"தோற்றிடேல், மீறித்
தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"
-நன்னிச் சோழன்
எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!
எல்லா(hello)...
வணக்கம் நண்பர்களே!
இன்று நாம் பார்க்கப்போவது புலிகளால் போர்க்களத்தில் அணியப்பட்ட தாக்குதல் கஞ்சுகங்கள் பற்றியே. இவை புலிகளிடம் 25 க்கும் மேற்பட்ட விதங்கள் இருந்தன. இவற்றை புலிகள் "கோல்சர்" (Holster) என்ற தற்பவச் சொல்லால் தமிழில் குறிப்பிட்டனர். அவற்றை பொதுவாக 8 வகையாகப் பிரிக்கலாம். அவை ஆவன:
RPD & RPK உருள்கலன் தாக்குதல் கஞ்சுகங்கள் - RPD & RPK Round barrel assault vest - 3
பின்னுதைப்பற்ற சுடுகலனிற்கான எறிகணை காவி- Recoilless gun shell carrier - 1
கைக்குண்டு செலுத்தி தாக்குதல் கஞ்சுகம் - Grenade launcher assaults vest - 7
உ.பி.கை. தாக்குதல் கஞ்சுகங்கள் - RPG assault vest - 13
PK இயந்திரச் சுடுகலன் தாக்குதல் கஞ்சுகம் - PK GPMG Assault vest - 1
அடிப்படை தாக்குதல் கஞ்சுகங்கள் - Basic Assault vest - 7
ஏனைய தாக்குதல் கஞ்சுகங்கள் - Other assaults vest -
பின்பக்கம் - 20 விதம்
முன்பக்கம் - 18 விதம்
கள மருத்துவ கஞ்சுகங்கள் - Field medical vests - 4
வெடியுடை (Charger carrier) - 1
கைக்குண்டு தடறு - 1
கடற்சிறுத்தைகளின் தாக்குதல் கஞ்சுகங்கள்
உபிகை(RPG) கஞ்சுகம்- 1
கைக்குண்டு செலுத்தி கஞ்சுகம்- 1
ஏ.கே கஞ்சுகம் - 4
பீகே கஞ்சுகம்- 1
நீரிற்கான நடைபேசி உறை - 1
கரும்புலி அதிரடிப்படைஞர் தாக்குதல் கஞ்சுகம்
ஏ.கே- கஞ்சுகம் - 1
ஆர்.பி.கே. கஞ்சுகம் - 1
வகை - 56 கஞ்சுகம் - 1
நுகர்பயன் பை - 1
G3 கஞ்சுகம் - 1
3 லோ கொண்ட கஞ்சுகம் - 1
நிகழ்பட படவ உறை - 1
அரிய வேறுபாடான கஞ்சுகம் - 2
நுகர்பயன் பை - Utility bags - எண்ணிக்கை தெரியவில்லை
சாச்சர் காவிக் கஞ்சுகம் - Charger(suicide claymore) carrier vest
இவற்றோடு அவர்கள் நுகர்பயன் பையினையும் கொண்டிருந்தனர்.
நுகர்பயன் பை - Utility bags - 8
செவ்வக முதுகுப் பை - Rectangular back pack - 1
RPD & RPK உருள்கலன் தாக்குதல் கஞ்சுகங்கள் - RPD/RPK Round barrel assault vest - 2 types
1) இதில் 30 சன்னங்கள் கொண்ட 2 சன்னக்கூடு பளுவில்(வலது - 1; இடது - 1) உள்ளது
'வன்னேரிக்குள மண்ணரணில் புலிவீரியொருவர் உடற்கவசம் அணிந்து அதன் மேல் தாக்குதல் கஞ்சுகத்தினை அணிந்துள்ளதை கவனிக்குக'
2) இதில் 30 சன்னங்கள் கொண்ட 2 சன்னக்கூடு வயிற்றுப்பகுதியில் உள்ளது
3)
'வான்காப்பு பயிற்சியில் பெண்புலிகள்'
பின்னுதைப்பற்ற சுடுகலனிற்கான எறிகணை காவி- Recoilless gun shell carrier - 1 type
1)
'Charles Antony Special Regiment (CASR)'
கூடுதல் தகவல்:-
ஒரு கார்ல் கஸ்ரோவ் அணியினர்
கைக்குண்டு செலுத்தி தாக்குதல் கஞ்சுகம் - Grenade launcher assaults vest - 6
1)பச்சை(இடது) & சிங்கள தரைப்படை உருமறைப்பு(வலது)
'முதற்படத்தில் நிற்பவர் நெஞ்சின் நடுவிலே நடைபேசியினை(walky-talkie) அதற்கான சோளியலினுள்(pouch) இட்டு செருகியுள்ளார்'
கறுப்பு:-
இவை நான்காம் ஈழப்போரில் மட்டும் பயன்பாட்டில் இருந்தன
'கேணல் வீரத்தேவன்'
'பின்பக்கம்'
2)
'கப்டன் செல்லக்கிளி'
3)
'உந்துருளிப் படைஞர் (Bike regiment's soldier) | இவரது முன்பக்கத்தில் டொங்கான் குண்டுக்கான சோளியல்களும் முதுகில் டொங்கானுக்கான சோளியலும்(pouch) உண்டு.'
