Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87993
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/03/22 in all areas

  1. பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா கம்பன் தமிழோ பாட்டினிலே சங்க தமிழோ மதுரையிலே கம்பன் தமிழோ பாட்டினிலே சங்க தமிழோ மதுரையிலே பிள்ளை தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே நெஞ்சம் முழுதும் கவிதை எழுது கொஞ்சும் இசையை பழகும் பொழுது துள்ளும் இளமை பருவம் நமது தொட்டு தழுவும் சுகமோ புதிது கண் பார்வையே உன் புதுப்பாடலோ பொன் வீணையே உன் பூமேனியோ பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா பிள்ளை பருவம் தாய் மடியில் பேசும் பருவம் தமிழ் மடியில் பிள்ளை பருவம் தாய் மடியில் பேசும் பருவம் தமிழ் மடியில் கன்னி பருவம் என் வடிவில் காலம் முழுதும் உன் மடியில் பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய தன்னந் தனிமை தணல் போல் கொதிக்க தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அணைக்க பொன்னோவியம் என் மனமேடையில் சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. Song : Pournami Nilavil Movie/Album Name : Kanni Penn 1969 Star Cast : Jaishankar and Vanisri Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki Music Composed by : M. S. Vishwanathan Lyrics written by : Vaali
  2. பார்வை ஒன்றே போதுமே......! (9). அங்கே அவர்களது தாயார் யாரையோ கோபமாகப் பேசுவதும் இருவர் வாக்குவாதப் படுவதும் சத்தமாகக் கேட்கிறது. வெளிவராந்தாவில் வேலைக்காரம்மாவும் வாட்ச்மேனும் பதற்றமாய் நின்றுகொண்டிருக்கிறார்கள்.என்ன என்று ரவிதாஸ் அவர்களிடம் விசாரிக்க நிர்மலா விரைந்து உள்ளே போகிறாள். அந்த வேலைக்காரம்மாவும் அவனிடம் சின்னையா கொஞ்ச நாட்களாக அம்மாவின் கார் ட்ரைவர் சுந்தரத்தின் போக்கு சரியில்லை. அம்மாவிடம் அத்துமீறி நடந்து கொள்கிறான். அம்மாவும் ஏனோ அவனுக்கு பயந்து அவன் சொற்படி நடக்கிறா மேலும் அவன் கேட்க்கும்போதெல்லாம் பணமும் குடுக்குறா. அவன் குடித்து விட்டு வந்து தகராறு பண்ணினாலும் கண்டும் காணாதமாதிரி இருக்கிறா என்கிறாள். ரவிதாசும் ஓம்....நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன் அவற்ர போக்கு சரியில்லாமல்தான் இருக்கு. சரி என்ன என்று பார்க்க படியேறி தாயாரின் அறைக்குப் போகிறான். அங்கு ரேகாவோடு சுந்தரம் இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தான். இடையில் நிர்மலா அவனிடமிருந்து தாயாரைப் பிடித்து இழுக்கிறாள். அங்கு வந்த ரவிதாஸ் உடனே சுந்தரத்தின் வயிற்றில் எட்டி உதைக்க அவன் கட்டிலடியில் போய் விழுகிறான். அவனிடமிருந்து விடுபட்ட ரேகா மகளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறுகிறாள். எல்லாம் என்னால்தான்.நான் குடி போதையில் செய்த தவறுகளினால்தான் என் புருசனும் எங்களை அனாதரவாய் விட்டிட்டு போயிட்டார். இன்று இந்த நாய்கூட என்மேல் கை வைக்கத் துணியுமளவுக்கு வந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கோ பிள்ளைகள். முதலில் இவனை வெளியே அடித்துத் துரத்துங்கோ என்று சொல்லும்போது கட்டிலின் கீழே இருந்து எழுந்த சுந்தரத்தின் கையில் கைத்துப்பாக்கி இருந்தது.அது அன்று சாமிநாதன் கோபத்தில் எறிந்து விட்டு போன கைத் துப்பாக்கி. இண்டைக்கு உங்கள் மூவரையும் கொல்லாமல் விட மாட்டேன் என்று கத்திக் கொண்டு ரவிதாசை நோக்கி சுடும்போது மகனைக் காப்பாற்ற குறுக்கே பாய்ந்த ரேகாவின் மார்பில் குண்டு பட்டு அவள் கீழே சரிகிறாள். நிர்மலா தாயைத் தாங்கிப் பிடிக்க சுதாகரித்துக் கொண்ட ரவிதாஸ் பாய்ந்து சுந்தரத்தை மடக்குகிறான். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த வாட்ச்மேனும் ரவிதாஸுடன் சேர்ந்து சுந்தரத்தை அமுக்கிப் பிடித்து துப்பாக்கியைப் பறித்து விடுகிறார்கள். இருவருமாக அவனைக் கட்டிப் போட்டுவிட்டு போலீசுக்கு போன்செய்ய சற்று நேரத்தில் போலீசும் அம்புலன்ஸ் வண்டிகளும் வந்து விடுகின்றன. அதற்கிடையில் அன்று நடந்ததை ரேகா பிள்ளைகளிடம் சொல்லி மன்னிப்பு கேட்கிறாள். நான் இனி இருக்கமாட்டேன் பிள்ளைகள். நீங்கள் கவனமாய் இருங்கோ. என்றாவது அப்பாவை சந்தித்தால் தன்னை மன்னித்து விடும்படி சொல்லுங்கோ என்று சொல்கிறாள். டொக்டர் வந்து அவளுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸில் ஏற்றும்போது ரேகாவின் உயிர் பிரிகிறது. போலீஸ் சுந்தரத்தையும் துப்பாக்கியுடன் விலங்கிட்டு அழைத்து செல்கிறது. இவை நடந்து இரண்டு மூண்டு வருடங்களாகி விட்டன. நிர்மலா முழுநேரமாக கம்பெனியைக் கவனித்துக் கொள்கிறாள். ரவிதாசும் கம்பெனி வேலைகளாக அடிக்கடி அயல்நாடுகளுக்கு செல்கிறான். அவன் குடுத்த புகாரின் பேரில் போலீஸ் சாமிநாதனை வலைபோட்டு தேடிக்கொண்டிருக்கிறது..............................................! பார்ப்போம் இனி ..................! ✍️
  3. அழகான ஊற்றுக் கிணறு........அதன் நீர் பயிருக்கு உணவு.........! 🙏
  4. இன்றைய... ராசி பலன். 🤣
  5. தலைவன் இல்லாத இடமேயில்லை..☺️
  6. ஆமாம் அதனால்தான் மூஞ்சி கிழிஞ்சு பல்லு உடைஞ்சு நடமாடுகின்றார்கள்.....!
  7. நானும் இறை/இயற்கை நம்பிக்கை கொண்டவன் தான்.... ஆனால் இப்படியொரு காட்சியை இதுவரை பார்க்கவேயில்லை.😶
  8. சகோதரன் தமிழ் சிறிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  9. செத்தான்(டா)... சேகர்.
  10. ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். . இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..! . இறந்தவரின் மனைவி சொன்னாள்.. ”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..? நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..! . குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை... . கடைசியில் அவர் கேட்டார் ”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்” தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார். பின் சொன்னார்.. ”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம். இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..! . அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை. அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்” ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?” . தந்தை சொன்னார் ”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்” . தாயைக் கேட்க அவள் சொன்னாள் ”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?” . மனைவி சொன்னாள் ”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்” . குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார் ”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?” . அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள் ”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?” . குருஜி சொன்னார் ”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..! ”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்” “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”. எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.