Leaderboard
-
Nathamuni
கருத்துக்கள உறவுகள்13Points13720Posts -
இணையவன்
கருத்துக்கள பொறுப்பாளர்கள்8Points7596Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்7Points8910Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்5Points87993Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/01/23 in Posts
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsபொறுமையிழந்த தமிழ் மக்கள் 1970 ஆம் ஆண்டு ஆடி மாதம் 11 ஆம் திகதி தந்தை செல்வா தலைமையில் வவுனியாவில் கூடிய சமஷ்ட்டிக் கட்சியின் செயற்குழு கொல்வின் ஆர் டி சில்வாவின் வேண்டுகோள் பற்றி ஆராய்ந்தது. கூட்டத்தில் பேசிய தந்தை செல்வா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல்ல நல்ல விடயங்களை இந்த அரசியல் யாப்பில் உள்ளடக்கியிருப்பதால் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தினைத் தவற விடக்கூடாது என்று கூறினார். சி ராஜதுரை, சி என் நவரட்ணம் ஆகியோர் இதனால் தமிழருக்கு ஏதாவது நலன்கள் கிடைக்கும் என்று நம்புகிரீர்களா என்று செல்வாவிடம் தமது சந்தேகத்தை எழுப்பினர். இறுதியில் இந்த அழைப்புப் பற்றி தமிழ்ச் சமூகத்திலுள்ள முக்கியமானவர்களுடன் கலந்துரையாடி அரசியலமைப்புச் சபையில் பங்கேற்பதா இல்லையா என்பதனை முடிவெடுக்கலாம் என்றும், அவ்வாறு பங்கெடுக்கும் பட்சத்தில் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கான தீர்வுகளை எப்படி உறுதிசெய்துகொள்ளலாம் என்பதுபற்றியும் தீர்மானிக்கலாம் என்றும் முற்றாகியது. சரியாக ஒரு வாரத்தின் பின்னர் கொழும்பு சைவ மங்கையர் கழக மண்டபத்தில் கூடிய சமஷ்ட்டிக் கட்சியினர், கொழும்பிலிருந்த பிரபலமான தமிழ் வழக்கறிஞர்கள், மூத்த தமிழர்கள் ஆகியோருடன் நீண்ட கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைகளின் முடிவில் அரசியல் யாப்பு உருவாக்கச் சபையில் கலந்துகொள்வதென்று முடிவாகியது. அதேவேளை, யாப்பினை உருவாக்கும் பொழுது தமிழர்களுக்கான உரிமைகள் உள்ளடக்கப்படுவதை யாப்புருவாக்கத்தில் பங்குபற்றும் தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்கள் உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற கலந்தாலோசனைகளின் முடிவில் பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "இக்கூட்டம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் யாப்பு உருவாக்கச் சபையில் கலந்துகொள்ளவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. மேலும், இந்த யாப்பில் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகள் சமஷ்ட்டி அடிப்படையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையினை இவர்கள் அரசிடம் முன்வைப்பார்கள். மத்திய அரசிடமிருந்து கணிசமான அதிகாரங்கள் பிராந்தியங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதை இவர்கள் உறுதிசெய்யும் வழியில் யாப்பு அமைய இவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள். தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்தும், தாய்மொழியில் கல்விகற்கும் நிலையும் ஏற்பட அழுத்தம் கொடுப்பதுடன் அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் இருக்கவும், அவ்வாறு மீறப்படும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படுவதை இவர்கள் உறுதிசெய்வார்கள். மேலும் அதிகாரம் மிக்க அமைப்பொன்றினை நாம் உருவாக்கி, அதன்மூலம் எமது பரிந்துரைகள் பட்டியலிடப்பட்டு அரசிடம் கையளிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்" என்றும் கூறினார். பிரதமர் சிறிமாவின் அழைப்பினையேற்று 1970 ஆம் ஆண்டு, ஆடி 19 அன்று ரோயல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று நாள் கருத்தரங்கின் பின்னர் அரசியலமைப்பு உருவாக்கச் சபையினை சேர்ந்து உருவாக்கினார்கள். இச்சபை புதிய அரசியலமைப்பை உருவாக்கவும், அதனைச் சட்டமாக மாற்றவும், இறுதியில் அதனை அரசியலமைப்பாக நடைமுறைப்படுத்தவும் முடிவெடுத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனா, சமஷ்ட்டிக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் கதிரவேற்ப்பிள்ளை, தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வி ஆனந்தசங்கரி ஆகியோர் தமது கட்சிகள் ஆதரவு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு இருக்கும் என்பதனை உறுதிப்படுத்தினர். அரசியலமைப்பை வரைவதற்காக அமைக்கப்பட்ட செயலணி அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கியிருந்ததுடன் அரசியலமைப்பின் அடிப்படை நகலினை இனிவரும் கூட்டங்களில் வரையலாம் என்றும் முடிவெடுத்தது. சமஷ்ட்டிக் கட்சியின் அரசியலமைப்பு கமிட்டி தமது பரிந்துரைகளை ஒரு நகலாக வரைந்து புரட்டாதி மாதமளவில் பிரதான அரசியலமைப்பு குழுவின் முன்னால் சமர்ப்பித்தது. அந்த பரிந்துரை நகலில் 7 தலைப்புகளின் கீழ் 60 கட்டுரைகள் வரையப்பட்டிருந்தன. தமிழர்களின் பிரதான ஐந்து பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய அடிப்படை தீர்வுகளை இந்த நகல் கொண்டிருந்தது. சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்த பரிந்துரைகளில் பகுதி 1 சமஷ்ட்டிக் கட்டமைப்புப் பற்றி விவரிக்கிறது. அதன்படி ஒரு மத்திய அரசாங்கமும் ஐந்து பிராந்திய அரசுகளும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து பிராந்தியங்களும் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தன. பொருளாதாரத்தில் முன்னேறியிருந்த மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள்ஒரு பிராந்தியமாகவும், தென்னஞ்செய்கை அதிகமாகக் காணப்படும் வடமேற்கு மற்றும் வட மத்திய பகுதிகள் ஒரு பிராந்தியமாகவும், தேயிலை, இறப்பர் அதிகமாகப் பயிரிடப்படும் ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் இணைந்து மூன்றாவது பிராந்தியமாகவும், வடமாகாணம், மட்டக்களப்பு, திருகோணமலை அடங்கிய கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் இணைந்து வட கிழக்குப் பிராந்தியமாகவும், முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அம்பாறை மாவட்டம் தென்கிழக்குப் பிராந்தியமாகவும் வகுக்கப்பட்டிருந்தன. பகுதி ஒன்றில் மத்திய அரசும், பிராந்திய அரசுகளும் அதிகாரத்தினை எவ்வாறு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுபற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசாங்கம் பாராளுமன்றம் மூலம் நடத்தப்படும் அதேவேளை பிராந்திய அரசுகள் அவற்றிற்கான பிராந்திய அதிகார சபைகளினால் நிர்வகிக்கப்படும். இந்த பிராந்திய அலகுகளுக்கான நிர்வாக உறுப்பினர்களை அப்பிராந்தியங்களின் மக்களே தெரிவுசெய்வார்கள். பிராந்திய அலகுகள் மேலும் பல நிர்வாகக் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கான தலைவர்கள் உறுப்பினர்களால் தெரிவுசெய்யப்படுவார். இந்தக் கமிட்டியின் தலைவர்கள் பிராந்திய சபைக்கான உறுப்பினர்களை பரிந்துரைக்க, இவ்வாறு பரிதுரைக்கப்படும் உறுப்பினர்களால் அப்பிராந்தியத்துக்கான முதலமைச்சர் தீர்மானிக்கப்படுவார். இதன்படி மத்திய அரசாங்கம் பின்வரும் விடயங்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும். சர்வதேச தொடர்பாடல்கள், பாதுகாப்பு, சட்டம் & ஒழுங்கு, காவல்த்துறை, பிரஜாவுரிமை, குடிவரவு & குடியகல்வு, சுங்கத்துறை, தபால் & தொலைத்தொடர்புத்துறை, துறைமுகங்கள், கடல், வான் மற்றும் ரயில் போக்குவரத்து, பிராந்தியங்களுக்கிடையிலான வீதிப் பராமரிப்பு, மின்சாரத்துறை, நீர்ப்பாசனம், அளவைகள், சுகாதாரம் & கல்வி தொடர்பான கொள்கை வகுப்பு, மத்திய வங்கி & பணவியல் கொள்கை. இவை தவிர்ந்த ஏனைய துறைகளும் அதிகாரங்களும் பிராந்திய சபைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பகுதி 4 தமிழும் சிங்களமும் உத்தியோகபூர்வ மொழிகளாக பயன்பாட்டில் இருக்கும் என்றும், வடக்குக் கிழக்கில் நீதிமன்ற சேவைகள் தமிழ் மொழியிலேயே நடைபெறும் என்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நீதிமன்ற சேவைகள் சிங்கள மொழியிலேயே நடைபெறும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் நாட்டில் எந்தவொரு தனிமனிதனும் தனது தாய்மொழியில் அரசாங்கத்துடன் தொடர்பாட முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது. பகுதி 5 இன்படி, பிராந்தியங்களின் மக்களுக்கான அரச கட்டளைகள், அறிவுருத்தல்கள் அவர்களின் தாய்மொழியிலேயே அனுப்பிவைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. பகுதி 3 ஒவ்வொரு தனிமனிதனுக்குமான அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுவதோடு தனிமனிதனுக்கெதிரான அநீதிகளுக்கு எதிராக அம்மனிதன் நீதிச்சேவையினைப் பெற்றுக்கொள்வ்தற்கான அடிப்படை உரிமை என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. உத்தேச அரசியலமைப்பினை வழிநடத்திச் செல்லும் குழுவும், பகுதிகளுக்குப் பொறுப்பான குழுக்களும் 1971 ஆம் ஆண்டு தை மாதத்திலிருந்து தொடர்ச்சியாகக் கூடி கலந்தாலோசித்து வந்தபோதும் கூட, சமஷ்ட்டிக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு நகலினை ஏறெடுத்தும் பார்க்க அவர்கள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை தீர்மானங்களை அரசியல் யாப்பாக்குவதிலேயே குறியாக இருந்தனர். அதன்படி அரசு முன்வைத்த தீர்மானங்களில் முதலாவதாக இலங்கை நாடு சுதந்திரமான, இறமையுள்ள சோசலிசக் குடியரசு என்பது சேர்க்கப்பட்டு, முற்றான ஆதரவுடன், ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவது அடிப்படைத் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது, "இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியினை மட்டுமே கொண்ட நாடாகும்". இது தொடர்பாக சமஷ்ட்டிக் கட்சி தனது கடுமையான ஆட்சேபணையினை அரசிடம் முன்வைத்தபோதும்கூட, அதனை அரசு கண்டுகொள்ளவில்லை. எஸ் தர்மலிங்கம் சமஷ்ட்டிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தர்மலிங்கம் இந்த அரசியலமைப்பில் மாற்றம் ஒன்றினை பங்குனி 16 அன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அவரின் மாற்றம் பின்வருமாறு கூறியது, "இலங்கைக் குடியரசு பிரிவினையற்ற சமஷ்ட்டிக் குடியரசாக இருக்கும்" என்பதாகும். பாராளுமறத்தில் சிங்களத் தலைவர்களிடம் மன்றாட்டமாகப் பேசிய தர்மலிங்கம், இனச்சமத்துவம் இல்லையேல் நாடு பாரிய இனச்சிக்கலுக்குள் அகப்படும் என்றும், பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைக் காணும் என்றும் கூறினார். ஆகவே சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வே தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக் கூடியது என்றும், இதனால் முழு நாடுமே நண்மைஅடையும் என்றும் கூறினார். ஆனால், அரச தரப்பிலிருந்த் அனைத்து உறுப்பினர்களும் தர்மலிங்கத்தின் வேண்டுகோளினை முழுமையாக எதிர்த்துப் பேசியதுடன் சமஷ்ட்டி தொடர்பில் தாம் ஒருபோது சிந்திக்கவோ செயற்படவோ போவதில்லையென்றும் கூறினர். தர்மலிங்கத்தின் பேச்சு கீழே, "உங்களிடம் சமஷ்ட்டி அமைப்புப் பற்றிப் பேச ஆணையோ அதிகாரமோ இல்லையென்றால் குறைந்தபட்சம் மத்திய அரசிடம் குவிந்துகிடக்கும் நிர்வாக அதிகாரங்கச்ளையாவது மாநிலங்களுக்குப் பகிர்ந்துகொடுக்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள்". "நான் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1947 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்ற அமர்விலேயே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் ஒற்றையாட்சி அமைப்பினை முற்றாக நிராகரித்து விட்டார்கள். அதற்கு மேலதிகமாக 1965 இல் இடம்பெற்ற தேர்தல்களிலும் தமிழ் மக்கள் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்விற்கே தமது ஆணையைத் தந்திருக்கிறார்கள்". என்று கூறினார். ஆனால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்த ஆட்சேபணைகளுக்கும் மத்தியிலும் ஒற்றையாட்சியை மையமாகக் கொண்ட அடிப்படை அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு பங்குனி 27 அன்று சட்டமாக்கப்பட்டது. தர்மலிங்கம் ஒரு தீவிர சோஷலிச ஆதரவாளர். சிங்கள அரசுத் தலைவர்களின் இனவாதப் போக்குக் குறித்து மனமுடைந்த அவர் பின்வருமாறு தமிழ்ப் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார், " இன்றைய நாள் இலங்கையின் துரதிஷ்ட்டமான நாள். எனது சிங்கள நண்பர்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சிங்கள மக்கள் பற்றியும், அவர்களின் நலன்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். தமிழர் தரப்பு நியாயங்களை பார்க்க மறுக்கும் அவர்கள் , தமிழர் நலன்கள் பற்றி எதுவித அக்கறையினையும் கொண்டிருக்கவில்லை". ஒற்றையாட்சிக் கோட்பாட்டுக்குள்ளேயே இலங்கையினை வழிநடத்த ஆரம்பித்த சிங்களத் தலைவர்கள், சமஷ்ட்டி கட்சி பரிந்துரைத்த தமிழ் மொழிக்கான அந்தஸ்த்து, உத்தியோக பூர்வ மொழிப் பயன்பாடு குறித்தும் கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்ததுடன், அதனையும் முற்றாக நிராகரித்தும் இருந்தனர். இதற்கு மாற்றீடாக அரசு முன்வைத்த அடிப்படை தீர்மானம் பின்வருமாறு கூறியது, "1965 ஆம் ஆண்டின் இலங்கை அரசியல் யாப்பின் பகுதி 33 இன் படி இலங்கையின் உத்தியோக பூர்வ மொழியாக சிங்களம் மட்டுமே இருக்கும்" என்று கூறியது. இதன்மூலம் சிறிமாவின் அரசு முன்னைய பிரதமர் பண்டாரநாயக்காவின் 1965 ஆம் ஆண்டின் தனிச்சிங்களச் சட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்திருந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழ் மொழியினை முடிந்தளவிற்கு தமிழர் பகுதிகளில் பயன்படுத்தும் சட்டத்தினை மீளவும் கொண்டுவருமாறு சமஷ்ட்டிக் கட்சியினர் முன்வைத்த கோரிக்கையினையும் அரசு முற்றாக நிராகரித்துவிட்டது. அத்துடன், சிங்கள மொழிக்கு விசேட அந்தஸ்த்தும், மொழிரீதியிலான வழக்குகள் பிற்காலத்தில் வருமிடத்து அதற்கெதிரானா காப்பும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. மேலும், அடிப்படை தீர்மானங்களின்படி மொழிதொடர்பான சட்டங்கள் அனைத்தும் சிங்களத்திலேயே இருக்குமென்றும், தேவையேற்படின் அச்சட்டங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான அனைத்துச் சட்டங்களும் தமிழ் மொழியிலும் இருக்கும் எனும் கோரிக்கை இந்த அடிப்படைத் தீர்மானத்தின் மூலம் முற்றாக நிராகரிப்பட்டுப் போனது. அத்துடன், நாடுமுழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே செயற்பாடுகள் நடைபெறவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் சமஷ்ட்டிக் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றச் செயற்பாடுகளில் தமிழ்மொழியே பயன்படுத்தப்படவேண்டும் என்கிற கோரிக்கையும் இச்சட்டத்தின்மூலம் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்தது. கே ஜெயக்கொடி தமிழ் மொழியும், தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முற்றாக நிராகரிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கும், சிங்கள மொழிக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வரையப்பட்டு சட்டமாக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக் குறித்து பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆட்சேபணையினைத் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் சமஷ்ட்டிக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே ஜெயக்கொடி பாராளுமன்றத்தின் தனது ஆட்சேபணையினை பின்வருமாறு தெரிவித்தார், "நீங்கள் குறைந்தத பட்சம் வடக்குக் கிழக்கில் உள்ள நீதிமன்றங்களிலாவது தமிழ் மொழியில் நீதிமன்ற அமர்வுகளை நடத்த அனுமதியுங்கள்" என்று கோரியபோது, சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை எள்ளிநகையாடி, மறுதலித்துக்கொண்டிருந்தனர். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் பெளத்த மதத்திற்கு அதிவிசேட முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அடிப்படை தீர்மானத்தின்படி பெளத்த மதத்திற்கான முன்னுரிமை இவ்வாறு கூறப்பட்டது, " இலங்கைக் குடியரசில் பெளத்த மதத்திற்கு மற்றைய மதங்களைக் காட்டிலும் முக்கிய இடம் வழங்கப்படும். மேலும், பெளத்த மதத்தினை போற்றிப் பாதுகாத்து, அதனை மேலும் வளர்ப்பது அரசுகளின் தலையாய கடமையாகும். மற்றைய மதங்களுக்கான உரிமைகள் இச்சசனத்தின் 18 ஆம் பகுதி, பிரிவு 1 "டி" இல் குறிப்பிடப்பட்டதுபோல வழங்கப்படும்" என்றும் கூறப்பட்டிருந்தது. சிங்கள பெளத்த மக்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி இந்த அரசியலமைப்பை வரைந்தவர்கள் இத்துடன் நிற்கவில்லை. சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் பகுதி 29 இல் குறிப்பிட்டிருந்த "சிறுபான்மையின மக்களுக்கெதிரான செயற்பாடுகளிலிருந்தான பாதுகாப்பு" எனும் சரத்து இப்புதிய அரசியலமைப்பில் முற்றாக நீக்கப்பட்டிருந்தது. சோல்பரி யாப்பு, பகுதி 29 , பிரிவு 2C இன் பிரகாரம் ஒரு மதமோ, இனமோ ஏனைய மதத்தினருக்கோ அல்லது இனமக்களுக்கோ பாதகம் விளைவிக்கும் வகையில் சட்டங்கள் பாராளுமன்றத்தால் இயற்றப்படுவதைத் தடுக்கும் சட்டமும் இந்தப் புதிய அரசியலமைப்பில் இருந்து முற்றாக அகற்றப்பட்டது. பல லட்சம் மலையகத் தமிழரின் வாக்குறிமைகளைப் பறித்தபோது நடைமுறையிலிருந்த சோல்பரி யாப்பின் சட்டம் அம்மக்களைக் காக்க முடியாதபோதும், அச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்வரை எதிர்காலத்தில் சிங்கள மக்களின் நலன்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கையினையும் இச்சோலப்ரி யாப்பின் சட்டம் தடுத்துவிடலாம் என்று அஞ்சிய சிறிமாவோ, இந்த சரத்து முற்றாக நீக்கப்படவேண்டும் என்று அரசியலமைப்பினை வரைந்தவரான கொல்வி ஆர் டி சில்வாவிடமும் ஏனைய சிங்களவர்களிடமும் கூறியிருந்தார். அத்துடன், பாராளுமன்றமே அதியுயர் அதிகாரம் மிக்க அமைப்பு என்று கூறியதுடன், பாராளுமன்றத்தில் அதிகப்படியான பெரும்பான்மையினைக் கொண்ட சிங்களவர்களின் பலம் மேலும் அதிகரிக்கப்படுவதோடு, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையேலே நாடு இயங்கும் என்பதும் இதன்மூலம் உறுதியாகியது.2 points -
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023
20% மிஞ்சி மிஞ்சி போனால் - 1/3. 2/3 எல்லாம் ஓவர் கனவு🤣. ரஜனி அரசியலுக்கு வரணும் - வாங்கணும்🤣 நன்றி நொச்சி, கிரைமியாவை உக்ரேன் பிடிக்க அமெரிக்கா விடாது என நினைக்கிறேன். அத்தனையும் நடக்க சாத்தியம் இருக்கு. போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும். கொலரை தூக்கி விட்டு விலாசம் காட்ட ரெடியாகவும். பங்கு பற்றாதோர் - வரலாற்றில் பெயர் வரக்கூடிய வாய்ப்பை தவற விட்டோமே என டிசம்பர் 2023 வரை அங்கலாய்க்கவும்🤣.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointமக்கள் விடுதலை முன்னணியின் கலகம் சித்திரை ஐந்தாம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினர் தமது தாக்குதல்களை மொனராகலைப் பகுதியிலும், வெல்லவாயாப் பகுதியிலும் ஆரம்பித்தனர். மாலையே அரம்பிக்க திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், தவறான தொடர்பாடலினால் முன்னரேயே அரம்பித்து விட்டிருந்தது. சித்திரை 2 ஆம் திகதி வித்யோதய சங்கராமய எனும் பெளத்த விகாரையில் கூடிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் நாடுதழுவிய ரீதியில் தமது தாக்குதல்களை சித்திரை 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நாட்டிலுள்ள அனைத்து ராணுவ மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதும் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பதென்று முடிவெடுத்திருந்தார்கள். சங்கேத மொழியில் அனுப்பப்பட்ட தந்தி ஒன்றில் "ம.வி.மு அப்புஹாமி இறந்துவிட்டார், நல்லடக்கம் 5" என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பிப்பதற்கு சமிக்ஞையாக அரச வானொலியில் "நீல கொப்பேயா" எனும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து மொனராகலையிலும், வெல்லவாயாவிலும் ஆயத்தமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணியினர் காலையிலேயே தாக்குதலை ஆரம்பித்துவிட்டனர். சுதாரித்துக்கொண்ட சிறிமாவின் அரசு நாட்டின் ஏனைய பொலீஸ் ராணுவ முகாம்களை உஷார் நிலைக்குக் கொண்டுவந்தது. தாக்குதலை எதிர்பார்த்து பொலீஸாரும் ஆயத்தத்துடன் இருந்தனர். தாக்குதலை முறியடித்து, முன்னேறும் முயற்சிகளையும் பொலீஸார் மேற்கொண்டனர். தமது தவற்றினை உணர்ந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியினருக்கு, தாக்குதலைத் தொடர்ந்து நடத்துவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை. சுமார் 25 - 30 வரையான இளைஞர்கள், பொலீஸ் நிலையங்களைச் சுற்றிவளைத்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பெற்றொல்க் குண்டுகளையும், கையெறிகுண்டுகளையும் பாவித்து தாக்குதல் நடத்தத் தொடங்கினர். நாடு முழுவதுமிருந்த 273 பொலீஸ் நிலையங்களில் 93 பொலீஸ் நிலையங்கள் மக்கள் விடுதலை முன்னணியினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. பலவீனமான பகுதிகளில் அமைந்திருந்த காவல் நிலையங்களை அரசாங்கமே மீளப்பெற்றுக்கொண்டது. சிங்களக் கலகக்காரர்கள் மிகவும் பலவீனமான ஆயுதங்களை வைத்திருந்தனர், அவர்களில் எவருக்குமே தரமான போர்ப்பயிற்சிகள் கிடைத்திருக்கவில்லை, அவர்களைச் சரியான திட்டத்தில் வழிநடத்தத்தன்னும் தலைவர்கள் இருக்கவில்லை. அவர்களின் ஆரம்ப வெற்றிகளுக்கான ஒரே காரணம் பொலிஸார் இத்தாக்குதல் பற்றி அறிந்திருக்காமைதான். ஆனால், ஆரம்பகட்டத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டவுடன், தன்னை மீள ஒருங்கமைத்த அரசகாவல்த்துறை கடுமையான எதிர்த்தாக்குதலை முடுக்கிவிட்டது. ராணுவமும் துணைக்கு அழைக்கப்பட்டதுடன், வெளிநாடுகளிலிருந்தும் உதவி கோரப்பட்டது. பல நாடுகள் உதவிசெய்ய, இந்தியாவும் தன்பங்கிற்கு உலங்கு வானூர்திகளையும், வானிலிருந்து குதிக்கும் தாக்குதல் ராணுவக் குழுக்களையும் உடனடியாக அனுப்பிவைத்தது. http://telo.org/telooldnews/wp-content/uploads/2014/11/Premawathie-Manamperi.jpg கடுமையான முறியடிப்புத் தாக்குதலில் ஈடுபட்ட ராணுவம் சுமார் 3 வாரங்களில் கலகக்காரரின் முதுகெலும்பை முறித்துப் போட்டது. மேலும், ஆண்டின் இறுதியில் சுமார் 18,000 கலகக்காரரும், ஆதரவாளர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அரச தகவல்களின்படி சுமார் 5,000 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. ஆனால், குறைந்தது 25,000 சிங்கள இளைஞர்கள் இதன்போது பலியானதை அரசு உத்தியோகபூர்வமற்ற வகையில் ஒத்துக்கொண்டிருந்தது. கடுமையான சித்திரவதைகளும், கூட்டுப் படுகொலைகளும் இடம்பெற்றதற்கான சான்றுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் அரசினால் நிராகரிக்கப்பட்டன. ஹம்மெர்ஹெயில் கோட்டை ஹம்மெர்ஹயில் கோட்டை இத்தாக்குதல்களின்ப்பொது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒருவிடயம் கொழும்பில் தங்கியிருந்த சிறிமாவும், அவரது பிள்ளைகளும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றினுள் ஒளிந்துகொண்டதுதான். கொழும்பு நகர் பாதுகாப்பானதாக வரும்வரை அவர்கள் அக்கப்பலிலேயே தஞ்சமடைந்திருந்ததாக அறியமுடிகிறது. ஆனால், தமிழர்கள் ஆர்வம் காட்டிய இன்னொரு செய்தியிருக்கிறது. அதுதான் யாழ்ப்பாணம் காரைநகர் ஹம்மெர்ஹயில் கோட்டையில் அமைந்திருந்த கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவும் அவரது தோழர்கள் 12 பேரையும் மீட்க அக்குழு முயன்ற செய்தி. தமிழர்கள் வங்கதேச விடுதலையிலும் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தனர். இந்தியத் துணைக்கண்ட சுதந்திரத்தின்போது இந்தியா பாக்கிஸ்த்தான் எனும் இரு நாடுகளாகப் அது பிரிக்கப்பட்டது. பிரிக்கப்படுவதற்கு முன்னர், முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்த பகுதிகள் பாக்கிஸ்த்தானுக்குள் சேர்க்கப்பட்டன. இந்தப் பகுதிகள் மேற்குப் பாக்கிஸ்த்தான் என்றும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் என்று இரு பிரிவுகளாக இருந்தன. பாக்கிஸ்த்தானின் இவ்விரு மாநிலங்களுக்குமிடையே சுமார் 1600 கிலோமீட்டர்கள் அகலமான இந்தியப் பகுதி அமைந்திருந்தது. பாக்கிஸ்த்தானின் இரு பகுதிகளிலும் நிலப்பரப்பில் பெரிய பகுதி மேற்குப் பாக்கிஸ்த்தான் ஆகும். இதனுள் பஞ்சாப், சிந்த், பாலுச்சிஸ்த்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்பகுதி ஆகிய நான்கு மாநிலங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. கிழக்குப் பாக்கிஸ்த்தானில் கிழக்கு வங்காளம் எனப்படும் பகுதிமட்டுமே இருந்தது. சனத்தொகையில் கிழக்குப் பாக்கிஸ்த்தான் மேற்குப் பாக்கிஸ்த்தானைக் காட்டிலும் அதிகமான மக்களைக் கொண்டிருந்தது. ஆனால், சுதந்திரத்தின்பின்னர் பாக்கிஸ்த்தானின் அரசியல்ப் பலம் மேற்குப் பாக்கிஸ்த்தானின் உயர்மட்ட வர்க்கத்தின் கைகளிலேயே குவிந்து கிடந்தது. நாட்டின் மொத்த வருமானத்தின் பெரும்பகுதி மேற்குப் பாக்கிஸ்த்தானின் அபிவிருத்திக்கே செலவிடப்பட்டதுடன், கிழக்குப் பாக்கிஸ்த்தான் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்தது. மேற்குப் பாக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்களால் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும், சுரண்டப்படுவதாகவும், தம்மை மாற்றாந்தாய் மனப்பாங்கோடு மேற்குவாசிகள் நடத்துவதாகவும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் மக்கள் அதிருப்தியடையத் தொடங்கியிருந்தார்கள். இந்தப் பிணக்கு மெதுமெதுவாக வெளிக்கிளம்பத் தொடங்கியது. பாக்கிஸ்த்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அரசியல் ஸ்த்திரத்தனமையினமையாலும், பாரிய பொருளாதார நெருக்கடிகளினாலும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்தது. மக்களாட்சி முறை தோற்கடிக்கப்பட்டு ராணுவ ஆட்சியே அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. மேற்கின் ராணுவ ஆட்சியினை வெறுத்த கிழக்குப் பாக்கிஸ்த்தான் மக்கள் தமது தலைவராக ஷேக் முஜிபுர் ரகுமானை தேர்வுசெய்து, மேற்கின் ராணுவ ஆட்சிக்கெதிரான தமது எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் காட்டி வந்தனர். அவாமி லீக் எனப்படும் அரசியல்க் கட்சியை ஆரம்பித்த முஜிபுர் ரகுமான் பிரிக்கப்படாத பாக்கிஸ்த்தானில், சமஷ்ட்டி அடிப்படையில் கிழக்குப் பாக்கிஸ்த்தானுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கோரிவந்தார். 1970 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேசிய பாராளுமன்றத் தேர்தல்களில் 313 ஆசனங்களில் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி 170 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆட்சியமைக்கப் போதுமான பலத்தை முஜிபுர் ரகுமான் பெற்றுக்கொண்டபோதும், மேற்குப் பாக்கிஸ்த்தானின் ஆளும்வர்க்கம் அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்ததுடன், அவரது கட்சியான அவாமி லீக்கையும் தடைசெய்தது. இதனையடுத்து பாக்கிஸ்த்தான் முழுவதும கடுமையான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன. அன்றைய பாக்கிஸ்த்தான் ஜனாதிபதி யகயா கான் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க தனது மகனான டிக்கா கானை அனுப்பிவைத்தார்.1971 ஆம் ஆண்டு பங்குனி 25 அன்று அவரது பணிப்பின்கீழ் செயற்பட்ட ராணுவம் கலகக்காரர்களுக்கெதிரான நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்லாயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டனர். கிழக்குப் பாக்கிஸ்த்தானின் ராணுவத்தைக் கலைத்து, நிராயுதபாணிகளாக்க மேற்கு பாக்கிஸ்த்தான் ராணுவம் முயன்றது. இந்த நடவடிக்கைக்காக மேற்கிலிருந்து விமானம் மூலம் ராணுவத்தினரைக் கொண்டுவரவேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டது. பாக்கிஸ்த்தான் ராணுவத்தில் பணியாற்றிய வங்களி இன அதிகாரிகளும், சிப்பாய்களும் ராணுவத்திலிருந்து விலகி சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் சேர்ந்துகொண்டனர். முஜிபுர் ரகுமானின் நெருங்கிய ஆதரவாளர்களும் இன்னும் பத்து மில்லியன் வங்காளிகளும் இந்தியாவுக்குத் தப்பியோடினர். அங்கே தமக்கான தற்காலிக அரசாங்கம் ஒன்றையும் அவர்கள் அமைத்தனர். கிழக்குப் பாக்கிஸ்த்தானை விடுவிப்பதற்கான போரில் ஈடுபட்டுவரும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் சுதந்திர போராட்ட வீரர்களான முக்திபாகினி அமைப்பிற்கு ராணுவ ரீதியில் உதவும் முடிவினை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் எடுத்தார். முக்திபாகினி கெரில்லாக்கள் இந்திய எல்லைக்குள், கிழக்குப் பாக்கிஸ்த்தானின் எல்லையோரங்களில் தொடர்ச்சியான முகாம்களை அமைத்து வந்தார்கள். இந்த முகாம்கள் மீது மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவம் கடுமையான ஷெல்வீச்சுத்தாக்குதலை மேற்கொண்டபோது, இந்தியாவும் பதில்த்தாக்குதல் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனையடுத்து மேற்குப்பகுதியூடாக இந்தியாவினுள் நுழைந்து தாக்குதல் நடத்த பாக்கிஸ்த்தான் ராணுவம் திட்டமிட்டபோது, இந்தியா முழு அளவிலான போரை மார்கழி 3 ஆம் திகதி பாக்கிஸ்த்தான் மீது ஆரம்பித்தது. இந்திய ராணுவமும், வங்காளி கெரில்லாக்களும் இணைந்து நடத்திய தாக்குதலில் கிழக்குப் பாக்கிஸ்த்தனில் நிலைகொண்டிருந்த மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவம் நிலைகுலைந்துபோனது. மார்கழி 16 ஆம் திகதி கிழக்கிலிருந்து பாக்கிஸ்த்தான் ராணுவம் முற்றாகச் சரணடைய சுதந்திர வங்காளதேசம் உருவானது. ஆயுதப் போராட்டம்பற்றிய எண்ணத்தை ஆரம்பித்திருந்த தமிழ் இளைஞர்கள் தெற்கின் தோல்வியடைந்த ம.வி.மு இன் போராட்டத்தையும், சுதந்திர வங்காளதேசத்தின் உருவாக்கத்தையும் உன்னிப்பாக அவதானித்து சில பாடங்களையும் கற்றுக்கொண்டனர். இன்று கனடாவில் வசித்துவரும் முன்னாள் போராளியொருவர் கூறுகையில், "நாம் இந்த இரு சம்பவங்களையும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்தோம். இவையிரண்டிலும் இருந்து ஏறாளமான பாடங்களை நாம் கற்றுக்கொண்டோம். இவ்விரு நடவடிக்கைகளும் எம்மை உற்சாகப்படுத்தியிருந்தன. எம்மை இந்த நிகழ்வுகள் வெகுவாக ஊக்கப்படுத்தியிருந்தன" என்று கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினரின் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும்கூட, அரச படைகள் மேல் தாக்குதல் நடத்துவதென்பது சாத்தியமானதுதான் என்கிற நம்பிக்கையினை தமக்கு அது ஏற்படுத்திவிட்டிருந்ததாகவும் அவர் கூறினார். உத்வேகமும், இலட்சியம் மீதான உறுதியும், ஆயுதங்களும் சரியான தலைமையும் வாய்க்கப்பெறுமிடத்து அரச படைகள் மேல் தாக்குதல் நடத்தி வெற்றிபெறுவதென்பது சாத்தியமானதுதான் என்பதை ம.வி. மு இனரின் தாக்குதல் முயற்சி தமக்கு ஏற்படுத்தியதாக அவர் மேலும் கூறினார். "அவர்களின் தாக்குதல் முயற்சி சிறுபிள்ளைத்தனமானது, அவர்களிடம் சரியான ஆயுதங்கள் இருக்கவில்லை, பயிற்சிகள் ஏதுமின்றியே அவர்கள் தாக்குதலை ஆரம்பித்தார்கள், அவர்களின் தலைமை மிகவும் பலவீனமானதாக இருந்தது, அதனாலேயே அவர்களது திட்டம் பிழைத்துப்போனது" என்றும் அவர் கூறினார். "நாங்கள் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம், கைப்பற்றும் ஒரு பிரதேசத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டால், அப்பிரதேசத்தைக் கைப்பற்ற முயற்சிக்கக் கூடாது என்பதுதான். இதன்படி, ம.