Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    23926
    Posts
  2. tulpen

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    10
    Points
    4150
    Posts
  3. மல்லிகை வாசம்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    10
    Points
    1662
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/14/21 in all areas

  1. 2009 இற்குப் பிறகு நான் உட்படப் பலருக்கும் இதே மனநிலை வந்திருக்கும் சபேஷ். போதாக்குறைக்கு முகநூலின் தாக்கம் வேறு. யாழில் செய்திகள் அதிகமாகப் பகிரப்பட்டாலும் நானும் மேலோட்டமாக வாசித்துவிட்டுப் போய்விடுவேன். அவை தவிர்ந்த அம்சங்களுக்கும் யாழில் இடமிருப்பது என் போன்றோருக்கு மகிழ்ச்சியே. 2008 அல்லது 2009இல் உங்களை இங்கு கண்டது நினைவிருக்கிறது. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. இணைந்திருங்கள். (இப்படிச் சொல்லுற நானும் இடையிடையே காணாமல் போய்விடுவதுண்டு! 😀)
  2. மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா? கற்பூரவள்ளி இலைகள் - 10 கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 1/4 கப் பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை மிளகாய் பொடி - 1 டீ ஸ்பூன் பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை கற்பூரவள்ளி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாள் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு முழு இலையாக எடுத்து பஜ்ஜி மாவில் நனைத்து அப்படியே எண்ணெயில் போடவும். நன்கு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். அவ்வளவுதான் பஜ்ஜியை எடுத்துவிடுங்கள். இப்போது சூப்பரான கற்பூரவள்ளி பஜ்ஜி ரெடி. https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2021/02/13150159/2352986/karpooravalli-Bajji-Omavalli-Bajji.vpf
  3. 'மாசிலா உண்மைக் காதலே... மாறுமோ செல்வம் வந்த போதிலே!' (இப்பாடலில் பானுமதி அம்மா எம்.ஜி.ஆருக்காகவும் சேர்த்து நல்ல அபிநயங்கள் காட்டி நடித்துள்ளமை சிறப்பு! 😀)
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, மார்கழி, 2011 மேலும் 3500 ஏக்கர் மேய்ச்சல் நிலம் சிங்களமயமாக்கப்படுகிறது, மெளனமான கருணா மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 3500 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தினை உயர் பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் தாம் எடுத்துக்கொள்வதாக இலங்கை ராணுவத்தின் மட்டக்களப்புத் தலைமைப் பீடம் அறிவித்திருக்கிறது. ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இப்பகுதியில் இருந்து தமிழ் கால்நடை விவசாயிகளை உடனடியாக தமது கால்நடைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுமாறு ராணுவம் அறிவித்துவருகிறது. சிறந்த மேய்ச்சல் தரையான இப்பகுதி 1978 ஆம் ஆண்டு வர்த்தமாணி வெளியீட்டின்மூலம் தமிழர்கள் தமது கால்நடைகளை மேய்க்கும் இடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. தமிழர்களின் மேய்ச்சல் நிலத்தினை அபகரித்து நிற்கும் ராணுவம் இப்பகுதியில் தமது பயிற்சித்தளங்களை நிறுவப்போவதாக கூறியிருக்கும் நிலையில், இந்நிலம் சிங்கள விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதோடு இச்சிங்களக் குடியேற்றத்திற்கு ராணுவப் பாதுகாப்பும் வழங்கப்படப்போவதாக பாதிக்கப்பட்ட மக்கள் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட அரச அதிபருக்கும், விவசாய நிவாரண உத்தியோகத்தருக்கும் இதுபற்றி முறைப்பாடு செய்திருக்கின்றனர். மாதவனைக் கண்டம் பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு ராணுவம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இப்பகுதிக்குள் எவரும் நுழையக் கூடாதென்று மிரட்டி வருகின்றனர். தமது மேய்ச்சல் நிலங்கள் பறிபோயுள்ளதனால் நிர்க்கதியாய் நிற்கும் விவசாயிகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும், துணைராணுவக் குழுத் தலைவனுமாகிய கருணாவின் உதவியாளர் ரவீந்திரனிடம் இதுபற்றி முறையிட்டதாகத் தெரிகிறது. ரவீந்திரன் மக்களின் முறைப்பாடு பற்றி மட்டக்களப்பு ராணுவத்திற்குத் தெரியப்படுத்தியபோது, "ராணுவத் தேவைக்காக இப்பகுதியை நாம் கையகப்படுத்தியிருக்கிறோம்" என்று சொல்லப்படவே அவரும் மெளனித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கோரளைப்பற்று தெற்குப் பகுதியில் , மாதவணைக்கண்டம், மண்திண்டி, மயிலத்தமடு, மொழிவளை ஆகிய நீண்டு செல்லும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் மேய்சால் நிலங்களில் இப்பகுதியும் சேர்க்கப்பட்டிருப்பதுகண்டும் மக்கள் செய்வதறியாது நிற்பதாக தெரியவருகிறது. கல்குடா பாராளுமன்ற உறுப்பினர் தேவநாயகம் அரசில் இருந்த 1978 ஆம் ஆண்டில் இப்பகுதி முழுவதும் தமிழருக்கான மேய்ச்சல் நிலங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது நினவிலிருக்கலாம். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34689
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, மார்கழி, 2011 சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடும் பிள்ளையான் கொலைக்குழு, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது ராணுவம் தாக்குதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்தன மடு ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டுவரும் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரியும், செங்கலடிப் பிரதேச சபையின் உறுப்பினருமான நபர் ஒருவருக்கெதிராக இப்பகுதிமக்கள் சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். தமக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களைக் கலைப்பதற்கு பிள்ளையான் குழு முறக்கொட்டாஞ்சேனை ராணுவ முகாம் அதிகாரியினையும், ஏறாவூர் பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரியையும் துணைக்கு அழைத்திருந்தனர். பிள்ளையானின் உத்தரவின் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய ராணுவமும் பொலீஸாரும் அவர்களைக் கலைத்துவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சந்தன மடு ஆற்றுப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண் அகழ்வினால் தமது நிலம் விரைவில் ஆற்றினால் அடித்துச் செல்லப்படப் போகிறதென்று இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பி வந்திருக்கின்றனர். அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை உதாசீனம் செய்துவரும் கிழக்குமாகாணசபை தலைவர், கொலைக்குழு பிள்ளையான், தொடர்ந்தும் இப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருகிறார். மக்களின் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டத்தின்மேல் ராணுவத்தை ஏவிவிட்டு மக்களை அடித்துத் துரத்திய பின்னர் அப்பகுதிக்கு வந்த பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள், சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவரை தாம் தமது கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும், இன்னொருவர் இப்பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறி தமது மணற்கொள்ளையினை மறைக்கமுயன்றபோதும்கூட, நடப்பதை நன்கு அறிந்துவைத்திருந்த மக்கள் அவர்களின் விளக்கத்தினை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகத் தெரிகிறது. ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாகத் தாக்கி கலைத்த ஒரு சில நாட்களிலேயே பிள்ளையான் மீண்டும் சந்தன மடு ஆற்றிலிருந்து மண் அகழ்வினை ஆரம்பித்துள்ளதாகவும், இதுபற்றி பேசினால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மக்கள் மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34679
