Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87993
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    53011
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7055
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/30/22 in Posts

  1. தனிநாடு தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனிநாடே என்று உறுதியாகத் தீர்மானித்த பிரபாகரன் இளைஞர்களை தனிநாட்டுக்கான போராட்டம் நோக்கி உந்திவந்த அரசியல்ச் செயற்ப்பாட்டாளர்களான ஈழவேந்தன், கோவை மகேசன் போன்றோரைத் தொடர்ச்சியாகச் சந்தித்து கலந்தாலோசித்து வந்தார். அவர்களுடனான ஆலோசனைகளின்போது சமஷ்ட்டிக் கட்சியின் கையாலாகாத் தனத்தையும், சிங்கள அரசுகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொள்கையினையும் கடுமையாக விமர்சித்த பிரபாகரன், சுந்தரலிங்கம் மற்றும் நவரட்ணம் போன்றோரின் நிலைப்பாடான தனிநாடு நோக்கி சமஷ்ட்டிக் கட்சி போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும் என்று கூறிவந்தார். சுந்தரலிங்கம் தனியான நாடு எனும் கொள்கையினை முதன்முதலில் எதிர்த்தவர் சுந்தரலிங்கம்தான். ஆனால், 1958 இல் தமிழர் மீதான சிங்களவர்களின் தாக்குதலின் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனியான நாடுதான் என்று கூறியதோடு, அதனை தாம் ஈழம் என்று அழைப்பதாகவும் கூறினார். மேலும், தனிநாட்டிற்குக் குறைவான எந்தத் தீர்வையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் வாதிட்டு வந்தார். சிங்கள அரசியல்வாதிகளுடனும், புத்திஜீவிகளுடனும் தனக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் இலங்கையினை ஒரு பெளத்த சிங்கள நாடாக மாற்றவே முயன்று வருகிறார்கள் என்று வெளிப்படையாகவே அவர் கூறிவந்தார். சிங்களவர்கள் அரசியல் நம்பகத்தன்மையற்றவர்கள் என்றும், ஏற்றுக்கொள்ளும் எந்த முடிவினையும் அவர்கள் நடைமுறைப்படுத்தப்போவதில்லையென்றும் வாதிட்ட அவர் தமிழர்களுக்கான உரிமைகளையோ மொழிக்கான அந்தஸ்த்தையோ சிங்களவர்கள் ஒருபோதுமே தரப்போவதில்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறிவந்தார். அந்நியர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் இருந்த நிலையான வடக்குக் கிழக்கின் பூர்வீக இனமக்கள் தமிழர்களே எனும் நிலையினை மீண்டும் உருவாக்கவேண்டும் என்றும் அத்தாயகம் ஈழம் என்று அழைக்கப்படவேண்டும் என்றும் சுந்தரலிங்கம் வாதாடிவந்தார். ஆனால், அவரது கோரிக்கையான தனிநாடு தமிழரிடையே முக்கியத்துவத்தினைப் பெறத் தவறிவிட்டது. 1960 இலும் 1965 இலும் பாராளுமன்றத் தேர்தல்களில் வவுனியாவில் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி எனும் பெயரில் போட்டியிட்ட அவரது கட்சியைத் தமிழர்கள் புறக்கணித்திருந்தார்கள். 1960 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய சிவசிதம்பரத்தின் 5370 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 4231 வாக்குகளே கிடைத்தன. மேலும் 1965 தேர்தலில் தமிழ்க் காங்கிரஸில் போட்டியிட்ட சிவசிதம்பரத்தின் 7265 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 3952 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. இதன் பிற்பாடு காங்கேசந்துறையில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட சுந்தரலிங்கம் 5788 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள செல்வாவோ 13,520 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். நவரட்ணம் 1970 தேர்தல்களில் போட்டியிட்ட நவரட்ணத்தின் சுயாற்சிக் கழகமும் தேர்தலில் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை. அதுவும் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்டது. 