Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46808
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    38791
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    23926
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    15760
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/25/21 in Posts

  1. இதற்கான சரியான தமிழ் தெரியவில்லை. சூப்பர் உணவுகள் என்று தேடிப் பார்த்ததில் தமிழில் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் goji, Acai, Cranberry, Chia, Linseed, Quinoa என்று சூப்பர் உணவுகளின் பெரிய பட்டியல் நீள்கிறது. இவை அதிகமாக சீனா, தென்னமெரிக்கா போன்ற தூர நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்றன. அண்மைக் காலமாக வியாபார ரீதியிலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களால் இந்த உணவுகளின் விற்பனை பெருகி வருகிறது. இது நான் அறிந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். கவிதையின் பொருள் உணர்ந்து இரசிப்பதுபோல் உண்ணும் உணவில் என்னவெல்லாம் உண்டு என்று புரிந்து மகிழ்வோடு உண்பது மனரீதியாக உடலுக்கு நன்மையே தரும். சூப்பர் உணவு என்றால் என்ன ? ஒவ்வொரு பழங்கள் காய்கறிகள் தானியங்கள் கிழங்குகளிலும் பலவிதமான விற்றமின்கள் தாதுப்புகள் புரதங்கள் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஆனால் சில உணவுகளில் தனித்தன்மையாக ஏதாவதொரு மூலக்கூறு ஆச்சரியமான முறையில் அதிகமாக இருக்கும். அல்லது பலவிதமான கிடைத்தற்கரிய மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும், எமக்குச் சில குறிப்பிட்ட மூலக்கூறுகள் தேவையாக இருக்கும்போது அல்லது குறைவாக இருக்கும்போது சூப்பர் உணவுகளை இனம்கண்டு எமக்குத் தேவையான வகையில் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சில நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை இயற்கையான இந்த உணவுகள் மூலம் உட்கொண்டால் மருந்துகளின் தேவையையும் குறைக்க முடியும். பெரும்பாலும் ஒரு உணவில் உள்ள Antioxidant (இதற்கும் தமிழ் தெரியாது) இன் அளவைப் பொறுத்து அது சூப்பர் உணவாகக் கருதப்படுகிறது. Antioxidant என்றால் என்ன ? ஊடலில் கோடிக்கணக்கான மூலக்கூறுகளுக்கிடையே தொடர்ச்சியாக இரசாயன செயற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறான மாற்றங்களின்போது எதோ காரணங்களுக்காக சில மூலக்கூறுகள் சரியான முறையில் பகுக்கப் படாமல் இலத்திரன் ஒன்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்படியாக விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மூலக்கூறு ஒன்று சுவாசப்பை மூலம் உள்வாங்கப்பட்ட ஒட்சிசன் மூலக்கூறோடு சேர்ந்து நீர் மூலக்கூறாகவும் காபனீரொட்சைட்டாகவும் பிரிந்து உடலுக்குத் தேவையான சக்தியை வெளியிடும். ஏதோ காரணங்களுக்காக இந்த இரண்டும் சரியாகப் பகுக்கப்படாமல் ஒரு இலத்திரனை அதிகமாகப் பெற்றுக் கொண்ட மூலக்கூறொன்று வெளியாகிறது. இதை Free radicals என்று சொல்லப்படுகிறது. புகைத்தல் மாசுபட்ட காற்று போன்றவற்றாலும் இவ்வாறான