வி. மு செய்தது தற்கொலைக்குச் சமனானது. ஆரம்பத்தில் பாரிய நிலப்பரப்புக்களை அவர்கள் கைப்பற்றிக்கொண்டாலும், பின்னர் ராணுவமும் பொலீஸாரும் பதில்த்தாக்குதல்களை ஆரம்பித்தபோது, அவர்களை தாம் கைப்பற்றிய இடங்கள் அனைத்தையும் கைவிட்டு விட்டு ஓடி ஒளித்துக்கொண்டனர். அதனேலேயே நாம் மறைந்திருந்து தாக்கிவிட்டு, மறைந்துவிடும் நகர்ப்புற கெரில்லா பாணியைக் கையாண்டோம்". "அதேவேளை, வங்கதேச உருவாக்கத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மிகவும் சிக்கலானவை. சமஷ்ட்டிக் கட்சியின் பிரச்சாரகரான மாவை சேனாதிராஜாவோ அல்லது இளைஞர்களை உசுப்பேற்றும் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் மற்றும் கோவை மகேசன் ஆகியோர் போதிக்கும் பாடங்களைப் போலல்லாமல் மிகவும் சிக்கலானவை" என்று அவர் மேலும் கூறினார். பிரதமர் இந்திரா காந்தியின் பாக்கிஸ்த்தானின் மீதான ராணுவ வெற்றியையும், வங்கதேச உருவாக்கத்தையும் பாராட்டி சமஷ்ட்டிக் கட்சியினர் 1972 ஆம் ஆண்டு தைமாதம் 12 ஆம் திகதி காங்கேசந்துறையில் 7 கட்சி பேரணியொன்றை நடத்தியிருந்தனர். அங்கே சமூகமளித்திருந்த இளைஞர்களின் தலைவர்கள், இலங்கையிலும் இந்தியா வங்கதேசத்தில் செய்ததுபோல தமிழர்களுக்கென்று தனிநாட்டை விடுவித்துதரும் என்று மக்களிடம் கூறத் தலைப்பட்டனர். ஆனால், அவர்கள் கவனிக்கத் தவறிய ஒருவிடயம் தான் வங்கதேசத்தின் விடுதலையென்பது வெறுமனே இந்திய ராணுவத்தின் நடவடிக்கையினால் மட்டுமே உருவானதல்ல என்பது. நன்கு பயிற்றப்பட்டு, நன்றாக ஆயுதம் தரித்த, வெகுவாக ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான வீரர்களைக்கொண்ட முக்திபாகினி எனும் கிளர்ச்சிப்படையுடன் சேர்ந்தே இந்திய ராணுவம் மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவத்தைத் தோற்கடித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், சமஷ்ட்டிக் கட்சி தனது வன்முறையற்ற அகிம்சா ரீதியிலான போராட்டப் பாதையினை மாற்ற ஒருபோதுமே தயாராக இருக்கவில்லை. அமிர்தலிங்கம் மட்டுமே அயுதப் போராட்டம் தொடர்பான சாதகமான எண்ணத்தைக் கொண்டிருந்தார். ஆனால், அவர்கூட மிகவும் அவதானமாக, மேலெழுந்தவாரியாக இதுகுறித்துப் பேசிவந்தார். "தமிழர்கள் தீர்க்கமான விடுதலைப் போராட்டம் ஒன்றின் மூலம் தமக்கான தனியான நாட்டினை அடைவதற்கான நேரம் நெருங்கியிருக்கிறது. இதனை அடைவதில் வெளிநாட்டு உதவியினைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டக் கூடாது. சுதந்திரம் கடையில் வாங்கும் சரக்கல்ல. ஒரு கடுமையான போராட்டம் மூலமே அதனை நாம் பெற்றுக்கொள்ளமுடியும், தேவையேற்பட்டால் நாம் அதற்காக இரத்தம் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வங்கதேசத்து மக்களை முன்னுதாரணமாகப் பாவித்துப் போராட வேண்டும்" என்று அவர் கூறினார். ஆனால், போராளிகள் வங்கதேசப் போரை அரசியல்க் கட்சித் தலைவர்களைக் காட்டிலும் மிகவும் ஆளமாக ஆராய்ந்தனர். அதன்மூலம் அவர்கள் ஒரு முடிவிற்கு வந்திருந்தனர், "தமிழர்கள் தமக்கான தனிநாட்டினை அடைவதற்கு இந்தியா ஒருபோதும் துணை நிற்காது". தனது எதிரியான பாக்கிஸ்த்தானைப் பலவீனப்படுத்தவே இந்தியா வங்கதேசப் போரில் இறங்கியது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலும் இருந்து பாக்கிஸ்த்தானின் அச்சுருத்தலை அது எதிர்கொண்டு வந்தது. சீனாவுடனான அதன் மோதலையடுத்து வடக்கிலிருந்தும் அது அச்சுருத்தலினை எதிர்நோக்கத் தொடங்கியிருக்கிறது. ஆகவேதான், மேற்குப் பாக்கிஸ்த்தானிலிருந்து கிழக்குப் பாக்கிஸ்த்தானைப் பிரித்தெடுத்து, தனியான நாடாக அங்கீகரிப்பதன்மூலம், கிழக்கிலிருந்த எதிரியை அது இல்லமலாக்கியிருக்கிறது. ஆனால், இலங்கையிலோ நிலைமை வித்தியாசமானது. இலங்கையிலிருந்து ஈழத்தை இந்தியா பிரித்துக் கொடுத்தால், ஈழம் எனும் நட்பு அயல் நாட்டை அது கொண்டிருக்கும். ஆனால், அது இந்தியாவுக்கெதிரான இலங்கை எனும் நாட்டை உருவாக்கிவிடும். இந்த புதிய எதிரி நாடு இந்தியாவின் எதிரிகளுடன் சேர்ந்துவிடும். ஆகவேதான், இந்தியா ஒருபோதுமே ஈழம் எனும் தமிழருக்கான தனிநாடு உருவாவதற்கு எமக்கு உதவப்போவதில்லை. அவர்கள் கூறுவது சரிதான். இந்தியாவின் அன்றைய நிலைப்பாடும், இன்றைய நிலைப்பாடும் இதுதான் என்பதும் சந்தேகமில்லை.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பையா… சில படங்களை, முகநூலில் இருந்து எடுக்கும் போது.. சம்பந்தப் பட்ட முகநூல் பொறுப்பாளர், சில நாட்களில் தனது படத்தை நீக்கினால் இங்கு இணைத்த அந்தப் படமும் நீக்கப் பட்டு விடும் என்பதால்… மீண்டும் அந்தப் படத்தை எடுப்பது சிரமம்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointரஞ்சித் உங்கள் சேவை தொடரட்டும்.1 point- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇலங்கைக் குடியரசு யாப்பு தமிழ் மாணவர் பேரவை வீதிப் போராட்டங்களையும், சுவரொட்டிப் போராட்டத்தினையும் முடுக்கிவிட்டிருந்த அதே காலப்பகுதியில் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பை வரைவதற்கு அரசியலமைப்புச் சபையொன்றினை உருவாக்கியது. புதிய அரசியலமைப்பின்படி இலங்கை நாடானது சுதந்திரமான, இறைமையுள்ள குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு உழைப்பதாகக் கூறிச் செயற்பட்டு வந்த சமஷ்ட்டிக் கட்சியும் அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசுக்கு உதவ முன்வந்திருந்தது. ஆனால், சமஷ்ட்டிக் கட்சியின் அரசுடனான இந்த ஒத்துப்போதல் முடிவிற்கு தமிழ் இளைஞர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. உத்தேச அரசியலமிப்பிற்கும் தமிழ்ப் பராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பிருக்கக் கூடாது என்று வாதிட்ட இளைஞர்கள் இந்த அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படும்பொழுது, தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டு சிங்களவர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் இச்சட்டம் அமுலாக்கப்படும் என்றும், ஏற்கனவே நலிந்துபோயுள்ள தமிழரின் இன்றைய நிலை உலகத்தின்முன்னால் மேலும் பலவீனமாக்கப்பட்டுவிடும் என்றும் அவர்கள் வாதாடினர். சுந்தரலிங்கமும் நவரட்ணமும் இந்த அரசியல் யாப்புருவாக்க முயற்சியிலிருந்து சமஷ்ட்டிக் கட்சியை விலகிநிற்குமாறு தம்மால் ஆன அனைத்து வழிகளிலும் போராடிப் பார்த்தனர். ஆனால், அரசியல் யாப்புருவாக்கத்தில் தனது பங்களிப்பினையும் நல்குவது எனும் முடிவில் சமஷ்ட்டிக் கட்சி மிகவும் உறுதியாக நின்றுவிட்டது. தமது இறுதி முயற்சியாக சுந்தரலிங்கமும் நவரட்ணமும் சமஷ்ட்டிக் கட்சியின் யாழ்ப்பாண நகர மேயர் நாகராஜாவின் வீட்டில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர்களை சந்தித்து அவர்களை அரசியலமைப்பு விவகாரத்திலிருந்து விலகும்படி கேட்கச் சென்றிருந்தனர். ஆனால், அங்கு பேசிய அமிர்தலிங்கம், "அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு சமஷ்ட்டிக் கட்சியினைப் போகக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை" என்று மிகவும் கண்டிப்பாகக் கூறினார். பிரபல சிங்கள பெளத்த இனவாதிகளுடன் அமிர்தலிங்கம் சுந்தரலிங்கத்திடமும், நவரட்ணத்திடமும் பேசிய அமிர்தலிங்கம், "இலங்கை சமசமாஜக் கட்சியின் உப தலைவர் கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவே அரசியலமைப்பு விவகார அமைச்சராகவும் மலையகத் தோட்டங்களின் அமைச்சராகவும் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் எமது பாராளுமன்ற உறுப்பினர் திருச்செல்வத்துடன் பேசும்போது புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கென்று பல சலுகைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தினை தவறவிடக் கூடாதென்று கூறியிருக்கிறார்" என்றிருக்கிறார். சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்களை நம்பவைத்து ஏமாற்றிய கொல்வின் ஆர் டி சில்வா - சிறிமாவுக்கு இடதுபுறத்தில். 