Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46808
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    8910
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    10
    Points
    15791
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    15755
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/07/21 in all areas

  1. ஈழத்துச் சிதம்பரம்|சிவதாண்டவம்
  2. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 04, கார்த்திகை 2008 தொடரும் கொலைக்குழுக்களிடையான மோதல்கள் : கருணா துணைராணுவக் குழு முகாம் மீது பிள்ளையான் கொலைக்குழு தாக்குதல் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருந்த கருணா துணைராணுவக் குழு முகாம் மீது இன்னொரு துணை ராணுவக் கொலைக்குழுவான பிள்ளையான் குழு நடத்திய தாக்குதலில் கருணா குழுவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதோடு இன்னும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த திங்கள் நடந்த இத்தாக்குதல் பிள்ளையான் கொலைக்குழுவின் பிரதீப் மாஸ்ட்டர் எனப்படும் ஆயுததாரி கருணா துணைராணுவக் குழுவினரால் சுடப்பட்டமைக்குப் பழிவாங்கலாகவே தம்மால் நடத்தப்பட்டதாக பிள்ளையான் கொலைக்குழு தெரிவித்திருக்கிறது. கொல்லப்பட்ட கருணா துணை ராணுவக் குழுவினரில் ஒருவரது பெயர் சதானந்தம் தினுராஜ் என்று பொலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
  3. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 27, ஐப்பசி 2008 பிள்ளையான் கொலைக்குழு முகாம் மீது தாக்குதல் - நால்வர் பலி, 6 பேர் சிறைப்பிடிப்பு மட்டக்களப்பு நகரிலிருந்து 13 கிலோமீட்டர்கள் வடமேற்கே அமைந்திருக்கும் செங்கலடிப் பகுதியில் இருந்த பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழுவின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதலில் கொலைக்குழுவின் 4 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் புலிகளிடம் பிடிபட்டிருக்கிறார்கள். கடந்த செவ்வாய் அதிகாலை நடைபெற்ற இத்தாக்குதலை கருணா குழுவினரின் நடவடிக்கை என்று பிள்ளையான் குழு ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், பிந்திக் கிடைத்த தகவல்களின்படி இத்தாக்குதலினை மேற்கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகளே என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். இத்தாக்குதலில் நான்கு துணை ராணுவக் கூலிகள் கொல்லப்பட்டதுடன் இன்னும் அறுவர் புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டனர். முகாமிலிருந்த ஆயுதங்கள புலிகளால் கைப்பற்றபின்னர், முகாமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஏழு தானியங்கித் துப்பாக்கிகளும், ரவைகளும் அடங்கியிருந்தன. கொல்லப்பட்ட நால்வரின் பெயர்களும் வருமாறு, சிறியன், கண்ணன், நவநீதன், கமலநாதன் (மாறன்)
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, ஐப்பசி 2008 பிள்ளையான், கருணா கொலைக்குழுக்கள் கிழக்கில் ஆர்ப்பாட்டம் துணை ராணுவக் குழுக்களான பிள்ளையான் குழு மற்றும் கருணா குழு ஆகியவை அரசுக்கும் ராணுவத்திற்கும் ஆதரவான ஆர்ப்பாட்டமொன்றினை கிழக்கில் நடத்த தயாராகி வருவதாகத் தெரிகிறது. தமது ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள், மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை வருமாறு இவை அழுத்தம் கொடுத்திருக்கின்றன. வருகிற 26 ஆம் திகதி நடக்கவிருக்கும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள்மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இத் துணைராணுவக் குழுக்கள் அச்சுருத்திவருகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக , "புலிகளின் ஆயுதங்களை முற்றாகக் களைய வேண்டும், தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டிற்குத் தமது கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்தல்" ஆகியவையே முன்வைக்கப்படவிருப்பதாக ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்குசெய்திருக்கும் துணை ராணுவக் குழுக்களின் பிரச்சாரப் பிரிவுகள் தெரிவித்திருக்கின்றன. இலங்கை அரசாங்கத்தினால் தனது துணை ராணுவக் குழுக்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தின்மூலம், கிழக்கில் மக்கள் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் சுமூகமான சூழ்நிலை நிலவுகிறதென்று வெளியுலகிற்குக் காட்டவும், தனது பாராளுமன்றத்திற்கு துணைராணுவக் குழுத் தலைவனான கருணாவை நியமித்ததை நியாயப்படுத்தவுமே இவ்வார்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விரு துணை ராணுவக் குழுக்களும் மக்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையில், பதாதைகள் சகிதம் அனைவரும் மட்டு இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒன்றுகூடவேண்டும் என்றும் அங்கிருந்தே ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகும் என்றும் கூறியிருக்கின்றன. இவ்வார்ப்பட்டத்திற்காக பொதுமக்களை வாகரை, வாழைச்சேனை, செங்கலடி ஆகிய மட்டக்களப்பின் வடக்கு நகரங்களில் இருந்தும், களுவாஞ்சிக்குடி போன்ற மட்டக்களப்பின் தென்புறத்திலிருந்தும் பலவந்தமாக ஏற்றிவர இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துகள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. கிழக்கின் எல்லைப்பகுதியில் குடியேறியிருக்கும் சிங்கள மக்களும் இப்போராட்டத்தில் அதிதிகளாகக் கலந்துகொள்ளவிருக்கின்றனர் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்குழுக்களின் உதவியுடன் வடக்கில் இன்னொரு துணை ராணுவக் குழுவான ஈ பி டி பி யும் அரச ஆதரவு ஆர்ப்பாட்டமொன்றினை ஒழுங்குசெய்திருப்பதாகத் தெரிகிறது.
