Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46979Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்8Points19683Posts -
அன்புத்தம்பி
கருத்துக்கள உறவுகள்8Points5636Posts -
P.S.பிரபா
கருத்துக்கள உறவுகள்6Points1866Posts
Popular Content
Showing content with the highest reputation on 07/06/21 in Posts
-
பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் & படைக்கலன்கள் - 150+ படிமங்களுடன்
தமிழரின் சமர் படைக்கலன்கள் : வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை படைக்கலங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது. தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும். கைக்கொள்படை/ கைப்படை: - (hand held weapons) கைவிடுபடை: எய்படை - எய்யும் ஆய்தங்கள் - அம்பு, சன்னகம், கவண்டை போன்றவை எறிபடை - எறியும் ஆய்தங்கள் - விட்டேறு, குந்தம், தோமரம் போன்றவை கைவிடாப்படை: குத்துப்படை - குத்தும் ஆய்தங்கள் - வேல், சூலம் போன்றவை வெட்டுப்படை - வெட்டும் ஆய்தங்கள் - வாள், கோடாரி போன்றவை அடுபடை - அடிக்கும் ஆய்தங்கள் - தண்டு, தண்டம், உலக்கை போன்றவை தடுபடை - மேற்வரும் படையை தடுக்கும் ஆய்தங்கள் - கிடுகு, தோல், மாவட்டணம் போன்றவை கைக்கொள்ளாப்படை: - ( siege & defense tools) ஆதிச்ச நல்லூர் ஆய்தங்கள் 17 ஆம் நூற்றாண்டு ஆய்தங்கள்: தோய்த்தல் - ஆய்தங்களைக் காச்சி நனைத்தல் துவைச்சல் (படைக்கருவி) - tempering (weapons) பணைத்தல் - AIM MISS இலக்கு, மச்சை - target ஆய்தப்பயிற்சி செய்யுமிடம் - சரம்புச்சாலை, பயிற்சிப்பாசறை, கிடை, களரி சரம்பு - ஆயுதப்பயிற்சி பணிக்கன் - படைக்கலம் பயிற்றுவிப்போன். சலகுபிடித்தல் - படைப் பயிற்சி எடுத்தல் (to practice drill) ஆய்தங்கள் வைத்திருக்குமிடம் - ஆய்தசாலை, படைவீடு, ஆய்தக் களஞ்சியம், துப்புளி. எஃகம் / துப்பு / படைக்கலம் / ஆய்தம்/ ஏதி/ தானை/ கடுமுள்/ கழுமுள் / படை/ கூர்த்திகை/ கார்த்திகை/ அரி/ பாரசவம்/ மேதி - பண்டையகால ஆய்தப்பொதுவினைக் குறிக்கும் சொற்கள். மேற்கண்ட ஆய்தங்களிற்கான கீழுள்ள விளக்கம், "போரியல்: அன்றும் இன்றும்" என்னும் நூலில் இருந்து எடுத்துள்ளேன். ஆய்தம் என்பது தமிழே! இச்சொல்லே பிற்காலத்தில் 'ஆயுதம்' என்று சமற்கிருததில் திரிந்தது (காண்க : செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி ) துப்பு - அறிவுடன் பயன்படுத்தத்தகும் வலிமை சான்ற துணைக்கருவிகள் தானை - காக்கும் தலைமை சான்ற ஆய்தங்களின் தொகுதி படை - படுக்கப்(கொலை) பயன்படுத்துவன படை எனப்படும் படைக்கலம் - பல படைகள் சேர்ந்தவை படைக்கலம் எனப்படும் எஃகம் - எஃகில் இருந்து செய்யப்பட்ட அனைத்து ஆய்தங்களும் எஃகம். ஏதி - கூர்மையும் விரைவும் கொண்ட துண்டாக்கும் ஆய்தங்கள் கார்த்திகை - தீயுமிள் ஆய்தங்கள் கூர்த்திகை- கைக்கொள்ளும் கூரிய ஆய்தங்கள் இவை, நான் எழுதிய விளக்கங்கள்: மேதி - எருமை போன்ற பெரும்பலங் கொண்ட ஆய்தம் பாரசவம் - கடும் கனமான ஆய்தங்கள் அரி - அரிக்கும் ஆய்தங்கள் அரி எனப்படும் கடுமுள் - மிகக் கூர்மையான முள் கொண்ட ஆய்தங்கள் கழுமுள் - கழுவின் முள் போன்ற ஆய்தங்கள் வல், வள், வசி , வை, அள், பூ, ஆர் - ஆய்தங்களின் கூர்மையின் பெயர் (sharpness, pointedness) கூர்வாங்குதல்/ கூர்ப்பிடுதல் - ஆய்தத்தைக் கூராக்குதல் கூர்மை பார்த்தல்- ஆய்தத்தின் கூர்மையைச் சரிபார்த்தல் முனை- ஆய்தத்தின் நுனி(tip of a weapon) அலகு - ஆய்தத்தின் கொல்லும் கூர்மை கொண்ட பகுதி (blade of a weapon or instrument) கரு - ஆய்தத்தின் பல் கழி - ஆய்தப்பிடி ஏறு - வாள், தேள்களின் எறிகை ஊறுபாடு - ஆயுதங்களாற் காயமுண்டாக்குகை விழுப்புண் - ஆய்தங்களாற் ஏற்பட்ட காயம். கீறுதல்- ஆய்தத்தால் அறுத்தல் கத்து - குத்துவெட்டு (இறந்து பட்ட வழக்கு. கிட்டிப்பு: பாவாணர்) அடைப்பம்- போர்க் கருவிகள் வைக்கும் பை/ பேழை. ஆய்தவுறை - தடறு/ படையுறை/ புட்டில்/ துதி இது தோலாலும், எஃகாலும் ஆனது ஆகும் காரோடன் - ஆய்தவுறை செய்வோன். வாளுறை - கட்காதாரம்/ வள்/ இடங்கம்/ சொருவு/ திருணகம் வாண்முட்டி, ஆசு, பரிஞ்சு - வாளின் பிடி (handle or hilt of a sword) கிண்ணி- வாளின் கைப்பிடி உறை (cover of the hilt of the sword) வாண்முகம் - வாளின் வாய் (edge of the sword) சொருவுவாள் - உறையினுள் வைக்கப்பட்ட வாள் ஆணி, புட்கரம், வாளலகு - வாளின் அலகு (sword blade) சிலுக்கு - வாளின் பல் (tooth of a saw) வெள்வாள் - ஒளியுள்ள கூரிய வாள் (sharp shining sword) தாராங்கம் - அரசனால் வீரனுக்கு நெடுமொழி கூறித் தரப்பட்ட வாள் ஒள்வாள்- படைக்கலம் இழந்த எதிரிக்கு சமராட எறியும் வாள் கத்திப் பிட்டல் - கத்திக் கூடு பாலிகை - கத்திப்பிடி தாங்கு - வேல் / ஈட்டியின் பிடி (The staff of the spear) பிடங்கு - வேல் / ஈட்டியின் குழைச்சு (The part of a lance to which steel is fixed.) தரங்கு - வேல் / ஈட்டியின் நுனி {The point of in spear (end tip)} இலை - வேல் / ஈட்டியின் அலகு (blade of a spear or lance or javelin) தலை - செண்டு அ கரளாக்கட்டை போன்றவற்றின் தலைப்பகுதி (head part of a mace or club) ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர்களால் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஓர் பெயர் தெரியாத ஆய்தங்கள்: 1. தமிழ் அகராதிகளில் முத்தலைச்சூலம்/ முக்குடுமி (பெரியபு. உருத்திர. 10) என்னும் வித்தியாசமான சூலத்தைக் குறிக்கும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சூலம் என்றால் நாம் அறிந்தது.. இரண்டு பெயர்களும் தலையினையே குறிக்கின்றன. மேலும் இந்த ஆய்தத்தினை தலையில் மணிமுடி போல தாங்கியபடி ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற ஓர் முத்திரையானது சிந்துசமவெளி ஆய்வில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இவை ஏதேனிலும் ஒன்று அதற்கான பெயராக இருக்கலாம் என்பது என் கருத்து. இதனைப் பயன்படுத்தும் விதம் 2. இவ்வாய்தத்தின் கூர்மையானது செவ்வக வடிவத்தில் உள்ளது. முன் பகுதியின் ஒரு ஒருபக்கத்தில் மட்டும் சிறிது வளைந்து சத்தாராக உள்ளது. இவ்வாய்தத்தின் பெயர் தெரியவில்லை! இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இவ்வாய்தமானது யப்பானியர்களின் கிகுசி யாரி என்னும் ஆயுதத்தைப் போல உள்ளது 3. நன்கு அகண்ட, ஒரு அடி பத்து அங்குல உயரம் கொண்ட வாள். ஒரு பக்கம் கூரான சிறிது வளைந்த வாள். ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது. இதன் பெயர் தளிமமாக இருக்கலாம் என்பது என் கருத்து! தளி→ தளிமம் - பரந்த தடிப்பான திண்ணை போன்ற நேர்த்தியான அமைப்பினை உடையது. பெயர் தெரியாத வேறு கைக்கொள் விடாப்படைகள் கீழ்க்கண்ட ஆய்தங்கள் இரண்டில், முதலாவது சென்னை அருங்காட்சியகத்தில் இருந்தும் இரண்டாவது ஓர் சேகரிப்பாளர் ஒருவரிடம் இருந்தும் எடுக்கப்பட்டவை. ஆகையால் இவை பற்றி அறிந்தவற்றை மக்கள் தெரிவித்துதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 'இதே போன்ற படையினைச் சிங்களமும் வைத்திருக்கிறது | திருநள்ளாறு சனீசுவரர் கோவிலில் உள்ள சனியின் சிற்பத்தின் கையில் இவ்வாய்தம் உள்ளது. | சனிசுவரர் படம் காண: Shani Is Depicted As A Male Deity In The Puranas' 'சனி பகவானின் கையில் இவ்வாய்தம் உள்ளதை ஒப்புநோக்குக' 'இதே போன்ற படையினைச் சிங்களமும் வைத்திருக்கிறது | இதே போன்ற வடிவமைப்பை உடைய ஆய்தங்கள் பாரதத்தில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.' 1)சத்தி/ சூல்/ சூலம் / காளம்/ நல்வசி- இதில் பல வகையுண்டு. எரிமுத்தலை - நெருப்பினைக் கொண்ட சூலம் "தாமேற் றழுத்திய சத்தி வாங்கி" (பெருங். மகத. 20, 63) "ஊனக மாமழுச் சூலம் பாடி"(திருவாச. 9:17) "குலிசங் கதைசூல்" (சேதுபு. தேவிபுர. 27) "நல்வசி, சூலம்" (பிங்.) 'நீலகிரியில் கிடைத்த 1500 ஆண்டுகள் பழமையான சூலங்கள்' 'கி.மு.1-ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலக் காசு | படிமப்புரவு : தகவலாற்றுப்படை' 'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | படிமப்புரவு : தகவலாற்றுப்படை' 'முற்காலச் சோழர் | கி.பி. 9ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | படிமப்புரவு : தகவலாற்றுப்படை'' 'சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி அருகே செங்கட்டு என்னும் ஊரில், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக்குழு" கல்வெட்டு | படிமப்புரவு: தஞ்சை ஆ.மாதவன்' 2)சிறு சூலம் கொச்சியில்(பழைய சேர நாட்டின் ஒருபகுதி) உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற படை. காம்பு மிக மிகக் குறுகியது. ஒரு பனையோலை விசிறியின் அளவே காம்புஇன் நீளம். 3)முக்கவர்தடி / முக்கப்பு / முக்கவர்சூலம்/ முத்தலைக் கழு- இதன் குத்தும் பகுதியானது சூலத்தின் குத்தும் பகுதியைக் காட்டிலும் நீளமாக இருக்கும். இது வேட்டைக்குப் பயன்படும் ஓர் ஆய்தம். தேவைப்பட்டால் களத்திலும் சுழலும். →எல்லா ஆய்தங்களும் களத்திலும் சுழன்றவைதான்! முத்தலைக் கழு - கழு போன்ற நீண்ட குத்தும் அலகூகளைக் கொண்ட சூலம். "பருமுக் கப்பினரே"(தக்கயாகப். 98) "முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில்மிகும் காராரிந்த மேனி" "கழு முள் மூவிலை வேல் முத்தலை கழு…சூலப் படை என வழங்கும்" (நிக.தி:7:2) "முத்தலைக் கழுக்கள் வீசுவன" (திருவிளை. திருநகர.24) 4)மூவிலைச்சூலம் / இலைத்தலைச் சூலம்/ முத்தலைவேல் - மூன்று வேலின் இலை போன்ற முனைகளைத் அலகாகக் கொண்ட சூலம். ''மின்னாரும் மூவிலைச்சூலம் என்மேற் பொறி'' (தி.4. ப.109. பா.1, 10) "இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்" (திருநீலகண்ட பதிகம், 3) "ஒண்கிடந்த முத்தலைவேல் ஒற்றியப்பா நாரணன்தன்" (திருஅருட்பா, திருவொற்றியூர், கொச்சகக் கலிப்பா, 27) 5)சூலவேல் சூலமும் வேலும் இணைந்ததே சூல வேல் எனப்படும். வடிவம் யாதெனில், சூலத்தின் நடு முள்ளிற்குப் பகரமாக வேலின் இலையும் பக்கவாடுகள் இரண்டிற்கும் இரு சூல முள்ளுமாக இருக்கும். "உருகெழு சூலவேல் திரித்து' (சங். அக.). 6)மூவிலைவேல் - வேல் என்பது ஓரிலை போன்றது. மூவிலை வேல் என்பது மூன்று இலைகளால் ஆனது. இதன் தாங்கானது படத்தில் காட்டப்பட்டுள்ளது போலல்லாமல் நல்ல நீளமாக இருக்கும். முருகனின் கையில் இவ்வாய்தம் உண்டு. "கழு முள் மூவிலை வேல் முத்தலை கழு…சூலப் படை என வழங்கும்" (நிக.தி:7:2) 7)வேல்/ உடம்பிடி/ ஞாங்கர்/ சத்தி/ எஃகம்/ குந்தம் : முக்கோண இலைவடிவ கூரிய முனை கொண்ட ஆய்தம். இதனை கையில் வைத்தே சண்டையிடுவர்... கூடியவரை எறிவதில்லை! இவற்றின் இலை வெற்றிலையின் வடிவில் இருப்பதால் வெள்ளிலை என்றும் அழைக்கப்பட்டது... வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! வேலின் கீழ் நுனி வட்டமாக முடியும்! வடிவேல் - மிகவும் கூர்மையான வேல் "உடம்பிடி/ ஞாங்கர்"(பிங்.) "குந்தமலியும் புரவியான்" (பு:வெ4:7); குல் > குன் > குந்து > குந்தம் 8)சிறியிலை எஃகம் - சிறிய ஒடுங்கிய இலையினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. "சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்" (புற, நாணின மடப்பிடி!, 308) 9)ஏந்திலை/ முகட்டுவேல் - இலை நீளமாக இருப்பது போன்ற வடிவினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை! ஏ → ஏந்து, முகட்டு = உயரம் இலை - இலை ஏந்திலை = நெடிய இலை ''ஏந்திலை சுமந்து'' - (பரிபாடல் - 17,2) "முகட்டுவேல் " - (செ.சொ.பே.மு) 10)தூரியம் - தூரிகை போன்ற ஒரு வகையான வேல் . இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை! (பிங்.) 11)முத்தகம் - முத்தக இலை போன்ற அமைப்பினை உடைய வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும். கூடியவரை எறிவதில்லை! hiptage madablota leaf - Google Search 12)அயில்/ அயில்வேல்/ நீள் இலை எஃகம் - கோரைப்புல் போன்று கொஞ்சமாக அகண்டு மிகவும் நீண்டிருக்கும் ஒரு வகையான வேல். "அயில்புரை நெடுங்கண்" (ஞானா. 33) ஆதிச்சநல்லூரில் கிடைத்த பலவடிவ அயில்வேல்கள்: 13)சங்கு / சங்கம்- இலையானது ஒரு பக்கம் வளைந்து இருக்குமான ஆய்தம். கூடியவரை எறிவதில்லை! சுல்- சல்- சழி - சருக்கு- சக்கு- சங்கு- சங்கம் "கழுக்கடை சங்கொடு ....விழுப்படையாவும்" (கந்தபுராணம், சகத்திரவாகு,7) ஆங்கிலேயர் காலத்திலும் இதன் பெயர் சங்கே! கைபிடியுடன் கூடிய சங்கு: 'இப்படம் ஒரு தமிழ் வர்மக்கலை ஆசானிடம் இருந்து கொள்ளப்பட்டது ஆகும். மேலதிக விளக்கத்திற்கு இவ்விடையின் கடைசியில் உள்ள நிகழ்படங்களைக் காணவும்' 14)பூந்தலைக் குந்தம் - பூப்போன்ற இலையினையுடைய குந்தம். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை. "பூந்தலைக் குந்தங் குத்தி"(முல்லைப். 41) கீழே உள்ள சிலையானது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். அதில் அதில் நடுவில் உள்ல சிலையின் வலது பக்கத்தில் உள்ள கையில் பூந்தலைக் குந்தத்தை காணலாம். 15)சவளம் - சவண்ட வாள் போன்ற தோற்றம் உடைய ஆய்தம். கூடியவரை எறிவதில்லை! இதில் இரு வகை உண்டு: சுவள்→ சவள் → சவளம் "அடுசவளத் தெடுத்த பொழுது"(கலிங். 424) சிறுசவளம்/ குந்தம் - சிறிய சவளம் பெருஞ்சவளம்/பீலி - நன்கு சவண்ட பெரிய சவளம். "பெருஞ்சவளம்,பீலி ". (பிங்.) 16) உழவாரம் - அலகானது கொஞ்சம் பார்பதற்கு நேராக்கி நிறுத்திய மண்வெட்டி போல இருக்கும். முன்பக்கம் மட்டுமே சப்பையாக்கப்பட்டு கூராக இருக்கும்! "கையிற்றிகழுமுழவாரமுடன்" (பெரியபு. திருநாவு. 77) 17) சல்லியம்- ஆணி/ முள் போன்ற அலகினை உடைய எறிபடை ! சுல் = குத்தற்கருத்து வேர். சுல் → சல் = கூரிய முனையுள்ளது, குத்தும் கருவி. சல் + இயம் = சல்லியம் → ஆணி/ முள் போன்ற கூரிய முனை கீழ்க்கண்ட சல்லியமானது தென்தமிழ்நாட்டு அரசர் ஒருவரால் பிரித்தானிய பேரரசர் ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதாகும் ஆதிச்சநல்லூரில் கிடைத்த சல்லிய இலை: 18)அரணம் - அரணத்தின் வடிவினை ஒத்த இலையினைக் கொண்ட வேல் . இதே பொருள் கொண்ட செருப்பு மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றினதும் வடிவத்தினைக் காண்க. அனைத்தும் ஒரே வடிவமே! (பிங்.) 19)வல்லயம் / குத்துவல்லயம் - இது அதிநீளமான ஓர் ஆய்தமாகும்; முனையில் கூரிய கூர்மையுள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஆய்தம். எட்டத்தில் நின்றபடியே எதிரியை குத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. இதனைக் கூடுதலாக யானைமேல் உள்ளவர்கள் பயன்படுத்துவார்கள்! "வல்லயத் தனிலுடைவாளில்" (கந்தபு. தருமகோ. 24) குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் 'aboriginal and Dravidian races of southern India ' என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும். அவ்வாறு கிடைத்த இரு படங்களையும் பிரித்து கொடுத்துள்ளேன். 20)பண்டி வல்லயம் - பன்றி வேட்டையிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படும் வேல். பன்றி> பண்டி | பண்டி என்பது பன்றி என்னும் சொல்லிற்கான ஈழத்து வழக்காகும் குறிப்பு : மேற்கண்ட தகவல் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் 'aboriginal and non-aryan tribes of central India and the andaman islands' என்னும் தலைப்பின் கீழ் எண் 29 இல் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும். 21)கழுக்கடை/ விட்டேறு/ கோல் -குச்சியில் நீளமான கூர்மையான முனையினைக் கொண்ட ஈட்டி. கழுக்கோல் என்பது தான் கழுமரம்.. இதை அதோடு போட்டுக் குழப்ப வேண்டாம்! "பிண்டி பாலங்கள் கழுக்கடைவாட்படை" (திருவிளை.திருமண.31) "புயமறவே விட்டேறு" (இரகு. நகர. 28) 22)நேரிசம்- நீண்ட முள்போன்ற மெல்லிய தலையினைக் கொண்ட ஈட்டி. இது எறிபடை வகையே. நேர்- நேரான இல்>இளி>இசி - முள் / குத்துவது அம் -விகுதி "மாகடைக்க னேரிசத்தான் மறைக்களிற்றை மதமடக்கி" (குற்றா.தல. தருமசாமி.74) ஆதிச்சநல்லூரில் கிடைத்த நேரிசம் 23)திருகுதடி- திருகுவது போல இருக்கும் ஈட்டி அலகு. இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. இது எறிபடை வகையே. 24)தோமரம்/ கைவேல்/ கப்பம்/ கப்பணம்/ கற்பணம் - சிறிய படை.. இது பார்பதற்கு சிறிய வேல் போன்று இருக்கும்.. இதே போன்ற சிலதினை முதுகில் ஓர் தூணி போன்று ஒன்றினை அமைத்து அதனுள் வைத்து செருக்களம் நோக்கி எடுத்துச் செல்வர். தேவைப்படும் போது எதிரி நோக்கி விட்டெறிவர் இல்லையேல் கையில் வைத்து சண்டையிடுவர். தற்கால கைத்துப்பினை(pistol) இதனுடன் ஒப்பிடுக. இப்படை வீரர்களை அக்காலத்தில் தோமரவலத்தார் என்றழைத்தனர். கை+வேல் = கைவேல் | கை - சிறிய "தோமரவலத்தர் " (பதிற்றுப். 54, 14) (பிங்.), கைவேல் களிற்றொடு போக்கி (குறள், 774) "கப்பனப் படையும் பாசமும்" (இராமா. கரன். 351); "கப்பணஞ் சிதறினான்" (சீவக. 285). 'அருகில் உள்ள சூலம் மற்றும் பொத்திரத்தை விட கைவேலானது சிறியதாக உள்ளதைக் கவனிக்கவும்| கி.மு.1-ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலக் காசு | படிமப்புரவு : தகவலாற்றுப்படை' 25)பொத்திரம் - பொள்- துளையிடுவது போன்ற திரம்- தகரைச்செடியின் கொத்துப் பூப்போல குண்டாக இருக்கும் கூர்மையான அலகு. "பொத்திரம் பாய்ந்து மாய்ந்தீர் "(சேதுபு. சங்காபாண்டி,41) 26)கவர்தடி/ கணையம்- இருபக்கமும் கூரான எறியாய்தம். (கருநா.) "தண்டமாலங் கணையங் குலிசாயுத மாதியாக" (கந்தபு.தாரக.157); "அம்பொடு கணையம் வித்தி" (சீவக.757) 27)இட்டி / ஈட்டி/ எறியீட்டி/ வண்டம்/ தரங்கம் - எறிபடை … ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும் ; ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும். இல் > இள் > ஈட்டு > ஈட்டி துளங்கு → தளங்கு → தரங்கு → தரங்கம் வண் - மிகுதி வண்டம் - மிகுதியாக இருக்கும் ஆய்தம்.. (வேலினை விட ஈட்டி / குந்தம் தானே போர்க்களத்தில் அதிகமாக இருக்கும்!) "வைவ ளிருஞ்சிலை குந்தம்" (சீவக. 1678) "தரங்கத்தாற் பாம்பைக் குத்தினான்" "வண்டம்" (சங்.அக.) "இட்டிவேல் குந்தங் கூர்வாள்"(சீவக.2764); (செ.அக.): 'ஐந்து தலைமுறைகளாக கிருஸ்ணகிரியில் காக்கப்பட்டுவரும் ஓர் பழங்கால ஈட்டி. இவ்வீட்டியின் தடியில் தேளின் படம் வரையப்பட்டுள்ளதை நோக்குக' 28) தொந்தம்/இரட்டைக்கருவீட்டி- நீண்ட கைபிடி காணப்படும். →செ.சொ.பே.மு சவளமும் தொந்தமும் விட்டேறும் (தக்கயாகப் 559. உரை). மன்னார், கட்டுக்கரைக் குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காசில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட இரட்டைக்கருவீட்டி கேடகத்துடன்: 'இரு நடுகற்களின் இடது கீழ்ப் புற மூலையை நோக்கவும். அங்கே இரட்டைக்கருவீட்டி உள்ளதை காணவும்' 29) சுடரிலை வேல்: இதை நீங்கள் முருகனின் கையில் பார்த்திருப்பீர்கள். அதன் விதப்பான பெயர்தான் இது. வேலின் இலையானது சுடரினைப் போன்ற உருக் கொண்டிருந்தால் அது சுடரிலை வேலாகும். 30)பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் பண்டைய தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது 'படம் சிங்களவரிடம் இருந்தே எடுத்தேன்' கீழே உள்ள சிலையானது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். அதில் அதில் நடுவில் உள்ள சிலையின் இடது பக்கத்தில் உள்ள கையில் காணலாம். 31)வகைப் பெயர் அறியில்லா வேல் ' சங்ககால-மலையமான் காசு | காலம் அறியில்லை | காசுப் படிமப்புரவு - தகவலாற்றுப்படை' 32)கணுவாளி- முள்கொண்ட முட்டி 33) வைர முட்டி - இடிப்பதற்கான முளைகளை உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆய்தம். 