4)
5) வகை-85 துணை இயந்திர சுடுகலன் மற்றும் 40 மிமீ கைக்குண்டு செலுத்தி ஆகியவற்றிற்கான கஞ்சுகம்.
'முன்பக்கம் | முன்பக்கத்தில் உள்ள சன்னக்கூட்டு சோளியலினுள் தலா இரண்டு சன்னக்கூடுகள் இருக்கும்'
'பக்கவாடு | எல்லாளன் திரைப்படத்திலிருந்து'
'பின்பக்கம்'
6) டொங்கான் எறிகணைக்கான 2 சோளியல்கள் முதுகுப்பக்கத்தில்
7) டொங்கான் எறிகணைக்கான மூன்று சோளியல்கள் முதுகுப்பக்கத்தில்
உந்துகணை செலுத்தி தாக்குதல் கஞ்சுகங்கள் - RPG assault vest - 8
(Propellers - பிலிறுந்திகள்)
உந்துகணை சூட்டாளர் - 4 வகையான கஞ்சுகம்
துணைவர் - 4 வகையான கஞ்சுகம்
இவர்கள் 'அதிரடிப்படைஞர்' என வகைப்படுத்தப்பட்டு 'ஆர்.பி.ஜி. கொமாண்டோக்கள்' என்று அழைக்கப்பட்டனர்.
கீழ்க்கண்ட இருபடங்களிலுமாக மொத்தம் 3 வகையான உந்துகணை காவி கஞ்சுகங்கள் உள்ளன. உந்துகணை செலுத்தி ஏந்தியிருப்பவர் சூட்டாளர் ஆவார். அவரிற்கு அருகில் ஏ.கே உடன் அமர்ந்திருப்பவர் துணைவர் ஆவார். உந்துகணை செலுத்தி ஏந்தியிருப்பவரிடம் முதன்மையாக 3 உந்துகணைகளும்(முதுகில்) அதற்கான 3/4 பிலிறுந்திகள்(இரு வகையான கஞ்சுகங்கள் - பிலிறுந்திகள் வயிற்றுடன் இருக்கும்) இருக்கும். துணைவர் ஏ.கே. க்கான 2/4 சன்னக்கூடுகளும் 3 பிலிறுந்திகளும் முதுகில் 3 உந்துகணைகளும் கொண்டிருப்பர்.
'உந்துகணை செ. சூட்டாளர்களும் அவர்களின் துணைவரும் | 1,1 - வகை ஒன்று; 2,2 வகை இரண்டு'
கீழ்க்கண்ட படிமத்தில் சூட்டாளர் அணியும் கஞ்சுகத்தின் வகை- 1 & வகை- 2 கஞ்சுகங்கள் தெளிவாக தெரிவதை கவனிக்குக:-
ஜெயசிக்குறுய் காலத்தில் (அதாவது விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின் தொடக்க காலத்தில்) உபிகையினை செலுத்துபவர் சில வேளைகளில் நான்கு உந்துகணைகளையும்...
அதற்கான பிலிறுந்திகள் கொண்ட கஞ்சுகத்தின் முன்பக்க சோளியல்கள் 5 ஆகும் (வலது பக்கம் 3; இடது பக்கம் 2)
துணைவர் கீழ்க்கண்டவாறான பளுவைச் சுற்றாக 11 சன்னக் கூடுகளையும் பின்கழுத்திற்கு கீழே ஒரு உருள்கலன் சன்னக்கூட்டினையும் கொண்டார். இவரின் சுடுகலன் RPK ஆகும்.