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 22, ஐப்பசி 2008 பணத்திற்காக சொந்த இனத்தையே வேட்டையாடும் பிள்ளையான் துணை ராணுவக் குழு : கடத்தப்பட்ட நீர்கொழும்பு வர்த்தகர் சடலமாக மீட்பு சில தினங்களுக்கு முன்னர் பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழுவினரால் பணத்திற்காகக் கடத்தப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் சுப்ரமணியம் தவராஜசிங்கம் அவர்களின் உடல் நீர்கொழும்பு ரயில் நிலையத்திற்கருகிலிருந்து இன்று மீட்கப்பட்டது. கடந்த ஒக்டோபர் மாதம், 8 ஆம் திகதி நீர்கொழும்பில் அமைந்திருந்த தொலைத் தொடர்பு நிலையத்திற்கு வெள்ளை நிற வானில் வந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் அவரை இழுத்துச் சென்றதாகத் தெரியவருகிறது. யாழ்ப்பாணம் காரைநகரின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த இந்த வர்த்தகர் நீர்கொழும்பில் பலவருடங்களாக வசித்துவந்தார். அவரது பிரேத பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றது.
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, ஐப்பசி 2008 பிள்ளையான் கொலைக்குழுவின் அலுவலகத்தைக் கைப்பற்றிய கருணா துணைராணுவக் குழு அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து தேசியப் பட்டியல் மூலம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதி மகிந்தவினால் நியமிக்கப்பட்ட துணைராணுவக் குழுத் தலைவன் கருணாவின் அடிவருடிகள் கிழக்கு மாகாண முதலமைச்சராக அரச ஆதரவுடன் பதவிக்கு வந்த இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானின் பிரதான அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி அதனைக் கைப்பற்றியிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. முதலில் வந்த தகவல்களின்படி, மட்டக்களப்பு நகரின் கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள பிள்ளையான் கொலைக்குழுவின் பிரதான அலுவலகமான மீனகம் மீது கருணா துணைராணுவக் கூலிகள் மதியம் 12:30 மணிக்குத் தமது தாக்குதலை ஆரம்பித்திருக்கின்றனர். இத்தாக்குதலில் இருந்து பிள்ளையானைக் காப்பற்றி கனத்த பாதுகாப்புடன் கொழும்பிற்கு கூட்டிவர ஏற்பாடு செய்த மகிந்த ராஜபக்ஷ, உடனடியாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே சந்திப்பொன்றினை ஏற்படுத்த முயற்சி செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இவ்விரு ராணுவத் துணைப்படைக் கூலிகளுக்கிடையேயான சண்டையினைத் தீர்ப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய் ராஜபக்ஷவும், பசில் ராஜபக்ஷவும் கடுமையான முயற்சிகளை எடுத்துவருவதாகவும் தெரியவருகிறது. துணை ராணுவக் குழுத் தலைவனான கருணா தொடர்பான இழிவான செய்திகளைப் பிரசுரித்து வெளிவரத் தயார் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான பிள்ளையானின் பிரச்சாரப் பத்திரிக்கைகளையும் எரித்த கருணா துணைராணுவக் குழு அந்த அச்சகத்திற்கும் தீமூட்டியதாகத் தெரியவருகிறது. இத்தாக்குதலின்பொழுது கருணா துணைராணுவக் கூலிகள் பிள்ளையான் கொலைக்குழுவின் 13 உறுப்பினர்களை உயிருடன் பிடித்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து டி - 56 ரக தானியங்கித் துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் கருணா துணைராணுவக் குழுவின் பிரச்சாரப் பிரிவு செய்திவெளியிட்டிருக்கிறது.