1963 இல் இருந்து ஊர்காவற்துறை தொகுதியில் வெற்றிபெற்ற வந்த நவரட்ணம், புதிய கட்சிக்கு மாறியதன் பின்னர் தனது ஆதரவாளர்களின் வாக்குகளை இழந்தார். 1963 இல் 14,963 வாக்குகளையும் 1965 இல் 13,558 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டிய நவரட்ணம், 1970 தேர்தலில் வெறும் 4758 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்திருந்தார். பெரும்பாலான வாக்காளர்கள் நவரட்ணத்தின் முன்னைய கட்சியான சமஷ்ட்டிக் கட்சிக்கே வாக்களித்ததுடன் புதிதாக போட்டியிட்ட ரட்ணம் என்பவரைத் தெரிவுசெய்தார்கள். முழு யாழ்ப்பாணக் குடாநாடுமே நவரட்ணத்தின் தனிநாட்டுக்கான கோரிக்கையினை அன்று நிராகரித்திருந்தது. 1956 ஆம் ஆண்டிலிருந்து தனிநாட்டுக் கொள்கையினை முற்றாக நிராகரித்திருந்த சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழருக்கான தீர்வாக சமஷ்ட்டி முறையிலான அரசியல் தீர்வையே தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர். 1970 ஆம் ஆண்டு சித்திரை 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட சமஷ்ட்டிக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு கூறுகிறது, "...இந்த நாட்டினை கூறுபோடும் எந்த நடவடிக்கையும் இந்த நாட்டிற்குப் பாதகமாக அமையும் என்பதையும் , தமிழ் மக்களுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதனையும் நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம். ஆகவே, தனிநாட்டுக் கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல்க் கட்சிக்கோ அல்லது அமைப்பிற்கோ ஆதரவளிக்க வேண்டாம் என்று நாம் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்" தனது தேர்தல் தோல்வி குறித்து டெயிலி நியூஸிற்கு செவ்வி கொடுத்த நவரட்ணம், தனிநாட்டிற்கான தனது கோரிக்கைக்குக் கிடைத்த இத்தோல்வி தற்காலிகமானதுதான் என்று கூறியதுடன், தான் மாவட்ட சபைத் தேர்தல்களில் கூறிய நிலைப்பாடு மாறாது என்றும் கூறினார். "இந்தத் தேர்தலினை நான் அரசுக்கும், பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்திற்கும் ஒரு செய்தியை அனுப்பும் நடவடிக்கையாகப் பாவித்தேன். அதாவது, சிங்கள அரசுகளும், தலைவர்களும் தமிழர்களின் அவலங்களைத் தீர்த்துவைத்து கெளரவமான தீர்வொன்றைத் தருவார்கள் என்கிற நம்பிக்கையினைத் தமிழர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. இவர்களின் செயற்பாடுகளினால் தமிழர் சிங்களவர் ஆகிய இரு இனங்களும் இனிமேல் ஒன்றாக வாழமுடியாது என்கிற நிலையினை அடைந்துவிட்டோம். இனிமேல் தமிழர்கள் பிரிந்துசென்று தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் கட்டத்தை அடைந்துவிட்டார்கள்" என்று அவர் கூறினார். தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்து சுந்தரலிங்கமும், நவரட்ணமும் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றிருந்தாலும்கூட, இளைஞர்களின் மனதில் தனிநாட்டிற்கான தேவையினை உணரவைப்பதில் பாரிய வெற்றியினைப் பெற்றிருந்தார்கள். பல இளைஞர்கள் தனிநாட்டை அடைவதற்கான வழிமுறைகள் பற்றித் தீவிரமாக ஆராய முற்பட்டிருந்தார்கள். வன்முறையற்ற வழிமுறைகள் மூலம் போராடுவது பலத்த தோல்வியினையே சந்தித்திருக்கிறது என்று அவர்கள் வாதாடினார்கள். ஆயுதத்தினை ஆயுதத்தின் மூலமே எதிர்கொள்ளவேண்டும், அதன்மூலமே தமிழர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்பதனை சிங்களவர்கள் உணர்ந்துகொள்வார்கள். எமது பதிலடி கடுமையாக இருக்கும்போதுதான் திருப்பி எம்மீது தாக்குதல் நடத்து முன் அவர்கள் சிந்திப்பார்கள் என்று இளைஞர்கள் நியாயப்படுத்தத் தொடங்கினர்.