34)இடிக்கட்டை - மாட்டுக்கொம்பால் செய்த கையில் வைத்து சண்டையிடும் ஆய்தம். 35)கரசம்- குத்துவதற்கான கூர்களையும் இடிப்பதற்கான முளைகளையும் உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆய்தம். 36)பூங்கருவி / சன்னகம் - வாயில் வைத்து ஊதி கணையினை வெளியில் செலுத்தும் ஆய்தம். பூ - ஊதுதல் சன்னகம் - சன்னத்தினை தன்னகத்தே கொண்டது. சன்னம் - இதில் இருந்து வெளியேறும் கணையின் பெயர். 37)பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட வில்லம்பு:- 38) பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட கோடாரிகள்:- 39)பாரை → "பாரையின் றலைய" (கம்பரா.நாக.பாச.110.) 40)சங்கிலிக் கட்டை: பயன்படுத்தும் விதம் 41)கரலாக்கட்டை: சண்டையுமிடலாம்; உடற்பயிற்சியும் செய்யலாம். இதில் ஐந்து வகையான கரலாக்கட்டைகள் உள்ளன : புடிக்கரலை/ எழு(எழு - தூண்போல இருக்கும் ஓர் கணையம்) புயக்கரலை - ‘புயம்’ என்பது தமிழ்ச்சொல்லே! கைக்கரலை குத்திக்கரலை/ பரிகம் (பரிகம் - ஏற்றம் போல இருக்கும் ஓர் கணையம்) - குத்திப் போர்புரிவதே குத்து> குஸ்து> குஸ்தி என்றானது. தொப்பைக் கரலை 42) குண்டாந்தடி குண்டர்களிடம் இருக்குந் தடி குண்டாந்தடி எனப்பட்டது. இது திருநெல்வேலி கொள்ளையர்களால் பயன்படுத்தப்பட்டதாகும்:- குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India - No -65 என்னும் புத்தகத்தில் 'aboriginal and Dravidian races of southern India ' என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்து ஆகும். 43) மறத்தண்டு/ தண்டு/ தண்டாய்தம்/ தண்டம் : துள் - தள் - தண்டு - தண்டம் படத்தில் உள்ள வேலிற்கு அருகில் உள்ளது தான் தண்டு. தண்டு என்றாலே ஓரளவிற்கு மொத்தமான தடி என்றுதான் பொருள். எனவே இங்குள்ளதே சரியென நான் முன்மொழிகிறேன் 'படிமப்புரவு: காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்' இதில்…. மொத்தத்திலிருந்து போகப்போக ஒடுங்கி மெலிதாகும் வடிவமும் உண்டு:- 'இலகுளீசர், அரிட்டாப்பட்டி சிவன் குடைவரை, கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்' இவ்விறைவனின் கையில் இருப்பது ஒருவகைத் தண்டே. 'பாண்டியர் குடைவரைக் கோவிலும் அதில் காவலிற்கு நிற்கும் வாயில்காப்போர்' மேலே உள்ள இருவரின் கைகளிலும் ஒருவித தண்டம் உள்ளதை நோக்குக. கீழ்க்கண்ட தெய்வம் தண்டத்தை குத்தி நிறுத்தியுள்ளதை நோக்குக: 'பஞ்சவன் மாதேவீச்சுவரம், தஞ்சாவூர் AD-11th C' 'குன்னாண்டார் கோயில், புதுக்கோட்டை | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்' 44)ஏறுழ்/ வயிரம்/ நிலைச்செண்டு- இங்கு நிலைச் செண்டு என்பது கத(gada) என்றும் பரிச்செண்டு என்பது பரியினை(குதிரை) ஓட்டுவதற்கான செண்டாகவோ (ஐயனாரிற்கான ஊர்தியாக தமிழ்நாட்டின் சிற்றூர்களில் குதிரையும், ஊர்களில் ஆங்காங்கே யானையும் உண்டு.) அல்லது சுழற்றி ஏதேனும் ஒன்றினை ஓட்டுவதற்கான செண்டாகவோ கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் நிலைச்செண்டு இதுவெனவும், பரிச்செண்டு என்பது ஓட்டுவதற்கான செண்டு எனவும் கொள்க. 45) தேவதண்டம் - முனையில் ஆணிகளை உடைய தண்டம் 'படம் விளங்கிக் கொள்ள மட்டுமே' 46) முசலம்/ முசலி - பலராமனின் கையில் இருக்கும் இந்த அடுபடையே முசலமாகும். இது வடிவில் சிறிய தண்டம் போன்றதாகும். 'பரசுராமர், மைய அருங்காட்சியகம், சென்னை' - தமிழிணையம் - தகவலாற்றுப்படை ' 47) முளை - தலைப் பகுதியின் கோளகம் சிறியதாக இருக்கும். காம்பு சிறியது! 48)சீர்- ஒரே சீரானா ஆனால் தலைப்பகுதி மட்டும் சிறிது மெல்லிய குண்டான தோற்றத்தினைக் கொண்ட ஆய்தம். காம்பு சிறியது! 49)தடி: 50)உலக்கை/ காண்டம்- கீழே காட்டப்பட்டுள்ளதைப் போன்றுதான் இருக்கும். நீளமான வலிமையான கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட உலக்கை. காண்டம்: தண்டு போலத் திரண்ட கோல் 51) முசுண்டி / மட்டிப்படை - பெரிய சுத்தியல் போல இருக்கும் ஆய்தம். படத்தைப் பார்த்தவுடனே புரிந்திருக்கும். 52) முட்கரம்:- முசுண்டியின் தலையில் முட்கள் இருந்தால் அது முட்கரம் ஆகும் 53)பிண்டி/ வாலம்/ பீலித்தண்டு - மரத்தால் ஆன இவ்வாய்தத்தின் தலைப் பகுதியானது பார்ப்பதற்கு தண்டு போலவும் இதன் பிடங்கு நல்ல வலிமையான தலைமரத்தின் தொடர்ச்சியான தடியையும் கொண்டிருக்கும்.. பிள் -> பிண்டு-> பிண்டி = திரளை 54) அங்குசம்/ தாறு / இருப்புமுள்/ தாற்றுக்கோல்/ தார்க்கோல் / பரிக்கோல்/ தோட்டி/ குத்துக்கோல்/ குத்துக் காம்பு/ முட்கோல்/ சரணம்/ காழெஃகம்/ கொந்துகோல் - இதற்கு மேலும் பல பெயர்கள் உண்டு ! யானை மேல் அமர்ந்து போரில் ஈடுபடும்போது யானையை அடக்கப் பயன்படுத்தபடும் ஆயுதம். நெடுந்தோட்டி- பெரிய தோட்டி அரைமதியிரும்பு - பாதி நிலா போன்ற ஒருவகை யானைத் துறட்டியிரும்பு 55) பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட கேடயங்கள்: 56)வாள்/ ஏதி / சிரி/ நாட்டம் / தூவத்தி/ வஞ்சம்/ மட்டாய்தம்/ உவணி/ உடைவாள் - (இதில் பல வகையுண்டு ) ஒருபக்கம் மட்டுமே வெட்டும் தன்மை கொண்டது. கொஞ்சமாக வளைந்திருக்கும். கூர்வாள்/ தெளிவாள்/ வடிவாள் - மிகவும் கூரிய வாள் ஊருவாள் - என்னவகையான வாள் என்று தெரியவில்லை 'மேற்கண்ட படத்தில் இடது பக்கத்தில் இருந்து மூன்றாவதாக இருப்பது கூன்வாளாகும் | இடது ஓரத்தில் இருப்பது கத்திவாளாகும் | இவற்றில் கைடிபிடி இருந்தால் அவை கைபிடி வாள் என்றும் அழைக்கப்படும்' கைபிடிவாள்/ பிடிவாள்/ உடைவாள்- கை பிடியுள்ள வாள். ஒருபக்கம் மட்டுமே வெட்டும் தன்மை கொண்டது. கொஞ்சமாக வளைந்திருக்கும். படைவாள் - போர் வீரர் பெருமளவில் இவ்வாளையே பயன்படுத்தியதால் இப்பெயர் இதற்கு ஏற்பட்டது குறும்பிடி - இதில் குறுகிய பிடியினை உடையது குறும்பிடி எனப்பட்டது 57)கூன்/ கூன்வாள்/ தாத்திரம்/ வளை வாள்- நன்கு வளைந்த வாள் (கூனிய வாள்) → கம்ப., யுத்த காண்டம், 144 (9048 ஆவது பாடல்) 'இது சேரர்களால் பயன்படுத்தப்பட்டது | படிமப்புரவு: கேரளாவின் கொச்சி அருங்காட்சியகத்தில் இருந்து' மேற்கண்ட அதே வாள் தமிழ்நாட்டிலும் கிடைத்துள்ளது:- 'ஜமுனா மாத்தூர் நடுகல்' 58)கைவாள்/ கரவாள்/ கரவாளம்/ கரவாபிகை/ முட்டுவாள்/ ஈலி/ சிறுவாள்/ குறுக்கை - (small sword) கீழ்க்கண்ட சிறுவாளானது ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகும். இதற்கு கைபிடி இல்லை என்பதையும் காண்க. 59)நெளிவாள் / கோணம்-நெளிந்த(ஒருவகையில் கூனிய) வாள். சேர அரசர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்.. 60)கடுத்தலை - இவ்வாளானது வீரபத்திரரின் கையில் உண்டு. 'வீரக்கல் கிடைத்த இடம்: செம்பனூர், பெரும்பாலை, தருமபுரி மாவட்டம் | இங்கு கடுத்தலையின் படிமம் உள்ளதைக் காண்க' 61)மாவசி/ நெடுவசி - இருகையால் பிடித்துச் சண்டையிடும் ஆளடி உயரமுள்ள வாள். கீழ்க்கண்ட மாவசி ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகும். 62)பட்டயம்/ பட்டம்/ பட்டா- பட்டையான பரப்பைக் கொண்ட வாள். இருபக்கமும் வெட்டும் தன்மை கொண்டது. 63)பட்டாக்கத்தி- பட்டாவினை விடச்சிறியது 64)கையுறை வாள்/ கைப்பட்டா/ தொடுப்புக் கத்தி - பட்டை -> பட்டா (பட்டையான பரப்பக் கொண்டதால்) பட்டையான பரப்பைக் கொண்ட கையுறையுள்ள வாள். இருபக்கமும் வெட்டும் தன்மை கொண்டது. மற்ற வாள்களுடன் ஒப்பிடும் போது இது கொஞ்சம் மெல்லியது. இது உண்மையில் மராத்தியர்களால் உருவாக்கப்பட்டது. இதன் பயன்பாடு 17 மற்றும் 18 நூற்றண்டுகளில் மட்டுமே ஆகும் என்கிறது விக்கி. இது முகாலயர்களிற்கும் மராத்தியரிற்கும் ஆங்காங்கே எதிர்க் கிளர்ச்சியில் ஈடுபட்ட தமிழர்களால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். 65)கோல்வாள் - மிகவும் நீளமான அலகினை வாள் போல கொண்ட ஓர் ஆய்தம். இதற்கு தாங்கு உண்டு. அதுவும் கொஞ்சம் நீளமாக கோல் போல இருக்கும் . "படம்: ஆதிச்சநல்லூரில் இருந்து" 66)ஈர்வாள்/ அரி / வேதினம் - வாளின் அலகில் சிலும்புகள் இருக்கும். அவை சிலவேளை ஒருபக்கமும் இருக்கலாம் இல்லை இருபக்கமும் இருக்கலாம் 'இது வர்மக் கலை ஆசான் அருணாச்சலம் என்பவரிடம் இருந்து கிடைக்கப்பெற்றது ஆகும். ' 67)நவிர் / மழுவாள் - முள் போன்று மெலிதாக உள்ள வாள். முள் - மள் -மழு 68)இழிகை /குத்தீட்டி - அகண்டு போகப்போக குறுகி(இறங்கி) குத்தும் தன்மையினை முனையில் கொண்டிருக்கும் வாள். கிரிஸ்ணகிரியில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் ஒன்றிலும் இவ்வாள் உண்டு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை 69) பெயர் தெரியாத வாள் இது ராஜா கேசவனாதன் என்பவர் பயன்படுத்திய வாள். இதன் கைபிடியை வைத்துப் பார்க்கும் போது இது தென்னிந்திய வாள் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. கிடைத்த இடம் : பத்மனாதபுரம் அரண்மனை 70) நாந்தகம்/ தெய்யம் வாள்/ சுடர்வாள் - சேர அரசர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்.. இது சேரர்களால் பயன்படுத்தப்பட்டதால் 'நாயர் கோவில் வாள்' என்று அவர்களின் குலப்பெயர் இட்டு அழைக்கப்பட்டது. இன்றும் அங்கு புழக்கத்தில் உண்டு! "வெய்ய கதை சார்ங்கம் வெஞ்சுடர்வாள் -செய்ய" - மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -36 71) சொட்டைவாள் - இந்த வாளும் கிட்டத்தட்ட நாந்தகத்தின் அலகு போன்ற ஆனால் அந்த துருத்திய பாகம் அற்றதான, ஒரு வழுக்கைத்தலையினைப் போன்ற வடிவினை உடைய வாள். இது, இந்த அமைப்பினைத்தான் கொண்டிருந்ததாக 'சொட்டை' என்னுஞ் சொல் மூலமாக அறிய முடிகிறது. 72)கட்கம் - தமிழரின் போர்க்கடவுளான கொற்றவையின் (காளி) கையில் உள்ள வாள். சேர அரசர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்.. கள்+கு → கட்கு+அம் → கட்கம் → திரட்சி, உருண்டு திரண்டது போன்ற வாள். 