Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    8910
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    88020
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20026
    Posts
  4. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    5633
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/08/21 in Posts

  1. இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய செய்திகளை தமிழ்த் தேசிய ஊடகங்களிலிருந்தும், சிங்களத் தேசிய ஊடகங்களிலிருந்தும் இணைத்துவருகிறேன். இதில், சிங்களப் பேரினவாத ஊடகங்களிலிருந்து நான் பதிவுகளை இணைப்பதன் நோக்கம், கருணாவின் துரோகம் சிங்களவர்களுக்கு எந்தவகையில் உதவியது, எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டத்தான். ஆனால், இதற்கான தேடல்களின்போது கருணாவுக்கு சிங்களவர்களால் வழங்கப்பட்ட முக்கியத்துவம் மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, எப்படியாவது கருணாவின் துணைகொண்டு அழித்துவிடவேண்டும் எனும் அவாவும், தமீழீழத் தேசியத் தலைமையினை முடிந்தளவிற்குத் தரம் தாழ்த்தி, கொச்சைப்படுத்தி, எமது போராட்டத்தை வெறும் கொலைகளுக்கான போராட்டம் என்று நிறுவும் கைங்கரியமும் தெரிந்தது. கருணா செய்த துரோகம் உண்மையானது. இதனை எவரும் மறுக்க முடியாது. இன்று அவரின் அரசியலினை ஆதரிப்பவர்களும், "பழையவற்றை ஏன் பேசுகிறீர்கள்" என்கிற கேள்வியோடு கடந்துபோக எத்தனிக்கிறார்களே ஒழிய, அவர் செய்த துரோகத்தினை மறுக்கவில்லை. ஆகவே, கருணாவின் துரோகத்தில் நான் புதிதாக நிரூபிக்கவென்று ஏதாவது இன்னமும் இருக்கிறதா என்ற கேள்விக்கு நான் வந்திருக்கிறேன். இதற்கு உங்களின் கருத்துக்கலைப் பகிர்ந்தால், தொடர்ந்து எழுதுவதா அல்லது இத்துடன் இதனை முடித்துக்கொள்வதா என்கிற முடிவிற்கு நான் வரமுடியும். இதனை எவரும் பெரிதாகப் படிப்பதில்லையென்றால், முடித்துவிடுவதே சரியானதாக இருக்கும். இதனால் தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஏற்படும் மனவழுத்தமும் இதற்கு ஒரு காரணம். ஆனால், இது முக்கியமானதுதான் என்றால், தொடர்ந்து எழுதுவதில் எனக்கு பிரச்சினையில்லை. நன்றி உங்கள் அனைவருக்கும்.
  2. ரஞ்சித் தயவு செய்து எழுதுவதை நிறுத்தாதீர்கள். அத்துடன் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு சிறு புத்தகமாக வர வேண்டும். இப்போதிருக்கும் தொழில் நுட்பத்தை வைத்து ஈ புத்தகமாக கூட வெளியிடலாம்.
  3. இப்பவும் ஒன்றும் தாமதமாகி விடவில்லை.....நாலு பலூனை தொங்கவிட்டு சவர்க்காரம் போட்டு தண்ணி அடிச்சுட்டு கத்தியால் வழிச்சு பாருங்கள் ......பலூன் உடையாமல் வந்தால் தயங்காமல் தொழில் தொடங்கலாம்.......! 😁
  4. ரஞசித் இதை நிறுத்தாதீர்கள்..! நான் தொடர்ந்து வாசிக்கின்றேன்! கருத்தெழுதி …இதை ஒரு போர்க்களமாக்க விருப்பமில்லை! தொடருங்கள்…!
  5. ஈழ பிரியன் அண்ணா சொன்னதுபோல இதை ஒரு புத்தகமாக வடிவமைப்பது நல்லம் என்று எண்ணுகிறேன் இதில் இருப்பதுபோல திகதி வாரிய செல்வது நடந்ததை அவ்வாறே பதிவு செய்ய உதவும் எனவும் நம்புகிறேன்
  6. எமது தாய்நாட்டின் போற்றுதற்குரிய, எமது நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் பெருஞ்சக்தியான பெளத்த மகா சங்கத்தினர் மற்றும் ஆளும் சுந்தந்திர ஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னாணி, சிஹல உறுமய மற்றும் பொதுவான சிங்கள மக்களின் வேண்டுகோளாக இருந்துவரும் இந்த நாட்டினைப் புலிப் பயங்கரவாதிகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் நோக்கில் செய்துகொள்ளப்பட்ட நோர்வேஜியர்களின் தலைமையிலான பேச்சுவார்த்தையினை உடனடியாக நிறுத்தவேண்டும் எனும் அதே கோரிக்கையினை கருணா அம்மானும், அவரின் பின்னால் திரளும் மக்களும் முன்வைத்துவருகிறார்கள் என்பது மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படவேண்டும். இதுவரை காலமும் இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருகிறோம் என்கிற போர்வையில் நோர்வேஜியர்கள் ஆடிவரும் நாடகத்தின் மூலம் இதுவரையில் பயங்கரவாதப் புலிகளின் நாசகாரத் தாக்குதல்களையோ, அரசியல்ப் படுகொலைகளையோ தடுக்க முடியாமல்ப் போயுள்ளதுடன், அந்தப் பயங்கரவாதிகளை ஜனநாயக நீரோட்டத்தினுள் கொண்டுவந்து அனைத்துக் கட்சி அரசியலில் பங்குபற்றும் நிலையினையோ இதுவரை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் புலிப் பயங்கரவாதிகளுக்குப் பக்கபலமாக நின்று, அவர்களை ஆதரிப்பதைத்தான் இந்த நோர்வேஜியர்களின் சமதானப் பேச்சுவார்த்தை நாடகம் இன்றுவரை செய்துவருகிறது. கருணா அம்மான் அண்மையில் இப்பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளும் அனைத்துத்தரப்பினருக்கும் எழுதிய பகிரங்கக் கடிதத்தில் நோர்வேஜியர்களால் புலிப் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்ட 