மூலக்கூறுகள் உடலினுள் செல்லலாம். இந்த Free radicals மூலக்கூறுகள் கட்டுப்பாடிழந்து மூர்க்கத்தனமாக அருகிலுள்ள கலங்களைத் தாக்கும். இவ்வாறான தாக்குதலுக்குள்ளான தசை தோல் இதயம் போன்றவற்றிலுள்ள கலங்கள் சேதமாவதுடன் மரபணுக்களும் பாதிப்புள்ளாகும். இதுவே உடல் முதுமையடையவும் காரணமாகக் கூறப்படுகின்றது. எமது உடல் தேவையற்ற இந்த Free radicals களை அழிக்க வேண்டும். அதற்காக எமது உடல் வேறு சில மூலக்கூறுகளைத் தேவையான இடங்களுக்கு அனுப்பிவைக்கிறது. இந்த மூலக்குறுகள் Antioxidant என்று அழழைக்கப் படுகின்றது. இவற்றின் பணி Free radicals மூலக்கூறுகளை ஈர்த்து அழிப்பதாகும். Antioxidant மூலக்கூறுகள் தனித்துவமான அமைப்புடையவை அல்ல. Free radicals களை அழிக்கும் திறனுள்ள அனைத்தும் இந்த Antioxidant இனுள் அடங்கும். இதோ முக்கியமான சில Antioxidant மூலக்கூறுகள் vitamin C beta-carotene vitamin A selenium vitamin E zinc flavonoids copper இன்னும் பல. ஆர்வக் கோளாறில் மேல்குறிப்பிட்டவற்றை அளவுக்கதிகமாக உட்கொள்ளக் கூடாது. சில மூலக்கூறுகள் அளவுக்கதிகமானால் நச்சுத் தன்மையையானவை. வேறுசில புற்றொநோய் போன்றவற்றையும் ஊக்குவிக்கும். சூப்பர் உணவுகள் எவை ? Antioxidant உணவுகளை மட்டுமல்லாது வேறு பல உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளும் இதனுள் அடங்கும். இவற்றை வெகு தூரத்தில் தேடாமல் எங்கள் ஊரிலும் சாராரணமாகக் கிடைக்கும் உணவுகளிலும் காணலாம். அவற்றை அறிவியல் ரீதியாக இனம்காண்பதே இத் திரியின் நோக்கம். பித்தத்தைப் போக்கும், சூட்டைக் குறைக்கும் புற்றுநோயைத் தீர்க்கும் என்பது போன்ற ஆதாரமில்லாத கருத்துக்களைத் தவிர்த்து உங்களுக்குத் தெரிந்த அறிவியல் ரீதியான தரவுகளை மட்டும் தாருங்கள். இவ்வாறான தரவுகளை நீங்கள் தேடிப் போகும்போதுதான் ஒரு உணவிலுள்ள உண்மையான ஆற்றலை அறிந்து கொள்ள முடியும். உணவுக் கூறுகளின் தரவுகள் தெரியாமல் அது குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் என்ற காரணத்தினால் அதனை உட்கொள்ளும்போது அதே உணவிலுள்ள வேறு கூறுகள் வேறு உபாதைகளைத் தரலாம். பல தமிழ் இணையத் தளங்களிலும் காணொலிகளிலும் பல போலியான தகவல்கள் பரந்து காணப்படுகின்றன. மருந்தே உணவு என்ற உன்னதமான கருத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பணம் சம்பாதிப்பதற்காகப் பரப்பப்படும் போலித் தகவல்கள் அகற்றப்பட வேண்டுமானால் உணவு பற்றிய அறிவியல் தகவல்களை நாம் நாட வேண்டும். இவை பற்றிய மேலதிகத் தெரிந்தவர்கள் தமது கருத்துக்களைப் பரிமாறலாம். ஒருசிலவற்றை ஆரம்பித்து வைக்கிறேன். *** நெல்லிக்காய் பலரும் தேசிக்காய் அல்லது தோடம்பழத்தில்தான் விற்றமின் சீ அதிகமாக உள்ளது என்று நம்புகின்றனர். மாற்றீடாக வேறு பல உணவுகள் உள்ளன. உதாரணமாக கறிமிளகாயில் தோடம்பழத்தை விட அதிகமாக உள்ளது. ஆனால் சமைக்கும்போது விற்றமின் சீ ஏறத்தாள 60% அழிந்துவிடும். 