Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87994
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/25/23 in all areas

  1. இந்த உருட்டு போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா.... 😂 தற்போது.... இணையம் எங்கும் உருட்டிக் கொண்டு திரிகிறார்கள். அதில் ரசித்தவை இவை. 🙂
  2. தோற்றம் நம் அழகை பிரதிபலிக்காது எண்ணமும் செயலும் நிச்சயம் பிரதிபலிக்கும் நாம் யாரென...!!!
  3. மலை சாய்ந்து போனால் சிலையாகலாம் மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்.........! 😁
  4. ஓ அதில நிற்பது நீங்க தானோ?
  5. உங்களுக்கு இது அருமை.....இதைப் பார்த்ததும் எனக்கு கண்ணெல்லாம் வேர்த்து கொட்டிச்சுது .......! 😁
  6. ஆனால், இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் உறுப்பினர்களுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் செயல்ப்படும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதை தமிழ் இளைஞர்கள் சந்தேகத்துடனேயே பார்த்தார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஊடாக மக்கள் முன்னால் தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வைத்த வாக்குறுதியான இறையாண்மையுள்ள சுதந்திரமான தமிழீழத்தினை உருவாக்கும் நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுவோம் என்பதற்கு முரணான வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் செயற்படுவதாக விஞ்ஞாபனம் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை இத்தேர்தலின் மூலம் மக்கள் ஆணையாக மாற்றவேண்டும் என்பதே தமது முதலாவது குறிக்கோளாக அன்று இருந்தமையினால், இதுபற்றி அப்போதைக்கு அதிகம் முரண்படுவதை அவர்கள் தவிர்த்தார்கள். இளைஞர்கள், குறிப்பாக ஆயுத அமைப்புக்களில் செயற்பட்டு வந்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றியடையவேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்தார்கள். சுய கெளரவத்துடனும், மரியாதையுடனும் , சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்றால் எமக்கு ஈழமே தீர்வு என்று கூறியதுடன், ஆகவே, நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் ஈழத்தை உருவாக்க உதவும் என்றும் மக்களிடம் பிரச்சாரம் செய்துவந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் தேர்தல் பரப்புரைகளுக்குத் தலைமை தாங்கிய அமிர்தலிங்கம், தமிழ் ஆயுத அமைப்புக்களின் உதவியினை முழுமையாக உபயோகித்திருந்தார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் இறுதிநாளான ஆடி 19 ஆம் திகதி நடைபெற்ற மிகப்பெரும் பொதுமக்கள் கூட்டத்தில் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு பிரகடணம் செய்தார், "எமது பிரச்சினை வெறுமனே ஒரு தேசியப் பிரச்சினையல்ல. அது இரு இனங்களுக்கிடையிலான பிணக்காகும். ஆகவே நாளை மறுநாள் நடக்கவிருக்கும் தேர்தல் சாதாரணமான தேர்தல் அல்ல, மாறாக அது ஒரு மக்கள் ஆணையாக இருக்கும். இத்தேர்தல் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டுமா அல்லது தனித்துச் சென்று தமக்கான தனிநாட்டினை உருவாக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்". வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக தனிநாட்டிற்காக வாக்களித்திருந்தார்கள். வடக்கில் தாம் போட்டியிட்ட அனைத்து 14 தொகுதிகளிலும் வெற்றியீட்டிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் கிழக்கில் மேலும் 3 தொகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர். பின்னர் நடைபெற்ற பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் மூலம் இன்னொரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆசனங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இந்தத் தேர்தல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், அமிர்தலிங்கத்திற்கும் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருந்தது. தந்தை செல்வாவின் தொகுதியான காங்கேசந்துறையில் போட்டியிட்டிருந்த அமிர்தலிங்கம் மிகப்பெரிய வெற்றியினை ஈட்டியிருந்தார். 1975 ஆம் ஆண்டின் இடைத்தேர்தலில் தந்தை செல்வா பெற்ற 25,927 வாக்குகளைக் காட்டிலும் 5228 வாக்குகளை அதிகமாகப் பெற்று 31,155 வாக்குகளுடன் அமிர்தலிங்கம் வெற்றிபெற்றிருந்தார். அமிர்தலிங்கத்தின் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை. யாழ்ப்பாண தேர்தல் அதிகாரி விஜேபால தேர்தல் முடிவினை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் தனது வெற்றிப் பேச்சை வழங்கிய அமிர்தலிங்கம்,"இத்தேர்தல் வெற்றியின்மூலம் தமிழ் மக்கள் இறையாண்மையுள்ள, சுதந்திர தனிநாடான தமிழ் ஈழத்தில் வாழவே விரும்புகிறார்கள் என்பது உறுதியாகிறது" என்று கூறினார். பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் தனது பேச்சினைத் தொடர்ந்த அமிர்தலிங்கம் இழந்த தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தம்மாலான அனைத்துத் தியாகங்களையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். அவர் மேலும் பேசுகையில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு அமோக ஆதரவினைத் தமிழர்கள் வழங்கியிருப்பதன் மூலம் தனிநாட்டிற்கான ஆணையினைத் தந்திருக்கிறார்கள் என்று கூறினார். "இனித் திரும்பிப் பார்க்கப்போவதில்லை. எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை வென்றெடுக்க முன்னோக்கி அணிவகுத்துச் செல்வோம்" என்று அவர் முழங்கினார். தேசிய மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. 