73) கைச்சுரிகை/ சுரிகை/ கரவாதி - இது ஐயப்பனின் கையில் இருக்கும் ஓர் ஆய்தமாகும். சோழ அரசன் தித்தன் இதைச் சுற்றுவதில் சிறந்து விளங்கினான். இது கண்டத்தைவிடச் சிறியதாகும். 74)கண்டம்/கண்டகம் - இது சுரிகையினை விடப் பெரியதாகும். இது சேரர்களின் கண்டம்:- 'இது நீலகிரியில் கண்டெடுக்கப்பட்டதாகும்' 'இது நீலகிரியில் கண்டெடுக்கப்பட்டதாகும் | இதன் தலைப்பகுதி பெருத்தும் கீழே வரவர நடுப்பகுதி ஒடுங்கியும் பின் மீண்டும் அடிப்பகுதி பெருத்தும் இருக்கிறது. இது அரிய வகைக் கண்டமாகும் ' கீழ்க்கண்ட கண்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகும். 75) பெயர் தெரியாத வாள் இவை ஒரே வடிவ ஆனால் இருவேறு தோற்றத்தொடு (சோழரிற்கு ஒரு தோற்றம், சேரரிற்கு ஒரு தோற்றம்) கூடிய வாள்கள். இது சேரர்களால் பயன்படுத்தப்பட்ட வாள் இது பொலன்நறுவையில் கண்டெடுக்கப்பட்ட சோழர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்:- புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயிலில் உள்ள கொற்றவையின் கையிலும் சோழர்கள் பயன்படுத்திய இதே வாளின் வடிவம் உண்டு. 76) பெயர் தெரியாத வாள் இவை வடிவில் ஒரே வகையச் சேர்ந்தவையாக இருந்தாலும் தோற்றத்தில் வெறுபடுகின்றன. ஒன்று குள்ளமாகவும், மற்றொன்று நீளமாகவும் உள்ளது. இவற்றின் வகைப் பெயர் தெரியவில்லை. இவை சேரர்களால் பயன்படுத்தப்பட்ட வாட்களாகும். 77) பெயர் தெரியாத வாள் இது சேரர்களால் பயன்படுத்தப்பட்ட வாள் 78) பெயர் தெரியாத வாள் இதன் வாளலகு இருபக்கமும் அலைபோல இருக்கிறதுது. 'சென்னை அருங்காட்சியகத்தில் இருந்து கிடைத்தது' 79)கத்திவாள் - இது நேராகவும் கொஞ்சம் நீளமாகவும் இருக்கும். ஆனால் வாளில் உள்ள வளைவுகள் இருக்காது. அதேபோல வாளைப் போன்ற தடிமனும் மொத்தமும் இல்லாதிருக்கும். 80)முத்தப்பன் வாள் : இது சேரர்களால் பயன்படுத்தப்படும் ஓர் வாளாகும். இது முத்தப்பன் சாமியின் கையில் இருக்கும். இடைச்சுரிகை/ குற்றுடைவாள்- இடையில் வைத்திருக்கும் குற்றுடைவாள்கள் அனைத்திற்கும் வழங்கப்படும் பொதுப்பெயர்கள். கக்கடை, கட்டாரி, கொடுவாய்க்கத்தி, பீச்சுவா, முக்குத்துவாள், இரட்டைக் கத்தி , கைக்கத்தி/ பீச்சாங்கத்தி, சமதாடு , ஈட்டிக்கத்தி, எறிவாள் ஆகியவை எல்லாம் இதன் வகைகளே! 81)குத்துக்கத்தி (இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும்) 82)கொடுவாய்க்கத்தி -அதாவது முழுதும் வளைந்திருக்காமல் அறுவாளுக்கு இருப்பதுபோல நுனிப்பகுதி மட்டும் வளைந்திருக்கும் கத்தி. கொடுவாய் -வளைந்த வாய் 83)கைக்கத்தி/ பீச்சாங்கத்தி - முன் பக்கமும் ஒருபக்கம் மட்டுமே கூராக உள்ள கத்தி. இக்கத்தியானது ஈழத்தமிழர்களாலும் கொடவர்களாலும் பயன்படுத்தப்பட்டது. பீச்சாங்கத்தி என்னும் சொல் வவுனியாவில் வழக்கில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 84)சமதாடு - மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தும் வேலைபாடுகள் நிறைந்த ஒரு வகை இடைச்சுரிகை . 'மேல்காவனூர் வீரக்கல்' - தமிழிணையம் - தகவலாற்றுப்படை 85) ஈட்டிக்கத்தி -ஈட்டியினைப் போல அலகினைக் கொண்டதால் ஈட்டிக் கத்தி எனப்பட்டது. 86)முக்குத்துவாள் 87)இரட்டைக் கத்தி - இரண்டு அலகுள்ள கத்தி 88)கக்கடை/ கைக்கடி- படிமத்தில் உள்ளதுபோல சிறியதாக பல வளைவுகள் கொண்ட கத்தி. கை+கடி - கைக்கடி - கைக்கடை - சிறிய குத்தும் வாள் 89)எறிவாள்- எறியப்பயன்படும் வாள் 90)நாட்டான் வெட்டுக்கத்தி 91)சத்தகம் (இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .) 92) புல்லுச் சத்தகம் (இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .) 93)சாக்கத்தி குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் 'aboriginal and Dravidian races of southern India ' என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும். 94) கொங்கவெள்ளம்/ கொங்கவாள்/ கொங்கணக்கத்தி/கொங்கணம் கத்தி குல்- குள் - குங்கு - கொங்கு = வளைந்த தன்மையுடையது அணம் = சொல்லாக்க ஈறு இது தென்தமிழ்நாட்டின் மிகச் சில சிற்றூர்களிலும் சேரநாட்டிலும் பயன்படுத்தப்படும் ஒருவகை வாள்/கத்தியாகும். இதனை பயன்படுத்துவோர் 'கொங்கவாளர்' என்று சோழப் பேரரசின் காலத்தில் குறிக்கப்பட்டுள்ளனர் (கல்வெட்டுகளில் கொங்கவாளர் & கொங்கவாள் என்ற சொற்களுள்ளதைக் காண்க). குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India - No -61 என்னும் புத்தகத்தில் 'aboriginal and Dravidian races of southern India ' என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்து ஆகும். 95)கள்ளக்கத்தி - கைத்தடியினுள் மறைத்து வைக்கக் கூடிய கத்தி. 96)மடக்குக்கத்தி/ வில்லுக்கத்தி - ஒரு உறைபோன்ற ஒன்றுக்குள் மடக்கி வைக்கப்பட்டிருக்கும் கத்தி. 'படம் விளங்கிக் கொள்ள மட்டுமே' 97)மச்சுக்கத்தி இதனை வீச்சறுவாளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்! அதனைவிட இது சிறியது. மேலும் இதற்கு கொடுவாய் இல்லை. 98) குருத்துக் கத்தி (இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .) 99) ஓச்சன் கத்தி - சந்திரனின் ஒளியை தெறிக்கவிடும் என்று உவமைப்படுத்தப்பட்ட வாள். கீழே காட்டப்பட்டுள்ளதைப் போன்றுதான் இருக்கும். இவ்வாளானது பெரும்பாலும் பலியிடப் பயன்படுத்தப்பட்டது. சிலநேரங்களில் போர்க்களத்திலும் சுழன்றது. 100) கண்டர்கோடாரி / மீன்வெட்டுக் கத்தி பூண் - உலக்கை, கத்தி முதலியவற்றைப் பலப்படுத்த உதவும் உலோக வளையம். 101)முட்கத்தி (இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .) 102)சூர்க்கத்தி/ சூரி/ சூரிக்கத்தி/ சூருக்கத்தி - குத்துவதற்கோ அல்லது எறிவதற்கோ உகந்தது. நீள் முக்கோணத்தின் ஒரு பக்கத்தில் மட்டுமே அடியாகக் கொண்டு பிடிபோடப்பட்டிருக்கும் 103) பழக்கத்தி - பழம் வெட்டப் பயன்படும். (சேலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்) 104) அமுக்கொத்தி/ பாசவன் கத்தி - Tamil butchers knife 105)அரிவாள்/ குயம்/ கரவாதி- இது பொதுப்பெயராகும் மெலிதாய் அறுப்பது - அரிவாள் அரிவாள் என்பது மருவி, அருவா என வழங்கப்படலாயிற்று → தொழிலின் அல்லது வினையின் மென்மையைக் குறிக்க இடையின ரகரமும், வன்மையைக் குறிக்க வல்லின றகரமும், ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. 106)மட்டையரிவாள் 107) கொந்தரிவாள் - நீளமான பிடி கொண்ட கத்தி. 108)தேய்பிறையிரும்பு/ பிறையிரும்பு - தேய்பிறை போன்றதென்று உருவம் உருவகப்படுத்தப்பட்ட அரிவாள். முழு இரும்பால் ஆனது. 109)கருக்கரிவாள் / பன்னரிவாள் / கதிரரிவாள்/ கையரிவாள் - பற்கள் உள்ள அரிவாள் 110) புல்லரிவாள் / தாக்கத்தி/ கொய்த்தரிவாள் - மெல்லிய பற்கள் அற்ற அரிவாள். வயலில் வேலை செய்வோரால் புற்கள் வெட்டப்பயன்படும் அரிவாள். தாக்கத்தி என்றால் அரிவாள் அன்று.. புல்லரிவாளே தாக்கத்தி எனப்படும் 111)கிளிக்கத்தி- கிளிமூக்கு போன்று நுனி வளைந்த கத்தி ; நுனியில் வளைந்திருக்கும் கத்தி. 112) கும்மல் / குமல்- அகண்ட வாய் கொண்ட அரிவாள் 113) சிற்றரிவாள் - சிறிய அரிவாள். அலகானது அரிவாளுக்கு ஏற்றாற் போல் கொஞ்சம் வளைந்திருக்கும். Metropolitan Museum of Art 114)அறுவாள்/ புள்ளம் - வலிதாய் அறுப்பது - அறுவாள் → தொழிலின் அல்லது வினையின் மென்மையைக் குறிக்க இடையின ரகரமும், வன்மையைக் குறிக்க வல்லின றகரமும், ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. 115) கொடுவாள்/ கொடுக்கறுவாள் கொடு- கொடுக்கு = தலை வளைவு அலகின் தலைப்பகுதியில் வளைந்திருந்தால் அது கொடுக்கறுவாளாகும். இதைப் பேச்சுவழக்கில் அறுவாள் (பெரும்பாலும் எழுத்துப் பிழையால் அருவாள் எனப்படுகிறது) என்றே அழைக்கின்றனர். 116) தெய்வ அறுவாள் அழகர் கோவில் தெய்வ அறுவாள்:- காவல் தெய்வம் ஒன்றினது தெய்வ அறுவாள்:- 117) இளநீர் அறுவாள் - மெல்லியதான நேராக வந்து அலகு கொஞ்சம் பெருத்து கிளிமூக்குப்போல மெதுவாக வளைந்திருக்கும். தேவைப்பட்டால் கழுத்தையும் அறுக்கும். 118)வெட்டறுவாள் / வெட்டுவாள்/ கடாவெட்டி- அலகானது சதுரமாக வளைந்து நீண்டிருக்கும். ஆடு, கடா முதலியன வெட்டப்பயன்படும் வாள். 119)கொத்தறுவாள் - ஆடு, கடா முதலியனவற்றின் இறைச்சி வெட்டப் பயன்படும் அறுவாள். 120) வீச்சறுவாள் குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் 'aboriginal and dravidian races of southern India ' என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும். 121)பாளையறுவாள் / பாளைக்கத்தி/ சாணாரக்கத்தி/ ஈழவக்கத்தி இதனை சந்திரவாய்தம் என்றும் அழைப்பர்! 122) ஆமரக்கத்தி 123)ஆக்கறுவாள்/ அக்கறுவாள்/ பாசறுவாள்/ பாசுகராக் கத்தி/ அக்கரிவாள் ஆக்கறுவாள் → அக்கறுவாள் → அக்கரிவாள் செ.சொ.பே.மு. இருந்து……. →அரிதல் = சிறு கத்தியால் அல்லது அரிவாள் மணையலகால், காய்கறி முதலிய மெல்லியவற்றைச் சிறுசிறு துண்டுகளாக மென்மையாய் நறுக்குதல். →அறுத்தல் = பெரியவற்றையும் வன்மையானவற்றையும், இரண்டாகவோ பல பெருந்துண்டுகளாகவோ, சிறு கத்தியாலும் பெருவாளாலும் முன்னும் பின்னும் வன்மையாய் இழுத்தராலியும் கத்தரித்தும் வெட்டியும் துணித்தல். ஆதலால், அரிவாள் வேறு ; அறுவாள் வேறு. ஆகவே, அக்கறுவாளை அக்கரிவாள் என்பது தவறாம்! 124)காட்டுக் கத்தி (இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .) 125)கொக்கைச் சத்தகம்/ வாங்கரிவாள்/ வாங்கு/ அலக்கு/ சள்ளை/ துரட்டி - நீளமான கழியில் கட்டப்பட்டிருக்கும் சத்தகம். சுறட்டுக்கோல், கொக்கத்தடி- இழுத்து விழுத்தும் கோல். இதன் முனையில் சத்தகம் இருக்காது. மாற்றாக ஒரு 'சிறுதடி' இருக்கும். அச்சிறு தடியின் நடுப்பகுதி கொக்கத்தடியோடு பிணைக்கப்பட்டிருக்கும். 