250,000 பிரித்தானியப் பவுண்ட்ஸ், கனரக ஆயுதங்கள், நவீன இலத்திரனியல் சாதனங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் என்பனவற்றை புலிகள் தமது அரசியல் பகையாளிகளைக் கொல்லவே பாவித்து வருகின்றனர் என்று நோர்வேஜியர்களின் உண்மையான பின்னணியைப் போட்டுடைத்திருக்கிறார். கருணா அம்மானின் தகவல்களை நோக்கும்போது, நோர்வேஜியர்கள் தொடர்ச்சியாகவே புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்து வருவதோடு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானத்தையும், தமிழர்களுக்கான விடுதலையினையும் எடுத்துத் தருவதற்குப் பதிலாக, புலிப்பயங்கரவாதிகளைத் தொடர்ச்சியாகப் பலப்படுத்தி, தமிழர்களை இன்னும் இன்னும் அவர்களின் சர்வாதிகாரப் பிடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கருணாவின் இந்த மக்கள் நலன் சார்ந்த சிந்தனையே அவரது அரசியல் முதிர்ச்சியினைக் காட்டுகிறது. ஆகவே அவரது தலைமையின்கீழ் இலங்கையில் சமாதானத்தை விரும்பும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சுதந்திரமான, சுபீட்சமான வாழ்வினை முன்னெடுப்பதன் மூலம், இதுவரையில் தமிழர்களுக்கு அழிவினையும், இழப்பினையும் மட்டுமே தந்துகொண்டிருக்கும் கொலைகாரப் பயங்கரவாதியான பிரபாகரனையும், புலிகளையும் முற்றாகப் புறக்கணித்து நாட்டின் பெரும்பான்மையினத்துடன் ஒருமித்துப் பயணிக்க முன்வரவேண்டும். உலகின் புற்றுநோயாக மாறிவரும் பயங்கரவாதத்தினையும், தீவிரவாதத்தினையும் முற்றாக அழித்து, உலகினை காக்கும் நோக்கத்தோடு புதிய உலக ஒழுங்கு செயற்பட்டுவரும் இன்றைய நிலையில், இலங்கையில் நோர்வேஜியர்கள் செய்துவருவது இந்தப் புதிய உலக ஒழுங்கிற்கு முற்றிலும் முரணான ஒரு நாசகார நடவடிக்கையென்றால் அது மிகையில்லை. அதுமட்டுமல்லாமல் நோர்வேஜியர்களைத் தமது கவசமாகப் பாவித்துவரும் புலிகள் , அவர்கள் முன்னிலையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி, இன்றுவரை மிலேச்சத்தனமான படுகொலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருகிறேன் என்கிற பெயரில் அவர்களைத் தொடர்ச்சியாக அழித்துவரும் பிரபாகரனுடன் ஒப்பிடும்போது, வடக்குக் கிழக்கில் வாழும் சமாதானத்தினை விரும்பும் தமிழ் மக்களுக்காகன உரிமைகளுக்காகவும், அமைதியான வாழ்வுக்காகவும் குரல்கொடுக்கும், மென்போக்கான, ஜனநாயக அரசியலை நேசிக்கின்ற, இலங்கைத் திருநாட்டின் நலனில் உண்மையான அக்கறைகொண்ட கருணாவின் இன்றைய வேண்டுகோளினை நாம் அனைவரும் செவிமடுக்க வேண்டும். அத்துடன், பிரபாகரனையும் அவரது பயங்கரவாத இயக்கத்தையும் முற்றாக அழிப்பேன் என்று திடசங்கற்பம் பூண்டிருக்கும் கருணா, அதேவேளை தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்குமே அமைதியையும், சமாதானத்தினையும், ஒற்றுமையினையும் கொண்டுவருவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். கருணாவின் இந்த நிலைப்பாடு நாட்டின் பெரும்பான்மையின மக்களின் ஏகோபித்த ஆதரவினையும், வரவேற்பினையும் கொண்டிருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. முற்றும் http://www.lankaweb.com/news/editorial/251004-1.html
  7. தமிழர்களின் ஏக தலைவனாக கருணாவை முன்னிறுத்தும் சிங்களப் பேரினவாதம் மூலம் : சிங்கள இனவாத கல்வியாளர்கள் தளமான லங்கா வெப்பின் ஆசிரியர் தலையங்கம் காலம்: கருணா சிங்களப்பேரினவாதத்தின் கட்டளையின்படி சமாதான பேச்சுவார்த்தைகளைத் தடம்புரளச் செய்யும் நாசகார வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த காலம். இலங்கையில் தமிழர்களுக்கான விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு மொத்த நாட்டையுமே புரட்டிப்போட்டு வந்த பயங்கரவாதிகளின் தலைவனான பிரபாகரனின் அந்திம காலம் நெருங்குவது, தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கைக்குமே பெரும் உவகையினை கொண்டுவரப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை பிரபாகரனின் அழிவை உறுதிப்படுத்தியபடியே தமிழர்களுக்கென்று புதியதாக ஒரு தலைமைத்துவம் உருவாகி வருகிறது என்பதும் நாம் நம்பிக்கையுடன் பார்க்கவேண்டிய இன்னொரு விடயமாகும். கருணா அம்மான் தலைமையில் உருவாகிவரும் இந்த புதிய ஏக தமிழ் தலைமைத்துவம், தமிழ் மக்களுக்கான நண்மைகளை சிங்கள பெளத்த பெரும்பான்மையினத்தினை சாந்தப்படுத்தி, இலங்கை ஒரு முழு சிங்கள பெளத்த நாடு என்பதனை ஏற்றுக்கொண்டு, முழு நாட்டின் மீதான சிங்களவர்களின் அதிகாரத்தினை ஏற்றுக்கொண்டு, அவர்களின் இன, மத அதிகாரத்தினை பாதிக்காத வகையில், ஒன்றுபட்ட நாட்டினுள், அதன் பூகோள இஸ்த்திரத்தனைமையினையும் அதன் இறையாண்மையினையும் பாதிக்காதவாறு, அரசியல் யாப்பிற்கு சகலவிதத்திலும் உட்பட்டு பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அது உறுதிப்படுத்தியிருக்கிறது. பிரபாகரன் எனும் யுத்த