165 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 138 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள சிறிமாவின் சுதந்திரக் கட்சி வெறும் 8 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது. இலங்கைத் தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தைப் பெற்றிருந்தது. இடதுசாரிக் கட்சிகள் முற்றான தோல்வியினைத் தழுவியிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 3,179,221, இது மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 50.9 வீதமாகும். சிறிமாவின் சுதந்திரக் கட்சி 1,855,331 வாக்குகளைப் பெற்றிருந்தது, இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 29.7 வீதமாகும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெற்ற வாக்குகள் 421,488, இது மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 6.4 வீதமாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 62,707 வாக்குகளைப் பெற்றுகொண்டது, இது மொத்த வாக்குகளில் 1 வீதமாகும். ஜெயவர்த்தனே அரசாங்கத்தை அமைத்துக்கொண்டார். ஆனால், மக்கள் தனக்கு வழங்கிய ஆணையினை முற்றாக மறந்துவிட்ட அமிர்தலிங்கம், தொடர்ந்தும் சிங்கள மக்களுடன் சேர்ந்து செயற்பட முடிவெடுத்தார். தேசியப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பினை, இலங்கை அரசியலமைப்பின் மீது சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம், ஜனநாயகம் செழிப்புடன் செயற்பட தான் முழுமையாக ஒத்துழைக்கப்போவதாக வாக்குறுதியளித்தார் !
  7. ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனியான பகுதியொன்றை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக வரைந்திருந்தது. தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்கிற தலைப்பில் இது உருவாக்கப்பட்டிருந்தது. "தமிழ் பேசும் மக்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்தப் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதனாலேயே தமிழ் பேசும் மக்கள் தனியான நாட்டினை உருவாக்கும் இளைஞர் அமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கையின் ஒருமைப்பாட்டினைக் காத்திடவும், பொருளாதார அபிவிருத்தியை அடையவும் இந்தப் பிரச்சினைகள் காலம் தாழ்த்தாது தீர்க்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கருதுகிறது. எமது ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்தப் பிரச்சினைகளையும் கவலைகளையும் தீர்க்கக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்ளும் என்று கூறிக்கொள்வதுடன், பிரச்சினைகள் இருக்கக் கூடிய விடயங்களாக பின்வருவனவற்றை இனங்கண்டுள்ளது", " கல்வி - தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் - தமிழ் மொழியின் பாவனை - அரச மற்றும் தனியார் துறைகளில் தமிழ் பேசும் மக்களுக்கான வேலைவாய்ப்பு" "நாம் சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதோடு இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க முயற்சி எடுப்போம்" என்றும் கூறியிருந்தது. சுதந்திரக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் "தேசிய ஒருமைப்பாடும் தேசியப் பிரச்சினைகள்" என்கிற தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறுகிறது, "இலங்கையில் இன, மொழி, சமூக, கலாசார வழிகளில் தேசிய மட்டத்தில் சிறுபான்மையினக் குழுக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எடுக்கும் வகையில் நாட்டில் இருக்கும் அனைத்து இனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஆலோசனைச் சபை ஒன்றினை எமது அரசு உருவாக்கும்" என்று கூறியிருந்தது. அதேபோல், இடதுசாரிக் கூட்டணியாகக் களமிறங்கிய கம்மூனிஸ்ட் கட்சி மற்றும் சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய சிறுபான்மையின மக்கள் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறியிருந்தது, "நாட்டின் ஒருமைப்பாட்டினைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, பொதுத் தேசிய மாவட்டங்களுக்கான வலையமைப்பின் மூலம் பிராந்தியங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலினை நாம் ஏற்படுத்துவோம். ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் மொழி தொடர்பான அதிகாரங்களை முழுமையாக அமுல்ப்படுத்தும் அதேவேளை, தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியினை உத்தியோக பூர்வ மொழியாகவும் நாம் ஆக்குவோம். ஏற்கனவே தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் நிர்வாக அந்தஸ்த்தினை, குடியரசு யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் உறுதிப்படுத்துவோம். அரசியலமைப்பில் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி எனும் அந்தஸ்த்தினை பாதிக்கா வண்ணம் தமிழ் மொழிக்கு யாப்பினூடாக தேசிய மொழி எனும் அந்தஸ்த்தினை நாம் வழங்குவோம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் இன, மத, குல ரீதியான பாகுபாட்டினை நாம் முற்றாக தடைசெய்வோம். இன மத ரீதியிலான கலகங்களைத் தூண்டுவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும்". வாக்கெடுப்பு ஆகவே அனைத்துச் சிங்களக் கட்சிகளும் தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கிறது, அவற்றினைத் தீர்க்க அரசியல் ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியபடியே 1977 ஆம் ஆண்டிற்கான தேர்தலை எதிர்கொண்டன. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தேசியக் கட்சிகள் இந்த அடிப்படையிலேயே தேர்தலில் பங்குகொண்டன. இதேவேளை இத்தேர்தலில் பங்குகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்களா அல்லது தனிநாட்டினை நோக்கி நகரப்போகிறார்களா என்பதனை உறுதிப்படுத்த இத்தேர்தலினை தமிழ் மக்கள் பாவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனி 1 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அதனைத் தொடர்ந்து பாரிய பேரணி ஒன்றையும் நடத்தியது. மக்களின் முன் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அமிர்தலிங்கம், இத்தேர்தல் தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறதென்றும், இத்தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் சுதந்திர மக்கள் கூட்டமாக வாழவிரும்புகிறார்களா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டிலிருந்து அரச ஆதரவிலான குண்டர்கள் நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியிருந்ததுடன், இதன் விளைவாக தமிழர்கள் உரிமைகளோ, பாதுகாப்போ அற்ற இரண்டாம்தர குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற வாதத்தினை முன்வைத்திருந்தார். "தமிழர்களும் முஸ்லீம்களும் சிங்களக் காடையர்களாலும், அரச ஆதரவுடனான சிங்கள அமைப்புக்களாலும், ராணுவ பொலீஸ் பிரிவுகளாலும் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படு தாக்கப்பட்டு வருகின்றனர். திட்டமிட்ட இத்தாக்குதல்கள் மூலம் தமிழர்களும் முஸ்லீம்களும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருவதுடன், அவர்களது சொத்துக்கள், வியாபார நிலையங்கள், வாழிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டும் வருகின்றன. உயிரிழப்புக்கள், உடல்ரீதியிலான துனுபுருத்தல்கள், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் என்று மிகவும் கொடூரமானஅட்டூழியங்களுக்கு அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்" என்று அந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் கூறியது. அத் தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் கூறுகையில், "தமிழ் மொழிக்கான உரிமைகளைக் கோரி 1961 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் அகிம்சை முறையிலான ஒத்துழையாமை போராட்டங்களை ராணுவப் பயங்கரவாதம் கொண்டு சிங்கள அரசுகள் மிகவும் மூர்க்கத்தனமாக அடக்கி வருகின்றன. 1976 ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 7 முஸ்லீம்களை சிங்களப் பொலீஸார் மிகவும் குரூரமான வகையில் கொன்றுதள்ளியிருந்தனர். இக்கொலைகள் பற்றி விசாரிக்க அரசாங்கம் இன்றுவரை மறுத்தே வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் கூறும் செய்தி என்னவென்றால், சிங்கள அரசாங்களின் கீழ் தமிழர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ சுதந்திரமாக வாழ முடியாதென்பதும், அவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுவார்கள் என்பதும் தான்". மேலும், இந்த விஞ்ஞாபனம் கேள்வியொன்றினையும் வாக்காளர்களை நோக்கி முன்வைத்திருந்தது, "சிங்கள அரசாலும், அதன் காடையர்களாலும் தொடர்ச்சியாக கொலைகளுக்கும், சொத்துச் சூறையாடல்களுக்கும், அழிவுகளுக்கும் முகங்கொடுத்துவரும் தமிழ் பேசும் மக்கள் முன்னால் உள்ள மாற்றுத் தேர்வுதான் என்ன? இருட்டினுள் தமது அடையாளத்தைத் தேடிக்கொண்டும், அழிவின் விளிம்பிலும் நின்றுகொண்டிருக்கும் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தனியான தமிழ்த் தேசத்தினைத் தவிர வேறு மார்க்கம் ஏதாவது இருக்கின்றதா? " என்று கேட்டிருந்தது. இக்கேள்விக்கான பதிலையும் அந்த விஞ்ஞாபனமே முன்வைத்திருந்தது. "இதற்கு நம்மிடம் இருக்கும் இறுதியானதும், துணிவானதுமான ஒரே முடிவு, எமது தந்தையர் ஆண்ட எமது தேசத்தை மீண்டும் நாமே ஆள்வதுதான். சிங்கள ஏகாதிபத்தியம் எமது தாயகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் மூலம் தமிழர்கள் தனிநாட்டு நோக்கிப் பயணிக்கவே முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதனை தமிழர் விடுதலைக் கூட்டணி சிங்கள அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறது. நீங்கள் எமக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் தேசம் சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ விரும்புகிறதென்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தும்". தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலின் பின்னர் எவ்வாறான நடவடிக்கையினை எடுக்கும் எனும் கேள்விக்கான பதிலையும் இத்தேர்தல் விஞ்ஞாபனம் கொடுத்திருந்தது. "இத்தேர்தலினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்படும் தமிழ்பேசும் உறுப்பினர்கள் இலங்கையின் தேசிய சபையில் உறுப்பினர்களாக இருக்கும் அதேவேளை, தேசியத் தமிழ் ஈழச் சபையிலும் உறுப்பினர்களாகத் தொழிற்படுவர். மேலும், இந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் ஈழத்திற்கான அரசியலமைப்பினை வரைவதுடன், அதனை நடைமுறைப்படுத்த அகிம்சை வழியிலும், தேவையேற்பட்டால் நேரடி நடவடிக்கைகள் மூலமாகவும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பர்".