100 கிராம் தோடம்பழத்தில் ஏறத்தாள 55 மில்லி கிராம் விற்றமின் உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 700 மில்லி கிராமுக்கு மேல் உள்ளது. ஓரு நாளைக்கு ஒருவருக்கு 110 மில்லிகிராம் தேவைப்படும். ஏனைய உணவுகளிலிருந்தும் விற்றமின் சீ கிடைப்பதால் பாதி நெல்லிக்காய் ஒரு நாளைக்குப் போதுமானது. அதிகமான விற்றமின் சீ உடலுக்கு ஆபத்தில்லை. விற்றமின் சீ உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லையாதலால் மிதமிஞ்சியது சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும். 2016 இல் இந்தியாவில் உலர்த்திய நெல்லிக்காய் தூளை மிகச் சிறிய அளவில் கோழிகளுக்குக் கொடுத்து ஆராச்சி செய்யப்பட்டது. இதனை உண்ட கோழிகள் சாராதண கோழிகளை விட ஆரோக்கியமானவையாக வளர்ந்தன. அதனைத் தொடர்ந்து அண்மையில் சீனாவில் கோழிகளிலும் பின்னர் எலிகளிலும் பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. (https://fr.wikipedia.org/wiki/Amla) மஞ்சள் இது எங்களுக்குக் கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற உணவு. இந்தியாவில் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் பல காரணிகள் காணப்பட்ட போதிலும் அங்கு ஒப்பீட்டளவில் புற்றுநோய் குறைவாகவே காணப்படுகின்றது. ஒருவேளை இதற்கான காரணிகளில் மஞ்சள் பாவனையும் காரணமாகக் இருக்கலாம். மஞ்சள் குறிப்பாக 2 வகைகளில் செயலாற்றுகிறது. கட்டி, புற்றுநோய்க் கலங்கள் உருவாவதற்கு அவசியமானதாகக் கருதப்படும் ஒருவித புரதத்தின் தொகுப்பைத் தடுத்து புற்றுநோய்க் கலங்கள் உடலில் இருந்து விடுபட உதவும் நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது இதன்மூலம் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து இறக்க நேரிடும். மஞ்சள் புற்றுநோயைக் குணப்படுத்தாவிடினும் அது புற்றுநோய்க் கலங்கள் பரவாமல் கட்டுப்படுத்துகிறது. பக்கவிளைவுகள் இல்லாமல் சிலவிதமான உட்காயங்களை ஆற்றுகிறது. உலகம் முழுவதும் பரவலாக நடைபெற்ற ஆயிரக்கணக்கான ஆராச்சிகளில் மஞ்சளின் பயன்பாடு சிறந்த பெறுபேறுகளைத் தந்தாலும் மஞ்சள் பாவித்து ஒரு குறிப்பிட்ட நோயைக் குணமாக்கியதாக நிறுவப்படவில்லை. மஞ்சளை உடல் இலகுவாக உள்வாங்காது என்பதால் மிளகுடன் சேர்த்து அளவோடு உண்ணலாம். அதிகமாக உட்கொண்டால் தகாத உபாதைகள் வரலாம். ஈரல் தொடர்பான நோயுள்ளவர்கள், சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியவர்கள், இரத்தத்தை இலகுவாக்கும் மருந்துகள் பாவிப்பவர்கள் கட்டாயம் மஞ்சளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதனைத் தவிர்க்கும்படி சொல்லப்படுகிறது. மஞ்சள் கிருமிகளை அழிக்கும் என்ற தவறான கருத்து உலாவுகிறது. அப்படி அழிக்குமாக இருந்தால் மஞ்சளை உண்பவர்களின் வயிற்றில் சமிபாட்டுக்கு உதவும் பக்ரீரியாக்கள் அழிக்கப்பட்டு சமிபாடு குழப்பமடைந்து உடலுக்குச் சரியான ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் பலவிதமான நோய்க்கு உள்ளாக நேரிடும். சமீபத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக பலவிதமான ஆராச்சிகள் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றுகூட மஞ்சளால் கிருமிகளை அழிக்க முடியுமென நிரூபிக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