  2. கரிகாலன் தங்கத்துரை எனப்படும் ந. தங்கவேலு அவர்களின் ரகசியக் குழுவிற்கு தங்கத்துரையே தலைவராக இருந்தார். அவரை அவர்கள் மாமா என்று பாசத்துடன் அழைத்து வந்தார்கள். அந்த அமைப்பில் சுமார் 25 இளைஞர்கள் இருந்தார்கள். அனைவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள், ஒருவருக்கொருவர் உறவினர்கள். 1970 இல் தங்கத்துரை இரு சுழல்த் துப்பாக்கிகளை வாங்கியிருந்தார். ஒன்று 0.22 எம்.எம் வகையும் மற்றையது 0.38 எம்.எம் வகையையும் சேர்ந்தது. இவை உள்ளூரில் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், இவற்றினை பயிற்சிக்காக அவர்கள் பாவித்து வந்தார்கள்.அமைப்பிலிருந்தவர்களை இவ்வகையான சுழல்த் துப்பாக்கிகளைத் தயாரிக்குமாறு தங்கத்துரை கேட்டிருந்தார். வானொலி திருத்துனரான கண்ணாடி என்று அழைக்கப்பட்டவர் இந்த தயாரிப்பு முயற்சிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அவரது உதவியாளராக "தம்பி" பிரபாகரன் நியமிக்கப்பட்டார். அவர்கள் அவ்விரு துப்பாக்கிகளையும் பாகம் பாகமாய்ப் பிரித்தெடுத்து மீண்டும் அவற்றைச் சேர்த்து துப்பாக்கிகளாக பொருத்தினார்கள். சில நாட்களிலேயே துப்பாக்கிகளைக் கழற்றிப் பூட்டுவதில் நன்கு தேர்ச்சி பெற்று விட்டார்கள். 1982 ஆம் ஆண்டு கொழும்பு குயீன்ஸ் கிளப்பில் தங்கத்துரை மற்றும் குட்டிமணிக்கெதிராக நடத்தப்பட்ட வழக்கின்போது நான் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. அவர்களின் துப்பாக்கித் தயாரிப்பு முயற்சி பற்றி நான் வினவியபோது தங்கத்துரை பின்வருமாறு கூறினார், "துப்பாக்கிகளைத் தயாரிப்பதுபற்றிய அறிவு எங்களுக்கு அப்போது இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், எமது தோழர்களில் பலர் இப்போதுதான் துப்பாக்கியை முதல்முறையாகக் கண்டிருக்கிறார்கள். நான் கண்ணாடியிடமும் பிரபாகரனிடமும் அவற்றை கழற்றிப் பார்க்குமாறு கூறியிருந்தேன். ஒரு வீட்டின் விறாந்தையில் அமர்ந்தபடி சுத்தியலினாலும் திருகாணிக் கழற்றியினாலும் அவற்றைக் கழற்ற முயன்றார்கள். மிகச் சிறிய நேரத்திலேயே அவர்களால் அவற்றினை முற்றாகக் கழற்றியெடுக்க முடிந்தது. தம்மால் பிரித்தெடுக்கப்பட்ட பாகங்களைக் கவனமாக ஒரு பத்திரிகைத் தாள் மீது பரவிவிட்டு பின்னர் அப்படியே துப்பாக்கியாகப் பொருத்தினார்கள். அவர்கள் இருவருக்கும் மிகவும் சிறப்பான அவதானிப்பும், ஞாபகசக்தியும் இருந்ததை நான் கவனித்தேன்". சிறிது காலத்திலேயே கைத்துப்பாக்கிகளைத் தாமாகவே தயாரிக்கும் நிலையினை அவர்கள் அடைந்தார்கள். சிலவற்றை அவர்களே தயாரித்தார்கள். அதேபோல ரவைகளைத் தயாரிக்கும் புதிய