1956 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்த விரல்விட்டு எண்ணக்கூடிய சிங்களவர்களில் கொல்வின் ஆர் டி சில்வாவும் ஒருவர் என்பதால் அமிர்தலிங்கம் உட்பட பல சமஷ்ட்டிக் கட்சி தலைவர்கள் அவர்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். "ஒரு மொழியென்றால் இரு நாடு, இரு மொழியென்றால் ஒரு நாடு" என்ற கொல்வின் ஆர் டி சில்வாவின் மயக்க வார்த்தைகளில் மதிமயங்கிய சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்கள், அவரால் தாம் முழுமையாக ஏமாற்றப்படவிருக்கிறோம் என்பதனை அப்போது அறிந்திருக்கவில்லை.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஎரிக்கப்பட்ட பேரூந்து பிரபாகரனின் முதலாவது வன்முறைச் செயற்பாடு 1970 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்றது. அவரும் அவரது மூன்று தோழர்களும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தொன்றிற்குத் தீமூட்டியிருந்தனர். அரசாங்கத்தின் தமிழர் விரோதச் செயற்பாடுகளுக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் நோக்கில் அரசுடைமைகளை எரியூட்டுவது சரியானதாக அவர்களுக்குப் பட்டது. ஆனால், அவ்வாறு அரசுடைமைகளைச் சேதப்படுத்தும்போது பொதுமக்கள்ளுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் அவர்கள் மிகக் கவனமாக செயற்பட்டுவந்தனர். வல்வெட்டித்துறைக்கான தனது அன்றைய சேவையினை முடித்துக்கொண்டு பருத்தித்துறையில் அமைந்திருக்கும் பேரூந்து டிப்போவுக்கு வரும்வழியில் அதனை எரிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. வல்வெட்டித்துறைக் கிராமத்தின் மூலையிலிருந்த ஒதுக்குப்புறமான வீதியின் அருகில் பிரபாகரனும் அவரது தோழர்கள் மூவரும் கைகளில் பெற்றோல் கொள்கலன் ஒன்றையும், தீப்பெட்டிகளையும் ஏந்திக்கொண்டு காத்திருந்தனர். தூரத்தில் பேரூந்தின் விளக்குகளின் வெளிச்சத்தைக் கண்ட தோழர்கள் இருட்டினுள் நழுவிவிட, பிரபாகரன் நிதானமாக தாம் கொண்டுவந்திருந்த தென்னை மரக் குற்றியினை வீதிக்குக் குறுக்காக இழுத்துப் போட்டார். தமக்கு முன்னால் விதிக்குக் குறுக்கே கிடந்த தென்னங்குற்றியை அகற்றிவிட பேரூந்தின் சாரதியும் நடத்துனரும் கீழே இறங்கிவர, அவர்களை பேரூந்தைவிட்டு விலகிச் செல்லுமாறு விரட்டினார் பிரபாகரன். மக்கள் எவருமற்றை வெற்றுப் பேரூந்தின் மீது தான் கொண்டுவந்த பெற்றோலினைத் தெளித்துவிட்டு, பேரூந்திற்குத் தீமூட்டினார். இந்தச் சம்பவத்தின் பின்னர் தோழர்களிடையே பிரபாகரனுக்கான மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. சோமவீர சந்திரசிறி சிவகுமாரனின் முதலாவது வன்முறைச் செயற்பாடு 1970 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இடம்பெற்றது. சிங்களப் பெளத்த இனவாதி என்று தமிழரால் பரவலாக அறியப்பட்ட உதவிக் கலாசார அமைச்சர் சோமவீர சந்திரசிறி உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து அவர்மேல் தக்குதல் நடத்தத் திட்டமிட்ட சிவகுமாரன் காரின் அடிப்பகுதியில் தான் கொண்டுவந்த குண்டினைப் பொறுத்திவிட்டு கூட்டத்திற்குள் மறைந்துபோனார். சிறிது நேரத்தில் குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதற உதவியமைச்சரின் காரும் பலத்த சேதமடைந்தது. ஆனால், இத்தாக்குதலில் அமைச்சருக்கோ அல்லது வெறு எவருக்குமோ எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இன்னொரு தாக்குதல் முயற்சியையும் சிவகுமாரன் மேற்கொண்டார். அன்றைய காலத்தில் யாழ்ப்பாண நகர மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவை இலக்குவைத்து 1971 ஆம் ஆண்டு மாசி மாதம் ஒரு குண்டுத்தாக்குதலை அவர் மேற்கொண்டார். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த துரையப்பாவின் கார்மீது தான் கொண்டுவந்த கையெறிகுண்டை அவர் வீசியெறிய காரும் பலத்த சேதமடைந்தது. ஆனால், துரையப்பா அப்போது அங்கிருக்காததினால் தப்பித்துக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தான் மேயராக இருந்த 1971 முதல் 1975 வரையான காலப்பகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக அல்பிரெட் துரையப்பாவே செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதமிழ் மாணவர் பேரவையின் உருவாக்கம் சமஷ்ட்டிக் கட்சியினரின் உதவியினை இதுதொடர்பாக நாடிய மாணவர்கள், புதிய தரப்படுத்தல் திட்டத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரியிருந்தனர். ஆனால், சமஷ்ட்டிக் கட்சி இதற்கு உடனடியான பதில் எதனையும் வழங்க விரும்பவில்லை. சமஷ்ட்டிக் கட்சியின் மெளனத்தினால் ஆத்திரமடைந்த சில இளைஞர்கள், இத்தரப்படுத்தலுக்கெதிரான நடவடிக்கைகளை தமது கைகளில் எடுப்பதற்காக யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் ஒன்றுகூடினார்கள். அவர்களிடம் சத்தியசீலன் பேசும்போது, "நாம் தமிழ்க் காங்கிரஸ் மீது ஒருநாளுமே நம்பிக்கை வைத்தவர்கள் இல்லை. அது மிகவும் பழமையானதும், புதிய சிந்தனைகளை அறவே ஒதுக்குவதுமான ஒரு கட்சி. அதேபோல சமஷ்ட்டிக் கட்சியும் பழமைநோக்கிச் செல்வதுடன், இளைஞர்களின் உணர்வுகளுக்கு, குறிப்பாக மாணவர்களின் பிரச்சினைக்கு ஒருபோதுமே செவிசாய்த்ததில்லை. ஆகவே, எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எமக்கு புதிய அமைப்பொன்று தேவை". ஆகவே அந்த மாணவர் குழு தமக்கான புதிய அமைப்பொன்றை உருவாக்கியது. அதற்கு "தமிழ் மாணவர் பேரவை" என்று அவர்கள் பெயரிட்டனர். அவ்வமைப்பின் தலைவராக சத்தியசீலன் பொறுப்பெடுத்ததோடு, செயலாளராக திஸ்ஸவீரசிங்கம் செயற்பட்டார். இந்த அமைப்பில் சிவகுமாரன், அரியரத்திணம் மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஆரம்பத்தில் உயர்தரம் வரை கல்விகற்ற மாணவர்கள் மாத்திரமே அமைப்பினுள் சேர்க்கப்பட்டபோதும்கூட பின்னர் அது சாதாரண தரம் வரை கற்ற மாணவர்களையும், அண்மையில் பாடசாலையினை விட்டு நீங்கிய மாணவர்களையும் சேர்த்துக்கொண்டது. ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் சிவகுமாரன் அமைப்பை விட்டு வெளியேற பிரபாகரன் சேர்ந்துகொண்டார். 1971 ஆம் ஆண்டு தை 12 ஆம் திகதியன்று நடைபெறவிருந்த சமஷ்ட்டிக் கட்சியின் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்தத் தரப்படுத்தல் திட்டம் தொடர்பாக பேசவேண்டும் என்று கேட்பதற்காக மாணவர் பேரவையினர் அமிர்தலிங்கத்தை அணுகியிருந்தனர். ஆகவே சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த அமிர்தலிங்கம் மாணவர்களின் கோரிக்கை பற்றி பொதுச்சபையில் பேசியதோடு பாராளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசுமாறு மாணவர்கள் விடுத்த வேண்டுகோளினையும் அக்கூட்டத்தில் குறிப்பிட்டார். ஆனால், 1970 தேர்தல்களில் காரைநகர் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ தியாகராஜாவிடம் தோற்றிருந்த அமிர்தலிங்கம் பாராளுமன்றம் செல்லத் தவறியதோடு, சமஷ்ட்டிக் கட்சியும் மாணவர்களின் ஆதங்கத்தின் ஆழத்தினைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டிருந்ததுடன், இன்னும் ஐந்து பிரச்சினகளுடன் இன்னொன்றாக இத்தரப்படுத்தல்பற்றிப் பேசலாம் என்று வாளாவிருந்துவிட்டது. தந்தை செல்வாவுடன் அமிர்தலிங்கம் சமஷ்ட்டிக் கட்சியின் பொதுச்சபையில் விவாதிக்கப்பட்ட சில விடயங்களை பிரத மந்திரியுடன் பேசுவதற்கென்று சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து தந்தை செல்வா தலைமையில் 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். தன்னை சந்திக்க விரும்பிய சமஷ்ட்டிக் கட்சியின் உறுப்பினர்களை கல்வியமைச்சர் பாடி உட் டின் மகமூட்டுட்டன் பேசுமாறு அனுப்பிய சிறிமாவோ, கல்வித்திட்டத்தில் மாற்றங்கள் சிலவற்றைச் செய்ய ஒத்துக்கொண்டாலும்கூட தரப்படுத்தல் திட்டம் அப்படியே தொடரும் என்பதனை சமஷ்ட்டிக் கட்சியின் உறுப்பினர்களிடம் கண்டிப்பாகக் கூறினார். அவ்வாறே அக்குழுவினருடன் பேசிய கல்வியமைச்சரும், தரப்படுத்தல் முடிவு மந்திரி சபையினால் எடுக்கப்பட்டதேயன்றி, தனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் கூறியதோடு, தான் அங்கு எடுக்கப்பட்ட முடிவினை செயற்படுத்தும் அமைச்சர் மட்டுமே என்றும் கூறினார். மேலும், இந்த முடிவினை மாற்றவோ, அல்லது திருத்தங்களை மேற்கொள்ளவோ தனக்கு அதிகாரம் இல்லையென்றும் கையை விரித்துவிட்டார். 