வெறிபிடித்த கொலைகாரப் பயங்கரவாதியின் ஈழம் எனும் மாயைக்குள் பலவந்தமாக திணிக்கப்பட்டு, அந்த மாயையினை எதிர்ப்போரெல்லாம் அழிக்கப்பட்டு, சுதந்திரம் அற்று இருந்த தமிழ் மக்களுக்கு, ஒரு மென்போக்கான, அரசியலை நன்கு உணர்ந்துகொண்ட, சிங்களவர்களை அனுசரித்து, அவர்களின் இந்த நாட்டின்மீதான கேள்வியற்ற அதிகாரத்தினை முழுமையாக ஏற்றுக்கொண்டு, மகிழ்வாக சேர்ந்து பயணிக்கக்கூடிய ஒரு தலைமைத்துவம் கருணாவின் மூலம் கிடைத்திருக்கிறது. அன்டன் பாலசிங்கம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய தந்திரசாலிகளின் பசப்பல்களுக்குப் பின்னால் தமது கொலைவெறியாட்டத்தைத் தொடர்ந்தும் நடத்திவரும் வன்னிப் புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் அவர்களின் அரசியல் பிணாமிகளை ஒருபுறம் முன்னிறுத்தி, தாம் சமாதானத்தில் நாட்டம் கொண்டவர்களாகக் காட்டிவரும் அபத்தத்தினையும், அவர்களின் பேச்சுவார்த்தை நாடகத்தினையும் நிச்சயம் நாம் முறியடிக்கவேண்டும் என்று கருணா அம்மான் கேட்டிருக்கிறார். பயங்கரவாதப் புலிகளுக்கும் கருணா அமைப்பிற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை இப்போது மொத்தத் தமிழர்களும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழர்களை அடிமைப்படுத்தி, யுத்த அழிவுகளுக்குள் தொடர்ச்சியாக வைத்திருக்கும் வன்னிப் புலிகளுடன் ஒப்பிடும்பொழுது, மென்போக்கான, மக்கள் அவலங்கலைப் புரிந்துகொண்ட, மக்களின் நலனில் அக்கறைகொண்ட, மக்களுக்கு நம்பிக்கையான வாழ்வினை ஏற்படுத்த சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மக்களுடன் நெருங்கிப் பழகும் கருணா அம்மானை அவர்களை தமது தலைமையாகக் காண விரும்புகிறார்கள். கருணா அம்மானை தமது ஏக தலைமையாக அங்கீகரிக்கும் இலங்கையின் தமிழர்களின் இந்த ஒருமித்த முடிவு புலம்பெயர் நாடுகளிலிருந்துகொண்டு இன்றுவரை புலிப் பயங்கரவாதிகாளுக்கு பெருமளவு பாணத்தினை வாரி வழங்கி நாட்டில் அழிவுகளை மட்டுமே ஏற்படுத்திவரும் தமிழர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும் என்று நம்பலாம். புலம்பெயர் தமிழர்கள் செய்யவேண்டியது யாதெனில், இலங்கைத் தமிழர்களுடன் சேர்ந்து, கருணாவின் தலைமைத்துவத்தின்கீழ் அணிதிரண்டு, தமது வளங்களை அவருக்கு அர்ப்பணித்து, கொலைகாரப் பிரபாகரனையும் பயங்கரவாதப் புலிகள் இயக்கத்தையும் இந்த நாட்டிலிருந்து முற்றாகத் துடைத்திட உதவ வேண்டும்.
  8. தொப்பிகல (குடும்பிமலை) புலிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த 10 நாள் அவகாசம் கேட்ட கருணா , தொப்பிகல பிரதேசத்தை கருணாவின் உதவியில்லாமலேயே நாம் கைப்பற்றினோம் - இலங்கை ராணுவம் மூலம் : வோல்ட்டர் ஜயவர்டின இணையம் : லங்கா வெப் மற்றும் ஏசியன் ட்ரிபியூன் காலம் : கருணா பிள்ளையான் துணைராணுவக் குழுக்களுக்கிடையே பிளவுகள் தோன்றியிருந்த காலம் தொப்பிகல காட்டுப்பகுதியில் இன்னமும் எஞ்சியிருக்கும் புலிகளின் அணிகளை அப்புறப்படுத்தும் ராணுவ நடவடிக்கையின் முன்னோடி கொமாண்டோ நடவடிக்கைக்காக கருணாவை இன்னும் எதிர்பார்ப்பது பயனற்றது எனும் முடிவிற்கு இலங்கை ராணூவமும் விசேட அதிரடிப்படையும் வந்திருப்பதாகத் தெரியவருகிறது. ஏசியன் ட்ரிபியூன் செய்திகளின்படி கருணா தனது படைகளை ராணுவ அணிக்கு முன்னோடியாக தொப்பிகல பகுதிக்குள் அனுப்பி புலிகள் மீதான கொமாண்டோ பாணியிலான தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் மே மாதம் 4 ஆம் திகதி பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையே ஏற்பட்ட பிளவினையடுத்து அத்திட்டம் பிற்போடப்பட்டிருக்கலாம் என்றும் அறியவருகிறது. கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினையடுத்து சுமார் 850 கருணா விசுவாசிகள் பிள்ளையானுடன் போய்ச் சேர்ந்து திருகோணமலையில் நிலைகொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போது கருணாவிடம் வெறும் 300 போராளிகளே இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் அண்மைய நாட்களில் கருணாவால் வலுக்கட்டாயமாக துணைராணுவக்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர்கள் ஆகும் என்றும் ஏசியன் ட்ரிபியூன் கூறுகிறது. கருணாவின் நெருங்கிய சகாக்களான ஜீவேந்திரம் மற்றும் திலீபன் ஆகியோரே இந்தச் சிறுவர்களை அண்மையில் கடத்திவந்து கருணாவின் படையில் இணைத்ததாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவிக்கிறது. தனது குழந்தைகள் படையணியைக் கொண்டு தான் வாக்களித்த தொப்பிகல முன்னோடி தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாது என்பதை உணர்ந்துள்ள கருணா, தான் மீளவும் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு தாக்குதலை ஆரம்பிக்க மேலும் 10 நாள் அவகாசத்தினை ராணுவத்தினரிடம் கேட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. கருணா