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, ஐப்பசி 2008 தனது வேட்டைநாய்களுக்கு அரசியல்ப் பதவிகள் எனும் எலும்புத்துண்டுகளை வீசியெறிந்த பேரினவாதம் : ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவான துணைராணுவக் குழுத் தலைவன் கருணா பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின்பேரில் ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் துணை ராணுவக் கொலைக்குழுவின் தலைவனான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை ஜனாதிபதி மகிந்த தனது கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் அம்பாறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்திருக்கிறார். இதுபற்றிய வர்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், துணைராணுவக் குழுத் தலைவனின் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் செவ்வாயன்று நிகழவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பாராளுமன்ற ஆசனத்தை துறந்து மாகாணசபையில் இணைந்த மக்கள் விடுதலை முன்னணி - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டின் உறுப்பினர் வசந்த சமரசிங்கவின் இடத்திற்கே கருணா அமர்த்தப்படவிருப்பதாகக் கட்சிவட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. கருணாவினால் ஆரம்பிக்கப்பட்ட துணைராணுவக் கொலைப்படையின் இரு பிரிவுகளுக்கிடையேயான மோதல்கள் தொடர்ந்துவரும் நிலையில், அண்மையில் கருணா இன்னொரு துணை ராணுவக் குழுவான டக்கிளசின் ஆதரவினை வேண்டிநின்றதும், இதற்கு பாதுகாப்புச் செயலாளரே அனுசரணை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. கருணா போலியான கடவுச்சீட்டு மற்றும்விசாவினைப் பாவித்து லண்டன் செல்லமுயன்று, அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டு 9 மாத காலம் சிறையிலடைக்கப்பட்டபின் நாடுகடத்தப்பட்டதும், இக்காலத்தில் கருணாவின் அடிவருடி பிள்ளையான், கொலைக்குழுவின் தலைமைப் பொறுப்பினை தானே எடுத்துக்கொண்டதும் நினைவிருக்கலாம். இக்காலத்தில் அரசுடன் நெருங்கிச் செயற்பட்ட பிள்ளையான், பாரிய வாக்குமோசடிகள், படுகொலைகள், ஆயுத வன்முறைகளைப் பாவித்து கிழக்கு மாகாணத் தேர்தல்களில் முறைகேடாக வென்று முதலமைச்சர் ஆனதும் நடந்திருந்தது.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, ஐப்பசி 2008 கிழக்குமாகாணத் தமிழர்களின் கலாசாரமும், பழக்கவழக்கங்களும் வடமாகாணத்தவரிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டவை, ஆகையால் அவர்கள் தனித்து இயங்குவதே சரியானது - சட்டமா அதிபர் சரத் என் சில்வா "கிழக்கு மாகாணம் இன்றிருப்பதுபோல வடக்கிலிருந்து முழுதாகப் பிரிந்து இயங்குதல் அவசியம். கிழக்கு மாகாணம் எம்மைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானது. நாட்டிலிருக்கும் ஏனைய மாகாணங்களுக்குக் கிழக்கு மாகாணம் முன்மாதிரியானது" என்று மட்டக்களப்பில் புதிய நீதிமன்றக் கட்டடத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய சட்டமா அதிபரும், மகிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசியுமான சரத் என் சில்வா கூறினார். இந்த நிகழ்வு மட்டக்களப்பு உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ் பரமராசாவினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. சரத் என் சில்வாவின் உரையிலிருந்து மேலும் சில பகுதிகள் கீழே, " கிழக்கு மாகாண மக்களின் கலாசாரமும், பண்பாட்டுப் பழக்க வழக்கங்களும் வடக்கு மாகாணத்தவரிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டவை. அதனாலேயே நான் கிழக்கு மாகாணம் வடக்குமாகாணத்திலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்படவேண்டும் எனும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அன்று வழங்கினேன்" "எந்த அரசியல்த் தலைவரினதும் அழுத்தத்தினால் நான் அந்தத் தீர்ப்பினை வழங்கவில்லை. கிழக்குமாகாண மக்களினதும், கிழக்கு மாகாண அமைவிடத்தின் முக்கியத்துவத்தினையும் நன்கு அறிந்து வைத்திருந்ததாலேயே என்னால் அவ்வாறான தீர்ப்பொன்றினை வழங்க முடிந்தது". "13 ஆம் திருத்தச் சட்டத்தில் கேட்கப்பட்டதற்கும் அதிகமான அதிகாரத்தினை நாம் இன்று கிழக்கு மாகாணத்திற்கு வழங்கியுள்ளோம். இந்த மாகாணத்தின்மீதான ஆளும் அதிகாரம் இந்த மாகாணத்தின் மக்களிடமே இருக்கவேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே இந்நாட்டில் நிலையான அமைதியினை ஏற்படுத்த முடியும்". "இன்று சட்ட அதிகாரம் எல்லோருக்கும் பகிரப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாண மக்கள் தமது வழக்குகள் கொழும்பில் நடைபெறுவதால் அங்கு சென்றுவருவதில் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர். இந்த நிலை இப்போது மாற்றப்பட்டு அவ்வழக்குகள் கிழக்கு மாகாணத்திலேயே நடத்தப்படுவதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்". "கிழக்கில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் உயர் நீதிமன்றங்களை நிறுவியுள்ளோம், மிக விரைவில் கல்முனையிலும் உயர் நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.
  9. சகாய தாயின் சித்திரம் நோக்கு......! 💐
  10. காவல் துறை கைதான தருணம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.