  2. அண்ணாச்சி நான் உங்களை சொல்லவில்லை இளவயதுக்காரர்களையே சொல்ல வந்தேன் . நாமெல்லாம் சிறிய குழந்தைகளுக்குள் அடக்கம் கண்டியளோ நேரில் பார்த்த நீங்கள் என்றால் இளைஞனில் இருந்தும் வாபஸ் பெற்றுக்கொள்வீர்கள் கந்தையா ஐயா
  3. பன்னிரு கண்களில் நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து சுகமேவி மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று பணிவேனோ வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற குருநாதா வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு மணவாளா கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழுங் கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த பெருமாளே
  4. பார்த்ததும் எரியும் வயிற்றை நாவில் இருந்து வடியும் ஜொள்ளு அணைக்கும்.......! 🤤
  5. கருணாவும் கே டி ராஜசிங்கமும் : இரு பாம்புகளின் இணைவு கருணாவுக்கான "அன்டன் பாலசிங்கம்" ஆக கே டி ராஜசிங்கமே தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தார். ஆனால் இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி சில வருடங்களிலேயெ கசத்துப்போனது. வடமாகாணத்தானை எதிர்த்து, கிழக்கு மாகாண மக்களுக்கான விடுதலையினைப் பெறப் போராடுவதாகக தன்னை வரிந்துகொண்டிருந்த கருணாவுக்கு வடக்கு மாகாணத்தான் ஒருவனே அரசியல் ஆலோசகராக செயற்படுவதென்பது நிச்சயமாக ஒரு தர்மசங்கடமான நிலையினை ஏற்படுத்தியிருக்கும் என்பது ரகசியமல்ல. ஆனால், அதுமட்டுமே காரணமாக இருந்திருக்காது. ஏசியன் ட்ரிபியூன் எனும் சஞ்சிகையில் 2007 கார்த்திகையில் எழுதிய வோல்ட்டர் ஜயவர்தன பின்வருமாறு கூறுகிறார், "கருணா ராஜசிங்கத்தைத் தொடர்ச்சியாக பயமுறுத்தி வந்திருந்தார். வடமாகாணத்திலிருந்து வந்த கே டி ராஜசிங்கம் தனது நண்பர் ஒருவரிடம் பேசும்போது, அடிக்கடி கருணாவின் உதவியாளர் ஒருவர் தன்னைத் தொடர்புகொண்டு மிரட்டி வருவதாகக் கூறியிருக்கிறார். கருணாவின் நெருங்கிய சகாவான ஒருவர் கே டி ராஜசிங்கத்திற்கு விடுத்த அச்சுருத்தலில், ராஜசிங்கத்தின் ஏசியன் ட்ரிபியூன் இதழில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழுவுக்கெதிரான செய்திகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று எச்சரித்திருக்கிறார். அத்துடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவிற்குள் ஏற்பட்ட பிளவுகளைப் பற்றியோ, அல்லது இக்குழுக்களுக்கிடையிலான படுகொலைகள் பற்றியோ ராஜசிங்கம் எதுவும் எழுதக்கூடாதென்றும் அச்சுருத்தப்பட்டிருக்கிறார். இதே காலப்பகுதியில்த்தான் கருணா வெளிப்படையாகவே பிள்ளையான் குழு ஆயுததாரிகளையும், முக்கியஸ்த்தர்களையும் இலக்குவைத்துக் கொன்றுவந்தார் என்பது குறிப்பிடத் தக்கது". கே டி ராஜசிங்கம் என்பவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்பதுடன், தற்போது செயலற்றூப்போயிருக்கும் தெவச எனும் சுயாதீனப் பத்திரிக்கையாளர்கள் அமைப்பிலேயே தனது ஊடகவியலாளர் பணியை ஆரம்பித்திருந்தார். தற்போது ஐரோப்பாவில் வாழ்ந்துவரும் ராஜசிங்கத்துக்கு புலிகளாலும் அச்சுருத்தல் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் மக்களின் இருப்பிற்கெதிராகவும், புலிகளின் தலைமைக்கெதிராகவும் அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு இதற்குக் காரணமாக இருக்கலாம். இதேவேளை, ராஜசிங்கத்தை தொலைபேசியில் மிரட்டிய கருணா குழு முக்கியஸ்த்தர்," உன்னை ஐரோப்பாவில் வைத்துப் போடுவதற்கும் எம்மால் முடியும், அதனால் எம்மைப்பற்றி எழுதுவதை நிறுத்து" என்று கூறியதாகத் தெரிகிறது. ஆரம்பத்தில், கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று, ஜனநாயக நீரோட்டத்தில் கலக்கப் போவதாக கூறியிருந்தபோது, ராஜசிங்கம் அதனை வரவேற்றிருந்தார். ஆனால், பிற்காலத்தில் கருணா பற்றிப் பேசிய ராஜசிங்கம், "கருணாவும் புலிகள் போன்றே செயற்படுவதால், நான் அவரில் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார். 2007 கார்த்திகையில் சண்டே லீடர் பத்திரிக்கையில் சொனாலி சமரசிங்க எனும் ஊடகவியலாளர் எழுதிய கட்டுரையொன்றில், கருணாவை ஓரங்கட்ட அல்லது கொன்றுவிடுவதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் ஐ நா மன்ற இலங்கை ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ அறையிலேயே நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. மகிந்தவின் உத்தியோக பூர்வ அறையான 1727 இலக்க இன்டர் கொன்டினென்ட்டல் உல்லாச விடுதியில் அவரை 15 ஆம் திகதி, ஜூன் 2007 சந்தித்த கே டி ராஜசிங்கம் கருணாவுக்கான சரியான பாடம் புகட்டப்படவேண்டும் என்றும், பிள்ளையான் முன்னிலைப்படுத்தப்படவேண்டும் என்றும் ஆலோசனை கூறியதாகக் கூறப்படுகிறது. மகிந்த அப்போது ஐ நா வில் சர்வதேச தொழில் அமைப்பின் கலந்துரையாடல்களில் பங்குபற்ற வந்திருந்தார். 2007, கார்த்திகை 2 ஆம் திகதி கருணா லண்டனில் கடவுச் சீட்டு மோசடிக்காகக் கைதுசெய்யப்பட்டபோது முன்னர் அவரை வானளவப் புகழ்ந்து கிலாகித்து எழுதிய பி பி ஸி இப்படிக் கூறியது, " அவர் கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் பெருந்தளபதியாக இருந்தவேளையில் அவர் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் தளபதியாக வலம் வந்தார், ஆனால் இன்றோ அவரின் கீழ் வெகு சிலரே இன்னமும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது" என்கிற கொசுறுச் செய்தியுடன் அவரது கைதுபற்றி செய்தி வெளியிட்டிருந்தது. லண்டனில் பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து கருணா மீண்டும் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தார். வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது இச்சைகளுக்காக துரோகமிழைத்து, அதனை மறைக்க அரசியல் வேடம் பூண்டு, கிழக்கு மாகாண மக்களுக்கான விடிவெள்ளியென்று தன்னை முன்னிலைப்படுத்தி, தனது அவலட்சணங்களை மறைக்க அவர் ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அவரிடமிருந்து முற்றாகக் கைமாற்றப்பட்டிருந்ததுடன், அவருடைய முன்னாள் அடியாளும், இந்நாள் விரோதியுமான பிள்ளையானின் கைக்குள் சென்றிருந்தது. மகிந்த ராஜபக்ஷ எனும் தந்திரச் சிங்கள ஜனாதிபதி, தனது நெடுங்கால நண்பனான கே டி ராஜசிங்கத்தின் வேண்டுதல்களைப் புறக்கணித்திருப்பது தெரிகிறது. ராஜசிங்கமும், மகிந்த ராஜபக்ஷவும் 1970 களிலிருந்து