கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!!
முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!
கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் எழுதப்படுமா என்பது சந்தேகமே!!
ஆனாலும் கொழும்பின் சூட்டை தணித்தது இந்த மண்ணின் குளிர்மை.. கிட்டதட்ட 27/28 வருடங்களாக மனிதர்களின் காலடி படாமல் காடு போல கிடந்த இடத்தை மாற்றிபயனுள்ள தோட்டமாக்கியதைப் பார்த்து ஒரு சந்தோஷம்!!
தொடரும்…