Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    88006
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19157
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46808
    Posts
  4. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5633
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/17/21 in all areas

  1. உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேசுங்கள்...... ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா? ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர். வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள். கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?” அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை” வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?” “தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்” வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள். மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் அப்பா” திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான். வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான். இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா? எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான். புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது. எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
  2. அகரம் அகழாய்வு தளத்தில ‌ ஒரே குழியில் முன்று‌ உறை கிணறுகள் கண்டுபிடிப்பு பிபிசிCopyright: பிபிசி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் இதுவரை ஆறு கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது 7ம்கட்ட அகழாய்வுப் மணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது 8அடி ஆழத்தில் ஒரே குழியில் 2அடுக்கு மற்றும் 3அடுக்குகள்கொண்ட அருகே அருகே 3 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‌ இவ்வாறு கிடைப்பது இதுவே முதன் முறை ஆகும்.இது ஆராய்ச்சியாளர்களிடம் மிகுந்த ‌ஆர்வத்தை‌ ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அகழாய்வுப் நடத்தும் பட்சத்தில் இதன் அகலம் உயரம் மற்றும் முழு பயன்பாடும் தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் அகரத்தில் கிடைத்துள்ள உறை கிணுறுகளை பற்றி ‌தொல்லியல்‌ துறை‌ அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அகரம் இப்போ சிகரம் ஆச்சு என‌ பதிவு செய்துள்ளார். மேலும் தொடர்ந்து கீழடி,கொந்தகை மணலூர் அகரம் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அகரம் அகழாய்வு தளத்தில ‌ ஒரே குழியில் முன்று‌ உறை கிணறுகள் கண்டுபிடிப்பு - தமிழில் செய்திகள் (bbc.com)
  3. பீன்ஸ் பிரட்டல் .......! 😁
  4. Titel Kadavul Manithanaga Interpret P. Susheela, T. M. Sounderarajan, L. R. Eswari Album Vanambadi அதை ஊரெங்கும் தூவிவிட்டான் உள்ளத்திலே பூசிவிட்டான் ஊஞ்சலை ஆட விட்டு உயரத்திலே தங்கிவிட்டான். அவனை அழைத்து வந்து
  5. மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை 1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,
  6. நல்ல பாம்புக் கடிக்கு நாட்டு வைத்தியம்.......! 👍
  7. 1980 களில் இந்த ஐ ரேக்ஸ் -ல் அம்பிகாவின்ர படத்தை பார்த்து உருகியோர் எத்தனை பேர்.? ☺️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.