முறைகளையும் அவர்கள் அறிந்துகொண்டார்கள். முதலில் தீப்பெட்டிகளில் இருக்கும் இரசாயணத்தைக் கொண்டு ரவைகளை அவர்கள் செய்துபார்த்தார்கள். பின்னர் சரவெடிகளில் இருக்கும் இரசாயணத்தை ரவைகளில் நிரப்பி முயன்று பார்த்தார்கள். அவற்றுள் மூலை வெடி என்றழைக்கப்பட்ட முக்கோண வடிவ வெடிகளை அதன் வெடிச் சக்திக்காக ரவைகளில் பாவிக்க விரும்பினார்கள். வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ தியாகராஜா அக்காலத்தில் சிவகுமாரன் பயன்படுத்திய துப்பாக்கி, உலகநாதனைக் கொல்ல குட்டிமணி பயன்படுத்திய துப்பாக்கி, வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஏ தியாகராஜாவைக் கொல்ல திஸ்ஸவீரசிங்கம் பாவித்த துப்பாக்கி மற்றும் அல்பிரட் துரையப்பாவைக் கொல்ல பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி ஆகிய எல்லாமே அவர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான். அதேபோல குண்டுகளைத் தயாரிப்பதிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் குண்டுகளைத் தயாரிப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டார்கள். துப்பாக்கிகளைத் தயாரிப்பதைக் காட்டிலும் குண்டுகளைத் தயாரிப்பது ஆபத்தானது. இவ்வாறான குண்டுத் தயாரிப்புக்களில் இரு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன. முதலாவது 1970 ஆம் ஆண்டு தொண்டைமானாறு பனங்காட்டில் இரசாயணங்களை அவர்கள் கையாளும்போது ஏற்பட்டிருந்தது. குண்டுக்கான வெடிபொருட்களை அவர்கள் இணைத்துக்கொண்டிருக்கும்போது வெடிப்பு ஏற்பட்டது. அதில் சின்னச் சோதி காயப்பட்டிருந்தார். இரண்டாவது வெடிப்பு சற்றுத் தீவிரமானது. தங்கத்துரை, சின்னச் சோதி, பிரபாகரன் மற்றும் நடேசுதாசன் ஆகியோர் எரிகாயங்களுக்கு உள்ளானார்கள். பிரபாகரனுக்கு வலதுகாலில் எரிகாயம் ஏற்பட்டிருந்தது. அக்காயம் ஆறுவதற்கு சிலகாலம் சென்றதுடன், அது நிரந்தரமான கருத்த வடுவையும் அவரது காலில் ஏற்படுத்திவிட்டிருந்தது. பிரபாகரனுக்கு தனது காலில் ஏற்பட்ட காயம் பெருமையாக இருந்தது. தனது நண்பர்களுக்கு அக்காயத்தைக் காட்டி அவர் மகிழ்ந்தார். காலில் கருமையான காயம் ஏற்பட்டுள்ளதால் தான் இனிமேல் கரிகாலன் என்று அழைக்கப்படலாம் என்று நகைச்சுவையாக அவர் தனது நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதுண்டு. சோழர்களின் புகழ்மிக்க இளவரசனான கரிகாலச் சோழன் மீது பிரபாகரன் பெரிதும் மதிப்பு வைத்திருந்தார். கரிகாலச் சோழன் கூட தனது காலில் ஏற்பட்ட கருமை நிறத் தழும்பிற்காகவே "கரிகாலச் சோழன்" என்று அழைக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. கரிகாலச் சோழன் தனது போர்த்திறமை மூலம் சோழ நாட்டினை விஸ்த்தரித்து சோழப் பேரரசாக மாற்றியிருந்தார். பிரபாகரனும் தனது பெயரை கரிகாலன் என்று வரிந்துகொண்டார். 