7)கரும்புலிகளின் உந்துகணை கஞ்சுகம்
'நான் அம்புக்குறியிட்டுள்ள தரைக்கரும்புலி (சிற்றரையர்(Major) ஆனந்தி) உபிகையினை தனது தனியாள் ஆய்தமாக கொண்டுள்ளார்.
8)இதில் உள்ள உந்துகணை சூட்டாளரின் துணைவரின் கஞ்சுகத்தை கவனிக்குக.. மேற்கண்டவற்றை விட வேறுபாடாக உள்ளது.
'பக்கவாடு'
'முன்பக்கம்'
9)LAW - இலகு கவச எதிர்ப்பு ஆய்த கஞ்சுகம்
2 உந்துகணை செலுத்திகள் காவிச் செல்வது. இந்த லோ ஆனது விடுதலைப்புலிகளின் அதிரடிப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படுபவையாகும்.
10) 2 உந்துகணை செலுத்திகள் காவிச் செல்வது. இந்த லோ ஆனது விடுதலைப்புலிகளின் அதிரடிப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படுபவையாகும்.
11)இரண்டு சோளியல் கொண்ட லோ காவி
'அதிரடிப்படைஞர்களும் கரும்புலிகளும்'
12)LAW - இலகு கவச எதிர்ப்பு ஆய்த கஞ்சுகம்
3 உந்துகணை செலுத்திகள் காவிச் செல்வது. இந்த லோ ஆனது விடுதலைப்புலிகளின் அதிரடிப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படுபவையாகும்.
13)LAW - இலகு கவச எதிர்ப்பு ஆய்த கஞ்சுகம்
4 உந்துகணை செலுத்திகள் காவிச் செல்வது. இந்த லோ ஆனது விடுதலைப்புலிகளின் அதிரடிப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படுபவையாகும்.
'கரும்புலியின் முதுகில் 4 சோளியல்'
PK இயந்திரச் சுடுகலன் தாக்குதல் கஞ்சுகம் - PK assualt vest - 1
1) இவை இரு நிறத்திலான உருமறைப்பில் பயன்படுத்தப்பட்டன.
நிறம் - 1
'மேலும் தெளிவிற்கு இப்பபடிமத்தில் உள்ள பெண் போராளிகளின் கஞ்சுகத்தினைக் காண்க'
நிறம் - 2
அடிப்படை தாக்குதல் கஞ்சுகங்கள் - Basic Assault vest - 6
1)1980 களின் பிற்பகுதியில் மட்டுமே புலிகளால் அணியப்பட்ட இவ்வித முச் சோளியல் ஆனவை உண்மையில் நெஞ்சில் கட்டப்பட வேண்டியவை ஆகும். ஆனால் ஒரு சிலர் சும்மா பாணிக்காக இவ்வாறு கட்டுவதுண்டு
'லெப். கேணல் விக்ரர் '
2) 1980 களின் பிற்பகுதியில் மட்டுமே புலிகளால் அணியப்பட்ட இவ்வித 2 சோளியல்
'முதற்பெண் கட்டளையாளர் மேஜர் சோதியா'
3) முச் சோளியல்
'பூநகரி படையணி'
4) 1990 வரை பயன்படுத்தப்பட்ட கஞ்சுகம்
5)1990 வரை பயன்படுத்தப்பட்ட கஞ்சுகம்
6)நாற்சோளியல் கொண்ட கஞ்சுகம்
7) அறுசோளியல் கொண்ட கஞ்சுகம்
'ஜெயசிக்குறுவில் புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான லெப். கேணல் தனம் '
ஏனைய தாக்குதல் கஞ்சுகங்கள் - Other assaults vest -
பின்பக்கம்:- 20 விதம்
1)
2)
3) ஜெயசிக்குறுய் காலத்தில் புதூர்ச் சந்தி தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஜெயந்தன் படையணி போராளி:-
4)
5) & 6)
'த.வி.பு இன் படைத்துறைக் கட்டளையாளர்(Military commander) 'சமர்க்கள நாயகன்*' பிரிகேடியர் பால்ராஜ் அவர்களும் அவருடைய மெய்க்காவலர்களும்.'