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, மார்கழி, 2011 மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கியமான எல்லைக் கிராமங்களில் ஒன்று சிங்கள மயமாகிறது - உபயம் கருணா பதுளை - செங்கலடி ஏ 5 நெடுஞ்சாலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் முக்கிய தமிழ்க் கிராமம் ஒன்று சிங்கள மயமாகிறது. மங்கள ஆறு எனும் தூய தமிழ்க் கிராமத்திலிருந்து சுமார் 2500 ஏக்கர்கள் கொண்ட பகுதி பிரித்தெடுக்கப்பட்டு சிங்கள வர்த்தகர் ஒருவருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்று படுவான்கரை மக்கள் தெரிவிக்கின்றனர். மீள்குடியேற்றப் பிரதியமைச்சராக இருக்கும் துணைராணுவக் குழுத் தலைவர் கருணாவின் தலைமையில் மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு குழு இப்பகுதியில் அண்மையில் நில அளவையில் ஈடுபட்டதுடன், எல்லைகளையும் நிர்ணயம் செய்திருக்கின்றனர். கடந்த ஒருவாரமாக இந்த நில அளவை, எல்லை நிர்ணய வேலைகள் நடந்துவருகின்றன. தமிழர்களின் முக்கிய நிலப்பரப்பான "மங்கள ஆறு" எனும் இக்கிராமத்திற்கு ஆக்கிரமிப்புச் சிங்கள ராணுவ "மங்கள கம" எனும் சிங்களப் பெயரினைச் சூட்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டில் படுவான்கரை இருந்த பொழுது புலிகளின் முன்னணித் தாக்குதல் பிரிவான ஜெயந்தன் படையணி இக்கிராமத்தில் தனது தளங்களை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இன்று இந்நிலம் சிங்களவர்களால் தமிழ்த் துரோகிகள் துணையுடன் ஆக்கிரமிக்கப்படுவது கண்டு அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை கிழக்கின் தமிழர்களின் இன்னொரு கிராமமான பட்டிப்பளைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தெவுலாளக்குளம் எனும் கிராமம் சிங்களவர்களால் அரச துணையோடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த மேய்ச்சல் நிலமான இப்பகுதியிலிருந்து போரினால் தமிழர்கள் விரட்டப்பட்ட நிலையில், இப்பகுதியில் சிங்களவர்களை அரசு துணைராணுவக்குழுவினரின் உதவியோடு குடியேற்றி வருகிறது. இப்பகுதியில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபடும் தமிழர்களை அடித்துத் துன்புறுத்தியும் கால்நடைகளைச் சுட்டுக்கொன்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் சிங்களவர்கள் பலமுறை தமிழர்களின் மாடுகளை களவாடிச் செல்வதாகவும் கால்நடை வளர்ப்பவர்கள் முறையிட்டிருக்கின்றனர். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34674
  7. ஒரு காலத்தில், ஒரு நாளுக்கு ஐந்து தடவைகளுக்கு மேல் யாழுக்கு வந்த காலமும் இருந்தது குசா அண்ணா. வீடு வாசலில் எத்தனை திட்டு நையாண்டி எல்லாம் தாண்டி வந்திருக்கிறேன். இடையில் எதோ ஒரு சலிப்பு. பல விம்பங்கள் உடைந்தது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். அ‌த்துட‌ன் இரண்டு extreme (தீவிரமான) கொல்லுப்பாடுகள். இ‌ங்கு வ‌ந்து செய்தி படிப்பதில் ஆர்வம் இல்லை ஆனால் அச் செய்திக்கு பதியும் கருத்துகளில் ஆர்வம் இருந்தது. அதுவும் இப்போ மருகிவிட்டது. அடுத்தது கள உறவுகளின் சுய ஆக்கங்களை தேடி படிப்பேன் ஆனால் அதுவும் குறைந்து விட்டது. ஆனால், எதுவாயினும் யாழுடன் எப்பொழுதும் இணைந்தே இருப்பேன். 😁
  8. ஆச்சி:- டேய் மோனை அவங்களோடை சேராதை கெடுத்துப் போடுவாங்கள்....😍 அப்பு:- அவங்களோடை சேர்ந்து அவங்களையும் கெடுத்துடாதை....