உண்மையிலேயே ராணுவத்திற்கு உதவியாக தனது படையணியை காட்டிற்குள் அனுப்பி புலிகள் மேல் அதிரடித் தாக்குதலை நடத்தி அவர்களை நிலைகுலைய வைத்தபின்னர் ஏனைய ராணுவ அணிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் விருப்பத்துடன் இருந்தபோதும், அவருடைய இன்றைய நிலை துரதிஷ்ட்டவசமானது என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும், கருணா தொப்பிகல மீதான தாக்குதலுக்கு தன்னை ஈடுபடுத்துமாறும், இதற்கு 10 நாள் அவகாசம் தரும்படியும் ராணுவத்தை வேண்டிவருவதாகத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்னர் கருணா தனது தளபதிகளான மகிலன், ஜீவேந்திரன், மங்களன் மற்றும் சின்னத்தம்பி ஆகியோரை விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு அக்கரைப்பற்றிற்கு அனுப்பியிருந்தார். இச்சந்திப்பின்போது சலிப்படைந்து காணப்பட்ட அதிரடிப்படைத் தளபதிகள், தொப்பிகல காட்டுப்பகுதியிலிருந்து மீதமிருக்கும் புலிகளை விரட்டும் நடவடிக்கை கருணாவினால் தேவையில்லாமல் தள்ளிப் போடப்படுகிறது என்பதை அவரிடம் கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டதாக தெரியவருகிறது. மேலும், கருணாவின் தளபதிகளிடம் வேறு ஒருவிடயத்தினையும் விசேட அதிரடிப்படைத் தளபதிகள் கூறியுள்ளனர். அதாவது, தொப்பிகல மீதான திட்டமிட்ட ராணுவ நடவடிக்கை திட்டமிட்டதன்படி நடைபெறும் என்றும், கருணா இல்லாவிட்டால் திருகோணமலை அணியினரைப் பாவித்து தாம் தாக்குதலை அங்கிருந்தே ஆரம்பிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர். திருகோணமலை அணியென்று விசேட அதிரடிப்படை குறிப்பிட்டது பிள்ளையான் அணியினரைத்தான் என்பது குறிப்பிடத் தக்கது. தாம் எதிர்பார்த்தபடி விசேட அதிரடிப்படை தளபதிகளை தமது 10 நாள் அவகாசத்திற்குச் சம்மதிக்க வைக்கமுடியாத நிலையில் கருணாவின் தளபதிகள் கருணாவுடன் அங்கிருந்தே நேரடியாகத் தொடர்புகொண்டுள்ளனர். கருணா அவர்களிடம் மீண்டும் 10 நாள் அவகாசத்தினைக் கெஞ்சிக் கேட்டுப் பாருங்கள் என்ரு கூறியபோதும், விசேட அதிரடிப்படைத் தளபதிகள் கருணாவின் வேண்டுகோளினை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரியவருகிறது. இது இவ்வாறிருக்க, அண்மையில் தொப்பிகல காட்டுப்பகுதியில் நடைபெற்ற சில ராணுவ நடவடிக்கைளைப் பார்க்கும்போது கிழக்கிலிருந்து புலிகளை முற்றாகவே அப்புறப்படுத்தும் ஏதுநிலை உருவாகியிருப்பதாகவே தோன்றுவதாக ராணுவத்தின் கொமாண்டோ படையணியும், காலாட்படைகளும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. இத்தாக்குதல்களில் புலிகளின் நான்கு முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகவும், சுமார் 30 புலிகள் வரை கொல்லப்பட்டதாகவும் இன்னும் மூன்று புலிகள் ராணுவத்தினரின் முன்னிலையிலேயே சயனைட் அருந்தி இறந்ததாகவும் ராணுவப் பேச்சாளர் பாதுகாப்பு விடயங்களை அறிவிக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் ராணுவத்தினர் பங்குடாவெளி வடக்கு, நாரக்கமுல்லை தெற்கு ஆகிய தொப்பிகலைக் காட்டுப்பகுதியில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையொன்றினை ஜூன் மாதம் 9 ஆம் திகதி மேற்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். காலாற்படை, விசேட கொமாண்டோ பிரிவு, ஆட்டிலெறிச் சூட்டாதரவு ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையில் இப்பன்வில, வேப்பன்வெளி, அக்கரைத்தீவு மற்றும் மாவடியோடை ஆகிய பகுதிகளில் இருந்த புலிகளின் முகாம்களே கைப்பற்றப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காட்டுப்பகுதியில் நடந்த கடுமையான சண்டைகளில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாகவும் இன்னும் 17 பேர் காயமடைந்ததாகவும் ராணூவப் பேச்சாளர் மேலும் கூறினார். இச்சண்டைகளில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் 8 உடல்களை பொலீஸார் மூலம் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் தாம் கையளித்திருப்பதாகவும் ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். புலிகளின் தொலைத்தொடர்புகளை வழிமறித்துக் கேட்ட ராணுவத்தினர், வன்னியிலிருந்து உடனடியாக ஆயுத, ஆள்ப்பல உதவிகளை வழங்குமாறு தொப்பிகலக் காட்டிலிருந்து புலிகள் வேண்டிக்கொண்டபோதும்கூட வன்னியிலிருந்து உதவிகளோ அல்லது பதில்த் தகவல்களோ எதுவும் வரவில்லையென்றும் ராணுவத்தினர் கூறுகின்றனர். இத்தாக்குதலில் புலிகளிடமிருந்து பெருமளவு ஆயுத தளபாடங்களைத் தாம் கைப்பற்றியதாக நீண்ட பட்டியல் ஒன்றினையும் ராணுவம் வெளியிட்டிருந்தது. http://www.lankaweb.com/news/items07/120607-6.html
  9. ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் .....! 💞
  10. வலிமையையும் வெற்றியையும் தீர்மானிப்பது மனவலிமையையும் சூழ்நிலையும் மட்டுமே......! 😁