மிக நெருங்கிய சிநேகிதர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி. ராஜசிங்கம் வடமாகாணத்தின் சுதந்திரக் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த காலத்தில் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்ஷவை தனது ஊரான பருத்தித்துறைக்கு அழைத்து விருந்துபசாரம் நிகழ்த்தியது நடந்திருக்கிறது. இக்காலர்த்தில் கருணா கட்டைக் காற்சட்டை போட்டுக்கொண்டு விரல் சூப்பும் பாலகனாக இருந்திருக்கலாம். ஆனால், 2009 இல் மகிந்தவைப் பொறுத்தவரையில் கருணா எனும் பெயர் தனது அரசியல் ஆதாயத்திற்கு உதவுவதுபோல, தனது பால்ய நண்பனான ராஜசிங்கத்தின் ஆலோசனைகள் உதவாது என்பதை நன்கே புரிந்துவைத்திருந்தார். அதனாலேயே, ஐரோப்பாவின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு தன் இனத்திற்கெதிராகத் தொடர்ந்து வக்கிரம் கக்கும் பந்திகளை அவர் சிங்கள இனவாதிகளை மகிழ்விக்க எழுதிவந்தபோதும்கூட, அவரைப் புறந்தள்ளி கருணாவை தனது கோமாளிகள் அமைச்சரவையில் ஒரு பிரதியமைச்சராக மகிந்த அமர்த்திக்கொண்டார். ஆங்கிலமூலம் : சச்சி சிறிகாந்தா தமிழில் : ரஞ்சித்
  6. அரச பாடசாலையில் தான் நானும் படித்தேன் இதய காணிக்கை இறவாத காணிக்கை
  7. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  8. கருணாவின் அரசியல் : புரூட்டஸிலிருந்து லெப்பிடஸ் வரை ஆக்கம் : சச்சி சிறிகாந்தா, பங்குனி 20, 2009 தளம் : இலங்கை தமிழ் சங்கம் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் பலவீனங்களுக்கும், அவரது திருகுதாலங்களுக்கும் பணமே முக்கியமான காரணமாக அறியப்பட்டாலும் கூட, அதுபற்றி ஆழமாக சிந்திப்பது அவசியமாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலமைக்கும் கருணாவுக்குமிடையிலான பிணக்கின் அடிப்படைக் காரணமே தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நிதி மீதான தனக்கிருக்கும் தங்குதடையின்றிய அதிகாரம் தொடர்பானது என்று கூறப்படுகிறது. ஆனால், தனது நிதிக் கையாடல்களை மறைப்பதற்கும், அந்த நிதிமீதான தனது பிடியினைத் தொடர்ந்து பேணுவதற்கும் அவர் பாவித்த காரணமே பிரதேசவாதம் என்றால் அது மிகையில்லை. அப்படியானால், தான் உருவாக்கிய கட்சியிலிருந்து, தனது அடியாளினால் கருணா தூக்கியெறியப்பட்டு, கிழக்கிலிருந்து துரத்தப்படுவதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? அதுகூடப் பணம் தான் ! 2002 இலிருந்து 2003 வரையான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சமாதானத் தூதுக்குழுவின் ஒரு உறுப்பினராக கருணா செயற்ப்ட்டுவந்தபோது, சில முக்கிய நாடுகளின் புலநாய்வுத்துறையினரால் விரிக்கப்பட்ட பணத்தின் அடிப்படையிலான தந்திர வலையில் பணத்தாசை பிடித்த கருணா வீழ்ந்தார் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியதுதான். தனது இனத்திற்குத் துரோகம் இழைத்த கருணாவின் அரசியல் வரலாறு கடந்த 5 வருட காலத்தில் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது? கருணா எனப்படும் முரளீதரன் நான்கு குறிப்பிடத்தக்க பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறார். அவற்றில் முதலாவது, புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சிக்கு