  8. "கொலராடோவின் ஃப்ரூடாவிற்கு வெளியே வேலியாகப் பயன்படுத்தப்படும் இந்த சைக்கிள் வரிசை
  9. றோயல் கல்லூரி, கொழும்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான தனது சந்திப்பு ரகசியாமக இருக்கவேண்டும் என்று ஜெயவர்த்தனா விரும்பினார். ஆகவே கொழும்பு றோயல் கல்லூரிக்கு முன்னால் அமைந்திருந்த தனது தொடர்மாடி வீட்டிற்கு தோசை விருந்தொன்றிற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் தொண்டைமான் அழைத்திருந்தார். ஜெயவர்த்தனா, எம் டி பண்டா மற்றும் எஸ்மொண்ட் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியையும், அமிர்தலிங்கம் , சிவசிதம்பரம் மற்றும் கதிரவேற்பிள்ளை ஆகியோர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட்டால் சிறிமாவின் அரசாங்கத்தினை வீழ்த்த முடியும் என்று தொண்டைமான் கூறவும் அங்கிருந்த அனைவரும் அதனை ஆமோதித்தனர். "ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தைக் காத்திட வேண்டும்" என்று ஜெயவர்த்தனா கூறினார். இதற்குப் பதிலளித்த கதிரவேற்பிள்ளை, "ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, அதனைக் காப்பாற்றும் உங்களின் முயற்சிக்கு நாம் ஆதரவாய் இருப்போம்" என்று கூறினார். இதனால் மகிழ்ந்த ஜெயவர்த்தனா, "நாங்கள் இருவரும் ஒரே ஆவர்த்தனத்தில் பேசுகிறோம்" என்று கூறினார். பின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களைப்பார்த்து, "நான் பதவியேற்றதும் எந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார் ஜே ஆர். அப்போது தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்னவென்பதை இரு பகுதியினரும் ஆராய்ந்தார்கள். அதன்படி பின்வரும் பிரச்சினைகள் அவர்களால் அடையாளம் காணப்பட்டன. தமிழ் மொழியின் பாவனை தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியிருப்புக்களை நிறுத்துவது வேலைவாய்ப்பு பல்கலைக்கழக அனுமதி இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தந்தை செல்வா கைக்கொண்ட அணுகுமுறைக்கும் அமிர்தலிங்கம் கைக்கொண்ட அணுகுமுறைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருந்தது. செல்வா அவர்கள் 1957 இல் பண்டாரநாயக்காவுடன் பேசும்போதும், 1977 இல் சிறிமாவுடன் பேசும்போதும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றைப்பற்றியே அவர் பேசினார். தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்காது ஆனால், தமிழ்மக்கள் எதிர்கொண்டு நிற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகளைப்பற்றி அவர் பேசினார். இதன்படி பண்டாரநாயக்காவுடன் சமஷ்ட்டி அலகு அடிப்படையிலான தீர்வு பற்றியும், சிறிமாவுடன் தனிநாட்டுக்கான அமைப்புப் பற்றியும் அவர் பேசியிருந்தார். ஆனால், அமிர்தலிங்கமோ தனிநாட்டிற்கான தேவை பற்றி ஒருபோதும் ஜெயவர்த்தனாவுடன் பேசியதில்லை, மாறாக பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றி மட்டுமே அவர் பேசினார். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தொண்டைமானின் இல்லத்தில் அன்று நடந்த சம்பாஷணைகளில் ஒரேயொரு முறை மட்டுமே தனிநாடு எனும் பதம் பாவிக்கப்பட்டது. அதுகூட ஜெயவர்த்தனாவினாலேயே கூறப்பட்டது. அனைவரும் இந்திய கோப்பிப் பாணத்தை அருந்திவிட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அமிர்தலிங்கத்தைப் பார்த்து பின்வருமாறு கூறினார் ஜெயவர்த்தனா, " நீங்கள் தனிநாட்டிற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எனக்குத் தேவையானதெல்லாம் நீங்கள் 15 ஆசனங்களை வெல்வது மட்டும் தான். அப்படி வென்றால் மட்டுமே என்னால் அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியும்" என்று கூறினார். தனிநாட்டிற்கான தேவையினை அந்தச் சந்திப்பில் முன்வைப்பதில் அமிர்தலிங்கம் தோல்விகண்டிருந்தாலும் கூட, ஐக்கிய தேசியக் கட்சி தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவைப்பதில் வெற்றி கண்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவை தமது 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழருக்குப் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டிருந்ததுடன், அவற்றுக்குத் தீர்வு காணவேண்டிய அவசியம் பற்றியும் கூறியிருந்தன. தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இல்லை, அவர்கள் சிங்களவரைக் காட்டிலும் அதிக சலுகைகளை அனுபவிக்கிறார்கள், தாம் அனுபவிக்கும் சலுகைகளைத் தொடர்ச்சியாக தக்கவைக்கவே கூக்குரலிட்டு வருகிறார்கள் என்று உலகின் முன் பிரச்சாரம் செய்துவந்த சிங்களவர்களின் கடும்போக்கில் இது பாரிய திருப்பம் என்றால் அது மிகையில்லை.