  11. கடுகடுப்பாகிப் போன நம்ம வீட்ல இருக்குற பர்னிச்சர்ஸ்' & ஹோம் அப்ளையன்ஸஸ்' க்கெல்லாம் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?* (ச்சும்மா ஒரு கற்பனை தான்) *1) சேர் வெயிட்ட குறை, குறைவா தின்னுன்னு சொன்னா கேக்குரியா.. மாடு மாதிரி கனத்துக் கிடக்குற பாரு.. *2) ஃபேன் நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனுஎன்னய இப்டி சுத்தவிடுற? *3) டிவி ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டுப் பாடா படுத்துறீங்க? *4) தலையணை நாளைக்காவது குளிடா...!! நாத்தம் கொடலப் புடுங்குது...!!! *5) ஃப்ரிட்ஜ் சாம்பாரு, புளிக்கொழம்பு, மீந்து போன காய்கறி... இதத்தவிர வேற எதையுமே வைக்க மாட்டீங்களா டா...?? *6) ட்யூப் லைட் நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட், இதுல நீ என்னய வந்து எரிய விடுறியா..?? *7) கண்ணாடி இவ்ளோ கிட்டக்க வந்து மூஞ்சியை காட்டாத... எனக்குப் பயமா இருக்குதுல்ல.. *8) கிரைண்டர் ம்ம்ம்... அப்படித்தான், உன் தலய சொரிஞ்சுட்டே வந்து கைய உள்ள விடு...!!! *9) மெத்தை:* டொம்மு..டொம்முன்னு மேல வந்து விழாதடா பன்னி!.. *10) மிக்ஸி மூடிய மூடாமத்தான் ஒரு நாள் உன் கைய உள்ள விட்டுப் பாரேன்...!!! *11) வால்க்ளாக் இப்ப என்னய பாத்து, நீ என்னத்த கிழிக்கப் போற...??? பேசாம மறுபடியும் படுத்துத் தூங்கு! *12) வாசிங்மெஷின் பாக்கெட்ல காசு பணம், சேஃப்டி பின் இருக்கான்னு செக் பண்ண மாட்ட? *13) மிதியடி என்னத்தடா மிதிச்சுட்டு வந்த..?, மரியாதையா என்னய தாண்டி அப்டியே ஓடிப்போய்டு...!!! *14) சேவிங் ட்ரிம்மர் இப்ப மூஞ்சில என்ன வளந்து தள்ளிடுச்சுனு மூஞ்சியப் போட்டு இப்டி சொரண்டி எடுக்குற...?? *15) மொபைல் சார்ஜர்:* உன் வாயத் தொற...!! அப்டியே அதுலயும் கொஞ்சம் சார்ஜ் ஏத்தி விடுறேன்...!!! *16) பாத்ரூம் விளெக்கமாறு தயவு செஞ்சு எனக்கு VRS குடுத்துடுங்களேன்...! ப்ளீஸ்...!! *17) அயர்ன்பாக்ஸ் அப்டியே கொஞ்சம் உன் மூஞ்சிய காட்றது...!!! *18) சர்ட் ஆங்கர் அடேய் மகனே...!, உன் சட்ட காலர கொஞ்சம் பாரு...!! உன்னோட ஒரிஜினல் கலர் அதுல ஒட்டிக்கிச்சு...!!! *கொஞ்சம்* *வாய் விட்டு சிரிங்க...* *நோய் விட்டுப் போகட்டும்!
  12. ரஞ்சித் தயவுசெய்து தொடருங்கள், புங்கையூரான் கூறியதே எனது நிலையும்.
  13. கருணா மேலும் ஷிமாலியிடம் பேசும்போது பிரபாகரனின் புலநாய்வுப் பொறுப்பாளர் தனக்குத் தெரியாமல் கிழக்கில் பல அரசியல்ப் படுகொலைகளை அரங்கேற்றி வந்ததாகவும், இதனால் இக்கொலைகள் தொடர்பாக சர்வதேசத்தில் இருந்து வந்த கேள்விகளுக்கும், நோர்வேஜியர்களின் தலைமையில் இயங்கிவந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் கேள்விகளுக்கும் தானே பதில்சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார். ஐக்கிய தேசிய முன்னணியின் மட்டக்களப்பு வேட்பாளரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்துப் புலிகள் கொன்றதையும், ஈ பி டி பி கட்சியின் உறுப்பினர் ஒருவரை வாழைச்சேனையில் வைத்து புலிகள் கொன்றதையும் இதற்கு உதாரணமாக கருணா குறிப்பிட்டிருந்தார். மேலும் கருணா ஷிமாலியிடம் பேசும்போது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின்மூலம் பொருளாதார உதவிகள் என்று வழங்கப்பட்ட எவையுமே கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படவில்லையென்று குற்றஞ்சாட்டினார். வெளிநாட்டுப் பணத்திலிருந்து அதி சொகுசு வாகனங்களை இறக்குமதிசெய்த புலிகளின் தலைவர்கள் வன்னியில் அவற்றில் பவனிவருவதாகவும், கிளிநொச்சியைச் சுற்றி பாரிய நகர அபிவிருத்தித் திட்டங்களை அவர்கள் மேற்கொண்டுவரும் அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தை முற்றாக அவர்கள் கைகழுவி விட்டார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். நோர்வேயிடமிருந்தும் சுவீடனிடமிருந்தும் புலிகளுக்கு வழங்கப்பட்ட பெருமளவு நிதி ஒருபோதுமே மட்டக்களப்பை நோக்கி வரவில்லையென்றும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரபாகரனுக்குத் தான் அனுப்பிய பல கடிதங்களுக்கு அவர் பதில் அனுப்பவில்லையென்றும் அவர் கூறினார். புலிகளின் தலைமைக்காக பல கடுமையான போர்க்களங்களைத் தான் வென்று கொடுத்திருப்பதாகவும், அதனால் பிரபாகரனிடம் இருந்து வரும் எந்தச் சவாலையும் தன்னால் முறியடிக்க முடியும் என்றும் கருணா பெருமிதத்துடன் கூறினார். அதேவேளை தனக்கோ அல்லது தனது வீரர்களுக்கோ பிரபாகரனினால் ஆபத்து ஏற்படுமிடத்து அதற்கான பொறுப்பினை சர்வதேசமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், ஆனால் இதற்குப் பதிலடியாக புலிகள் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை தான் முன்னெடுக்கப்போவதாகவும் அவர் எச்சரித்தார். இது இவ்வாறிருக்க கொழும்பில் உள்ள சர்வதேச