கொள்ளு - Horse grams
இன்று எங்களிடையே பயறு, உழுந்து, குரக்கன், கெளபீ போன்றவை அதிகம் பரீட்சயமானளவிற்கு சாமை, வரகு, கொள்ளு போன்றவற்றின் பயன்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை எனலாம். அதனாலேயோ என்னவோ தெரியவில்லை இவற்றின் உற்பத்தியும் இலங்கையில் குறைவடைகிறதோ என அங்கே போகும் சமயங்களில் நினைப்பதுண்டு..நான் கூட இவற்றில் அதிகளவு அக்கறை எடுக்க தொடங்கியது fitness வகுப்பில் இணைந்த பொழுதுதான்..
இந்த தானியங்களின் பயன்களை அறிய தொடங்கினால் பின் இவற்றினை இலகுவில் விடமாட்டோம் என்பதால் இங்கே அதிகம் வரவேற்க்கப்படாத ஆனால் சத்து நிறைந்த கொள்ளு எனும் தானியவகையைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்…
இவை இலங்கை இந்திய போன்ற வெப்பம் கூடிய நாடுகளில் பயிரிடக்கூடியவை என்பதால் இதனால் இரு வழியில் (உற்பத்தி மற்றும் சத்து நிறைந்த உணவு) பயன் பெறலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்…
இந்த சிறிய இயற்கை விதை சில அற்புதமான நன்மைகளை வழங்குகிறது, முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தும் உள்ளது. கொள்ளு, கார்போஹைட்ரேட் மற்றும் புரத உள்ளடக்கத்தில் அதிக அளவில் இருந்தாலும் கூட, இரும்பு, மாலிப்டினம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களிலும் நிறைந்துள்ளது. இவை உகந்த ஆற்றல், தசை வலிமை, ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்த சிவப்பணு தொகுப்பு மற்றும் வலுவூட்டப்பட்ட எலும்புகளை உறுதி செய்கின்றன. மேலும், இது உயிரணுக்களின் இயல்பான வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு(Metabolism) உத்தரவாதம் அளிக்கும் பிவைட்டமின்களின் போதுமான அளவு வழங்குகிறது.
100 gm of horse gram contain:
Protein 22 gm
Mineral 3 gm
Fiber 5 gm
Carbohydrates 57 gm
Iron 7 mg
Calcium 287 mg
Phosphorus 311 mg
மேலும் நிறுவப்பட்ட மருத்துவ அறிவியலின் படி, free radicals ஏற்படும் oxidative சேதமானது பல இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது.
இருப்பினும், மனித உடலுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் antioxidants மூலம் இந்த சேதத்தை குறைக்கும் திறன் உள்ளது, குறிப்பாக raw horse gramsல் polyphenols, flavonoids மற்றும் புரதங்கள் போன்ற முக்கிய antioxidants நிறைந்துள்ளது. இது கொழுப்பு குறைவாகவும் இருப்பதால், இதயம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
அதேபோல, மற்ற பருப்பு வகைகளைப் போலவே, இதில் குறிப்பாக புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இவை இரண்டும் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பேணவும் உதவுகிறது.
இரத்த சிவப்பணுக்கள் ஓக்ஸியனை உடலிற்கு கொண்டு செல்ல இரும்புசத்து உதவுகிறது, அதே நேரத்தில் வைட்டமின் சி நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கிடையில், பொஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களின் ஒரு முக்கிய அங்கமாகும் மற்றும் ஆற்றல் உற்பத்தி மற்றும் தசை செயல்பாட்டிற்கு அவசியம்
ஆனாலும் இவ்வளவு பயன்களை தரும் இந்த கொள்ளு பிரச்சனைகளையும் தரக்கூடிய ஒரு தானியம் என்பதால் ஒவ்வொரு நாளும் உணவில் சேர்க்காமல் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இதனை பயன்படுத்தினால் அதிக பயன்களை பெறலாம்..
சரி அப்படி என்னதான் இந்த கொள்ளு பிரச்சனையை தரக்கூடும் என பார்க்கலாம்..
-இந்த கொள்ளு போன்ற தானியங்களில் ஃபைடிக் அமிலம் உள்ளது, இது ஒரு ஊட்டச்சத்து எதிர்ப்பு அமிலம் -அதாவது இது உங்கள் உடல் அனைத்து ஊட்டச்சத்து நன்மைகளையும் உறிஞ்சுவதை தடுக்கலாம். ஆனால் இந்த கொள்ளு விதைகளை ஊறவைத்து, முளை கட்டவைத்து அல்லது புளிக்க/நெதிக்க வைத்து சமைத்தால், பைடிக் அமில உள்ளடக்கத்தை 80-90% குறைக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
- கீல்வாதத்தால் பாதிக்கப்படும்போது கொள்ளு மற்றும் பிற பருப்பு வகைகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் யூரிக் அமில அளவு மூட்டுகளைச் சுற்றி ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில் கொள்ளு மற்றும் பருப்பு வகைகள் அமிலத்தன்மையை அதிகரிக்க பங்களிக்கும்.
- அதிக அளவில் சாப்பிடும் போது உடல் வெப்பத்தை பெரிதும் அதிகரிக்கும் என்பதால் மிதமாக சாப்பிடவேண்டும். கர்ப்பினி பெண்களும் இதை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்..
- நீங்கள் ஆயுர்வேத மருந்துக்களை உட்கொண்டால் கொள்ளு போன்ற தானிய வகை அடிப்படையிலான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளாதீர்கள்.
- கொள்ளு ரஃபினோஸ் ஒலிகோசாக்கரைடுகள் எனப்படும் குறிப்பிட்ட வகை கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது, இது செரிமானத்தின் போது வாயுத்தொல்லை ஏற்படுத்தும், குறிப்பாக அதிக அளவில் சாப்பிடும்போது.
- அரிதான சந்தர்ப்பங்களில், ஒவ்வாமை எதிர்வினைகள் பதிவாகியுள்ளன
உடல் நிறையை பேணுவதற்கும் இந்த கொள்ளு உதவுகிறது என்பதால் நான் தோசை சுடும் பொழுது, கோதுமை மாவோ, வெள்ளை பச்சைஅரிசியோ, ரவையோ சேர்க்காமல் உழுந்துடன், வரகு/சாமை/ராகி அல்லது இந்த கொள்ளு போட்டே செய்வது வழமையாகிவிட்டது…அதே போல முளைகட்டிய தானியங்களை சலாட்டில் சேர்ப்பதும் வழக்கமாகிவிட்டது…
https://www.healthline.com/nutrition/horse-gram-for-weight-loss#potential-side-effects
https://m.netmeds.com/health-library/post/horse-gram-super-food-way
https://isha.sadhguru.org/us/en/blog/article/horse-gram-benefits-nutrition-recipes