  10. "இவ்வளவு காலமும் தமிழர்களுக்கென்று எந்தப் பிரச்சினையுமில்லை என்று சிங்களவர்கள் உலகத்தை ஏமாற்றி வந்திருக்கின்றனர். சிங்களவர்களை விடவும் தமிழர்களே அதிக சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் என்றும் கூறிவந்தனர். ஆனால், அவர்களால் இதனை இனிமேல் கூறமுடியாது. ஏனென்றால், அரசாங்கம் தமிழர்களுக்குத் தனியான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளதோடு, அவற்றினை அடையாளம் காணவும் அவர்களால் முடிந்திருக்கிறது. ஒரு தனிநாட்டிற்கான முயற்சியினை ஆரம்பிப்பதற்கு எமக்குப் பலமான அடித்தளம் ஒன்று கிடைத்திருக்கிறது" என்று கூறினார். ஆனால் தமிழ் இளைஞர்களோ இந்தப் பதிலினால் திருப்தியடையவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தனிநாட்டிற்கான முயற்சிகளை எடுக்காமல் தாமதித்துவருவதாக இளைஞர்கள் குற்றஞ்சாட்டினர். ஆகவே, அவர்களை பொறுமையினைக் கடைப்பிடிக்குமாறு கோரிய தந்தை செல்வா, வரப்போகின்ற தேர்தலினை ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகக் கணித்து, தனிநாட்டிற்கான ஆணையினை மக்களிடமிருந்து பெற்றுவிட வேண்டுமென்றும், பின்னர் படிப்படியாக தனிநாட்டிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்றும் கூறினார். தந்தை செல்வா தனது இரண்டாவது செயற்பாட்டினை திருகோணமலை இந்துக் கல்லூரியில் பங்குனி 1977 இல் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் முன்னெடுத்தார். அங்கு பேசிய தந்தை செல்வா அவர்கள், "1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் தொடர்பான மாற்றப்படமுடியாத தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு விட்டது. சிங்களத் தலைவர்களுக்கான எனது அறிவுரை என்னவென்றால், எங்களை எமது வழியில் செல்ல விடுங்கள் என்பதுதான். எமக்கிடையே கசப்புணர்வு ஏதுமின்றி, அமைதியாகப் பிரிந்துசெல்ல எம்மை அனுமதியுங்கள். சம அந்தஸ்த்துள்ள இரு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பின்மூலம் இந்த நாடுகளின் இருப்பினை நாம் மேம்படுத்திக்கொள்ளலாம். தமிழர்களுக்கு வேறு தெரிவுகள் எதுவும் கிடையாது. எமது இளைய சந்ததியினரிடம் கசப்புணர்வு வளர்ந்து வருகிறது. இந்தக் கசப்புணர்வினை மேலும் வளரவிட்டு, மோதல்களாக்கி, ஈற்றில் வேற்று நாட்டு தலையீட்டினை இந்த நாட்டில் உருவாக்குவதைக் காட்டிலும் சமாதான முறையில் எமக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்கும் வழிவகைகளை நாம் கையாள வேண்டும். இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை நாம் நம்புவதோடு, இந்தக் கடுமையான பயணத்தில் நாம் வென்றே தீருவோம் என்பதையும் இக்கணம் கூறிக்கொள்கிறேன்" என்று கூறினார். தமிழரின் பிரச்சினைக்கான அங்கீகாரம் 1977 ஆம் ஆண்டு, சித்திரை 29 ஆம் திகதி தந்தை செல்வா மரணமானார். அவருக்குப் பின்னர் அமிர்தலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராக வந்தபோதும் தந்தை செல்வாவினால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட தந்தை எனும் ஸ்த்தானத்தை அவரால் நிரப்ப முடியவில்லை. தந்தை செல்வா அவர்கள் தனக்கு முன்னால் வைக்கப்படும் சகல விவாதங்களையும் அமைதியாகக் கண்களை மூடிச் செவிசாய்த்துவிட்டு, அவற்றுக்கான தனது தீர்வுகளை அவர் முன்வைக்கும்போது எல்லோருமே கேள்வியின்றி அதனை ஏற்றுகொண்டார்கள். ஆனால், அமிர்தலிங்கம் வித்தியாசமானவர். பிரச்சினைகளைக் கிளப்பிவிடுவதும், மக்கள் முன் தன்னை பிரபலப்படுத்துவதும் அவருக்கு பிடித்திருந்தது. மக்கள் தந்தை செல்வா மீது வைத்திருந்த மரியாதையும், மக்கள் மீது செல்வா அவர்கள் கொண்டிருந்த கட்டுப்பாடும் அமிர்தலிங்கத்திற்கு எரிச்சலை ஊட்டியிருந்தது. அமிர்தலிங்கம் ஒரு மக்கள் தலைவன் என்பதை விடவும் ஒரு அரசியல்வாதியாகவே செயற்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைப்பொறுப்பினைப் பெற்றுக்கொண்டபின்னர் அமிர்தலிங்கத்தின் ஒரே கரிசணையாக இருந்தது தேர்தலினை எதிர்கொள்வது எவ்வாறு என்பதும், தேர்தலின் பின்னர் தான் செயற்படவேண்டிய முறை என்னவென்பது பற்றி மட்டும் தான். ஜெயவர்த்தன தேர்தலில் அமோக வெற்றியீட்டுவர் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே ஜெயவர்த்தனாவுடன் ஒரு