மற்றும் உள்ளூர் அரசியல் மற்றும் ராணுவ அவதானிகளின் கருத்துப்படி கருணாவின் பிளவின் பின்னால் இந்தியாவே இருப்பதாக தெரிகிறது. தமிழ்ப் பிரிவினைவாதிகளுடன் நெடுங்காலமாகத் தொடர்புகளைப் பேணிவந்த இந்தியா தற்போதைய புலிகளின் தலைமையுடனான தனது பகைமையினையடுத்தே இந்தப் பிளவில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. கருணாவிற்குப் பின்னால் இந்தியா நிற்பதும், புலிகளின் தலைமைப் பீடத்தின் ரகசியங்கள் பலவற்றை அவர் அறிந்தவர் என்கிற வகையிலும் பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் இடையிலான இந்தப் போர் மிக நீண்டதாகவும், பாரிய அழிவினைக் கொண்டுவருவதாகவும் இருக்கப்போகிறது என்றும் அந்த அவதானிகள் தெரிவிக்கின்றனர். முற்றும். http://www.lankaweb.com/news/items04/060304-1.html
  14. எனக்கோ அல்லது எனது போராளிகளுக்கோ பிரபாகரன் கேடு விளைவிக்க நினைத்தால் நாம் நிச்சயமாகத் திருப்பித் தாக்குவோம், நாம் எதற்கும் அஞ்சப்போவதில்லை - கருணா அம்மான், கருணாவின் பின்னால் நிற்கும் இந்தியா - அரசியல் அவதானிகள் ! ஆக்கம் : வோல்ட்டர் ஜயவர்டென காலம் : கருணா புலிகளால் விலக்கப்பட்டு ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிக்கொண்டிருந்த காலம் இலங்கையின் பயங்கரவாத இயக்கமான புலிகளுக்குள் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவினை முதன் முதலில் வெளியுலகிற்குக் கொண்டுவந்த செய்தியாளர் சிமாலீ சேனநாயக்க கிழக்கு மாகாணத்தின் புலிகள் பிரிவின் தலைவர் கேணல் கருணாவை அண்மையில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போதே தன் மீதோ அல்லது தனது வீரர்கள் மீதோ பிரபாகரன் தாக்குதல் நடத்த முயற்சித்தால் தாம் நிச்சயம் திருப்பித் தாக்குவோம், நாம் அவருக்கு அஞ்சவில்லை என்று கருணா கூறினார். அண்மையில் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் வானொலிச் சேவை ஒன்றிற்கு பேட்டியளித்த ஷிமாலீ புலிகள் மீது திருப்பித் தாக்கும் முடிவுடன் கருணா இருப்பதாக தெரிவித்தார். பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு நிச்சயம் எதிர் நடவடிக்கைகளை எடுப்பேன் என்று கருணா கூறுவதுவது, இலங்கையின் தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த நாட்களில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களையும், பாரிய படுகொலைகளையும் எமக்கு நினைவுபடுத்துகிறது. குறிப்பாக புலிகள் இயக்கத்திற்கும், டெலோ இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின்போது அவ்வியக்கத்தின் தலைவர் சிறி சபாரட்ணம் உட்பட பல தலைவர்கள் புலிகளிடம் சரணடைந்தபின்னர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். கருணாவின் இந்த எச்சரிக்கையும் மிகவும் சிக்கலான நேரத்தில்த்தான் வந்திருக்கிறது. புலிகள் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை மறைத்து, ஜனநாயக அரசியலில் நாட்டம் கொண்டவர்களாக தம்மைக் காட்டுவதற்காக தமது பினாமிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் களமிறக்கி, தமிழ் மக்களுக்கான ஏக பிரதிநிதிகள் தாமே என்று காட்டுவதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் நிலையில் கருணாவின் இந்த எச்சரிக்கை வந்திருக்கிறது. பல தசாப்த்தங்களாக புலிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் தற்போதைய பிளவு அமைந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புலிகளின் தலைமைக்கு எதிராகத் துரோகமிழைத்தார் என்கிற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மரண தண்டனை வழங்கப்பட்ட புலிகளின் முன்னாள் பிரதித் தலைவர் மாத்தையாவின் பிளவினைக் காட்டிலும் மிகப் பாரியளவு தாக்கத்தினையும், அழிவையும் கருணாவின் விலகல் ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மாத்தையாவின் துரோகத்தின்போது அவர் வன்னியில் இருந்ததனால் அவரை புலிகளால் இலகுவில் தண்டிக்க முடிந்ததென்றும், ஆனால் கருணாவோ வன்னிக்கு வெளியில், தனது வீரர்களின் அதியுச்ச பாதுகாப்பில் இருப்பதால் பிரபாகரனினால் அவரை நெருங்கக் கூட முடியவில்லை என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர். கருணாவை கிழக்கு மாகாணத்திற்குச் சென்று சந்தித்த முதல்ப் பத்திரிக்கையாளரான சிமாலீ சேனநாயக்கவை பி பி ஸி யின் சிங்களச் சேவை சந்தேஷய பேட்டி கண்டது. அப்பேட்டியில் ஷிமாலி பேசும்போது பிரபாகரன் தனது சொந்தத் தேவைக்காக கிழக்கு மாகாணப் போராளிகளைப் பலிகொடுத்து வருகிறார் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். கருணா மேலும் கூறும்போது கிழக்கிலிருந்து ஆயிரம் போராளிகளை வன்னிக்கு அனுப்பிவைக்குமாறு பிரபாகரன் தன்னிடம் கேட்டபோது தான் உடனேயே மறுத்துவிட்டதாகவும், வடமாகாணத்தில் நீங்கள் சகல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு கிழக்கு மாகாணப் போராளிகளைப் பலிகொடுக்க முடியாது என்று தான் கூறியதாகவும் கூறியிருக்கிறார். கருணா மேலும் பேசும்போது பிரபாகரனின் உயிரைக் காப்பதற்காக இதுவரையில் 2300 போராளிகள் பலியிடப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