1982 இல் தமிழ்நாட்டின் பாண்டி பஸார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பதிவுசெய்யப்பட்ட பொலீஸ் அறிக்கையில் பிரபாகரனின் பெயர் "கரிகாலன்" என்றே பதியப்பட்டிருந்தது. பிரபாகரனின் வலது காலில் இருக்கும் எரிகாயத் தழும்பை முன்வைத்தே பொலீஸார் தமது தேடுதல்களை நடத்தியிருந்தார்கள். ஆயுதங்களையும் குண்டுகளையும் தயாரிக்கும் பிரபாகரனின் அவா இன்றுவரை தொடர்கிறது. இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்களைப் பரிசோதித்துப் பார்க்கும் பிரபாகரன் அவற்றை மெருகூட்டுவதன் மூலம் எவ்வாறு தாக்குதல்களில் அவற்றை திறமையாகவும், குறைந்த ரவைகளுடன் பயன்படுத்தலாம் என்று எப்போதுமே சிந்தித்துக்கொண்டிருப்பார். இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட கனரக மோட்டார்கள், நீண்ட தூர ஆட்டிலெறிகளைக் கூட உருமாற்றி, இலங்கையரசு பாவித்த மேற்கு நாடுகளிலிருந்து வாங்கப்பட்ட எறிகணைச் செலுத்திகளின் இடத்தைத் துல்லியமாகக் கண்டறியும் கருவிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பாதுகாப்பாக உபயோகிக்கும் வழிமுறைகளைப் பிரபாகரன் கையாண்டு வந்தார். பிரபாகரன் 14 வயது நிரம்பியிருந்த வேளையிலேயே அவரது மைத்துனரான சாதாரண தரத்தில் கல்விபயின்று வந்த பெரிய சோதி என்பவரால் அமைப்பினுள் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து பாடசாலைக்குச் சமூகமளிப்பதைத் தவிர்த்து வந்த பிரபாகரன் அரசியல் கூட்டங்களிலும் ஆலோசனைகளிலும் பங்கேற்கத் தொடங்கினார். 1968 இல் டட்லியின் அரசிலிருந்து சமஷ்ட்டிக் கட்சி வெளியேறி, எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்ததன் பிற்பாடு, யாழ்க்குடாநாட்டில் அரசியல் ஆலோசனைக் கூட்டங்களும், விவாதங்களும் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வந்தன. சமஷ்ட்டிக் கட்சியின் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவினை இளைஞர்கள் கடுமையாக எதிர்த்ததுடன், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைப் போராடி பெறுவதை விடுத்து, மீண்டும் இன்னொரு சிங்களக் கட்சிக்கே ஆதரவளிப்பதென்பது கட்சியின் நோக்கத்திற்கு முரணானது என்று வாதிட்டனர். சமஷ்ட்டிக் கட்சியின் முடிவு பற்றி தந்தை செல்வா என்னதான் சமாதான சொல்ல முனைந்தாலும், இளைஞர்கள் அதனைக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. குறிப்பாக வி நவரட்ணத்தின் சுயாட்சிக் கழக உறுப்பினர்கள் இதனால் பெரிதும் அதிருப்தியடைந்து காணப்பட்டார்கள்.