ஒப்பந்தத்தினைச் செய்யலாம் என்று அமிர்தலிங்கம் விரும்பியிருந்தார். வெளிப்படையாகவும், ரகசியமாகவும் ஜெயவர்த்தனவின் விருப்பினை நாடிபிடித்தறிய அமிர்தலிங்கம் சில செயல்களைச் செய்தார். வெளிப்படையாக அவர் செய்த விடயம் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் ஊடாக பேச்சு ஒன்றுனை வழங்கியது. நாளிதழான வீரகேசரிக்குப் பேட்டியளித்த துரைரட்ணம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வினை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆலோசிக்கவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி விரும்புவதாகக் கூறியிருந்தார். இதே மாதிரியான கருத்தையே அமிர்தலிங்கம் ஊர்காவற்றுரையில் தான் பேசிய கூட்டத்திலும் தெரிவித்தார். ரகசியமான செயற்பாட்டினை தொண்டைமான் ஊடாக அவர் நடத்தினார்.
  11. கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல்த் தலைவர்கள் மக்களைப் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தும் முகமாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், வி.என்.நவரட்ணம், கே.பி.ரட்ணம், கே.துரைரட்ணம் , எம்.சிவசிதம்பரம் ஆகியோர் வைகாசி 21 ஆம் திகதி யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் கூடி மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததோடு, மறுநாள் நடைபெறவிருந்த குடியரசு தின நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். பொலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். பன்னாலையிலிருந்த அவரது வீட்டிற்கு அமிர்தலிங்கத்தை அழைத்துச் சென்ற பொலீஸார் அவரது வீட்டைச் சோதனை செய்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தேசியப் பிரச்சினையாகக் காட்டிய பிரதமர் சிறிமாவும் அவரது அரசாங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனிநாட்டினை உருவாக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். வைகாசி 23 ஆம் திகது தம்புள்ளை மகாவித்தியாலயத்தில் சிங்களவர்களிடம் பேசிய சிறிமா சமஷ்ட்டிக் கட்சியினர் பல்லாண்டுகளாக தனிநாட்டிற்காகப் பிரச்சாரம் செய்துவருவதாகவும் நாட்டில் ஒற்றுமையின்மையினை ஏற்படுத்த முயன்றுவருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நாட்டின் குடியரசு யாப்பினைக் காக்கவும், நாட்டின் அமைதியினைக் காக்கவும் மிகக்கடுமையான நடவடிக்கைகளை தான் எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். ஜி ஜி பொன்னம்பலம் தமிழரிடையே பிரிவினையினை உண்டாக்க நினைத்த அரசாங்கம், சிவசிதம்பரத்தை விடுதலை செய்ததுடன், ஏனைய தமிழ்த் தலைவர்களை உயர் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தியது. மேலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தலைவர்களையும் ஜூரிகளின் முன்னால் நிறுத்துவதைத் தவிர்த்து மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நிறுத்தி விசாரிக்கத் தீர்மானித்தது. இது, தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்கான தமது ஆதரவினைக் காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் குடியரசு யாப்பின் நியாயத்தன்மையினைக் கேள்விகேட்கும் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த நான்கு தமிழ் தலைவர்களுக்கு ஆதரவாக வாதாட ராணியின் ஆணை பெற்ற வழக்கறிஞர் ஜி ஜி பொன்னம்பலம் உட்பட 61 வழக்கறிஞர்கள் முன்வந்தார்கள். தமது பிரதான ஆட்சேபணையாக அவசரகாலச் சட்டத்தினை தவறானது என்று வாதாடிய வழக்கறிஞர்கள் குடியரசு யாப்பின் அடிப்படையில் நான்கு தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவது செல்லுபடியற்றது என்று வாதாடியதோடு, அவர்கள் நால்வர் மீதும் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் கூறினர். "சட்டத்திற்குப் புறம்பான குடியரசு யாப்பின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டிருப்பதால் எனது கட்சிக்காரர்கள் எந்தவிதத்திலும் குற்றமற்றவர்கள் என்று கூறுகிறேன்" என்று வாதிட்டார் ஜி ஜி பொன்னம்பலம் . அவசரகாலச் சட்டத்தினை குடியரசு யாப்பில் அரசு குறிப்பிட்ட விதத்தில் இருந்த தவறினைப் பயன்படுத்தியே பொன்னம்பலம் இந்த வழக்கு தவறானது என்று வாதிட்டார். வைகாசி 22 வரை அமுலில் இருந்த சோல்பரி