* சமர்க்கள நாயகன் என்னும் பட்டம் இவர் இறந்த பிறகு தவிபு இயக்க தலைவரால் அவருக்கு வழங்கப்பட்டதாகும்.
'பின்பக்கம்'
7)
'அம்மானும் கேணல் செல்வராசாவும்'
8 )
9)
10 & 11)தரைக் கரும்புலி அதிரடிப்படை வீரர்கள்
12) துமுக்கி கைக்குண்டிற்கான கஞ்சுகம் :
13) & 14)
15)
16)
17)
18)
19)
அதிரடிப்படைஞர் கஞ்சுகம்
20) எந்தச் சுடுகலனிற்கான கஞ்சுகம் என்று தெரியவில்லை.
முன்பக்கம்:- 17 விதம்
1)இரட்டைச் சன்னக்கூடு கொண்ட கஞ்சுகம் (மேலதிகமாக உருந்துண்ட சன்னங்கள் மற்றும் ஏனைய வெடிபொருட்களும் கொண்டிருக்கிறார்)
2) நான்கு சன்னக்கூடு கொண்ட கஞ்சுகம் (மேலதிகமாக உருந்துண்ட சன்னங்கள் மற்றும் ஏனைய வெடிபொருட்களும் கொண்டிருக்கிறார்)
3)ஆறு சன்னக்கூடு கொண்ட கஞ்சுகம் (மேலதிகமாக உருந்துண்ட சன்னங்கள் மற்றும் ஏனைய வெடிபொருட்களும் கொண்டிருக்கிறார்)
'QBZ ஏந்தியுள்ளார்'
'பின்பக்கம்'
4) & 5)
கறுப்பு நிற கஞ்சுகங்கள். இவை புலிகளால் நான்காம் ஈழப்போரில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இவற்றின் வடிவம் மிகவும் மேம்படுத்தப்பட்டதாக காணப்படுகிறது. சன்னக்கூட்டிற்கு மேலே கைக்குண்டு செலுத்திகளுக்கான கைக்குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவை புலிகளின் சிறப்பு அணிகளால் மட்டுமே அணியப்படுபவை ஆகும்
6), 7) & 8 )
இங்கே தெரியும் மூன்று பேரும் மூன்று விதமான கஞ்சுகங்கள் அணிந்துள்ளதை கவனிக்குக. இது போன்ற கஞ்சுகங்கள் புலிகளால் 1990 வரை மட்டுமே அணியப்பட்டு அதன் பின்னர் கைவிடப்பட்டன.
'இவர்கள் கையில் வைத்திருப்பது M16 - M203 கைக்குண்டு செலுத்தியுடன் | இடம்: மணலாற்றுக் காடு'
9)
10) <1990
'பிரிகேடியர் லக்ஸ்மன்'
11)
12)1990 களின் தொடக்கத்தில்..
இது வரிப்புலி உருமறைப்பில் விளைவிக்கப்பட்ட கஞ்சுகமாகும். இது போன்ற வரிப்புலி உருமறைப்பில் முச்சோளியல் கொண்ட கஞ்சுகம், நாற்சோளியல் கொண்ட கஞ்சுகங்களும் விளைவிக்கப்பட்டன. இவையெல்லாம் 1994இற்கு முன்னர் விளைவிக்கப்பட்டவையாகும்.
13)1990 களின் தொடக்கத்தில்..
இது வரிப்புலி உருமறைப்பில் விளைவிக்கப்பட்ட கஞ்சுகமாகும்.
14)
15)
16) சிறப்புப்படைகளால் மட்டுமே பயனபடுத்தப்பட்ட கஞ்சுகம்
இதனது கஞ்சுகப்பட்டையின் வலது புறத்தில் மட்டும் டொங்கான் எறிகணைகள் 2 வைப்பதற்கு ஏற்றாற்போல் 2 சோளியல்கள் உள்ளன.
17)சிறப்புப்படைகளால் மட்டுமே பயனபடுத்தப்பட்ட கஞ்சுகம்
இதனது கஞ்சுகப்பட்டையின் இரு புறத்திலும் டொங்கான் எறிகணைகள் இவ்விரண்டு வைப்பதற்கு ஏற்றாற்போல் 4 சோளியல்கள் உள்ளன.