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, கார்த்திகை 2011 பிரபல துணைராணுவக் குழு கொலையாளியும், கருணாவின் சகாவுமான ஆயுததாரி இனியபாரதிக்கு தேசத்தின் கெளரவம் எனும் பட்டம் வழங்கிக் கெளரவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இனவாத அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க்குற்றவாளியென்று பிரகடனப்படுத்தப்பட்டவனும், பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோயில், விநாயகபுரம் ஆகிய இடங்களில் பலநூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் படுகொலைகளைப் புரிந்தவனும், கருணாவின் மிக நெருங்கிய சகாவுமான இனியபாரதி எனப்படும் ஆயுததாரிக்கு "தேசமான்ய" என்றழைக்கப்படும் தேசத்தின் கெளரவம் எனும் விருதினை வழங்கிக் கெளரவித்திருக்கிறது. இனியபாரதி எனும் இந்த ஆயுததாரி கருணா குழுவெனும் துணைராணுவக் குழுவின் மிக முக்கியமானவன் என்பதும், கருணாவின் மிக நெருங்கிய சகாவென்பதும், மகிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்டத்திற்கான கட்சி ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வருபவன் என்பதும் குறிப்பிடத் தக்கது. மகிந்த ராஜபக்ஷவின் 66 ஆவது பிறந்த தினத்தினையொட்டி, இம்மாதம் 18 ஆம் திகதி இனியபாரதி எனும் துணைராணுவக் குழுக் கொலையாளிக்கு அம்பாறைமாவட்டம் திருக்கோயிலில் நடந்த நிகழ்வொன்றில் இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. கிழக்கில் மகிந்தவுக்காக இயங்கும் அமைப்பொன்று இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்ததுடன், திருக்கோயில் பொலீஸ் நிலைய அதிகாரியும் இந்நிகழ்வில் மகிந்த சார்பாகப் பங்கேற்றிருந்தார். http://2.bp.blogspot.com/-hiPrziFhrrM/U5hMM08fpFI/AAAAAAAA8BM/RY3x-0DkuwI/s1600/unnamed+(3).jpg கடந்த பங்குனி மாதம் 26 அம் திகதி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் கொமிஷனிடம் அம்பாறை மாவட்டத்தில் காணாமல்ப்போன தமது உறவுகள் பற்றி முறையிட்டவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தமது உறவுகளைக் கடத்திச்சென்றதுமுதல் படுகொலை செய்ததுவரை அனைத்துமே இனியபாரதியின் தலைமையின் கீழ்த்தான் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்திருந்தனர். கணவன்மார்கள், மனைவிமார்கள் பிள்ளைகள் என்று பலநூற்றுக்கணக்கானோர் கருணாவின் வழிநடத்துதலில் இனியபாரதியினால் கடத்தப்பட்டு, சித்திரவதைகளின்பின்னர் படுகொலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. அம்பாறை மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்கள், உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் ஆகிய அனைத்திலுமே இனியபாரதி வாக்குமோசடி, கொலைமிரட்டல், வாக்காளர்களை அச்சுருத்தியது, தேர்தல் அதிகாரிகளை மிரட்டியது, வேட்பாளர்களைப் படுகொலை செய்தது போன்ற பல தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்முனைப்பகுதியில் இனியபாரதியால் நடத்தப்பட்ட நாசகார நடவடிக்கை ஒன்றிற்காக அந்நீதிமன்றம் அவனுக்கு 10 ஆண்டுகாலம் சிறைத்தண்டை விதித்திருந்தது நினவிருக்கலாம். தற்போது இந்த கருணா கொலைக்குழு ஆயுததாரி கொழும்பில் தனியார் பாடசாலையொன்றில் சட்டத்துறையில் பயின்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிற்குறிப்பு : 2019 ஆம் அண்டு மன்னாரில் கேரளாக் கஞ்சா எனும் போதவஸ்த்தின் 160 கிலோவை தனது சொகுசு வண்டியில் கடத்திவந்தவேளை இவனும் இவனது சகாக்கள் இருவரும் பொலீஸாரினால் கைதுசெய்யப்படனர், இவன் அப்போது கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்தவன் என்பதும் குறிப்பிடத் தக்கது.