  15. கருணாவின் கட்டுப்பாட்டில் றமெஷ் இருக்க, அவரை வைத்து போலியான பத்திரிக்கையாளர் மாநாட்டினை நடத்திய புலிகள் ஆங்கில மூலம் : வோல்ட்டர் ஜெயவர்தின காலம் : கொழும்பில் கருணாவினால் கைவிடப்பட்ட நிலையில் கருணாவின் பெண்போராளிகள் சிலர் மீண்டும் புலிகளுடன் வந்து இணைந்துகொண்ட காலப்பகுதி தம்மால் விலத்தப்பட்ட கருணாவுக்கு இலங்கை ராணுவம் அடைக்கலம் கொடுத்துவருவதாகவும், கருணாவைக்கொண்டு தம்மீது நாசகாரத் தாக்குதல்களை இலங்கை ராணுவம் தொடுத்துவருவதாகவும் புலிகள் மீண்டும் இலங்கை அரசாங்கத்தினை கடுமையாகச் சாடியிருக்கின்றனர். புலிகளால் நடத்தப்படும் இணையத்தளமான தமிழ்நெட்டில் வந்துள்ள செய்தியின்படி தேனகம் கொக்கட்டிச்சோலையில் நடந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் அம்பாறை - மட்டக்களப்புச் சிறபுத்தளபதி கேணல் ரமேஷ் கருணா குழுவினரை தமக்கெதிரான நாசகாரத் தாக்குதல் நடவடிக்களுக்கு ராணுவம் பாவித்துவருவதாகக் குற்றஞ்சாட்டியதோடு இந்த நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் புலிகள் அதற்கான தக்க பதிலடியினை வழங்கவேண்டி வரும் என்று எச்சரித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், புலிகளின் இந்தச் செய்திக்கு மாறாக , கிழக்கிலிருந்து வரும் நம்பகரமான தகவல்களின்படி இந்தச் செய்தியானது தமிழ் மக்களைக் குழப்பும் நோக்கத்துடன் புலிகளால் வேண்டுமென்றே விடப்பட்ட செய்தியென்றும், கருணாவின் படைகளால் ரமேஷ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருப்பதாகவும், அவரால் பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்றும் தெரியவருகிறது. வழமையாக நடக்கும் நிகழ்வுகளின் ஒளிப்படத்தை தனது செய்திக்குறிப்புடன் வெளியிடும் தமிழ்நெட் இணையத்தளம் ரமேஷ் தொடர்பான இந்தப் பத்திரிக்கையாளர் மாநாட்டுச் செய்திக்குறிப்புடன் ரமேஷின் கடந்த கால ஒளிப்படம் ஒன்றினை மட்டுமே இணைத்திருந்தது. இது இவ்வாறிருக்க, கருணாவுக்கும் தமக்கும் இடையே எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று மறுத்திருக்கும் இலங்கை ராணுவம், கருணாவுக்கும் வன்னிப் புலிகளுக்கும் இடையே நடப்பது அவர்களது உள்வீட்டு விவகாரம் என்று தனது பாராளுமன்றப் பேச்சாளர் மங்கள சமரவீரவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது. இதேவேளை, பொதுவான எதிரணியில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் புலிகளின் பினாமியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமயக் கட்சி கருணாவுக்கு ஆதரவாக அரசாங்கம் இதுவரை செயற்படாதது குறித்து கடுமையான கண்டனங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. புலிகளால் போலியாக நடத்தப்பட்டதாகக்கூறப்படும் இந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் கருணாவுக்கு ராணுவம் பாதுகாப்பினையும், ஆயுதங்களையும் வழங்கிவருவதற்கான உறுதியான ன சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறினார். புலிகளின் இணையத்தளமான தமிழ்நெட்டின் செய்தியின்படி கருணாவினால் கொழும்பில் கைவிடப்பட்ட நான்கு பெண்போராளிகளின் தகவல்களின்படியே தமக்கு இந்த ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறியிருந்தாலும்கூட அவை எவையென்பதை ரமேஷ் கூறியிருக்கவில்லை. தம்மிடம் சரணடைந்தவர்கள் என்று புலிகளால் கூறப்பட்ட நான்கு பெண்போராளிகளின் பெயர் விபரங்களைக் கூற புலிகள் மறுத்துவிட்ட நிலையில், இவர்கள் உன்மையிலேயே கருணாவின் தோழிகளா அல்லது சாதாரண பெண்களா என்று பத்திரிக்கையாளர்களால் இதுவரையில் உறுதிசெய்யப்படமுடியாது போய்விட்டது. தமிழ்நெட்டின்படி, தமக்கும் கருணாவுக்குமிடையிலான முறுகல் நிலைபற்றி சில சர்வதேச செய்திச்சேவைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதாக ரமேஷ் கூறியதாக இந்தப் போலியான மாநாட்டுச் செய்தியை தமிழ்நெட் வெளியிட்டிருக்கிறது. மேலும், இந்த மாநாட்டில் பேசிய ரமேஷ் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகள் மேல் நடத்தப்பட்டுவரும் படுகொலைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமது இயக்கம் ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுவே முதல்தடவையாக புலிகள் தமது போராளிகள் கருணாவிணால் கொல்லப்படுவதாக கூறும் சம்பவம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், ஆயுதம் தரித்த புலிகளின் போராளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தமது போராளிகள் மீதான தாக்குதல்களை புலிகள் எவ்வாறு தடுத்து நிறுத்தமுடியும் என்பது கேள்விக்குறிதான். மேலும், தமிழ்னெட்டின் இன்னொரு செய்திக்குறிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி எல் பீரிஸை மேர்கோள் காட்டி "புலிகள் அரசு மேற்கொண்டுவரும் தந்திரோபாய செயற்பாடுகளால், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையினை இழந்துவருவதாகவும்" குறிப்பிட்டிருக்கிறது. முற்றும் http://www.lankaweb.com/news/items04/200604-7.html