  3. எதுக்கு இந்தக்கொலை வெறி? தடுமாறினவர்களுக்கு துப்புக்கொடுத்தது தவறாய் போச்சுது. நாங்கள் துப்புக்கொடுத்த படியாற்தானே விசாரணை சரியான ஒருவழிக்கு திரும்பியிருக்கு. இலங்கையில் எத்தனை மெலிந்த உயரமான மனிதர்கள் இருக்கிறார்கள்? அதுவும் தற்போதைய பொருளாதார நிலையில் பெரும்பாலானோர் அந்த நிலைக்கு வந்துவிட்டார்கள், யாரை என்று கண்டுபிடிப்பார்கள்? ஆமா! சன்மானம் வாங்க கூட்டுத்தேவை, காட்டிக்கொடுக்கிறதென்றா சாத்தான் தான். நல்ல கூட்டாளிகள்! உங்களது உயரம் எல்லாம் நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் எழுத்துமூலம் கொடுத்துவிட்டு, இப்போ சாத்தானை மாட்டிவிடுகிற வேலையெல்லாம் வேலைக்காகாது. நீங்கள் பதிந்த உயரத்தை கையில வைச்சுக்கொண்டுதானாம் சந்தேக நபரை தேடுகிறார்களாம். இலங்கை எம்பசி பக்கம் போய்விடாதீர்கள்.
  4. அச்சப் படுவோம் என்றா??
  5. கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்.......! 😍
  6. ஓஹோ.... கதை, அப்பிடி போகுதா.
  7. AUDJPY 88.100 முக்கிய வலயத்தினை விலை கடந்தால் இன்னொரு தொகுதி வாங்குவதாக கூறியிருந்தேன், விலை 88.100 பகுதியில் விலை திரும்புவதற்கான அறிகுறியாக Shooting star reversal pattern தோன்றியது, ஆனால் உடனடியாக வர்த்தக்த்தினை மூடவில்லை, மஞ்சள் கோட்டினால் குறிப்பிடப்பட்டுள்ள channel break இற்கு பின்னரே எனது வர்த்தகத்தினை மூடுவதற்கு ஏற்ப எனது trailing stop ஐ உயர்த்தி வைத்திருந்தமையால் அந்த பகுதியில் வர்த்தகம் தானாக மூடப்பட்டது. தற்போது Bearish flag எனும் chart pattern உருவாகி யுள்ளது. இது ஒரு கொடி வடிவம் கொண்ட வரைபட அமைப்பு கொண்டது, இது பெரும்பாலும் சிறப்பான நிகழ்தகவு கொண்ட அமைப்பு. பொதுவாக கொடி போன்ற அமைப்பிலிருந்து விலை உயரும் போதோ அல்லது இறங்கும் போதோ அந்த வர்த்தகத்திலீடுபடுவார்கள், ஆனால் இன்னமும் இந்த நாணயத்தினை விற்க ஆரம்பிக்கவில்லை, காரணம் விலை இன்னமும் lower low எனும் பகுதியினை கடக்கவில்லை என காரணம் கூற முயன்றாலும் இதுவரை AUDJPY Bullish நிலையிருந்து உடன்டடியாக எதிர்நிலை (Bearish) எடுக்க முடியவில்லை, முடிவு சரியா எனும் ஒரு குழப்பநிலை. விலை உடைப்பு பகுதியான 88.600 நெருங்கும்போது விற்க தீர்மானித்துள்ளேன் (50/50 நிகழ்தகவு). கொடியின் கம்பின் நீளம்தான் இதன் எதிர்பார்ப்பு விலை. கொடியின் கம்பின் நீளம் 92.00 - 87.000 = 5.000 Target (Break) 88.600 - 5.000 = 83.600 தங்கம் இரண்டாவது தொகுதி 1820 பகுதிகளில் விற்றுள்ளேன் கணிசமான இலாபத்தில் உள்ளது, தற்போது ஆதரவு வலயத்தில் (Support) உள்ளது விலை இறங்குவது தடைப்பட்டு உயர்ந்தால் அனைத்து தங்க வர்த்தகங்களையும் மூடிவிட்டு, தங்கத்தினை வாங்க தீர்மானித்துள்ளேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.