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, ஐப்பசி 2011 மட்டக்களப்பில் 40,000 ஏக்கர்களை சிங்களக் குடியேற்றமாகமாற்றும் அரசு - பிள்ளையான், கருணா துணைராணுவக் குழுக்கள் அமைதியாக ஆமோதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் அமைந்திருக்கின்ற நல்ல விளைச்சல் நிலங்களான கோரளைப்பற்று வடக்கு, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, செங்கலடி, ஏறவூர்ப்பற்று தெற்கு மற்றும் பட்டிப்பளை ஆகிய இடங்களில் தமிழரின் நிலங்களில் குறைந்தது 40,000 ஏக்கர்களைச் சிங்கள விவசாயிகளுக்காக அரசு தன்வசப்படுத்தியிருக்கிறது. மாவட்ட அரசின் அனுமதியின்றியும், மாகாணசபையின் அனுசரணையின்றியும், சட்டத்திற்குப் புறம்பான வகையில் தமிழரின் நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் தெரிவித்திருக்கிறார். கிழக்கு மாகாணசபை முதல்வர் பிள்ளையான் இந்தக் குடியேற்றம் குறித்து எதுவித நடவடிக்கையினையும் எடுக்காததால் இதுதொடர்பாக தான் அவருக்கு சட்டரீதியான முறைப்பாட்டினை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் ஒரு பிரதியொன்று துணைராணுவக் குழுத்தலைவரும் அரச பிரதியமைச்சருமான கருணாவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். சிவநேசதுரை சந்திரகாந்தனும், விநாயகமூர்த்தி முரளிதரனும் அரச ராணுவத்தால் இயக்கப்படும் இரு கொலைக்குழுக்களின் தலைவர்கள் என்பதும், அரச அதிகாரத்தில் இரு மட்டங்களில் இருக்கும் இவர்கள் சிங்கள அரசின் பிரதிநிதிகளாகவே செயற்பட்டுவருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. தான் பிள்ளையானிடம் இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டபோதும் அவர் இதுபற்றி அக்கறைகொள்ளாது இருப்பதாகவும், எல்லையோரத் தமிழ்க் கிராமங்கள் சிறிது சிறிதாக திட்டமிட்ட சிங்கள மயமாக்கலுக்குள் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருப்பதை இவர்கள் இருவரும் மெளனமாக ஆமோதித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
  11. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 8, ஐப்பசி 2011 கருணாவின் உதவியுடன் மட்டக்களப்பில் அழிக்கப்பட்டுவரும் மூலிகைக் காடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்குப் பிரதேசச் செயலகத்திற்கு உட்பட்ட கோரளங்கேணி முதல் பாலையடித் தோனை வரையான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் மூலிகைக் காட்டுப் பகுதி நகர்ப்புற அபிவிருத்தி எனும்பெயரில் கருணாவின் துணையுடன் அரசால் அழிக்கப்பட்டுவருவதாக அப்பிரதேச மக்களும், மூலிகைகளைப் பாவித்து வைத்தியத்தில் ஈடுபட்டுவரும் வைத்தியர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். அரிய மூலிகை வகைகளான காக்கணம், மருங்கை, கருவா, பிலாலி, பிலாசா போன்ற பாம்புக்கடி, நாய்க்கடி வைத்தியங்களுக்குப் பாவிக்கப்பட்டுவரும் மரங்களும் இவ்வாறு அழிக்கப்பட்டுவரும் காட்டுப்பகுதிக்குள் இருக்கின்றன என்று ஆயுர்வேத வைத்தியர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். இந்தக் காடழிப்புப்பற்றி பிரதேசச் செயலாளருக்கோ அல்லது கிராமசேவக அதிகாரிகளுக்கோ எதுவித அறிவித்தலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தகது. தமிழரின் தாயகத்தை சிங்களமயமாக்கும் அரசாங்கத்தின் இன்னொரு சதியே இந்தக் காடழிப்பும், நகர்ப்புற அபிவிருத்தியும் என்று கூறுகின்ற மட்டக்களப்பு சமூக நல ஆர்வலர்கள், கொடிய இனவழிப்பு யுத்தத்தாலும், இயற்கை அழிவுகளாலும் தமது இருப்பிடங்களைவிட்டுத் துரத்தப்பட்ட தமிழ் மக்கள் இன்றுவரை தற்காலிக முகாம்களிலும், பிறர் வீடுகளிலும் தங்கிவரும் நிலையில், உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்திசெய்கிறோம் என்கிற