யாப்பின்பிரகாரம் ஆளுநரே அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்த முடியும். ஆனால், குடியரசு யாப்பின்படி பிரதமர் இதனைச் செய்ய முடியும் என்று இருந்தது. சோல்பரி யாப்பின் இறுதிநாளும், குடியரசு யாப்பின் ஆரம்பநாளும் ஒரே நாளான வைகாசி 22 ஆக குறிப்பிடப்பட்டிருந்தமையினால், இக்கைதுகள் செல்லுபடியற்றதாகிவிடும் என்று பொன்னம்பலம் மிகவும் திறமையாக வாதாடியிருந்தார். ஆகவே, அவசரகாலச் சட்டத்தினைப் பாவித்து வைகாசி 22 இற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படியவேண்டியவர்கள் என்கிற நிலை உருவாகியது. இந்த விசாரணையின் இரண்டாவது ஆட்சேபணைப் பகுதியில் வாதாடிய திருச்செல்வம் குடியரசு யாப்பின்படி அமைக்கப்பட்ட இந்த நீதிமன்ற வழக்கு செல்லுப்படியற்றது என்று வாதாடினார். அவர் தனது வாதத்தினை இரு முனைகளூடாக முன்வைத்தார். முதலாவதாக சோல்பரி யாப்பு சிறு மாற்றங்களைச் செய்யவே அனுமதியளித்திருந்ததுடன், முற்றான யாப்பு மாற்றத்திற்கு ஆங்கீகாரம் வழங்கியிருக்கவில்லை என்று கூறினார். ஆனால், எதிர்த்து வழக்காடிய அரசு தரப்பு வழக்கறிஞர் சிவா பசுபதி, நடைமுறை அரசான ஐக்கிய முன்னணி மக்களிடமிருந்து யாப்பில் பெருமளவு மாற்றங்களைக் கொண்டுவரும் ஆணையினைப் பெற்றிருப்பதாக வாதாடினார். இதற்குப் பதிலளித்து வாதாடிய திருச்செல்வம், யாப்பினை மாற்றுவதென்பது கைதுசெய்யப்பட்ட தலைவர்களின் போராட்ட நோக்கங்களில் ஒன்றாக இருக்கவில்லை என்று கூறினார். திருச்செல்வம் முன்வைத்த இரண்டாவது வாதம் முக்கியமானது. அரசாங்கம் கூறுவதுபோல அரசியலமைப்பினை முற்றாக மாற்றுவதற்கு மக்களின் ஆணையினைப் பெற்றிருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அது தனியே சிங்கள மக்களின் ஆணை மட்டுமே அன்றி, தமிழ் மக்களின் ஆணை அல்ல என்று அவர் கூறினார். மேலும் தமிழ்மக்கள் தனிநாட்டிற்கான தேவையினை உணரத் தொடங்கிவிட்டதாகவும் 1956 ஆம் ஆண்டிலிருந்து சமஷ்ட்டி முறையிலான தீர்வொன்றிற்காக அவர்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வருவதாகவும் அவர் கூறினார். பொன்னம்பலம் முன்வைத்த முதலாவது வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் அவசரகாலச் சட்டம் வைகாசி 22 உடன் முடிவிற்கு வரவேண்டும் என்றும், கைதுசெய்யப்பட்ட அரசியல்த் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கூறியது. இதே தீர்மானத்தில், குடியரசு யாப்பின் நியாயத்தன்மைபற்றிய கேள்விகளை அது நிராகரித்திருந்தது. நீதியற்ற குடியரசு யாப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு அந்த யாப்பின் நியாயத்தன்மைபற்றி விசாரிக்கும் உரிமை இல்லை என்று அது கூறியது. யாப்பினைக் கேள்விகேட்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்று நழுவியதன் மூலம் தமிழர்களின் நலன்களைக் காக்கும் தேவையோ அல்லது அதிகாரமோ இலங்கையின் நீதித்துறைக்குக் கிடையாது என்பது அம்பலமாகியது. ஆனால், இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அரச தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்மூல இலங்கையின் சட்டத்துறை தொடர்பாக தமிழர்கள் தவறான கருத்தினைக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதனால், இத்தீர்ப்பு மாற்றப்படவேண்டும் என்று முறையிட்டிருந்தார். மேலும், அவசர காலச் சட்டத்தினைப் பயன்படுத்தி இலங்கையின் காவல்த்துறையும், இராணுவமும் வடக்கில் பல கிளர்ச்சியடக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருவதால், இத்தீர்ப்பின்மூலம் இச்செயற்பாடுகள் பாதிப்படையலாம் என்றும் வாதிட்டார். அதன்படி நீதியரசர் விக்டர் தென்னாக்கோன் தலைமையில் கூடிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு, உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து அரசுக்குச் சார்பாக தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு மாசி 1977 ஆம் ஆண்டுவரை நடைபெற்று வந்தது. இதனால் விடுதலைப் போராட்டம்பற்றிய எண்ணத்தினையே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் முற்றாக மறந்துவிட்டிருந்தனர். ஆனால், ஆயுத அமைப்புக்கள் போராட்டம் தொடர்பாக தொடர்ச்சியாகச் செயற்பட்ட வண்ணமே இருந்தனர். வட்டுக்கோட்டைத்தீர்மானம் தொடர்பாக அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர். போராட்டத்தை ஆரம்பிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். இதற்கான ஆயத்த வேலைகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். பணத்தினைச் சேர்த்தல், ஆயுதங்களைச் சேகரித்தல், போராளிகளைச் சேர்த்தல், பயிற்சியளித்தல் என்று பல முனைகளில் அவர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். 