126)கம்பறாக்கத்தி - கம்பு அறுக்கும் கத்தி 127)பாசக் கயிறு/ பாசாங்கச்சை / நாண்வடம் / பழுதை/ தாமம்/ இரச்சு / தாம்பு/ தாமணி- குதிரை அல்லது யானையின் மேல் அமர்ந்திருக்கும் வீரரை கீழே இழுத்து விழுத்த பயன்படுவதோ அல்லது குதிரை அல்லது யானையின் மேல் அமர்ந்திருக்கும் வீரரைர் கீழே நிற்கும் வீரரை கொழுவி இழுத்துச் செல்லப் பயன்படும் கயிறு → நுனியில் கூர்மையுடையதும், வீசும்போது ஒலி எழுப்புவதுமான தர்ப்பைப் புல் போல அறுக்க வல்லதுமான கயிற்று வடிவிலுள்ள பாசக்கயிறு. 128)துண்டு/ கற்துணி/ வாலம் : வெறும் துணிதான்.. ஆனால் பலமான ஆயுதம். துணியின் இருபக்கமும் கல்வைத்து கட்டப்பட்டிருக்கும். கற்துணி ஓர் வாளினை வீழ்த்தும் விதம்: கற்துணி கொண்டு ஓராளை வீழ்தும் விதம்: 129)வளரி/ எறிவல்லையம்: 'வலது கீழ் மூலையில் இருப்பது எறிகொம்பு ஆகும்' 130)சக்கரம்/ திகிரி/ வளையம்/ எறிவளையம்/ வளை/ பாறாவளை/ நேமி / பரிதி/ வலயம்/ ஆழி/ ஒளிவட்டம் / படைவட்டம்/ சுழல்படை : 131)ஓகதண்டம் - இவ்வாய்தமானது எதிரியினைப் பிடித்து அடக்கி அமுக்குவதற்கு பயன்படுத்தபட்டது. துள் -> தள் -> தண்டி -> தண்டம் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலின் பின்புறம் கண்டெடுக்கப்பட்ட ஓகதண்டம். 132)ஆலாய்தம் - கலப்பை வடிவில் உள்ள ஆய்தம். 133)வகைபெயர், படைபெயர் அறியா ஒரு ஆய்தம். இது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்றதாகும். இந்திய துணைக்கண்டத்திலே இது போல் எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 134) கவண்/ கவணை/ கவண்டு/ கவண்டி/ கவண்டை/ ஒடிசில்/ கோபனை/ தழல்/ குளிர்/ சுண்டுவில்/ தெறிவில்/ உண்டைவில்(உண்டி வில்)/ கவட்டி வில் - 135)வீசு வில்/வள்ளி வில்/ சிங்காணி/ சிங்காடி - சிங்காணி/ சிங்காடி யைப் படையாகக் கொண்டிருப்போர் சிங்காணிக்காரர் என்றும் 'குத்திக் கொல்லர்' என்றும் அழைக்கப்படுவர். 136)சவுக்கு/ சவுகு / சாட்டை: 137) திருக்கைவால்- திருக்கையின் வால் போல இதன் கயிற்றில் முள்ளிருக்கும் 138)உருண்டை/ நாட்டு வெடிகுண்டு - உருண்டை என்றால் உருண்டை வடிவத்தில் செய்யப்பட்டிருக்கும் வெடிமருந்து.. அதான் நாட்டு வெடிக்குண்டென்போமே அதுதான் இது. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாரான காலப்பகுதியில் தமிழரால் பயன்படுத்தப்பட்டது. 139)வில்லுருண்டை- வெடிமருந்து கொண்ட அம்பினை செலுத்தும் வில்லுக்கு வில்லுருண்டை என்று பெயர். ‘உருண்டை என்றால் உருண்டை வடிவத்தில் செய்யப்பட்டிருக்கும் வெடிமருந்து.. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாரான காலப்பகுதியில் தமிழரால் பயன்படுத்தப்பட்டது. 140) வளைதடி/ துட்டுத்தடி/ எறிகொம்பு குலிசம் / உருண்டை/ உண்டை/ சம்பம் / நூறுகோடி/ வைரவாள்/ அரி - எந்தவொரு வலிமையான பொருளையும் உடைத்து விடும். இவ்வாய்தமானது பழங்கதைகளில் வரும் என்று கூறப்படுகீறது.. சிலப்பதிகாரத்தில் இது பற்றிய குறிப்புகள் உண்டு.. ஆனால் இவ்வாய்தம் போரில் சுழன்றதைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை. குறிப்பு: இவை மென்மேலும் தமிழ் ஆராச்சியாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இதிலுள்ள தகவல் செம்மைப்படுத்தப்பட்டு சரிதவறுகள் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டும். வர்ம / வளரி ஆய்தங்கள் :→ நிலக்கிழார்களால் பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களின் ஒரு தொகுதி:- அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது: கேரளாவில் உள்ள ஒரு ஆய்தக்கொட்டிலினுள்ளே சேரர்களின் பல்வேறுபட்ட வாள்கள் எட்டயபுரம் அரண்மனை இவரது விடையில் தமிழரின் பல்வேறு தோலியல் எச்சங்கள் பற்றிய படங்கள் உண்டு.. அவற்றினைக் காண்க: * பெரியசாமி ஆறுமுகம் - Helo ஆய்தங்கள் பற்றிய சில நிகழ்படத்(video) தொகுப்புகள் : https://youtu.be/aWZ1OJRPnBw?list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w https://youtu.be/-caTwm-qEWs?list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w https://youtu.be/vGCJdVA1M-4 மேலும் பார்க்க :- உசாத்துணைகள்: சூடாமணி நிகண்டு கழகத் தமிழ் அகராதி http://manidal.blogspot.com https://roar.media/tamil/main/history/ancient-weapons-we-totally-forgotten/ Thanjavur Kuthuvarisai Federation முருகா, குமரா, இறைவா, கந்தா, கடம்பா, கம்பராமாயாணம்- யுத்த காண்டம் புறநானூறு சொற்றொடர் பொருளகராதி பாவாணரின் சொற்பிறப்பியல் அகரமுதலி தொழில் நுட்பவியல்- பகுதி-2 Google Groups ஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் ! தமிழ்நாடு யாதவர் படை அந்தியூர்ப் பகுதியில் தொல்லியல் தடயங்கள் THE MARATHA WEAPONS OF WAR Google Groups ஆதவன் டிவ்- யூடியூப் தடம் - (watch?v=MylESGfvhvE) http://tamilconcordance.in/KAMBANconc-1-ta11.html A Description of Indian and Oriental Armour How was the ancient Indian military organized? When they fought Alexander, what types of units were they organized into? How large were the units? Who was in charge, and did they have captains and generals? மணி அகராதி pingkala nikaNTu of pingala munivar -part 2 (in tamil script, unicode format) https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/105963/24/24_appendix%208.pdf புறநானூறு - #308 பிங்கல நிகண்டு https://www.penmai.com/community/threads/5-000-year-harappan-stepwell-found-in-kutch-bigger-than-mohenjo-daros.77676/page-3 https://karkanirka.org/2008/12/30/knives/ யாழ்ப்பாணம் : : http://Jaffna.com 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகீஸ்வரர் சிலை, போர்வாள் கண்டெடுப்பு /watch?v=Mge6ni2kdVM&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=5&t=432s /watch?v=ni--Af6lkJY&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=3 Ethnographic Arms & Armour அறந்தாங்கியில் பழங்கற்கால கற்கோடாரி கண்டெடுப்பு! நிகழ்படங்கள் அருணாச்சலம் மணி - யூடியூப் படிமப்புரவு- கூகிள்- (படிமங்கள் பெருமளவான இணையத்தளங்களில் இருந்து எடுத்துள்ளேன் ) timelesstools.co.uk செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி www.disfrazzes.com Stock Photography Images Royalty Free at Can Stock Photo www.vikingsword.com www.pinterest.com Common Man Epic Armoury Unlimited A south Indian spearhead www.forge-du-gobelin.com Drop Pinterest roguish.wordpress.com www.swordsantiqueweapons.com Pinterest naked brain truth cannot become a hate speech against criminals Vikatan Amazon.com martial arts of tamil nadu கத்தி வகைகள் - 10 - Pinterest Pinterest தஞ்சை மாதவன் - twitter HowStuffWorks ourjaffna.com Mod DB Sivalaya Guru vazhi Thamizhar Veera Marabu kalai Kudam The Palmyra Pilgrim on the Time Trail - TN பனை அரிவாள் File:சமையலறைக்கருவிகள்(Kitchen Instruments).jpg Pinterest Wikipedia Deepeeka A south indian spear | Olympia Auctions Oriental-Arms Leoneshop Usa File:Kaduthila.jpeg - Wikimedia Commons South Indian sword, blade probably 18th century, hilt early 19th century saudi.souq.com BLACKSMITHING: making fish cutting 'knife' Indian black Smith Swords of the Forge Ethnographic Arms & Armour Dan Alluf on Twitter YPM ANT 235986 The Quint http://Pinterest.com RAJA RAJA CHOLA தமிழர்களின் ஆயுதம் வாள்கள் என் சேகரிப்பில் இருந்து Rajmukundan /watch?v=3SS0760sjlw http://www.penmai.com Metropolitan Museum of Art iCollector.com The Saleroom Antique Indo Persian South Indian Deccani All Steel Khanjar Dagger Bichwa Dagger (Katar). Date: 16th century; Geography: Thanjavur, Tamil Nadu; Culture: Indian Pin on Melee: Sharp Pin on indo persian weapons Living heritage of Sri Lankan Tamils Ancient Sri Lankan coins Oriental-Arms Ancient Sri Lankan coins - WordPress.com: Create a Free Website or Blog AntiquesNavigator Instructables LiveAuctioneers Historic Aviation Mr.Che News | TAMIL NEWS PORTAL Wallpaper Cave Early Indian fighting sword Swords and Antique Weapons for Sale - Antique Swords International Online Shopping site in India: Shop Online for Mobiles, Books, Watches, Shoes and More Kerala_Folklore_Museum Mediaeval Sword A heavy South Indian ceremonial pole arm head, cast with figures of female archers, goddesses, demon Indian; Madras - Spearheads (pandí ballam) Tamil Villages – Spiritual Heart of Tamil Nadu, Part 1–Update ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- மறைந்தும் மறையாத காவியங்கள்:ஈழத்துக் கொற்றவை
மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியம்- ஈழத்துக் கொற்றவை ஈழத்துக் கொற்றவைகள் தெய்வங்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு துயிலுமில்லங்களில் நினைவுக் கற்களோ கல்லறைகளோ இருக்காது. இவர்கள் வீரச்சாவடைந்தால் நினைவுநாட்களில் பெயர்களோ அடையாளங்களோ தகவல்களோ வெளிப்படுத்தப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் எந்தக் காலத்திலும் வெளிவராது. ஊரறியாமல் உறங்கும் உண்மைகள் இவர்கள். ஊமையாய் இருந்து ஒரு பெரும் சரித்திரத்தைப் படைத்துவிட்டுச் செல்வார்கள். கல்லாகிக் கிடக்கும் கடவுளர்களை மறந்துவிட்டு கல்லறை கூட இல்லாத எம்மின கொற்றவை தெய்வங்களை வணங்குவதே என்றும் போற்றுதற்குரியது. அவ்வாறாகப் போற்றப்பட வேண்டிய ஈழத்துக் கொற்றவைத் தெய்வங்களில் ஒருத்திதான் "சாதனா". பெயருக்கேற்ற வகையில் மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்து வரலாறாகிப் போவாள் என்று அவளின் பெற்றோர்கள் அன்று அவளுக்குப் பெயர் சூட்டும்போது நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். தமிழர் தலைநகரான திருகோணமலையில் தான் இவள் வீரப்பிறப்பெடுத்தாள். சாதனாவின் தந்தையார் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தாயார் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவளது இரண்டு வயது வரைக்குமான வாழ்க்கைப் பராயம் திருகோணமலையில் தான் இனிதே கழிந்தது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் வன்கவரப்பட்டுக் கொண்டிருந்த இவளது தந்தையின் சொந்த ஊரிலே தான் இவளது குழந்தைப் பருவத்தின் முதலிரண்டு ஆண்டுகள் கழிந்தன. இவளது குடும்பத்தினர் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக உதவிச் செயற்பாடுகளில் ஈடுபட்டதால் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்கள், காடையர்கள், இராணுவத்தினரின் கொடும் கெடுபிடிகளுக்கு ஆளானார்கள். இதனால் இவர்கள் அங்கு தொடர்ந்து வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சாதனாவின் தாயாரின் பிறப்பிடமான முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்று குடியேறினார்கள். அங்கு பெயர் சொல்லக்கூடிய மிகவும் செல்வாக்கான வசதிமிக்க குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் தான் அவளின் தாயின் குடும்பத்தினர். பல ஏக்கர் கணக்கான விளைநிலங்களும் மாட்டுப் பண்ணையுமென செல்வம் படைத்த, பாரம்பரியமிக்க விவசாயக் குடும்பத்தினராகவும் அவ்வூரிலேயுள்ள ஏழை எளியவர்கள் இல்லை என்று வந்து நிற்கும் போது அள்ளிக் கொடுப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினார்கள். சாதனா சிறுவயதிலிருந்தே மற்றச் சாதாரண குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேறுபட்ட சிந்தனையுடைய ஒரு அசாதாரண குழந்தையாகவே காணப்பட்டாள். வீட்டிலே அதிகாலையிலே எழும்பி தாயாருக்கு உதவியாகப் பால் கறப்பது. தந்தையாருக்கு உதவியாக வயல் வேலைகளுக்குச் செல்வது. அவ்வேலைகளை முடித்துவிட்டு வந்து பாடசாலை செல்வது என்று வீட்டிலே பொறுப்புமிக்க மனமுதிர்ச்சி கொண்ட ஒரு குழந்தையாகவே வளர்ந்து வந்தாள். முல்லைத்தீவு மாவட்டத்திலேயுள்ள மிகவும் பிரபல்யமான ஒரு பாடசாலையிலேயே சாதனா தனது கல்வியினை சிறுவயது முதல் கற்று வந்தாள். கல்வி, விளையாட்டு, ஓவியம் வரைதல், சிறுகதைகள், கவிதைகள் எழுதுதல் போன்ற பல்துறைகளிலும் ஆற்றல்மிக்கவளாக விளங்கியதோடு மட்டுமன்றி ஆசிரியரை மதித்து நடத்தல், சகமாணவரை அனுசரித்துப் போதல், அவர்களுக்கு ஏதாவது கஷ்டங்கள், பிரச்சனைகள் ஏற்படும்போது முதல் ஆளாக நின்று உதவி செய்தல் போன்ற காரணங்களினால் கல்லூரியிலேயே அனைவராலும் விரும்பப்படும் ஒரு மாணவியாகத் திகழ்ந்தாள். பொதுவாகவே அவளிடம் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்கு காணப்பட்டது. அதாவது வயது முதிர்ந்தவர்களைக் கண்டால் ஓடிப்போய் உதவி செய்தல், உணவின்றி கஷ்டப்படுபவர்களுக்கு தனது வீட்டிலிருந்து உணவு எடுத்துக்கொண்டு சென்று கொடுத்து உதவுதல் போன்ற இரக்கமான மனப்பாங்கு கொண்டவளாகக் காணப்பட்டாள். இந்திய இராணுவத்தினரால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், உயிர்க்கொலைகள், மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட எறிகணை வீச்சுகள், விமானக்குண்டு வீச்சுகளால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற காரணங்களினால் உளத்தாக்கமடைந்து "கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா...?அவர் இருக்கிறார் என்றால் இவ்வளவு அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறார்" என்று அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவாள். இதன் காரணத்தினால் தாயார் கோவிலுக்குச் சென்றுவரக் கூப்பிட்டால் "இராணுவம் இத்தனை அப்பாவி மக்களைக் கொல்லும் போது உந்தக் கடவுள் சும்மா தானே பார்த்துக் கொண்டிருந்தவர்....அதனைவிட தன்னின மக்கள் கொல்லப்படுவதைப் பார்த்து பொறுக்க முடியாமல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தன் மண்ணிற்காக மக்களிற்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களைக் கும்பிடலாம்" என்று மறுத்துக் கூறி இறைவழிபாட்டை வெறுத்து மாவீரர் துயிலுமில்லங்களுக்கே சென்று கல்லறைகளுக்கு மலர் வைத்து வழிபடுவாள். பாடசாலைகளில் தமிழீழ மாணவர் அமைப்பினால் ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்படும் முதலுதவி வகுப்புகள் மற்றும் சிரமதானப்பணிகள் போன்றவற்றிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தாள். இச்செயற்பாடுகளை மேற்கொள்ளும் போதுதான் சாதனாவுக்கும் போராளிகளுக்கும் இடையிலான உறவு ஆரம்பித்தது. போராளிகளின் தன்னலமற்ற உதவிபுரியும் மனப்பாங்கு, அவர்கள் மக்கள் மீது வைத்திருக்கும் தூய்மையான அன்பு, நீதி, நேர்மை, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடுகள் போன்றனவற்றின்பால் ஈர்க்கப்பட்டு தானும் ஒரு போராளியாக வேண்டும் என்ற விருப்பு அவள் மனதில் ஏற்பட்டது. அதன் காரணத்தினால் தனது 15 ஆவது அகவையில் 9 ஆவது வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்காகச் சென்றாள். அவளது வயதினையும் கற்றலின் முக்கியத்துவத்தினையும் கருத்தில் கொண்டு விடுதலைப்புலிகள் அமைப்பு க.பொ.த சாதாரணம் படித்து முடித்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்பியது. சாதனாவும் இடைப்பட்ட ஒன்றரை வருட காலப்பகுதியில் தான் கொண்ட உறுதியில் தவறாது தொடர்ந்து க.பொ.த சாதாரணம் பயின்று பொதுத்தேர்வில் தோற்றி தேர்வுகள் முடிந்த மறுநாள் மீண்டும் வந்து அமைப்பில் இணைந்துகொள்கின்றாள். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த பிறகு அவளது க.பொ.த சாதாரண பரீட்சை தேர்வு முடிவுகள் வெளிவருகின்றது. அந்த மிகவும் பிரபல்யமான பாடசாலையிலேயே அதிகூடிய பெறுபேறுகள் பெற்றவர்களின் பட்டியலில் அவளின் பெயரும் இடம்பெற்றது. அடிப்படைப் பயிற்சி முகாமில் அடிப்படைப்பயிற்சிகளை மேற்கொண்டு புடம் போடப்பட்டு ஒரு உறுதியான போராளியாக உருவாக்கப்படுகின்றாள். எந்தக் கடின பயிற்சிகளிலும் பின்வாங்காத உறுதி, இராணுவக்கல்விக் கற்கைநெறிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கும் விதம், சகிப்புத்தன்மை, இரகசியம் காத்தல் போன்ற ஒவ்வொரு திறமைகளும் அடிப்படைப் பயிற்சிமுகாமில் அவதானிக்கப்பட்டு பயிற்சிகள் நிறைவடைந்தவுடன் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்படுகின்றாள். அங்கு மறைமுகக் கரும்புலிகள் தொடர்பான நிருவாகப்பணிகளை மேற்கொள்ளும் போராளி ஒருவருக்கு உதவியாளராக சாதனா செயற்படுகின்றாள். முகாமில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவளாகவும் அறிவுத்தனமான உரையாடல்களில் மட்டுமே பங்கு கொள்பவளாகவும் தனது குடும்பம், அன்பு, பாசப்பிணைப்புகள் பற்றி எவரிடமும் கதைக்காத தன்மை கொண்டவளாகவும் தேசியத்தலைவர் சிந்திப்பது போலவே ஒவ்வொரு விடயத்தையும் ஆராய்ந்து நிதானமாக சிந்தித்து தெளிவான முடிவு எடுப்பவளாகவும் ஒரு மனமுதிர்ச்சியடைந்த போராளியாக அவள் காணப்பட்டாள். அவளிடம் ஓவியம் வரைதல், உருவப்பொம்மைகள் செய்தல் போன்ற தனித்திறமைகளும் காணப்பட்டன. தான் ஓய்வாக இருக்கும் போது எமது மக்களின் இன்னல்கள் போராட்டங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் வரைவாள். உபயோகித்து முடித்த பிளாஸ்ரிக்காலான வெற்று பொன்ட்ஸ் பவுடர் (ponds powder) போத்தல்களை பிளேட்டினால் (blade) வெட்டி பெண் முதல் மாவீர வித்தான 2ம் லெப்ரினன்ட் மாலதி, தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபன், முதலாவது தரைக்கரும்புலி மாவீரரான லெப்.கேணல் போர்க் போன்றவர்களின் உருவங்களை மிக அழகாகச் செதுக்கி உருவப்பொம்மைகளாக்கி தனது பணியிடம் முழுவதும் ஓவியங்களாலும் உருவப்பொம்மைகளாலும் அலங்கரித்து வைத்து அவர்களின் நினைவிலேயே தானும் மனதில் உறுதியேற்றியபடி வாழ்ந்திருந்தாள். அதைவிட சிறுகதைகள்,கவிதைகளாலும் தனது நாளாந்தக் குறிப்பேடுகளை நிரப்பி வைத்திருந்தாள். அங்கே பணிமுடித்து ஓய்வான நேரங்களில் சாதனா உலக புலனாய்வு அமைப்புகள் தொடர்பான நூல்களை விரும்பி வாசிக்கின்றாள். மேலும் அவ்வமைப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள், கேள்விகள், சந்தேகங்களை மிகவும் ஈடுபாட்டுடன் தனது பொறுப்பாளரிடம் துருவித் துருவிக் கேட்டுத் தெளிந்து கொள்கின்றாள். இதன் காரணத்தினால் அவளுக்கு மறைமுகக் கரும்புலிகள் அணியில் தானும் சேரவேண்டும் என்ற ஈடுபாடு வருகின்றது. அதனைத் தனது பொறுப்பாளரிடம் தெரிவிக்கின்றாள். இது தொடர்பில் அவளது தேடல், அதீத ஈடுபாட்டினைக் கண்ட பொறுப்பாளரும் துறைசார் முதன்மைப் பொறுப்பாளருக்கு அதனைத் தெரிவிக்கின்றார். அவரும் அவளை ஒருமுறை நேரில் சந்தித்துக் கதைத்துப் பார்த்து அவளது சுயதேடல், மனவுறுதி, விடுதலைப்போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் கொண்டிருந்த பற்று என்பனவற்றை இனங்கண்டு மறைமுகக் கரும்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட அனுமதியளிக்கின்றார். பின்பு சாதனா மறைமுகக் கரும்புலிகள் அணியின் சிறப்புப் பயிற்சிகள், கற்கைநெறிகளுக்குள் உள்வாங்கப்படுகின்றாள். அங்கு இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது ஒருவர் பற்றி