பெயரில் அரசு தமிழரின் நிலத்தைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது என்றும் விசனம் தெர்வித்தனர். மேலும், அரசாங்கத்தின் உல்லாசப் பயணத்துறையினை அபிவிருத்தி செய்யும் இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கும் பரவுமிடத்து தமிழர்கள் தமது தாயகத்தை ஒரு கட்டத்தில் நிரந்தரமாகவே இழக்கும் நிலை உருவாகும் என்றும் எச்சரித்துள்ளனர். இப்பகுதிகளில் அரச வேலைகளில் இருக்கும் தமிழர்கள், தமது திணைக்களங்கள் ஊடாக நடக்கும் இந்த திட்டமிட்ட அரச மயப்படுத்தப்பட்ட தமிழரின் நில அபகரிப்பிற்கு எதிராகக் குரல் உயர்த்தினால் தமது வேலைகள் பறிபோகலாம் அல்லது வேறிடங்களுக்கு தாம் மாற்றப்படலாம் என்கிற அச்சத்தில் இதுபற்றிப் பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர். இதேவேளை பாசிக்குடா பகுதியில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் "மாலு மாலு" எனும் உல்லாச விடுதியில் வேலை செய்வதற்கென்று நூற்றுக்கணக்கான தென்பகுதிச் சிங்களவர்கள் இப்பகுதியில் வந்து குடியேறியுள்ளனர். இந்த உயர்தர உல்லாச விடுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது. மேலும் இந்த நட்சத்திர விடுதியில் கருணா குழுவின் உதவியோடு விபச்சாரம் உட்பட பல கலாசார சீரழிவுகளையும் சிங்கள அரசு நடத்திவருவதாகவும், இதில் கருணாவினால் பல தமிழ்ப்பெண்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இவ்வாறான இன்னும் இரு நட்சத்திர விடுதிகள் கும்புறுமூலை ராணுவ முகாமிற்கு அருகிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த இரு நட்சத்திர விடுதிகளில் ஒன்று துணைராணுவக் குழு தலைவரும், அரசாங்கத்தின் பிரதியமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்திக்குச் சொந்தமானது என்பதுடன் மற்றையது கருணாவின் சகோதரிக்குச் சொந்தமானதாகும். இதேவேளை கருணாவின் சகோதரி அரச வேலை எடுத்துத் தருவதாகக் கூறி அப்பிரதேச இளைஞர்களிடம் பெருந்தொகைப் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார் என்றும், இதுவரை பணம்கொடுத்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் தெரியவருகிறது. இப்பகுதியில் இருக்கும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை "கருணாவின் நிதியம்" எனும் அமைப்பில் கட்டாயப்படுத்தி இணைத்துவரும் கருணா அரசாங்கத்தில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி பணத்தினை அறவிட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  12. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 10, புரட்டாதி 2011 காணமலாக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் - உறவுகளிடம் அரச அதிகாரிகள் வற்புறுத்தல் மட்டக்களப்பில் கருணா துணை ராணுவக் குழுவாலும், பிள்ளையான் கொலைக்குழுவாலும், அரச ராணுவ புலநாய்வுத்துறையாலும் கடத்தப்பட்டு இதுவரை காணாமலாக்கப்பட்டிருக்கும் மக்களை இறந்துவிட்டதாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அரச அதிகாரிகள் வற்புறுத்திவருவதாக பாதிக்கப்பட்ட உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழர் மீதான இனவழிப்புப் போரின்பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கானோர் கருணா, பிள்ளையான் மற்றும் அரச ராணுவப் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு காணாமலாக்கப்பட்ட அனைவரும் தற்போது இறந்துவிட்டார்கள் என்று பிரகடனம் செய்து, அவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையில் மட்டக்களப்புப் பிரதேசச் செயலகம் இறங்கியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆண்டுவரை