைவன் பிள்ளையான்
இலங்கை ராணுவத்தின் கொலைக்குழுவாக இயங்கிவரும் பிள்ளையான் கொலைக்கும்பலின் தலைவனான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதைவியேற்றுக்கொண்டான். பிள்ளையானுக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஹிஸ்புள்ளா, தானும் தனது இரு உறுப்பினர்களும் தனித்து இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர். சட்டத்திற்கு முரணாகவும், அரசியலமைப்பிற்கு முரணாகவும் நடத்திமுடிக்கப்பட்ட இந்த மோசடித் தேர்தலிலேயே கொலைக்குழுத் தலைவன் ஒருவன் முதலமைச்சராக வரும் சந்தர்ப்பம் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
18 முஸ்லீம்கள், 10 தமிழர்கள், 7 சிங்களவர்கள் மற்றும் ஒறு போனஸ் ஆசனங்கள் உட்பட 37 உறுப்பினர்கள் இம்மாகாணசபைத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மொத்த 37 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 20 ஆசனங்களும், 15 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - முஸ்லீம் காங்கிரஸ் கூட்டணிக்கும், ஜே வி பி கட்சிக்கு 1 ஆசனமும், முன்னாள் போராளி அமைப்புக்கள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னணிக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளன.
பிள்ளையான் கொலைக்குழுவின் தலைமையில் இயங்கும் கட்சிக்குத் தமது ஆதரவை இக்கட்சிகள் வழங்க மறுத்துள்ள நிலையில், தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரும் பட்சத்தில் தாம் ஆதரவு தருவதாக முன்னாள் போராளிகளின் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்குள் உருவாகியிருக்கும் தமிழ் முஸ்லீம் பிணக்கினால் முதலமைச்சராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை காணப்படுகிறது.
இறுதிநேர கள்ளவாக்குத் திணிப்பு, கொல்லப்பட்ட, காணாமற்போன தமிழர்களின் வாக்குகளைப் பிள்ளையான் ஆதரவாளர்கள் போட்டமை ஆகிய தேர்தல் மோசடிகள் உடபட பல நாசகார நடவடிக்கைகளை இக்கொலைக்குழு செய்தபோதும்கூட கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானுக்கு ஐந்தாவது அதிகப்படியான விருப்புவாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஐக்கிய சுதந்திர முன்னணியில் போட்டியிட்டவர்களில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக்கொண்டவன் என்கிற காரணத்தினால் கொலைக்குழுத் தலைவன் பிள்ளையான் முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டான்.
இதேவேளை பிரதான எதிர்க்கட்சியுட்பட பல அரசியல் சமூக அமைப்புக்கள் இந்த தேர்தலை ஒரு நாடகம் என்று வர்ணித்துள்ளதுடன், அதிகப்படியான தேர்தல் தில்லுமுள்ளுகள், வன்முறைகள், கடத்தல்கள், படுகொலைகள் ஊடாக அரசாங்கம் தனது அடியாளை பதவியில் அமர்த்தியிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றன.
இதேவேளை இத்தேர்தலைக் கண்காணித்துவந்த சுயாதீன அமைப்பான நீதியும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு இத்தேர்தல்பற்றிக் கருத்துக் கூறுகையில், "இத்தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகளும், அதிகப்படியான வாக்குமோசடிகளும், இத்தேர்தலின் உண்மையான முடிவினை தலைகீழாய் மாற்றிவிட்டன" என்று கூறியுள்ளது. "அரச ஆதரவுடனான ஒரு ஆயுதக்குழுவினரின் நடவடிக்கைகள் இத்தேர்தலில் மிக மோசமாக இருந்தன " என்று மாற்று அரசியலுக்கான மையத்தின் தலைவர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
துரோகத்தின் நாட்காட்டி: நாள் 20, வைகாசி 2008
ஈ பி டி பி துணைராணுவக்குழு மீது தாக்குதல் நடத்திய பிள்ளையான் கொலைக்குழு
வாழைச்சேனை பெண்டிக்கோஸ்து ஆலயத்திற்கு அருகில் நிலைகொண்டிருந்த ஈ பி டி பி துணைராணுவக்குழு மீது பிள்ளையான் கொலைக்குழு வாட்களாலும், கத்திகளாலும் கொண்டு நடத்திய தாக்குதலில் 5 ஈ பி டி பி துணைராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயப்பட்டவர்கள் வேலன் யோகராசா, வீரசாமி வாமதேவன், துரையப்பா வடிவேல், ஜெகன் சசிதரன், துரையப்பா நாகமணி என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அண்மையில் நடந்துமுடிந்த மாகாணசபைத் தேதல் காலத்துப் பகையே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.