1972 இல் புதிய தரப்படுத்தல் திட்டம் அமுலாக்கப்பட்டு அதன் தீவிரத் தன்மை தமிழ் மாணவர்களால் உணரப்பட்டபோது, தமிழ் மாணவர் பேரவை தனது எதிர்ப்புப் போராட்டங்களை முடுக்கிவிடத் தொடங்கியது. சிங்கள வராலாற்று ஆசிரியரான கெ. எம். டி சில்வா இத்தரப்படுத்தல் முறை பற்றி பதிவிடும்போது, 1972 இல் மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவர்களில் சிங்கள மாணவர்கள் 400 புள்ளிகளுக்கு வெறும் 229 புள்ளிகள் மட்டுமே எடுத்திருந்த நிலை போதுமானதாக இருக்க தமிழ் மாணவர்களோ 250 புள்ளிகளாவது பெறவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறே பல்வைத்தியத் துறைக்கு சிங்கள மாணவர்கள் 215 புள்ளிகள் மட்டுமே பெற்றுத் தெரிவாகும்போது, தமிழ் மாணவர்கள் குறைந்தது 245 புள்ளிகளாவது பெறவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் கால்நடை வைத்தியத்துறைக்கு சிங்கள மாணவர்கள் 200 புள்ளிகளுடன் தெரிவாகியபோது தமிழ் மாணவர்கள் 230 புள்ளிகளுக்கு அதிகமாக எடுத்தால் ஒழிய தேர்வுசெய்யப்படும் நிலையினை இழந்திருந்தார்கள். இது பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இதன்படி 1972 இல் பல்கலைக்கழகங்களுக்கு விஞ்ஞான பாடங்களுக்குத் தெரிவான மாணவர்களில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 33.6 வீதமாக வீழ்ச்சியடைய சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை 63 வீதமாக அதிகரித்திருந்தது. இந்தச் சரிவு பின்வரும் வருடங்களில் மேலும் அதிகரித்ததுடன் 1973 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 29.3 வீதமாக வீழ்ச்சிகாண சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை 67.4 வீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. தாம் இனரீதியில் பாகுபாடு செய்யப்பட்டதை உணர்ந்த தமிழ் மாணவர்கள், சிங்கள அரசியல்த் தலிமைகளிடமிருந்து தமிழ் மாணவர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்கப்போவதில்லையென்பதையும் உணரத் தலைப்பட்டார்கள். இந்த சிக்கலில் இருந்து வெளியே வர இருக்கும் ஒரே மார்க்கம் தனிநாடுதான் என்றும் அதனை அடைவதற்கான ஒரே வழி ஆயுத ரீதியிலான எதிர்ப்புப் போராட்டமே என்று திடமாக நம்பத் தொடங்கினார்கள். பிரபாகரனும், சிவகுமாரனும் இந்த எண்ணக்கருவை மிகவும் ஆணித்தரமாகவும், உணர்வுபூர்வமாகவும் தமது தோழர்களிடையே பரப்பத் தொடங்கியிருந்தனர். பொன் சிவகுமாரன் ஆனால் இவர்கள் இருவரும் பெரிதாகச் சந்தித்துக்கொண்டதில்லை. தமக்கே உரிய அமைப்புக்களில் இதனை அவர்கள் செய்துவந்தார்கள். இவர்கள் இவ்வாறு தனித்தனியாகச் செயற்பட்டு வந்தாலும், இவர்கள் இருவருக்குமே பல பொதுவான பண்புகள் இருந்ததாக அவர்களின் தோழர்கள் கூறுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்கவில்லை, தமது நோக்கங்கள் நிறைவேற ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு அவர்களிடம் இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் இருவருமே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திரபோசை தமது முன்மாதிரியாகக் கொண்டிருந்தார்கள். இரவு முழுவதும் ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசவும், ஆலோசிக்கவும், வாதிடவும் அவர்களால் முடிந்தது. சிவகுமாரன் பற்றிப் ருத்திரமூர்த்தி சேரன் பின்வருமாறு கூறுகிறார், "சிவகுமாரன் ஆயுதப் போராட்டம் பற்றி இரவிரவாகப் பேசுவார். ஆயுதப்போராட்டமே தமிழர்களின் ஒரே தீர்வு என்பதை அவர் எமக்குக் கூறிக்கொண்டே இருப்பார்". பிரபாகரனின் முன்னைய தோழர்களில் ஒருவர் பேசும்போது, "அவர் பேசத் தொடங்கினால், அவரை நிறுத்துவது கடிணமானது. தமிழர்களின் பாரம்பரிய புகழ்பற்றித் தொடர்ச்சியாகப் பேசும் பிரபாகரன், அப்புகழினை மீண்டும் தமிழினம் அடையவேண்டும் என்றால் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டத்தினூடாக தனிநாட்டினை உருவாக்குவதன் மூலமே அதனைச் செய்யமுடியும் என்று அவர் கூறுவார்" என்று பகிர்ந்தார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதரப்படுத்தல் 1970 ஆம் ஆண்டு, வைகாசி 27 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சமஷ்ட்டிக் கட்சி 13 ஆசனங்களையும், காங்கிரஸ் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. இதே தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய முன்னணி, சம சமாஜக் கட்சி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து 106 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. தேசியப் பட்டியல் மூலம் தெரிவான மேலும் 6 ஆசனங்களையும் சேர்த்து இந்த முன்னணி 112 ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் பெற்றிருந்தது. இது வெறும் 151 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டிருந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் காட்டிலும் அதிகமானதாகும். ஐக்கிய தேசியக் கட்சி வெறும் 17 ஆசனங்களை மட்டுமே இத்தேர்தலில் பெற்றிருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது மந்திரிசபையினை அமைத்திருந்தார். தனது கல்வியமைச்சராக கம்பொல சகிராக் கல்லூரியின் முன்னாள் அதிபராகக் கடமையாற்றிய கலாநிதி பாடி உட் டின் மகமூட்டீனை நியமித்தார். பாடி உட் டின் மகமூட் கல்வியமைச்சராக வந்தவுடன் அவர் செய்த முதலாவது வேலை ஊடகங்கள் மூலமாக மந்திரிசபையில் தீர்மானிக்கப்பட்ட தரப்படுத்தலினை அறிவித்ததுதான். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் மனதில் முளைத்திருந்த பிரிந்துபோதல் எனும் எண்ணக்கருவிற்கு இந்த அறிவிப்பு மேலும் உரம் ஊட்டியது. பாராளுமன்றத்தில் பேசிய கல்வியமைச்சர் பாடி உட் டின், சிங்களவர்கள் பல்கலைக்கழகமூடான கல்வியினை நிராகரித்து வருகிறார்கள் என்றும், அதன்மீதான நம்பிக்கையினை இழந்துவருகிறார்கள் என்றும் கூறியதோடு, இதற்கெல்லாம் காரணம் பெரும்பாலான தமிழர்கள் பல்கலைக் கழக அனுமதியினைப் பெறுவதும், பல தமிழர்கள் பொறியியலாளர் மற்றும் மருத்துவர்களாக உருவாக்கப்படுவதும் இதற்கு இன்னொரு காரணம் என்றும் கூறினார். தற்போதிருக்கும் பல்கலைக் கழக அனுமதி மூன்று வழிகளில் தமிழ் மாணவர்களுக்கு அனூகூலமாக இருக்கின்றது என்று வாதிட்ட அவர், அவற்றைனைப் பின்வருமாறு விளக்கினார். முதலாவதக வரலாற்று ரீதியான காரணங்கள். அதாவது வடபகுதியில் இயங்கிவரும் மிகப் பிரபலமான, தரமான பாடசாலைகள். இரண்டாவது தமிழ் பரீட்சைத் தாள்களைத் திருத்தும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகளை வழங்கிவருகிறார்கள் என்பது. மூன்றாவதாக, பல்கலைக்கழகங்களில் செய்முறைத் தேர்வுகளின்பொழுது, தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு உதவிவருகிறார்கள் என்பது. ஆகவேதான், சிங்கள மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியினைத் தடுப்பதற்கு மந்திரிசபை கடுமையான தீர்மானங்களை நிறைவேற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் அங்கே