இதுவரையில் குறைந்தது 300 பேர் காணாமல்ப் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடுகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பாக செயலாற்றிவரும் மட்டக்களப்புத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா சுமார் 138 பேர்கள் தொடர்பாகச் செயற்பட்டு வருகிறார். கருணா, பிள்ளையான் ஆகிய துணை ராணுவக் குழுக்களாலும், ராணுவத்தாலும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரங்களை வழங்கப் பாராளுமன்றம் அனுமதியளித்திருக்கிறது. தற்போது வடக்கிலும் கிழக்கிலும் காணமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று ஏற்றுக்கொள்ளும் ப்ட்சத்தில் மரண சான்றிதாகளை அரசு வழங்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால், இவ்வாறு துணைராணுவக் குழுக்களாலும், ராணுவப் புலநாய்வுத்துறையினராலும் கடத்தப்பட்டுக் காணமலாக்கப்பட்ட பலரின் உறவுகள் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதை ஏற்க மறுத்துவருவதுடன், தமது உறவுகள் கடத்தப்பட்டபோது பொலீஸிலும், அதிகாரிகளிடமும் வழங்கப்பட்ட முறைப்பாடுகள் பற்றி இதுவரை எதுவித நடவடிக்கையினையும் எடுக்காததுபற்றி விசனப்பட்டிருப்பதுடன், இதுதொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் கேட்டுவருகின்றனர். கடத்தப்பட்ட தமது உறவுகள் இன்னமும் ஏதோவொரு ராணுவ முகாமிலோ அல்லது சிறையிலோ தடுத்துவைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதனை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்துவருகிறார்கள். அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க கொமிஷனின் அமர்வில் கலந்துகொண்ட பலர் தமது உறவுகள் எங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையாவது சொல்லச் சொல்லுங்கள் என்றுதான் கேட்டிருந்தார்கள். இதில் பலர் இந்த அமர்வின் இறுதியறிக்கை வரும்வரை நம்பிக்கையுடன் காத்திருப்பதாகத் தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட உறவுகளில் பலர், காணமலாக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கையில் துரிதப்படும் அரசு, கொமிஷனின் அறிக்கை வரும்வரையாவது காத்திருந்தால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
  13. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  14. கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
  15. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  16. எண்ணிரண்டு பதினாறு வயது........! 😁
  17. பாடியவர் S .G - சாந்தன் வரிகள் - நெடுந்தீவு முகிலன் இசை - இசைப்பிரியன்
  18. தாயாக அன்பு செய்யும்........... இறைவா.......... என் வாழ்விலே........ ஒளி ஏற்ற வா........ தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீர் தானய்யா சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்ற வா -(2) கொஞ்சும் தமிழ் மொழிப் பேசி என்னை தேற்றவே -2 பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா. 1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும் விண் வாசல் அடைந்திடுவேன் நான் என்றும் உன் சாயல் தானே உன் கோவில் குடிகொள்ள நீ வா -(2) 2.உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுகராகம் மீட்டிடுவேன் உன் வார்த்தை கடலில் மிதந்தாலே போதும் யுகம் பல படைத்திடுவேன் எல்லாமே நீர் தானே இறைவா என் உள்ள நிறைவாக நீ வா-(2)
  19. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 2020 New Heart Touching Beautiful Naat Sharif - Hasbi Rabbi - Huda Sisters - Hi-Tech Islamic Naats

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.