இந்த மாதம் வேலையின்மை விகிதம் 3.5% ஆக வந்துள்ளது, கடந்த மாதம் 3.4%, அதற்கு முந்தய மாதம் 3.5% இருந்த நிலையில் இந்த மாதம் எதிர்பார்க்கப்பட்ட வேலையின்மை விகிதம் 3.4% விட 0.1% அதிகரித்துள்ளது.
நான் முன்பு கூறியது போல 4.0% ஆக அதிகரிக்கவில்லை, பொதுவாக பணவீக்க அதிகரிப்பிற்கேற்ப வேலையின்மை விகிதம் அதிகரிப்பது வழமை, காரனங்கள் தெரியவில்லை.
கடந்த 9 வருடங்கள் ஊதிய உயர்வு தடைப்பட்டிருந்த்தது, இந்த வருட நடுப்பகுதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் வேலையின்மை விகிதம் அதிகரிக்கவில்லை என கூற முடியாது, ஏனெனில் வருமான அதிகரிப்பு விகிதத்தினை விட பணவீக்க அதிகரிப்பு அதிகமாகவுள்ளது.
குடிவரவு, குடியகல்வு ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது வருமான அதிகரிப்புடன் தேறிய குடிவரவு எதிர்மறை இலக்கத்தில் இருக்கலாம்.
மாதாந்த வேலை மாற்றங்கள் (000)
மார்ச் 77.4
ஏப்ரல் 17.9
மே 4.0
ஜுன் 60.6
ஜுலை 88.4
ஒகஸ்ட் -40.9
செப்டெம்பர் 33.5
கடந்த மாதம் எதிர்பார்க்கப்பட்ட 25 பதிலாக எதிர்மறை -40.9 வேலையிழப்பு ஏற்பட்டது, இந்த மாதம் 33.5 ஆக கடந்த மாதத்தினை விட அதிகரித்துள்ளது அதாவது ஜுலை மாத வேலை அதிகரிப்பினை விட தற்போது வேலை அதிகரிப்பு ஏற்படவில்லை.
எதிர்வரும் மாதங்களில் இந்த வேலையின்மை விகிதம் அதிகரிப்பு ஏற்படலாம் என கருதுகிறேன்.