1976 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆயுத அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தேடுவதை பொலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். இளைஞர் அமைப்புக்களை அடியோடு அழித்துவிடுங்கள் என்று அமைச்சர் செல்லையா குமாரசூரியர் பொலீஸார் மீது அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். வெள்ளவத்தையில் அமைந்திருந்த தனது வீட்டில் குமாரசூரியர், பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பத்மனாதன் ஆகியோருடன் பல ரகசிய திட்டமிடும் கூட்டங்களை நடத்தியிருந்தார். தமது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதை ஆயுத அமைப்புக்களின் இளைஞர்கள் உணரத் தலைப்பட்டனர். பிரபாகரனும் தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றவேண்டியிருந்தது. ஆகவே, பொலீஸ் வலையமைப்பினை அழிக்கவேண்டிய தேவை இளைஞர்களுக்கு ஏற்பட்டது. பிரபாகரன் எப்படியாவது ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்துவிட வேண்டும் என்று விரும்பியிருந்தார். அமிர்தலிங்கத்தையும், நவரட்ணத்தையும் அவர் தொடர்ச்சியாக சந்தித்து போராட்டத்தினை முன்னெடுக்கும்படி கேட்டுவந்தாலும்கூட, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போராட்டம் பற்றி உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார். ஆகவே, தனது அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதப் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தி வைத்திருந்தார். இதன் முதற்கட்டமாக இருவிடயங்களைச் செய்ய அவர் தீர்மானித்தார். முதலாவது பொலீஸ் அதிகாரிகள் பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பதமனாதன் ஆகியோரால் பின்னப்பட்டிருக்கும் உளவாளிகளின் வலையினை அழிப்பது. இரண்டாவது, துரையப்பாவின் கொலையினை விசாரிக்கும் பொலீஸ் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இளைஞர் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வரும் அதிகாரிகளைக் கொல்வது. பொலீஸாருக்குத் தகவல் வழங்கும் உளவாளிகளையும், விசாரிக்கும் அதிகாரிகளையும் பற்றிய தகவல்களைச் சேகரிக்க தனது அமைப்பில் உளவுப் பிரிவொன்றை அவர் உருவாக்கினார். தனது போராளிகளுக்கான பயிற்சிகளின்போது உளவுத்தகவல்களைச் சேகரிக்கும் விதத்தினையும் அவர் கற்றுக்கொடுத்தார். புதிதாக இணையும் போராளிகள் தாக்குதல் அமைப்புக்களில் சேர்க்கப்படுமுன்னர் உளவுத்தலகவல்களைச் சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளிகளில் பிரபாகரன் முதலாவதாகக் கொல்லத் தீர்மானித்தவரின் பெயர் என். நடராஜா. இவர் உரும்பிராய் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை நடாத்தி வந்ததுடன், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தார். இவரை பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், போராளி சிவகுமாரன் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கியது இவரே. தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலவாது கொலை அதுதான் என்பது குறிப்பிடத் தக்கது. பிரபாகரன் தனது அமைப்பின் இரு உறுப்பினர்களை இந்த நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார். நடராஜாவின் வீட்டிற்குச் சென்ற அந்த உறுப்பினர்கள் இருவரும் அவரை வெளியே வரும்படி அழைத்து அங்கேயே சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கையே 1977 ஆம் ஆண்டில் தமிழ் மக்களை விடுதலை வேட்கை நோக்கி நகர்த்தியதுடன், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமிழ் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு தமிழீழத்தை அமைப்பதற்கான ஆணையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கினர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.