விபரித்தார். ஆகவேதான், விஞ்ஞானப் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை தான் இரத்துச் செய்வதாகவும், தரப்படுத்தலினை அமுல்ப்படுத்தப்போவதாகவும் கூறினார். தமிழ் மாணவர்கள் பெருவாரியாக தகுதி அடிப்படையில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாவதாகவும், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு விஞ்ஞான செய்முறைத் தேர்வுகளில் உதவிவருவதால் சிங்கள மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி சிங்கள பெளத்த அமைப்புக்களும் மாணவர் சங்கங்களும் முறையிட்டு, இந்தத்ப் பல்கலைக் கழக தேர்வுமுறை முற்றாக நீக்கப்படவேண்டும் என்றும் சிறிமாவுக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் இந்தக் கோரிக்கைகளை தான் நடைமுறைப்படுத்துவேன் என்று தான் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக தான் ஆட்சியில் ஏறியதும் அதனைச் செய்யத் தலைப்பட்டார் சிறிமா. ஆனால், வடமாகாணப் பாடசாலைகள் பலவற்றில் செய்முறை விஞ்ஞான பாடங்களுக்கான திறமையான உபகரணங்கள் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனாலேயே பல்கலைக்கழக விஞ்ஞான பாடங்களுக்கு பெருமளவில் வடபகுதித் தமிழ் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் விஞ்ஞான மற்றும் பொறியியல் பாடநெறிக்கு தேர்வானவர்களில் 37.2 வீதமானவர்களும், வைத்தியத்துறை மற்றும் பல்வைத்திய பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில் 40.5 வீதமானவர்களும், விவசாயம் மற்றும் கால்நடை வைத்தியத்துறைக்குத் தெரிவானவர்களில் 41.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள். இலங்கைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக் கழகத் தேர்வுகளில் கணிசமான இடங்களைத் தக்கவைத்துவந்த இந்த நிலை 1971 வரையில் தொடர்ந்து வந்தது. இவ்வருடத்தில் விஞ்ஞான பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில் 35.2 வீதமான மாணவர்கள் இலங்கைத் தமிழர்களா இருந்ததுடன், பொறியியல்ப் பீடங்களுக்குத் தெரிவானவர்களில் 40.8 வீதமானவர்களும் மருத்துவத்துறைக்குத் தெரிவானவர்களில் 40.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள். பாடி உட் டின் மகமூட்டீன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களின் மீதான கடுமையான விமர்சனம் தமிழ் மாணவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. கல்வித்திட்டத்தை ஏமாற்றியும், தமிழ் ஆசிரியர்களின் உதவியினையும் கொண்டே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டினைக் கடுமையாக மறுத்த தமிழ் மாணவர்கள், தமது அயராத உழைப்பினாலும் கடுமையான பயிற்சியினாலுமே தாம் பலகலைக் கழகங்களுக்குத் தெரிவாகி வருவதாக வாதிட்டார்கள். http://www.cmb.ac.lk/wp-content/uploads/science-old.jpg இலங்கைப் பல்கலைக்கழகம் 1942 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1957 வரையான காலப்பகுதிவரை பாடநெறிகள் ஆங்கிலமொழியிலேயே நடைபெற்றுவந்தன சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் ஒரே பரீட்சையினை ஆங்கில மொழியிலேயே எழுதிவந்தனர். ஆனால், 1957 முதல் பரீட்சைகளுக்கான விளக்கப்படுத்தல்கள் சிங்களத்திலோ தமிழிலோ வழங்கப்பட முடியும் என்கிற முறை கொண்டுவரப்பட்டதோடு, அதுவரை இருந்த செயன்முறைகளும் மாற்றம் பெறத் தொடங்கின. இரு மொழிகளைப் பேசும் மாணவர்கள் ஒரே பரீட்சைத் தாளினை எழுதினாலும் கூட, அவற்றை தமது தாய் மொழிகளில் பதிலளிக்கும் வழிமுறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பரீட்சைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பதிலளிக்கப்பட்ட பரீட்சைத் தாள்கள் திருத்தப்பட்டு, அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ஒரே பட்டியலில் அதிகூடிய புள்ளிகள் முதல் அதி குறைந்த புள்ளிகள் வரை தரப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை, தகுதி அடிப்படியில் தரப்படுத்தும் முறை என்று அறியப்பட்டது. பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறிக்கும் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கு அமைவாக இந்தப் பட்டியலில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், சிறிமாவின் அரசாங்கம் கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்தின்படி, சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களும் தாம் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு, ஒரே மொழியில் பரீட்சை எழுதியவர்களின் புள்ளிகள், ஒருவரின் புள்ளிகளுக்கெதிராக இன்னொருவரின் புள்ளிகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு தேர்வுசெய்யப்பட்டார்கள். இந்தப் புதிய தரப்படுத்தல் முறை சிங்கள மாணவர்களுக்கு மிகவும் அனூகூலமாகவும், தமிழ் மாணவர்களில் பல்கலைக் கழக அனுமதியில் கடுமையான தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதை தமிழ் மாணவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆகவே இந்தப் புதிய தரப்படுத்தல்த் திட்டத்திற்கெதிராக பாரிய மாணவர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மாணவர்களான பொன்னுத்துரை சத்தியசீலனும் சபாலிங்கமும் ஏற்பாடு செய்தார்கள். இந்த மாணவர் ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி, பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கனகரட்ணம் மகா வித்தியாலயம் (பின்னாளில் ஸ்டான்லிக் கல்லூரி என்று அறியப்பட்டது), பரி யோவான் கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் ஊடாகப் பயணித்து இறுதியாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்ற பாரிய பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெற்றது. கூட்டத்தின் இறுதியில் சிறிமாவின் நோக்கத்தின் கருவியாகச் செயற்பட்ட பாடி உட் டின் மகமூட்டீன் உருவப்பொம்மை தீக்கிரையாக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாணவன் சத்தியசீலன் பின்வருமாறு கூறினார், "மொத்தத் தமிழ்ச் சமூகத்தினதும் இருப்பையும் பாதிக்கும் வகையிலேயே இந்த புதிய தரப்படுத்தல் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பல தமிழ் மாணவர்களின் உயர்தரக் கல்வி கடுமையான வீழ்ச்சியினை அடையப்போவதுடன் பல தமிழ் மாணவர்களின் உயர்தரப் பெறுபேறுகளின் தகமையும் குறைவடையப் போகிறது. இத்திட்டத்தின் மூலம் பெருமளவு தமிழ் மாணவர்களின் உயர்கல்வியும் அதனூடான வேலைவாய்ப்பும் தட்டிப் பறிக்கப்பட்டிருக்கிறது. தமது கல்வியின் மூலம் தரமான தகுதியினையும், வேலைவாய்ப்புக்களையும் அடையமுடியும் என்று இருந்த தமிழ் மாணவர்களின் கடைசி நம்பிக்கையும் இதன்மூலம் அழிக்கப்பட்டிருக்கிறது".1 point- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
எதுக்கு இந்தக்கொலை வெறி? தடுமாறினவர்களுக்கு துப்புக்கொடுத்தது தவறாய் போச்சுது. நாங்கள் துப்புக்கொடுத்த படியாற்தானே விசாரணை சரியான ஒருவழிக்கு திரும்பியிருக்கு. இலங்கையில் எத்தனை மெலிந்த உயரமான மனிதர்கள் இருக்கிறார்கள்? அதுவும் தற்போதைய பொருளாதார நிலையில் பெரும்பாலானோர் அந்த நிலைக்கு வந்துவிட்டார்கள், யாரை என்று கண்டுபிடிப்பார்கள்? ஆமா! சன்மானம் வாங்க கூட்டுத்தேவை, காட்டிக்கொடுக்கிறதென்றா சாத்தான் தான். நல்ல கூட்டாளிகள்! உங்களது உயரம் எல்லாம் நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் எழுத்துமூலம் கொடுத்துவிட்டு, இப்போ சாத்தானை மாட்டிவிடுகிற வேலையெல்லாம் வேலைக்காகாது. நீங்கள் பதிந்த உயரத்தை கையில வைச்சுக்கொண்டுதானாம் சந்தேக நபரை தேடுகிறார்களாம். இலங்கை எம்பசி பக்கம் போய்விடாதீர்கள்.1 point - நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023
Important Information
By using this site, you agree to our Terms of Use.