இன்னொருவருக்கு தெரியக்கூடாது என்ற காரணத்தினால் வழங்கப்படும் தனிக் கொட்டில் வாழ்வு, உருமறைப்பிற்கான மூடிய ஆடைகள் எனச் சென்ற அந்தப் பயிற்சிக் காலம் என்பது அவளுக்குள் தன்னை மறைத்து, தன்னை ஒறுத்து, தமிழீழ விடுதலைக்காய் வெளியே தெரியாத வெளிச்சமாகிப் போகும் வாழ்விற்கு அவளை அணியப்படுத்தியது. மறைமுகக் கரும்புலிகள் அணியில் சாதனாவின் பயிற்சிகள் நிறைவுற்றதும் மொழிகள் (ஆங்கிலமொழி, சிங்களமொழி) தொடர்பான அறிவு பெறுவதற்கு அனுப்பப்படுகின்றாள். அங்கு சிங்களமொழி கற்பிப்பதற்கு ஆசிரியரை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு மாதம் தாமதமாகின்றது. அந்தக் காலத்தை வீணடிக்காது, ஒரு மாதத்திலேயே சிங்களமொழி நூல்களை படிப்பகத்திலிருந்து பெற்று சுயமாகவே கற்றுத் தேர்ச்சியடைகின்றாள். பின்பு சிங்களமொழி ஆசிரியரால் மொழி கற்பிக்கப்படும்போது ஏற்கனவே சிங்களமொழி நன்றாகக் கற்றுத் தேர்ந்த ஒருவரைப்போல அவளது மொழி தொடர்பான அதீத திறமையைக் கண்டு அவர் திகைப்படைகின்றார். இப்படியாக எதனையும் சுயமாகவே முயன்று கற்றுக் கொள்ளும் ஆற்றல் அவளிடம் காணப்பட்டது. பின்பு அவளுக்குரிய இலக்கு வழங்கப்பட்டு வெளிநடவடிக்கை ஒன்றிற்காக சிங்களமொழி பேசும் ஒரு இடத்திற்கு அனுப்பப்படுகின்றாள். அங்கே அவள் மறைப்பில் இருந்தகாலத்தில் தொழினுட்பக் கல்லூரியொன்றில் கல்விகற்று சான்றிதழும் பெற்றுக் கொள்கின்றாள். மக்களோடு மக்களாக எதிரிக்கு சந்தேகம் வராத மாதிரி சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு தனது இலக்கிற்குத் தேவையான தகவல்களையும் பெற்றுக் கொள்கின்றாள். க.பொ.த சாதாரணதர சிறந்த பெறுபேறு, தொழில்நுட்பக்கல்லூரியில் கிடைக்கப் பெற்ற தகைமைச் சான்றிதழ் என்பனவற்றைக் கொண்டு கொழும்பில் மிகப்பிரபல்யமான மேல்தட்டுவர்க்கத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்கும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இணைந்து கல்வியைத் தொடர்ந்துகொண்டு இலக்கினை நோக்கி அணியப்படுத்திக்கொள்ளுமாறு அவளை அவளின் பொறுப்பாளர் பணிக்கிறார். அவளும் அவ்வாறே செய்கிறாள். சாதனாவின் ஆங்கில மொழிப் புலமை, சிங்கள மொழிப் புலமை, அமைதியுடன் கூடிய அழகிய தோற்றம் போன்றவற்றினால் அவளில் எவருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அங்கே கற்கைநெறியினை மேற்கொள்ளும்போது சாதனாவுக்கு நிறைய மேல்தட்டுவர்க்க சிங்கள நட்புகள் கிடைக்கின்றன. எவருமே போகமுடியாத முக்கிய நகரப்பகுதிகளில் உள்ள பல சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லும் இடங்களான விளையாட்டரங்குகள், உயர்தரக் கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களுக்கு தனது சிங்கள நண்பர்களுடன் சென்று தனது இலக்கிற்கான தகவல்களை மிகவும் திறமையாகச் சேகரிக்கின்றாள். பாதுகாப்புக் காரணங்களினால் வெளிநாடு ஒன்றிலிருந்து மிகச் சுருக்கமாகப் பரிமாறப்படும் தகவல்களின் மூலமாக மட்டும் தன்னுடைய பொறுப்பாளருடனும் துறைசார் பொறுப்பாளருடனும் தொடர்பினைப் பேணியவாறு தனது இலக்கினை நோக்கிச் செயற்பட்டு வந்தாள். அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கிற்கான தகவல்கள் வாய்ப்புகள் மட்டுமல்லாது வேறு இலக்குகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் வெற்றியளித்த பல நடவடிக்கைகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் சாதனாவின் அதீத திறமையினால் அவள் சார்ந்த துறை மேலாளருக்கு அவளால் வழங்கப்பட்டன. இந்தப் பணிகளை மேற்கொள்ளும்போது சாதனா வெறும் 20 அகவையினையே அடைந்திருந்தாள். அவள் கல்வி கற்குமிடத்தில் அவளுடன் கூடப் படிக்கும் வகுப்புத் தோழன் ஒருவன் இவளது அழகு, உதவும் மனப்பாங்கு , கற்றலில் உள்ள திறமை இவற்றைக்கண்டு சாதனாவின் மேல் காதல் வயப்படுகின்றான். அவள் அதனை முதிர்ச்சியுடன் கையாண்டு அவனைத் தனது இனிய நண்பனாகவும் சகோதரனாகவும் ஏற்றுப் பழகிக்கொண்டு அவனின் உதவியாலும், அவனின் அறிவுக்கு எட்டாத வகையிலும், சந்தேகம்வராத வகையிலும் தனது இலக்கிற்கு தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொள்கின்றாள். பருவகால இளவயது, மனதை மாற்றக் கூடிய சூழல்கள், காதல் போன்றவற்றினைச் சந்தித்த போதும் தனது கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாது, சிறப்புப் பயிற்சிகளின் முடிவில் அவள் உறுதிமொழியேற்கும் போதிருந்த அதே உறுதியுடன் மிகத்தெளிவாக தனது சரியான இலக்கை நோக்கி செயற்பட்டுக்கொண்டிருந்தாள். சிங்களமொழி பேசும் இடங்களில் வசித்ததால் சாதனாவிடம் சிங்கள நாளிதழ்கள் வாங்கி வாசிக்கும் பழக்கம் காணப்பட்டது. அப்போது தான் சிங்கள மக்கள் அப்பாவிகள் இல்லை என்பதும் அவர்கள் தமிழ்மக்களுக்கெதிராக கடும் மனவெழுச்சி கொண்டிருந்ததும் கருத்தியல் ரீதியாக அவளுக்குப் புரிந்தது. மற்றும் வன்னியில் சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்களால் தனது மக்களும் போராளிகளும் கொல்லப்படுவதைக் கண்டு அவளது உள்ளம் உலைக்களமாகக் கொதித்தது. அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வெறி அவளது உள்ளத்திலே ஆழ வேரூன்றியது. அதற்குச் சரியான வழி சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் பயிற்சி முகாமிலேயே வைத்து அவர்களை அழிப்பது என்று உணர்ந்து அந்த இலக்குத் தொடர்பான தகவல்களையும் தானே முன்னின்று சேகரித்துத் தலைமைக்கு கொடுத்து அது தொடர்பான வெற்றித் தாக்குதல்களுக்கும் வழியமைத்துக் கொடுத்தாள். அவளுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த மேல்தட்டுவர்க்க சிங்கள நண்பி ஒருவரின் விருந்துபசார விழா ஒன்றிற்கு சென்றபோது அங்கே ஒரு இராணுவ அதிகாரியை அவள் தற்செயலாகக் காணக் கிடைத்தது. தென்தமிழீழத்தில் படுகொலைகளை முன்னின்று நடாத்தி எமது மக்களை நேரில் நின்று கொன்றுகுவித்த சிங்கள இராணுவ அதிகாரி தான் அவன் என தான் முன்னர் வாசித்துத் துன்பப்பட்ட தென்தமிழீழப் படுகொலைகள் தொடர்பான குறிப்புகளை மீள்நினைவூட்டி உறுதிப்படுத்திக்கொண்டாள். அவனைப் பற்றிய நெருக்கமான தகவல்களைத் திரட்டியதோடு அவனை அணுகக் கூடிய வாய்ப்பும் அவளுக்குத் தற்செயலாகக் கிடைத்தது. அவளது மனதில் ஈவிரக்கமற்றுப் பொது மக்களைக் கொன்று குவித்த அந்த இராணுவ அதிகாரியை அழிக்க வேண்டும் என்ற வன்மம் உருவாகுகின்றது. அந்த இராணுவ அதிகாரியை தானே சுட்டுக் கொல்ல தலைமையிடம் அனுமதி கோருகின்றாள். ஆனால் தலைமை அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கு வேறு என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் அது பாதிக்கப்படும் என்று விளக்கங்கூறி அதற்கான அனுமதி அவளுக்கு மறுக்கப்படுகின்றது. ஆனால் சாதனா தனது இலக்கினைப் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்று உறுதியளித்து அனுமதி வாங்கி அதற்கான ஆயுதத்தினை வாங்கி பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களைச் சேகரிக்கின்றாள். அவனது நாளாந்த நடவடிக்கைகள், பொழுதுபோக்குகள் என்பவற்றினை அவதானித்து தெளிவான இலக்கிற்காக காத்திருக்கின்றாள். ஒருநாள் அந்த அதிகாரி தனது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் நாளிதழ் கடையில் நாளிதழ் வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது அவரைச் சுட்டுக் கொல்லக்கூடிய தெளிவான இலக்கு அமைகின்றது. மிகத் திறமையாக இலக்குப் பிசகாது அந்த இராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடுகின்றாள். அன்று அந்தத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தது அவளுக்கு மிக்க மகிழ்வாக இருந்தது. அந்தக் கொலைக்கான சூத்திரதாரியை சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் மூலை முடுக்கெல்லாம் தேடித் திரிந்தார்கள். அவர்களால் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அவளின் பாதுகாப்பு கருதியும் அவளைப் போன்ற திறமையுடைய அனுபவமுடைய போராளியால் மட்டுமே இன்னும் பல போராளிகளை உருவாக்கலாம் என்பதைக் கருதியும் இந்தத் தாக்குதல் வெற்றியடைந்ததே போதும் அவளது இலக்கை வேறொரு மறைமுகக் கரும்புலியிடம் கையளிக்கலாம் என்று கருதியும் சாதனாவைத் திரும்பி வன்னிக்கு வருமாறு தலைமையிடமிருந்து பணிப்பு வந்தது. ஆனால் அவளோ தனது இலக்கை அடையாமல் திரும்பி வரமாட்டேன் என்று தனது இலக்கிற்காகக் காத்திருந்தாள். கடைசியில் அவளது உறுதியின் முன்னால் தலைமையால் ஒன்றும் செய்ய முடியாமல் அவளது இலக்கை அவள் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதியளித்தது. அவள் காத்திருந்த இலக்கும் ஓர்நாள் வந்தது. வெகுமகிழ்வுடன் அதற்குரிய ஆயத்தங்களுடன் இலக்கை நோக்கிச் செல்கின்றாள். ஆனால் அவளால் அதனை நெருங்க முடியவில்லை. திரும்பியும் செல்ல முடியாத நிலையில் தன்னையே உயிராயுதமாக்கி வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவி வீரவரலாறாகின்றாள். 16 வயதில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் எவருமே செய்ய முடியாத சாதனை படைத்து வரலாறான சாதனாவின் வரலாற்றைப் படிக்கும் ஏனைய போராளிகள் இன்னும் புடம் போடப்பட்டு உத்வேகத்துடன் உருவாகுவார்கள். சாதனா மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியமான புலனாய்வுப் போராளியாக என்றும் எல்லோரின் மனங்களிலும் வாழுகின்றாள். "உயிர் மின்னல் கீறும் ஒரு ஓவியம்... அது வரைகின்ற நேரம் பெரும் காவியம்... திரை மூடி வாழும் ஒரு ஜீவிதம்... வெளி தெரியாமல் ஆடும் உயிர் நாடகம்…. புரியாத புதிராக ஒரு தென்றல் போகும்... புயலாகும் நேரத்தில் இடியாக மாறும்... அழியாத கதையாகி வரலாறு மீளும்... அவர் நாமம் ஒரு காலம் தமிழீழம் பேசும்!" யாவும் கற்பனை அல்ல... -நிலாதமிழ்(தமிழ்நிலா).1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- நடனங்கள்.