  16. இங்கிலாந்துச் சிறையிலிருந்து குடிவரவு தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்ட கருணா - அவரால் கொண்டுவரப்பட்ட பெருமளவு பணம் ஜெயதேவன் மூலம் லண்டனில் முதலீடு செய்யப்பட்டது ஆங்கிலமூலம் : ரங்கஜீவ ராஜகருண இணையம் : லங்கா வெப் காலம் : போலியான கடவுச் சீட்டு மூலம் கோத்தாபயவினால் லண்டனுக்கு அனுப்பப்பட்ட கருணா அங்கு பிடிபட்டு 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த காலப்பகுதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவரும், கருணா அம்மான் என்றழைக்கப்பட்டவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் லண்டன் சிறையிலிருந்து கடந்த மே மாதம் 8 ஆம் திகதி விடுவிக்கப்பட்டு குடிவரவு தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் அதிகாரிகக்ளின் கூற்றுப்படி அவர் குடிவரவுச் சட்டங்களை மீறியபடியினால் அதிகாரங்களுக்கு அமைவாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. மேலும், லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொண்டுள்ள பிரிட்டிஷ் குடிவரவு அதிகாரிகள் கருணா மீளவும் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயணப் பத்திரங்களைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது. இப்பத்திரம் வழமையான கடவுச் சீட்டினைப் போலல்லாது ஒரு பக்கக் கடதாசியில் பயணிப்பவரின் புகைப்படத்தையும், இவரை பயணிக்க அனுமதியுங்கள் என்கிற குறிப்போடும் இருக்கும் என்று தெரியவந்திருக்கிறது. ஆனால், லண்டனில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது கருணாவுக்கான பயணப்பத்திரங்களைத் தயாரிக்குமாறு இதுவரையில் தம்முடன் பிரிட்டிஷ் அதிகாரிகள் தொடர்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று கூறுகின்றனர். ஏற்கனவே லண்டனில் வசித்துவரும் அவரது மனைவி வித்தியாவதி மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுடனும் இணைந்துகொள்வதற்காக கருணா போலியான கடவுச் சீட்டினைப் பாவித்து லண்டனிற்கு தப்பியோடி வந்ததற்காக 2007 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 2 ஆம் திகதி குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட கருணா , பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே தன்னைப் போலிக் கடவுச் சீட்டுடன் அனுப்பியதாகவும் கூறியதுடன் இக்குற்றத்திற்காக 9 மாதங்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். அரசியல் அவதானிகளின் கருத்துப்படி புலிப்பயங்கரவாதிகளின் கிழக்கு மாகாண தளபதியாகவிருந்த கருணா தனது போராளிகளுடன் விலகி ராணுவத்தினரின் பக்கம் சென்றதானது அப்பயங்கரவாதிகளின் அஸ்த்தமனக் காலம் நெருங்கி வருகிறதைத்தான் காட்டுகிறது என்று கூருகிறார்கள். கருணாவின் பிரிவின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பாரிய நிலப்பரப்பினை புலிப் பயங்கரவாதிகள் மிகக் குறுகிய காலத்தில் இலங்கை ராணுவத்திடம் பறிகொடுத்தனர். கருணாவின் பிரிவின் மூலம் புலிப்பயங்கரவாதிகள் தொடர்பான பல புலநாய்வுத்தகவல்களை கருணா ராணுவத்திற்கு வழங்கியதன் மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து பயங்கரவாதிகளை மிக இலகுவாக துரத்துவதற்கு ஏதுவாக அமைந்ததாக ராணுவப் புலநாய்வுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பயங்கரவாதிகளுடன் இருந்த காலத்தில் பிரபாகரனின் கொடூரமான கட்டளைகள் பலவற்றை அருணா மறுபேச்சின்று செயற்படுத்தியதாகத் தெரியவருகிறது. பிரபாகரனுக்காக பெருமளவு சிறுவர்களை கருணா புலிகள் அமைப்பில் சேர்த்துக்கொண்டதுடன், 1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் சரணடைந்த 600 சிங்கள முஸ்லீம் பொலீஸாரை கருணாவின் கட்டளையின்பேரிலேயே பயங்கரவாதிகள் திருக்கோயில் காட்டிற்குள் ஜேர்மனிய நாஜிகளின் பாணியில் அருகிலிருந்து சுட்டுக்கொன்றதாகத் தெரியவருகிறது.. இது இவ்வாறிருக்க, கருணா தான் லண்டனுக்குத் தப்பி வந்த பொழுது தன்னுடன் கொண்டுவந்த பெருமளவு பணத்தினை இந்திய உளவுத்துறை ரோவின் நெருங்கிய நண்பரும், லண்டன் நகரில் சில இந்துக் கோயில்களை நடத்திவருபவருமான ஜெயதேவனிடம் கொடுத்து லண்டனில் பல வியாபாரங்கலில் முதலீடு செய்துள்ளதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முற்றும் http://www.lankaweb.com/news/items08/090508-1.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.