சாமை வரகு தினை என்பதை நேரடியாக நானும் பார்த்ததேயில்லை.
அது எப்படி நீங்கள் இருவரும் கெளபியை மறந்திருக்கலாம்?😝
ஆக குறைந்தது ஒவ்வொரு சரஸ்வதி பூசை வரும்போதாவது மனசில் அது நின்றே ஆகுமே..
நானெல்லாம் அப்போ... ரியூசன், பள்ளிக்கூடத்தில்
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்தண்டா மரை..
என்று ஆரம்பித்து
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே...
என்று முடிக்கும்வரை ..
இதெல்லாம் எப்போ பாடி முடிப்பாங்க என்ற கவலையில் தேங்காய் சொட்டு, சின்ன சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிச்ச கெளபி மீதுதான் ஒரு கண் இருந்துகிட்டே இருக்கும்,
ஊரில குறைஞ்ச விலையில் அதி உச்ச புரதம் நிறைந்த உணவு கெளபி என்று சொல்வார்கள்..
ஆனால் ஊரில் இருந்த காலத்தில் பார்த்த கெளபி எல்லாம் ஒரே பூச்சி புழு குடைஞ்சு ஒருபக்கம் ஓட்டையான ’உயிர்சத்து’ நிறைந்த தரமற்ற அந்த அவரை வகைதான்.
வெளிநாட்டுகளில் மிகவும் தரமானதுதான் கடைகளில் கிடைக்கிறது, ஏற்றுமதியென்றால் எப்போதுமே உயர்தரம்.