18)
அதிரடிப்படைஞர் கஞ்சுகம்
கள மருத்துவ கஞ்சுகங்கள் - Field medical vests
1)
2)
3)
'கடைசியாக செல்பவர் கள மருத்துவர்'
4)
நுகர்பயன் பை - Utility bags - எண்ணிக்கை தெரியவில்லை
1)
'22-4-2008 முகமாலை முறியடிப்புச் சமரில் முன்னரங்க நிலைக்கு(FDL) வலுவூட்டலுக்குச் செல்லும் பெண்புலிகள்'
2)
''2008 இறுதியில் நடைபெற்ற முறியடிப்புச் சமர் ஒன்றின் முடிவாய் மேற்கொள்ளப்படும் துடைத்தல் நடவடிக்கை''
3)
மேலே உள்ள வடிவம் கறுப்பு நிறத்திலும் பயன்பாட்டிலும் இருந்துள்ளது.
4), 5) & 6)
7) >2006
8 ) 1990களில் வேவுப்புலிகள்
9)
10)
11)
'தவளைப் பாச்சலின் போது பலாலி புகுந்த கரும்புலிகளில் பெரும்பாலானோர் இவ்வாறான நுகர்பயன் பைகளையே கொண்டுசென்றிருந்தனர்'
சாச்சர் காவிக் கஞ்சுகம் - Charger(suicide claymore) carrier vest
இதுதான் சாச்சர் வைத்து எடுத்துச்செல்வதற்கான கஞ்சுகம் அந்த கழுத்துக்குக் கீழுள்ள பெட்டி போன்றதுதான் சார்சர். அந்த கொலருக்கு கீழே உள்ளதுதான் சாச்சருக்கான ஆளி. இரு பக்கப் பளுவிலும் சன்னக்கூடு உள்ளது. சாச்சர் பெட்டிக்குக் கீழே டொங்கான் குண்டு வைக்கும் சோளியல்கள் உள்ளன (2*2=4). பின்பக்கம் எப்படியென்பது தெரியவில்லை.
1)
'கரும்புலி, 1998'
2)
'கழுத்திற்கு அருகில் கறுப்பு நிறமாக தெரிவதுதான் இதற்கான மாந்த கட்டுப்படுத்தி (அழுத்தி)'
இவற்றுடன் புலிகள் கைத்துப்பிற்கான தடறினையும்(Holster) பயன்படுத்தினர். ஆனால் அது உலகெங்கும் பயன்பாட்டில் உள்ள வகையைச் சேர்ந்ததால் அது பற்றி நானிங்கு எழுதவில்லை.
கைத்துப்பு தடறு - Pistol holster - 1
கைக்குண்டு தடறு - Hand granade Holster
இது இடுப்பில் அல்லது நெஞ்சில் சத்தாராக அணிந்து செல்வது
மேற்கண்டதை அணிந்து பூநகரி களம் செல்லும் புலிவீரன்
'மேற்கூறியதையும் மூன்று சோளியல்கள் கொண்ட தாக்குதல் கஞ்சுகத்தையும் அணிந்து மூன்றாம் ஈழப்போரின் ஒரு சமரில் ஆடும் புலிவீரி'
கீழ்க்கண்ட வீரனின் இடுப்பில் உள்ள இடைவார் போன்ற சோளியல்களை கவனிக்குக. இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை
பிற்சேர்க்கை(5 - 10 - 2020)
இனி கடற்புலிகளின் அதிரடிப்படையான கடற்சிறுத்தைகளால் அணியப்பட்ட தாக்குதல் கஞ்சுகங்கள் பற்றிப் பார்ப்போம். இந்த கஞ்சுகங்கள் யாவும் இறப்பர் கொண்டு உண்டாக்கப்பட்டவை ஆகும். வெளிப்புறம் நன்கு வழுவழுப்பாக இருக்கும். இவை வெளிறிய பச்சை மற்றும் கறுப்பு நிறங்களில் மட்டுமே இருந்தன. இவை மொத்தம் 4 வகை ஆகும்.