1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointகருணா மேலும் ஷிமாலியிடம் பேசும்போது பிரபாகரனின் புலநாய்வுப் பொறுப்பாளர் தனக்குத் தெரியாமல் கிழக்கில் பல அரசியல்ப் படுகொலைகளை அரங்கேற்றி வந்ததாகவும், இதனால் இக்கொலைகள் தொடர்பாக சர்வதேசத்தில் இருந்து வந்த கேள்விகளுக்கும், நோர்வேஜியர்களின் தலைமையில் இயங்கிவந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் கேள்விகளுக்கும் தானே பதில்சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார். ஐக்கிய தேசிய முன்னணியின் மட்டக்களப்பு வேட்பாளரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்துப் புலிகள் கொன்றதையும், ஈ பி டி பி கட்சியின் உறுப்பினர் ஒருவரை வாழைச்சேனையில் வைத்து புலிகள் கொன்றதையும் இதற்கு உதாரணமாக கருணா குறிப்பிட்டிருந்தார். மேலும் கருணா ஷிமாலியிடம் பேசும்போது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின்மூலம் பொருளாதார உதவிகள் என்று வழங்கப்பட்ட எவையுமே கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படவில்லையென்று குற்றஞ்சாட்டினார். வெளிநாட்டுப் பணத்திலிருந்து அதி சொகுசு வாகனங்களை இறக்குமதிசெய்த புலிகளின் தலைவர்கள் வன்னியில் அவற்றில் பவனிவருவதாகவும், கிளிநொச்சியைச் சுற்றி பாரிய நகர அபிவிருத்தித் திட்டங்களை அவர்கள் மேற்கொண்டுவரும் அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தை முற்றாக அவர்கள் கைகழுவி விட்டார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். நோர்வேயிடமிருந்தும் சுவீடனிடமிருந்தும் புலிகளுக்கு வழங்கப்பட்ட பெருமளவு நிதி ஒருபோதுமே மட்டக்களப்பை நோக்கி வரவில்லையென்றும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரபாகரனுக்குத் தான் அனுப்பிய பல கடிதங்களுக்கு அவர் பதில் அனுப்பவில்லையென்றும் அவர் கூறினார். புலிகளின் தலைமைக்காக பல கடுமையான போர்க்களங்களைத் தான் வென்று கொடுத்திருப்பதாகவும், அதனால் பிரபாகரனிடம் இருந்து வரும் எந்தச் சவாலையும் தன்னால் முறியடிக்க முடியும் என்றும் கருணா பெருமிதத்துடன் கூறினார். அதேவேளை தனக்கோ அல்லது தனது வீரர்களுக்கோ பிரபாகரனினால் ஆபத்து ஏற்படுமிடத்து அதற்கான பொறுப்பினை சர்வதேசமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், ஆனால் இதற்குப் பதிலடியாக புலிகள் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை தான் முன்னெடுக்கப்போவதாகவும் அவர் எச்சரித்தார். இது இவ்வாறிருக்க கொழும்பில் உள்ள சர்வதேச மற்றும் உள்ளூர் அரசியல் மற்றும் ராணுவ அவதானிகளின் கருத்துப்படி கருணாவின் பிளவின் பின்னால் இந்தியாவே இருப்பதாக தெரிகிறது. தமிழ்ப் பிரிவினைவாதிகளுடன் நெடுங்காலமாகத் தொடர்புகளைப் பேணிவந்த இந்தியா தற்போதைய புலிகளின் தலைமையுடனான தனது பகைமையினையடுத்தே இந்தப் பிளவில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. கருணாவிற்குப் பின்னால் இந்தியா நிற்பதும், புலிகளின் தலைமைப் பீடத்தின் ரகசியங்கள் பலவற்றை அவர் அறிந்தவர் என்கிற வகையிலும் பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் இடையிலான இந்தப் போர் மிக நீண்டதாகவும், பாரிய அழிவினைக் கொண்டுவருவதாகவும் இருக்கப்போகிறது என்றும் அந்த அவதானிகள் தெரிவிக்கின்றனர். முற்றும். http://www.lankaweb.com/news/items04/060304-1.html1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointஎனக்கோ அல்லது எனது போராளிகளுக்கோ பிரபாகரன் கேடு விளைவிக்க நினைத்தால் நாம் நிச்சயமாகத் திருப்பித் தாக்குவோம், நாம் எதற்கும் அஞ்சப்போவதில்லை - கருணா அம்மான், கருணாவின் பின்னால் நிற்கும் இந்தியா - அரசியல் அவதானிகள் ! ஆக்கம் : வோல்ட்டர் ஜயவர்டென காலம் : கருணா புலிகளால் விலக்கப்பட்டு ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிக்கொண்டிருந்த காலம் இலங்கையின் பயங்கரவாத இயக்கமான புலிகளுக்குள் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவினை முதன் முதலில் வெளியுலகிற்குக் கொண்டுவந்த செய்தியாளர் சிமாலீ சேனநாயக்க கிழக்கு மாகாணத்தின் புலிகள் பிரிவின் தலைவர் கேணல் கருணாவை அண்மையில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போதே தன் மீதோ அல்லது தனது வீரர்கள் மீதோ பிரபாகரன் தாக்குதல் நடத்த முயற்சித்தால் தாம் நிச்சயம் திருப்பித் தாக்குவோம், நாம் அவருக்கு அஞ்சவில்லை என்று கருணா கூறினார். அண்மையில் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் வானொலிச் சேவை ஒன்றிற்கு பேட்டியளித்த ஷிமாலீ புலிகள் மீது திருப்பித் தாக்கும் முடிவுடன் கருணா இருப்பதாக தெரிவித்தார். பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு நிச்சயம் எதிர் நடவடிக்கைகளை எடுப்பேன் என்று கருணா கூறுவதுவது, இலங்கையின் தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த நாட்களில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களையும், பாரிய படுகொலைகளையும் எமக்கு நினைவுபடுத்துகிறது. குறிப்பாக புலிகள் இயக்கத்திற்கும், டெலோ இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின்போது அவ்வியக்கத்தின் தலைவர் சிறி சபாரட்ணம் உட்பட பல தலைவர்கள் புலிகளிடம் சரணடைந்தபின்னர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். கருணாவின் இந்த எச்சரிக்கையும் மிகவும் சிக்கலான நேரத்தில்த்தான் வந்திருக்கிறது. புலிகள் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை மறைத்து, ஜனநாயக அரசியலில் நாட்டம் கொண்டவர்களாக தம்மைக் காட்டுவதற்காக தமது பினாமிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் களமிறக்கி, தமிழ் மக்களுக்கான ஏக பிரதிநிதிகள் தாமே என்று காட்டுவதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் நிலையில் கருணாவின் இந்த எச்சரிக்கை வந்திருக்கிறது. பல தசாப்த்தங்களாக புலிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் தற்போதைய பிளவு அமைந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புலிகளின் தலைமைக்கு எதிராகத் துரோகமிழைத்தார் என்கிற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மரண தண்டனை வழங்கப்பட்ட புலிகளின் முன்னாள் பிரதித் தலைவர் மாத்தையாவின் பிளவினைக் காட்டிலும் மிகப் பாரியளவு தாக்கத்தினையும், அழிவையும் கருணாவின் விலகல் ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மாத்தையாவின் துரோகத்தின்போது அவர் வன்னியில் இருந்ததனால் அவரை புலிகளால் இலகுவில் தண்டிக்க முடிந்ததென்றும், ஆனால் கருணாவோ வன்னிக்கு வெளியில், தனது வீரர்களின் அதியுச்ச பாதுகாப்பில் இருப்பதால் பிரபாகரனினால் அவரை நெருங்கக் கூட முடியவில்லை என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர். கருணாவை கிழக்கு மாகாணத்திற்குச் சென்று சந்தித்த முதல்ப் பத்திரிக்கையாளரான சிமாலீ சேனநாயக்கவை பி பி ஸி யின் சிங்களச் சேவை சந்தேஷய பேட்டி கண்டது. அப்பேட்டியில் ஷிமாலி பேசும்போது பிரபாகரன் தனது சொந்தத் தேவைக்காக கிழக்கு மாகாணப் போராளிகளைப் பலிகொடுத்து வருகிறார் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். கருணா மேலும் கூறும்போது கிழக்கிலிருந்து ஆயிரம் போராளிகளை வன்னிக்கு அனுப்பிவைக்குமாறு பிரபாகரன் தன்னிடம் கேட்டபோது தான் உடனேயே மறுத்துவிட்டதாகவும், வடமாகாணத்தில் நீங்கள் சகல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு கிழக்கு மாகாணப் போராளிகளைப் பலிகொடுக்க முடியாது என்று தான் கூறியதாகவும் கூறியிருக்கிறார். கருணா மேலும் பேசும்போது பிரபாகரனின் உயிரைக் காப்பதற்காக இதுவரையில் 2300 போராளிகள் பலியிடப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.1 point- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
https://www.facebook.com/100022504966488/videos/468795410547287/0 pointsImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.