தானே தலைமை தாங்குவதெனும் மாயையினைத் தோற்றுவித்திருப்பது. இதில் ஈழத்தமிழருக்கான புதிய தலைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டதும் அடங்கும். இரண்டாவது, தானே உருவாக்கிய கட்சியிலிருந்து தனது அடியாளினால் மிகவும் கேவலமான முறையில் வெளியேற்றப்பட்டது. மூன்றாவது, போலியான கடவுச் சீட்டினைப் பாவித்து இங்கிலாந்திற்குச் சென்று அங்கே குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது. நான்காவது, இனக்கொலையாளி மகிந்த ராகபக்ஷவைத் தொடர்ச்சியாகத் துதிபாடிவருவதால் மகிந்தவின் பெருத்துவரும் கோமாளிகளின் அமைச்சரவையில் அவர் அடைந்த பிரதியமைச்சர் எனும் பதவி. ஐந்து வருடங்களுக்கு முன்னர் கருணா பற்றி நான் எழுதியதை ஒருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன், "தென்னாசியாவின் அரசியலில், அரசியல் சுயநலம் கொண்டவர்கள் தமது சுயநலத்தினை மறைக்கும் ஒரு கோவணமாக புது அரசியல் கட்சிகளைத் தொடங்குவார்கள். தமிழர்களில் புதிதாக கட்சி தொடங்கி, தமிழரின் நம்பிக்கையினைப் பெற்றுக்கொண்டவர் தந்தை செல்வ்நாயகத்திற்குப் பின்னர் எவருமில்லை. ஆனால், செல்வாகூட 1949 இலிருந்து 1956 வரையான காலப்பகுதியில் தனது நம்பகத்தன்மையினை நிலைநாட்ட கடிணமாகப் போராடவேண்டியிருந்தது. ஆனால், மக்கள் நலன் மீது அவருக்கிருந்த அசைக்கமுடியாத அக்கறையும், அதனைப் பெற்றுக்கொடுக்க அவர் பூண்டிருந்த உறுதிப்பாடும் அவருக்கு உதவின. ஆனால், அவருக்குப் பின்னால் வந்த அனைவருமே செல்வாவின் அரசியலைப் போன்று செய்யப் புறப்பட்டு படுதோல்வியையே அடைந்தார்கள் என்பது வரலாறு". அதன்படி, கருணாவின் வீரப்பிரதாபங்களை புளகாங்கிதப்பட்டு பறைசாட்டுவர்களின் கருத்தைப் பார்க்கலாம், 2004 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் கருணா புலிகளின் புதிய தலைமை இனிமேல் தானே என்று உரிமை கோரியிருந்தார். கருணாவின் பேச்சாளரின் வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகளை முழுவதுமாக விழுங்கிக்கொண்ட கொழும்பையும், சென்னையையும் தளமாகக் கொண்டு இயங்கும் கருணா ஆதரவுப் பத்திரிக்கை ஜாம்பவான்கள் புலிகளை இரு பிரிவுகளாக உடைத்து "வன்னிப் புலிகள்" என்றும் மட்டு புலிகள்" என்றும் அழைத்து சுய இனபம் அடைந்துகொண்டார்கள். பாங்கொக்கை தளமாகக் கொண்டியங்கும் ஏசியன் ட்ரிபியூன் பத்திரிக்கையின் கே டி ராஜசிங்கம், கருணாவின் ஊதுகுழல் வரதன் ஆகியோர் கருணாவின் தலமையிலான "மட்டு புலிகள்" பிரபாகரன் தலைமையிலான "வன்னிப் புலிகள்" ஐக் காட்டிலும் பலமானவர்கள் என்று பிரச்சாரங்களை ஏவிக்கொண்டிருந்தார்கள். கருணாவின் பேச்சாளரான வரதன் என்பவர் கருணாவுடன் குறைந்தது 6,000 போராளிகள் இருப்பதாக சத்தியம் செய்துவந்தார். அவ்வருடத்தின் ஐப்பசி மாதத்தில் கருணா தான் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கப்போவதாகவும், அதன் பெயர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்றும் அறிவித்தார். கருணாவின் கட்சியின் பெயரில் இருக்கும் சொற்கள் மிகக் கவனமாக