ஏதோ பொருள் தட்டுப்பாடு என்று சொல்லுகிறார்கள். நாங்கள் பார்க்காத பொருள் தட்டுப்பாடு.
அரிசி, மா நெல்லு தாராளமா இருக்கு
சீனி பனங்கட்டி இருக்கு,
மரக்கறி முருங்கை காய் இருக்கு , இலை
இருக்கு, மாங்காய் இருக்கு , புளியம் பழம் இருக்கு , உப்புக்கு கடல் இருக்கு ( 2 லிட்டர் உப்பு தண்ணியை கொதிக்க வைத்து வற்ற வைத்தால் தரமான உப்பு )
கொச்சி மிளகாய் கன்று 10 இருக்கு , மிளகாய் விதை இருக்கு இப்ப போட்டாலும் 2 மாதத்தில் பச்சை மிளகாய் , எல்லா மரக்கரியும் அப்படி தான் , வாழை மரம் இருக்கு பழம் சாப்பிட்டு , காய் எடுத்து கறி வைப்பாம்,பொரிப்பம், தென்னை மரம் இருக்கு தேங்காய் இருக்கு, தேங்காய் திருவி பால் புளிந்து காய்சினால் தேங்காய் எண்ணெய் , வெங்காயம் இரண்டு துக்கு இருக்கு , 1 கிலோ வெங்காயத்தை இண்டைக்கு முளைக்க போட்டாலும் 15 நாளில் நல்ல தடல்,30 நாளில் 5 க்க் வெங்காயம் வரும் முறையே தரமான வறை, கறிக்கு பாவிக்கலாம்,தேசி மரம் 2 இருக்கு தினமும் 4௮ காய் வரும் (உப்பு கொஞ்சம் போடு கரைச்சு குடிப்பம் தரமான பானம் ,)
மாடு ஒண்டும் , ஆடு இருக்கு பால் குடிப்பம்,மிஞ்சினால் தயிர் பொடுவம், கடைந்து மோர் எடுப்பம், நெய் எடுப்பம்.
25 கோழி இருக்கு , தினமும் 5 முட்டை வந்தாலும் , முட்டை பிரச்சனை இல்ல, 21 நாள் காத்திருந்தா ல் கோழி குஞ்சு , இன்னும் 2 மாசம் காத்திருந்தாள் கோழி இறைச்சி .
காட்டு கானிக்குள் தடம் வைத்தால் முயல், உடும்பு , கவுதாரி, கொக்கு ,புறா, காடை பிடிப்பம் ,
இன்னும் சிக்கல் என்றால் தூண்டில் இருக்கு பக்கத்தில குளம் இருக்கு மீன் பிடிப்பம்.
கிணறு இருக்கு வாளி இருக்கு தண்ணீர் பிரசனையே இல்ல,
பெட்ரோல் மண்எண்ணெய் தேவையே இல்ல, பிரயானத் துக்கு சைக்கிள் இருக்கு, வெளிச்சத்துக்கு சூல் இருக்கு, ஜாம் பொத்தல் விளக்கு இருக்கு ( பொரித்து கழித்த தேங்காய் எண்ணெய் வீணாக ஊற்ற மாடோம் , அதை பழைய ஏதனம் ஒன்றில் சேகரித்து வைப்போம் இப்படியான தேவைகளுக்கு ) விறகு இருக்கு ,
போதைக்கு தரமான ஒருபணை கள்ளு இருக்கு , இன்னும் போதை வெனுமெண்டால்
கள்ளை போத்தலில் அடைத்து வாய்க்காலில் தாட்டு விடுவம் 10 நாளில் தரமான அடை , 5 பெக் பெரும் குடிகார நையும் படுத்தும் .
புகைக்கிறதுக்கு போயிலை இருக்கு , காப்பரெட் காரண்ட சிகரெட் கிட்ட நிக்க ஏலாது.
( இப்ப ஒரு கூட்டம் கிளம்பும் பார் போனுக்கு என்ன செய்வாய் பிட்டு படம் எப்பிடி பார்ப்பாய் என்று கொண்டு , அதுக்கும் வழி இருக்கு உயரமான மரம் இருந்தா போதும் சுத்தி 4 வீடு கவர் பண்ணலாம் [மடையன் மாதிரி கேக பிடது] )
இப்பிடி யே 2 வருசத்துக்கு தாங்கும். அதுக்குள்ள அரசு ஒரு முடிவுக்கு வந்து விடும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு தற்சார்பு பொருளாதாரம் இன்றியமையாத ஒன்று.
அனுபவம்
ஜீவா