உபிகை(RPG) கஞ்சுகம்- 1
கைக்குண்டு செலுத்தி கஞ்சுகம்- 1
ஏ.கே கஞ்சுகம் - 4
பீகே கஞ்சுகம்- 1
இனி அவற்றின் தோற்றங்களைப் பார்ப்போம். கீழ்க்கண்ட அனைத்துப் படங்களும் 'உப்பில் உறைந்த உதிரங்கள்' என்ற உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் இருந்து நானெடுத்த திரைப்பிடிப்புகளாகும்.
தவிபு இன் உபிகை வகை - 1 ஐச் சேர்ந்த கஞ்சுகம் அணிந்து இடியனின் கடையாலில் நிற்கும் புலிவீரனை கவனிக்குக.
2)
3)
i)
முதுகுப் பக்கம்:-
இவரது முதுகில் தென்படும் பையானது கஞ்சுகத்தோடு இணைக்கப்பட்டுளது. அதற்கான வாய் மேற்பக்கத்தில் பல்லிணைப்பாக(zip) உள்ளது
→ மேலுள்ளது போன்ற கஞ்சுகம்தான் RPKக்கும். வேறுபாடு ஏதுமில்லை.
ii)
மேற்கண்ட கஞ்சுகத்தின் பின் பக்கம்:-
iii)
மேற்கண்ட கஞ்சுகத்தின் பின்பக்கம்:-
iv)வகை - 56 - 2 இற்கான கஞ்சுகம்
4) தரையில் பயன்படுத்தும் பீ.கே கஞ்சுகம் போன்றதுதான், இதுவும். இதேபோன்ற கஞ்சுகம் பச்சை நிறத்திலும் இருந்தது.
நீரிற்கான நடைபேசி(walki-talkie) உறை
புலிகள் நீருக்குள் நடைபேசியை கொண்டு செல்லும்போது, கீழ்க்காண்டவாறான உறையினை அதற்கு அணிந்திருப்பர். அதன் ஒரு பக்கம் தோற்றப்பெயர்வாகவும் இன்னொரு பக்கம் நல்ல தடிப்பான தோற்றப்பெயர்வு இல்லாததாகவும் இருந்தது.
'உட்பக்கம்'
'வெளிப்பக்கம்'
கரும்புலி அதிரடிப்படைஞர் தாக்குதல் கஞ்சுகம்:
இது மேற்கண்ட கஞ்சுகங்களில் இருந்து உருமறைப்புத் தோற்றத்தில் மட்டும் வேறுபட்டது ஆகும்; சோளியல்கள் எல்லாம் ஒன்றுதான். இவை கரும்புலிகளால் மட்டுமே அணியப்பட்டவையாகும்.
AK- கஞ்சுகம்
'தரைக்கரும்புலி கப்டன் உமையாள்'
2) RPK கஞ்சுகம்
'தரைக்கரும்புலி கப்டன் நளாயினி'
3) வகை - 56 கஞ்சுகம் & நுகர்பயன் பை
'தரைக்கரும்புலி மேஜர் சசி'
4) G3 கஞ்சுகம் & 3 லோ கொண்ட கஞ்சுகம்
'தரைக்கரும்புலி மேஜர் நிலவன் '
இவர்கள் நிகழ்பட படவத்திற்கு(video cam) கீழ்க்கண்டது போன்ற உறை அணிந்திருந்தார்கள்
'படம்: ஓ.அ. - 3 3ம் கட்ட நிகழ்படத்திலிருந்து'
அரிய வேறுபாடான கஞ்சுகம்
இது மிகவும் வேறுபாடான கஞ்சுகம் ஆகும். இக்கஞ்சுகத்தின் பின்பகுதியில் நுகர்பயன்பை ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது நான்காம் ஈழப்போரில் மட்டுமே அணியப்பட்டது ஆகும்.
செவ்வக முதுகுப் பை
தவளைப் பாச்சலின் போது பலாலி புகுந்த கரும்புலிகளில் ஒருவர் இவ்வாறான முதுகுப்பையினை கொண்டு சென்றிருந்தார்.
உசாத்துணை:
செ.சொ.பே.மு.
மேலுள்ள திரைப்பிடிப்புகளை வைத்தே எழுதினேன்
படிமப்புரவு
1 image from Stock Photos, Stock Images & Vectors
4 images from TamilNet
75% திரைப்பிடிப்புத்தான்
நிதர்சனம்
ஏனைய அனைத்திற்குமான மூலம் இந்நிறுவனமே
http://aruchuna.com
ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்