தெரிவுசெய்யப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். கருணாவை அன்று வழிநடத்தி வந்தவர்கள் இப்பெயரின் மூலம், புலிகளுக்கான புதிய தலைவராக கருணாவைப் பிரகடனப்படுத்தியதுடன், தமிழரின் இலட்சியமான ஈழம் எனும் சொல்லையும் கருணா நிராகரித்துவிட்டார் எனும் கருத்துருவாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், இவை எதுவுமே தமிழ் வாக்காளர்களைக் கவரவில்லை என்பது வேறுவிடயம். இலங்கையில் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு முகத்தினையும், எதிராளிகளுக்கு இன்னொரு முகத்தினையும் காட்டி பத்தி எழுதும், அரசியல் வியாபாரியான தயான் ஜயதிலக்க தான் கருணா பற்றி பெருமையாக எழுதிய பந்தியொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார், "கருணா நான்குவகையான வெற்றிகளைப் பெற்றிருக்கிறார். முதலாவது இன்றுவரை உயிருடன் இருப்பது. இரண்டாவது சித்திரை மாதத்தில் கொழும்பிற்குப் பின்வாங்கிச் சென்றது, கொட்டாவைப் பகுதியில் தனது சகாக்காளில் எண்மரைப் பலிகொடுத்தது, தனது சகோதரர் ரெஜியை இழந்தது ஆகிய பின்னடைவுகளுக்குப் பின்னரும் கூட தொடர்ந்தும் இயங்கிவருவது. மூன்றாவது சர்வதேசத்தில் பிரபலமானவராக, பலராலும் பேசப்படுபவராக மாறியது. நான்காவது தனது ராணுவ வல்லமையினையும், சாதுரியத்தையும், அரசியல் வெற்றிக்காகப் பயன்படுத்துவது". ஆனால், 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அன்று கருணா ஆரம்பித்த அவரது அரசியல் கட்சி இன்று அவரிடம் இல்லை. அவரது அடியாளான பிள்ளையான் அக்கட்சியைக் கையகப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் கருணாவின் ராணுவ வல்லமையும், சாதுரியமும் போலியானவை என்று அவரது அடியாளினூடாகவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கருணாவைப் பற்றிச் சர்வதேசத்தில் பேசப்படும் ஒரே விடயம் போலியான கடவுச் சீட்டினைப் பாவித்து இங்கிலாந்திற்குத் தப்பியோடி, அங்கே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது மட்டும் தான். ஆனால், தயான் ஜயதிலக்க கூறுவதில் ஒரு உண்மையிருக்கிறது, அதாவது கருணா இன்றுவரை உயிருடன் இருப்பது. ஆனால் உயிருடன் இருப்பதற்காக அவர் கொடுத்த விலை அவரது சுய கெளரவம், தன்மானம், தமிழர் எனும் அடையாளம் என்று இப்படிப் பல. இன்று அவர் உயிருடன் இருந்தாலும் அவரது கழுத்தைச் சுற்றியும், விதைப்பைகளை இறுக்கியும் சுற்றியிருக்கும் சுருக்குக் கயிறுகளை அவர் அறியாமல் இருக்கமாட்டார் என்று நம்புகிறேன்.
  9. காதலியின் காதலைக்கூட அடிக்கடி புதுப்பிக்க வேண்டி இருக்கு, ஆனால் இந்த இறால் ஊறுகாய் ஆறுமாதத்துக்கும் கெடாமல் இருக்கு. செய்து பத்திரப்படுத்திப் பாவியுங்கள்.....! 😂
  10. தம்பி தனி .....ஊரிலே என்னை நேரிலே பார்த்து பழகிய பின்பும் இப்படி நீங்கள் எழுதியது என் மனசைப் பிசைகிறது......! 😢
  11. இல்லையென்று சொல்வதற்கில்லை. அப்படியும் இருக்கின்றார்கள் தான். ஆனாலும் எமது அநேகமான இளம் சமுதாயத்தினர் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
  12. வடமராட்சி கிழக்கில்.... சீன ஆதிக்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.